இத்தனை எளிதாய் தனக்கான சம்மதம் கிடைக்கும் என்று சற்றும் எதிர்பார்த்திறாத  கீர்த்தன்  ” என்ன உடனே சரின்னு சொல்லிட்ட, நான் நீ வர மாட்டேன்னு சொல்லுவன்னு நினைச்சேன்.” என்று வியப்புடன் வினவினான். 

“கூப்பிடுவது நீங்களா இருக்கும்போது என்னால எப்படி வர முடியாதுன்னு சொல்ல முடியும் அரக்கா ” என்று அழகாய் புன்னகைத்தபடி கூறினாள் சுஹனி. 

அவள் அழைத்த விதம் அவனுக்குள் பெரும் சலனத்தைக் கொடுத்தது, ‘ இல்ல, இது அவ இல்ல.., இப்படி தடுமாறுறது சரியில்ல’ என்று தன் மீது  அவள் கொண்ட நம்பிக்கையை எண்ணி உண்டான குற்ற உணர்வை தனக்குள்ளே மறைத்துக் கொண்டு, “அப்போ நைட்  டின்னர் முடிச்சிட்டு ரெடியா இரு… நான் வந்து உன்னை கூட்டிட்டு போறேன்” என்றான் கீர்த்தன். 

கீர்த்தன் சொல்லி சென்றது போலவே இரவு உணவு முடிந்ததும்.. சுஹனியை தேடி அவள் அறைக்கு வந்தான். 

அவளும் தயாராக இருக்க.. இருவரும் தங்களது பயணத்தை துவங்கினர்,  சில மணி துளிகள் கடந்திருக்க அடர்ந்த காட்டின் மத்தியில் இருந்த வீட்டின் முன் காரை நிறுத்தினான் கேட்டேன். 

” ஓ.. இது தான் அந்த இடமா?” என்று சிறு பயம் கலந்த குரலில் சுஹனி  வினவ… ”  ஏன் உன் குரல்ல பயம் தெரியுது?” என்றான் கீர்த்தன். 

“ராத்திரி நேரத்தில வந்து இருக்கோம்ல அதான் கொஞ்சம் பயமா இருக்கு…” என்று சுஹனி காரணம் கூறிட.. “சரி வா உள்ள போலாம்…” என்று  வீட்டினுள் அழைத்துச்   சென்றான் கீர்த்தன். 

“இப்போ நாம இருக்கிற வீடும் இந்த வீடும் ஒரே நேரத்துல தான் கட்டினதா?” என்று சுஹனி வினவ.. “இது இப்போ ரீசண்டா ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தான் கட்டினது.. இது ஃபாரஸ்ட் ஏரியா அதனால  அப்ரூவல் கிடைக்க லேட் ஆயிடுச்சு..”  என்றான் கீர்த்தன். 

“ஓ அப்படியா..” என்றவள் வீட்டின் ஒவ்வொரு அறையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே  வந்தாள்.. ஒரு அறையில் மட்டும் பலவித பழமையான பொருட்கள் அடுக்கி  வைக்கப்பட்டு இருக்க..” இது என்ன ரொம்ப பழைய ராஜா காலத்து பொருட்கள் மாதிரி இருக்கு.. இதெல்லாம் உன்னோட கலெக்ஷன்னா?” என்று வினவினாள் சுஹனி. 

“ராஜா காலத்து பொருள் தான் , எனக்கு சொந்தமானது, ஒரு காலத்துல நான் பயன்படுத்துனது..” என்று புதிர் போட்டான் கீர்த்தன். 

