நமசிவாயம் கத்தவும் அமுதரசி அங்கிருந்து ஓடி வந்தவள் எங்கோ வெறித்தபடி நிற்க ஷகீரா அவள் தோள் மீது கை வைத்தாள்.
“ஷகீ நீயும் இல்லைன்னா நான் என்ன செய்வேன் புள்ள?” என அமுதா அழுதுவிட
“இந்தாளை விட்டுட்டு வாக்கா. இவனுக்கு நீ அடங்கிப் போறதால தான் இவ்வளவு திமிர்த்தனம் பன்றான்.” என்று கோபத்துடன் உரைக்க
“எங்காத்தா அப்பனெல்லாம் பட்டினி கெடப்பாங்களே இவர் குடுக்கிற பணத்துல தானே குடும்பம் ஓடுது” என கேவி அழுதாள்.
ஷகீரா சங்கடமாக,” நான் என்ன செய்யன்னு சொல்லுங்கக்கா ?”என்றதும் அமுதரசி வேகமாய் கண்ணைத் துடைத்துக் கொண்டு,” இல்ல நீ போயிட்டு வா நான் நான் எப்புடியோ சமாளிச்சுக்கிறேன்.”என்றாள் வரவழைத்தப் புன்னகையுடன்.
“ஏதாவது பிரச்னைன்னா எனக்கு எந்த தயக்கமும் இல்லாமல் கூப்பிடுங்கக்கா. நான் இருக்கேன் உங்களுக்கு “என்று ஆறுதல் அளித்துவிட்டு கிளம்பி விட்டாள் ஷகீராவும்.
தன் அண்ணனின் மரணத்திற்கு எந்தவித ஆதாரமும் இல்லாமல் போக, நமசிவாயத்தை அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
அகராவின் மேல் பித்தேறிக் கிடப்பவனை நாம் ஏதாவது செய்யப் போய் நம் குடும்பத்தையும் ஒன்றுமில்லாமல் செய்து விட்டால், நினைக்கவே பயமாக இருந்தது ஷகீராவிற்கு அதனாலேயே விலகி வந்துவிட்டாள்.
என்றாவது ஒரு நாள் இவனை பழி தீர்த்தே ஆகவேண்டும் என்ற உறுதியுடன் அங்கிருந்து கிளம்பினாள் ஷகீரா.
***********
படம் முக்கால்வாசி முடிந்த நிலையில் ரிஃபாஷாவின் காட்சிகள் மட்டும் சிலது எடுக்கப்படாமல் இருந்தது.
மனுஷிற்கு அத்தனை ஆத்திரம் அவள் மீது. வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி செய்கிறாளே என்ற கோபம்.
என்ன பொடலங்காய் காதல். நான் ஒருவன் தான் இங்கு மனிதனா…வேற ஆளே கிடைக்கலையா. காதலேப் பிடிக்காதுன்றேன் என்னை காதலிக்கிறாளாமாம் பைத்தியக்காரி என எரிச்சலானான்.
இவளை எப்படி மாற்றுவது. தான் அறிமுகம் செய்தவள் தன் நினைவில் வீணாய்ப் போவது சுத்தமாய் விருப்பம் இல்லை மனுஷிற்கு. அதுவும் குடிக்கு அடிமையாகிற அளவிற்கு இவளிடம் நான் என்ன பாசத்தை கொடுத்தேன். இயக்குநர் நடிகை என்ற அளவில் தானே இருந்தேன். சரியான கிறுக்காய் இருப்பாள் போலும் என நொந்து கொண்டான்.
இவன் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்க அகராவோ மனுஷ் எப்போது தன்னை ஆசிரமத்தில் கொண்டு விடுவான் என யோசித்திருந்தாள்.
********
ரிஃபாஷா முகத்தில் பவுண்டேஷன் தடவி தடவி துடைத்துக் கொண்டிருந்தாள். இதோடு பத்து முறை உதட்டுச்சாயத்தை அழித்துப் போட்டுக் கொண்டாள்.
