நமசிவாயம் தலையில் ஐஸ்க்கட்டி கலந்த நீரை ஊற்றி கொண்டிருந்தான்.  மண்டை சூடாகியது அவனுக்கு.  அகரா வேண்டும் என்று நிரண்டியது மனம்.  ஷகீரா கண்டிப்பாக வர மாட்டாள்… மோகம் தணிக்க வேண்டும், கூடலில் திளைக்க வேண்டும். கைப்படாத ரோஜா அகராவின் மீதான  மோகம் வெறியாக கூடிக் கொண்டே போனது ஆனால் அவளோ இவன் தொட முடியாத இடத்தில் அல்லவா இருக்கிறாள். முதல் மனைவி அப்பாவி அமுதரசி மங்கள கரமாக வந்து நின்றாள். 

“சாப்பிட வர்றிங்களா…?”கடமை தவறாத மனைவி அவள். 

“கதவை சாத்திட்டு வா” என்று சொல்லவும் தயங்கியவள்,” அது வந்து ராத்திரிக்கு …”என மென்று விழுங்கினாள்.

“அந்த டேஷ் எனக்கும் தெரியும். கதவை சாத்துடி “என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு. 

வேறு வழியில்லை அவளுக்கு.  ஷகீராவைப் போல அவனிடம் முடியாது என்று சொல்ல முடியாது அவளால்.  ஊரில் இருக்கும் தன் குடும்பத்திற்கு படியளப்பவனே அவன் தான் எனும் போது அவனை எப்படி மறுக்க முடியும்.  

கூடல் அவனது ஆளுகையில் முடிந்தது.  சோர்ந்து தளர்ந்து உறங்கி இருந்தாள்.  மோகம் தீர்த்த மனைவிக்கு ஒரு முத்தம் நெற்றியில்.  அதெல்லாம் சரியாகத் தான் செய்வான் கிராதகன்.  அவன் பேச்சைக் கேட்டால் ராணி தான்.  கேட்கவில்லை என்றால் சேடிப்பெண்ணாக தூக்கி எறிந்து விடுவான்.  ஷகீரா அவனது பேச்சையும் கேட்பாள். அவ்வப்போது எதிர்த்தும் அடிப்பாள்.  ஷகீரா அவனது பலவீனம்… அகரா அவனது வெறியீனம்… கிடைக்காத கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல அவள் மீதான ஆசை அவனுக்கு. 

“என்னடா கிடைச்சானா ?”என்ற கேள்விக்கு பதில் கிடைக்க இரண்டு நாட்கள் ஆகியது.  

அகராவின் ஊதாரி அப்பன்…  பெரிய பாரில் வேலைப் பார்த்து கொண்டிருந்தது.  அவ்வப்போது வாடிக்கையாளர்கள் வைத்து விட்டு போகும் அரைகுறை சரக்கெல்லாம் அவனுக்கு சொந்தம்…  வேலைக்கு சேரும் போதே சொல்லி விட்டார்… சரக்கு மூணு வேளை சோறு சம்பளமே வேணாம் என கூறி சேர்ந்தாயிற்று. முதலாளி ஒரு வாரம் பார்த்து விட்டு வேலைக்கு வைத்துக் கொள்வதாக கூற, அலட்டிக் கொள்ளவே இல்லை.  போகும் போது வரும் போது என மிச்ச குடி, எச்சைக்குடி என குடித்து விட்டு அவர்கள் விட்டுப் போகும் சைட்டிஷ்..  போதுமென்று மனநிலை வந்து விட ,முதலாளியிடம் மூன்று வேளை சோறு கூட கேட்கவில்லை. அவ்வளவு குஜாலான வாழ்க்கை.  நமசிவாயத்தின் ஆட்கள் அவனை கண்டு பிடித்து தூக்கிச் சென்று விட்டனர். 

ஆள் முழு போதையில் கிடக்க, நமசிவாயம் முன்னால் வந்து நின்றான். 

“ஹேய்…!! தண்ணியை தூக்கி தலையோட ஊத்துங்கடா “என்றதும் பைப்பை சொருகி அவனை குளிக்க வைத்து விட போதை தெளிந்தது. 

“எசமான் நீங்களா…!?”என்று கையெடுத்துக் கும்பிட்டு ,”காசு குடுக்க கூப்டிங்களா?, எனக்குத் தெரியும் என் மவ சொல்லி இருக்கும் எங்க நைனா கஷ்டப்படும் காசு குடுங்க’னு அதானே !!”வாயில் ஜொள் வடிய கேட்க 

“டேய் பழனி!, இவன் மொகரையில் ஒரு குத்து விடு டா “என்றதும் வெலவெலத்துப் போனவனுக்கு, மொத்த போதையும் தெளிந்து போனது. 

