Advertisement

31. ..

யாரிடம் கலகத்தை துவங்கலாம் என்று தாயும் மகளும் திருமண மண்டபத்தையே சுற்றி வந்து கொண்டிருக்க அவர்களின் வழியை மறைத்தபடி வந்து நின்றார் கோமதி.

” யாருமா நீ?, எதுக்கு இப்போ எங்க வழியில வந்து நிக்கிற?” என்று கோமதியை அடையாளம் கண்டு கொள்ளாமல் வேலம்மாள் பேசிட… ” அட அம்மா இவங்க யாருன்னு உனக்கு தெரியல!, இவங்க தான் பையனோட பெரியம்மா.. அதாவது நம்ம மதுவுக்கு மாமியார் முறை” என்று தன் அன்னைக்கு நினைவு படுத்தினார் காந்திமதி.

” மாமியார்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு?, இப்ப எதுக்கு என் வழியில குறுக்கிடணும்?” என்று எடுத்தெறிந்து பேசினார் வேலம்மாள்.

அவரது அலட்சியம் தந்த கோபத்தில், ” எதுக்காக இப்ப மண்டபத்தை இப்படி சுத்தி சுத்தி வரீங்க… மறுபடியும் பொண்ண கடத்தனுமா?, ” என்று குத்தலாய் வினவினார் கோமதி.

“என்ன.. நீ என்ன சொல்ல வர?, அதெல்லாம் ஒன்னும் இல்லையே நாங்க எந்த பொண்ணை கடத்த போறோம்?” என்று அவசரமாய் தாயும் மகளும் மறுக்க…” சும்மா என்கிட்ட நடிக்காதீர்கள்!, இங்க வந்ததுல இருந்து நானும் உங்களை கவனிச்சுட்டு தான் இருக்கேன், பொண்ண கடத்தனும்னு நீங்க போட்ட பிளான்… நைட்டோட நைட்டா நாலு பேர வச்சு பொண்ண கடத்துனது.. எல்லா விஷயமும் எனக்கு தெரியும்” என்று மிரட்டும் தோரணையில் பேசினார் கோமதி.

” என்னமா பேசுற நீ நாங்க எதுக்கு பொண்ண கடத்த போறோம், நாங்க யாருன்னு தெரியாம பேசிட்டு இருக்கன்னு நினைக்கிறேன். கல்யாண பொண்ணு என்னோட பேத்தி, சொந்த பேத்தியை யாராவது கடத்துவாங்களா?” என்று நல்லவர் போல் பேசினார் வேலம்மாள்.

” சொந்த பேத்தியை யாரும் கடத்த மாட்டாங்க. ஆனா பேரனுக்கு உங்க பேத்திய கல்யாணம் நடக்கணும்னா இதை விட்டா வேற வழி இல்லையே!, ” என்று கோமதி கூறிட… ” இங்க பாருங்க நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுட்டு வந்து எங்க கிட்ட பேசிட்டு இருக்கீங்க… ” என்று காந்திமதி தடுமாற்றத்துடன் பதில் தர, ” இங்க பாருங்க சும்மா நல்லவங்க மாதிரி சீன் போடாதீங்க, எனக்கு எல்லாம் தெரியும். நீங்க கல்யாண பொண்ண கடத்துவதற்கு திட்டம் போட்டுட்டு இருந்தது நானும் கேட்டுட்டு தான் இருந்தேன். அது மட்டும் இல்ல உங்க பையன் செட் பண்ணுன ஆட்கள் கல்யாண பொண்ணு தூக்கிட்டு போறதையும் பார்த்தேன்.” என்று தனக்கு எல்லாம் தெரியும் என்பதை அறிவித்தார் கோமதி.

” ஆமா திட்டம் போட்டோம் தான் அதுக்கு இப்ப என்னங்கறீங்க?, என் அண்ணன் மகளுக்கும் என் பையனுக்கும் தான் கல்யாணம்னு சின்ன வயசுலயே பேசி முடிச்சிருந்தோம். கடைசில பணக்கார வீட்டு சம்பந்தம் வரவும் என் பையன கழட்டி விட்டுட்டாங்க. அந்தக் கோபத்துல தான் பொண்ண கடத்தி என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சோம். நாம ஒன்னு நினைக்க கடவுள் ஒன்னு நினைச்ச கதையா…. கடைசியில நாங்க ஆசைப்பட்ட மாதிரி எதுவும் நடக்காம உங்க வீட்டு பையனுக்கும் என் அண்ணன் மகளுக்கும் கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு. இதுக்கு மேல பழசை பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. தேவையில்லாம இந்த கட்டத்தில் கதையெல்லாம் யார் கிட்டயும் சொல்லிட்டு இருக்காதீங்க.. நீங்க சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க, இருந்தாலும் குடும்பத்துக்குள்ள விரிசல் வரக்கூடாதுன்னு தான் சொல்றேன். ” என்று தாங்கள் செய்த தவறு இல்லை என்பது போலவே வாதிட்டார் காந்திமதி.