இப்டி இருந்தா அழகா இருப்பேனா… இல்ல அப்படி.. ஏன் என்னை அவருக்கு புடிக்கலை சொல்லுமா…. என்று புலம்பித் தீர்த்தாள்.
இடையில் குடிக்க வேறு செய்ய அவளது அம்மாவிற்கு அத்தனை எரிச்சல்.
ஏன்டி கூறுகெட்டவளே அந்த தெலுங்குக்காரன் தான் உன் பின்னாலேயே அலையிறானே அவனை கட்டிக்க வேண்டியது தானே என்று திட்ட
ப்ம்ச் உனக்கு ரொம்ப தெரியுமா. அந்த நாய் கட்டிக்க தான் அலையிதுன்னு அவன் என்னை வேலையை முடிச்சு கழட்டி விட அலையிறான். நீ அவனுக்கு சப்போர்ட்டா என தாயை திட்டியவள் அப்படியே சுழல் நாற்காலியில் சாய்ந்தாள்.
ஐ லவ் மனுஷ் மா. என்று கண்களை மூடியபடி சொல்ல அவளின் அம்மாவிற்கு ஏக ஆத்திரம்.
நீ நினைக்கிறது நடக்காதுடி. அந்த டைரக்டருக்கு உன்னே கட்டிக்க விருப்பம் இல்லை. அப்படி இருந்தால் அவன் ஏன் உன்னை நடிக்க வைக்கணும். அதுவுமில்லாம இப்ப நடந்த கல்யாணம் கூட. ரெண்டாவது கல்யாணம் தான்டி புரிஞ்சுக்க குழலி என்று சமாதானம் செய்ய
ஐ டோன்ட் வான்ட் யுவர் எக்ஸ்ப்ளனைஷேஷன். எல்லாம் உன்னால தான் நடந்தது. நீ மட்டும் பணம் பணம் னு அலையலைன்னா நான் எப்பவோ மனுஷை கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகி இருப்பேன் எல்லாம் உன்னாலடி என கத்தியபடி அவரின் முடியைப் பிடித்து இழுக்க
ஐயோ விடுடி பாவி. யாராவது வாங்களேன் என கத்தவும் வேலைக்கார பெண் வந்து காப்பாற்றினாள்.
ப்ம்ச் அவளை விட்டுட்டு ஃப்ரிட்ஜ்ல பியர் இருக்கும் எடுத்துட்டு வா. அப்படியே சிக்கன் சிக்ஸ்டிஃபைவ்” என்று ஆர்டர் போட
“ரொம்ப குடிக்கிறீங்கம்மா” என்று சங்கடமாய் உரைத்தாள் வேலைக்கார பெண்.
“உனக்கென்னடி போகுது. நான் அப்படி தான் குடிப்பேன். சீக்கிரம் செத்திடுவேன், இவ தொல்லை தாங்காம தற்கொலை பண்ணிப்பேன். எப்ப பார்த்தாலும் பணம் பணம் னு அலையறா பேய்… இவ தாயே இல்ல பேய் பேய்” என்று கத்தியபடி அங்கிருந்து வெளியேறினாள் ரிபாஷா.
காரை ஓட்டிக் கொண்டு புயல் வேகத்தில் அவள் செல்ல அவளை பின்தொடர்ந்து சென்றான் சர்ஷிமன்.
ரிஃபாஷா தன்னிலை மறந்து வண்டியை தறிகெட்டு ஓட்டிக் கொண்டு செல்ல, சர்ஷிமன் அவளின் மகிழுந்தை பின்தொடர்ந்தான். சென்னை புறவழிச்சாலையில் தறிகெட்டு ஓடியது அவளின் வண்டி.
‘இவ என்ன இந்த ஸ்பீடா போறா?!’ என்று முனகியவன், ஏதோ பிரச்னை உணர்ந்து ,’தனக்கான சமயம் இதுதான்’ என்றெண்ணி பின்தொடர, அவளோ அவனை ஏமாற்றி விட்டு வேறு பாதையில் சென்றுவிட்டாள்.
