Advertisement

ஓம் நமச்சிவாய.

வீணை 03

அர்ச்சனா மகனை ஆசையாக பார்துக்கொண்டிருக்கும் போது அவரை வைதேகி உள் அறைக்கு அழைத்து சென்றாள்..

அதை பார்த்து அர்ச்சனா என்னவென்று கேட்டார்.           ” எனக்கு தெரியாது அத்தை அண்ணா மாமாகிட்டதான் ஏதோ பேசவந்திருக்கும்.. அவங்க போனதும் நாம வெளியபோய் என்னனு தெரிஞ்சிக்கலாம்..” என்று கூறி மாமா இவ்வாறு ஒரு வேலை செய்யதது பற்றி அத்தைக்கு தெரிந்தால் என்னவாகுமோ என்ற கவலையுடன் அர்ச்சனாவின் கையை பிடித்தபடி இருந்தாள் வைதேகி..

ராதா முதல் முறை போலீஸ் ஸ்டேஷன் வந்தபோது. மூர்த்தி எஸ் ஐ இருந்தான்.. அந்த நேரம் இருந்த இன்ஸ்பெக்டரிடம் தான் பணம் கொடுக்க அவன் வேண்டாம் என்றான்… பணத்தாசை பிடித்த மூர்த்தி ராதாவிடம் சென்று

” என்னை கவனி நான் உனக்கு கேஸ் போடாம பார்த்துக்கிறேன்..” என்றான்..

அதற்கு ராதாவோ. ” நீ சாதாரண எஸ் ஐ தானே. அப்போ இன்ஸ்பெக்டரை மீறி உன்னால என்ன பண்ணமுடியும்.. உன்கிட்ட பணத்தையும் கொடுத்து. அவன் மூலமா நான் சிறைக்கும் போகணுமா?.. அதுக்கு பணம் என்கிட்டயே இருக்கட்டும்..” என்று நக்கலாக கூறினார்..

பாரதி மூர்த்தியிடம் ராதாவை விசாரிக்க சொல்லிவிட்டு. அதற்கு மேல் அவனால் அங்கு நிற்கமுடியாமல் வெளியே வந்தான்..

ராதா பாரதியின் அப்பா என முன்பு தெரியாமல் இருந்தது.. இந்தமுறை தெரிந்தது. ” இப்படி ஒரு பிள்ளைக்கு இப்படி கேடுகெட்ட தகப்பன்.. நீ எல்லாம் என்னை நக்கல் பண்ணுற இல்ல.. இன்னையில இருந்து நான் கை நீட்டி பணம் வாங்கமாட்டேன்.. நாளைக்கு என் மகன் வளர்ந்து பெரிய அதிகாரியா வந்தா. உன் அப்பா லஞ்சம் வாங்கினான்னு ஒரு கெட்ட பேர் எனக்கும் தலைகுனிவு அவனுக்கும் வேண்டாம்… அப்பனா இருந்தாலும் சட்டம் ஒன்னுதான் அப்படி சொன்னாரே.. இந்த உன்னதமான மனிதனோட நானும் வேலை பார்க்கிறேன்னு நினைக்கும் போது அப்படி ஒரு சந்தோசமா இருக்கு.. ” என்றான் குற்ற உணர்வுடன் மூர்த்தி…

” சரி சொல்லு எப்ப இருந்து நீங்க வழிபறி பண்ணிட்டு இருக்கீங்க?.. அந்த நகை பணம் எல்லாம் என்ன பண்ணுவீங்க?.. வாக்குமூலமா நீங்களே எல்லாத்தையும் சொல்லிட்டிங்கன்னா கேஸ் பையில் பண்ணி கோர்ட்டில் ஆஜர் பண்ணுவோம்.. தண்டனையும் குறையும்.. இல்லைனா அடிபட்டு உடம்பு புண்ணாகும்.. அப்புறம் தண்டனையும் அதிகமாகும்.. எப்படி உங்க வசதி..” என்றான் நிமிர்வுடன்..