“அப்பப்பா செஞ்ச தப்ப தப்பே இல்லை என்று வாதாடுறீங்க..?, நான் உங்ககிட்ட இருந்து கண்டிப்பா நிறைய கத்துக்கணுங்க… ” என்று தனக்கு முன் இருந்தவர்களின் செயலை மெச்சுவது போல் புன்னகை செய்தவர், “சரி சொல்லுங்க இப்ப எதுக்கு உங்க பையனும் மருமகளும் அவசர அவசரமா எங்கேயோ கிளம்பி போயிட்டு இருக்காங்க என்ன நடக்குது?, கல்யாண பொண்ணோட அண்ணன் எங்க?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை வினவிக் கொண்டு சென்றார் கோமதி.

“அதெல்லாம் உனக்கு எதுக்கு நாங்க எதுக்கு அதெல்லாம் உன்கிட்ட சொல்லணும்?” என்று வேலம்மாள் விவரம் கூற தயங்க…” அம்மா… கொஞ்சம் இந்த பக்கம் வாங்க ” என்று தன் தாயை மட்டும் தனியே அழைத்துச் சென்ற காந்திமதி… ” இந்த அம்மாவைப் பாத்தா கொஞ்சம் வம்புகார ஆள் மாதிரி தெரியுது. பேசாம நம்ம கலகத்தை இங்க இருந்தே ஆரம்பிச்சுடலாம் ” என்று யோசனை கூறினாள்

” அப்படிங்கற?, இது சரியா வருமா?” என்று அப்போதும் வேலம்மாள் தயக்கம் காட்டிட… ” இங்க ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும், பொதுவா இந்த மாதிரி பிரச்சினைகளை ஆம்பளைங்க கிட்ட கொண்டு போனா… ஏன் இப்படி பண்றீங்கன்னு இரண்டு தடவை கோவமா கத்திட்டு விட்டுடுவாங்க, இதை வீட்டு பொம்பளை ஆளுங்களுக்கு இந்த மாதிரி விஷயம் தெரிய வந்தா.. கொஞ்சம் கொஞ்சமா பேசி பேசியே பிரச்சினையை பெரிசாகிடுவாங்க… அது மட்டும் இல்ல வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இதையே காரணமா சொல்லி குத்திட்டே இருப்பாங்க. இந்த அம்மா வேற மதுவுக்கு மாமியார் முறை வேற… கேட்கவே வேணாம் மது ஓட மாமியார் வீட்டு வாசம் இனி நரகம் தான். ” என்று தன் அண்ணன் மகள் வாழ்வை கெடுப்பதற்கு திட்டம் தீட்டி கொடுத்தாள் காந்திமதி.

” நீ சொல்றதும் சரிதான்.. ” என்று மகளின் வார்த்தையை ஆமோதித்தவர் கோமதியிடம் சென்று நடந்த அனைத்தையும் கூறி முடித்தார்.

எல்லாவற்றையும் நிதானமாக கேட்டுக் கொண்டு அமைதியாக நின்றவர்… ” இப்போ இந்த பிரச்சனைய வச்சு நீங்க கலகம் பண்ண நினைக்கிறீங்கன்னு எனக்கு புரியுது, ஆனா இதெல்லாம் வேலைக்கே ஆகாது. பொண்ணோட அண்ணனை ஹாஸ்பிடல்ல சேர்த்தது ஒருவேளை நீங்க சொல்ற மாதிரி காவியனா இருந்திருந்தா, உன்னோட அப்பா அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியறதுக்கு முன்னாடியே கண்டிப்பா அவனோட தாத்தாவுக்கும் தெரிஞ்சிருக்கும். அவர்தான் யார்கிட்டயும் சொல்லாமல் கல்யாணத்தை முடிச்சிட்டு அதுக்கப்புறம் மத்ததை பாத்துக்கலாம்னு ஐடியா கொடுத்திருப்பார். அவங்கள பொறுத்த வரைக்கும் இந்த கல்யாணம் எப்படியாவது நடக்கணும். அதுக்காக என்ன வேணாலும் செய்வாங்க” என்றார் கோமதி.

