Advertisement

அத்தியாயம் 29
ராஜேந்திரன் வாசனிடம் தெளிவாக பேசி இருந்தார். “அபர்ணா எனக்கு தங்கைதான். என் மனைவியை மட்டும் அவள் பார்த்துக்கொள்ளவில்லை. ரோஹானையும் வளர்த்தது அவள்தான். என் தொழிலையும் அவதான் பார்த்துக்கிட்டா அவளுக்கு என் சொத்துல பங்கு இருக்கு. அவளுக்கு ஒரு பொண்ணு இருந்தா ரோஹனுக்கே! கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கலாம்னு நான் அடிக்கடி நினைப்பேன்.
வாசுகிக்காக ஏதாவது பண்ணணும்னுதான் ரோஹன் உன் கூட பழக ஆரம்பிச்சான் உனக்காகவும் பண்ண அவன் தயங்க மாட்டான். நீ வேற வாசுகி வேற இல்ல. அதே! மாதிரி எனக்கு நீ வேற ரோஹன் வேற இல்லை.
அபர்ணாக்கா மட்டும் ஒன்னு செய்வியா? அவ பொண்ணுக்கா அவ இந்த வீட்டை வாங்கினா. உண்மை தெரிஞ்ச பிறகும் காசு கொடுக்கிறேன்னு அவ மனச கஷ்டப்படுத்திடாத, உன் கிட்ட நான் கேக்குறது இது ஒன்னு மட்டும்தான். ஏனென்றால் சொந்த வீட்டை வித்தப்போ கூட கடைய கட்ட அந்த பணத்தை எடுக்காம வெளிநாட்டுல இருக்குற தம்பிக்கு அனுப்பின நீ கண்டிப்பா அடுத்தவன் சொத்துக்கு ஆச பட மாட்ட.
உனக்கு எப்போ என்ன உதவி வேணும்னாலும் நான் இருக்கேன், ரோஹன் இருக்கான். தயங்காம கேக்கலாம்” என்றவர் வங்கிக் கணக்கு புத்தகமொன்றை கொடுக்க, வாசன் வீட்டு வாடகை மற்றும் ஐந்து லட்சம் என்று கொடுத்த பணம் வாசுகி மற்றும் வாசன் பெயரில் போடப்பட்டு இருந்தது.
ரோஹன் குடும்பம் சென்னைக்கு கிளம்பி சென்றிருக்க ராஜம் மகளை பிரிந்திருந்தது போதுமென்று இங்கயே தங்கி விட்டார்.
மூன்று மாதங்கள் கடந்திருக்க, விது பொருட்களை பிடித்துக்கொண்டு எழுந்து நிற்க முயற்சி செய்து வெற்றியும் கண்டு முளைத்துக்கொண்டிருக்கும் இரண்டே பற்களைக்கைக் காட்டி அன்னைக்கு தன் சாகசத்தைக் காட்டி சிரிக்க வாசுகி அவளை கட்டி அணைத்து முத்தமிடலானாள்.
வாசுகி விதுவை போல் மாறி அபர்ணாவிடம் செல்லம் கொஞ்சிக்கொண்டிருந்தாள். தான் வயிற்றில் இருக்கும் பொழுது என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்பட்டன? எப்படியெல்லாம் நடந்து கொண்டாய் என்று அபர்ணாவைக் கேட்டுக் கேட்டு ஒரு வழிப் படுத்தலானாள்.
இரவில் வாசன் வீடு வந்ததும் தூங்கும்வரை வாய் ஓயாது அன்னையோடு என்னவெல்லாம் பேசினாள் என்பதை ஒப்பிப்பாள்.
“என்னங்க அன்னக்கி அம்மா… என்னையும் அவங்க கூட கூட்டிகிட்டு போய் இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னேனே! நியாபகம் இருக்கா?” விதுவை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு கணவனை அருகில் வந்து படுத்தவாறு வாசுகி கேக்க,
“நல்லாவே! நியாபகம் இருக்கு” நான்கு மாதம் என்பதால் வயிறு சற்று மேடிட்டு தெரிய  வாசன் மனைவியின் புறம் திரும்பி வயிற்றின் மேல் கை வைத்திருந்தான்.
கணவனின் கையின்மேல் கை வைத்தவள் “ஒருவேளை அம்மா என்ன அன்னக்கி கோவிலுக்கு தூக்கிட்டு போய் இருந்தா… இன்னக்கி நான் உயிரோட இருந்திருக்க மாட்டேன் இல்ல” சொல்லி முடிக்கும் பொழுது உடலில் சிறு நடுக்கம் ஓடி மறைய
அதை உணர்ந்துக் கொண்டவன் அவளை அணைத்துக்கொண்டு “ஏன் அப்படி நினைக்கிற?” என்றவன் அவள் பேச்சுக்கு தடை விதிக்கவில்லை. அவள் மனதில் எதோ ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு மறுகுகிறாள் என்று புரிய கேள்வியோடு நிறுத்தி இருந்தான் வாசன்.