அப்பொழுது தான் பாரதி செல்விக்கு அழைத்து அவள் எடுக்கவில்லை என்றதும்.. அவனின் யோசனை தாயை பற்றி சென்றது.. ராதா பண்ணிய வேலை இது நாளைக்கு வெளியே தெரிந்தால் அவனது குடும்ப மானமே போய்விடும் என்ற கவலை.. அவன் தனி மனிதன் என்றால் எதையும் நினைத்து கவலை இல்லை. அப்பாவாக இருந்தாலும் குற்றவாளி நான் ஆரெஸ்ட் பண்ணினேன்.. அப்டினு நிமிர்வாக சொல்விட்டு கடந்து செல்வான்..

வைதேகி அவனுக்கு பிரச்சினை இல்லை.. அவளை வெளியே கட்டிக்குடுக்கும் எண்ணமும் இல்லை.. தற்போது செல்விக்கு குழந்தை பிறக்கும் முன் அவளை திருமணம் செய்து. குழந்தை பிறக்கும் போது அவனுடைய குழந்தையாக இந்த பூமியில் பிறக்கவேண்டும்.. அதுதான் அவனது விருப்பம்.. அதற்க்காகதான் பாரதி வைதேகி வீட்டில் இருக்கும் போதே அவன் திருமணம் பண்ணுவதற்கு ஒரே காரணம்…

சரவணன் ஒரு பிரபல லாயரிடம் ஜூனியர் லாயராக இருக்கும் போதே அவனின் திறமையில் நம்பிக்கை கொண்டு அவனுக்கே வைதேகியை திருமணம் முடித்து தருவதற்கு விருபம் கேட்டு.. அவன் சம்மதித்ததுமே அவனுக்கு போஸ்டிங் கிடைத்ததும் ஒரு வருடத்தில் பணம் சேர்த்து சரவணன் வைதேகி திருமணத்தை நடத்திவைக்க நினைத்தான்..

ஆனால் சரவணன் தான் இன்னும் மூன்று வருடத்தில் அவனும் தனி கேஸ் எடுத்து நடத்தி வெற்றிபெற்று அதன் பின் அவனே பெண் கேட்டு வருவதாக சொன்னான்…

அதனால் அந்த பேச்சுவார்த்தை அத்தோடு தடைபட்டது.. இப்பொழுது சரவணன் பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டான்…

இந்த விடுமுறையில் ஊருக்கு வந்து சரவணன் வைதேகி திருமண பேச்சை ஆரம்பிக்கலாம் என நினைத்து இருந்தான் பாரதி..

ஆனால் இரண்டு மாதத்திற்கு முன் தான் செல்வியை பற்றிய விபரம் அவனுக்கு தெரியவந்தது…

அதன் பின் டெல்லியில் இருந்து சரவணனின் மூலம் செல்வியை பற்றி தீர விசாரிக்க சொன்னான்…

பாரதி சொன்ன பத்தாவது நாள் அவளுக்கு பிடித்த உணவு எது என்பது வரை அனைத்தையும் விசாரித்து தெரிந்து அதை சுருக்கமாக பாரதிக்கு மெயில் அனுப்பிவிட்டான்..

அதன் பின் பாரதி செல்வியின் எதிர்கால வாழ்வு வீணாக போய்விடக்கூடாது அதனால் அவனே அவளை திருமணம் பண்ணுவதாக முடிவெடுத்து சரவணனிடம் அதுபற்றி பேசினான்.. சரவணனும் செல்வியின் திருமணத்தின் அவசியம் உணர்ந்து அதற்கான வேலையை ஆரம்பித்தான்..

காலத்தின் விருப்பமும் அவர்கள் இணைவதுதான் என்பதை உணர்த்துவதற்காகவே பாரதிக்கு அவனின் சொந்த ஊருக்கே உயர்

 பதவியுடன் மாற்றம் கிடைத்தது..

இது அவனே எதிர் பாராத ஒன்று.. சிறுவன் போன்று துள்ளி குதிக்காத குறைதான்.. அவனுக்கு விபரம் தெரிந்த வயதில் இருந்து அர்ச்சனா அடுப்பில் சமைப்பதும்.. வீட்டு வேலை பார்ப்பதும்.. விமலா சொகுசாக இருந்து கால் ஆட்டி அர்ச்சனாவை ஏவி வேலைவாங்குவதைதான் பார்த்து வளர்ந்தான் அதை கேட்டு ராதாவிடம் அடியும் வாங்கி இருக்கிறான் பாரதி..

