30…

உயிர் வாழ வேண்டும் என்பது                                             எனது ஆசையாக இருந்தாலும்                                                உன்னுடன் வாழ வேண்டும் என்பதே                                        எனது பேராசையாக இருக்கிறது..

48 வருடங்களுக்கு ஒரு முறை வரும் சந்திர கிரக தினத்திற்கு இன்னும் சரியாக மூன்று நாட்கள் இருந்த நிலையில்….

சுஹனியை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக கல்லூரி முடியும் நேரத்தை கணக்கிட்டு காருடன் வந்திருந்த சித்தேஷ்.. அவளுக்காக  கல்லூரி வாசலில் காத்திருந்தான்.

ஏறத்தாழ அனைத்து மாணவர்களும் வெளியேறி விட்ட நிலையிலும் சுஹனி கல்லூரியை விட்டு வெளியேறாமல் இருக்க.. அவளுக்காக காத்திருந்த சித்தேஷ், சுஹனியின் வகுப்பு தோழிகளிடம் தொலைபேசி மூலமாக விசாரித்தான்.

“ஹலோ நான் சித்தேஷ். சுஹனி இன்னும் காலேஜ்ல இருந்து   வரல, அவங்க எங்க போயிருக்காங்கன்னு உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா..?”என்று விசாரிக்க..”சுஹனி இன்னைக்கு காலேஜுக்கே வரலையே!” என்று பதில் தந்தாள் சுஹனியின் வகுப்பு தோழி.

“என்ன சொல்றீங்க? நான் தான் இன்னைக்கு காலைல அவங்கள காலேஜ் வாசல்ல இறக்கி விட்டேன். நீங்க என்னடான்னா அவங்க காலேஜ்க்கே வரலன்னு சொல்றீங்க?” என்று அதிர்ச்சியுடன் வினவினான் சித்தேஷ்.

” சுஹனி  கலேஜ் கேம்பஸ்குள்ள வந்தா, அப்புறம் அவளைப் பார்க்க விசிட்டர் யாரே வந்திருக்காங்கன்னு ஃஆப்ஸ் ரூம்ல இருந்து  மெசேஜ் வந்தது , அப்போ கிளம்பிப் போனவ தான் அடுத்து கிளாசுக்கு வரவே இல்ல.”என்றாள் அந்த தோழி.

சுஹனி காணவில்லை எனும் செய்தியை உடனே கீர்த்தனுக்கு தெரிவிக்கப்பட்டது, “எப்பவும் அவ கூடவே இருக்கனும்னு தான உன் கிட்ட சொல்லி இருந்தேன். எதுக்கு அவளத் தனியா விட்டுட்டு போன?” என்று கோபமாய் வினவினான் கீர்த்தன்.

“கூடவே இருக்க சொன்னீங்க, அதுக்காக கிளாஸ் ரூம் வரைக்கும் போக முடியுமா? பாஸ். ” என்று நியாயமாய் கேள்வி எழுப்பினான் சித்தேஷ்.

“போகனும், அதை விட்டா உனக்கு என்ன வேலை?, காலைலயே போயிட்டான்னு சொல்லுற, இப்பே ஃஈவினிங் ஆயிடுச்சு, இப்போ அவளைக்  எங்கன்னு போய் தேடுறது?,  ” என்று புலம்பித் தள்ளினான் கீர்த்தன்.

“பாஸ் ஒருவேளை நீங்க அவங்க லவ்வை அக்சப்ட் பண்ண மாட்டேங்கறீங்கன்னு கோபத்துல எங்கேயாவது போயிருப்பங்ளோ!” என்று சந்தேகமாய் சித்தேஷ் கூறிட…..

“பைத்தியம் மாதிரி உளறாத!, ஹனி அந்த அளவுக்கு கோழை இல்லை..” என்று கீர்த்தன் மறுக்க..,”ஒருவேளை உங்களை பிளாக்மெயில் பண்ணி பார்க்க நினைச்சு இப்படி செஞ்சி இருப்பாங்களோ!” என்று மீண்டும் அதையே வினவினான் சித்தேஷ்.