“இல்ல.. குழந்தை பொறந்தா அந்த மினிஸ்டர் ரெண்டு பேரையும் கொண்டுவாங்கனு அந்த குருமூர்த்தியே! என்ன கொன்னாலும் கொன்னு இருப்பாரு. இதுல நான் வேற அம்மா என்ன கூட்டிட்டு போய் இருந்தா அப்படியெல்லாம் நடந்திருக்கும்னு கற்பனை பண்ணி பார்த்திருக்கேன். நான் ஒரு மடச்சி. கடவுளுக்கு தான் தெரியும் யாருக்கு எப்போ? என்ன கொடுக்கணும்னு” விரக்தியாக சொல்ல  அவள் குரலே! சொன்னது தந்தையோடு இருந்த வாழ்க்கையில் ஒன்றும் அவள் பெரிதாக சந்தோசத்தை அனுபவிக்கவில்லையென்று.   
“எது வேணும்னாலும் நடந்திருக்கலாம் வாசு… குருமூர்த்தி உண்மையாகவே உங்க அம்மாவ நேசிச்சவரு. கண்டிப்பா உங்கம்மாக்காக உன்ன நல்லா பாத்துகிட்டு இருந்திருப்பாரு” என்று வாசன் கூறினாலும் குரு ஒரு மனப்பிறழ்வுக்கு ஆளானவன் என்பதால் அப்படியும் நடக்க வாய்ப்பிருக்கு அதைக் கூறி கருவை சுமந்துக்கொண்டிருக்கும் மனைவியை பயமுறுத்த அவன் விரும்பவில்லை.
“இல்ல…. அந்த மினிஸ்டர் நீ குருமூர்த்தியோட பொண்ணுன்னு உங்க அம்மாவையும், குருமூர்த்தியையும் போட்டுத் தள்ளிட்டு உன்ன தூக்கிட்டு போய் இருந்தாருனு வையேன், என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா?” என்று சிரிக்க
“உங்க நிலைமையா?” வாசுகி புரியாது கேக்க
“இல்லையா பின்ன? அந்த மினிஸ்டர் வளர்த்தா.. நீ ஒரு அரக்கண்டா இருந்திருப்ப, ஏற்கனவே! உன் கை நீ…ளம் அந்த மினிஸ்டர் உன்ன வளர்த்திருந்தா? உன்ன லவ் பண்ண வைக்க, என் பாதி உசுரு போய் இருக்கும்” என்றவன் சிரித்து வாசுகிடமிருந்து அடிகளையும் பெற்றுக்கொள்ள
“பாத்தியா பாத்தியா… நான் சொல்லல” என்று மீண்டும் சிரிக்க
வாசுகி முறைத்தவாறே “போதும் போதும் மேல சொல்லுங்க” சுவாரஸ்யமாக கதை கேக்கலானாள்.
“அப்பொறம் உன்ன கல்யாணம் பண்ண அந்த மினிஸ்டரோட சண்டையெல்லாம் போட வேண்டி இருந்திருக்கும். நாலு பைட்டு, ஐஞ்சு டூயட் சங்குனு நம்ம வாழ்க போய் இருக்கும். கடைசில அந்த மினிஸ்டர் ஜெய்ல களி திடுக்கிட்டு இருந்திருப்பான்” என்று முடிக்க
கணவனை கட்டிக்கொண்டவள் “எப்படி பார்த்தாலும் ஹாப்பி எண்டிங் தானே! வரும்”
“கற்பனை டி.. அதெல்லாம் நமக்கு வேண்டிய மாதிரிதான் பினிஷிங் கொடுக்கணும்” என்று வாசன் சிரிக்க, வாசுகியும் சிரித்தாள்.
“அன்னைக்கே! கேக்கணும்னு நினச்சேன். அப்பாவையும், சித்தியையும் வீட்டை விட்டு துரத்தும் பொழுது இது என் வீடுன்னு சொன்னீங்க, அப்போ இது என் வீடு இல்லையா”
“எவ டி இவ. நீ வேற நான் வேறயா? அந்த இடத்துல நம்ம வீடுன்னு சொல்ல முடியுமா? அதான் என் வீடுன்னு சொன்னேன். என்னோடது உன்னோடது இல்லையா? இந்த பொண்டாட்டிகளே! இப்படித்தான் புருஷன் என்ன சொல்லுறான்னு சரியா கேக்க மாட்டாளுங்க, சொல்லுறதையும் புரிஞ்சிக்க மாட்டாளுங்க, சண்டைக்கே! அலையுதுங்க” என்று வம்பிழுக்க வாசனின் கையை வலிக்க கிள்ளினாள் வாசுகி.
