Advertisement

அத்தியாயம் 19
தேனில் இனியது
காதலே!
உயிர் தேகம்
தந்தது காதலே!
நம் உயிரின்
அர்த்தம் காதலே!
இந்த உலகம்
அசைவதும் காதலே!
காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமல்
சாவது சாவா
வாசுகி அணிந்திருந்தது ரொம்பவும் குட்டையான கையுடைய பிளவுஸ். அதில் அவளின் வழு வழுப்பான கைகள் அப்பட்டமாக தெரிய ஸ்கர்ட் அண்ட் பிளவுஸில் அவளை முதன் முறையாக பார்த்த ஆர்வத்தில் “இவ வேற நம்மள ரொம்ப சோதிக்கிறா” என்று கண்ணாடி வழியாக ஆவென பார்த்திருந்த வாசன் அவள் அருகில் வந்து கிண்டல் செய்ய ஆரம்பிக்கவும் கோப முக மூடியை அணிந்துக்கொண்டான்.

 

கிண்டல் செய்தவள் தள்ளி விடுவாள் என்று வாசன் கிஞ்சத்துக்கும் எண்ணி பார்த்திருக்கவில்லை. அவள் தள்ளி விடும் பொழுது அவளின் வழு வழுப்பான கைதான் அவன் கையேடு உரசிச்  சென்றது. அதுவும் கணப் பொழுதுதான். குளித்து விட்டு வந்திருந்தவளின் குளிர்ந்த தேகம்,அவனது சூடான தேகத்தை தீண்டியதும் என்றும் இல்லாத புது வித இரசாயன மாற்றம் அவனுள் பாய்ந்தது. 

 

அறையின் சுகந்தமும், விளக்குகளின் வெளிச்சமும் வாசனின் மனநிலையை மாற்றி உள்ளே தூங்கிக் கொண்டிருந்த காதல் தேவனை தட்டி எழுப்பி இருக்க, “வேண்டாம் விலகி இரு” என்று புத்தி கூறினாலும் அடங்காத மனம் கேக்கவே! இல்லை. வீட்டில் என்றால் ராமநாதனாவது இருப்பார். இங்கு யாருமில்லை. அறை வேறு அலங்காரத்தில் ஆசைகளை தூண்டி விட்டிருக்க அடங்க மறுத்தது அவன் மனம்.

 

இதற்கு மேலும் பொறுமையாக இருப்பவன் அடி முட்டாள் என்று தனக்கு தானே! கூறிக்கொண்ட வாசன், வாசுகியின் பின்னால் வந்து நின்று தழுவிக்கொள்ள, வாசுகியின் தேகம் விழித்துக்கொண்டது. அவனது மூச்சுக்காற்று பின்னங் கழுத்தில் படுவதை உணர்ந்தவள் மெல்ல விலக முயற்சித்தாள்.  தலை வாரிக்கொண்டிருந்தவள் கைகள் இரண்டையும் தூக்கி இருந்ததால் அணிந்திருந்த பிளவுஸ் சற்று மேலெழுந்து அவள் இடுப்புப் பகுதி அப்பட்டமாக தெரிய, அவன் கைகள் அவளின் இடுப்பை சுற்றி வயிற்றின் மீது படிய, வாசுகி  மேனி சிலிர்த்து உதடு கடித்து கண்கள் சொக்கி நின்றாள்.

 

இருவருமே! “பிடிச்சிருக்கு” என்று பிடித்தம் ஒன்றில்தான் கல்யாண பந்தத்தில் இணைந்தார்கள். ஆனால் கல்யாணமான நாளிலிருந்து காதலே! இல்லாத கூடலில் கடமைக்காக வாசுகியும், தேவைக்காக வாசனும் வாழ்க்கை பயணத்தில் இணைந்திருக்க, கடவுளுக்கே! அவர்களின் வாழ்க்கை சலித்து விட்டது போலும் குழந்தையை கொடுத்து பிரிந்து செல்ல இருப்போரை கூட இணைத்து வைக்கும் கடவுள், அவர்கள் ஆசையாக எதிர்பார்த்த குழந்தையை அவர்களிடமிருந்து பிரித்து அவர்களை காதல் கடலில் மூழ்க வைத்திருந்தான்.

 

வாசுகி இப்படி ஒரு உணர்வை இதுவரை உணர்ந்தது இல்லை. பாதி நாட்கள் தூக்க கலக்கத்தில் அவள் கூடல் முடிந்து விட, மீதி நாட்கள் அவள் எதிர்பார்புகளோ! ஆசைகளோ! நிறைவேறாமலையே! வாசன் அவனது தேவையை தீர்த்துக்கொண்டு தூங்கி இருப்பான். வாசன் கடை, கடை என்று ஒரு திக்கில் பயணம் செய்ய, வாசுகி கணவனுக்காக செய்யும் கடமையென்று ஒரு திக்கில் பயணம் செய்ய அவர்களை இணைத்து ஒன்றாக பயணம் செய்ய வைத்திருந்தது அவர்களின் கலைந்த சிசு.

 

தினமும் சேலையில், மல்லிகை சரம் சூடி, நெற்றி வகிட்டி குங்குமம், மஞ்சள், சந்தனம் கலந்து வீசும் அவள் மேனியின் வாசம் இன்று எதுவுமே இல்லாமல் அவள் மேனியின் இயற்கை வாசமும், சோப்பின் வாசமும் கலந்து அவனை பித்தம் கொள்ள செய்ய, கண்கள் சொருகி மோன நிலையில் நிற்பவளை உணர்ந்தவனாய் வாசன் அவளை தன் புறம் திருப்பினான்.

 

வாசுகியின் கரங்கள் பாவாடையை இறுக பற்றி இருக்க, விழிகளை இறுக மூடிக் கொண்டவள், வேகமாய் திரும்ப, இருவரின் முகங்களும் வெகு நெருக்கத்தில் உரசிக் கொண்டன. அவளையே விழி அகற்றாது பார்த்தவன், ஏதோ மயக்கத்தில் இருப்பவன் போல, “வாசு…’’ என்று மென்மையாக அழைத்து, அவள் மூக்கோடு அவன் மூக்கை உரச, உடல் திரவ தங்கமாய் குழைய தொடங்கியது அவளுள்.

 

பெயர் சொல்லி அழைத்ததும் கண்களை திறந்து மெதுவாக கணவனை பார்க்க, அவள் கண்ணோடு தன் கண்ணை கலக்க விட்டான்.

 

கண்ணோடு
கண்கள் ஏற்றும் கற்பூர
தீபமே கை தீண்டும் போது
பாயும் மின்சாரமே உல்லாச
மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும்
என் தாயகம்
கள்ளுர பார்க்கும
பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும்
உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே

 

முகத்தில் விழுந்திருந்த நீர் சொட்டும் அவளின் ஓரிரண்டு தலைமுடியையும் ஒதுக்கியவாறு அவள் முக மொழியை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தவன், குளிர்ந்த கன்னங்களை கையில் ஏந்தி கண்களாளேயே! அனுமதி வேண்டி நிற்க,  சூடான கணவனின் கரங்கள் கன்னம் தொட்டதும் தேகம் சிலிர்த்தவள் வெக்கத்தில் முகம் சிவந்தாள். அவள் சம்மதம் வெக்கமாக கிடைத்த உடன் தனக்கு வெகு அருகில் இருந்தவளின் இதழ்களை தன் இதழ் கொண்டு தீண்ட, வாசுகியின் கைகள் கணவனை ஆரத்தழுவிக்கொண்டன.

 

காதல், காமம், தேடல், வேட்கை என பல வித உணர்வுகள் கலந்து வாசன் வாசுகியை முத்தத்தால் முற்றுகையிட, வாசுகியும் அவனோடு இணைந்து கரைந்துக் கொண்டிருந்தாள்.

 

சில பல நிமிடங்களுக்கு பிறகு தன் முகத்தை அவளிடமிருந்து பிரித்தெடுத்தவன், இருவர் உணர்வுகளுக்கும் தடையாய் இருந்த உடைகளை கலைந்து மொத்தமாய் அவள் மீது பரவ அவன் தேகம் பரபரக்க, அவளை இறுக்கி அணைத்திருந்தான் வாசன்.

 

தேவைக்கா  ஒரு கூடல், கடமைக்கான கூடல் என்றில்லாமல் காதலால் கசிந்துருகி ஆசையாக முத்தமிட்டதில் தாப அலைகள் கரை கடக்க, மனைவியை கைகளில் ஏந்தியவன் கட்டிலை நோக்கி நடந்தான்.

 

வாசுகியின் உடலும், மனமும் இப்படியொரு கூடலுக்குத்தான் ஏங்கித் தவித்ததென்று அவள் அங்கமெல்லாம் உணர்வு பெற கரங்களோ கணவனின் கழுத்தில் மாலையாக கோர்த்துக்கொண்டன. 

 

இத்தனை நாள் அருகிலையே! இருந்தும் அவள் உடல் நலம் கருதி அவளை விலக்கி வைத்திருந்தவன் இன்று எல்லா தடைகளையும் உடைத்து அவளை தொட்டுவிடும் ஆவலில் ஆவேசமாக ஆட்க்கொண்டான் வாசன்.

 

உரிமை இருந்தாலும் இத்தனை நாள் இல்லாத காதலால் கணவனோடு கலந்தவள் அவனுக்கு கரையலானாள்.

 

மனைவியின் நெற்றி முட்டி நின்றவன் மெல்லிய முத்தம் வைக்க வாசுகியின் கண்கள் தானாகவே! மூடிக்கொண்டன, இமைகள் மீது மெல்லிய முத்தம் வைத்து கன்னத்தில் அழுத்தமாகவே! முத்தமிட்டு அவள் மூக்கை செல்லமாக கடித்தவன் 

 

“உனக்கு மூக்குத்தி போட்டா அழகா இருக்கும் இல்ல. வாசு… ஏன் போடல?”

 

பட்டென்று கண்களை திறந்தவள் “தோணல” என்று ஒற்றை வார்த்தையாய் பதில் சொல்ல

 

“ஊருக்கு போனதும் மொத வேல இதுதான்” என்று விட்ட வேலையை தொடர

 

“கதவ லாக் பண்ணுனீங்களா?” என்று வாசுகி இடையில் குறுக்கிட

 

“வீட்டுல இருக்கிறதா நினைச்சுகிட்டு இருக்கியா? வாசு. அதெல்லாம் தானாகவே! மூடிக்குமாம், நீ பேசி டைம் வேஸ்ட் பண்ணாத” என்றவன் அவள் உதடுகள் பேசாதவாறு தன் உதடுகளால் பூட்டு போட்டு விட அதன் பின் அங்கு பேச்சுக்கே! இடமில்லையென்றானது.

 

ஆசை, காதல், மோகம், தாபம் எல்லாம் கலந்த கூடல் அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது.

 

எல்லையற்ற திருப்பித்துடன் கணவனின் மார்பில் தலை சாய்ந்திருந்தாள் வாசுகி. விட்டால் அவன் எங்கேயோ ஓடிவிடுவான் போல் கைகளோ! அவனை இறுக அனைத்திருந்தன.

 

வாசனும் அவள் புறம் திரும்பி அணைத்துக்கொண்டவன் காலை தூக்கி அவள் மேல் போட அவன் காலை ஏதோ குத்தி விட்டதும் “ஸ்ஸ்..” என்றவாறே காலை இழுத்துக் கொண்டவன் என்னவென்று பார்க்க அது வாசுகியின் கால் கொலுசு.

 

“என்னங்க என்னாச்சு” என்று வாசுகி கணவனை ஏறிட

 

“எத்தன வருசமா இந்த கொலுசு உன் கால்ல இருக்கு?” சந்தேகமாக கேட்டான் வாசன்.

 

அந்த கொலுசு இருந்த நிலைமை அப்படி இருந்தது. நிறமும் மங்கிப்போய், அதில் கோர்த்திருந்த மணிகளும் உதிர்ந்துப்போய், காலுக்கு சற்றும் பொருத்தமே! இல்லாமல் அதீத பழையதாக தோற்றமளித்தது அந்த கொலுசு.

 

கூடலின் உச்சத்தினால் இருந்த மணிகளும் சிதறி இருக்கும் அதில் சேர்ந்திருந்த சிறு கம்பி ஒன்றுதான் வாசனின் காலை பதம் பார்த்திருந்து போலும்.

 

“ஓஹ்.. இதுவா?  இது நான் வயசுக்கு வந்தப்போ அப்பா வாங்கிக் கொடுத்தது” அசால்ட்டாக சொல்ல

 

“என்னது வயசுக்கு வந்தப்போ வாங்கிக் கொடுத்ததா? இது உனக்கே! நியாயமா இருக்கா? நீ பதிமூணு வயசுல வயசுக்கு வந்திருப்பியா? இப்போ உனக்கு இருபத்தி எட்டு. பதினஞ்சு வருசமா… இந்த கொலுசை போட்டுக்கிட்டு இருக்க, காலுக்கு பத்தவுமில்லை. மணியெல்லாம் உதிர்ந்து வேற போச்சு. கல்யாணத்துக்கு புதுசு வாங்கலையோ?” அவள் முத்தை பார்த்தவன் அதில் என்ன தெரிந்ததோ! 

 

“சரி அத விடு. உன் புருஷன் நான் இருக்கேன். என் கிட்ட கேக்கணும் என்று கூடவா தோணல?”

 

“கல்யாணமாகி இத்தனை மாதங்களும் அது அவள் காலில்தான் இருந்திருக்கிறது அதையெல்லாம் பார்க்க உனக்கு எங்க நேரமிருந்தது? பொண்ணுங்களைத்தான் சைட் அடிக்கல கட்டின பொண்டாட்டிய கூடயுமாடா கவனிச்சு பார்க்க மாட்ட?” என்று அவன் மனசாட்ச்சி காரி துப்ப, தன்னையே! நொந்து கொண்டவன் மனைவியின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தான்.

 

“ஐயே… இதெல்லாம் கேட்டு வேற வாங்கணுமா? புருஷன் ஆசையா வாங்கிட்டு வர வேணாம். கல்யாணமாகி இத்தன நாள்ல இன்னிக்கிதான் என் புருஷனுக்கு நான் முக்குத்தி போட்டா நல்லா இருக்கும்னு தோணி இருக்கு. இதுல என்னைக்கி கொலுசு போட்டா நல்லா இருக்கும்னு தோணுமோ! வளையல் போட்டா நல்லா இருக்கும்னு தோணுமோனு! நான் நினைக்க வேண்டி இருக்கு” என்னு கிண்டலாக சொல்ல

 

அவள் கன்னத்தை வலிக்க கடித்தவன் “ரொம்பதான் நக்கல் பண்ணுற, ரெண்டு தங்கச்சீங்க இருந்தாலும் நித்யா ஆசைப்பட்டு எதையும் கேட்கவும் மாட்டா, வாங்கவும் மாட்டா, சத்யாக்கு காணுற எல்லா பொருட்கள் மேலையும் ஆசைதான். சின்ன பொண்ணுனு நித்யா அவளுக்கு வாங்கிக் கொடுப்பா, அவங்க சமாச்சாரத்துல நான் நடுவுல போனதே! இல்ல. எனக்கு எப்படி இந்த விஷயமெல்லாம் தெரியும். நீதான் உரிமையா கேட்டிருக்கணும். இல்லையா என்ன இழுத்துகிட்டு கடைக்கு போய் வாங்கி இருக்கணும். ஒரு ஜோடி கொலுசு வாங்கிக் கொடுக்க என்னால முடியாதா?” சற்று கோபமாகவே! சொன்னான். அந்த கோபம் கூட அவள் மீதானதல்ல. கடை கடையென்று அலைவது கூட அவளுக்காக இந்த சின்ன வியாசத்தையே! கவனிக்காதவன் மத்ததெல்லாம் எங்க பார்த்துக்கொள்ள போகிறான் என்று தன் மீது வந்த கோபம்.  

 

“உரிமையில்லன்னு யாரு சொன்னா… எல்லா உரிமையும் இருக்கு. வாங்கிக் கொடுக்க சொன்னா ஒரு ஜோடிக்கு ரெண்டு ஜோடி வாங்கிக் கொடுத்திருக்க மாட்டீங்க” வாசுகி ஆர்த்மார்த்தமாக சொல்ல

 

“ஏய்..ஏய்.. பல்கா ஆட்டைய போட பிளான் பண்ணுற?” வாசன் கிண்டலடிக்க,

 

“நான் எதுக்கு ஆட்டைய போடணும். அதான் கேட்டா வாங்கிக் கொடுப்பேன்னு சொல்லிடீங்களே! போதாததுக்கு இழுத்துட்டு கடைக்கு போய் வாங்கிக்க வேண்டியது தானே! என்று வேற சொன்னீங்களே! அத விட நீங்களா வாங்கிட்டு வந்தா என் புருஷன் எனக்காக நாலு கடை ஏறி இறங்கி, பார்த்து பார்த்து வாங்கிட்டு வந்திருக்காருனு அப்படியே சந்தோஷத்துல பூரிச்சு போய்டுவேன். நாலு பேரு கிட்ட பெருமையா வேற சொல்லிப்பேன். அதெல்லாம் ஒரு த்ரில்லு ஸ்ரீநி.. உங்களுக்கு புரியாது”

 

“அதான் சொல்லிடேல்ல, கொலுசு வாங்குறோம், மூக்குத்தி போடுறோம். வேறென்ன வேணும் வாசு… குட்டி” அவள் ஸ்ரீநி என்றதில் இவனும் கொஞ்ச 

 

“ம்ம்.. நான் சொன்னா சொல்லிகிட்டே போவேன்.. நீங்களா பார்த்து வாங்கிட்டு வாங்க”

 

“அப்படிங்குற?”  

 

“சரி தூங்கலாமா?”

 

“தூக்கம் வருதா?”

 

“வரல. மணிய பாத்தீங்களா?” என்று சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைக் காட்ட மணி இரண்டை தொட்டுக்கொண்டிருந்தது.

 

“இந்த அறைக்குள்ள வந்த பிறகு மணியெல்லாம் பார்க்க கூடாது வாசு… வா.. வா.. அடுத்த ரவுண்டு போலாம்” என்றவன் செவ்வனே! என்று தன் வேலையை துவங்கி இருந்தான்.

 

அன்றைய விடியல் மதியம் தொட்டிருக்க, உணவையும் அறைக்கே! வரவழைத்து உண்டிருந்தனர்.

 

“இன்னக்கி வெளிய எங்கயும் போகலையா?” வாசுகி கேக்க,

 

“போற எல்லா இடத்தையும் போய் பார்த்தாச்சு. இனி ரூம்ல பார்க்க வேண்டிய வேல மட்டும்தான் பாக்கி வாசு… ஸ்ரீவத்சனும் போன் கூட பண்ணலைனா என்ன அர்த்தம்” என்று கண்சிமிட்டி சிரிக்க,

 

“உங்களுக்கு வெக்கமே! இல்ல” என்று வாசுகி தலையணையால் வாசனை மொத்த

 

“எப்போ பார்த்தாலும் என்ன அடிக்கிறதையே! வேலையா வச்சிருக்க. உன் கை ரொம்ப நீளம் தான். என்றவன் அவளை தடுக்க,

 

ஸ்ரீவத்சன் அழைத்து இரவு உணவுக்கு செல்ல ஏற்பாடு செய்திருப்பதாக கூறி இருந்தான். வாசனும் உடனே! மறுக்காமல் சரி என்று விட்டான். ஏனெனில் அவர்கள் அறைக்கு வரும் பொழுது அறையை ஒழுங்கு படுத்தி வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்.

 

அந்த ஹோட்டலில் எத்தனையோ! உணவகங்கள் இருப்பது தெரியும். இது அதிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் உணவகம். அப்படி என்ன சிறப்பு என்று இரண்டு ஜோடியும் அந்த உணவகத்துக்கு செல்ல, ஒரு ஊழியன் அவர்களை வழி நடத்திக்கொண்டு போய் ஒரு அறையில் விட அவ்வறை மெழுகுவர்திகளால் நிரப்பப் பட்டிருந்தது. ஒரு மின்விளக்கு கூட எரியவில்லை.

 

வாசனின் கையை சுரண்டிய வாசுகி “ஏங்க கரண்டு பில்லை கம்மி பண்ணவாங்க இப்படி பண்ணி வச்சிருக்காங்க?”

 

அது ஸ்ரீவத்சனின் காதிலும் விழ புன்னகைத்தவாறு அவன் எமிலியோடு சென்று அவர்களுக்கான இடத்தில் அமர்ந்துகொண்டான்.

 

“இது கேண்டில் நைட் டின்னர் ஹால்ல டி.. ரொமான்டிக்கா உக்காந்து சாப்பிட ஏற்பாடு செஞ்சிருக்காங்க” வாசன் சொல்ல

 

அந்த இடத்தை சுத்திப் பார்த்தவள் மிஞ்சிப்போனால் பன்னிரண்டு மேசையும் ஒவ்வொரு மேசைக்கும் இரண்டு கதிரைகள் விகிதம் அந்த ஹாலை நிரப்பி இருக்க, ஒவ்வொரு மேசைக்கும் இருபது அடியேனும் இடைவெளி இருந்தது. ஒவ்வொரு மேசையிலும் மெழுகு வர்த்திகள் உயர்ந்த குவளைகளில் ஏற்றப்பட்டு சுற்றிவர மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மெழுகுவர்த்தியின் ஒளியில் மிளிர்ந்தது.

 

“நெருக்கி மேசைகளை போட்டால் முப்பது போடலாம் அறிவில்லாத பசங்க, நிறைய பேர் வந்து சாப்பிட்டா தானே! கல்லா களைகட்டும்” என்று வாசுகி மனதுக்குள் திட்ட

 

“எங்க உக்காரலாம்?” என்று கேட்டான் வாசன்.

 

“ஏங்க அவங்க மட்டும் போய் தனியா உக்காந்துட்டாங்க, அவங்க பக்கத்துல மேசையை இழுத்துப் போட்டு நாமளும் உக்காரலாம்” என்று வாசுகி சொல்ல

 

“அடியேய் நீ சரியான பட்டிக்காடா இருக்கியே! உன்ன வச்சிக்கிட்டு நான் என்னடி பண்ணுறது, இது என்ன ரோட்டு கட டீ ஸ்டோலா? நம்ம இஷ்டத்துக்கு மேசைய இழுத்துத்துப் போட?” வாசன் பல்லைக் கடிக்க

 

“அதிலென்னங்க தப்பு? உங்களால முடியலைன்னா? வேலை செய்யுற யாரையாச்சும் சொல்லுங்க செய்வாங்க” தான் சொல்வதை நியாயப் படுத்தினாள் வாசுகி.

 

“சினிமால ஆ..னு என்னத்தான் பக்குறியோ!” கடிந்தவாறே அவளை இழுத்து சென்றவன் ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ள கண்ணாடியிலான தடுப்பினூடாக ஆக்ரா நகரமே! இரவில் மிளிர்வது அழகாக தெரிந்தது.

 

“ஐயோ… ரொம்ப அழகாக இருக்கு” வாசுகி ஆர்ப்பரிக்க…

 

“அங்க பாரு தூரத்துல தாஜ்மகால் தெரியுது” என்று காட்ட வாசுகி அதில் லயிக்க, வாசன் உணவுகளை வரவழைத்திருந்தான். 

 

“அவர்களோடு சேர்ந்தே சாப்பிட்டிருக்கலாம்” என்று வாசுகி மீண்டும் ஆரம்பிக்க,

 

பொங்கிய வாசன் “அடியேய்… புருஷனும் பொண்டாட்டியும் யாரோட தொந்தரவும் இல்லாம தனியா கொஞ்ச நேரம் இருக்கத்தான் இந்த இடமே! அவங்க நடுவுல கரடியா போக போறியா?”

 

“அப்போ என்ன கரடின்னு சொல்லுறீங்களா?” கோபமாக வாசுகி முறைக்க

 

“இப்போ இவ கோபப்பட்டா ரொமான்டிக் மூட் பைட் மூட் ஆகிடும் வாசா…” என்று அவன் மனம் கூவ “ஆமா டி அவங்களுக்கு நாம கரடி எங்களுக்கு அவங்க கரடி” என்று சிரிக்க அவன் சொன்ன விதத்தில் வாசுகியும் சட்டென்று சிரித்து விட்டாள்.

 

அதன்பின் ஊட்டி விட்டவாறு, ஏதேதோ பேசியவர்கள் அந்த தருணத்தை இனிமையாக களித்தனர்.

 

வாசனின் நம்பிக்கை வீண் போகவில்லை. அவர்கள் அறைக்கு வரும் பொழுது அறை நேற்று போலவே! அலங்காரம் செய்யப்பட்டிருந்தது, சொல்லப் போனால் நேற்றைய அலங்காரத்தை  விட இன்றைய அலங்காரம் கண்ணை கவர்ந்தது.  ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக அலங்காரம் செய்வார்கள் போலும் என்று எண்ணியவாறே மனைவியை தூக்கிக்கொண்டு கட்டிலின் புறம் நடக்க,

 

“இருங்க துணி மாத்திக்கிறேன்” என்று வாசுகி அடம்பிடிக்க,

 

“அதெல்லாம் நான் மாத்திவிடுறேன் டி.. இன்னக்கி போல மதியம் வர தூங்க முடியாது. நாளைக்கு காலையிலையே! எந்திருக்கணும்” என்றவன் அவளை மேற்கொண்டு பேசவே! விடவில்லை.

 

நான்காவது நாள் ஆறு மணிக்கு ஸ்ரீவத்சன் மற்றும் எமிலிக்கு லண்டன் செல்ல விமானம் என்பதால் காலையில் டில்லி பயணம் செய்து நித்யா வீட்டிலி சிறிது நேரம் இருந்து மாலை விமான நிலையம் செல்ல முடிவு செய்திருக்க, காலை உணவுண்ட உடன் ட்ரைனை பிடித்திருந்தனர்.

 

நித்யா எமிலிக்கு கொண்டு செல்ல சில பொருட்களை வாங்கி வைத்திருக்க வாசுகியோடு சேர்ந்து அதை பேக் செய்துகொண்டிருக்க,

 

“ரொம்ப நன்றி …ண்ணா…” என்று ஸ்ரீவத்சன் தமையனின் அருகில் அமர

 

“டேய் என்ன டா.. நன்றியெல்லாம் சொல்லுற?”

 

“என் மேல கோபமா இருப்ப, கல்யாணத்த எடுத்து நடத்த மாட்டியோன்னு நெனச்சேன். ஆனா எல்லாத்தையும் சிறப்பா பண்ணி கொடுத்திட்டியே!”

 

“அடப்போடா… உன் மேல எதுக்கு நான் கோபப்படப் போறேன்”

 

“இல்ல ..ண்ணா… எமிலியோட அம்மா அப்பா ஒண்ணா இல்ல, அவ குடும்பத்துல அவ மட்டும்தான். அவ வளர்ந்தது தாத்தா பாட்டி கூடாதான்னு சொன்னா.. அம்மா வழித்தாத்தா காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களாம், அப்பா வழித்தாத்தா அரேஞ் மேரேஜ் பண்ணவங்களாம். ரெண்டு தாத்தா பாட்டியும் கடைசி வரைக்கும் ஒத்துமையா, சந்தோசமா வாழ்ந்துட்டுதான் இறந்தாங்கனும் சொன்னா. குடும்பம்னா இப்படி இருக்கணும், எல்லாரும் ஒண்ணா இருக்கணும்னு ஆசைப்படுவா, ஆசைன்னு சொல்லுறத விட ஏக்கம்னு சொல்லலாம். நான்தான் அவள லவ் பண்ணுறேன்னு போய் நின்னேன் அவ கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டா? சரினு சொன்னதும் சரி உன் வீட்டுல பேசு, உங்க ஊர்லதான் கல்யாணம் நடக்கணும்னு இல்லனா இது நடக்காதுனு ஒரேயடியா சொல்லிட்டா, இத்தனை நாள் குடும்பம் இருந்தும் நான் பெருசா கண்டுக்கல, இல்லாதவங்களுக்குத்தான் அருமைனு சொல்றது உண்மைதான்”

 

“எமிலிய பார்த்தா நம்ம குடும்பத்துக்காக மட்டும் உன்ன கல்யாணம் பண்ணா மாதிரி தெரியலையே!” வாசன் தாடையை தடவி யோசிக்க,

 

“அவ சின்ன வயசுல அவ தாத்தா கூட இந்தியா வந்திருக்கலாம், ரொம்ப புடிச்சிருந்ததாம். அதான் உடனே! ஓகே சொன்னா இல்லனா இவ்வளவு சீக்கரம் கல்யாணம் நடந்திருக்காது. அடிக்கடி இந்தியா வரணும்னு சொல்லுறா”

 

“நல்ல விஷயம்தானே!” வாசன் சந்தோசமாக சொல்ல

 

“எல்லோரும் ஒண்ணா இருந்த இந்த கொஞ்ச நாள்ல ரொம்ப சந்தோசமா இருந்தது. ஸ்ரீராமும் பிஸ்னஸ் லாஸ்ஸ்ல போகிட்டு இருக்கிறதா சொல்லுறான். நான் காசு கொடுக்கலாம்னு இருக்கேன் நீ என்ன சொல்லுற …ண்ணா?” என் பணம் நான் கொடுப்பேன் என்று கூறாமல் கொடுக்கட்டுமா என்று தமையனிடம் அனுமதி கேட்பது கூட ஸ்ரீவத்சனிடம் ஏற்பட்டிருக்கும் பெரிய மாற்றம்தான் என்று புரிய,

 

“அவன் ரொம்பவே! மாறித்தான் இருக்கிறான். சீக்கிரமா பணம் சம்பாதிக்கணும்னு யோசிக்காம தெரியாத தொழிலெல்லாம் பண்ணுறான் அதனாலதான் இப்படி நடக்குது” மதுவால்தான் என்பதை கூறப் பிடிக்காமல் இவ்வாறு கூற,

 

“ஹாஹாஹா அவன் பொண்டாட்டியும் ஒரு காரணம்னு சொன்னான் …ண்ணா… வீட்டை வித்தான்னு சொன்னபோ பெருசா தெரியல, ஆனா இப்போ வீடு இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு தோணுது. என்ன செய்ய. நீ அனுப்பி இருந்த காசையும் போட்டு அங்க ஒரு வீடு வாங்கி இருக்கேன். மிச்ச காசு எமிலிதான் போட்டா” பெருமூச்சு விட்டுக்கொண்டவன் “பணத்துக்கு ஏற்பாடு செய்ய மூணு மாசமாவது ஆகும் அது வரைக்கும் அவன கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்லு …ண்ணா… அவன் கிட்ட போன்ல பேசு. யாருமே! இல்லனு ரொம்ப வருத்தபட்டான்”

 

“நீயும் கூடத்தான் தனியா இருந்த யார் கூடயும் பேசாம உனக்கு வருத்தமா இருக்கலயா?” வாசன் கிண்டலாக கேட்டானா? தீவீரமாக கேட்டான் என்று கணிக்க முடியாத குரலில் கேக்க,

 

“பணம் சம்பாதிக்கிறது, வாழ்க்கையை என்ஜோய் பண்ணுறது மட்டும் போதும்னு இருந்துட்டேன் …ண்ணா. நீயும் அக்காவும் எவ்வளவோ! பண்ணி இருப்பீங்க அந்த நன்றி கூட இல்லாம” தொண்டை கமர பேச

 

“என்ன டா நன்றின்னு பேசி கிட்டு.. விடுடா.. உன்ன நம்பி ஒரு பொண்ணு வந்திருக்கா, கடைசி வரைக்கும் சந்தோசமா வாழுற வழிய பாரு”

 

“கண்டிப்பா …ண்ணா…அண்ணியும் ரொம்ப நல்லவங்க ….ண்ணா.. மன்னிச்சிக்க …ண்ணா.. உன் கல்யாணத்துக்கு வராம இருந்ததுக்கு” வார்த்தைக்கு வார்த்தை அண்ணா என்று அழைப்பவனை திட்டவா முடியும் சின்ன சிரிப்பினூடே! வாசன் பார்த்திருந்தான்.

 

இவர்கள் வராண்டாவிலிருந்து பேசிக்கொண்டிருக்கா, ஆத்மநாதன் காரியாலய அறையில் இருந்ததால் இவர்களின் பேச்சும் காதில் விழத்தான் செய்தது. தான் ஒரு நாளும் தனது சகோதரர்களோடு இவ்வாறு பேசியதே! இல்லை என்று நினைக்கும் பொழுது எங்கே! தவறு நேர்ந்தது? யார் தவறிழைத்தது என்று சிந்திக்கலானான்.

 

இங்கே! ரோஹன் வாசனை போலவே! ராமநாதனோடு ஒட்டிக்கொண்டு “பெரியப்பா பெரியப்பா” என்று அழைத்தவாறு பழங்கதைகளை பேசி தனக்குத் தேவையான எல்லா தகவல்களையும் பெற்றுக்கொண்டு கடையையும் கவனித்துக்கொண்டு அடுத்து செய்ய வேண்டிய வேலையில் இறங்கி இருந்தான்.

Advertisement