19….
நேர்வழியில்
அடைய முடியாததை
என்றும் குறுக்கு வழியில்
அடைந்திட முடியாது..
குறுக்கு வழி என்பது
நாம் செல்லும் பாதையை
சுலபமாக்குமே தவிர
நம் இலக்கை
சொந்தமாக்காது…
மருத்துவர்கள் வழங்கிய முறையான சிகிச்சையின் பலனாக மயக்கத்தில் இருந்து கண் விழித்த சுஹனி.. சோர்வுடன் எழுந்து படுத்திருந்த கட்டிலிலேயே சாய்ந்து அமர்ந்தாள்.
சுஹனியிடம் அசைவை உணர்ந்த செவிலியப் பெண்மணி,”நல்லவேளை கண் முழிச்சிட்டிங்க, நான் போய் டாக்டர் கூட்டிட்டு வரேன்”என்று அங்கிருந்து நகர, “ஒரு நிமிஷம்… சிஸ்டர், என்னை இங்க கூட்டிட்டு வந்து சேத்தவங்களை நான் பாக்கணும்” என்று வேண்டுகோள் விடுத்தாள் சுஹனி.
“ஓ நீங்க அவரை கேக்குறீங்களா?, உங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு நான் தான் அவரை வெளியே வெயிட் பண்ண சொன்னேன், இருங்க கூட்டிட்டு வரேன்”என்றவள்.. அறைக்கு வெளியே காத்திருந்தவனிடம், “எக்ஸ்க்யூஸ் மீ சார், அவங்க கண் முழிச்சுட்டாங்க.. உங்களை பாக்கணும்னு சொல்றாங்க, இப்போ நீங்க உள்ள போகலாம், ஆனால், அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம இருக்கணும், நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன்” என்ற செய்தி சொல்லி விட்டு மருத்துவர் அறையை நாடிச் சென்றார் செவிலியப் பெண்மணி.
கீர்த்தனை எதிர்பார்த்து காத்திருந்தவள் அறையினுள் நுழைந்த சித்தேஷை கண்டு ஏமாற்றம் அடைந்தாள்.
உள்ளம் உணர்ந்த ஏமாற்றத்தை மறைக்காமல் முகமும் பிரதிபலிக்க அதனை கவனித்தபடி சுஹனி அருகில் வந்த சித்தேஷ்…”என்ன மேம் யாரையோ ரொம்ப ஆவலா எதிர்பார்த்துட்டு இருந்துருப்பீங்க போல, என்னை பார்த்ததும் முகம் ஏமாற்றத்துல சுருங்கி போச்சு” என்று கிண்டல் குரலில் வினவினான்.
“நான் யார எதிர்பார்க்கப் போறேன். அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மா உளறாதீங்க..”என்று சுஹனி மழுப்பிட… “வேற யாரை எதிர்பார்ப்பீங்க!, யார்கிட்ட உதவி கேட்க சொல்லி ஆள் அனுப்பி வச்சீங்களோ, அவரைத் தான் எதிர்பார்ப்பீங்க..”என்று விடாமல் கிண்டல் செய்தான் சித்தேஷ்.
“அதான் தெரியுதுல அப்புறம் எதுக்கு நீங்க வந்தீங்க? , போங்க போய் அந்த சிடுமூஞ்சி கீர்த்துவை வரச் சொல்லுங்க “என்று இம்முறை தன் மனதை மறைக்காமல் வெளிப்படுத்தினாள் சுஹனி.
‘ கீர்த்துவா.. சரிதான் ரூட் அப்படி போகுதா!, அப்போ ரெண்டு பக்கமும் பீலிங்ஸ் இருக்கு.. ரைட்டு இதுவும் நல்லா தான் இருக்கு ‘ என்று தனக்குள் எண்ணியபடி சிரித்துக்கொண்டான் சித்தேஷ்.
“ஹலோ மிஸ்டர் என்ன நான் பேசிட்டு இருக்கேன், நீங்க என்னன்னா தனியா சிரிச்சிட்டு இருக்கீங்க?” என்று சற்று எரிச்சலுடன் வினவினாள் சுஹனி.
