Advertisement

“நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்”, என்றாள் சனாயா.  

“நான் எப்போதும் உன்னுடன் தான் இருப்பேன் சனா”, என்று பிரதாப் அவளது கைகளை பிடித்துக் கொள்ள,

பின்னர் சனாயா பிரதாப்பை கட்டிக்கொண்டாள், சுற்றி பல பேர் இருந்ததை இருவருமே கண்டுகொள்ளவே இல்லை.

“சாரிமா… இந்த முறை உன்னை காக்க வைத்துவிட்டேன்”, என்று இறுகக் கட்டிக்கொண்டான் பிரதாப்.

“எவ்வளவு காலமானாலும் காத்திருப்பேன்”, என்றாள் சனாயா.

ஆதியும், அவனது அன்னையும் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த மித்ரன். இப்போது சனாயா, பிரதாப்பின் உரையாடலையும் கேட்டான்.

மித்ரனிடம் திரும்பிய சனாயா, அவன் நம்மை தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்துகொண்டு. அவனருகே சென்று,…..

“என்ன மன்னிச்சிருங்க, ஒருவேளை நீங்க எனக்காக நல்லவனா மாறியும், நான் கிடைக்காததால இப்படி கெட்டவனா மாறியிருந்தா, ரொம்ப சாரி”…

“இஷ்டம் போன்ற வாழ்க்கை, எவ்வளவு செலவு செஞ்சாலும், கேட்க ஆள் இல்லை. சுதந்திரமான வாழ்வு. அனைத்துக்கும் மேல் அன்னையின் அரவணைப்பு. இவ்வளவு கிடைத்தும் அதை எல்லாம் தவறான முறையில பயன்படுத்தி…., அது போதாதுன அனைத்து சொத்தும் வேணும்ன்னு, வேறொருவரோட காதலி வேணும்ன்னு கேட்கறீங்க”,….

“இதெல்லாம் தப்பு, உன்ன மாத்திக்கோ…. அப்டின்னு எல்லாம் நான் உபதேசம் செய்ய வரல, நான் உங்களிடம் கேட்பது ஒன்றுதான்”…

“எனக்கு ஒரு அழகான வாழ்வு கிடச்சிருக்கு, காரணம் என் பிரதாபும்

ஆதியும் தான். அவங்களோட சந்தோஷமா வாழ ஆசப்படுறேன். எங்கள நிம்மதியாக வாழ விடுங்க”, என்றாள் சனாயா.

“நீ கண்டிப்பா எங்கள புரிஞ்சிகிட்டு, எங்கள்ல ஒருவனா மாறுவேன்னு நம்புறேன்… அண்…. அண்ணா”, என ஆதி கூற, 

அவன் அண்ணா என கூறியதும்… மித்ரனின் மனசாட்சி, “நீ இன்னும் திருந்தல்ல……, நீ எல்லாம் மனிதனே இல்ல”, என்றுது.

ஆதியின் அன்னையோ, ஆதியின் செயலை கண்டு வியந்தார்…

பின்னர் மித்ரனின் கைகட்டையும், வாய்க்கட்டையும், அவிழ்த்து விட்டான் ஆதி.

எங்கே, எல்லா உண்மையையும் மித்ரன் உலறிவிடுவானோ, என்ற பயத்தில் செபாஸ்டியனும், மித்ரனின் அன்னையும் தடுக்க வர,

அவர்கள் வருவதை கவனித்த மித்ரன்… “நான் எதையும் சொல்லிட மாட்டேன், இப்போ எனக்கு தேவை அமைதி தான், அதுக்காக நான் மாறிட்டேன்னு நினைக்காதீங்க”, என்றான்.

மேலும் தொடர்ந்து, “நான் பாரிஸ் செல்ல, ஏற்பாடு செய்யுங்க… ஒரு மாதம் இருந்துட்டு வரேன்… நா மனசு மாறி, எல்லா உண்மையையும் சொல்றதுக்குள்ள, இங்கிருந்து போறேன்”, என்று தன் அன்னையிடம் கூறி, தனது அடியாட்களுடன் வெளியேறினான் மித்ரன்.