“என்னை பிளாக் மெயில் பண்ண வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லை, என் மனசுல என்ன இருக்குன்னு நான் சொல்லாமலேயே அவளுக்கு புரிஞ்சுடுச்சு,  அதனால தேவையில்லாத பேசி நேரத்தை வீணடிக்காம  ஒழுங்கா போய் ஹனி எங்க இருக்கான்னு தேடி கண்டுபிடிக்கிற வழியப் பாரு ..”என்று கோபமாய் உத்தரவு பிறப்பித்தான் கீர்த்தன்.

“சரி நான் ஒரு பக்கம் தேடுறேன் நீங்களும் ஒரு பக்கம் தேடுங்க, எதுக்கும் ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து வைப்போமா!, ” என்றான்  சித்தேஷ்.

“வேண்டாம் தேவையில்லாம பிரச்சனை பெருசாகும்.. ஹனி  போன் சிக்னலை டிராக் பண்ணு கடைசி சிக்னல் எங்க கட் ஆகியிருக்கும் பாத்துட்டு எனக்கு இன்பார்ம் பண்ணு…” என்று அழைப்பை துண்டித்து விட்டு, அடுத்து ஆக வேண்டிய வேலையை கவனிக்க துவங்கினான் கீர்த்தன்.

முதலாளியின் உத்தரவை ஏற்ற சித்தேஷ்   சற்று நேரத்தில் மீண்டும் அழைத்து…”  பாஸ் சுஹனி  போன் சிக்னல் காலேஜ் பக்கத்திலேயே கட் ஆயிடுச்சு…, இப்போ என்ன பண்றது, அவங்கள எங்கன்னு தேடுறது?” என்று குழப்பமாய் வினவினான் சித்தேஷ்.

“அவளை எங்க யார் கூட்டிட்டு போயிருப்பாங்கன்னு எனக்கு தெரியும்.. நான்  உடனே  ஊருக்கு கிளம்பனும். மதுரைக்கு பிளைட் டிக்கெட் புக் பண்ணிட்டு,  அங்க இருந்து தேனிக்கு போக  எனக்கு ஒரு கார்  அரேஞ்ச் பண்ணு..” என்று சுஹனி  இருக்கும் இடம் அறிந்தவன் போல் பேசினான் கீர்த்தன்.

“தேனிக்கா ஏன் பாஸ்?” என்று புரியாமல் சித்தேஷ் வினவிட..

” அவளை நிச்சயமா அவளோட மாமா பையன் தான் கூட்டிட்டு போய் இருப்பான்.” என்றான் கீர்த்தன்.

“அப்ப நானும் உங்க கூட வரேன் பாஸ்..”என்று கீர்த்தனுடன் செல்ல தயாரானான் சித்தேஷ்.

“வேண்டாம் நீ இங்கேயே இரு…”என்று மறுத்துவிட்டு.. கீர்த்தன் மட்டும் பயணத்திற்கு தயாரானான்.

சென்னையில் இருந்து மதுரை வரை விமான பயணம் பின் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தின் மூலமாக சுஹனியின் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தான் கீர்த்தன்.

இம்முறை வேறு எங்கும் தேடி அலையாமல் நேரடியாக கும்பக்கரை அருவி அருகில் இருக்கும் தனி வீட்டிற்கு சென்றான்  கீர்த்தன்.

அவன் எதிர்பார்த்து வந்தது போலவே..  சுஹனியை  மயக்கத்தில் வைத்து முன்பு செய்தது போலவே.. நவசக்தி பூஜையை நிகழ்த்திக் கொண்டிருந்தான் தீபேந்திரன்.

அனுமதி இல்லாமல் வீட்டினுள் வந்து நின்றவனை ஏளனமாய் பார்த்த.. தீபேந்திரன். “நீ வருவன்னு எனக்கு தெரியும்.. கீர்த்தி வர்ம தேசிங்கா..”என்றான்.

“எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டயோ!..”என்று கீர்த்தன்  வினவிட..