சுஹனியின் கேள்விக்கு சித்தேஷ் பதில் கூற துவங்கும் முன் அங்கு வந்து சேர்ந்தனர் மருத்துவர் மற்றும் செவிலியர் பணிப்பெண்..” ஹொவ் ஆர் யு மை சைல்ட், ஆர் யூ ஃபீல் பெட்டர் நவ் ..” என்று வயதில் மூத்த மருத்துவர் நலம் விசாரிக்க.. ” எஸ் டாக்டர், ஐ அம் ஆல்ரைட் நவ், ” என்று பதில் தந்தாள் சுஹனி.
“இந்த காலத்து பசங்க இருக்கீங்களே! எல்லாத்துக்கும் ஷார்ட் கட் தான், தூக்கம் வராம இருக்கிற இந்த பிரச்சனைக்கு பேரு என்னன்னு தெரியுமா? இன்சோம்னியா (Insomnia) .சரியா தூக்கம் வராததுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம். ட்ரிங்க் பண்ணுனா ஸ்ட்ரெஸ் குறைஞ்சு நல்லா தூக்கம் வரும்னு ஒரு சிலர் நினைப்பாங்க, அது ஓரளவுக்கு சரிதான், ட்ரிங்க் பண்ணுனதும் நம்ம உடம்பு ரிலாக்ஸ் ஆகி தூக்கம் வர மாதிரி இருக்கும். ஆனா குடிச்ச ட்ரிங்க்ஸ் செரிமானம் ஆனதும் அது மூளைய தூண்டிவிடும் அதனால சில மணி நேரத்திலேயே தூக்கம் காணாம போய்டும்..” என்று மருத்துவர் விளக்கம் கொடுக்க..
“ஆமா இதெல்லாம் என்கிட்ட எதுக்கு சொல்லிட்டு இருக்கீங்க?, எனக்கு தான் ட்ரிங்க் பண்ணுற பழக்கமே இல்லையே” என்று குழப்பத்துடன் பதில் தந்தாள் சுஹனி.
“நல்லது தான்.. ஆம்பள பசங்க செய்றதெல்லாம் பொண்ணுங்களும் செய்யறது தான் பெண் சுதந்திரம்னு நினைச்சுட்டு.. ஒரு சில பொண்ணுங்க குடிக்கவும் ஆரம்பிச்சுட்டாங்க, அந்த வகையில நீ கொஞ்சம் நல்ல பொண்ணா தான் தெரியுற, இருந்தாலும் இந்த வயசுல தூக்கம் வரணும்னு தூக்க மாத்திரை போடுறது எல்லாம் கொஞ்சம் டூ மச். தூங்குறதுக்கு முன்னாடி மொபைல் பார்க்க கூடாது, டிவி பார்க்க கூடாது டின்னரை சீக்கிரமே முடிச்சிடனும் இதையெல்லாம் வழக்கமா எல்லாரும் சொல்றதுதான், இதெல்லாம் சரியா ஃபாலோ பண்றவங்களுக்கு கூட சில நேரம் நைட்டு தூக்கம் வராது, அதுக்கு என்ன காரணம் தெரியுமா?, டின்னர் டிஷ்.”
“தக்காளியில இருக்கிற அமிலங்கள்
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (Acid reflux) பிரச்னையை ஏற்படுத்தும். இதனால நம்ம வயித்துல இருக்கிற அமிலங்கள் தவறான பாதைக்கு போயிட்டு மறுபடியும் உணவு குழாய்க்கு திரும்பி , வாய் வழியா வெளியேறும். இதனால் நெஞ்செரிச்சல் தான் வரும். நேராப் படுக்கும்போது, நிலைமை இன்னும் மோசமாகிடும். சோ நைட் டைம்ல தக்காளி சட்னி, தக்காளி சாஸ், தக்காளி சூப் இந்த மாதிரி ஐட்டம் சாப்பிடாம இருக்கிறது நல்லது. ”
“நெக்ஸ்ட் சைனீஸ் புட், இதுல
மோனோசோடியம் குளூட்டமேட் (Monosodium glutamate) சோடியம் உப்பு அதிகமா இருக்கும். இது மூளையைத் தூண்டிவிடும். மூளை ஆக்டிவா இருக்கும்போது தூக்கம் வராது. அது மட்டும் இல்ல இந்த மாதிரி ஐட்டத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தா தலைவலி, ஒற்றைத் தலைவலி, வயிறு வலி , இந்த மாதிரி பிரச்சனைகள் நிறைய வரும்”
“அடுத்து ஸ்வீட் ஐட்டம், நைட்டு டின்னர் முடிச்சிட்டு ஸ்வீட் சாப்பிட்டா நல்லா இருக்கும்னு தோணும், பட் ஸ்வீட் சாப்பிட்டா மூளை இயல்புக்கு மாறா ஆக்டிவ்வா மாறிடும். சோ ஸ்வீட் ஐட்டம் அதிகமா சாப்பிடுறத குறைச்சுக்கணும். தொடர்ச்சியா ஸ்வீட் அதிகமா இருக்கிற ஃபுட் சாப்பிடும் போது, அது நமக்குள்ள கார்டிசால் (Cortisol) ஹார்மோனை தூண்டி, நடு ராத்திரி முழிப்பு வர மாதிரி செஞ்சிடும்.”