 “ஆனாலும் கடைசில என் மாமியார் வாங்கின வீட்டுல வாழ வேண்டிய என் நிலைமையை நினச்சா….” என்று வாசன் இழுக்க…  
“மாமியார இன்னொரு அம்மாவா பாருங்க. உங்களுக்கு சங்கடமா இருந்தா வீட்டை பொறக்க போற நம்ம பையன் பேர்ல எழுத சொல்லுறேன்” என்று மிரட்ட
“அடிப்பாவி… கடைசி வரைக்கும் வாசன் வீடில்லாதவன்னு சொல்ல வச்சிடுவியே!” பொய்யாய் கோபப்பட
“அதான் பெரிய கடையே! இருக்கே!”
“என்ன பேச்சு கடப்பாக்கம் போகுது… கடைய ஆட்டைய போடலாம்னு பிளான் பண்ணுறியா?”
“ஆமா…. ஆட்டைய போட்டு வீட்டுல கொண்டு வந்து வைக்க போறேன்” என்று சிரிக்க,
“இரு டி… கடைய கட்டி விரிவு படுத்துறேன். அப்பொறம் பாரு… இந்த ஊரே நம்ம கடைக்குதான் வருவாங்க”
“உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும். அம்மா நம்ம கல்யாணத்த பார்க்க முடியலைன்னு, வளைகாப்ப கிராண்டா பண்ணலாமான்னு கேக்க சொன்னாங்க” 
“பண்ணிடலாம். அதுக்கென்ன”
“விது நம்ம கிட்ட வந்த பிறகு அவளுக்கு எந்த பன்க்ஷனும் வைக்கல, அவ பர்த்டே அன்னக்கி வளைகாப்ப வச்சா நல்ல இருக்கும்”
“ஒரே கல்லுல ரெண்டு மாங்கானு சொல்லுற? இன்னும் நாலு மாசம் இருக்கே! நல்ல பிளான் பண்ணி பண்ணலாம் வாசு…” என்றவன் நிறைவாக உணர்ந்தான்.  
இங்கே ரோஹன் மந்த்ராவின் பின்னால் அலைந்துக் கொண்டிருந்தான். அவன் என்ன சொன்னாலும் கேக்கும் நிலைமையில் அவள் இல்லை.
ராஜேந்திரன், சரளா, அபர்ணா வாசுகி, வாசன் என்று அனைவரும் நடந்த கல்யாணம் நடந்ததுதான் அது இல்லையென்று ஆகாது. ரோஹனுக்கு நீ மட்டும்தான் மனைவியாக இருக்க முடியும் என்று பேசி மந்த்ராவை சமாதானப்படுத்தி சென்னை அழைத்து சென்றிருந்தனர்.
ராஜேந்திரனோடும், சரளாவோடும் சகஜமாக பேசுபவள் ரோஹனிடம் மட்டும் முகம் திருப்பலானாள். அவளுக்கு சென்னையிலையே! ஒரு தனியார் பாடசாலையில் வேலையையும் ரோஹன் பார்த்துக் கொடுத்து அவனே! அழைத்தும் சென்று அழைத்தும் வரலானான்.
எந்த மறுப்பும் தெரிவிக்காமல் சென்று வருபவள் அவனோடு பேச மட்டும் வாய் திறப்பதில்லை.
அவளிடம் பேச முயற்சித்து தோற்றவன் “எத்தனை நாளைக்குத்தான் இவள் இப்படி இருக்கப் போகிறாள் என்று பார்க்கலாம்” கருவிக்கொண்டவன் கண்டுகொள்ளாமல் இருக்க மந்த்ரா சிறிதும் அசைந்துகொடுப்பது போல் தெரியவில்லை.
பூர்ணாவுக்காதான் இவள் இப்படி இருக்கிறாளா? என்ற கோபத்தில் ரோஹன் இருக்க, ரோஹன் தன்னை கல்யாணம் செய்ததே! தன் குடும்பத்தாரிடம் பழிவாங்க மட்டும் என்று மந்த்ரா நினைத்துக்கொண்டு ஒதுங்கி இருந்தாள்.