யாரிடம் கூறினால் பிரச்சனை பெரிதாகும் என்று எதிர்பார்த்தார்களோ அவரே இது ஒரு பிரச்சனையே இல்லை என்று முடித்து விட, இதற்கு மேல் என்ன செய்வது என்று புரியாத தவிப்புடன் தாயும் மகளும் நின்றிருந்தனர்.

இருவரின் முகத்தையும் கூர்ந்து கவனித்த கோமதி… “இன்பாக்ட் நானும் உங்க கட்சி தான். எனக்கும் இந்த கல்யாணம் நடக்குறதுல கொஞ்சம் கூட விருப்பமில்ல. ஆனா என்ன செய்ய உங்க சொதப்பலால கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு. இதுக்கு மேல என்ன செய்யலாம்னு யோசிப்போம். ” என்று கோமதி கூறிட….

” அப்போ நீங்களும் எங்க பக்கம் தானா!, நல்லதா போச்சு.. உங்க வீட்டு ஆளுகளை பத்தி உங்களுக்கு தான் நல்லா தெரியுமே என்ன பண்ணுனா பிரச்சனையாகும்ன்னு சொல்லுங்கள். அது மாதிரியே எல்லாத்தையும் சிறப்பா செஞ்சிடலாம்”என்று ஆர்வத்துடன் வினவினார் காந்திமதி.

” உங்களுக்கு இப்போ என்ன ஒரு பிரச்சனை வேணும், அதை பெரிசாக்கி.. கல்யாண வீட்டை இரண்டாக்கணும் அவ்வளவு தானே, அதுக்கான துடுப்பு சீட்டு என்கிட்ட இருக்கு. ” என்று தன் அலைபேசியில் இருந்த காவியனின் காணொளி ஒன்றை இருவருக்கும் ஒளிபரப்பி காட்டினார்.

” இதுல என்னங்க இருக்கு, எங்களுக்கு ஒன்னும் புரியல! அந்த பையன் ஏதோ கோபத்துல வீட்ல இருக்க எல்லா பொருளையும் போட்டு உடைக்குது.. இத வச்சு எப்படி பிரச்சனை பண்ண முடியும். என் பையனுக்கு கோவம் வந்தா.. பொருளை எல்லாம் உடைக்க மாட்டான் எதிர்ல இருக்கிறவங்க தலைய தான் உடைப்பான். இதெல்லாம் ஒரு விஷயம்னு இத வச்சு பிரச்சனை பண்ண சொல்றீங்க?” என்று அலட்சியமாக பேசினாள் காந்திமதி.

” அவன் பொருளை உடைக்கிறது பிரச்சனை.. இல்ல. நான் சொல்ற பிரச்சினையே அவன் தான். சின்ன வயசுல அவங்க அப்பா அம்மா அவன் கண்ணு முன்னாடி தீப்பிடிச்சு இறந்ததை பார்த்ததிலிருந்து மனசு அளவில அஃபெக்ட் ஆகி இருக்கான். அப்போ இருந்து அவனுக்கு சைக்காலஜிக்கல் ட்ரீட்மென்ட் குடுத்துட்டு இருக்காங்க.” என்று கோமதி கூறிக்கொண்டே செல்ல…

“எங்களுக்கு இப்பவும் ஒன்னும் புரியல..” என்று உதட்டைப் பெருக்கி தலை அசைத்தனர் தாயும் மகளும்.

” உங்க பொண்ண கல்யாணம் பண்ண காவியன் ஒரு அரை பைத்தியம் இப்ப புரியுதா?, கோவம் வந்தா இப்படி பொருட்களை மட்டும் இல்ல, பக்கத்துல இருக்கிற ஆளுங்களையும் அடிச்சிடுவான். ஒரு தடவை என்னை கூட அடிச்சிருக்கான். அவங்க அப்பா அம்மா சாவுக்கு கூட ஒரு வகையில அவன் தான் காரணம். இந்த விஷயம் எல்லாத்தையும் மறைச்சு தான் உங்க வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கான். இது போதுமா நீங்க பிரச்சினை பண்ண?” என்று காவியன் குறித்த அனைத்து விவரங்களையும் கூறி முடித்தார் கோமதி.

“இது போதுமா வா?, இத வச்சு நடந்த கல்யாணத்தையே இல்லைன்னு ஆக்கிடலாம்” என்று பெண் வீட்டு பெண்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க… ” அதுதான் எனக்கு வேணும்” என்று வந்த வேலை நிறைவுற்ற நிம்மதியுடன் அங்கிருந்து அகன்றார் கோமதி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement