Advertisement

இரண்டு பஸ்ஸில், அறுபது மாணவ, மாணவிகள் கிளம்பினர்.

ஆனால் நமது… ஆதி, பிரபா, சனாயா, மற்றும் செபாஸ்டியன், அந்த பஸ்சை தொடர்ந்து காரில் சென்றனர்.

நீண்ட தூர பயணமாதலால், ஒரு ட்ரைவரையும் தங்களோடு அழைத்துச் சென்றனர்.

வழக்கம் போல, சில, பல, உபதேசங்களுடன், அவர்களை கவனமாக போய் வரச் சொல்லி வழியனுப்பினர், கர்திக்க்கும், பிரதாபும்.

இரண்டு வருட கடின உழைப்பிற்குப் பின், இந்த வெளியூர் பயணம் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி அளித்தது.

ஆடல், பாடலென, பஸ்ஸில் அனைவரும் குதூகலமாக வர….

இவர்கள் நால்வரும், ஆனந்தமான பேச்சும், சிரிப்பும், என மகிழ்ச்சியாய் பயணத்தை துவங்கினர்.

அப்போது அவர்களுக்கு தெரியாது, இதில் வரும் சிக்கலும், இதனால் வரும் மாபெரும் விளைவுகளும்.

அந்த பயணத்தின் இறுதியில், உயர்தர ஹோட்டலுக்கு சென்று, அவர்களை தயார் செய்துகொண்டு, அன்றிரவு farewll பார்ட்டியை பிரமாண்டமாக கொண்டாடினர்.

“கல்லூரியிலிருந்த நமது நண்பர்களை பிரிந்து வருவது, என்பது சுலபமான செயலல்ல. வேதனைமிக்கது… பல இன்பமான மறக்க முடியாத வாழ்க்கை சம்பவங்கள் கல்லூரியில்தான் நடக்கும்”.

“அதனாலேயே… என்ன தான் மகிழ்ச்சியாக பார்ட்டி செய்தாலும், கடைசியில் அனைவருமே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். பலர் அவர்களது நண்பர்களையும், தோழிகளையும், கட்டிக்கொண்டு அழுதே விட்டனர்”.

மறுநாள், ஊட்டியை சுற்றிப் பார்த்து விட்டு, சென்னை செல்லலாம், என்று அனைவரும் ஆயத்தமாக இருக்க,

காலை உணவை அந்த ஹோட்டலில் முடித்துவிட்டு, தங்களது பஸ்சில் ஏறினார்கள். 

அனைத்து மாணவ, மாணவியரும், ஏரிய பஸ் சென்று அரை மணி நேரம் கழிந்த பின் தான், பொறுமையாக எழுந்து, உணவை முடித்துவிட்டு, தனது காரை நோக்கி நகர்ந்தான் ஆதி.

அங்கு ஏற்கனவே சனாவும், பிரபாவும் காத்திருந்தனர்.

“செபாஸ்டியன் நேரமே எழுந்து கிளம்பிட்டானே, அவன் எங்க”, என்று வினவினான் ஆதி.

“ட்ரைவர் அண்ணாவோட வெளிய போனார், இப்போ வந்துருவார்”, என்று சனா பதிலளித்த மறுநொடி, ட்ரைவருடன் செபாஸ்டியன் வந்தான்.

“ஒருவழியா எழுந்து கிளம்பிட்டயா, உனக்காக நாங்க எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது”, என்று செபாஸ்டியன் கடிந்து கொள்ள,

“விடுடா மச்சான்… அது தான் வந்துட்டனே” என்று, சமாளித்தான்.

“சரி வாங்க கிளம்பலாம் … நேரமாச்சுனா நம்மால எல்லா இடத்துக்கும் போக முடியாது”, என்று பறந்தான் ட்ரைவர்.

“எங்கள விட, நீங்க தான் ஆர்வமா இருக்கீங்க”, என்று கூறிக்கொண்டே காரில் ஏறினான், செபாஸ்டியன்.

சில தூரம் சென்றபின், கார் ஒரு காட்டினுள் புகுந்தது…

“இது என்ன இடம், இங்க ஏன் போறோம், கூகுள் மேப்பில்ல, இந்த வழி இல்லையே”, என்றாள் பிரபா.