ஒரே அறையில் இருந்தாலும் மந்த்ரா சோபாவில் தான் தூங்கினாள். தூங்கும் அவளை வெறித்துப் பார்க்கும் ரோஹன் வாழ்க்கை இப்படியே! முடிந்து விடுமோ! என்றும் அஞ்சினான்.
இவர்களின் இந்த ஒட்டாத வாழ்க்கை பெற்றோர்களின் கண்களுக்கும் நன்றாகவே! புலப்பட்டது. வீட்டில் ஒரு குட்டி பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தனர்.
“என்னங்க இப்படி பண்ணுறது சரியா? இதனால பிரச்சினை எதுவும் வராதே!” சரளா கேக்க,
“வரும் ஆனா வாராது”
“என்னங்க உளறுறீங்க?”
“நீ வாம்மா…” என்று மனைவியை இழுத்து செல்ல
“இதான் சாக்குன்னு நீங்க ஓவரா குடிக்காதீங்க” கணவனை மிரட்டியவாறு சரளா செல்ல பெற்றோருக்காக காத்துக்கொண்டிருந்தனர் இளம் ஜோடியினர்.
அந்த பாட்டியின் முதன்மை வகித்ததே! மதுபானம்தான்.
“மாமா குடிப்பாரா? அதுவும் வீட்டுல” என்று மந்த்ரா யோசிக்க,
“என்ன  மருமகளே! என்ன மொடா குடிகாரன் ரேஞ்சுக்கு யோசிச்சு வச்சிருக்க போல” என்று தீவீரமாக பார்க்க “ஹிஹிஹி” என்று அவள் சிரிக்க,
“எப்போவும் இல்ல. எப்போவாவது. ரோஹனும் குடிக்க மாட்டான். ஆனா இன்னக்கி மட்டும் குடிக்க அனுமதி உண்டு” என்றவர் தன் கையாலையே! மகனுக்கு ஊற்றிக் கொடுக்க,
“என்ன குடும்பம்யா இது என்று பார்த்தவாறு மந்த்ரா சாப்பிட” ரோஹன் நல்ல போதையில் இருந்தான்.
“ஆமா ரோஹன் மந்த்ராவை பார்த்த உடனே! புடிச்சிருந்ததா? இல்ல பார்க்க பார்க்க புடிச்சிருந்ததா?” என்று ராஜேந்திரன் கேட்க
“பார்த்த நொடியே புடிச்சிருந்தது. சும்மா தேவதை மாதிரி இருந்தா.. என்ன கொஞ்சம் பயந்து போய், டென்ஷனா.. கண்ணு வேற கலங்கி…” குளறியவாறு கூற
“குடிச்சவங்க உண்மையைத்தான் சொல்வாங்கன்னு சொல்றாங்க, இவன் என்ன பொய் பொய்யா சொல்லுறான். பொண்ணு பார்க்க வந்த போ… நான் கண்ணு கலங்கி நின்னேனா?” மந்த்ரா தனக்குள் பேசிக்கொள்ள
“கண்ணு வேர்க்குற அளவுக்கு மருமகளுக்கு பொண்ணு பாக்குறப்போ என்ன பிரச்சினை?” ராஜேந்திரன் மீண்டும் கேக்க,
“ஐயோ… ப்பா…. பொண்ணு பாக்க போனப்போ.. இல்ல. ஹாஸ்பிடல்ல வச்சுதான் இவள மொத மொத பார்த்தேன். வாசுகி அட்மிட் பண்ணி இருந்தா இல்ல. அப்போ… அப்போவே… விழுந்துட்டேன்.. இவள பார்த்திருந்தா நேரா போய் இவளையே! பொண்ணு கேட்டு இருந்திருப்பேன். எந்த பிரச்சினையும் வந்திருக்காது. சந்திராவ பொண்ணு கேட்டதுல நடந்த ஒரே நல்ல விஷயம் வாசன் அண்ணா கிடைச்சதுதான்” என்றவன் மேசையின் மீது தொப்பென்று விழுந்து படுத்துக்கொள்ள ராஜேந்திரன் மனைவிக்கு கண்ணைக் காட்டியவாறு மகனை உள்ளே அழைத்து சென்றார்.
“என்ன மந்த்ரா அப்பாவே! பையன குடிக்க வைக்கிறாரேன்னு பாக்குறியா? ரோஹன் மனசுல இருக்குறத சொல்ல மாட்டான். சில நேரம் இப்படி பண்ணத்தான் உளறுவான். இன்னக்கி உனக்காக” என்ற சரளா வேறு எதுவும் பேசவில்லை.
மந்த்ராவால் நம்பவும் முடியவில்லை. ரோஹன் தன்னை விரும்பி திருமணம் செய்தானா? விடியட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தாள் மந்த்ரா.
