Advertisement

“நீயா…. நீ ஏன்டா எங்கள இப்படி சிறை பிடிச்சு வெச்சிருக்க”, என்று ஆவேசமாய், அவனை நோக்கி பாய்ந்தான் ஆதி.

“பொறுமையா இருடா, இந்த நாயின் கோரிக்கை என்னென்னு கேட்போம்”, என்று, ஆதியின் கையை பிடித்து நிறுத்தினான் செபாஸ்டியன்.

“ஒரு ஆண், ஒரு பெண் மட்டும் இங்கிருந்து தப்பிக்கலாம், மற்ற இருவரும் என்னுடன்தான் இருக்கனும். அது யார்ன்னு நீங்களே முடிவு செய்யுங்க, இதுல்ல நீங்க உங்க அறிவையோ, பலத்தையோ உபயோக படுத்திக்கலாம்”… என்று, இரு மரக்கட்டைகளை அவர்கள் முன் வீசி எறிந்தான் மித்ரன். 

சனாயாவிற்கு, இரண்டு வருடம் முன் மித்ரனை சந்தித்தது நினைவிற்கு வந்தது. 

‘உன்ன அடைய, நான் என்ன வேணும்னாலும் செய்வேன்’, என்று அவன் கூறிய காட்சி, பளிச்சென்று அவள் கண்முன் வந்து மறைந்தது.

‘இவன் அனைவரையும் இப்படி அழைத்து வந்ததுக்கு நான் தான் காரணமா இருக்குமோ. தேவை இல்லாமல், இவர்கள் ஏன் என்னுடன் சேர்ந்து கஷ்டப்படனும். பிரபா வேறு முன்பே பயந்துள்ளாள், ஆறே மாதத்தில் திருமணம் வேறு. எப்படியாவது அவளை தப்ப வைக்க வேண்டும்’, என்று நினைத்தாள்.

‘தன் மனதில் நினைத்ததை சொல்லிவிடலாம்’, என்று, அவள் வாயை திறக்கும் முன், 

தன் முன் இருந்த மரக்கட்டையை எடுத்து, ஆதியின் மண்டையில் வீசினாள் பரபா. 

ஆதியும் மயங்கினான்…

“பலே பிரபா… பலே…, நீ செல்லலாம்” என்று கூறி, 

காவலாளியிடம், “இவள் கண்னை கட்டி, காட்டுக்கு வெளியே கூட்டிட்டு போய் விடு”, என்று ஆணையிட்டான் மித்ரன்.

கனாயாவும்…செபாஸ்டியனும்… ஆதியிடம், ஓடினர்.

“ஆதி எழுந்திருடா”, என்று அவனை குலுக்கினான், செபாஸ்டியன்.

ஆதி மயங்கியதையும், அதற்கு காரணம் பிரபா தான் என்பதையும், சனாயாவால் நம்ப முடியவில்லை. 

‘என் பிரபா, இப்படி பட்டவளா”, என்று அதிர்ந்தாள் சனாயா.

இரண்டு  தடியர்கள், தண்ணீர் எடுத்து வந்து சனாயாவிடம் தந்தனர். தண்ணீரை வேகமாக மூஞ்சியில் அடித்தபின், ஆதி மெல்ல மெல்ல கண்களை திறந்தான்.

“ஒரு பெண் அடிச்சு மயங்கிட்டயா”, என்று ஏளனமாக சிரித்தான் மித்ரன்.

பின் தன் தடியர்களிடம், “இந்த செபாஸ்டியனை காட்டுக்கு வெளிய கூட்டிட்டு போங்க, இவனிடம் கொஞ்சம் கவனமா இருங்க. கண்ணையும், கைகளையும், கட்டி கூட்டிட்டு போங்க”, என்றான்.

“நான் இவங்களை விட்டு போக மாட்டேன்”, என்று வசனம் பேச தொடங்கியவனை,

இரண்டு மூன்று தடியர்கள் அடித்து, இழுத்துச் சென்றனர்.

‘செபாஸ்டியனையும், பிரபாவையும், அனுப்பனும்னா அத செய்துட்டு போவதுதானே. தேவையில்லாமல் வாய்பை தருவது போல் நாடகமாடி, பிரபாவை இப்படி நடந்துகொள்ள செய்துவிட்டான்’…..

‘அதுவும் நல்லதுதான், இவளை பற்றி அறிந்துகொண்டேன். இனி இவளை  மன்னிக்கவே மாட்டேன்’ என்று எண்ணினாள் சனாயா.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

“நான் கடைசியா பிரபாகிட்ட, இன்னிக்கு  மார்னிங் அவுங்க ஹோட்டலிருந்து கிளம்பும்போது பேசினது. இதுவரை ஒரு தகவல் இல்லை”, என்றான் கார்த்திக்.

