Advertisement

ஜெயிலில் தன்னைச் சந்திக்க வந்த சித்ராவிடம்,
நீயும், உன் பையனும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என்னை ஏன் இன்னும் வெளியில் எடுக்கலை? ஏன் இன்னும் எந்த வக்கீலும் என்னை வந்து பார்க்கலை?” என்றுகாச்மூச்என்று கத்திக் கொண்டு இருந்த அருணாச்சலத்தின் வார்த்தைகளைக் கேட்டு, கண்கள் இடுங்க, அவரையே இழுத்துப் பிடித்த பொறுமையுடன் பார்த்த சித்ரா,இனி எந்த வக்கீலும் உங்களை வந்து பார்க்க மாட்டாங்க!” என்று அழுத்தமாக சொன்னார்.

அதில் நிமிர்ந்து அவரைப் பார்த்தவருக்கும், சித்ராவின் அந்தக் கூரிய பார்வை வீச்சு மிகப் புதிது! ஆனாலும் அது பற்றிக் கேட்காது,ஏன்?” என்று மட்டும் கேட்டார் அருணாச்சலம்.

நான் தான் யாரையும் உங்களுக்காக ஆஜராக கூடாதுன்னு விஷ்வாகிட்ட சொல்லி இருக்கேன்என்றவரின் வார்த்தைகளை நம்பாது,என்னது நீயா??” என்றவர்,ஏன்??” என்று அதிகார குரலில் உறுமினார்.

அதற்கெல்லாம் கிஞ்சித்தும் பயப்டாதவரோ, கண்களில் அதைக் காட்டி அசால்ட்டாக,ஏன்னா நீங்க வெளிய வரக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்என்றார் சித்ரா.

என்ன சொன்ன?” என்று ஆத்திரம் தாங்காது சித்ராவின் கழுத்தை நெரிக்கப் போனவரின் கைகளை,ச்சீ! கையை எடு!” என்று துச்சமாகத் தட்டி விட்டவரின் செயலில் ஒரு நிமிடம் திகைத்துப் போனார் அருணாச்சலம்.

இத்தனை நாள் தன் காலை சுத்தி வந்த பூனையா இது?’ என்பது போல சித்ராவைப் பார்த்தவர், குரலை உயர்த்தி,என்னடி?? நான் உள்ளே இருப்பதால் உனக்குத் தைரியம் வந்திடுச்சா?” என்று கேட்க,

ம்ம்ம்.. தைரியம் வந்து இருப்பது உண்மை தான்! ஆனால் அது நீ உள்ளே இருப்பதால் இல்லை, நீ எனக்கு செய்த துரோகத்தினால்!!” என்று எழுந்து நின்று எரிக்கும் பார்வை பார்த்துச் சொன்னவரின் பேச்சில் லேசாகத் தடுமாறிப் போனவரோ,யார்?? யார் சொன்னா உனக்கு??” என்று நா தழுதழுக்க விடை தெரிந்தும் கேட்டார்.

யார் சொல்லி இருப்பான்னு நினைக்குற?”

அவ சொல்றதைக் கேட்காத! அவ என் மேல இருக்கிற வஞ்சத்தால் உன்கிட்ட ஏதேதோ பொய்..” என்று சொல்லி முடிக்கும் முன், அவரை  ஓங்கி ஒரு அறை விட்டார் சித்ரா.

இமைக்கும் நொடியில் நடந்து முடிந்ததை நம்ப முடியாது சித்தம் கலங்கிப் போய் நின்ற அருணாச்சலம்,இவ என்னை அடிச்சாளா?” என்ற அவமானம் கொடுத்த சூட்டில்,ஏய்!!” என்று எகிறிக் கொண்டு மனைவியை நோக்கி ஒரு எட்டு வைத்த நேரம்..

திரும்பி,வார்டன்!” என்று குரல் கொடுத்தார் சித்ரா.

