Advertisement

கிருஷ் பிசினஸ், ஆசிரமம், என அனைத்தையும் பார்த்துக் கொள்ள… மருத்துவமனைக்கு என ஒதுக்கப்பட்டிருந்த பணத்தை வைத்துக்கொண்டு ஹாஸ்பிட்டலை நல்லமுறையில் மேம்படுத்தினாள் அனு…

அனுவின் கனிவான பேச்சாலும், நல்ல மருத்துவ திறமையாலும், இன் பேஷன்ட்ஸ் எண்ணிக்கை அதிகமாகியது.

டாக்டர் அனுவிடம் சென்றால்… அவர்களது பேச்சிலேயே குணப்படுத்தி விடுவாங்க, என்று அந்த ஊர் மக்கள் பேசத் துவங்கினர்.

அனுவின் புகழ் அந்த ஊரோடு நில்லாமல் அக்கம்பக்கம் உள்ள கிராமங்களுக்கும் சென்றடைந்தது…

முதலில் காலை ஒன்பது மணியிலிருந்து மதியம் பன்னிரண்டரை மணி வரை மட்டுமே ஓபி பார்த்த அனு, அதிக மக்களின் வருகையினால் காலை எட்டு மணியிலிருந்து மதியம் இரண்டு மணிவரை பார்க்கத் தொடங்கினாள்… 

மாலை மட்டுமே நிர்வாகப் பணி, காலை ஒன்லி மருத்துவம் என்றானது… 

நாட்கள் நகர மாலையிலும் ஓப்பி பார்க்க தொடங்கினாள்…

காலை எட்டு மணிக்கு வந்தால், மருத்துவ பணி, நிர்வாகப் பணி, என்று மாற்றி மாற்றி பார்த்துக்க கொண்டு பத்து மணிக்கு மேல் தான் வீடு திரும்புவாள்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருந்தான் கிருஷ்…

இதற்கிடையில் பூஜாவிடம் முரளியை திருமணம் செய்துகொள்ள சம்மதமா என்று அனு கேட்க, அதற்கு முழு சம்மதம் தெரிவித்தாள் பூஜா.

ஆசிரமத்திலேயே திருமணம் மற்றும் ரிசப்ஷன் என கிருஷ் முடிவெடுக்க, அதற்கான ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்து வந்தனர் அந்த ஆசர்மத்தினர்.

முதல் அழைப்பை மேகலாமாவிற்கு கொடுத்து விட்டு, அனுவை சந்திக்க மாலை மருத்துவமனைக்கு வந்த முரளி மற்றும் பூஜா, இரவு ஒன்பது மணி வரை காத்திருந்தனர்…

நோயாளிகள் அனைவரையும் அனு சந்தித்து முடித்தபின், கிருஷை அழைத்து மூவருமாய் சென்று அனுவை திருமணத்திற்கு அழைத்தனர்…

முகமலர்ச்சியோடு அவர்களின் அழைப்பை ஏற்றவள், மனம் நிறைய இருவரையும் வாழ்த்தினாள். 

பூஜா முகம் சிவக்க… கல்யாண களையுடன் காணப்பட, அவர்களது மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்தாள் அனு.

பின்னர் பூஜாவும் முரளியும் சென்று விட, அவளுக்கு எதிர்ப்புறம் இருந்த நாற்காலியில் சாவதானமாக அமர்ந்தான் கிருஷ்… 

“என்ன இது அனு, மணி இரவு பத்து… இன்னும் வீட்டுக்கு போகாம, இப்டி எதுக்கு ஹாஸ்பிட்டல்லேயே இருக்க… இதனால நிர்வாக பணிக்கு புதுசா ஒருத்தர, உனக்கு கீழ நியமிக்க முடிவு செஞ்சிருக்கேன்…சம்மதம் தான..”, என்று வினவினான் கிருஷ். 

இந்த கடந்த சில நாட்களில் இருவருக்குமிடையே நல்ல நட்பு மலர, அனுவை அவளது விருப்பப்படி ஒருமையில் அழைக்கத் துவங்கி இருந்தான் கிருஷ்.

“வேண்டாம் கிருஷ்ணா… எனக்கு இந்த வேலையால தான், பழைய கசப்பான நினைவுகள மறந்து சந்தோஷமா இருக்கேன். நானே பாத்துக்கறேன் ப்ளீஸ்…”, என்று அவள் கெஞ்சளாக கேட்க,

அவள் கேட்ட விதத்தில், சரி என்று கூறுவதைத் தவிர வேறு வழி இல்லாமல் போனது கிருஷிற்க்கு… 

சரி என தலை அசைத்தவன், “ஆனா தூக்கம் கெட்டு, உடல வருத்தி வேல பாக்காத”, என்று கண்டிப்பான குரலில் கூறினான்.