“ஆமா கார்த்தி, இன்று மாலை இங்கு வந்து விடுவாங்கன்னு நேத்து ஆதி கூறினானே… ஆனால் இதுவரை யாரும் நமக்கு அழைக்கவில்லை, நாம் அழைத்தாலும் ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது. மனதுக்கு ஏனோ சரியாக படவில்லை”, என்று பிரதாப் கூற

“சரி வா பிரதாப், ஊட்டி சென்று பார்ப்போம். அத்தையும், அன்னையும் பயப்படுறாங்க. நானும்…”, தான் என்று கார்த்திக் கலக்கமாக கூறினான்.

“நாம் செல்லவேண்டியது ஊட்டி அல்ல கார்த்திக், சென்னை”, என்றான் பிரதாப்.

“ஏன்”…

“அன்றொரு நாள் ஆதி தன் வீட்டில சண்டை போட்டுட்டு வெளியே வந்துட்டான். பிறகு செபாஸ்டியன் தான்

அவனை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றான்… இது குறித்து ஆதியின் அம்மா என்கிட்ட பேசினாங்க…”,

“அப்போதான் நான் முதல் முதலில் அவங்க வீட்டுக்கு போனேன். அன்று தான் நான் ஒரு ரகசியத்தை தெரிஞ்சுகிட்டேன். மித்ரனும் ஆதியும் உடன்பிறந்தவர்கள். இதை ஆதியின் அன்னையே என்னிடம் கூறினார்”….

இதைக் கேட்டு அதிர்ந்த கார்த்திக், “பிறகு ஏன் இதை இவர்கள் யாரிடமும் சொல்ல. இதுவரை மித்திரன் யார்ன்னு புரியாத புதிரவே இருந்துச்சே…”, என்று ஏகத்துக்கும் ஆச்சரியம் அடைந்தான் கார்த்திக்.

“அதுதான் எனக்கும் தெரியல. இத யாரிடமும் சொல்ல கூடாதுன்னு ஆதியின் அம்மா சத்தியம் வாங்கிட்டார். அவங்க மேல நான் வைத்திருந்த மரியாதையின் காரணமா, நான் இத சனாயாவிடம் கூட சொல்லல”, என்றான்.

“இத அவங்க உன்கிட்ட சொன்னதுக்கு, நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும்”, என்றான் கார்த்திக் சிந்தனையாக.

“ஆம் கார்த்திக், அவங்க என்கிட்ட சொன்னதுக்கு, ஒரு முக்கிய காரணம் இருக்கு. மித்ரனுக்கு சொத்தின் மீது அதீத ஆசையாம். அந்த ஆசையின் பெயரில், ஆதியை அவன் ஏதாவது செய்து விடுவானோ என்ற பயத்தில் தான் என்னிடம் இதை கூறினார்களாம். என்றாவது ஆதியின் உயிருக்கோ, அல்லது வேறு ஏதாவது பிரச்சினை வந்தால், அதற்கு காரணம் கண்டிப்பாக மித்திரனாக தான் இருக்கவேண்டும். என்று அடித்துக் கூறினார்கள். அதுபோன்ற காலத்தில் நான் ஆதிக்கு உதவவேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்”, என்று பிரதாப் கூறி முடிக்க,

“பிரபா, சனாயா, ஆதி மற்றும் செபாஸ்டியன். இவங்க ஊட்டிக்கு சென்ற மறுநாளே, மித்திரனும் ஊட்டி சென்றுள்ளான். இதை இப்போ தான் நண்பர் ஒருவர் மூலம் தெரிஞ்சுகிட்டேன். எனக்கென்னவோ அவனால் தான் பிரச்சினைன்னு தோனுது”, என்று பிரதாப் கலக்கத்துடன் கூற,

அப்போ நமது பிரபா, சனா, என்று கார்த்திக்கின் மனம் பதைபதைத்தது.

மௌனமாய் கண்மூடி சிந்தித்தான் பிரதாப்….

அவனது மௌனத்தை கலைக்கும் வண்ணம், கார்த்திக்கின் மொபைல் அலறியது.

அதை எடுத்து காதில் வைத்த கார்த்திக், “பிரபா டா…. பிரபா”, என பேசத் துவங்கினான்.

“ஹலோ மாமா… நான் ஊட்டி பஸ்ஸ்டாண்டில் இருக்கிறேன். இங்க வாங்க”, என்றாள்.

“பஸ்ஸ்டாண்டா….. கார் எங்கே பிரபா??. ஆதியிடம் கொடு… சனாயா நலமா”, என்று விசாரித்தான் கார்த்திக்.