ஆமாம் என்பது போல அசட்டையாக தலை அசைத்தவன், “ எனக்கு என்னமோ உன்னை பார்த்ததுல இருந்து ஒரு மாதிரியா கோபம், வெறுப்பு, எரிச்சல் எல்லாம் கலந்த கலவையா உன்னை அடிச்சே கொல்லணும்னு தோணிட்டே இருந்தது, இது என்னடா, முதல் தடவையா பார்க்கிற ஒருத்தன்  மேல எதுக்கு இவ்ளோ வெறுப்புன்னு முதல்ல புரியல,  அப்புறம் பொறுமையா யோசிச்சு பார்க்கும் போது தான்  ஒரு விஷயம் புரிஞ்சது, நான் தான் உன்னை முதல் தடவையா பார்க்கிறேன்.. ஆனா உனக்கு அப்படி இல்லன்னு..  ஆரம்பத்துல இருந்தே என்னை தெரிஞ்ச மாதரியே   பேசினேல, கடைசியா ஒரு பேரு சொன்ன பாரு அப்போ தான் தெளிவா புரிஞ்சது, இது நம்மளோட முதல் சந்திப்பு இல்லன்னு. சரி உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு   உன் ஊர்ல விசாரிக்கும் போது.. நான் எதிர்பார்த்த மாதிரி பெருசா ஒரு விபரமும் கிடைக்கல, என்னடா இதுன்னு நான் தவிச்சுட்டு நிக்கும் போது,   பக்கத்துக்கு தோட்டத்துல சமந்தமே இல்லாம செத்துக் கிடத்த கோழிய பத்தி வீட்டு வேலைக் காரன் சொன்னான். பொதுவா இந்த மாதிரி பலி குடுக்கிறது என் வேலை,  நான் எதுவும் செய்யாம இருக்கும் போது அந்தக் கோழி எப்படி செத்தனுன்னு யோசிச்சேன்,   அதுக்கு அப்புறம்  பூஜை மூலமா  என்ன நடந்ததுன்னு பார்க்கும்  போது தான் உன்னைப் பத்தின எல்லா விஷயமும் தெளிவா தெரிஞ்சது. நண்பன்னு கூட பாக்காம.. என் காதலை என்கிட்ட இருந்து பிரிச்சு,  என்னை கழுவேற்றி கொன்ன வரைக்கும்   எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன்.  உன் இரத்த தாகத்துக்கு  பலியான கோழி உன்னைப் பத்தின ரகசியத்தை கண்டுபிடிக்க எனக்கு ரொம்ப உதவியா  இருந்தது. அந்த கோழிக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்” என்று தான் கீர்த்தன்  குறித்து இரகசியங்களை அறிந்து கொண்ட முறையை விளக்கினான் தீபேந்திரன்.

“  நீ எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டதால இப்போ ஒன்னும் மாறப் போறது இல்ல, “ என்று கீர்த்தன் கூறிட… 

“ஏன் மாறாது, நான் எல்லாதையும் மாத்துவேன்” என்று வீம்பாக கூறியவன், கீர்த்தனை மேலும் கீழுமாய்  ஏளனமாய் பார்த்து,  “நான் கொடுத்த சாபம் நல்ல உன்னை வச்சு செய்யுது போல , மனுஷனாவும் இருக்க முடியாம மிருகமாகவும் இருக்க முடியாம தத்தளிச்சிட்டு இருக்கியா?,  இனியும் நீ இப்படித்தான் வாழ போற… உனக்கு என்னிக்குமே சாப விமோச்சனம் கிடைக்காது” என்றான் தீபேந்திரன்.

“உன்னால தான் என் வாழ்க்கையே! நாசமா போச்சு,  உன்னைப் பார்த்த உடனேயே    கொன்னு இருக்கணும். தப்பு பண்ணிட்டேன்..  இந்த தடவையும் உன்னை மன்னிக்கவும் போறது இல்ல உயிரோட விடப்போறதும் இல்ல” என்று கோபமாய் கூறியபடி தீபேந்திரனை நெருங்கி மூர்க்கத் தனமாக தாக்கத் துவங்கினான்.