“காரசாரமான உணவு உடம்புக்கு சூட்டை ஏற்படுத்தும், தக்காளி மாதிரி ஆசிட் ரிஃபிளக்ஸை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கு, உடம்புல இருக்கிற சூடு மூளையை தூண்டிவிட்டு தூங்க விடாம செஞ்சிடும், அதனால காரமான மசாலா அதிகமா இருக்குற ஃபுட் ஐட்டத்தை நைட்ல அவாய்ட் பண்ணிடனும். காபியில கஃபெய்ன் (Caffeine) அதிகம் இருக்கு. இது நம்ம உடம்புக்கு உடனடியா உற்சாகத்தைத் தரக்கூடியது. இதனால நைட் டைம்ல காபி குடிச்சா தூக்கம் வராமல் தவிக்க வேண்டியது தான் ”
“உருளைக்கிழங்கு, பூசணி, பிரெட், நூடுல்ஸ், பீட்சா இந்த மாதிரி ஃபுட் ஐட்டம்ல கார்போஹைட்ரேட் அதிகமா இருக்கும். இந்த உணவுகள் நம்ம உடம்புக்குள்ள சேர்ந்து சீக்கிரமா சர்க்கரையா மாறிடும். காரணம், இதெல்லாம் ஹை கிளைசமிக் உணவுகள். சர்க்கரையைச் சாப்பிட்டால் என்ன நடக்குமோ அதுவேதான் கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிட்டாலும் நடக்கும். ” என்று உறக்கத்தை கெடுக்கும் உணவு வகைகள் குறித்து வளவளவென்று பேசிக்கொண்டே போனார் மருத்துவர்.
“அப்போ நைட்டு சாப்பிடவே கூடாதுன்னு சொல்றீங்க அப்படித்தானே..”என்று கிண்டல் குரலில் சுஹனி வினவ..
“நான் அப்படி சொல்லலையே, நல்ல சத்தான காய்கறிகள், பழங்கள், பால் , வாழைப்பழம், முழுத் தானியங்கள் , ஆவியில வேக வைச்ச இட்லி, இடியாப்பம், புட்டு. இந்த மாதிரி ஹெல்த்தி ஃபுட்ஸ் சாப்பிடலாம். “என்றார் மருத்துவர்.
“அட எங்க நீங்க சாப்பிடவே கூடாதுன்னு சொல்லிடுவீங்களோனு பயந்துட்டேன்..”என்று நிம்மதி பெருமூச்சை வெளியேற்றினாள் சுஹனி.
அவள் செய்கையில் உண்டான புன்னகையை இதழில் தேக்கி கொண்ட படி.. ” இப்ப நான் சொன்ன மாதிரி சரியான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுறதால நைட் நல்லா தூக்கம் வரும். இருந்தாலும் தூக்கம் இல்லாம போறதுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம் அதை மறந்திடக்கூடாது, அதனால நம்ம உடம்புல எந்த நோய் நொடி இல்லாம இருந்தும் மனசு நல்லா இல்லனா என்ன சாப்பாடு சாப்பிட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. அதனால மனசு ரிலாக்ஸா வச்சுக்க மூச்சுப் பயிற்சி யோகா தியானம் இதெல்லாம் தொடர்ந்து செய்யணும் உடல் நலத்துடன் மனசோட நலத்தையும் கவனமாக பார்த்துக்கிட்டா நைட்டு தூக்கத்துல எந்த பிரச்சனையும் இருக்காது.”என்று பெரிய அறிவுரை சொற்பொழிவு நிகழ்த்தி விட்டு சுஹனியின் உடல் நிலையை மீண்டும் ஒருமுறை பரிசோதித்து விட்டு அங்கிருந்து விலகிச் சென்றார் மருத்துவர்.
