6…

நிலையில்லா உறவுகளின்..

நிரந்தர அன்பைப் பெறுவதற்கு..

வேடமிடும் உலகம் இதில்..

அரிதாரம் பூசாத முகங்கள்..

போலி முகமென அறிவிக்கப்பட்டு..

விதவிதமாய் முகமூடி

அணிந்த முகங்கள்..

அரியணை ஏற்றிவைக்கப் படும்…

தன் காதல் கைகூடாமல் போன  கதையை   விஷல்யா கூறி    முடிக்க.. சிலநொடி நேரம் எதையோ எண்ணி தனக்குத்தானே சிரித்துக்  கொண்டிருந்தவர் சூழ்நிலை புரிந்து… தனது சிரிப்பை அடக்கிக் கொண்டு, “ சாரி மா.. என் மாமியார் வளர்ப்புனு நிரூபிக்கிற மாதிரி,  அப்பாவுக்கு பிள்ளைத் தப்பாம பிறந்திருக்கிறத நினைக்கவும் சிரிப்பு வந்துடுச்சு. நீ என் பையனால அனுபவிச்ச அவஸ்தைய  சொல்லிட்டு  இருக்கும் போது நான் சிரிச்சிருக்க கூடாது ” என்று தன் செயலுக்கு மன்னிப்பு வேண்டினார் பானுஸ்ரீ.