நடந்ததை கூறி அழத் தொடங்கினாள் பிரபா…

அதைக்கேட்ட கார்த்திக் அதிர்ந்து போனான். பிறகு பிரதாபிடம் அனைத்தையும் கூற,

இருவருமாய் ஊட்டி சென்று பிரபாவை சந்தித்தனர். நடந்ததைத் தெளிவாக கேட்டுவிட்டு, அந்த காட்டின் அருகே சென்றனர்…..

அந்த நள்ளிரவில், தூரத்தில் ஒரு மரத்தடியில், உடல் முடியாமல் அமர்ந்திருந்த செபாஸ்டியனை பார்த்து திகைத்தனர்.

“என்னையும்  இங்கதான் விட்டுட்டு போனாங்க. நானா எழுந்து பஸ் ஸ்டாண்ட் வந்தேன்”, என்று பிரபா கூறினாள்… நசுங்கிய  துணியுமாய், சோர்ந்த தோற்றமுமாய் காணப்பட்டாள்.

பின் செபாஸ்டியனை தூக்க இருவரும் விரைந்து செல்ல… கார்த்திக், பிரதாப், வந்த காரிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து கொடுத்தாள் பிரபா.

“என்ன மன்னிச்சிருங்க, நான் செய்தது மிகப்பெரிய துரோகம். சனாயாவும், ஆதியும், என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டாங்க”, என்று தேம்பி, தேம்பி அழுதாள் பிரபா.

கார்த்திக் அவளை அணைத்துக் கொண்டு, “சரிடா… சரி… ஒன்றுமில்லை.. அழாதே”, என்று சமாதானம் செய்தான்.

‘செய்வதெல்லாம் செய்துவிட்டு, அவள் அழுவதும், இவன் ஒன்றுமில்லை என்று

கூறுவதும். சேச்சே….’, என்று நினைத்துக் கொண்டான் செபாஸ்டியன்.

“பிரபாவை கூட்டிட்டு வீட்டுக்கு போங்க கார்த்திக். ஆதி, சனாயா பற்றி நாங்க பார்த்துக்றோம்”, என்றான் செபாஸ்டியன்.

“அவர் கூறுவது போல, நீ சொல்வதுதான் சரி கார்த்திக். வீட்டில உள்ளவங்களும் பயந்துள்ளனர். நமக்குத் தெரிந்த போலீஸ், ஃபாரஸ்ட் ஆபிஸர், வைத்து நாங்க பார்த்துக்றோம்”, என்றான் பிரதாப்.

‘பிரபாவ வெச்சுட்டு நாம எதுவும் செய்ய முடியாது. இவங்களுக்கும் வீண் சிரமம்’, என அவர்கள் கூறியவாறே, அவளை அழைத்துச் சென்றான் கார்த்திக்.

“மித்ரனிடமிருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும்”, என செபாஸ்டியன் கூற,

ஆம் என்பது போல தலையசைத்து, மிகவும் கலைப்பாக இருந்த செபாஸ்டியனுக்கு அவனிடமிருந்த பிஸ்கட் பாக்கெட் ஒன்றை நீட்டினான் பிரதாப். 

மிகுந்த கலைப்பிலிருந்த செபாஸ்டியன், அதை உண்ணத் துவங்க… 

பிரதாப் தன் உரையை துவங்கினான்.

“மித்ரனும், ஆதியும் சகோதரர்கள்னும். சொத்துக்காக ஆதியை மித்ரன் என்ன வேணும்னாலும் செய்யவான்னும் தெரியும். வேறெதுவும் தெரியாது”….   

“ஆனால் உங்களுக்கு எல்லாம் தெரியும். ஆதியின் அன்னை என்னிடம் கூறியுள்ளார். அந்த குடும்பத்தின் ரகசியம் முழுவதும் அறிந்தவர் நீங்கள் என்று”…..

“இப்போ அவர் வேறு இங்கு இல்ல. அதனால தயவு செஞ்சு, அனைத்தையும் என்கிட்ட சொல்லுங்க. என் சனாவும் அங்க தான் இருக்கா, அவங்க இருவரையும் நான் காப்பாற்றனும்”, என்று தவித்தான் பிரதாப்.

“அந்த கடமை எனக்கும் தான் உள்ளது பிரதாப். நான் அத சொல்றதுக்கு முன்னாள போலீஸ், அல்லது பாரெஸ்ட் ஆஃபீஸ்ர் துணையோட, நாம உள்ளே போகனும்”, என்றான் செபாஸ்டியன்.

தொடரும்…….

Advertisement