Advertisement

ஒவ்வொரு மாலையும், பிரபா கார்த்திக்குடன் நேரம் செலவழிப்பது வழக்கமாகிவிட்டது,…

முதலில் அது சனாவிற்கு சற்று வருத்தத்தை அளித்தாலும்… ஆதி அவளுடன் சேர்ந்து நூலகம், பூங்கா, என அவள் செல்லும் இடத்துக்கு எல்லாம் கம்பெனி கொடுத்தான்…

அது அவளது தனிமையை விரட்ட, நாட்கள் இனிமையாகவே நகர்ந்தது

“என் நண்பர்களிடம் இருந்து ஒரு செய்தி வந்தது பிரபா” என்றான் கார்த்திக்…

“என்ன செய்தி”, என்று பிரபா கேட்க,

“எல்லாம் நம் சனாவை பற்றி தான்”, என இழுத்தான்…

“என்னது….. சனாவும், ஆதியும் நண்பர்களாக இருப்பது பற்றியா”, என்று முறைத்தாள்..

“ஆம், எப்படி தெரியும்!!!…. சரியாக சொல்கிறாயே”, என்று வியந்தான்.

“ஒரு பெண்ணும், ஆணும், கொஞ்சம் சிரித்து பேசிக் கொண்டால் போதுமே… அது இந்த உலகம் முழுவதும் ஒரு இடம் விடாமல் பரவி விடும்”, என்றாள் அழுப்பாக.

கார்த்திக், சிந்தனையோடு பார்க்கவும்…

“அவர்கள் இருவரும், நல்ல நண்பர்கள் மாமா. தினமும் மாலை, சனாயா என்னுடன் தான் இருப்பாள். இப்போதெல்லாம் நான் உங்களுடன் வந்து விடுவதால், ஆதி அவளுக்கு நல்ல நண்பனாகவும், படிப்பிற்கு துணையாகவும், இருக்கிறான்”, என்றாள்.

“பாவம்… தாய், தந்தை, உறவினர், என யாரும் அருகில் இல்லாத பெண், எனது சுயநலத்திற்காக அவளை தனியே விட்டுவிட்டு, உங்களுடன் வந்து விடுகிறேனே, என எனது மனம் உறுத்திக்கொண்டே இருந்தது. ஆதி வந்த பின் தான் என் மனம் சாந்தம் அடைந்து”,  என்றாள்.

“எல்லாம் சரிதான் பிரபா, ஆனால் நாம் எப்படி ஆதியை முழுமையாக நம்புவது… அவன் மிகவும் பெரிய குடும்பத்தை சார்ந்தவன். பணம், புகழ், என்று எல்லாம் உள்ளது… அனைத்துக்கும் மேல் உடல் முழுவதும் திமிர், ஒருவரை கூட மதிப்பதில்லை”, என்று வருத்தமான குரலில் அவன் கூற,

“சனாயா இன்னும் சின்ன பிள்ளை அல்ல கார்த்திக், அவள் பார்த்துக்கொள்வாள்”, என்றாள் பிரபா.. 

“அது மட்டுமல்ல, சனாவும், நாமும் எந்த விதத்திலும் ஆதியை விட தாழ்ந்தவர்கள் அல்ல”, என்றும் கூறினாள்…

“சனாயா,.. அன்பான, அழகான பெண். பார்ப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக அவளிடம் பழக எண்ணுவர். மித்ரன் அவளிடம் மிகுந்த ஆசை வைத்துள்ளான். அவனிடமிருந்து அவளை காப்பதே கடினமாக உள்ளது, இதில் ஆதி வேறு”, என்றான் மீண்டும், அவர்களது நட்பை வெறுப்பவனாய்.

“நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லையா, ஆதி சனாயாவுடைய நன்பன். அவ்வளவு தான்”……

“நீங்கள் நினைப்பது போல், ஆதி மோசமானவன் அல்ல. என்னிடம் பலமுறை பேசியுள்ளான். எனக்கு அப்படித் தோன்றவில்லை”, என்று உறுதியாக உரைத்தாள். 

இனி பேசிப் பயனில்லை, என்று கார்த்திக் அமைதியானான்.

அவன் அமைதியை உணர்ந்த பிரபா, “சரி விடுங்க மாமா, நாம் இன்றாவது சனாயா வீட்டிற்கு சென்று… அவளை பார்த்துவிட்டு வருவோம்”, என்றாள் பிரபா.

பிரபாவை மட்டும் அவள் வீட்டில் விட்டுவிட்டு, அங்கிருந்து கிழம்பினான்

கார்த்திக்.