அகரயாழினி காணாமல் போனது பற்றியும், அவன் செய்ய வேண்டிய வேலை பற்றியும், கூற சந்தோஷமாக சரி என்று தலையாட்டினான்.

***************

மெட்டில்டா கணவனோடு ஊர் சுற்றி பார்க்க கிளம்பி இருந்தாள். 

அவளை ஆடை குறைப்பு செய்து புகைப்படமாக எடுத்து தள்ளினான் கணவன்.  போதாதற்கு அவளது பிஏவும் புகைப்படமாக எடுத்து அப்போதே சுட சுட இன்ஸ்டாவில் பதிவிட்டாள் .

“பேபி ஒன் மினிட்…!” என்று அலைபேசியை எடுத்துக் கொண்டு தனியே ஓடினான் கணவனவன். 

“ஜீ சொல்லுங்க ஜீ ,நீங்க சொன்ன மாதிரி தான் ஜீ பண்றேன்… அச்சோ வெளியே தெரியாது ஜீ நான் பார்த்துக்கிறேன்…  நீங்க எப்ப சொல்றீங்களோ அப்ப போயிடுவேன் ஜீ “என வார்த்தைக்கு வார்த்தை ஜீ போட்டான். 

“ம்ம்ம்  சரி…  இன்னும் ஒரே மாசம் அவள் நீ தான் வேணும் னு பைத்தியமா ரோட்டுல அலையணும்… போதை மருந்து குடுத்துட்டே இரு…சீக்கிரம் கையெழுத்து வாங்கிடு..”. என்று இணைப்பைத் துண்டித்து விட்டு வெளியே வந்தான் அவன். 

“ஆம்பளை என்ன செய்வான் னு காட்டிட்டேன் டி என் மாஜி பொண்டாட்டி.  “என்றபடி கைபேசியை டேபிளில் போட்டான் மனுஷ்யபுத்திரன். 

******

“அஜய் இந்த இடத்தில் ஒரு ஷாட் வச்சா செமயா இருக்குமில்ல. கூல் ப்ளேஸ்டா “என்றான் வினித் சிலாகிப்பாக .

“வாவ்டா! மனுஷ் சார் டேஸ்ட் உங்கிட்ட நிறையவே இருக்கு. அவரும் இதைத்தான் சொல்வார்.”என்றான் அஜய் மித்ரன். 

“எஸ்டா ஆனாலும்….”என்று அவன் தயங்க 

“வாட் மேன்?” என்று குழப்பத்துடன் அஜய் கேட்க 

“நத்திங் டா” என்றவன்,” என்ன தான் சார் இதெல்லாம் சொல்லித் தந்தாலும் நமக்கு ஒரு வாய்ப்பு தர மாட்டேங்கிறாரே !”என்றான் ஆதங்கத்துடன். 

அஜய் கலகலத்து சிரித்தான். 

“வினி, உனக்கு சாரைப் பத்தித் தெரியல. அவர் எங்க எந்த இடத்தில் நம்மளை தூக்கி விடணும்னு ஒரு கணக்கு வச்சிருப்பார், கண்டிப்பா செய்வார். யூ டோன்ட் வொர்ரி “என்றான். 

“அதுக்குள்ள எனக்கு வயசாகிடும்”என்றான் அவன். 

“யூ ஸ்டுப்பிட்!, நமக்கு வயசாகலாம் தப்பில்லை நம்ம கற்பனைக்குத் தான் வயசு ஆகக் கூடாது.” என்ற அஜய் அடுத்த இடத்தேர்விற்காக கிளம்பி விட்டான். 

“சாரே லொகேஷன் பிக்ஸ் அனுப்பி இருக்கேன் “என்று வினித் செய்தியை மனுஷிடம் பகிர 

“ஞான் நோக்காம் வினித். அஜய் எங்க?” என வினவ 

“அவன் வேற ப்ளேஸ் பார்க்கிறான் சார்” என்றதும் ,”ஓகே. ரிபாஃஷா எவிட அறியுமோ…?” 

“சாரே!” என்று தயங்கிட 

“எந்தா வினித் சத்யம் பறா ?”என்றதும் 

“மேடம் ஃபுல்லாயிட்டு சரக்கு சாரே. ஒரே பொலம்பல்னு சொன்னாங்க டச்சப் கேர்ள்” என்றான்.

“எந்துக்கு… சர்ஷிமன் எதுவும் பிரச்னை செய்யுதோ… ?”

