எடுத்த முடிவிலிருந்து என்றும் தடுமாறாமல் இருப்பவன்…
உன்னை கண்ட
நாளிலிருந்து
என் மனம் தடம் மாறிட
நிலையில்லா முடிவில்
தடுமாறிக் கொண்டிருக்கின்றேன்..
இரவு வேளையில் சித்தேஷ் உறங்கி விட்டதை உறுதி செய்து கொண்ட கீர்த்தன், சுஹனி குறித்த விபரங்கள் அறிய தீபேந்திரனின் உதவியாளனான ராஜதுரையை சந்திக்க அவன் இருப்பிடம் தேடிச் சென்றான்.
“யாருடா இது நட்ட நடு ராத்திரியில வந்து கதவை தட்டுறது.. “என்று சலித்துக் கொண்டபடி வந்து வாசல் கதவை திறந்தவர் தூக்க கலக்கத்தை விரட்டும் விதமாய் கைகள் கொண்டு கண்களை தேய்த்து விட்டுக்கொண்டு, “யாருயா நீ?, கண்ட நேரத்தில் வந்து கதவ தட்டிட்டு இருக்க, என்ன வேணும் உனக்கு?” என்று அதட்டலாய் மொழிந்தார் ராஜதுரை.
“நீங்க தான் வேணும் மிஸ்டர். ஐ மீன் உங்க கிட்ட பேசணும்..” என்று கீர்த்தன் கூறிட.. “என்கிட்ட பேசணுமா!, யார் நீ?, என்கிட்ட பேச என்ன இருக்கு?” என்றார் ராஜதுரை.
“பேச விஷயம் இருக்கப் போய் தான இந்த நேரத்துல உங்களை தேடி வந்து இருக்கேன்..”என்று கூறியபடி வீட்டினுள் நுழைய முயன்றான் கீர்த்தன்.
” பேசிட்டு இருக்கும் போதே வீட்டுக்குள்ள நுழையுற?, “என்று கோபமாய் கத்தியவர், “எது பேசுறதா இருந்தாலும் காலைல பேசிக்கலாம், போ… போய் விடிஞ்சதும் வா, என்ன நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு வீட்டுக்குள்ள வந்துட்டே இருக்க, வெளியே போன்னு சொல்றது காதுல விழுகலயா?, வெளியே போ… “என்று அத்துமீறி நுழைந்தவன் மார்பில் கை வைத்து தள்ளினார் ராஜதுரை.
தன் நெஞ்சில் பதிந்த கரத்தை மெதுவாய் அகற்றிவிட்டு,”எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க, நான் கேட்கிற கேள்விக்கு உங்ககிட்ட இருந்து சரியான பதில் வந்ததுன்னா, பிரச்சனை பண்ணாம நானே வெளியே போயிடுறேன்.” என்றவன் அறையின் நடுவில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டான்.
“ஏய் என்ன நான் சொல்லிட்டே இருக்கேன்.. நீ வீட்டுக்குள்ள வந்து உரிமையா உட்காருற?.. “என்றவர் ஒரு நொடி யோசித்து, “நீ காலையில தோப்பு வீட்டுக்கு வந்த ஆள் தான!, ஆமா வீட்டை விட்டு வெளியே போக சொன்னதுக்கு அப்புறமும் தனியா தோப்புல வச்சு பழனி கிட்ட உனக்கு என்ன பேச்சு? இப்போ எதுக்கு என்னை தேடி வந்திருக்க?, ” என்றார் ராஜதுரை.
“அப்போ நாங்க வெளிய வந்ததுக்கு அப்புறமும் நீங்க எங்களை தான் கண்காணிச்சுட்டு இருந்தீங்க…!, இவ்வளவு தூரம் நோட் பண்ணிருக்கீங்க, அப்போ என்ன பேசினேன்னு கூட பழனி கிட்ட விசாரிச்சிருப்பீங்க தானே! ” என்று எள்ளல் நகையுடன் வினவினான் கீர்த்தன்.
“ஏதோ தோப்ப விலைக்கு வாங்குற விஷயமா பேசினனு சொன்னான். அவன் வேணா உன் வார்த்தைய நம்பி இருக்கலாம், ஆனா எனக்கு உன் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை… உண்மையை சொல்லு நீ இங்க எதுக்காக வந்திருக்க, பழனிக் கிட்ட மாந்தோப்பை பத்தி மட்டும் தான் கேட்டயா?” என்று சந்தேகத்துடன் வினவினார் ராஜதுரை.
“பரவாயில்லையே சரியா கெஸ் பண்ணி இருக்கீங்க, அப்போ பழனி கிட்ட என்ன கேட்டேனோ, அதையே தான் நான் இப்போ உங்க கிட்டயும் கேட்கப் போறேன். நான் கேட்ட கேள்விக்கு அவன் கிட்ட இருந்து சரியான பதில் கிடைக்கல, உங்க கிட்டயாவது எனக்கு தேவையான பதில் கிடைக்கும்னு நம்புறேன்..” என்று கீர்த்தன் பேசிக் கொண்டிருக்க இடையில் நுழைந்த ராஜதுரை.. “கிடைக்காத பதிலைத் தேடி அர்த்த ராத்திரியில வந்திருக்க.. தம்பி. முதல்ல கிளம்பு இங்க இருந்து. நீ இங்க எதுக்காக வந்திருக்கேங்கிற விஷயம் எங்க தீபேந்திரன் தம்பிக்கு மட்டும் தெரிஞ்சா பிரச்சனை வேற மாதிரி போயிடும்” என்று பொறுமையாய் எடுத்துரைக்க முயற்சி செய்தார் ராஜதுரை.