“அப்படி என்ன தான், இவன் சொல்லிடுவானாம்”, என்று நினைத்த வண்ணம், சனாயாவும், ஆதியும் நின்றிருந்தனர்.

மித்ரன் தனது அடியாட்களுடன் வெளியேறியப்பின்… ஆதி, அவன் அன்னை, தந்தை, மற்றும் செபாஸ்டியன், சில அடியாட்களுடன், முன் சென்றான்… அவர்களை தொடர்ந்து, சனாயாவும், பிரதாபும், ஒன்றாக சென்றனர்.

“என்னால நம்ப முடியல பிரதாப், எனதுயிர் தோழியா, நான் இவ்வளோ காலம் நம்பி இருந்த பிரபா… அவ தப்பிக்க ஆதிய அடிச்சிட்டா… துரோகம்… நம்பிக்கை துரோகம்… என்னால அவள மன்னிக்கவே முடியாது”, என்று கூறிக்கொண்டே, பிரதாப்பின் தோளில் சாய்ந்து நடந்தாள் சனாயா.

“விடுடா சனா, சாப்பிட எதையாவது தந்தானா, உன் முகத்த என்னால பார்க்க முடியல, அவ்வளவு வாட்டமா இருக்கு”, என்று பிரதாப், பேச்சை மாற்ற,

சிறு புன்னகையுடன்… “நீங்க என் பக்கத்துல இருந்தா, எத்தனை துன்பங்களையும், எளிதா கடந்து வர, என்னால முடியும்”, என்றாள்.

“கார்த்திக், பிரபா திருமணம், இன்னும் ஆரே மாதத்தில் வந்துரும், அதன்பின்… நாமும் திருமணம் செஞ்சுக்களாம்”, என்றான் பிரதாப்.

”அவளை பற்றி பேசாதீங்க பிரதாப்”, என்று சனாயா எரிச்சலுற,

“சரி சரி… சாரி”, என்று கூறிவிட்டு, அவளை தனது இரு கைகளாலும் தூக்கிக் கொண்டான்.

“என்ன செய்றீங்க”,… என அவள் பதற,

“தூக்கிக்கிட்டேன்”… என்றான், குரும்புப் புன்னகையுடன்.

“தெரியுது… விடுங்க”,… என அவள் சிணுங்கினாள்.

“முடியவே முடியாது… நீ களைப்பா இருக்க… இவ்வளவு தூரம் நடந்தா, உடம்பு நோகும்”, என்றான்.

°°°°°°°°°°°°°°°°°

அந்த நான்கு மணி அதிகாலை பொழுதில்….

சனாயாவையும், பிரதாப்பையும், சனாயாவின் வீட்டில், பத்திரமாக சேர்த்துவிட்டு, தனது வீட்டை அடைந்தனர் ஆதியும், அவன் பெற்றோராய் நடிப்பவரும்.

ஆதி, வீட்டிற்குள் நுழைய… மித்ரன் இரு பொருட்களுடன் வெளியே வந்தான்.

எதுவும் கூறாமல், அமைதியாய் மித்ரானை நோக்கினான் ஆதி…

“நான் ஒரு மாதம் பாரிஸ் போய்ட்டு வரேன்”,… என்று ஒற்றை வரியில் கூறிவிட்டு, தனது காரை பறக்க விட்டான் மித்ரன்.

“எங்களை மன்னித்துவிடுப்பா ஆதி, ஒரு தந்தையா, நான் உன்கிட்ட பாசம் காட்டியதே இல்ல… உன் அம்மாவும் தான்”, என்றார் ஆதியின் தந்தை (தந்தையாக நடிப்பவர்).

“பரவாயில்லை அப்பா”, என கூறிவிட்டு, தன் அன்னையை பார்த்தான், அவரின் அன்பான பார்வை படர, மனம் லேசானது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

“என்ன சனா, வீடு பூட்டியிருக்கு, வள்ளியம்மை எங்க”, என்றான் பிரதாப்.

“தெரியலையே… ஆனா என்கிட்ட ஒரு சாவி இருக்கு” என, தனது சாவியை கொண்டு, கதவை திறந்து உள்ளே சென்றாள் சனாயா.

வள்ளியம்மை எழுதி வைத்திருந்த கடிதம், மேஜையில் இருக்க… அதை எடுத்து படித்தாள்.