அவர் குரல் கேட்டு உள்ளே ஓடி வந்த ஒருவர், அருணாச்சலத்தின் திமிறலை அடக்கி ஒடுக்க முயலவும், ஆத்திரம் அடங்காதவர்,ஏய்! என்னை விடுடா! விடுடா! நான் யார்ன்னு தெரியுமாடா உனக்கு?” என்று கால்களைக் காற்றில் பறக்க விட்டு எம்பியவரை, அடக்கி ஒடுக்கி நிறுத்தி இருந்த வார்டனின் பிடியில் நகர முடியாமல் திமிறிய கணவரின் முன் திமிராக வந்து நின்ற சித்ரா,

இனி உன் ஜம்பம் ஏதும் என்கிட்டே மட்டுமில்லை, இனி எங்கேயும் எடுபடாது. இங்கேயே கிடந்து சாவு! இது தான் நான் உனக்குக் கொடுக்கிற தண்டனை!” என்றவரின் வார்த்தைகளைக் கேட்ட அருணாச்சலம் கோபம் அடங்காது அவரைத் திட்டித் தீர்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே வார்டனை நெருங்கிய சித்ரா,நான் சொன்னபடி இன்னும் கொஞ்சம் நல்லா கவனிங்க இவனை!” என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அவரிடம் வாங்கிய பணத்துக்கு அருணாச்சலத்தை வெளியில் தெரியாதபடி ஊமை குத்தாக குத்தி, அடித்துத் துவைத்துக் கொண்டு போய் அவரின் அறையில் திரும்பி விட்டனர் இரண்டு வார்டன்கள்.

அருணாச்சலத்தின் வீங்கிய முகத்தைக் கண்ட அறைவாசி,என்ன? போகும் போது அந்தப் பேச்சு பேசிட்டுப் போனான்.. இப்போ இப்படித் திரும்பி வந்து இருக்கிறான்..” என்று எண்ணியபடி அவரைச் சுரண்டி,எச்சூசூமீ! வாட் ஹாப்பென்ட்?” என்று கேட்க,

அதற்குப் பதில் கூடச் சொல்ல முடியாத நிலையில் இருந்தவரோ,  செய்கையில் கை கால்களை ஆட்டி, எப்படியோ ஒருவழியாகத் தன் நிலைக்கான காரணத்தைத் துக்கம் தாளாது சொல்லி முடித்த நேரம்,

ஒஹ்ஹ! இது தான் சாது மிரண்டா காடு கொள்ளாதுன்னு சொல்றதா??” என்று அவர் ஒரு பழமொழியை உதிர்த்ததைப் பார்த்து அவரை முறைத்தார் அருணாச்சலம்.

சும்மா என்னை முறைக்காதீங்க சார்.. நீங்க என்னவோ என் மனைவி என் காலை சுத்துற பூனைன்னு சொன்னீங்க. ஆனா அவுங்க என்னடான்னா, உங்களைப் புலியா இல்ல புரட்டி எடுத்து இருக்காங்க?!” என்று முகத்தை ஆட்டி சொன்னவரின் திருப்பலில்ஷ்.. ஆ!!” என்று வலியில் அலறினார் அருணாச்சலம்.

அதில்,இதுக்கேவா..? இன்னும் என்ன என்ன உங்களுக்குக் காத்து இருக்கோ?” என்றவரின் வார்த்தைகளைக் கேட்டு பக்கென்று இருந்தது அருணாச்சலத்திற்கு.

பின்னே? இதைத்தானே சித்ராவும் சொல்லிச் சென்று இருக்கிறாள். இனி தன் வாழ்க்கை அவ்ளோ தானா?’ என்று தலையில் கை வைக்காத குறையாக எண்ணி நொந்து போனவர், மனதில்,இதுக்கெல்லாம் காரணம் நீ தானே?என்று வசுந்தராவைக் காய்ச்சி எடுத்தார். பின்னே? அவரால் அதை மட்டும் தானே இனி செய்ய முடியும்!

                      *****************************

அருணாச்சலத்தின் சிறை வாசம் அறிந்து மொத்த ஜுனியர்களும் சந்தோஷத்தில் வீட்டிலேயே சிறிதாக பார்ட்டி வைத்துக் கொண்டாடினர்.

ஆனால் அதில் அருண் மட்டும் முழுதாக ஈடுபடாது, ஏதோ ஒரு சிந்தனை வயப்பட்டு இருப்பதைக் கண்ட வசுந்தரா,என்னாச்சு அருண்?” என்று கேட்டார்.

தப்பு செய்த இன்னொருவர் இன்னும் தண்டனை அனுபவிக்கலையே மேடம்??” என்று ரீட்டா குறித்து மறைமுகமாக அவன் சொல்லவும், அவனை ஆழமான பார்வை பார்த்தவர்,

என்னோட  நீதிமன்றத்தில்  தப்பு செய்த அனைவருக்கும் தண்டனை உண்டு! யாரும் அதில் இருந்து  தப்பிக்க முடியாது  அருண்!” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவரின் பேச்சின் வீரியம் புரிந்தவனும், எப்படியும் மேடம் ரீட்டாவைச் சரியாகக் கவனித்து விடுவார் என்ற நம்பிக்கையில் உடனே புன்னகைத்தான்.