கீர்த்தனையின் தாக்குதலில் இருந்து தப்பி விலகி நின்றவன், ” நீ என்னை கொல்லப் போறியா!,  அதுக்கு வாய்ப்பே இல்லை, என்கிட்ட இருந்து உனக்கு ஒரு விஷயம் தெரிய வேண்டியது இருக்கு தேசிங்கா.. அந்த உண்மை தெரியிற வரைக்கும் நீ என்னை கொல்லமாட்டன்னு  எனக்கு தெரியும். “என்று கிண்டலாய் கூறினான் தீபன்.

“எனக்கு எந்த உண்மையும் தெரிய வேண்டியது இல்ல” என்று அவசரமாய் கீர்த்தன் மறுக்க..” தெரிய வேண்டாமா?, அப்போ அந்த வெண் புறா மங்கை யாருன்னு உனக்கு தெரிய வேண்டாமா..?” என்றான் தீபன்.

“வேண்டாம் “என்று ஒற்றை வரியில் கீர்த்தன் முடிக்க.. “உன்னோட உண்மை காதல் யாருன்னு உனக்கு தெரிய வேண்டாமா?.. அப்புறம் எப்படி உன் சாபம் தீரும்”என்று கிண்டலாக பேசினான்  தீபன்.

பதில் எதுவும் கூறாமல் கீர்த்தன் மீண்டும் தீபனை நெருங்கிட.. “இன்னொருத்தன்  கிட்ட இருந்து திருடினது தான் உன்னோட உண்மையான   காதல்.     அடுத்தவங்க கிட்ட இருந்து திருடன உன்னோட உண்மையான காதல்  என்னைக்கும் உனக்கு சொந்தமாகப் போறது இல்ல ” என்றவன்  ஏதோ ஒரு மந்திரத்தை உச்சரித்திட.. நின்ற இடத்தில் இருந்து நகர முடியாதபடி மந்திர கட்டுக்குள் அடைப்பட்டான்  கீர்த்தன்.

வாய்க்குள் முணுமுணுத்த படி மந்திர உச்சரிப்பை நிறுத்தாமலேயே கீர்த்தனை சுற்றி மந்திரப் பொடி கொண்டு வட்டமிட்டவன்.. “உன் கண்ணு முன்னாடியே சுஹா எனக்கு சொந்தமாகப் போறா.. நமக்கு பிடிச்சவங்க நம்மள விட்டுட்டு போறது எவ்வளவு வலின்னு  நீ அனுபவிச்சு தெரிஞ்சுக்க போறத, நான் கண்கொண்டு பார்த்து ரசிக்க போறேன்..”என்றவன் பூஜைக்கான ஏற்பாட்டை கவனிக்க..

சுஹனியின் கையில் காயத்தை ஏற்படுத்தி அதில் வழிந்த உதிரத்தை சேகரித்து வைத்த புனித நீரில் கலந்தவன் தன்னோட உதிரத்தையும் ஒன்றாக கலந்தான்.

கூர்மையான பொருளின்  கீரலால்  அரை மயக்கத்தில் கிடந்தவளுக்கு மெதுவாய் விழிப்பு வந்தது… 

கடினப்பட்டு கண்களின் இமைகளை மெதுவாய் திறந்தவள் அங்கு கீர்த்தனை கண்டதும்.. புத்துயிர் பெற்ற வேகத்துடன் எழுந்து வேகமாய் அவனிடம்  ஓடினாள்.

” என்னை விடு முதல்ல அந்த பூஜை தடுத்து நிறுத்து…” என்று தன்னை நெருங்க முயற்சித்தவளுக்கு  உத்தரவு பிறப்பித்தான் கீர்த்தன்.

சுஹனி எழுந்து கொண்டதை உணர்ந்து கொண்ட தீபன்.. வேகமாய்  அவளை நெருங்கிட..  அவன் பிடிக்குள் சிக்காமல் விலகி நின்றவள்,  கைக்கு கிடைத்த பொருள் கொண்டு தீபணை தாக்கினாள்.

பூஜை பொருட்கள் அனைத்தும் கலைந்து போக கலசத்தில் சேகரித்து வைத்த புனித நீர் கீர்த்தனை சுற்றி போடப்பட்டிருந்த மந்திர பொடியை அழித்தது.