“என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல…”என்று குழப்பத்துடன் சுஹனி காரணம்  வினவ… “ஒரு சாபத்தால பாதிக்கப்பட்ட ராஜாவை கூட இருந்த மந்திரிகளே சதி செஞ்சு.. சிறைபிடிச்சாங்க, ஒரு நாள் அந்த ராஜாவுக்கு உதவி  செய்றதுக்காக  ஒரு ஜோதிடர் வந்தார்… சாபம் தீரறதுக்கான வழியை சொல்லிக்  கொடுத்தவர், அந்த ராஜாவோட நட்பா இருந்தவங்க கிட்ட நடந்த எல்லாத்தையும் விளக்கி  சொல்லி சதிகாரங்கள வீழ்த்தி  நாட்டு மக்களுக்கு  நன்மை செய்ய ஏற்பாடு பண்ணாரு. என்ன தான் நட்பு நாடா இருந்தாலும்.. போர்  மூலமா நாட்டை கைப்பற்றி ராஜ்ஜியம் பண்ண ஆரம்பிச்சவங்க கொஞ்சம் கொஞ்சமா நாட்டு மக்களை அடிமை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.. தன்னோட மக்கள் தன் கண்ணு முன்னாடியே சித்திரவதை அனுபவிக்கிறத பார்த்து வருத்தப்பட்ட ராஜா அவங்களுக்கு உதவி செய்றதுக்காக அப்போ அந்த நாட்டை ராஜ்ஜியம் பண்ண எல்லாரையும் கொன்னுட்டாரு.. கொஞ்சம் கொஞ்சமா அப்படி ஒரு ராஜ்ஜியமே இருந்த தடையுமே இல்லாம அழிஞ்சு போச்சு.. இப்போ அந்த ராஜாவோட அரண்மனை இருந்த இடத்துல தான் நாம இப்ப இருக்கிற வீடு இருக்கு..” என்றான் கீர்த்தன். 

“ஓ  நாம  இருக்கிறது அரண்மனைனா, அப்போ இது தான்   ராஜாவோட பலிபீடமா..!” என்று கிண்டல் போல்  வினவினாள் சுஹனி.. “ஆமா இது பலிபீடம் தான்.. இங்கதான் அந்த ராஜாவுக்கு சாபம் கிடைச்சுச்சு, இப்போ இங்க தான் அந்த சாபமும் தீர போகுது..” என்றவன் மெதுவாய் சுஹனியின் பின் வந்து நின்று, “நீ என்னை உண்மையிலேயே காதலிக்கிறாயா?, எனக்காக என்ன வேணாலும் செய்வியா?” என்றான் கீர்த்தன். 

“நீ கேட்டா என் உயிரை கூட உனக்காக தருவேன்” என்று சுஹனி கூறி முடிக்க.. அந்த வார்த்தைக்காகவே காத்திருந்தவன் போல அடுத்த நொடியே அவள் கழுத்து பகுதியை நெருங்கினான். 

இதோ இப்போது அவள் உதிரம் இந்த இடத்தில் சிதறினால் அவன் கொண்ட சாபம் தீர்ந்தது, இருந்தும் அவனால் அதை செய்ய இயலவில்லை.. 

கடிக்க நினைத்த கழுத்து பகுதியில் இதழ் பதித்து முத்தமிட்டவன்..”நானும் உன்னை காதலிக்கிறேன்,  ஐ லவ் யூ சோ மச். நீ எப்பவும் என் கூடவே இருப்பியா?” என்று தழுதழுத்த குரலில் வினவினான் கீர்த்தன். 

கீர்த்தனின் வார்த்தையை சற்றும் எதிர் பார்த்திடாத.. சுஹனி “என்ன சொல்லுறீங்க, உண்மையா தான் சொல்றீங்களா?” என்று நம்பிக்கை இன்றி  வினவினாள். 

“உண்மை தான் சொல்றேன்.. சுஹனி அடிக்கடி நீ சந்தேகப்பட்டு கேட்ட மாதிரி நான் சாதாரண மனுஷன் இல்ல எனக்குள்ள பல ரகசியம் இருக்கு. அதை இப்போ இந்த இடத்துல வச்சு  என்னால சொல்ல முடியாது, வா நாம திரும்ப வீட்டுக்கு போகலாம்.”என்று சுஹனியின் கரம் பற்றி இழுத்துச் சென்றான் கீர்த்தன். 

