Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே

அத்தியாயம் 15

ஈஸ்வர் அன்று காலையே எதோ வேலையாக வெளியே சென்றிருக்க… பாவனி எப்போதும் போல மாமியாருக்கு வீட்டு வேலையில் உதவிவிட்டு மருத்துவமனை கிளம்பி சென்றாள்.

வீட்டில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றால்… பேருந்து நிறுத்தம் இருக்கும். அங்கு வரும் பேருந்தில் ஏறி, இரண்டு ஸ்டாப்பிங் தள்ளி சென்று இறங்கி பிறகு அங்கிருந்து நடந்து செல்வாள். அவசர சமயங்களில் ஆட்டோவில் செல்வதும் உண்டு.

அவள் பேருந்தில் இருந்து இறங்கி மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருக்க… எதிரில் ஈஸ்வர் பைக்கில் வந்து கொண்டிருந்தான். பின் இருக்கையில் அவந்திகா உட்கார்ந்து இருந்தாள்.

ஈஸ்வர் அவளைக் கடக்கும் போது தான் கவனித்தான். சாலை என்பதால் உடனே வண்டியை நிறுத்த முடியவில்லை சிறிது தூரம் சென்று வண்டியை சாலை ஓரமாக நிறுத்தியவன், திரும்பி பார்க்க பாவனி மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

அவள் அவனைப் பார்த்து தான் இருந்தாள். ஈஸ்வரும் அதைக் கவனித்திருந்தான். அவள் நிற்காமல் சென்றுவிட்டது அவனுக்கு ஒருமாதிரி இருந்தது.

பாவனி கைப்பேசியிலாவது அழைத்து எதாவது கேட்பாள் என்று பார்த்தால்… அவள் அவனை அழைக்கவே இல்லை. ஈஸ்வருக்குக் கடுப்பாகி விட்டது. வீட்டிற்கு வந்ததும் அவனே அவளை அழைத்தான்.

அவள் அப்போது தான் உடை மாற்றும் அறையில் இருந்து வந்தவள், கணவன் அழைக்கவும் எடுத்து பேசினாள்.

ம்ம்… சொல்லுங்க.”

உனக்கு என்கிட்டே எதுவுமே கேட்க வேண்டாமா பாவனி?” ஈஸ்வர் கேட்க….

என்ன கேட்கணும்?” என்றாள் பதிலுக்கு.

நான் அவந்திகாவோட பைக்கில வந்தது பத்தி.”

அவ உங்க அத்தை பொண்ணு… நீங்க அவளோட மாமன் பையன், இதுல நான் கேட்க என்ன இருக்கு?”

ஒ அப்படியா… அவ்வளவு நல்லவளா நீ.” என்றான் ஈஷ்வர் நக்கலாக.

என்னவோ நான் சொல்றது எல்லாம் அப்படியே கேட்டுடுற மாதிரி பேசாதீங்க. இனி அவளோட இப்படிப் பைக்கிலப் போகாதீங்கன்னு சொன்னா கேட்டுடுற மாதிரிதான்.”

எதுக்குக் கேட்கணும்? நீ தானே டி அவளைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்ன.”

எனக்குத் தெரியும் ஈஸ்வர், நீ இப்படி எடக்கு மடக்கா தான் பேசி வைப்பீங்க. அதுதான் நான் எதுவும் கேட்கலை. எனக்கு வேலை இருக்கு, என்னை வேலை பார்க்க விடுறீங்களா… நீங்க யார் கூடப் போனா எனக்கு என்ன?” எனச் சொல்லிவிட்டு பாவனி வைத்து விட்டாள்.

அவள் வைத்த பிறகு வாயை வச்சிட்டு சும்மா இருந்திருக்கலாம் என ஈஸ்வருக்குத் தோன்றியது. அவன் மீண்டும் அழைத்தால் பாவனி எடுக்கவில்லை.

