வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு -2

573

வேடந்தாங்கல்
(ஒருக்கூட்டுப் பறவைகள்)
நெடும்தொடர்
சிறகு – 2

முமைனா ஒளிரவிட்ட காணொளி தொடங்குகிறது. ஒரு விமானம் பறக்கிறது… அந்த விமானத்தின் ஜன்னல் வழியே காட்சி விரிகிறது. விதவிதமாக செதுக்கி நிறுத்தப்பட்ட வடிவங்களில் மேகத்திரல்கள் ஆகாய வெளியில் வரிசைகட்டி நிற்க, விமானம் அவற்றை சலனமின்றி கடந்து போக, கீழே ஊதா மையை இறைவன் தவற விட்டது போன்ற உணர்வை வங்கக்கடல் நம் கண்களில் காட்டுகின்றாள்….. எத்தனை எத்தனை அற்புதங்கள் கொட்டிக்கிடக்கும் இந்த கடலின் மோவாயை உரசியபடி பயணிக்கும் நாவாய்கள்… (கப்பல்கள்).


அதோ அந்த கடல்கள் நடுவில் மரகதம் சிந்திக்கிடப்பதுபோல் தோன்றமளிக்கும் அவை என்ன?? ஓ… கடலை அரணாக்கி தனித்து நிற்கும் தீவுகள் அல்லவா இவை? மேக சிலைகள் கூடரமாக, நீல மை நீரலைகள் சுற்றி நிற்க, மரகத நிற மாமரங்கள் நிறைந்து செழித்திருக்க, சிறு சிறு தீவுக்கூட்டங்கள்….. விமானத்தை ஒட்டி போட்டிபோட்டுக்கொண்டு பறக்கும் சிறிதும் பெரிதுமான பறவைகள்…. எத்துணை அழகாக இந்த அகிலம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது??? திடீரென விமான கேப்டன் அறையிலிருந்து அறிவிப்பு ஒலி கேட்டது….

“”என் அருமைப்பயணிகளே… நாம் போர்ட் பிளேயரை நெருங்கிக்கொண்டுள்ளோம். இன்னும் 15 நிமிடங்களில் நாம் தரை இறங்கப்போகின்றோம். பயணிகள் தங்களின் மின்னணு சாதனங்கள் அனைத்தையும் அனைத்து விட்டு, தங்களின் இருக்கை பட்டைகளை அணிந்து கொள்ள அறிவுறுத்தப் படுகின்றீர்கள்………..”””…


வசந்த் தன் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு இருக்கையில் ஆசுவாசமாக சாய்ந்து உட்கார, அருகில் அமர்ந்திருந்த மேகி… என்னும் மேனகா வசந்திடம்… வசந்த் நாம அங்க போனதும் என்ன செய்யவேண்டும் என்று தீர்மானித்து விட்டாயா?… என்று கேட்டாள்…


ம்ம்ம்… தீர்மானித்து விட்டேன். அங்கு நாம் தங்கும் விடுதி, பயணம் செய்ய வாகனம், பார்க்க போகின்றவர்களிடம் அனுமதி எல்லாமே தயார். எழில் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய நேற்றே அங்கு சென்று சேர்ந்து விட்டான் என்றான்… வசந்த்.


ஆனால் வசந்த் நம்முடைய இந்த முயற்சி பெரிய அளவிலான தாக்கத்தை நம் சமுதாயத்தில் ஏற்படுத்தி நமக்கு ஒரு அங்கீகாரம் வாங்கித்தரும். அதை நான் முழுமையாக நம்புகின்றேன் என்றாள் மேகி.


அதற்குள் விமானம் மெல்ல மெல்ல தன் உயரத்தை குறைத்தபடியே வலப்புறமாக ஒருமுறை சாய்ந்து…. சிறிது தூரம் பறந்து பின் இடதுபுறமாக ஒருமுறை சாய்ந்தது…. சாய்ந்தபடியே ஓடி இப்போது மீண்டும் சமநிலையில் உயரத்தை குறைக்கத் தொடங்கியது….


அய்யய்யோ நான் வரலடா… நீயே இந்த முமைனாவை வெச்சு ஷூட் பண்ணிக்கண்ணு சொன்னேன். கேட்டானா இந்த படுபாவி… பீச்சுன்னாலே எனக்கு அலர்ஜி… இங்க மொத்த கடலும் கீழே… இவன் பிளைட்ட திருப்பறதுல குடல் எல்லாம் வெளியே வருதுடா… என்று கனிக் குமார் கத்த… அவன் மண்டை மேல் கொட்டி, கண்ணை மூடி சும்மா இருடா… ஏண்டா இப்படி பயப்படறே என்று அதட்டி அடக்கினாள் பர்தாவுக்குள் தன்னை மறைத்து வைத்திருந்த முமைனா….

அதற்குள் விமானம் மீண்டும் வலது புறம் திரும்பி… நேராகி முழுமையாக உயரம் குறைய தொடங்க, தூரத்தில் தெரிந்த கட்டிடங்கள் இப்போது பார்வைக்கு பிரகாசமாக தெரியத்தொடங்கியது. விமானத்தின் சக்கரங்கள் ஓடுதளத்தில் ஓடி அடங்கி போர்ட் பிளேயரின் சர்வக்கார் விமான நிலையத்தில் நின்றது…..


மெல்லிய வெய்யில் அளவான சீதோஷ்ண நிலையில் அந்த அற்புதத்தீவின் தலைநகரம், நம் படைப்பாளிகளை வரவேற்றது…. விமான நிலையம் விட்டு வெளியே வந்த நம் படைப்பாளிகள் நால்வரையும் எழில் என்கிற எழிலரசன் வரவேற்று ரெனால்ட் ட்ரைபர் காரில் ஏற்றிக்கொள்ள கார் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து இடது புறமாக திரும்பி சலவைக்கல் போன்று வழவழத்த சாலையில் வேகமெடுத்தது.


இடதுபுறத்தில் விமான நிலையம்…..விமானங்கள்…. அதற்கடுத்தது விமான ஓடுத்தளம் என்று வரிசையாக ஒவ்வொன்றும் பின்னோக்கி பயணிக்க வலதுபுறத்தில் சிரிதும் பெரிதுமான கட்டிடங்கள்… கட்டிடங்களின் பின்புறத்தில் சிறியதொரு மலை தன் பங்கிற்கு அழகை விரித்து காட்டி வசந்த் மற்றும் மேகியின் உள்ளத்தில் உற்சாகத்தை ஊற்றெடுக்க செய்தது. 10 நிமிட பயணத்தை தொடர்ந்த கார் வலதுபுறம் திரும்பி பின் இடதுபுறம் திரும்பி….”ஈடன் பிரீஸ் வில்லா” என்று பளபளத்த வெள்ளை நிற மாளிகை விடுதிக்குள் பிரவேசித்தது….


எழில் கூறினான், இந்த ஹோட்டல் கூட நாம் தேடிவந்திருக்கும் அந்த நபரோடது தான்….
அவருக்கு இங்கே 12 ஹோட்டல்கள் இருக்கு… எல்லாமே ஸ்டார் கேட்டகிரி தான்.
அனைவரும் ஒருங்கே வியந்து பார்க்க எழில் கூறினான், வேடந்தாங்கல் இனிமேல் தான் ஆரம்பம் என்று……

சிறகுகள் விரியும்…….