“நாம தவறான வழியில போறோம் ட்ரைவர், காரை திருப்பங்க”, என்று ஆதி கூற,

“நான் இந்த ஊரில தான் பல வருடமா ட்ரைவராவும், டூர் கைடாவும் இருக்கேன். இது குறுக்கு வழி. ஒன்றும் பிரச்சினை இல்லை”, என்று அவன் கூறினான்.

“ஆனா நான் இந்த ஊருக்கு அடிக்கடி வருவேன். இந்த வழியில செல்லக் கூடாதுன்னு, கேள்விப்பட்டேன்”, என்றான் செபஸ்டியன் சீரியஸாக.

“நீங்க கூறியது சரிதான், அங்க பாருங்க ‘prohibited zone’ என்று, பலகை இருக்கு”, என்றாள் பிரபா கலவரமாக.

“முதல்ல நீங்க வண்டிய நிறுத்துங்க”, என்றாள், சனாயா பதட்டத்தோடு.

இவர்கள் பேசுவது எதுவும் காதில் விழாதது போல், முன்பை விட வேகமாக வண்டியை ஓட்டினான் அந்த ட்ரைவர்.

சனாயாவும், பிரபாவும், அவனை தடுக்க முயற்சித்தனர்.

“வேண்டாம், வேண்டாம்… அப்படி செய்யாதீங்க, வண்டி ஏதாவது மரத்திலோ, பாறையிலோ, மோதி விடும்”, என்று அலறினான் ஆதி.

“வண்டிய நிறுத்த போறியா, இல்லையா…”, என்று அனைவரும் கத்தத் தொடங்கினர்.

“கொஞ்ச நேரம் அமைதியா இருங்கள்”, என்றான் ஆதி.

அனைவரும் அமைதியான பின், “உனக்கு எவ்வளோ பணம் வேண்டும், இப்பவே தரேன். ஒழுங்கு மரியாதையா வண்டிய நிறுத்து”, என்று ஆதி, கடிந்த குரலில் கூற.

எதற்கும் பதிலே கூறாமல், குண்டும் குழியுமான, அந்த அடர்ந்த காட்டில் வண்டியை நிறுத்தினான் ட்ரைவர்.

”எவ்வளோ திமிர் இருந்தா, இப்டி செய்திருப்பா. நாங்க யாருன்னு உனக்கு தெரியுமா”, என்று கடும் சினத்தோடு, ட்ரைவரிடம் பேசினான் செபாஸ்டியன்.

“ஆதி… ஆதி..”, என்ற சத்தம் கேட்டு, திரும்பினர், செபாஸ்டியனும், ஆதியும்.

சனாவையும், பிரபாவையும், இரண்டு தடியர்கள்… அவர்களின் கைகளை கட்டிவிட்டு இழுத்துச் சென்றனர்.

“யார்டா நீ…., அங்கயே நில்”, என்று அவர்களை தொடர்ந்து ஓடினான் ஆதி.

அவனையும், இரண்டு மூன்று தடியர்கள் பிடித்துக்கொண்டனர்…..

பின் நால்வரின் கண்களையும், துணியால் இறுக கட்டி விட்டு, நடக்க வைத்தே நீண்ட தூரம் சென்றனர்.

அனைவரின் கால்களும் வலிக்க தொடங்கியது, ஆனால்… கொஞ்சம் கூட ஈவு, இரக்கம், இல்லாமல்… கரடுமுரடான அந்த முள் பாதையில், இவர்கள் இழுத்துச் சென்றனர்.

“எப்படியும் தப்ப முடியாது. என்னதான் நடக்குதுன்னு பாப்போம்”, என சனா, இயன்றவரை பயத்தை கட்டுபடுத்தி அமைதியாக வந்தாள். 

ஆனால் ஒரு நொடிகூட வாயை மூடாமல், வந்த பிரபாவின் வாயை துணி வைத்து அடைத்தான், யானை போன்ற பெருத்த உருவத்தைக் கொண்ட ஒரு தடியன்.

ஆதியும், செபாஸ்டியனும், என்ன செய்வதென்று அறியாது… மனதுக்குள் தங்களது இயலாமையை நினைத்து வருந்தினர்.

‘சனாயாவின் கொலுசு சத்தமும், பிரபாவின் வளையல் சத்தமும், அவர்கள் நம்முடன் தான் உள்ளார்கள்’ என்ற நிம்மதியை தந்தது ஆதிக்கு.

