Advertisement

இப்போது நாம் நம் கதையின் தொடக்கத்திற்க்கு வருவோம்…..

ஆறு வருடத்திற்கு பின்….

பிரதாப்பும், சனாயாவும், தங்களது செல்லப்பிள்ளை வைபவுடன், பீச்சிற்கு வர…

பிரபாவும், கார்த்திக்கும், தங்களது குழந்தை சனாயாவுடன், அவர்களை சந்தித்தனர்.

“ஹாய் ஆன்ட்டி, என் பேரும் சனா தான், தெரியுமா……..அம்மா உங்கள பத்தி நிறையா சொல்வாங்க”, என்றாள் குட்டி சனாயா…

லேசான சிரிப்புடன்… “அப்படியா பாப்பு”, என்று, ஆசையாக குட்டி சனாவை தூக்கிக் கொண்டாள், பிரதாபின் சனாயா…

“என்ன மன்னிச்சிடு சனா, நான் செஞ்சது மிகப் பெரிய தப்பு தான். அதுக்கான தண்டனைய, நான் ஆறு வருடமா உன்ன பிரிஞ்சு, அனுபவிச்சுட்டேன். இனி வேண்டாம் ப்லீஸ்”, என்று மன்றாடும் குரலில், பிரபா கலங்கி நிற்க…

குட்டி சனாவை பார்த்து கொஞ்சிய, நமது கதாநாயகி சனாயா, 

“உன்னை பார்த்த பிறகு, உன் அம்மா மேலிருந்த கோபமெல்லாம் பறந்து போயிடுச்சு”, என்று புன்னகை,

“அப்பாடா…. நமது பிளான் சக்சஸ்”, என்றனர் பிரதாப்பும், கார்த்திக்கும்.

“என்ன பிளான்” என்று சனா முறைக்க…

“உங்கள சேர்த்துவைக்க, நாங்க போட்ட திட்டம்தான் இது. நான் தான் கார்த்திக்கை சென்னை வர சொன்னேன்’, என்றான் பிரதாப்.

சனா மீண்டும் முறைக்க…

“பிரபா செஞ்ச தப்புக்கு… என்கிட்டயும் ஏன்மா கோச்சுகிட்ட… இதெல்லாம் ஞாயமா”, என்றான் கார்த்திக்.

“இல்ல நா”,… என அவள் சமாளிக்க முயல,

“உங்ககிட்ட பேசினா, என்னிடமும் பேச நேரும்ன்னு தவிர்த்திருப்பா”… என்றாள் பிரபா.

“அதேதான்”,… என்றாள் சனா வேகமாய்.

அதன்பின் உணர்ச்சி பொங்க, சனாவை இருக கட்டிக்கொண்டு, “இனி நான் உன்னை பிரிய மாட்டேன் சனா, தயவு செஞ்சு என்ன மன்னிச்சிடு. இனி இப்படி மோசமா நடந்துக்க மாட்டேன்…ஆதி கூட என்ன மன்னிச்சு ஏதுக்கிட்டான் சனா… இனி இப்படி நம்பிக்க துரோகம் செய்ய மாட்டான்”, என்று பிரபா ரொம்பவும் அழ,

சனாவிற்கு முழுமையாய் கோபம் தனிந்து, மனம் லேசானது, என்ன இருந்தாலும், நினைவு தெரிந்த நாளிலிருந்து உயிராய் பழகியவர்களாயிற்றே…..

“நமது பல வருட நட்பை இனி யாராலும் பிரிக்க இயலாது பிரபா, ஏதோ அந்த சூழ்நிலையில் தவறு செஞ்சுட்ட”, என்று சனாயா, ஆறுதலாய் தனது தோழியின் தலையை வருடினாள்.

‘சனாயாவா இப்படி பேசுவது’, என அனைவரும் வியந்து பார்க்க,

பின்… பழைய கதைகள் அனைத்தையும், நால்வருமாய் பேசி மகிழ்ந்தனர்.

“ஒருவழியா சேர்ந்துட்டீங்களா”, என்று கூறிக் கொண்டே வந்து, அவர்களுடன் கலந்து கொண்டனர் செபாஸ்டியன், ஆதி, மற்றும் மித்ரன்.

°°°°°°°°°°°°°°°

பிரபா, சனாயா, என்று ஆரம்பித்த பயணம். இவ்வளவு பெரிய குடும்பமாய் ஆனது.

சிலர் வாழ்க்கையில் கல்லூரி நட்புக்கு பெரும் பங்கு இருக்கும். ஆனால் இவர்களது வாழ்க்கையே, கல்லூரி நட்பினால் உருவானது தான்.

இவர்களது தொந்தம்,…. கல்லூரி நண்பர்கள்…

இவர்களது தொழில் பங்குதாரர்கள்,…. கல்லூரி நண்பர்கள்… 

இப்படியே இறுதிவரை.. அனைவரும், நம்பிக்கையோடும், காதலோடும், நட்போடும் ஒற்றுமையாய் வாழ்ந்தனர்.

நட்புக்கும், காதலுக்கும், முடிவே கிடையாது.

முற்றும்….

இத்தளத்தில் எழுத உதவிய மல்லிகா மேடம்கும், இத்தளத்தை எனக்கு அறிமுக படுத்திய என் தோழி டாக்டர் உமா அவர்களுக்கும்…..என்னை ஆதரித்து, likes and comments செய்து… என்னை ஊக்க வைத்த அனைத்து தோழிகளுக்கும், சகோதரிகளுக்கும்… எனது கோடி நன்றிகள்… உங்களுடைய அட்வைஸ் மற்றும் பாராட்டுகள், எனது இந்த முயற்ச்சியை மிகவும் இனிமையாக மாற்றியது… thx my dear friends and sisters…love u all from my heart.

நான் தொடர்ந்து கதைகளையும், சிறுகதைகளையும் எமுதுவேன்… அதிலுள்ள குறை, நிறைகளை சுட்டிக் காட்டி, என்னுடைய கதைகளில் பயனிக்க, உங்களை அன்புடன் வரவேற்க்கிறேன்.

once again thank u all…. u made my last three weeks lovely and unforgettable??????

Advertisement