“எனது தோழி ஒருத்தி மரண படுக்கையில் இருக்கிறாள் பாப்பா, நான் அவளை காண செல்கிறேன்… தவறாக நினைத்து கொள்ளாதே கண்ணு… ஒரு மாதத்தில் திரும்பி வந்துவிடுவேன்… அதுவரை பிரதாப் ஐயா வீடு, அல்லது பிரபா பாப்பாவுடன் இருடா சனா” என எழுதி இருந்தது.

“சூப்பர்… அப்போ, நாம் இருவர் மட்டும் தனியே  இருக்க போகிறோமா”, என்றான் பிரதாப்.

“ஆம்”, என்று ஒரு சந்தேக பார்வையுடன், தனது அறைக்குள் நுழைந்தாள் சனாயா.

“எங்க போற, எனக்கு ரொம்ப பசிக்குது”, என்றான்.

“கொஞ்சம் பொறுங்க, உடை மாற்றி வரேன்”, என தனது அறைக்குள் சென்றவள்… வெகு நேரமாக, அந்த பாலடைந்த கட்டிடத்தில் ஒரு காட்டிற்குள் இருந்ததாள், நன்கு குளித்து உடை மாற்றி வர சற்று தாமதமானது.

அதற்குள் வேறொரு அரைக்குள் சென்று முகம் கழுவி வந்த பிரதாப், ருசியான உணவுகளை செய்து, அழகாய் மேஜையில் அலன்கறித்துவிட்டு, சனாயாவிற்காக காத்திருந்தான்.

சனாயா வெளிய வரும் சமயத்தில், இன்னும் இருட்டியே இருந்த அந்த அதிகாலை பொழுதில். அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு, சில மேலுக்குபத்திகளை ஏற்றி, டைன்னிங் டேபிளில் வைத்தான்.

அறையிலிருந்து வெளியே வந்த சனா, பிரமிப்புடன் பார்த்து நின்றாள்.

அந்த ஆரஞ்சு ஒளியில்… மிளிரிய அவளது அழகில் அசந்தவன்… “வாருங்கள் ராணி, உங்களது இரவு உணவு தயாராக உள்ளது” என புன்னகையுடன், அவள் அருகில் வந்து, நாற்காலியை இழுத்து போட்டு, அவளை அமறவைத்தான்.

அந்த அமைதியான அறையில், இருவர் மட்டும் அமர்ந்து உண்ணத் துவங்கினர்.

“உங்களுக்கு தெரியாத விஷயம் ஏதாவது இருக்கா”, என்றாள் சனாயா.

சிரித்துக்கொண்டே “ஏன்”, என்றான்.

“பின்னே…. இந்த சிறு வயதிலேயே, பிசினஸ் செய்கிறீங்க, சமைக்கிறீங்க, எல்லா பிரச்சனைகளையும் அழகா சமாளிக்கறீங்க”, என்று வியப்புடன் வினவினாள் சனாயா.

இரவு உணவு முடித்தபின், தன் அறைக்குள் சென்று படுத்த சனாயா. மிகுந்த கலைப்புடன் இருந்ததால் சீக்கிரமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்.

அவள் தூங்கும் அழகை வெகுநேரம் ரசித்துக்கொண்டு அவளருகில் நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதாப்.

நன்கு விடிந்து வெளிச்சம் பரவ துவங்க…மிகுந்த கலைப்பில் இருந்தமையால்….வேறொரு அறைக்கு சென்று உறங்கிவிட்டான்.

“குட்மார்னிங் பிரதாப்”, என்று காபி கப்புடன் பதினோரு மணிக்கு அவனை எழுப்பினாள் சனாயா.

“குட்மார்னிங்”, என்று கூறிக்கொண்டே எழுந்த பிரதாப்பின் கண்கள், சட்டென விரிந்தது….

காபி கப்புடன், புடவை உடுத்தி, முகம் மலர்ந்து நின்றிருந்த தனது காதலி சனாவை பார்த்து, மனம் குளிர்ந்தான் பிரதாப்.