பாவனிக்கு மதியம் வரை வேலை சரியாக இருந்தது. மதியம் உணவருந்தி விட்டு அவள் ஓய்வாக இருக்கும் நேரம் முரளி வந்தான். அவன் தள்ளி இருந்தாலும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க… கையில் இருந்த புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாலும், பாவனியால் அவனின் பார்வையை உணர முடிந்தது.

பாவனி சாப்பிட்டாச்சா?” என முரளி கேட்க…

ம்ம்… சாப்பிட்டேன்.” என்றாள் புத்தகத்தில் இருந்து பார்வையை எடுக்காமல்.

என்னங்க பதிலுக்குச் சாப்பிட்டாச்சுனு கேட்க மாட்டீங்களா?” முரளி பேச்சை வளர்க்க…. பாவனி அங்கிருந்து எழுந்து கொண்டாள்.

யூனிபார்ம் கூட அழகா இருக்கிறது உங்களுக்குத் தான்.” என தலை முதல் கால் வரை அவளைப் பார்வையால் வருடியபடி சொல்ல…. வாடாமல்லி நிறத்தில் பேண்ட்டும் சட்டையும் அணிந்திருந்தவளுக்கு முரளியின் பார்வையில் உடல் கூசிப் போனது.

இதை விடப் புடவை கட்டினா உங்களை அடிச்சுக்கவே முடியாது. அன்னைக்குக் கூட….” என முரளி பேசிக்கொண்டே செல்ல… பாவனிக்குத் தன்னைக் கட்டுபடுத்த முடியாமல் போய் விட்டது.

இங்க பாருங்க நான் உங்களுக்கு ஜூனியர் தான். அதுக்காக என்கிட்டே என்ன வேணா பேசிட முடியாது.”

என் டிரஸ் பத்தி பேசுற உரிமை எல்லாம் நான் உங்களுக்குக் கொடுக்கலை. என்னையே பார்க்கிறது, அத்து மீறிப் பேசுறது எல்லாம் இதோட நிறுத்திக்கோங்க. நான் எப்பவும் பொருத்து போவேன்னு நினைச்சுக்காதீங்க.” என்றவள், விடுவிடுவேண்டு அங்கிருந்து உடைமாற்றும் அறைக்குச் சென்று விட்டாள். முரளிக்கு முகத்தில் ஈயாடவில்லை. பாவனி இப்படிப் பேசுவாள் என அவன் எதிர்பார்க்கவில்லை.

அங்கிருந்த நர்ஸிடம், “சும்மா விளையாட்டுக்கு தான் பேசினேன், அதுக்குப் போய்க் கோவிச்சுகிட்டாங்க.” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

உடைமாற்றி வந்த பாவனி, “சிஸ்டர், இன்னும் ரெண்டு பேர் தான இருக்காங்க. நீங்களே பிசியோதெரபி கொடுத்திடுங்க.” எனச் சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

கீழே அலுவகத்திலும் விடுமுறை சொல்லிவிட்டு வெளியே வந்தவளுக்கு, “ச்ச எத்தனை நாள் இவங்களை எல்லாம் பொறுத்து போறது.” என எரிச்சலாக வந்தது. கிடைத்த ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு வந்து விட்டாள்.

ஈஸ்வர் அவன் அலுவலக அறையில் இருந்ததால்… பாவனி வந்தது தெரியாது. அறையில் உறங்கிக் கொண்டிருந்த மகளின் அருகே சென்று பாவனியும் படுத்துக் கொண்டாள்.

மாலை மனைவியை அழைத்து வர எண்ணி ஈஸ்வர் உடைமாற்ற அறைக்குள் வந்தவன், அப்போதுதான் உறங்கிக் கொண்டிருந்த மனைவியைக் கவனித்தான்.

வெளி ஹாலுக்கு வந்தவன், “இவ எப்போ வந்தா?” என்று கேட்க..

இன்னைக்குச் சீக்கிரமே வந்திட்டா…” என்றார் ஊர்வசி.