“இப்போதாவது என் நினைவு வந்தே”, என்று தன் வீட்டிற்கு வந்த, தனது அருமை  தொழியை கட்டிக்கொண்டாள் சனாயா.

“சாரி சனா”, என்று பிரபா, தனது தவறை உணர்ந்தவளாய் மன்னிப்பு கூறினாள்.

பின் இருவரும், தங்கள் கதைகளை வழக்கம் போல் பேசிக்கொண்டிருக்க, வள்ளியம்மையின் சூடான பச்சியும், டீ யும், வரவே…. உர்சாகத்துடன் அதை சுவைத்தனர்.

***********

நாட்கள் வேகமாக நகர, தூரத்தில் வாழும் தனது தந்தையிடம் பேச ஆவலாக இருந்தாள் சனாயா. ஆனால் அவளது தந்தையோ…

“ஹலோ சனா, இன்று வேலை அதிகம்… நாளை பேசலாம்”, என்று கூறி விட்டுச் சென்றார். அவளது பதிலுக்குக் கூட காத்திருக்கவில்லை.

‘நமக்கு மட்டும், ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது… வாரத்தில் ஒருநாள், ஒரு ஐந்து நிமிடம், என்னுடன் பேசுவதில் இவருக்கு என்னதான் கஷ்டமோ’, என வருந்தினாள் சனா.

‘இப்போதெல்லாம், பிரபாவும் வாரத்துக்கு ஒரு முறை தான் இங்கு வருகிறாள். பள்ளியில் படிக்கும்போது 24 மணி நேரமும் ஒன்றாக தான் இருப்போம்”, என நினைத்தாள்.

‘நமக்கென யாருமே இல்லையா, என்ன கொடுமை இது. இந்த வள்ளியம்மா வேறு, நாலு நாள் அவர் மகள் வீட்டிற்கு சென்று தங்கி இருந்துவிட்டு வருகிறேன், என சென்றுவிட்டார்கள். இனி என்ன செய்வது’, என்று, நினைக்க நினைக்க, அவள் மனம் வாடியது.

‘அழுகையே வந்து விடுமோ’, என்று அவள் நினைத்த மறுகணம், அவளது மொபைல் சிணுங்க… யார் என்று பார்த்தாள்..

அதில்.. ஆதி என்ற பெயரை பார்த்தவுடன், அவளது வாடிய முகம் மலர்ந்ததை அவளே அறியமாட்டாள். 

“சொல் ஆதி, நல்லவேளையாக அழைத்தாய், எனக்கு இங்கு தனிமையில் பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது. ஹாஸ்டல் நன்றாக இல்லை, என வீடு எடுத்தது தவறு என்று தோன்றுகிறது”, என்றாள் சனாயா வருத்தத்துடன்.

‘இரவு பத்து மணிக்கு அழைக்கிறோமே, என்ன சொல்லுவாளோ’, என்று பயந்துகொண்டே அழைத்தவனுக்கு, இவளது பேச்சு இன்பமான அதிர்ச்சியைத் தந்தது.

நேரம் போவதே தெரியாமல், இருவரும் பேசிக் கொண்டே இருந்தனர்.

“சரி ஆதி, எனக்கு தூக்கம் வருகிறது”, என்று சனா முடிக்க,

“உன்னை தூங்க விட வேண்டுமென்றால், நான் சொல்வதற்கு நீ சம்மதம் தெரிவிக்க வேண்டும்”, என்றான் ஆதி.

“கண்டிப்பாக … நீ கேட்டு செய்யாமல் என்ன”, என்று அவள் கூற,

“இங்கு அருகில் ஒரு மலை உள்ளது, அங்கே உள்ள டீ எஸ்டேட்டில் தான், என் நண்பன் இருக்கிறான். உனக்குதான் இயற்கை காட்சிகள் பிடிக்குமே, அங்கு நாளை சென்று சுற்றிப் பார்த்து விட்டு வரலாம்”, என்றான்.

“விளையாடாதே ஆதி”, என்று அவள் கடிய,

உண்மையில் அவளுக்கு அவன் கேட்டதில் நம்பிக்கை இல்லை, விளையாட்டாக தான் எண்ணினாள்.

“நான் இதுவரை நண்பர்களோடு வெளியே சென்றதில்லை சனா. அதனால் தான் ஆசையாக கேட்கிறேன். நாளை ஒருநாள் மட்டும் தான் சனா… ப்ளீஸ்…”, என்று கெஞ்சினான்.