“இல்ல சாரே, உங்களால” என்று கூறிவிட்டான். 

“ஞானோ… ஞான் எந்து செய்யு வினித்.?” 

“சாரே நிங்ஙளன்ட விவாஹம் பத்தி நியூஸ் போட்டல்லே அதில் வந்த தேஸ்யம்( கவலை)” 

“இதில் தெற்றென்ன (தப்பென்ன) என்ட விவாஹம் ஞான் பறைஞ்சு. ஆ பெண்குட்டிக்கு எந்தா தேஸ்யம்?” 

“சாரே அந்த பொண்ணு உங்களை ஒன்சைட் லவ்” எனும் போதே 

“ஷட் அப் வினித்.”என்றான். 

“இல்ல சாரே அவங்க அம்மை அதானு பறைஞ்சு (அப்படித்தான் சொன்னாங்க)” 

“ரண்டு பேருக்கும் பிராந்தானு (பைத்தியம்). சரி அதை ஞான் பாக்காம். நல்ல ஷாட்ஸ் எடுத்து ஷேர் பண்ணு” என இணைப்பைத் துண்டித்து விட்டான். 

வினித் நெஞ்சில் கைவைத்துக் கொண்டான். மகிழனோடு இணைந்து அகராவை இவனுக்கு துணையாக்கியதை அறிந்தால் தொலைத்து விடுவான் என்ற பயமே நெஞ்சில் குடிபுகுந்தது. 

‘பேசாம உண்மையை சொல்லிவிடலாமா?’ என யோசித்தான். 

ஆனாலும் இயக்குநர் ஆசை அவனை கூறவிடவில்லை. 

***********

இங்கே அகரா மனுஷையே பார்த்து கொண்டிருந்தாள். 

‘எந்தானு இப்படி ஒரு பார்வை…?’என்று முனகியவன் அவள் முன்பு சொடுக்கிட்டான். 

சட்டென்று சுயம் பெற்றவள் ,”என்ன சார் ?”என்றாள். 

“சாரோ…!?”என்று இழுக்க 

“வெளியே மட்டும் தான் வாங்க போங்க இங்க சார் தான்.” என்றாள் வேகமாக. 

“சரி அதை விடு. எதுக்கு அப்படி பார்க்கிற?” என்று கேட்கவும் 

“இல்ல ஒரு சந்தேகம், அதான் பார்த்தேன்” என்றாள். 

“சமஸ்யமோ…?”

“அப்படின்னா…?”

“சந்தேகம் அதே…!” 

“ஓஓஓ !”என்றவள்,” இல்லை அத்தை, மகிழன் அண்ணா… “

“அண்ணா இல்லை சேட்டன்.” என்றான். 

“சரி சேட்டன்… அவங்க தமிழ் ல பேசுறாங்க, அத்தை, மைத்ராக்கா எல்லாரும் தமிழில் பேசுறாங்க நீங்க மட்டும் பாதி தமிழ், பாதி மலையாளம் பேசுறீங்க?” என்று கேட்கவும் மனுஷிற்கு புன்னகை தான். 

“சேட்டன் சேட்டத்திக்கு ஐ மீன் அண்ணிக்காக தமிழ்ல பேசுறார். அண்ணி தமிழ் அதனால. அத்தர பிரேமம். அம்மா  பாதி தமிழ், பாதி மலையாளம். என்ட அச்சன் ப்யூர் மலையாளி. எனிக்கு அச்சனன்ட மலையாளம் பேச பிடிக்கும் அப்படியே பழகிடுச்சு. “என்றான். 

“உங்க பேச்சு நல்லா இருக்கு.”என்றவள்,” என் அம்மாவும் மலையாளி தான். ஆனா எனக்கு அவ்வளவா பேச வராது இங்கேயே இருந்துட்டேனா அதனால” என்றாள். 

“ஓஓஓ நிங்ஙள் அம்மை மலையாளியோ… வளர (ரொம்ப) சந்தோஷம்.” என்றவன் மடிக்கணினியோடு அமர்ந்து விட்டான். 

*******

நமசிவாயம் மனுஷையும், மகிழனையும் சந்திக்க இயலாமல் கோபத்தில் இருந்தான். 

இருவருமே இப்போது பார்க்க முடியாது என்று கூறி இருக்க அவனோ படம் தயாரிப்பதாகவும் நூல் விட்டு பார்த்திட எதற்குமே அசைந்து கொடுக்கவில்லை இருவரும். 