அன்று ரோஹன் விழிக்கும் பொழுது மதியம் தொட்டிருக்க, அவன் குளித்து விட்டு ஆபீஸ் செல்லலாம் என்று கீழே வரும் பொழுது மந்த்ரா பெட்டியோடு கையை கட்டிக்கொண்டு நிற்பதையும், சரளா கையை பிசைந்துக்கொண்டு நிற்பதையும் கண்டு என்னவென அன்னையைக் கேக்க
“தெரியல டா… பெட்டி படுக்கையை கட்டிக்கிட்டு நீ வரும் வரைக்கும் தயாராகி நிக்குறா” என்று சொல்ல பல்லைக் கடித்தான் ரோஹன்.
வேலையாள் வந்து மந்த்ராவின் பெட்டிகளை ரோஹனின் வண்டியில் ஏற்றியதும் மந்த்ரா நடக்க ரோஹனும் கூடவே நடந்தான். வண்டியில் செல்லும் பொழுது பேசிக்கொள்ளலாம் என்று ரோஹன் நினைக்க, மந்த்ரா பின்னாடி உக்கார, டைவர் அமர்ந்திருப்பதைக் கண்டு கேள்வியாக ஏறிட
“ஐயா இன்னக்கி என்ன வண்டிய எடுக்க சொன்னாரு” என்று அவர் தலையை சொரிய ரோஹனும் எதுவும் பேசாமல் மந்த்ராவின் பக்கத்தில் அமர்ந்தான்.
அவ்வளவு சொல்லியும் பூர்ணாவுக்காக என்னை விட்டு செல்ல முடிவெடுத்து விட்டாளா? போகட்டும், போரவள தடுக்க நான் யார்? என்று ரோஹன் அமர்ந்திருக்க,
“என்ன எது என்றாலும் கேக்குறாரான்னு பாரு” மந்த்ரா முறிக்கிக் கொண்டாள்.
இப்படியே! சென்ற பயணம் விமானநிலையத்தை அடைய “இவ ஊருக்கு எந்த விமானம் போகுதாம்” என்று கிண்டலாக அவளை பார்த்த ரோஹன் ஏதோ புரிவது போல்
“நாம எங்க போறோம்” என்று மனைவியை ஏறிட
“இப்போவாச்சும் கேக்க தோணிருச்சே! சந்தோசம். வாங்க போலாம். பிளைட்டு மிஸ் ஆகிடும்” என்று முறிக்கொண்டவள் அதற்கு மேல் பேசாமல் உள்ளே நடந்தாள்.
கூடவே நடந்தவன் ஆவணங்களை கொடுத்தவாறே “ஆமா நேத்து நைட்டு குடிச்சிட்டு நான் என்ன சொன்னேன்”
“அது இருக்கட்டும். என் கிட்ட எதுக்கு சரியா பேசாம இருக்கீங்க?” விமானத்துக்கான அழைப்பு வரும்வரை அமர்ந்தவாறே மந்த்ரா கேக்க,
“பின்ன உன் அம்மா என் அம்மு அத்தைக்கு பண்ணதுக்கு உன் குடும்பத்தை வகுந்து இருக்கணும், அதுக்கு நீயோ! சந்த்ராவோ! பொறுப்பாக முடியாது. ஆனா நீ உன் அம்மாக்காக வக்காலத்து வாங்கினா கோபம் வராதா?” கண்கள் சிவந்தான் ரோஹன்
“யாரு இப்போ சித்திக்காக வக்காலத்து வாங்கினாங்க? அவங்க பண்ணது தப்புனுதானே! சொல்லுறேன். அவங்க எங்களை பெத்த அம்மாவாக இருந்தாலும் ஏதோ! ஒரு பிடித்தமில்லாத தன்மை இருந்துகிட்டேதான் இருந்தது. உண்மையெல்லாம் தெரிஞ்ச பிறகும் அவங்க கூட இருப்பேனா?”