 சிறுவயதில் தினமும் இரவில் அழுதபடி தாயை அணைத்துக்கொண்டு தான் உறங்குவான்.. வீட்டில் நடப்பது உலக விசயம் என அனைத்தும் புரிந்து சரி பிழை எது என பகுத்தறியும் வயது வந்ததும் தான் விமலாவும் ராதாவும் தவறு என புரிந்துகொண்டான் பாரதி..

அப்போது இருந்து இவர்களிடம் இருந்து தாயை காப்பாற்றி எதிர்காலத்தில் தன்னோடு சந்தோசமாக வைத்துருக்கவேண்டும் என நினைத்தான்.. அதன் பிறகு இன்ஸ்பெக்டராக டெல்லியில் வேலை கிடைத்ததும். தாயை அவர் பிறந்த அந்த வீட்டிலேயே சந்தோசமாக இருக்கவைக்கவேண்டும் என நினைத்தான்..

இது அனைத்தும் அவன் டெல்லியில் இருந்தால் செய்வதற்கு மிகவும் கஷ்டம்.. இந்த நிலையில் எப்படி அவன் செல்வியை திருமணம் பண்ணி இங்கு அழைத்து வருவது.. அவனது தாய்க்கு எப்போது அந்த வீட்டு சமையலறையில் இருந்து விடுதலை கிடைக்கும் என கவலையுடன் நினைத்தபடியே இருந்தான்…

இதற்கு இன்னும் ஐந்து வருடத்தில் தான் அவன் மாற்றம் வாங்கி சென்னை போகமுடியும்.. அதுவும் சென்னைக்கு மாற்றம் கிடைப்பது குதிரை கொம்பு என தெரியும்..

அவனே கெஞ்சி கேட்டாலும் ராதாவை விட்டு தாய் வரமாட்டார் என்பது அவனுக்கு நிச்சயம்… அவனை தினமும் மனதளவில் தாய் பற்றிய நினைவு கொன்றது.. அதற்கு தீர்வாக அவனுக்கு பதவி உயர்வுடன் சொந்த ஊருக்கே மாற்றம் கிடைத்தது அப்படி ஒரு ஆனந்தம்..

சென்னை வந்ததும் அவன் வருவதற்கு காரணமாக இருந்த இந்த கேஸை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்ததும்.. செல்வியை திருமணம் முடித்து அவனது தாய் செல்வி வைதேகி மூவரையும் அழைத்துக்கொண்டு அந்த வீட்டை விலைக்கு வாங்கி சந்தோசமாக வாழவைக்க வேண்டும் என நினைத்தபடிதான் சென்னை வந்தான்…

ஆனால் அவனே நிலைகுலையும் படி இருந்தது இந்த கேஸில் அவனின் அப்பா சம்மந்தப்படிருப்பது.. நான் போலீஸ் என் கடமையை செய்தேன்.. என வெளியே சொன்னாலும் உள்ளே இதனால் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவது அவனின் தாய் அர்ச்சனா தான் என நினைத்து மனம் நொந்தான் பாரதி..

இது அனைத்தையும் யோசித்தபடியே செல்வியும் அழைப்பை ஏற்காமல் போனதும் கோபம் ஆதங்கம்.. என அனைத்தும் சேர்ந்து அவனை சிந்திக்கவிடாமல் பண்ணியதால் கோநத்தை அடக்கும் வழி தெரியாமல் கையை மேசையில் ஓங்கி குத்தினான்..,அதில் இருந்த ஆணி கிழித்து கையில் இரத்தம் வந்தது.. சத்தம் கேட்டு மூர்த்தி வெளியே வந்து பார்த்தான்..

அவன்தான் பதறி அங்கிருந்த முதலுதவி பெட்டியை எடுத்துவந்து மருந்திட்டு கட்டுபோட்டான்..

அந்த நேரம் தான் கேஸ் விசயமாக சென்றிருந்த சரவணன் நீயூஸ் கேட்டு பாரதியை பார்க்க ஸ்டேஷன் வந்தான்..

அவன் வரும்போதுதான் மூர்த்தி கட்டுபோட்டுக்கொண்டிருந்தான்..