இங்கே சர்ஷிமன் போக்குவரத்து காவலரிடம் மாட்டி பின் அதிவேகம் என அபராதத்தை கட்டிவிட்டுச் சென்றான்.
“டேய் ! யார்னு கேட்டா பதில் சொல்லு சும்மா இந்த லந்து பண்ற வேலை எல்லாம் எங்கிட்ட வேணாம் அப்பறம் சீனாகிடும்” என்றாள் எரிச்சலாக.
“என்னா மேடம் நடிகையாச்சே நுனி நாக்கு இங்கிலீஷ்ல பேசுவீங்கனு பார்த்தா, இப்படி மதுரைக்காரப் பொண்ணு மாதிரி வெடிக்கிறீங்களே?!” என மீண்டும் அவன் வம்பு செய்தபடி தண்ணீரை நீட்டினான்.
“ஹேய்…!கேட்ட கேள்விக்கு பதில் சொல்ற பழக்கமே இல்லையா மேன்…”தண்ணீரை வாங்காமல் அவள் எரிச்சல்பட
“இல்ல கொழலி” என்றான் சிரிப்புடன்.
“கொழலு, கொக்குன்ன கொடலு குந்தாணி எல்லாம் வெளியை வந்துரும்” என்றாள் மூக்கை விடைத்தபடி.
ரிபாஷா நெற்றி தட்டி யோசித்தவள்,” ஹேய் நீ நீ…ப்ப்ச் மனுஷ் கூட இருப்பியே?” என்றாள்
“எல்லாரும் மனுஷங்க கூட தான் இருப்பாங்க.”என்றவன் நக்கலை விடவே இல்லை.
“என்ன கிண்டலா…நீ டைரக்டர் மனுஷ்யபுத்திரன் கூட இருந்தவன் தானே…?ஹான் இப்ப ஞாபகம் வருது அந்த ஏடி தானே நீ “என்றாள்.
“ஒரு வழியா கண்டுபுடிச்சுட்டிங்களா…நன்றி நான் அஜய் மித்ரன். இப்போவாச்சும் போய் பல்லை விளக்கிட்டு வாங்க” என்றான்.
“இது எந்த இடம்?”என்றாள் அடுத்ததாக.
“அட ராமா! ஏன் என்னை இந்த மாதிரி ஆளுங்க கூட எல்லாம் கோர்த்து விடுற” என்று வாய்விட்டே புலம்பியவன்,” தயவு செஞ்சு பல்லு விளக்கிடுங்க என்னால முடியல.”என கையெடுத்தே கும்பிட்டு விட்டான்.
“ரொம்ப தான்” என்று முனகியவள்,” பேஸ்ட் வேணும்”என்றாள்.
எல்லாவற்றையும் தயாராக நீட்டினான்,”சுத்தம் சோறு போடும் “என்றபடி.
“ஹான் ! சுகாதாரம் கொழம்பு ஊத்துமா …? அப்ப கூட்டு பொரியல் எல்லாம் யார் வைப்பா…?”என்று கிண்டல் செய்தபடி நகர்ந்தாள்.
“இன்னா மாதிரி நக்கலடிக்குது பாத்தியா இந்தம்மா ?”என்றவன் அவள் சாப்பிட ஏற்பாடு செய்தான்.
முகம் கைகால் எல்லாம் கழுவி வந்தாள்.
“ம்ம்ம், மேக்கப் இல்லாமலே நல்லா தான் இருக்காங்க .அப்புறம் எதுக்கு அத்தனை க்ரீம் பூசுறாங்க அதுசரி கேமராக்கு அழகா தெரியணுமில்ல” என தனக்குத் தானே பேசியபடி பிரட்டையும், ஜாமையும் கொடுத்தான்.
“இப்போதைக்கு இது தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் வண்டி வந்திடும், மதுரை ரீச் ஆகிடுவோம்.” என்றான் தகவலாக.