“ரொம்ப அழகா இருக்க சனா… என் சனா இவ்வளோ அழகுன்னு, எனக்கு இன்னிக்கு தான் தெரியுது”….  என்று அவள் கையில் இருந்த காபி கப்பை வாங்கிக் கொண்டு, அவள் கையை பிடித்து தன் அருகே அமர்த்தினான்.

அவன் மீது சாய்ந்து கொண்ட சனாயா, “லவ் யூ பிரதாப், சீக்கிரமே திருமணம் செய்து கொள்ளலாம்”, என்றாள்….

“கண்டிப்பா சனா, லவ் யூ டூ”, என்றான் பிரதாப்.

சனாயா தனது பிரதாபிர்கென, செய்து வைத்திருந்த காலை உணவை… இருவருமாய் அமர்ந்து ருசித்துவிட்டு, பிரதாப் வீட்டுக்கு கிளம்பினார்.

வழக்கம்போல் தனது தந்தையின் அனுமதியுடன் சனா கிழம்ப….

எப்போதும் போல், ஆனந்தமாய் சனாயாவை வரவேற்றனர் பிரதாப் வீட்டினர், இரண்டு நாட்கள் வேகமாக ஓடியது….

°°°°°°°°°°°°°°°°

பட்டு புடவை தங்க நகைகளுடன் கிளம்பியிருந்த பிரதாப்பின் அண்ணியிடம், “ஏதாவது விசேஷமா”, என்று வினவினாள் சனாயா.

“சொல்கிறேன் சனா, முதலில் இந்த புடவை நகைகளை அணிந்து கொள்”, என்று அழகிய நகைகளையும், புடவையும், நீட்டினாள்…

“இது யாருடையது… நான் எப்படி… இதை…”, என தயங்கினாள் சனா…

“என்ன சனா…. நீயும் என்னைப்போல இந்த வீட்டு மருமகள் என்பதை மறந்துட்டியா… சீக்கிரம் கிளம்பு”, என்று கூறிவிட்டு, அவளை அறையினுள் தள்ளி, கதவை சாத்தினாள்… 

தன்னை அலங்கரித்துக் கொண்டு வெளியே வந்த சனாயா, பிரதாப்பை தவிர வீட்டில் வேறு யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்டு. “அனைவரும் எங்கே”, என வினவ..

“என்னுடன் வா” என அவளை தனது கனவு இல்லத்திற்கு அழைத்துச் சென்றான் பிரதாப்…

தென்னந் தோப்புகளை கடந்து சென்றனர், முன்பைவிட பூக்கள் அதிகமாக மலர்ந்திருக்க, அதை ரசித்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றனர்.

“அப்பா நீங்க எப்படி இங்கே!!!!,…. எப்போ வந்தீங்க”, என கண்கலங்க தன் தந்தையிடம் சென்று, அவரை அணைத்துக்கொண்டாள் சனாயா.

“பிரதாப் அனைத்தையும் கூறினார் சனா, உங்கள் திருமணம் முடிந்தபின் தான் நான் வெளிநாடு போக போறேன்”, என்றார்.

பின் அவர்களின் கனவு இல்லத்திலேயே..

அன்றே திருமண நிச்சயதார்த்தம் நடந்தது… ஒரே மாதத்தில் திருமணமும் நல்லபடியே முடிந்தது…

அவளது திருமணத்திற்கு பிரபா வரக்கூடாது எனக் கூறிய சனாயா, பிரபாவின் திருமணத்திற்கும் செல்ல மறுத்தாள்….

அதன்பின் சனா பிரபாவை சந்திக்கவே இல்லை. அதை விரும்பவும் இல்லை.

நாட்கள் கடந்தது, ஆதியும் மித்ரனும் ஒன்று சேர்ந்தனர்… மித்ரன் திருந்தி நல்லவனாக வாழ துவங்க, செபாஸ்டியன் உட்பட அனைவருக்கும் திருமணமாகியது…

ஆதி, பிரதாப், செபாஸ்டியன், மித்ரன், இவர்கள் நால்வருமாய் சேர்ந்தே, பிஸினஸ் செய்து ஒற்றுமையாக வாழத் துவங்கினர்…

தொடரும்….

அடுத்த அத்தியாயத்தோடு…. கதை முடியும் டியர் பிரண்ட்ஸ்……

Advertisement