சரவணனும் என்னவென்று கேட்டான் பாரதியிடம்.. அப்போதுதான் வைதேகியிடம் இருந்து பாரதிக்கு அழைப்பு வந்தது..

அங்கு வைதேகி சொன்னதை கேட்டதும்.. உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து அவனின் வீட்டிற்கு போகும் படி கூறிவிட்டு இருவரும் ஜீ எச் சென்றார்கள்… போகும் வழியில் என்ன நடந்தது என சரவணன் கேட்டான்..

அதற்கு பாரதி சரவணன் அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு சென்றபின் நடந்ததை கூறினான்…

” ராதா அங்கிள் இந்த அளவுக்கு மோசமா இருப்பார்னு நான் நினைக்கலடா பாரதி.. ஆதுக்காக நேரம் இப்ப இரவு பத்துமணி.. நீயோ நானோ இந்த நேரத்துல முழிச்சிருக்கலாம்.. ஆனா செல்வி பாவம்டா நடந்த எதையும் அவளால ஏற்றுக்கொள்ள முடியாம தவிப்பா இருக்கும்.. இந்த நேரத்துல நீ கல்யாணம் பண்ணலாம்னு பொண்ணு பார்க்க போய் நிக்கவுமே ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கும் செல்வி… இது என்ன சாதாரண கல்யாணமா?.. நீங்க லவ் பண்ணுநீங்களா?.. இல்ல வீட்டு பெரியவங்க பார்த்து பண்ணி வைக்கிற கல்யாணமா?.. இது எதுவும். இல்லயே டா.. நீயும் செல்வியும் இதுக்கு முன்ன பார்த்தது கூட இல்லயே.. அந்த புள்ள இப்ப இருக்கிற இக்கட்டான சூழ்நிலையில திடீர்னு பொண்ணு பார்க்கிறது.. கல்யாணம் பண்ணுறது எல்லாத்தையும் அதோட மனசு ஏற்றுக்கொள்ளனுமேடா பாரதி.. நீ நினைத்தது தப்பில்ல… அந்த குழந்தை உன் குழந்தையாக அடையாளப்படுத்தி இந்த உலகத்துக்கு வரணும் அப்படினு நீ நினைக்கிறது தப்பே இல்ல.. ஆனா நீ ஒரு திடகாத்திரமான ஆண்.. செல்வியோ மனசளவில நொந்து துன்பப்பட்ட பெண்.. உனக்கு நான் சொல்லணும்னு இல்லை.. கொஞ்சம் பொறுமையா இரு..”

” மொத இந்த கேஸோட தாக்கத்துல இருந்து வெளிய வா.. அம்மாக்கு என்னன்னு பார்த்து சரி பண்ணு.. அப்புறம் நீயும் ரிலாக்ஸ் ஆகினதும்.. செல்வியை பற்றி யோசிக்கலாம்.. அதுவரை அந்த புள்ளையும்.. அமைதியாக யோசிக்கும்… இதுல இருந்து நீ வெளிய வந்து செல்வியை கல்யாணம் பண்ணினதும்.. நேர்ல உன் அன்பு மொத்தத்தையும் காட்டு.. அதுவும் புரிஞ்சிக்கும். நீங்க சந்தோசமாக வாழுவீங்க.. நான் சொன்னது புரிஞ்சதா டா?..” என்றான் சரவணன்..

இவ்வளவும் கேட்டதும் பாரதி தலையாட்டிவிட்டு. சீட்டில் சாய்ந்து கண்மூடினான்..

பாரதியின் வீட்டில்.. ராதாவை பாரதியே முன்நின்று கைது பண்ணி அழைத்து சென்றதும்.. விமலா அர்ச்சனா இருந்த அறைக்கதவை பலமாக தட்டினாள்..