மகிழனாவது பார்க்கலாம் என்றிருக்க மனுஷோ,’ உன் பணம் எனக்கு தேவையில்லை வேறு யாரிடமாவது முயற்சி செய் ‘என்று முகத்திலடித்தாற் போல கூறி விட்டான் அதுவும் அஜய்மித்ரனை விட்டு. 

அதிலேயே நமசிவாயத்திற்கு அத்தனை ஆத்திரம். 

ஷகீரா நமசிவாயத்தின் முன்பு காகிதக்கட்டுக்களை தூக்கிப் போட்டாள். 

“ஏய்!” என்று வெகுண்டெழுந்தவனை கண்டு கொள்ளாமல்,” டிவோர்ஸ் பேப்பர் சைன் பண்ணிடு. இனி உன் கூட வாழ முடியாது” என்றாள். 

கோபத்தோடு எழுந்தவன்,” ஓஓஓ வாழ முடியாதோ ?”என்றபடி அவளது கழுத்தை நெரித்தான்.

ஷகீரா அவனது கையை வெடுக்கென தட்டிவிட்டாள். 

“என்னைக் கொல்ல நினைச்ச நீ களி தான் திங்கணும். என்னைய கொடுமைபடுத்தி விஷ ஊசி போட முயற்சி பண்ணதா மரணவாக்குமூலம் ரெடி பண்ணி வச்சிருக்கேன். நீ என்னை கொன்ன நிமிஷம் அது போலீஸ் கிட்ட கிடைக்கிற மாதிரி பண்ணி இருக்கேன்.” என்று மிரட்டவும் தான் நமசிவாயம் நிதானத்திற்கு வந்தான். 

“ஓகே ஓகே… இப்போ உனக்கு என்ன வேணும் ?”என்று இறங்கி வர

“சிம்பிள், டிவோர்ஸ் தான் வேணும்.”என்றாள். 

“அதைத் தவிர…” என அழுத்தமாக கேட்க

“எனக்கு டிவோர்ஸ் தான் வேணும் “என்றாள் இறுக்கத்துடன். 

“ஏன் ரீசன் சொல்லு?” என்றவனின் சட்டையைப் பிடித்தவள் ,”எங்கண்ணனைக் கொன்னுட்டு ரீசன் கேட்குறியா நீ.? அவர் என்னடா செஞ்சார் உன்னை ?”

“ஏன் உனக்கு தெரியாது, அவன் தானே அகராவை கூட்டிட்டுப் போனான். என் வழியில் குறுக்கிடாம இருந்தா நான் ஏன் கொல்லப் போறேன் ?”என எள்ளலாய் வினவிட 

“எந்த அண்ணன்டா தங்கச்சி புருஷன் வப்பாட்டி வச்சுக்கிட்டு திரிஞ்சா கேட்காம இருப்பான் ?”என்று ஆத்திரத்துடன் கேட்க

“நீயே அந்த கேட்டகரி தான…” என்றதும் பொங்கி விட்டாள் ஷகீரா. 

“என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணின நீ. அதையும் நான் பொறுத்துப் போனதுக்கு தானே மூணாவதா ஒருத்தியை கொண்டு வந்த நீ. எல்லாம் அதனால வந்தது தான்” என்றாள். 

“ஓகே கூல் டியர்!” என்றவன்,” நீ இனிமே வெளியே போக முடியாது” என்றான் திமிராக

“வெளியே போலீஸ் நிற்குது. இப்போ நீ என்னை விடலை. வரதட்சணை கொடுமைனு கேஸ் குடுத்திடுவாங்க என் வீட்டுல உள்ளவங்க. ரொம்ப பொறுமையா இருக்காங்க அதை சோதிக்காதே” என்றாள் இவளும். 

“ஸோ எல்லாம் ப்ரீ ப்ளான் பண்ணி செய்யுற அப்படித்தானே…?”

“ஆமாம்.உன்னால ஆனதை பார்த்துக்கோ” என்று வெளியேற 

“என்னை விட்டு உன்னால அவ்வளவு சீக்கிரம் போக முடி

யாது ஷகீரா.” 

“ஓஓஓ ஐ ஸீ. “என்றவள் அவனை சட்டைசெய்யாமல் அங்கிருந்து வெளியேறினாள்.

அமுதரசி அங்கே வரவும்,” உனக்கென்னடி ?”என வள்ளென விழுந்தான் அவளிடத்தில். 

“கா.. க்கு… காப்பி குடுக்க வந்தேங்க “என்று தடுமாற 

“போயிடு இல்ல சாவடிச்சுடுவேன்.” என எரிந்து விழ அமுதரசி ஓடிவிட்டாள் அங்கிருந்து.