Advertisement

“பிரதாப் நீங்களா!!!” என்று இன்ப அதிர்ச்சியில், சனாயா புன்னகைக்க.

“நானேதான்… “, என்றவன், “டேய் ஆதி, எழுந்து வாடா”, என்றான், உரிமையாக.

ஆதியோ அசையாமல் அமர்ந்திருந்தான்….

பொறுமை இழந்த சனாயா, “நீங்களாவது, என்னன்னு சொல்லுங்க பிரதாப்”, என்றாள், கலவரமான முகத்தோடு.

“ஒன்னுமில்ல சனா, வீட்ல சண்ட போட்டுட்டு இங்க வந்துட்டான்”, என்று, ஆதியை முறைதான் பிரதாப்.

“டேய் ஆதி, வாடா… எத்தன முறைதான், அழைப்பது. வீட்ல உங்க அம்மா ரொம்பவும் நொந்து போய் பேசுனாங்க “, என்று பிரதாப் மீண்டும் அழைத்து, சலித்துக்கொள்ள.

“முடியாது அண்ணா … அவன் அங்கு இருக்கும் வரை, என்னால வீட்டுக்கு போக முடியாது” என்றான், ஆதி தீர்க்கமான குரலில்.

“இந்த அவன், எவன்?”, என்று சிந்தித்தாள் சனாயா.

“சரிடா… உன் வீட்டுக்கு வேண்டாம், என் வீட்டுக்கு வா. கல்லூரி விடுமுறை தானே”, என்றான் பிரதாப். 

ஆதி சிந்தனையாக பார்க்கவும்….

“சனாயா ….. அவன் மட்டுமல்ல, நீயும் என்னோடு வா. கார்த்திக் பிரபா நிச்சயதார்த்த விழாவுக்கு எப்படியும் நீ வரவேண்டும் தானே. இன்றே கிளம்பு”, என்றான்.

நல்லதாய் போயிற்று என அவள் கிளம்ப துவங்கினாள்….

ஆதி அமைதியாய் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு, ‘இவன் எப்படியும் வாயை திறக்கப் போவதில்லை’, என்று சனாயாவுக்கு உதவ, அவள் அறைக்கு சென்றான் பிரதாப்.

“நீங்களும், ஆதியும், பிசினஸ் பார்ட்னர்ஸ்னு எனக்கு தெரியும்  குடும்ப அளவிலும் நெருக்கமா”, என்று அவள் வினவ,

“ஒரு அளவிற்கு தான் சனா, ரொம்ப இல்லை” என அவன் தயக்கமாக கூறினான்.

“எவரோ ஒருவர், வீட்டை விட்டு போனா தான், வீடு திரும்புவேன்னு சொன்னானே!!… யார் அவர்” என்று, வினவினாள் சனாயா.

“ஐயோ சனா…. நாமே பல நாள் கழித்து பாக்குறோம், இப்போ போய் கண்டதெல்லாம் பேசீட்டு இருக்க”, என்றான்,

“நீங்க பேசாதீங்க…. இவ்வளவு நாள் என் நினைவே வரலையா, இன்னிக்கு தான் போன் செய்தீங்க” என்று முறைத்தாள்.

அவன் புன்னகைக்கவும்…

“ஆனா இப்போ நீங்க வரலைனா, இந்த ஆதியோட பிடிவாதத்தால, திண்டாடி போயிருப்பேன்” என்று அவள் நொந்து கொண்டாள்.

“அதான் வந்தேன். நான் எப்பவும், உன்னோட, உனக்கு துணையா தான், இருப்பேன் சனா. எந்த தூரமு நம்ம பிரிக்க முடியாது”…

“தெரியும்” என்றவள்,

‘இதையெல்லாம் நல்லா தான் பேசுறீங்க, ஆனால் சொல்ல வேண்டியதை சொல்லவே மாட்றீங்க’, என எண்ணினாள்.

பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, பிரதாப், சனாயாவின் கைகளை பற்றினான். அவள் உடல் சிலிர்த்தது.

“உள்ள வரலாமா”, என்ற ஆதியின் குரலைக் கேட்டு, இருவரும் திடுக்கிட்டு திரும்பினர்.

“அதுதான் வந்துட்டயே”, என்று கூறியபடி, ஆதியின் தோளில் கை போட்டுக்கொண்டு, அவனை வெளியே அழைத்துச் சென்றான் பிரதாப். 

சனாவிற்கு தான், கொஞ்சம் சங்கடமாக போய்விட்டது…

“என்னடா… என்னோட வர சம்மதம் தானே?”, என்று பிரதாப் கேட்கவும்,

“வரேன் அண்ணா, நாம கிளம்பலாம்”, என்றான்.

சனாயாவும், வல்லியம்மையிடம் “நீங்க உங்க மகள் வீட்ல கொஞ்ச நாள் இருந்துட்டு வாங்க”, என செலவுக்கு தேவையான பணத்தை கொடுத்துவிட்டு, நகர்ந்தாள்.

பிரதாபிர்க்கு ஏதோ ஒரு முக்கியமான போன் வரவும், தனியே சென்றான்.