“அப்போ அன்னக்கி பெருசா அவங்க கூட போன?” ரோஹன் கோபமாக கேக்க,
“அது நீங்க என்ன கல்யாணம் பண்ணது அவங்கள பழிவாங்க மட்டும்தான்னு நினச்சேன். என்ன லவ் பண்ணுற விஷயம் தெரியாதில்ல. தெரிஞ்சிருந்தா போய் இருக்க மாட்டேன். அதுவும் நான் ஒன்னும் அவங்க கூட போகல, பாட்டி கூட பாட்டி வீட்டுக்கு போலாம்னுதான் பார்த்தேன்”
“ஓஹ்…” என்றவன் “ஹே நான் உன்ன லவ் பண்ணுற விஷயம் உன் கிட்ட யாரு சொன்னா?” ஆச்சரியமாக கேக்க
“குடிச்சிட்டு உளறலனா கடைசிவரைக்கும் எனக்கு தெரியாம இருந்திருக்கும். வாயத் தொறந்து சொன்னாதான் என்ன?” மந்த்ரா முறைக்க,
“சாரி டி செல்லம். ஏதேதோ நினைச்சுகிட்டு ஏதேதோ நடந்திருச்சு. ஆமா நாம இப்போ எங்க போறோம்” யோசனையாகவே! கேக்க
அவன் காதருகில் குனிந்தவள் “மொரிசியஸ் போறோம். ஹனிமூன்கு” என்று விட்டு செவ்வானமாக சிவக்க, ரோஹன் அவளை ஆசையாக பார்க்கும் நேரம் அவர்களுக்கான விமானத்தின் அழைப்பும் வந்தது.
விதுவின் பிறந்த நாளன்றே! வளைகாப்பை வைக்க வேண்டும் என்று வாசுகி அடம் பிடித்ததில் ஒன்பதாம் மாதம்தான் வளைகாப்பு வைக்க நேர்ந்தது.
கிரப்பெறவேசத்துக்கும் நித்யா வராததால் நித்யா குடும்பமும் கண்டிப்பாக வந்தாக வேண்டும் என்ற நிபந்தனையோடு அழைப்பு விடுத்திருக்க, ஸ்ரீவத்சன் இப்போதைக்கு வர மாட்டான் என்று தெரியும் இருந்தாலும் விடாது அலைபேசி வழியாக தொடர்பில் தான் இருந்தான் வாசன்.
முற்றத்தில் டென்ட் போட்டு பந்தி பரிமாறப்பட காற்றோட்டமாக இருக்கும் என்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, காலை மதியம், இரவு மூன்று வேலையும் விருந்துக்கு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.
அது போக மாலை விதுவின் பிறந்தநாள் விழா, சிற்றுண்டி, தேநீர், ஜூஸ் என வேறாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  
காலையிலிருந்தே வாசன் பரபரப்பாக வேலைகளை பார்த்துக்கொண்டிருக்க, வீட்டிலும் ஆட்கள் நிறைந்து வழிய, கணவனைக் காணாது ஏக்கத்தோடு கோபமும் கொண்டாள் வாசுகி.
அழைத்து அழைத்து பார்த்தவள் அலைபேசியை எடுக்காது இருக்கவே! அப்பக்கம் செல்வோரிடம் தூது அனுப்பலானாள்.
நேரமாகிறது வாசுகியை அழைத்து வந்து இருக்கையில் அமரவைக்கும்படி பெண்கள் கூறிக்கொண்டிருக்க, அவள் அறையை விட்டு வந்த பாடில்லை. வாசன் வந்தால் தான் வருவேன் என்று அவள் அடம் பிடிக்க, அபர்ணாதான் வாசனை கையேடு அழைத்து வந்து அறையில் விட்டாள்.
வேர்க்க விறுவிறுக்க என்ன ஏதோ என்று வந்தவன் பட்டு சாரியில் தலை நிறைய பூவோடு நின்ற மனைவியை கண் அகற்றது பார்த்திருக்க அவளோ வாசனை முறைத்துக்கொண்டு நின்றாள்.
“ஐயோ… இவ்வளவு அழகா இருக்கியே! வாசு…” என்று அவளை கட்டிக்கொள்ள வயிறு இடித்தது. போதாததற்கு அவன் மனையாள் வேறு அவனை தள்ளி விட
“ஏன் டி…” என்று முகம் சுருங்கினான் வாசன்.
“அங்க எல்லாரும் எனக்காக காத்துகிட்டு நிக்குறாங்க, நான் தயாராகி நீங்கதான் என்ன மொத,மொத பார்க்கணும்னு காத்துகிட்டு நிக்குறேன். எங்க போனீங்க? அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேல உங்களுக்கு”
“அடிப்பாவி… உன்னுடைய வளைகாப்பு டி இன்னக்கி, நம்ம பாப்பா பொறந்த நாள். எனக்குதான் டி வேல இருக்கு” 
“இருக்கும், இருக்கும். எல்லா வேலையையும் உங்க தொம்பிகளை பார்க்க சொல்ல வேண்டியதுதானே!” என்றவள் “சைடால வந்து கட்டு பிடிச்சிக்கோங்க” வாசனுக்கு ஐடியாவை அழகாக கொடுக்க
வாசனும் மனைவியை கட்டிக்கொண்டு “இந்த சாரீல செம அழகா இருக்க”
பச்சையும் சிவப்பும் கலந்து தங்க நிற வேலைப்பாடுகளோடு கூடிய பட்டுசாரியில் அழகாகவே இருந்தாள் வாசுகி.
