உன்னை காணத் துடிக்கும் கண்கள்… உன்னோடு பேசத் தவிக்கும் இதழ்கள்… உன்னை கண்டதும் பதற்றத்தில் தடுமாறும் இதயம்.. உன் விரல் தொட்டு விட தவம் கிடக்கும் விரல்கள்.. இவை யாவும் புதிரானவளே!… உன்னால் என்னுள் முளைத்த புதுமையான உணர்வுகள்..
” என்னை தேடி யாரும் வந்தாங்களா?” என்று வினவிய கீர்த்தன் முகத்தில் பிரதிபலித்த தவிப்பையும் ஏக்கத்தையும் கவனித்த சித்தேஷ்.. ” என்ன பாஸ் யாராவது முக்கியமான ஆள எதிர்பார்த்துட்டு இருக்கீங்களா?” என்றான்.
” இல்லையே, நான் யாரை எதிர்பார்க்க போறேன். சும்மா என்னை தேடி யாராவது வந்தாங்களான்னு கேட்டேன் அவ்வளவு தான்!” என்று மழுப்பலாய் பதில் தந்தவன், ” அப்போ இப்போ வரைக்கும் என்னை தேடி யாரும் வரலயா? ” என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டான் கீர்த்தன்.
” யாராவது உங்களை தேடி வரணும்னு எதிர்பார்க்கிறீர்களா பாஸ்?..” என்று குறும்பு நிறைந்த குரலில் கிண்டலாய் வினவினான் சித்தேஷ்.
” ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்ல, டிரஸ்ட் விஷயமா யாராவது ஹெல்ப் கேட்டு வருவாங்க போவாங்க அப்படி யாரும் ஹெல்ப் கேட்டு வந்தாங்களான்னு தான் கேட்டேன். ” என்றான் கீர்த்தன்.
‘ இவர் கேட்கிறதை பார்த்தா, புதுசா ஹெல்ப் பண்ண ஆள் தேடுற மாதிரி தெரியலையே!, ஏற்கனவே ஹெல்ப் பண்ணுன ஆளைத் தேடுற மாதிரில இருக்கு!, இத நாமளே வாய்விட்டு கேட்டா உதை தான் கிடைக்கும், அவரா கேட்கிற வரைக்கும் வாய மூடிட்டு அமைதியா இருடா சித்தேஷ்’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டான் சித்தேஷ்.
” என்ன அமைதியா இருக்க..? சரி அன்னைக்கு ஒரு பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணுனோமே!, அதுக்கப்புறம் அந்த பொண்ணு என்னை மீட் பண்ணனும்னு உன்னை காண்டாக்ட் பண்ணுச்சா?” என்று தயங்கியபடியே வினவினான் கீரத்தன்.
‘ இந்தா கேட்டுட்டாருல, இனி வைச்சு செய்ய வேண்டியது தான்..’ என்று தனக்குள் எண்ணி சிரித்துக்கொண்டவன், ” யாரை சொல்லுறீங்க பாஸ்? எந்தப் பொண்ணு?,” என்று எதுவும் அறியாதவன் போல் வினவினான் சித்தேஷ்.
“ அதான் அந்தப் பொண்ணு, வீட்டுக்கு கூட என்னைத் தேடி வந்துச்சே!, நாம கூட போலீஸ் ஸ்டேஷன் வரை போய் ஹெல்ப் பண்ணிட்டு வந்தோமே!, அந்தப் பொண்ணைத் தான் கேட்கிறேன்” என்றான் கீர்த்தன்.
“ஓ… அந்தப் பொண்ணா… பேரு கூட ஏதோ.. ஹனின்னு வருமே?” என்று தன் பாவனையை விடாமல் தொடர்ந்தான் சித்தேஷ்.
“ சுஹனி…!” என்று அவசரமாய் அவளது பெயரை அறிவித்தான் கீர்த்தன்.
‘ பாருடா… இனி தேடி வரக் கூடாதுன்னு சொல்லிட்டு, இவரே அவங்களத் தேடுறாரு! இது நல்ல இருக்கே!’ என்று கிண்டலாய் உள்ளுக்குள் எண்ணிக் கொண்டவன், “ அவங்கள தான் நீங்க வீட்டுக்குள்ளேயே விடக்கூடாதுன்னு சொல்லிருக்கீங்களே!, அப்புறம் எதுக்கு அவங்க உங்களைத் தேடி வர போறாங்க?” என்று உள்ளத்தின் எண்ணத்தை மறைத்து வினவினான் சித்தேஷ்.