வைதேகி அர்ச்சனாவை அழைத்து வந்ததும்.. ” நல்ல இருக்கு நீ புள்ள வளர்த்து வச்சிருக்க லட்சணம்.. ஊர்ல யாரும் பண்ணாத தப்பையா என் அண்ணன் பண்ணிட்டான்?.. மகன் போலீஸ் காப்பாத்துவான் அப்படினு தைரியத்துல பண்ணிட்டார்.. அதுக்கு ஊருக்கு முன்ன அவர் நல்ல போலீஸ்னு பேர் வாங்குறதுக்கு அப்பாவையே கைது பண்ணுவானா?.. நாங்க என்னவோ உன் சொத்தை அழிச்சிட்டோம்… உன்னை வேலை வாங்குறோம் அப்டினு நீலி கண்ணீர் வடிச்சிருப்ப உன் புள்ள தனியா அழைச்சிட்டு போனதும்.. “

” அதுதான் அவன் இங்க வந்து துப்பாக்கியை காட்டி எங்களை மிரட்டிட்டு போறான்.. இப்ப பெத்த அப்பா வையே கைது பண்ணிட்டான்.. ஏதோ நீ சமைக்கிறது நல்லா இருக்கே.. அப்படி நமக்கு சமைக்க வருத்திலையேனு உன்னை சமைக்க விட்டோம்.. அதுவும் உன் வீட்டுலதானே சமைச்ச வேலை பார்த்த.. எங்க அண்ணன் என்ன உன்னை நாலு வீட்டுல பத்து பாத்திரமா தேய்க்கவிட்டான்.. இல்லையே ராணி மாதிரி தானே இருந்த.. உன்னை தங்க தட்டுல உன் அப்பன் வேணும்னா தாங்கியிருக்கலாம்.. இல்லன்னா அப்படி பணம் படைச்சவனுக்கு கட்டிக்குடுத்து இருக்கணும்.. இது எதுவும் இல்லாம என் அண்ணனுக்கு கட்டிக்கொடுத்தா அவனோட சம்பாத்தியத்துக்கு ஏற்ற மாதிரிதான் நீ வாழணும்.. இது எதுவும் உன் பிள்ளைக்கு தெரியாம வந்து குதிச்சிட்டு போறான்.. இப்ப இந்த வீட்ல என் அண்ணனும் இல்லை.. நீயும் உன் பிள்ளையும் ஆட்சி பண்ணலாம்னு நினைக்கிறீயா?.. நான் இருக்குற வரை அது நடக்காது.. என் அண்ணனை நான் எப்படி வெளிய கொண்டு வர்றேன்னு மட்டும் நீயும் உன் பிள்ளையும் பாருங்க.. என் அண்ணன் வந்ததும் இருக்கு கச்சேரி உங்களுக்கு..” என்று சத்தமிட்டு கத்திவிட்டு வெளியே சென்றாள் விமலா..

இடையில் வைதேகி விமலாவை எதிர்த்து கேள்வி கேட்டாள். ” ஏன் மா தாத்தா அச்சுமாவை சும்மா மாமாக்கு கட்டி வைக்கலயே.. அவரோட எல்லா சொத்தையும் மாமா பேர்ல தானே எழுதி வைத்தார்.. மாமா அதை பார்த்துக்க தெரியாம அழிச்சதுக்கு அத்தை பொறுப்பா என்ன?.. அத்தை நீ இப்படி பேசுறது பாரதி அண்ணாக்கு மட்டும் தெரிஞ்சுது நீ இனியும் இந்த வீட்டுல இருக்க மாட்ட அவ்வளவுதான்… ” என்றாள்..

” ஆமான்டி அந்த கிழவன் சொத்தை எழுதி வைத்தான் தான் என்ன நேரத்துல எழுதி வச்சானோ… என் அண்ணன் குதிரைக்கு பணம் கட்டினா அது தோக்குது.. இப்படி எல்லாமே எதுலயும் என் அண்ணன் ஜெயிக்க முடியாம தோத்து போயிட்டான்.. நேரம் சரி இல்லையோ என்னவோ..” என்று அவரை எதிர்த்து கேள்வி கேட்டால் என்பதற்காக அறைந்துவிட்டு சென்றாள் விமலா..

இதை எல்லாம் கேட்டதும் இவ்வளவு நாளும் வார்த்தையில் அன்பை தடவி அண்ணி என்று அழைத்து பேசிய விமலாவா? என நினைத்தார்.. கவணன் திருடன் அதனால் மகனே கைது பண்ணி அழைத்து சென்றுவிட்டான் என்று தெரிந்ததும்.. அந்த பேதை தாய்க்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.. முகமெல்லாம் வியர்த்து.. கண் சொக்கி கீழே விழுந்துவிட்டார்.. அதனால் பயந்துதான் வைதேகி பாரதிக்கு அழைத்து. வரும் படி கூறினாள்..