“பாப்பாவை பாத்தீங்களா?”
“அம்மாவும் பொண்ணும் மேட்சிங்கா ட்ரெஸ் போட்டிருக்கிங்க, என்ன மட்டும் கழட்டி விட்டுடீங்களா?”
அவன் கையில் அடித்தவள் “அங்க பாருங்க பச்சை கரவேட்டி மெரூன் சட்ட போய் குளிச்சிட்டு வாங்க, எனக்கு நீங்களும் வளையல் போடணும்” என்று அவனை விட்டு தள்ளி நிற்க
“இதோ.. பத்தே நிமிஷம் வந்துடுறேன்” என்றவன் துண்டோடு ஓடி இருக்க,
“கைலியையும், சட்டையையும் இங்கயே! விட்டுட்டு போறாரு, அத்தனை பேர் முன்னாடியும் துண்டொடதான் அறைக்கு வர போறாரா” தலையில் அடித்துக்கொண்டவள் தேவையான துணிகளோடு அவன் பின்னால் சென்றாள்.
விழாவும் ஆரம்பிக்கப்பட வாசுகியை சிம்மாசனம் போல் இருக்கையில் அமரவைத்து ராஜம் முதலில் வளையல் போட்டு தொடங்கி வைத்தார்.
வாசுகியின் தாய்வழி தந்தைவழி என்று அத்தனை சொந்தங்கள் இருந்தாலும் நாதன் மட்டும் இல்லை. நாதன் வந்தால் அபர்ணாவுக்கு சங்கடமாக இருக்கும் என்று நேற்று வாசன் வாசுகியை கோவிலுக்கு அழைத்து சென்று தந்தையையும், மகளையும் சந்திக்க வைத்திருந்தான்.
நாதன் இன்னும் பூர்ணாவோடுதான் இருக்கின்றார். பூர்ணாவை துரத்தினால் அவளுக்கு அடைக்கலம் கொடுக்க அவள் குடும்பத்தில் யாரும் தயாராக இல்லை என்பது ஒருபுறம், அவள் சென்றாள் நாதனுக்கு பொங்கிப் போட யாருமில்லை என்பது அவர் சுயநலம். அபர்ணாவுக்கும் வாசுகிக்கும் செய்ததை குத்திக்காட்டிக் காட்டி, பூர்ணாவின் உயிரை வாங்கிக்கொண்டு அவளை வேலையும் வாங்கிக்கொண்டு அவள் ஆக்கிப் போட்டதை சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார் நாதன்.
தொடர்ந்து அனைவரும் வளையல் போட அபர்ணா வைர வளையல்கள் அணிவித்து மஞ்சள், குங்குமம் வைத்து “இதே போல சந்தோசமா, தீர்க்க சுமங்கலியா இரு மா..” என்று வாழ்த்தி விட்டு அணைத்துக்கொள்ள வாசுகியின் கண்களும் கலங்கியது.
வாசன் தங்க வளையளோடு சேர்த்து தங்க கொலுசும் அணிவிக்க, அதை அதிசயமாக பலர் பார்த்து பேசினாலும், வாசனின் கண்களும், வாசுகியின் கண்களும் இரகசியமாக பேசி புன்னகைத்துக்கொண்டன.
“என்ன ண்ணா… உன் பொண்ணாடிக்கே! எல்லாம் செய்யிற பொண்ணுன்னு தத்தெடுத்தியே! அவளுக்கு ஒன்னும் இல்லையா?” வம்பு வளர்க்க வெளிய இருந்து ஆள் வர வேண்டியதில்லை சத்யாவே! ஆரம்பித்திருந்தாள்.
ஸ்ரீராமின் குழந்தையை வாசுகி தத்தெடுத்தாள் என்று அறிந்ததும் ஸ்ரீராமிடம் “பொண்ணு பொறந்தா உன் பொண்ண அண்ணி நல்லா பாத்துப்பாங்களா” என்று ஏடா கூடமாக பேசிப்பார்த்தாள்.
ஸ்ரீராம் மதுவோடு வாழ முடியாது அதனால்தான் பிரிந்தேன் என்று மட்டும்தான் கூறியிருந்தானே! தவிர எல்லா கதையையும் கூறி இருக்கவில்லை. அது தெரிந்தால் சத்யாவுக்கு அவல் கிடைத்தது போல் ஆகி இருக்கும். அதனால் யாரிடமும் எந்த உண்மையையும் வாசன் கூறி இருக்கவில்லை.