” நான் தான் சொன்னேன், இருந்தாலும் மறுபடியும் தேடி வந்தாளான்னு தெரிஞ்சுக்க கேட்டேன்” என்று மழுப்பினான் கீரத்தன்.
” பாஸ் உங்களுக்கு உள்ள ஏதாவது பண்ணுதா?, அதாவது நான் என்ன கேட்க வரேன்னா, மனச யாரோ கசக்கி புழியிற மாதிரி.. உள்ளுக்குள்ள வலிக்குதா?, என்ன பேசுறதுன்னு புரியாம வார்த்தை தடுமாறுதா.. யாரைப் பார்த்தாலும் எரிச்சலா இருக்கா?” என்று ஆர்வமாய் வினவினான் சித்தேஷ்.
” ஆமாம் அப்படித் தான் இருக்கு அதெப்படி உனக்கு தெரிஞ்சது?” என்று வெகுளியாய் வினவினான் கீர்த்தன்.
சித்தேஷ் வார்த்தையில் இருந்த அர்த்தம் புரியாமல் குழம்பியவன், அவசரமாய் தன் முகத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டு, ‘இவன் என்ன இப்படி கேட்கிறான், ஒருவேளை என் முகத்துல வித்தியாசம் தெரிய ஆரம்பிச்சிடுச்சா?, காலையிலேயே ரத்தம் குடிச்சிட்டேனே அப்படி இருந்தும் சேஞ்சஸ் தெரியுதா என்ன?, ‘ என்று தனக்குள் எண்ணிக் கொண்டவன், கேள்வி கேட்டவன் புறமே திரும்பி “உனக்கு என் முகத்தில ஏதாவது வித்தியாசம் தெரியுதா?, ரத்த சோகை வந்த மாதிரி முகமெல்லாம் வெளிரி போய் இருக்கா என்ன?, என்னை பார்த்தா நோயாளி மாதிரி தெரியுறேனா? ” என்று பதறியபடி வினவினான் கீரத்தன்.
” என்ன சொல்லிட்டேன்னு இப்படி பதறுறீங்க?, நாலஞ்சு நாளா, அதாவது அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்ததுல இருந்து உங்க நடவடிக்கையில வித்தியாசம் தெரியுது அதான் கேட்டேன். ” என்று தன் கேள்விக்கான காரணத்தை விளக்கினான் சித்தேஷ்.
” அவ்வளவு தானா நான் என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன்… ” என்று நிம்மதி பெரிய மூச்சை வெளியேற்றினான் கீர்த்தன்.
” அப்போ உங்ககிட்ட சேஞ்சஸ் இருக்குன்னு நீங்களே ஒத்துக்குறீங்க?” என்று வினவினான் சித்தேஷ்.
” அதெல்லாம் ஒரு சேஞ்சும் இல்ல, நான் எப்பவும் போல தான் இருக்கேன்” என்று கீர்த்தன் பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருந்த நேரம் வீட்டின் சமையல் பெண்மணியான மஞ்சு அவ்விடம் வந்து சேர்ந்தார்.
” தம்பி உங்கள பாக்க ஒரு பொண்ணு வந்திருக்கு.” என்று மஞ்சு தகவல் தெரிவித்திட, ” சுஹனியா!, அது கண்டிப்பா ஹனியா தான் இருக்கும்” என்று ஆர்வத்துடன் இரண்டடி எடுத்து வைத்து, பின் சுதாரித்து, ” நீ போய் யாருன்னு பாரு” என்று சித்தேஷை ஏவினான் கீர்த்தன்.
” யாராயிருந்தா என்ன?, நீங்க என்ன அவங்களை மீட் பண்ணவா போறீங்க?, நான் போய் பாஸை பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டு வரேன்.” என்றபடி அங்கிருந்து நகர்ந்தான் சித்தேஷ்.
” ஏய் வெயிட் நான் பார்க்க முடியாதுன்னு எப்ப சொன்னேன்?” என்று தன் உதவியாளனை முந்திக்கொண்டு தன்னைக் காண வந்த பெண்மணியை காணப் புறப்பட்டான் கீர்த்தன்.