அதுவரை அவனைப் பிடித்து வைத்திருந்த மந்திர கட்டுகள் அவிழ்ந்து விட  தீபனை அடுத்தடுத்த அடிகளால் தாக்க துவங்கினான்.

சுஹனியை அவன் வந்த காரில் இருக்கும் படி அனுப்பி வைத்துவிட்டு… இறுதியாக அவன் மார்பில் ஓங்கி மிதித்தவன், “என் உண்மை காதல் யாருன்னு எனக்கு இப்போ தெரியத் தேவையில்லை, என்னை உண்மையா காதலிக்கிறவ இப்ப என் பக்கத்துல இருக்கா, அவளால நீ குடுத்த சாபமும் தீரப் போகுது. நமக்கு பிடிச்சவங்க நம்மள விட்டுப் பிரியுறது.. உண்மையிலேயே கொடுமையான விஷயம் தான், அதை நீ அனுபவிக்கப் போற..   ” என்று  கூறியவன்..  பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கை கொண்டு அவன் நெஞ்சில் குத்தினான்.

இறக்கும் தருவாயில் கண்கள் சொருக கிடந்தவன் அருகில்  சென்றவன், “ரொம்ப நல்லவனா இருந்து போர் அடிச்சு போய்,  நான்  கெட்டவனா கெட்டுப் போய்   ரொம்ப நாளாச்சு, என் சுயநலத்துக்காக எத்தனையோ கொலைகள் பண்ணியிருக்கேன், சுஹனியையும் கொல்லுவேன், என் சாபம்  தீருர வரைக்கும் கொண்ணுட்டே இருப்பேன். என்னை யாரும் தடுக்க முடியாது” என்று வில்லத்தனமாக பேசினான் கீர்த்தன்.

இறக்கும் தருவாயிலும் இதழ் ஓரம் ஏளன புன்னகையை ஏந்தி நின்றவன், “அப்போ உன் காதலும் நிறைவேறாது… ”  என்று கிண்டல் குரலில் மெதுவாய்  முணுமுணுக்க… “இந்த பல நூறு வருஷத்துல எத்தனையோ காதலை பார்த்துட்டேன்,  இது இல்லனா.. இன்னொன்னு,  எனக்கு இப்போ என்னோட  சாபத்தை போக்குறது  தான் முதன்மையான விஷயம் ” என்றவன் தீபனின் இறுதி மூச்சு நிற்கும் வரை அவன் அருகில் நின்று வேடிக்கை பார்த்து விட்டு அங்கிருந்து  சென்றான்.

காரில் கீர்த்தனுக்காக காத்திருந்தவள் அவனை கண்டதும்.. வேகமாய் ஓடி வந்து இறுக்கமாய் கட்டியணைத்துக் கொண்டு…” ஐ லவ் யூ அரக்கா.. ஐ லவ் யூ சோ மச்.. இனி எப்பவும் உன்னை விட்டு பிரிஞ்சு போக மாட்டேன். நீ என்ன சொன்னாலும் கேட்பேன் உனக்காக மட்டுமே வாழுவேன்.”  என்று தனது காதலை அறிவித்தாள்.

“இப்போ என்னை என்ன சொல்லி கூப்பிட்ட.. அரக்கனா!..” என்று ஒரு நொடி தயங்கியவன் மனதில் பழைய நினைவுகள் நிழலாட துவங்கியது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

*45 கிலோவுக்கு மேல், 18 முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்.

* மாதவிடாய்க் காலங்களில், கர்ப்பக் காலங்களில் உள்ள பெண்கள் செய்யக் கூடாது.

* பாலூட்டும் தாய்மார்கள் செய்யக் கூடாது.

* மது அருந்தியவர்கள், புகைப் பழக்கம் உள்ளவர்கள் செய்யக் கூடாது.

* ஏதேனும் தொற்றுநோய் உள்ளவர்கள், காய்ச்சலில் இருப்பவர்கள்… என நோய்வாய்ப்பட்டவர்கள் செய்யக் கூடாது.

* 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், 45-க்கும் கீழ் எடை உள்ளவர்கள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் செய்யக் கூடாது.

* எய்ட்ஸ், சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், வலிப்பு, அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் செய்யக் கூடாது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~