“நான் கேட்டு கிடைக்காத பதிலே இல்ல மிஸ்டர். எனக்கு தேவையான பதில் கிடைக்கிற வரைக்கும் நான் யாரையும் விட மாட்டேன். “என்ற கீர்த்தன் ராஜதுரையின் முன் வந்து நின்றான்.
“என்ன என்னை மிரட்டி பாக்குறியா?,” என்று சற்றும் அசராமல் கீர்த்தனை எதிர்கொண்டார் ராஜதுரை.
“என் கண்ணுல என்ன இருக்குன்னு கொஞ்சம் தெளிவா பாருங்க”என்றான் கீர்த்தன்.
‘ கண்ணுல என்ன இருக்கு..?, ‘ என்ற குழப்பத்துடன் கீர்த்தன் கண்களை கூர்ந்து கவனித்தவர், அடுத்த நொடி அவனது வசிய கட்டுப்பாட்டிற்குள் வந்தார்.
“ரைட் இப்ப நாம பேசலாம்! “என்று இரு கைகளையும் தேய்த்து விட்டுக் கொண்டபடி முன்பு அமர்ந்திருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தவன் மற்றொன்றில் ராஜதுரை அமரும்படி சைகை செய்தான்.
மாய மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர் போல் கீர்த்தனின் வார்த்தைக்கு பணிந்து அவன் காட்டிய இடத்தில் வந்து அமர்ந்தார் ராஜதுரை.
“சுஹனி இப்போ எங்க இருக்கா?,” என்றான் கீர்த்தன்.
“பாப்பா இப்போ கும்பக்கரைல இருக்கு,.” என்று ராஜதுரை பதில் தர..”கும்பக்கரையா?, அங்க அருவி தானே இருக்கு!, இந்த நேரத்துல அங்க எதுக்கு போயிருக்காங்க?,” என்று குழப்பத்துடன் வினவினான் கீர்த்தன்.
“பலி பூஜை நடக்க அங்க தான் ஏற்பாடு பண்ணி இருக்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல தீபேந்திரன் தம்பி அங்க போயிடும் அதுக்கப்புறம் பூஜை ஆரம்பிச்சுடும்.”என்று ராஜதுரை கூறிய வார்த்தைகளை உண்மை என ஏற்க முடியாமல் திகைத்துப் போனவன்.. “என்ன சொல்றீங்க பலி பூஜையா!” என்று அதிர்ச்சியுடன் வினவினான் கீர்த்தன்.
“ஆமா பலி பூஜை தான்…”என்று முன்பு கூறிய வார்த்தையை உறுதிப்படுத்தினார் ராஜதுரை.
” என்ன பலி?, யாரை பலி கொடுக்கப் போறாங்க?.., அப்போ தீபேந்திரன் சுஹனியை கல்யாணம் பண்ணிக்க போறதில்லையா?, பலி கொடுக்க தான் அவளை இங்க கடத்திட்டு வந்தானா?” என்று கோபமும் வெறுப்புமாய் வினவினான் கீர்த்தன்.
“இல்ல தீபேந்திரன் தம்பி சுஹனி பாப்பாவை கல்யாணம் பண்ணிக்க தான் ஆசைப்படுது. அதுக்காக தான் இங்க கூட்டிட்டு வந்திருக்கு, கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம நடக்கணும்னு தான் இப்போ நடுச்சாம பூஜைக்கு போயிருக்காங்க… ” என்றார் ராஜதுரை.
“ஐயோ நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு ஒன்னும் புரியல, தலையே வெடிச்சிடும் போல இருக்கு, கொஞ்சம் தெளிவா சொல்லுங்க இந்தப் பலி பூஜை எதுக்காக?” என்று கீர்த்தன் காரணம் வினவிட…
“சுஹனி பாப்பாவை வசியம் பண்றதுக்காக” என்று தெளிவாய் குழப்பினார் ராஜதுரை.
“வசியம் பண்ணவா.. அது எதுக்கு?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவன் அதே கேள்வியை ராஜதுரையிடமும் வினவ… ” சுஹனி பாப்பாவுக்கு தீபேந்திரன் தம்பியை பிடிக்கணும்ல அதுக்காக தான், “என்று பதில் தந்தார் ராஜதுரை.
ராஜதுரை கூறிய வார்த்தைகளின் பொருள் புரியாமல் குழம்பிப் போனவன், “நீங்க சொல்றதுல தலையும் புரியல வாலும் புரியல, தயவு செஞ்சு தீபேந்திரன் சுஹனியை பத்தி உங்களுக்கு தெரிஞ்ச எல்லா விஷயத்தையும் ஒன்னு விடாம என்கிட்ட சொல்லுங்க…” என்று பொறுமை இழந்து வினவினான் கீர்த்தன்.
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்து வந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம் தான்.