அதே நேரம், அங்கே தாயைத் தேடி வந்த அர்ஜுன் அங்கே நடந்து கொண்டு இருந்த பார்ட்டியைக் கண்டு,என்ன விசேஷம்?” என்று கேட்டான்.

இப்போ தான் ஆபீசில் இருந்து வரீயா அர்ஜுன்? ஏன் இவ்ளோ லேட்?” என்று ஒரு ஸ்நாக்ஸ் அடங்கிய பிளேட்டை அவனின் புறமும் நீட்டியபடி வசுந்தரா கேட்டார்.

இன்னைக்கு ஆபீஸில் ஒரு சின்ன ஷ்யூ மாம்என்று அருண் நீட்டிய ஜூசை வாங்கிப் பருகியபடியே தாயின் அருகில் அமர்ந்து கொண்டு சொன்னான் அர்ஜுன்.

என்ன ஷ்யூ?” என்றவரிடம், “டாட்டோட பி. ரீட்டா தெரியும்ல? அவ அவர் இல்லாத நேரம் பார்த்து கம்பெனி பணத்தைக் கையாடல் பண்ணி இருக்கா. அதைக் கண்டுபிடித்து போலீசில் அவளை இன்னைக்குப் பிடித்துக் கொடுத்துட்டோம்என்றவனின் வார்த்தைகளைக் கேட்ட ஜூனியர்கள் அனைவருமே வாயைப் பிளக்காத குறையாக அதிர்ந்து போய் வசுந்தராவைப் பார்த்தனர். அருணோ, சற்று நேரத்திற்கு முன், அவர் சொன்ன தண்டனை நியாபகம் வந்ததில் சற்று ஆச்சரியத்துடனே அவரைப் பார்த்தான்.

ஏன் சீனியர் இவுங்க கூடவே தானே நாமும் இருக்கோம். எப்போ எங்கே யாரை ஸ்கெட்ச் போட்டுத் தூக்குறாங்கன்னே தெரியலையே??” என்று ஒரு சிக்கன் பீசை வாயால் கவ்வி துவம்சம் செய்தபடி கேட்டவனைத் திரும்பிப் பார்த்தவனோ, “அது தெரிஞ்சா நீ வசுந்தரா தேவி ஆகிட மாட்டியா?” என்று கேட்ட கேள்வியில் மற்றவர்கள் ஜோசப்பைப் பார்த்துச் சிரிக்கவும், “ஒழுங்கா பிளேட்டைப் பார்த்துச் சாப்பிடுங்கடா!” என்று அவர்களை அதட்டியவன், அவமானம் தாங்காது இன்னொரு பிளேட் பிரியாணியை உள்ளே தள்ளினான்.

ரீட்டாவின் மீது சுமத்தப்பட்ட பழி, வசுந்தராவால் அவளுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை! அதில் இருந்து மீள்வது என்பது முடியாத காரியம் என்பதை அவளே நன்கு அறிவாள்.

ஏனென்றால், ஒருவேளை எதிர்காலத்தில் தண்டனை முடிந்து ரீட்டா வெளியே வந்தாலும், அவளை வேலையில் சேர்த்துக் கொள்ள யார் தயாராக இருப்பார்கள்??

இப்பொழுது அவளின் வாழ்க்கை மட்டுமில்லை அவளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருந்தது. அதானலேயோ என்னவோ, நீதிமன்றம் கொடுத்த தண்டனையை விட வசுந்தரா கொடுத்த தண்டனையை நினைத்துத்தான் அதிகம் பொருமினாள் ரீட்டா.

நாளைய ஹியரிங்கை நினைத்துக் கொஞ்சம் டென்ஷனாக இருந்த அர்ஜுனை கூல் பண்ண எண்ணித்தான் யாழினி அவனைக் கடற்கரைக்கு அழைத்து வந்து இருந்தாள்.

ஆனால் இங்கே வந்தும் அதில் இருந்து மீள முடியாது இருந்தவனை, கொஞ்சம் கொஞ்சமாகத் தன்புறமாகத் தன்னை மறந்து திசை திருப்பி ரசிக்க வைத்து இருந்தாள் யாழினி.