இரண்டு அடி அவனுடன் சேர்ந்து நடந்தவள், அடுத்த நொடியே நின்ற இடத்தில் இருந்து நகரம் மறுத்து அழுத்தமாய் கால்களை பதித்து நின்று கொண்டு.. “இப்போ இங்க இருந்து போயிட்டா அப்புறம் எப்படி உன்னோட சாபம் தீரும் கீர்த்தி  வர்ம  தேசிங்கா.. “என்றாள் சுஹனி. 

அதிர்ச்சியுடன்  திரும்பிப் பார்த்தவன்.. “இது எப்படி உனக்கு தெரியும்?” என்றான். 

“தீபன் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான்.. அதுமட்டுமில்ல உன்னோட உண்மையான காதல் நான் தான்னு எனக்கு தெரிஞ்சிருச்சு. என்னை இப்போ கொன்னுடு அப்ப தான் உன்னோட சாபம் தீரும்..”என்று தன் உயிரையும் கொடுக்க முன் வந்தாள் சுஹனி. 

“ என்ன சொல்லுற..என் உண்மையான காதலா?” என்று குழப்பமாய் கீர்த்தன் வினவ.. “ ஆமா நான் தான் உன்னோட  உண்மைக் காதல், என்னைக் கொன்னுடு அரக்கா.. அப்போ தான் உன் சாபம் தீரும், இன்னும் எத்தனை வருஷத்துக்கு இந்த சாபத்தோட கஷ்டப்பட்டு வாழுவ..” என்றாள் சுஹனி. 

“இல்ல என்னால முடியாது..” என்று கீர்த்தன் மறுத்துக் கொண்டிருக்க.. 

அவன் கைப்பிடியை உதறி தள்ளிவிட்டு வேகமாய் நகர்ந்து நின்றவள் சற்றும் எதிர்பாராத விதமாய் அறையினுள் இருந்த கூர்மையான குறு வாள் ஒன்றை எடுத்து தன் கைகளை கிழித்துக்கொண்டாள். 

“உன்னோட உண்மையான காதலோட உதிரம் இந்த இடத்தில் படும் போது தான் உன்னோட சாபம் தீரும்ன்னு எனக்கு தெரியும் கீர்த்து. நான் தான் உன்னோட உண்மையான காதல் இந்த ஜென்மத்துல இல்ல இதுக்கு முன்னாடி ஜென்மத்துலையும் நான் தான் உன்னோட காதல்.. நீ தேடிட்டு இருந்த வெண்ப்  புறா பெண் நான் தான், என் பேரு காதம்பரி.  என்னோட புறா பேர் மயிலினி. ” என்று சுஹனி கூறிட.. கீர்த்தன் மனத்திரையில் பழைய நினைவுகள் வந்து போனது… 

பழைய நினைவுகளில் இருந்து மீண்டவன்… காயம் கண்டு கிடந்தவளை தன் கையில் ஏந்திக் கொண்டு கதறித் துடித்தான். “ நீயில்லாத வாழ்கை எனக்கு எதுக்கு..” என்று ஏமாற்றமாய் அரற்றியபடி  அவள்  கையில் இருந்த கூர் குறு வாள் கொண்டு தன் மார்பைக் கிழித்துக் கொண்டு அவள் கையாலேயே மரணத்தை தழுவத்  துணிந்தான் கீர்த்தன். 

பொதுவாய் இது போல் கீர்த்தனுக்கு காயம் நேரும் போது.. அவனது காயம் விரைவாகவே இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும், உதிரமும் வடியாது. இம்முறையும் இரத்தக் கசிவே இல்லாமல்  காயம் உடனே மறைய…” அய்யோ… நான் சாகனும்… நான் சாகனும்.  “ என்று வேதனை மிகுதியில் கத்திக் கொண்டே மீண்டும் மீண்டும் குறு வாள் கொண்டு தன்னைக் கிழித்துக் கொண்டான். 