தான் சோகமாக இருந்த வேளையில், தன்னை மகிழ்வித்த தனது நண்பன் ஆதியின் வேண்டுகோளை மறுக்க மனமின்றி சம்மதித்தாள் சனாயா.

மறு நாள் காலை, நாலு மணிக்கெல்லாம் இருவரும் கிளம்பினர். ஆதியின் பி.எம்.டபள்யூ காரில் அதிவேகமாக பறந்தனர். 

‘பிரபாவை போல, தனக்கு இன்னொரு நல்ல நண்பன் கிடைத்து விட்டான்’, என்ற மகிழ்ச்சியில் தன் பயணத்தைத் தொடர்ந்தாள் சனாயா.

“இப்போது நாம் செல்லும் இடம் மிக அழகாக இருக்கும் சனா, உனக்கு ரொம்பவே பிடிக்கும். உன்னிடம் நான் கூறினேன் அல்லவா உன்னைத் தவிர எனக்கு ஒரே ஒரு நண்பன் தான் என்று, அவன் அதனருகே தான் உள்ளான். அவனையும் பார்த்துவிட்டு வருவோம்”, என்றான்.

‘இவனுடன் பழகி, ஒரு மாதம் கூட ஆகவில்லை. இந்நிலையில் இவனுடன் தனியே இவ்வளவு தூரம் பயணிப்பது சரிதானா’, என்று சிந்தித்தாள் சனாயா.

எனினும், தனது மனதில் அவனைத் தன் உயிர் நண்பனாகவே நினைத்த காரணத்தினால், அவளால் அவனை தவறாக நினைக்க இயலவில்லை.

இருவரும் ஒரு மாபெரும் ரிசார்ட்டிற்கு சென்றனர்…..

“இங்கே எதற்கு ஆதி வந்தோம்”, என்று அவள் கேட்கும் முன்,

“இங்கிருக்கும் மலையிலிருந்து பார்த்தால், நகரம் மிக அழகாக தெரியும். அதுமட்டுமின்றி இங்கே விளையாட நிறைய இடம் உள்ளது”, என்றான்.

அவன் கூறியது போலவே, அந்த இடம் மிகவும் அழகாகவும், அமைதியாகவும் இருக்க… இருவரும் அங்குள்ள புல் தரையில் நடந்தவாரே இயற்கையை ரசித்தனர்.

சனாயா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். பள்ளியில் வருடத்திற்கு ஒருமுறை சுற்றுலா அழைத்துச் செல்வார்கள், அதுவும் கடைசி நான்கு வருடம் அழைத்துச் சொல்லவே இல்லை. 

பிறகு ஒருமுறை கார்த்திக், பிரபா, வீட்டிற்கு சென்று ஆனந்தமாக இருந்தாள். அவ்வளவுதான்… இதை தவிர வேறு எங்கும் செல்லாத அவளுக்கு, இந்த அனுபவம் ரொம்பவே ஆனந்தத்தை தந்தது.

‘சனாயா மிக அறிவானவள், அழகானவள், என்று தெரியும். ஆனால் குழந்தை போன்ற மனம் படைத்தவள், என்பது இப்போதுதான் தெரிகிறது’, என்று நினைத்தான் ஆதி. 

‘அவள் ஆனந்தமாக இருப்பதற்கு, நாமும் ஒரு காரணம் தான். இங்கு அழைத்து வந்ததால் தான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள்’, என்று நினைத்து பூரித்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் ஆதி… நான் இவ்வளவு சுதந்திரமாக, சந்தோஷமாக, இதுவரை இருந்ததே இல்லை. எல்லாம் உன்னால் தான்”, என்று அவள் கூற,

“தெரியும் சனா,… சரி வா, எதாவது சாப்பிடலாம்”, என்றான்.

“இல்லை ஆதி. நான் இந்த மலையில் இருந்து, நகரத்தை பார்க்கிறேன். நீ கூறியது போலவே மிக அழகாக உள்ளது. நீ வேண்டுமானால் போய் இருவருக்கும் சேர்த்து சாப்பிட ஏதாவது வாங்கி வா. இங்கேயே சாப்பிடலாம்”, என்றாள்.

அந்த இடம் பாதுகாப்பானது தான். ஆனால் அன்று பார்த்து, அங்கே ஆள் நடமாட்டமே இல்லை. 

சிறிது நேரம் யோசித்துவிட்டு, “சரி ஜாக்கிரதையாக இரு சனா. நான் உணவு வாங்கிவர, அதிகபட்சம் பதினைந்து நிமிடம் தான் ஆகும்”, என்று கூறி சென்றான் ஆதி.

தொடரும்……..

Advertisement