இவர்களும் ஜீ எச் செல்ல ஆம்புலன்ஸும் வந்தது.. உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து ட்ரீட்மெண்ட் ஆரம்பித்தார் டாக்டர்…

அப்போது தான் பாரதி வைதேகியின் கன்னத்தை பார்த்தான்.. வெள்ளை நிறத்தில் விமலா அடித்தது விரல் பதிந்து சிவந்து இருந்தது… அதை பார்த்ததுமே வீட்டில் அவன் வந்த பின் ஏதோ நடந்திருப்பதை புரிந்து கொண்டான் பாரதி..

வைதேகியின் அருகில் சென்று மெதுவாகவும் அதட்டலும் குரல் ஒலிக்க என்ன நடந்தது என கேட்டான்.. அவளும் ஏன் மறைப்பான் என நினைத்து விமலா பேசிச்சென்றதை கூறினாள்..

“அச்சுமா தான் உன்கிட்ட மாமாவை பற்றி தப்பா சொல்லி அதனால்தான் நீ மாமாவை கைது பண்ணுனியாம்.. அப்படினு அச்சுமாவை திட்டிட்டு அதை கேட்ட என்னையும் அடிச்சிட்டு வெளிய போயிட்டாங்க..” என்றாள் வைதேகி..

இதை கேட்டதும் பல்லை கடித்துக்கொண்டே..” உனக்கு உன் அம்மா வேணுமா?.. இல்ல நாங்க வேணுமா?..” என்றான் வைதேகிடம் கோபத்தை அடக்கிய குரலில்..

அவளோ சிறிதும் யோசாக்காது ” அர்சுமா தான் எனக்கு அம்மா அவங்கதான் வேணும்..” என்றாள்.

அதை கேட்டதும் ” இனி உங்க அம்மாக்கு அந்த வீட்டுல இடமில்லை வைதேகி.. இனியும் அவங்களை பொறுத்துகிட்டு போகணும்னு என் அம்மாக்கு எந்த அவசியமும் இல்ல.. இதுவரை காய்ச்சல் தலைவலினு கூட என் அம்மா படுத்து நான் பார்த்தது இல்ல… இந்தளவுக்கு போயிடுச்சுல அவங்களுக்கு… உன் அம்மா வெளிய போகட்டும். உழைப்பு . கஷ்டம். பசி களைப்பு. இது எல்லாம் என்னனு தெரிஞ்சிக்கட்டும்… இனியும் இங்க இருந்தா அச்சுமாக்கும் தாமரைக்கும் தான் அவங்களால கஷ்டம் வரும்… நான் எந்த நாளும் வீட்டுலயே இருந்து உன் அம்மா அவங்களை நெருங்காம பார்த்துட்டே இருக்கமுடியாது.. நீ கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு போயிட்டா நீ உன் அம்மாவை பிரிச்சுதானே ஆகனும்.. அப்டி நினைச்சுகோ..” என்றான் முடிவெடுத்தவனாக..

” நீங்க விளக்கம் எதுவும் சொல்ல வேணாம் அண்ணா நானும் நடக்கிறது எல்லாத்தையும் பார்த்துகிட்டுதானே இருக்கிறேன்.. அவங்க அந்த வீட்டுல இருந்து போறதுதான் சரி.. அச்சுமாக்கும் நல்லது..” என்றாள் வைதேகி..

ஆக்ஸிஜன் மாஸ்க் வைத்து ட்ரீட்மெண்ட் பண்ணியும் அர்ச்சனாவிற்கு மூச்சுத்திணறல் நிற்கவில்லை… சரவணன் இருவருக்கும் உணவு வாங்கி வந்தான்.. பாரதி அதை வேண்டாம் என்றுவிட்டான்… வைதேகிதான் உண்டாள்..