மணல்மேட்டில் அமர்ந்து அலைகளுடன் குழந்தையாக மாறி விளையாடிக் கொண்டு இருப்பவளைக் கண்கொட்டாமல் கண்டுகொண்டு இருந்தவனை,அர்ஜுன்! நீயும் வா வா!” என்று முகத்தில் ஈரம் சொட்ட சொட்ட கடலில் நின்று அழைத்தவளிடம்,இல்ல, நீ விளையாடு, நான் இங்கேயே இருக்கேன்என்றான் அர்ஜுன்.

உன்னை..’ என்று பாதி நனைந்த நீல நிற கௌனை தூக்கிக் கொண்டு, மூச்சு வாங்க அவனின் முன் வந்து மண்டியிட்டு அமர்ந்தவளின் செயலில்,ஏய்! ட்ரெஸ் அழுக்காகிட போகுது பாரு!” என்று அலறினான் அர்ஜுன்.

ஆனால் ஆகிட்டுப் போகுது..” என்று தோள் குலுக்கிச் சொன்னவளோ,உனக்கு பீச் பிடிக்காதா அர்ஜுன்??” என்று கேட்டாள்.

ம்ம்ம்.. உன் அளவுக்கு இல்லைஎன்றவனை மீன் விழிகளில் சிறைபடுத்தியவள்,அது என்ன என் அளவுக்கு?” என்று கேட்டாள்.

ம்ம்ம்.. எப்போவாவது ரிலாக்ஸ் பண்ண இங்கே வந்து அமைதியா உட்காருவேன், அவ்வளவு தான்!”

அவ்ளோ தானா..?? அப்போ தண்ணியில் இறங்கி நடக்க மாட்டியா??” என்று ஆச்சரியமாகக் கேட்டவளின் பாவனையில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக் கொண்டு இருந்தவனோ,அதான் சொன்னேனே, உன் அளவுக்கு இல்லைன்னு..” என்றான்.

சரி வா, என் கூடஎன்று கைப் பிடித்து இழுத்தவளிடம்,எங்கே?” என்று கேட்டான் அர்ஜுன்.

வா சொல்றேன்என்று எழுப்பி இழுத்துச் சென்றவள், அலை அடித்துச் சென்ற ஈர மணலில் ஒருபுறமாக அவனைத் திரும்பி நிற்க வைத்து விட்டு, அவனின் முதுகுக்குப் பின் நின்று கொண்டு,ம்ம்ம்.. முன்னே நட அர்ஜுன்!” என்று சொன்னாள்.

எதுக்கு?” என்று திரும்பிக் கேட்க முனைந்தவனைத் திரும்ப விடாது செய்தவளோ,செருப்பை கழட்டிட்டு நட அர்ஜுன்!” என்றாள்.

அவளின் சொல்படி காலணிகளைக் கழட்டி ஓரமாக வைத்தவன், அணிந்து இருந்த முழு பேண்டை குனிந்து முட்டி வரை மடித்து விட்டு, கால்கள் மண்ணில் புதைய நடக்க ஆரம்பித்தான்.

அவனின் பாத சுவடிகளின் மீது தன் கால்கள் பதிய நடந்தவளுக்கு அவ்வளவு குஷியாக இருந்தது.

முன்னால் நடந்தபடியே முகம் திருப்பி,என்ன செய்கிறாள் இவள்?என்று பார்த்தவனுக்கு, அவளின் செயலைக் கண்டு சிரிப்புத்தான் வந்தது.

அர்ஜுனின் பாத சுவடை பார்த்துக் கொண்டே அதன் மீது கால் வைத்துக் கவனமாக நடந்து கொண்டு இருந்த யாழினிக்கு, அடுத்து கால் வைக்க அவனின் தடம் இல்லாது போகவும், நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கே தன்னையே விழுங்கும் பார்வை பார்த்தவனைக் கண்டு வெட்கிச் சிவந்தவளிடம்,ரொம்ப டிராமடிக்கா இருக்க யாழினிஎன்று சொன்னான் அர்ஜுன்.

ஆமா, நான் டிராமடிக் தான்! அதுல என்ன தப்பு?” என்றவள்,

எனக்கு இதெல்லாம் புடிக்கும் அர்ஜுன்என்று சொல்லி விட்டு, சட்டென அவனுக்கு முதுகு காண்பித்து வந்த வழியே திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டாள்.