புன்னகைத்தபடி “அதெல்லாம் சரி, உங்க திருமணம் எப்போ”, என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி வினவினாள் அனு.

சகஜமாக பேசத் துவங்கி இருந்தபோதும் தன்னை விட மூன்று வயது பெரியவனாய் அவன் இருக்க, மரியாதையாகவே பேசினாள்…

“ஹே… இது நீ வரைந்த படமா… ரொம்ப அழகா இருக்கு”, என்று சம்மதமில்லாமல் பேசியவன், அவள் வரைந்த ஓவியத்தை ரசித்துக்கொண்டிருந்தான். 

“என்ன இது கிருஷ்… நான் என்ன கேட்கறேன் நீங்க என்ன பேசுகிறீர்ங்க”, என்று அவள் எரிச்சலுற.

“சம்பந்தம் இருக்கு”, என்றான்… 

அவனை முறைத்தபடி, “அப்படி என்ன சம்பந்தம்”, என்றாள் அனு கடுப்பாய்…

“இதுவர நான் யார்கிட்டயும் சொல்லாதது… எனக்குள்ள இருக்கும் ரகசியம்… என் காதல் காவியம்”, என்றான் கிருஷ் வருத்தமான குரலில்.

“என்னது… நீங்க லவ் பன்றீங்களா… உங்களுக்கு அதெல்லாம் கூட தெரியுமா… நம்ப முடியலையே”, என்று வியந்தவள்..

“சரி சொல்லுங்க, யார் அந்த பொண்ணு”, என்று, அவன் கூறியதை நம்ப இயலாமல், அவளது மையிட்ட விழிகளை அழகாய் விரித்து வினவினாள்.

அவன் மௌனமாய், அவள் வரைந்த ஓவியத்தை ரசனையுடன் பார்த்திருக்க… 

“இதுல் அப்டி என்ன இருக்கு”, என்றாள் சலிப்பாக… 

“என் லவ்வர் ரொம்ப அழகா ஓவியம் வரைவா. பார்ப்பத அப்படியே படமா வரைந்துடுவா”,…

“இந்த ஓவியத்தை பாக்கும் போது, அவ ஞாபகம் வருது”, என்றான் கிருஷ்.

“அவங்க எங்க இருக்காங்க”… 

“கேரளாவில்… ஆனா தமிழ் பெண்தான்” என்றான்…

“அவ்வளோ தூரத்துலயா… சரி அவங்க பேர சொல்லுங்க”…

“அத பிறகு சொல்றேன், நேரமாகுது… நீ முதல்ல வீட்டுக்கு போ”, என்று அவன் கூற..

“முடியவே முடியாது… கதைய சொல்லுங்க, ஆர்வமா இருக்கு”, என்று சிறுபிள்ளை போல அவள் கேட்க,

“நமக்காக தான் முரளியும், பூஜாவும், வெளிய வெயிட் பன்றாங்க. ஒழுங்கா எழுந்து வா”, என்று நகர்ந்தான் கிருஷ்… 

“சரி… நாளை நிச்சயம் சொல்லனும்”, என்று அவள் அவனை பின்தொடர, 

“கண்டிப்பா, ஆனா தயவு செஞ்சு இத யாரிடமு உளறிடாத”, என்றான் கிருஷ்.

இவர்கள் வருவதை கூட அறியாமல்,.. பூஜாவும், முரளியும், பேசிக்கொண்டிருக்க..

“உங்க ரொமான்ஸ் எல்லாம் அப்புறம் வெச்சுக்கோங்க, இப்போ கிளம்பலாம்”, என்றான் கிருஷ்.

“இவரா இப்டி பேசுறார்”, என்று வியந்த முரளி, விடுவிடுவென கிளம்பினான்…

முரளி, அனுவிடம் கார் சாவியை பெற்றுகொண்டு செல்ல… 

“இனிமேல் முரளி தான் உன் டிரைவர்”, என்றான் கிருஷ்.