மேலும் இரண்டு மணி நேரம் கடந்ததும் தான் டாக்டர் மூச்சுத்திணறல் சற்று கட்டுபட்டு இருக்கிறதாக கூறி டிஷ்ரப் பண்ணவேண்டாம் பார்த்துக்கோங்க பீபி லெவல் குறைந்து இருக்கு மிஸ்டர் அதுதான் அப்படி இனி பயப்படும் படி இல்ல.. எதாவதுனா உடனே என்னை கூப்பிடுங்க..” என்றுவிட்டு சென்றார் டாக்டர்…

உள்ளே சென்று தாயை பார்த்து விட்டு ஸ்டேஷனுக்கு அழைத்து மூர்த்தியிடம் என்ன நிலைமை என விசாரித்து

” எப் ஐ ஆர் ஃபைல் பண்ணுங்க நாளைக்கு கோர்ட்டில் ஆஜர் பண்ணனும்.. அம்மாக்கு இப்ப பரவாயில்லை இது அந்தாளுக்கு தெரியவேண்டாம்..” என்று அழைப்பை துண்டித்து விட்டு சரவணனும் பாரதியும் காஃபி குடிக்க சென்றார்கள்..

வீட்டில் கத்திவிட்டு சென்ற விமலா ஆட்டோவிற்கு கை காட்டி ரோட்டை கிறாஸ் பண்ணும் போது எதிரில் வந்த மணல் லாரியை கவனிக்காமல் பாரதியை திட்டியபடி வந்தார்.. அந்த லாரிக்காரன் ஹாரன் அடித்தும் விலகிச்செல்லாமல் விமலா ரோட்டிலேயே செல்லவும் அவனும் ஒடித்து திருப்பும் போது மறுபக்கம் வந்த பைக் விமலா மீது மோதிவிட்டது.. அந்த இடத்திலேயே இரத்தம் சொட்ட விழுந்துவிட்டார்… அதன் பின் அங்கிருந்த நல் உள்ளம் ஒன்றுதான் ஆம்புலன்ஸ்க்கு அழைத்து அது வந்ததும் ஏற்றிச்சென்றது.. ஜீ எச்-க்கு..

அடுத்த நாள் காலையில் பேப்பர் டீவி நீயூஸ் அனைத்திலும் ஹெட்லைன் நீயூஸ்.. ” தந்தை என்றும் பார்க்காமல் குற்றவாளி என்று தெரிந்ததும் மகன் பாரதிகிருஷ்ணா சென்னை புதிய டி சி பி. நேற்று இரவு அவரை கைது செய்தார்.. இன்று அந்த கேஸ் விசாரணைக்கு நீதிமன்றம் வருகிறது… நேர்மையின் சிகரம் , வேட்டையாடும் வேங்கை பாரதிகிருஷ்ணா..” என்று அனைத்து நீயூஸ் சேனல்களிலும் ஒளிபரப்பாகியது..

அதை பார்த்ததும் கந்துவட்டி கோவிந்தன். அதிர்ச்சி ஆகி விட்டான்..

” இந்தாளை நம்பி பணம் கொடுத்தமே.. இப்ப பணமும் இல்லை பொண்ணு கல்யாணமும் இல்லை.. தொகையா ஐந்து லட்சம் போச்சே… அது கணக்குல வராத பணம்.. இப்ப போய் அவன்கிட்ட கேட்டா கருப்பு பண மோசடி கேஸ் போட்டு அவனோட மகன் நம்மளையும் பிடித்து உள்ள வச்சிடுவானே.! பெத்த அப்பனையே வச்சிட்டான்.. நாம யாரு அவனுக்கு.. அந்த பணம் போச்சா?..” என்று தலையில் துண்டை போட்டு விட்டத்தை பார்த்தபடி இருந்தான் கந்துவட்டி கோவிந்தன்..

டீவி நீயூஸை பார்த்துவிட்டுத்தான் காலையிலையே யசோதா சரவணனுக்கு அழைத்தார்..

அவனும் அழைப்பை ஏற்று நடந்த உண்மையை சொன்னான்..