“மதுரைக்கு எதுக்கு…?”என்றாள்
“மனுஷ் சார் தான் சொன்னாங்க உங்களைப் பார்த்துக்க சொல்லி” என கூற
“அவருக்கு யார் சொன்னது…?அவர் ஹெல்ப் எனக்குத் தேவை கிடையாது. எனக்கு சென்னைக்கு டிக்கெட் புக் பண்ணு “என்றாள்.
“இதோப் பாருங்க மேடம், எங்க படத்தில் நடிக்கிறீங்க அதனால தான் இந்த உதவி கூட செய்றேன். மனுஷ் சார் சொன்னதால மட்டும் தான்.”என்றான் அழுத்தமாக.
“ப்ப்ச், உன்னை காப்பாத்த சொல்லி நான் கேட்டேனா இல்லை உங்க டைரக்டர் கிட்ட கேட்டேனா?” என வள்ளென விழுந்தாள்.
“எனக்கு ரொம்ப தேவை பாருங்க.”என்றவன் மனுஷிற்கு அழைத்து விட்டான்.
“சார் மேடம் எழுந்துட்டாங்க இதோ தர்றேன்” என சொல்ல
“எந்தா…?”
“இல்லயில்ல அண்ணா அண்ணா” என்றவன்,” மேடம் கிட்ட தர்றேண்ணா” என்று சொல்ல
“சரி தா” என்றான் அவன் சிரித்துக் கொண்டே
காதில் வாங்கி வைத்தவள் எதுவும் பேசாமல் இருக்க, மனுஷே பேசினான்.
“குழலி…என்ன பிரச்னை உனக்கு. ஒழுங்கா அஜய் கூட இரு. நான் சொல்றேன் இல்ல “என்றான் நிதானமாக.
“எனக்கு எந்த உதவியும் வேண்டாம் சார். இதுவரைக்கும் செஞ்சதுக்கு நன்றி” என்றாள் விட்டேற்றியாக.
“ப்ப்ச்… குழலி நீ என் தங்கை போல மனசிலாயோ..”
“நான் அப்படி நினைக்கலை” என்றாள் பட்டென.
“ப்ப்ச், குழலி டோன்ட் மேக் மீ ஆங்ரி” என்றவன்,” நீ ஏத்துக்கிட்டாலும், இல்லைன்னாலும் என் சிஸ்டர் தான் புரிஞ்சுதா. இவ்வளவு பேச்சு வேணாம். நான் சொல்றது கேழ்க்கணும் அதே “என்று இணைப்பைத் துண்டிக்க நெடுங்குழலி தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
தங்கை என சொல்லிவிட்டானே என்ற எரிச்சல்.
“மேடம் தலைவலிக்குதா ஏதாவது வேணுமா?” என்றான் அஜய்.
“சிகரெட் ப்ளீஸ் ?”கெத்தாக கேட்டாள் பெண்ணவள்.
“ஏங்க, பொண்ணுங்க இதெல்லாம் குடிக்க கூடாது ஆணுக்கு சமமா இருக்கேன் னு ஏன் இப்படி தப்பான பழக்கம் எல்லாம் கத்துக்கிறிங்க?” எரிமலையாக குமுறினான் ஆணவன்.
“உன் வேலை வெங்காயத்தை மட்டும் பாருடா சிகரெட் இருக்கா இல்லையா இல்லாட்டி அந்த கடையில வாங்கிட்டு வா” மிரட்டினாள் அவள்.
“சனியன் இதெல்லாம் ஒரு பொண்ணா, பிசாசு அண்ணன் சொன்னாருனு குரங்கு குட்டியை தூக்குற மாதிரி இதை கூட வச்சுட்டு சுத்துறேன்” சத்தமாகவே முனகினான்.
“இப்ப உன்னை குரங்கு னு சொல்றியா இல்
ல என்னை குட்டினு சொல்றியா என்றவள் உறங்கத் துவங்கி விட்டாள். எதையும் யோசிக்க இயலவில்லை தூங்கினால் நன்றாக இருக்கும்” எனத் தோன்றியது அவளுக்கு.