சில முறை மறைந்த காயம்… இறுதியாய் மறையாமல் போக… காயம் கண்ட இடத்தில் இருந்து உதிரம் கசியத் துவங்கியது. 

இருவரின் உதிரமும் ஒன்றாய் இணைந்து அந்த கொலைக் களத்தை இரத்தத்தால் நனைத்தது… இருவரும் அவ்விடத்திலேயே கண் மூடி சரிந்தனர். 

இருவரும் இரவு நேரத்தில் வெளியில் சென்றதை அறிந்து கொண்ட சித்தேஷ் இருவரும் எங்கு சென்றிருக்க கூடும் என்ற யூகத்துடன் அவ்விடம் வந்து சேர.. இருவரும் மயங்கிய நிலையில்  கிடந்தனர்,  அவசரமாய் மருத்துவ ஊர்தியை வரவழைத்து  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். 

இருவருக்குமான  சிகிச்சைகள் நடந்து கொண்டிருந்த வேலையில்… மருத்துவமனை வளாகத்திலேயே காவல் இருந்தான் சித்தேஷ். 

சில நாட்கள் கடந்து… 

வரவேற்பில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த தொலைக்காட்சி பெட்டியில் ‘கும்பக்கரை அருவி அருகில் இருந்த தனி பங்களாவில் ஆள் அடையாளம் தெரியாத பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது, கொலை செய்தது யார் எந்த காரணத்திற்காக இந்த கொலை நிகழ்ந்து என்று போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்’ என்று  செய்தி வாசிப்பாளர் செய்தியை கூறி முடிக்க.. 

கீர்த்தனை ஓரப்பார்வையில் பார்த்தவள்…” இது தான் உன்னோட லாஸ்ட் கொலையா இருக்கணும்..” என்று  உத்தரவிட..” உத்தரவு அரசியாரே!”  என்று  நமட்டு  சிரிப்புடன் கூறினான் கீர்த்தன். 

“இத்தனை நாளா அசைவத்தை தவிர வேறு எதையும் தொட்டுப் பார்க்காத தம்பி ஹோஸ்ப்பிடல் போயிட்டு வந்ததுல இருந்து அசைவத்தை தொட்டு கூட பாக்குறது இல்லையே… “என்று  வியப்பாய் கூறியபடி.. அனைவரின் தட்டிலும் உணவை அடுக்கினார் மஞ்சு. 

“இனி அப்படித்தான் மஞ்சு அம்மா.. நான் பழைய கீர்த்தன் இல்ல இப்போ புது ஆளா மாறிட்டேன்..”என்று புன்னகையுடன் கூறினான் கீர்த்தன். 

இனி எல்லாம் சுகமே சுபமே….. 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 

* ரத்தம் கொடுப்பதற்கு முன்னர், மன அமைதியுடன் இருக்க வேண்டும். மெல்லிய இசையை ரசிக்கலாம். 

* ரத்தம் கொடுத்த பின்னர், பழச்சாறு, ஹெல்தி ஸ்நாக்ஸ் அல்லது ஆரோக்கியமான பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். 

* ரத்தம் கொடுத்த அடுத்த 24 மணி நேரத்துக்கு மது அருந்தக் கூடாது. திரவ உணவை எடுத்துக்கொள்ளலாம். 

* ரத்தம் கொடுத்த பின்னர், எடை அதிகம் உள்ள பொருள்களைத் தூக்கக் கூடாது. கடுமையான உடற்பயிற்சி செய்யக் கூடாது. 

* ரத்தம் கொடுத்த அடுத்த 24 மணி நேரத்துக்கு கடினமான செயல்கள் எதுவும் செய்யக்

கூடாது. வியர்வையை உண்டாக்கும் செயல்கள், விளையாட்டு, பணி போன்றவற்றைத் தவிர்க்கலாம். 

*