அவரும் கேட்டுவிட்டு செல்வியிடம் சென்று அவளை எழுப்பி விபரம் சொல்லி ” வா செல்வி மா நாம ஒரு எட்டு போய் சம்மந்தி அம்மாவை பார்த்துட்டு வருவோம்.. அதுதான் சரி நாளைக்கு நீ அந்த வீட்டுல வாழப்போற பொண்ணு.. அவங்க அப்படி இல்லைன்னாலும்… நாம பார்க்க போறது தான் சரி.. குளி நான் காஃபி போடுறேன்.. மாப்பிள்ளையும் உன்னை பார்த்தா கொஞ்சம் சந்தோசப்படுவார்.. இரவு உன் கைபேசிக்கு அழைப்பு வந்தது.. நீ எடுக்கல நான் வரவும் அதுவும் நின்னுடுச்சி.. உன் போனை எடுத்து பாரு மாப்பிள்ளையா இருக்கலாம்.. பாவம் அந்த நல்ல பிள்ளைக்குதான் இந்த கடவுள் எவ்வளவு கஷ்டம் கொடுக்கிறார்.. நல்லவங்களை சோதிச்சு அழவைத்து பார்க்கிறதே இந்த கடவுளுக்கு வேலையா போயிடுச்சு..” என்று புலம்பினார் யசோதா..

தாய் பேசிய அனைத்தையும் எதுவும் சொல்லாமல் கேட்டு இருந்தவள்..

” என்ன ம்மா மறந்துட்டியா?.. அந்த கடவுள் மனசு வைக்கலன்னா நீ இந்நேரம் உயிரோட இருந்திருக்க மாட்ட… இதோ உன் மாப்பிளையும் இந்த நிலைமையில என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வந்து குதிக்கமாட்டார்.. நல்லது எல்லாத்தையும் வசதியா மறந்திட்டு.. துன்பத்தை மட்டும் நினைத்து கடவுளை திட்டுங்க இதுதான் உங்க கெட்ட பழக்கம்..” என்றாள் செல்வி..

யாசோதா மகளுக்கு காஃபி கொடுத்துவிட்டு..” ஆமான்டி மகளே நான் அந்த கடவுளை திட்டுறேன் தான்… ஏன் திட்டுறேன்?.. நான் செத்து போயிருந்தாலும் எனக்கு எதுவும் தெரியாது.. இப்ப உயிரோட இருந்து நீ படுற கஷ்டத்தையில்ல பார்த்து கண்ணீர் வடிக்கிறேன்.. அதுக்கு நான் சாகுறதே மேல் தானே..” என்று கண்ணில் வழிந்த கண்ணீர் புடவையால் துடைத்தபடியே சமயலறை சென்றார் யசோதா..

செல்வியோ தாயை கஷ்டப்படுத்திவிட்டோமா என நினைத்து சமயலறை சென்றாள்..

சென்று தாயை தோளோடு அணைத்து

” சாரி மா.. ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?.. இனி அப்படி பேசாத ம்மா நீயும் இல்லாட்டி நான் தனிச்சிடுவேன் மா.. உன் பொண்ணு பாவம் தானே… ” என்று கன்னம் கிள்ளி கொஞ்சினாள் செல்வி..

” சீ போடி போக்கிரி பொண்ணே.. ஓடு போய் குளிச்சிட்டு ரெடியாகு நம்ம காளி அண்ணே மகனுக்கு கூப்பிட்டா கார் எடுத்துட்டு வருவான்.. அதுலயே போய்ட்டு வந்துடலாம்.. என்ன பணம் கேட்கிறானோ கொடுத்துடலாம்… அம்மா இட்லி ஊத்துறேன்.. அந்த சூடு நிக்கிற பாக்ஸை எடு அதுல மாப்பிள்ளை.. எல்லாருக்கும் இட்லி எடுத்துட்டு போகலாம்..” என்று அவர்கள் சென்னை செல்ல புறப்பட்டார்கள்..

இருவரில் யாரும் அறியவில்லை மீண்டும் அவர்களின் வீட்டிற்கு வரமாட்டோம் என்று..

விமலா அடிபட்டு அதே ஜீ எச்சில் இருந்தது அங்கிருந்த அவர் பெத்த மகள் முதல்கொண்டு யாருக்கும் தெரியாமல் போனதுதான் அவரின் பாவத்தின் பலன்..

பாரதிக்கு அடுத்த இடி தலையில் விழப்போவதை அவனும் அறியவில்லை..

பாரதிகிருஷ்ணா செந்தாமரைச்செல்வியை திருமண பந்தத்தில் கட்டிப்போடுவதற்கு காலம் இன்னும் பலமாக செயல்படப்போகிறது என யாருக்கும் தெரியாமல் போனதுதான் விந்தை…

வீணை இசைக்கும்..

Advertisement