அதில்,கோச்சுக்கிட்டாளோ?” என்று எண்ணியவன், அவளுக்கு முன் சென்று அவளின் பாதையை மறைத்தபடி நின்று,கோபமா?” என்று அவளின் முகம் நிமிர்த்திப் பாவமாகக் கேட்டான்.

அதில் உருகி போனவளோ, அவனின் தோளை பற்றி எக்கி, அவனின் மூக்கோடு மூக்கு உரசி,நீ ரொம்ப க்யூட்டா இருக்க அர்ஜுன். நான் ஒரு கிஸ் பண்ணிக்கவா?” என்று காதலாகக் கேட்டாள்.

அப்படி ஒரு வார்த்தையை சற்றும் எதிர்பார்த்திராதவனோ, உறைந்து நின்ற நொடி,கொஞ்சம் அதிகமாகவே அர்ஜுனை படுத்துறோமோ??” என்று எண்ணிய யாழினி, அவனின் சட்டையை விடுவித்து விட்டுப் பக்கவாட்டில் சென்று நின்று கொண்டு,கொஞ்சம் தூரம் நடக்கலாமா ?” என்று அவன் முகம் பார்க்காது கேட்டாள்.

தன்னவளின் நெருக்கத்திலும், அவள் காட்டும் ஓராயிரம் உணர்வு வெளிப்பாட்டிலும் கொஞ்மல்ல அதிகமாகவே அவள் பால் ஈர்க்கப்பட்டுக் கொண்டு இருந்தவனோ,ம்ம்ம்..” என்றானே ஒழிய வேறொன்றும் சொல்லவில்லை.

தன்னவனின் கையோடு தன் கையை இணைத்துக் கொண்டு,  அவன் தோள் சாய்ந்து அமைதியாக நடக்க ஆரம்பித்தாள் யாழினி.

இங்கே வந்ததில் இருந்து உண்மையாகவே அர்ஜுனுக்கு நாளை பற்றிய எந்தவித தயக்கமோ, தாக்கமோ இல்லைவே இல்லை என்று கூடச் சொல்லலாம்.

அந்த அளவுக்கு, யாழினி அவனை மொத்தமாக அவள் உலகத்திற்கு கூட்டிச் சென்று காதலித்துக் கொண்டு இருந்தாள்.

அந்தக் காதலில், அதை அவள் வெளிப்படுத்தும் விதத்தில், தன்னை மறந்து அவளை அதிகமாக அர்ஜுன் காதலிக்க ஆரம்பித்து இருந்தான் என்பதே நிதர்சனம்.

ஆனால் என்ன? ஒன்று, யாழினி போல அவனுக்கு அதை வெளிப்படுத்த தெரியவில்லை, அவ்வளவு தான்!!

உனக்கு என்ன பிடிக்கும் அர்ஜுன்?” என்று கேட்டவளிடம்,அப்படி ஒன்னும் பெரிதாக இல்லைஎன்று ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டவனை நின்று இடுப்பில் கை வைத்து முறைத்தவள்,நீ ரொம்ப வேஸ்ட்!” என்று சொன்னாள் யாழினி.

அதில் முகம் சுருங்கிப் போனவனிடம்,ஆனாலும் எனக்கு இந்த வேஸ்ட் ஃபெல்லோவைத்தான் அதிகம் பிடித்து இருக்குஎன்று லேசாக அணைத்துச் சொன்னவளின் வார்த்தைகளில் உள்ளுக்குள் ஸா உருகி போனான் அர்ஜுன்.

உனக்கு என்ன பிடிக்கும்?” என்று அவளைப் போலக் கேட்க,ம்ம்ம்ம்.. அது நிறைய இருக்குஎன்று கண்கள் விரிய, இருபுறமும் அவனை விட்டு விலகி, கைகள் விரித்துச் சொன்னவளைக் கண்டவனுக்கு, ஏனோ யாழினி தன் கையை விட்டது பிடிக்கவில்லை. இருந்தும் அதை வெளியே காட்டிக் கொள்ளாது,அதில் கொஞ்சம் சொல்லு! கேட்கிறேன்..” என்று கேட்டான்.