சத்யா எது பேசினாலும் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருக்கும் வாசன் பொறுமையாக வாசுகியின் காலில் கொலுசை மாட்டி விட்டு நிமிர்ந்தவன் சத்யாவை ஓர் பார்வை பார்த்து விட்டு
“இங்க இருக்குறவங்க எல்லார் கிட்டயும் ஒன்னு சொல்லிக்கிறேன். என் தம்பி பொண்ணைத்தான் நான் தத்தெடுத்தேன். இப்போ அவ என் பொண்ணு. இனிமே யாரும் விது என் தம்பி பொண்ணு என்றோ! நான் தத்தெடுத்த பொண்ணு என்றோ! பேசக் கூடாது. மீறி பேசுறவங்க, அந்த நினைப்போட இந்த வீட்டு வாசல மிதிக்காதீங்க. அது என் பொண்ணு எதிர்காலத்தை பாதிக்கும்” என்றவன் மந்த்ராவின் கையிலிருந்த விதுவை கைநீட்டி அழைக்க “ப்பா..” என்றவாறு அவளும் வாசனிடம் தாவ வாசுகி கணவனை காதலாக பார்த்து வைத்தாள். 
வாசன் கூறியதை ஏற்றுக்கொண்ட பெண்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து மஞ்சள் குங்குமம் தடவி வாசுகியை வாழ்த்தி விட்டு சென்றனர்.
நித்யாவும் இரண்டு ஜோடி தங்க வளையல்கள் வாசுகிகி அணிவித்ததோடு விதுவுக்கும் சின்னதாக இரண்டு வளையல்கள் பிறந்தநாள் பரிசாக கொடுத்திருந்தாள். 
சத்யாவுக்கு அதை பார்க்கும் பொழுது உள்ளுக்குள் புகைந்தது. வாசுகிகி அவள் பரிசாக ஒன்றும் கொண்டுவரவில்லை. குழந்தைக்கு மட்டும் பொம்மையொன்றை எடுத்து வந்திருந்தாள்.
யாரும் பரிசு எடுத்து வர வேண்டும் என்று வாசனோ! வாசுகியோ! எதிர்பார்க்கவில்லை. எல்லாம் அவரவர் மனம்தான். மனசு சுத்தமாக இருந்தால் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தானாக வரும்.
மாலை பிறந்தநாள் விழாவும் நல்லா முறையில் நிறைவேறி இருக்க, வாசுகியால் தூக்க முடியாததால் வாசன்தான் விதுவை தூக்கி வைத்துக்கொண்டு கேக் வெட்டி இருந்தான். விதுவும், ம்மா… ப்பா…னு இருவருக்கும் மாறி மாறி கேக் ஊட்டுவதை ஆதி வீடியோ எடுத்துக் கொண்டிருக்க, குடும்பத்தார் அனைவரும் ஆசையாக பார்த்திருந்தனர்.
விழா முடிந்ததும் ஒவ்வொருவராக விடைபெற்று செல்ல நித்யா குடும்பமும் மாமனார் வீட்டுக்கு செல்வதாக கூற, வாசன் இங்கயே! தங்களாமே! நித்யா” சொந்த வீடு திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில் சொல்ல பதில் ஆத்மநாதனிடமிருந்து வந்தது.
“இல்ல வாசன். எப்போ வந்தாலும் நாம வீட்டுல தங்கினதே! இல்ல. இந்த தடவ ரெண்டு நாள் வீட்டுல தங்கலாம்னு இருக்கேன். டில்லி போக முன் ஒரு நாள் தாங்கிட்டுதான் போவேன்” என்று கூறியவாறு குடும்பத்தோடு விடைபெற வாசனுக்கு மகிழ்ச்சிதான்.
அனைவரும் சென்ற பிறகு வாசனையும் வாசுகியையும் அமர்த்தி ராஜம் சுத்தி போட அபர்ணா சந்தோசமாக மகளை பார்த்திருந்தாள்.  
விதுவும் மெதுவாக அவர்களின் அருகில் வர மடியில் அமர்த்திக்கொண்டாள் வாசுகி. விது “ம்மா… ப்பா..” என்று மழலையில் அபர்ணாவைக் காட்டி எதையோ சொல்ல வாசன் மகளை தன் மடிக்கு மாற்றி இருந்தான்.
அழகோவியமாக இருந்தது அந்தக் காட்ச்சி.
சின்ன மகளின் முத்து சிரிப்பில்
மலர்ந்தது மனைவியின் முகம்
நிறைந்தது கணவனின் மனம்
நிறைவு பெற்றது வாசனின் வாசுகி

Advertisement