“உன் மனசுல இருக்கிறத, என்கிட்ட தான் சொல்லல.அதுல சம்பந்தப்பட்ட பிரதாப் அண்ணனிடமாவது சொன்னியா”, என்றான் ஆதி.

“உனக்கு எப்படி தெரியும்”, என சனா தயங்க..

“என் சனா மனசுல, என்ன உள்ளது, யார் உள்ளார், என்பத கூட என்னால ஊகிக்க முடியாதா”, என்றான் உணர்ச்சியற்ற முகத்துடன்.

அவள் கண்களிலிருந்து, கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றாய் விழ,

“சாரி ஆதி… இத நான் உன்கிட்ட மறைக்க  நினைக்கல, அவர்கிட்ட சொல்லிட்டு, உன்கிட்ட சொல்லலாம்னு காத்திருந்தேன், தப்பா எடுத்துக்காத”…..

“பரவால சனா, முதல்ல வருத்தமா தான் இருந்துச்சு. ‘என் தோழி இப்போ, வேறொருவரோட காதலினு தெரிஞ்சப்ப”….

“ஆனால் நிதானமா யோசிச்சேன், அப்போதான் புரிஞ்சது… என் தோழி ஒருவரோட மனைவியா, ஒரு நாள் ஆகதான் வேண்டும். அது எனக்கு தெரிந்த, நல்ல மனிதரான பிரதாபா இருந்தா மகிழ்ச்சி தான்னு தோனுச்சு”…

ஆதி பேசிக்கொண்டே போக, சனாயா விழியெடுக்காமல் பார்த்திருந்தாள்.

“என்னதான் நீ பிரதாப்பின் மனைவியா இருந்தாலும், என் மூச்சு நிக்கும் வரை… ஏன், அதுக்கு மேலும்… நீ என் தோழி தான், ஒரு உன்னதமான உறவு. எந்த காதலும், எந்த உறவும், நம்ம பிரின்ட்ஷிப, பிரிக்க முடியாது. என்றும் நீ என் சனாதான், என் தோழி சனாதான், “love u… my dear friend”, என்றான் ஆதி”.

இதைக் கேட்ட சனாயா… ஆதியை பார்த்து, “love u too…Adhi” என உணர்ச்சி மிக அழ.

இது அனைத்தையும் கவனித்த பிரதாப், 

புன்னகையுடன்……இவர்கள் இருவரின் தோளிலும் கைபோட்டு காருக்கு அழைத்துச் சென்றான்.

மூவரும் இப்படி ஒன்றாக, இருக்கக் கண்ட வல்லியம்மையின் மனம் நிம்மதி அடைய, கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது…

‘பெற்றோர் என்னோட இல்லாத குறைய, நீங்க இருவருமா, சரி செஞ்சிட்டீங்க… இனி நீங்க தான் என் வாழ்க்கை’, என்றாள் சனாயா.

மூவரும் பிரதாபின் வீட்டிற்கு செல்ல காரில் ஏறினர், செல்லும் வழியில்… ஆதியின் நண்பனான செபாஸ்டியன், அவனை அலைபேசியில் அழைத்து,

“அம்மா சொன்னாங்க, வீட்டில பிரச்சனையா”, என்று விசாரித்தான். 

ஆதியும், “ஆம்” என ஒற்றை பதிலை, மட்டும் கூற,

பின்னர் அவர்கள் செல்லும் வழியில்,  செபாஸ்டியனை சந்தித்தனர்….

சனாயாவை தனியே விட்டுவிட்டு, மூவருமாக சேர்ந்து எதையோ பேசினர்.

அந்தப் பேச்சின் முடிவில், சனாவிடம் வந்த ஆதி “நான் செபாஸ்டியனுடன் போறேன்..” என கூறிவிட்டுச் சென்றான்.

நடப்பது புரியாமல், குழப்பமாக… “ஏதாவது பிரச்சினையா, ஏன் அவன் வீட்டை விட்டு வந்தான்??, இப்போது ஏன் இவருடன் போறான்??”, என வினவினாள்.

“அவன்னோட வீட்டு பிரச்சினை பற்றி, எனக்கு அரைகுறையா தான் தெரியும் சனா. அனைத்தையும் அறிந்தவன் செபாஸ்டியன் மட்டும்தான். அதனால் தான் அவனுடன், அவனை அனுப்பி வைத்தேன். நம்மைவிட அவனால் தான், ஆதியின் பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண முடியும்”, என்றான்.

பிரதாப்பின் வீடு வரும்வரை, ஆதியையும் பிரதாப்பையும் நினைத்தவண்ணம் உறங்கி போனாள், சனாயா.

அவள் உறங்கும் அழகை ரசித்துவிட்டு,  காதல் பாடல் ஒன்றை கேட்டவண்ணம், சாலையின் இருபுறமும் அமைந்துள்ள வயல் வெளிகளையும், தென்னந்தோப்புகளையும், ரசித்துக்கொண்டே காரை ஓட்டினான் பிரதாப்.

அவன் கேட்ட பாடல் வரிகள்….

உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்….

தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்…

தூக்கம் மறந்து நான், உன்னை பார்க்கும் காட்சி…

கனவாக வந்ததென்று நினைத்தேன்…

தொடரும்….

Advertisement