ம்ம்ம்.. ஓகே..” என்றவள்,

அந்த அலைகளைப் பிடிக்கும்! அது என் கால்களைத் தழுவும் போது, அதை அணைத்து முத்தமிடுவது பிடிக்கும்! அலை அடித்துச் சென்ற கரையில் இப்படி நடக்கப் பிடிக்கும்! தண்ணீரில் விளையாடுவது பிடிக்கும்! ஈர உடையுடன் இங்கே இந்த ஈரமணலில் வந்தமர்ந்து, உன் தோள் சாய்ந்து, அந்தச் சூரியன் இந்தக் கடலில் கரைந்து காணாமல் போவதைப் பார்க்கப் பிடிக்கும்!” என்றவளின் கடைசி ஆசையில் அவளில் கரைந்து காணாமல் போய்க் கொண்டு இருந்தான் அர்ஜுன்.

எங்கே சுற்றினாலும் தன்னிடம் வந்து நிற்பவளையும், அவளின் காதலையும் கண்டு வியந்து போனவனுக்கு, அவளுடன் நூறு ஆண்டுகள் இதே போல வாழ வேண்டுமென்று முதல் முறையாக ஆசை எழுந்தது. “அது நடக்குமா?” என்ற பயமும் கூடவே சேர்ந்து எழுந்தது.

ஆனால் அதையெல்லாம் தூர ஒதுக்கி, இந்த நிமிடம், இந்த நொடி தான் விரும்பியபடி வாழ நினைத்தான் அர்ஜுன், அதுவும் தன்னவளுடன். அதில் அதுவரை இருந்த தயக்கங்களை எல்லாம் கரைத்து விட்டு, யாழினியைத் தன் புறமாகத் திருப்பி நிற்க வைத்தவன்,  “நீ சொன்னதை எல்லாம் உன்னோட சேர்ந்து எனக்கும் ட்ரை பண்ணனும் போல இருக்கு, ஷால் வீ??“ என்று கேட்க,

அதில் எட்டாவது அதிசயமாக, கண்கள் விரிய அவனைப்  பார்த்தவளோ,சூர் சூர்!” என்றாள் முகப் பிரகாசத்துடன்..!!

அதன் பின் நேரம் எப்படிச் சென்றது என்பதே தெரியாது, யாழினியின் ஆசைப்படி, மாலை நேரம் சன்செட்டை பார்த்த பின்பே இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

வீட்டை விட்டுச் செல்லும் போது இருந்த மகனுக்கும், வீடு திரும்பியவனுக்கும் இருக்கும் முக மாற்றங்களை கண்டும் காணாமல் இருந்த வசுந்தராவுக்கு, அதைப் பார்த்து ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும், மறுபுறம் ஏனோ அவரையும் மீறிய ஒருவித துக்கம் ஆட்டிப் படைத்தது.

அது நாளை கோர்ட்டில் நடக்கப் போகும் யுத்ததில் வீழ போகிறவனை நினைத்து கூட இருக்கலாம்!

ஆம்! சற்று முன் தான் வசுந்தராவுக்கு துளசி கேஸ் விசயத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதைக் கண்டுபிடித்ததில் இருந்தே வசுந்தரா இப்படித்தான் லேசாக உள்ளுக்குள் தள்ளாடிக் கொண்டு இருக்கிறார்.

மறுநாள் விடியலில் கோர்ட்டுக்குக் கிளம்பி வந்த மகனை அழைத்த வசுந்தரா, அவனை நேருக்கு நேர் பார்த்து,அர்ஜுன்! இன்னைக்கு கோர்ட்டில் என்ன வேணா நடக்கலாம். ஆனா எது நடந்தாலும், அம்மா நான் சொல்ல போறதை மட்டும் நீ எப்பவும் மறந்திடாதே!” என்று புதிர் போடுபவரின் பேச்சு புரியாதவனோ,என்ன மாம்?” என்று கேட்டான்.

அதற்கு அவர் சொன்ன பதிலைக் கேட்டுச் சற்று அதிகமாகவே குழம்பிப் போனான் அர்ஜுன். ஆனாலும் சொல்வது அவனின் அன்னை என்பதால்,நிச்சயமாகச் செய்றேன் மாம்!!” என்றான் அவன்.

அதை நம்பி கோர்ட்டுக்குச் சென்றவன், அங்கே தாய் கொண்டு வந்து நிறுத்தியவனைக் கண்டு நம்ப முடியாது அதிர்ந்து, வசுந்தராவைத்தான் பார்த்தான்..

என்ன நடக்கிறது இங்கே?” என்பது போல..

Advertisement