வரவேற்பில் காத்திருந்த பெண்ணை கண்டதும் ஏமாற்றத்துடன் நடையை தளர்த்தி மெதுவாய் நடந்தவனை கடந்து சென்ற சித்தேஷ், ” நீங்க யாரு எதுக்கு எங்க பாஸை பார்க்க வந்திருக்கீங்க?” என்று காரணம் வினவினான்.
” என் பெயர் அகிலா, கீர்த்தன் சார்கிட்ட கொஞ்சம் பேசணும். ” என்றார் வந்திருந்த பெண்மணி.
” உங்களை யாருன்னு எனக்கு தெரியாது உங்க கிட்ட பேச எனக்கு என்ன இருக்கு?” என்று அலட்சியமாய் கூறி தனது அறையை நோக்கி நடக்கத் துவங்கினான் கீர்த்தன்.
” சார் என்னை உங்களுக்கு தெரியாது, ஆனா உங்களைப் பத்தி சுஹனி நிறையவே சொல்லிருக்கா, நான் சுஹனி ஹாஸ்டல் வார்டன்” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார் அகிலா.
சுஹனியின் பெயரைக் கேட்டதும் வேகமாய் அவர்கள் அருகில் வந்து நின்றவன், ” நான் தான் கீர்த்தன், என்ன விஷயமா என்னை பார்க்க வந்திருக்கீங்க?, சுஹனி எப்படி இருக்கா?, இப்போ அவளுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே!, ” என்று எதிரில் இருந்தவர் பதில் கூற கூட இடம் தராமல் அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றான் கீர்த்தன்.
” ரொம்ப அக்கறை தான் போல..” என்று கிண்டலாய் சித்தேஷ் கூறிட, தன்னை மீறி வெளிப்பட்ட உணர்வுகளை அடக்கிக் கொண்டு அமைதியானன் கீர்த்தன்.
“சுஹனி இப்போ பெரிய பிரச்சனையில மாட்டிட்டு இருக்கா, என்னால தான் அவளுக்கு அந்தப் பிரச்சனையே வந்தது. நீங்க தான் அவளை எப்படியாவது காப்பாத்தணும்” என்று வேண்டுதலுடன் மன்றாடினார் அகிலா.
” மறுபடியும் முதல்ல இருந்தா.. ஏங்க அந்த பொண்ணுக்கு வேற வேலையே இல்லையா?, எப்ப பாரு ஏதாவது பிரச்சனையில மாட்டிட்டு இருக்கு, ஒவ்வொரு தடவையும் அந்த பொண்ணை காப்பாத்துறது தான் எங்க பாஸ்ஸோட வேலையா?, இனிமே எங்களை தேடி வரக்கூடாதுன்னு போன தடவையே வார்னிங் கொடுத்துட்டோம். திரும்பவும் ஹெல்ப் கேட்டு வந்து நின்னா என்ன அர்த்தம்?, அதெல்லாம் எங்க பாஸ் எந்த ஹெல்பும் பண்ண மாட்டாரு கிளம்புங்க..” என்று வேண்டுமென்றே வந்தவரை விரட்டுவது போல் பாவனை செய்தவன் தன் எஜமானன் புறம் திரும்பி, ” என்ன பாஸ் நான் சொல்றது சரிதானே!, நமக்கு இருக்கு ஆயிரம் வேலை, இதுல அடுத்தவங்களுக்கு போய் உதவி பண்ணிட்டு இருக்க முடியுமா?” என்றான் சித்தேஷ்.
” சார் ப்ளீஸ் இந்த ஒரு தடவை மட்டும் அவளுக்கு ஹெல்ப் பண்ணுங்க..” என்று அகிலா கெஞ்சலுடன் கேட்க.. ” அதான் என் அசிஸ்டன்ட் சொல்லிட்டான்ல, கிளம்புங்க” என்று இலகிய மனதை இறுக்கிக் கொண்டு உதவி செய்ய மறுத்துவிட்டு அங்கிருந்து விலகி நடந்தான் கீர்த்தன்.
‘என்னடா இவரு திடீர்னு இப்படி பல்டி அடிச்சுட்டாரு, ‘ என்று தன் எஜமானனின் நிலை இல்லா தீர்மானத்தைக் கண்டு தனக்குள் குழம்பிக் கொண்டான் சித்தேஷ்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் ‘பம்ப்’ செய்யும் போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.