‘அப்பவே கூறினேன், முன்பின் தெரியாதவனை ட்ரைவராக வேலைக்கு சேர்த்தாதேன்னு’,என தன் நண்பன் ஆதியை, தன் மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தான் செபாஸ்டியன்.

“இதுதான் உங்க அறை. நீங்க என்னதான் கத்தினாலும், உங்களை காப்பாற்ற ஒருவனும் வரமுடியாது. முக்கியமாக உனக்கு தான்”, என்று பிரபாவை பார்த்து கர்ஜித்தான், ஓர் தடியன்.

இன்னொருவனோ… “தப்பித்து விடலாம், என்று கனவில் குட நினைக்காதீங்க. சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு சி.சி.டிவி கேமரா இருக்கு. அதுக்கும் மேல காவலாளிகள் இருக்கோம். உங்களால எங்கள மீறி, இந்த அறைய விட்டு ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது”, என்று மிரட்டினான்.

“யார் நீங்க… உங்களுக்கு, அப்படி என்னதான் வேணும்”, என்று ஆதி வினவுவதை, ஓர் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், அந்த அறையை விட்டு வெளியேறினர் தடியாட்கள்.

அவர்கள் சென்றபின், “இன்னும் ஆறு மாதத்தில் எனக்கு திருமணம், அது என்ன ஆகப்போகிறதோ”, என்று துடித்தாள் பிரபா.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது பிரபா…  பயப்படாம, நிதானமா யோசித்தா தான், நாம தப்ப முடியும்”, என்று பொருமையாக கூறினான் ஆதி.

“என்ன நீ… ஒன்னும் ஆகாதுன்னு, தப்பிக்கலாம்ன்னு சொல்ற, உனக்கு என்ன பைத்தியமா…அவனுங்க சொன்னது உன் மண்டையில ஏறுச்சா இல்லையா. இங்கிருந்து கண்டிப்பா தப்பிக்க முடியாது”, என்று பிரபா கத்த.

“இப்படியே சொல்லிட்டு இருந்தா முடியாதுதான். முதல்ல வாய மூடு, கொஞ்சம் யோசிக்க விடு”, என்றான் ஆதி, கடுமையான குரலில்.

“நான் ஏன் வாய மூடனும், உன்னால தான் நாங்களும் இங்க வந்து மாட்டிக்கிட்டோம்”, என்றாள்.

“என்னாலா” …

“பின் எவரால …இதுபோல பெருமளவு முயற்சியும், செலவையும், செஞ்சு கடத்திக்கிட்டு வர அளவுக்கு நாங்க ஒன்னும் பெரிய ஆள் இல்லை” …

“கண்டிப்பா இது உனக்கான சூழ்ச்சியா தான் இருக்கும். அதில நாங்களும் மாட்டிக்கிட்டோம்”, என்றாள்.

“சரி பிரபா,… அப்படியே இருந்தாலும், அவன் ஒன்னும் எவனோ ஒருவன் இல்லையே…. நம் பிரண்ட் தான”, என்றாள் சனாயா.

“அதுக்காக”, என்று மீண்டும் கத்தினாள் பிரபா.

“அவனுக்கொரு பிரச்சனை என்றால், அதுல நமக்கும் பங்குண்டு. அவன் சிரிக்கும் போது அவனுடன் சேர்ந்து சிரிக்கின்ற நாம, மற்ற சுக துக்கங்களிலும் சமமா பங்கு கொள்ளனும்”, என்றாள் சனாயா, எழுந்த சினத்தை அடக்கிக்கொண்டு.

“ஆனால் என் கார்த்திக் …. அவரைப்பற்றி யோசி, எனக்கு ஏதாவது ஆச்சுனா, அவர் என்ன செய்வார்”…

“தயவுசெஞ்சு பொறுமையா இரு, இதுபோன்ற வேலையில தான் நாம அமைதியா சிந்தித்து செயலாற்றனும். வாக்குவாதம் செய்ய இது நேரமில்ல” என்று செபாஸ்டியனும் கூற,

‘பிரபா வா இது, இவள் இப்படி எல்லாம் பேச மாட்டாளே, இன்று ஏன்’, என்று வருந்தினாள் சனாயா.

சட்டென கதவு திறக்கும் ஓசை கேட்க, அனைவரும் கலவரமாக அத்திசையை நோக்கினர்.

கதவு வேகமாய் திறந்து, படீர்…., என ஓசை எழுப்பியது.

உள்ளே வந்தான் மித்ரன்….

தொடரும்…

Advertisement