“எதுக்கு கிருஷ்ணா… நானே பார்த்துக்குவேன்”, என அனு கூற,

“நேரம் காலம் இல்லாம ஹாஸ்பிட்டல் வர, இந்த மருத்துவமனைய மேம்படுத்த புது திட்டம் வேற தினம் தினம் யோசிக்கர… இதுபோல பிஸியான வேலையில் கவனம் சிதறும். நீ வண்டிய ஓட்டுவது நல்லதல்ல”, என்றான் சிறு புன்னகையோடு… 

மறுபேச்சு பேசாமல் அனு காரில் எற, பூஜாவும் ஏறிக்கொள்ள,

கார் கிளம்பும் முன் “கிருஷ்ணா” என்று அழைத்து, “மிக்க நன்றி”, என்று கூறினாள்.

“இப்போ எதுக்கு”, என்றான் குழப்பமாக.

“அனைத்துக்கும்”….

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஓர் அடர்ந்த தென்னந்தோப்பில், பூஜாவும் முரளியுமாக நடந்துகொண்டிருந்தனர்.

முரளி பூஜாவின் கைகளை பிடித்து, “பூஜா, நான் உன்ன மனமாற நேசிக்கறேன். இன்று நேற்றல்ல உன்ன பார்த்த நாள் முதல்ல இருந்து… ஆனா அத சொல்லி நம்மிடமிருந்த நட்பு போயிடுமோன்னு பயத்துல, இவ்வளோ நாள் அமைதியா இருந்தேன்”, என்றான் முரளி.

“நீ உன்ன அறியாமலே, உன் காதல பலமுறை என்கிட்ட வெளிப்படுத்தியிருக்க முரளி. சொன்னா தான் காதலா”, என்று பூஜா புன்னகைக்க,

“உனக்கும் என்மேல காதல் இருக்கா”, என்று முரளி அவளையே பார்த்தவாறு வினவ,

“ஆமா இப்போ கேளு, திருமண நாளே முடிவாகிடுச்சு”, என்று கேலியாய் அவள் தலையில் அடித்து கொண்டாள், 

“சரி முதல்ல  உன் காதல சொல்லு, அப்புறம் என் விருப்பத்தை, நான் கூறலாமா, வேண்டாமா னு யோசிக்கிறேன்”, என்றாள் பூஜா.

“எப்படி சொல்றது”, என்று யோசிப்பதை போல, வானத்தை பார்த்தான் முரளி.

“அட!!, சரியா போச்சு போ,… எத்தன்ன படம் பார்திருப்பா… இத போய் என்கிட்ட கேட்கற,” என்று முகத்தை திருப்பிக் கொண்டு , கைகளை கட்டி முகத்தை திருப்பிக் கொண்டாள் பூஜா.

திடீரென்று ரோஜா மலர் இதழ்கள் வானத்திலிருந்து மலைபோல் பொழிய, ஓர் பூச்செண்டு மேலிருந்து விழுந்தது, அதை லாவகமாக பிடுத்தான் முரளி.

சிவப்பு நிற ரோஜாக்களை கொண்ட அந்த அழகிய பூச்செண்டை, பூஜாவிடம் நீட்டியவன்…”i love you” என்றான்.

இதை சற்றும் எதிர்பாராதவள்… முகம் சிவக்க, சிலை போல் நின்றிருந்தாள்.

“will you marry me pooja”, என அவன் ஆர்வமாக வினவ,

இன்ப அதிர்ச்சியில் பேச மறந்தவலாய், கண்கள் மின்ன, மலர்ந்த புன்னகையோடு பூச்செண்டை மட்டும் வங்கிக் கொள்ள,

“ஏஏஏஏஏஏ”…..என்று பலத்த கைதட்டல் வர துவங்கியது, சற்று குழப்பத்துடன், எப்படி எங்கிருந்து என அவள் சுற்றி சுற்றி பார்த்தாள் பூஜா.

“மேலே பார்”, என்றான் அவன்.

அவர்களுடன் ஆசர்மத்தில் வாழும் இளம் வயதினர், அந்த உயரமான தென்னை மரத்திலிருந்து, கைதட்டிக் கொண்டிருந்தனர்… இந்த ஏற்பாடுகள் எல்லாம் அவர்களின் துணைகொண்டு முரளி செய்ததேயாகும்.

முரளியை மீண்டும் பார்த்த பூஜா, என்ன செய்வதென்று அறியாது நிற்க.

“நான் சொல்லிட்டேன், இனி உன் விருப்பத்தை சொல்லலாமே”, என்றான் கொஞ்சலாக.

“i love u too, murali”  என்று அவனை பூஜா அனைத்துக் கொண்டாள்.

திரும்பவும் வண்ண மயமான பூக்கள் மழையும், கைதட்டலும் கேட்க, பூஜாவை தூக்கி சுற்றினான் முரளி.

தொடரும்……

Advertisement