“அப்பாடா ஒருவேளை தூக்கத்துக்கு எவ்வளவு பெரிய சொற்பொழிவு நிகழ்த்திட்டு போறாரு. ஆமா இந்த பூம்பர் டாக்டர் எதுக்கு தேவையில்லாம எனக்கு இவ்வளவு பெரிய அட்வைஸ் கொடுத்தாரு.”என்று குழப்பம் விலகாமல் வினவினாள் சுஹனி.
“நாலு நாளா தூக்கம் சரியா வரலைன்னு தூக்க மாத்திரை போட்டிங்க அது கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகவும் அன்கான்சியஸ் ஸ்டேஜ்க்கு போய்ட்டீங்கன்னு பொய் சொல்லி தானே இந்த ஹாஸ்பிடல்ல உங்களை அட்மின் பண்ணி இருக்கோம். அதனால தான் அவ்வளவு அட்வைஸ்”என்று மருத்துவரின் நீண்ட அறிவுரைக்கு விளக்கம் கொடுத்தான் சித்தேஷ்.
“என்னது தூக்கம் வரலன்னு தூக்க மாத்திரை போட்டேனா..!, உங்களுக்கு இன்னும் என்னை பத்தி முழுசா தெரியல, நானெல்லாம் நவீன கும்பகர்ணீ, தூங்குற விஷயத்துலயும் சாப்பிடற விஷயத்துலயும் என்ன அடிச்சுக்க ஆளே இல்ல தெரியுமா!” என்று தற்பெருமை பேசிக் கொண்டாள் சுஹனி.
“அதான் பார்த்தாலே தெரியுதே!” என்று கிண்டலுடன் சித்தேஷ் கூறிட..
“ஹலோ என்ன கிண்டலா..!” என்று கோபமாய் முறைத்தாள் சுஹனி.
“இல்ல நக்கல்” என்று சித்தேஷ் பதில் தர அதற்கும் சுஹனி கோபமாய் முறைக்க..”பின்ன என்னங்க?, சாப்பாட்டில் தூக்க மாத்திரை கலந்து தராங்கன்னு தெரியுதுல, அப்புறம் எதுக்குங்க அதை சாப்பிட்டீங்க? ஒரு நாள் பட்டினி கிடந்தா குறைஞ்சா போயிடுவீங்க?” என்று ஆதங்கத்துடன் வினவினான் சித்தேஷ்.
“சொல்றது ஈசி, பட்னி இருக்கிறவங்களுக்கு தான் தெரியும் அதோட கஷ்டம், தூக்க மாத்திரை கலந்து தராங்கன்னு .. புரிஞ்சதும், ரெண்டு நாள் சாப்பிடாம இருந்தேன் தெரியுமா?, வயிறு அப்படி வலிக்க ஆரம்பிச்சிருச்சு, சத்தியமா சொல்றேன் என்னால பசியை கண்ட்ரோல் பண்ணவே முடியல.. அதான் மாத்திரை கலந்து இருந்தாலும் பரவாயில்லைன்னு அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டேன்..” என்று பதில் தந்தாள் சுஹனி.
“என்னங்க உப்பு காரத்தை அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்ட மாதிரி சொல்றீங்க.. சரியான நாலேஜ் இல்லாம ஹெவி டோஸ் ஸ்லீப்பிங் டேப்லெட் கொடுத்து இருக்காங்க, அதனால பல்ஸ் இறங்கி அன்கான்சியஸ் ஸ்டேஜ்க்கு போயிட்டீங்க, நல்லவேளை என் பாஸ் சரியான நேரத்துல வந்து உங்கள காப்பாத்திட்டாரு, இல்லன்னா என்ன ஆயிருக்கும்..” என்று சூழ்நிலையை விளக்க முயன்றான் சித்தேஷ்.
“ஒன்னும் ஆகாது, அக்மா வந்து என்ன காப்பாத்திடுவாருன்னு எனக்கு தெரியும்..” என்று இலகுவாக கூறினாள் சுஹனி.
“என்னது அக்மாவா!, அப்படின்னா?” என்று சுஹனி கூறிய வார்த்தைக்கு பொருள் புரியாமல் வினவினான் சித்தேஷ்.
“அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது.. போங்க போய் உங்க பாஸை வர சொல்லுங்க..” என்று அதிகாரமாக கூறினாள் சுஹனி.
“என்ன அதிகாரம் தூள் பறக்குது. “என்று சித்தேஷ் வினவ..”இனி அப்படித்தான்.. ” என்றவள், “சரி சொல்லுங்க உங்க பாஸ் எப்படி என்னை காப்பாத்தினாரு.”என்று தனக்கு நடந்ததை அறிந்து கொள்ளும் ஆவலுடன் வினவினாள் சுஹனி.
“அத என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும்.. நல்லா தூங்கிட்டு இருந்தேன்.. எப்போ எந்திரிச்சு போனாருனே தெரியல, திடீர்னு வந்து கதவ தட்டுனாரு, கையில நீங்க.. என்ன நடந்தது ஒண்ணுமே புரியல, இந்த நேரத்துல எங்க பாஸ் போனீங்க, இவங்க இருக்கிற இடம் எப்படி உங்களுக்கு தெரிஞ்சதுன்னு கேட்டதுக்கு.. ஒழுங்கா ஒரு பதிலும் வரல, நீங்க சுயநினைவு இல்லாம இருக்கிறதா சொன்னாரு, உடனே ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு வந்துட்டோம். வேற எதுவும் எனக்கு தெரியாது..”என்றான் சித்தேஷ்.
“என்ன சொல்றீங்க?, அப்போ தீபன் கூட கீர்த்தன் மட்டும் தனியா வா சண்டை போட்டாரு.. அவரால எப்படி அவனை தனியா சமாளிக்க முடிஞ்சது. ரொம்ப டேஞ்சரான ஆள் அவன், கீர்த்தனுக்கு ஒன்னும் ஆகலேல, நான் உடனே அவர பாக்கணும்” என்று பதற்றத்துடன் பேசினாள் சுஹனி.
“அதெல்லாம் பாஸுக்கு எதுவும் ஆகல, நீங்க டென்ஷனாகாம ரிலாக்ஸா இருங்க.. நைட் முழுக்க கண் முழிச்சு பக்கத்துல இருந்து உங்களை பத்திரமா பாத்துகிட்டது அவர் தான். காலைல தான் ரெப்ரெஷ் ஆக ஹோட்டல் வரைக்கும் போயிருக்காரு. இப்போ வந்துருவாரு” என்று சமாதானம் செய்தான் சித்தேஷ்.
“அப்பாடா இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு..”என்று சுஹனி நிம்மதி பெருமூச்சை வெளியேற்ற அவள் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தவன்..”என் பாஸ் எப்படி உங்களுக்கு ஹெல்ப் பண்ண வருவாருன்னு அவ்வளவு காண்பிடென்ட்டா சொன்னீங்க?” என்று சந்தேகம் வினவினான் சித்தேஷ்.
“அது ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில சொல்லிட்டேன், இருந்தாலும் நான் சொன்ன மாதிரி உங்க பாஸ் வந்தாரா இல்லையா?” என்று கர்வத்துடன் வினவினாள் சுஹனி.
“அது தான் எனக்கு ஒன்னும் புரியல, உங்களுக்கு ஒன்னுனா என் பாஸ் எதுக்கு அப்படி பதருறாரு.. உண்மைய சொல்லுங்க உங்களுக்கு நடுவுல என்ன இருக்கு?, “என்று அழுத்தமாய் வினவினான் சித்தேஷ்.
“எங்களுக்குள்ள.. எங்களுக்குள்ள என்ன இருக்குன்னா! “என்று ரகசியம் அறிவிக்கும் குரலில் சுஹனி இழுத்து ராகம் பாடிட…
“ஒன்னும் இல்ல..”என்று அழுத்தமாய் அறிவித்தபடி அங்கு வந்து நின்றான் கீர்த்தன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரத்தப் பிரிவுகளைக் கண்டறிந்த பிறகும்கூட, ரத்த மாற்று சிகிச்சையின்போது பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதன் பிறகுதான் ரத்தத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தச் சமயத்தில், 1940-ம் ஆண்டு `ரேசஸ்’(Rhesus)’ என்ற குரங்கிலிருந்து வேறு ஒரு புதிய வகை ரத்தப் பிரிவு கண்டறியப்பட்டது. அதனால் அந்தப் பிரிவுக்கு ‘Rh’ என்று பெயர் சூட்டப்பட்டது. `Rh’-ல் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டன. அதற்குப் பிறகு, ஒரே ரத்த வகையாக இருந்தாலும், `Rh’-ம் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்ட பிறகே ஒருவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~