மாலை மகள் எழுந்து கொண்ட நேரம் தானும் எழுந்த பாவனி, மகளுக்கு உண்ண கொடுத்து, முகம் கழுவி உடை மாற்றி விட்டாள். ஈஸ்வர் டீ குடித்தபடி அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். பாவனியின் முகத்தில் இன்னும் கோபம் மிச்சம் இருக்க… ஈஸ்வர் காலையில் தான் பேசியதில் கோபமாக இருக்கிறாள் என நினைத்துக் கொண்டான்.

பாவனி எனக்கு ஒரு உதவி பண்றியா? எனக்கு இன்னும் வேலை இருக்கு எனக்குப் பதில் கடைக்குப் போறியா?” என்றதும், அவனை முறைத்தாலும், மறுக்காமல் மகளையும் தூக்கிக் கொண்டு கடைக்குச் சென்றாள்.

அவளே இன்னைக்குத் தான் சீக்கிரம் வந்தா… நீ வீட்ல இருக்க விடுறியா?” என்றார் ஊர்வசி.

எனக்கு வேலை இருக்குமா? என்றவன், அவன் அறைக்குள் சென்று விட்டான்.

மகளுக்கு இரவு உணவு கொடுக்கத்தான் பாவனி வீட்டுக்கு வந்தாள்.

தேங்க்ஸ் பாவனி, நீ இருந்ததுனால நான் இன்னைக்கு நிறைய வேலை முடிச்சிட்டேன்,” என்றான் ஈஸ்வர். பாவனி பதில் எதுவும் சொல்லவில்லை.

இரவு உணவு உண்டு மகளை உறங்க வைக்கப் பாவனி அறைக்குச் சென்று விட… ஈஸ்வர் சிறிது நேரம் சென்று வந்தான்.

மறுபக்கம் கட்டிலில் கால் நீட்டில் சாய்ந்து உட்கார்ந்தவன், “காலையில் ஒரு வேலையா வெளிய போயிருந்தேன். அப்போ வழியில அவந்திகாவை பார்த்தேன். காலையிலேயே எங்க ஊர் சுத்த போனாளோ தெரியலை… என்னை வீட்ல விடுங்கன்னு சொன்னா… அதுதான் கூட்டிட்டு வந்தேன்.” என்றான் அவனாகவே.

உண்மையில் அவன் சொல்லிய பிறகு தான் பாவனிக்கு அந்த விஷயம் நினைவிற்கே வந்தது. அவள் இன்னும் மருத்துவமனையில் நடந்த விஷயத்தில் இருந்தே வெளி வரவில்லை.

எனக்கு உங்களைத் தெரியும் ஈஸ்வர், நீங்க இவ்வளவு எல்லாம் விளக்க வேண்டாம்.” என்றாள்.

இப்போ இப்படி சொல்றவ…. அன்னைக்கு எப்படி டி என்னை வேண்டாம்னு சொன்ன…. அதோட அவந்திகாவை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு வேற சொன்ன….” ஈஸ்வர் ஆற்றாமையுடன் கேட்க…

நான் அன்னைக்கு அந்த நிலையில் தான் இருந்தேன். அதோட….” என்றவள் ருக்மணி பாட்டி பேசியதையும் சொன்னாள்.

“அவங்க ஒரு ஆளுன்னு அவங்க பேசுறது எல்லாம் பெரிசா எடுத்திட்டு என்கிட்ட அப்படி வேற பேசுவியா?”

அது மட்டும் காரணம் இல்லை. உண்மையாவே நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி எங்க அம்மாவுக்கு இப்படி ஆகி இருந்தா…. நான் கல்யாணத்தைப் பத்தி யோசிச்சே இருக்க மாட்டேன்.”

நான் வரலைனா எனக்குப் பதில் அவந்திகாவை கல்யாணம் பண்ணி இருப்பீங்களோ…. என்னால்தான் கெட்டு போச்சோன்னு அதுவும் ஒரு எண்ணம்.” என்றவள்,

ஏன் ஈஸ்வர் என்னைக் கல்யாணம் பண்ணதுக்குப் பதில் அவந்திகாவை கல்யாணம் பண்ணி இருந்தா…. இன்னும் சந்தோஷமா இருந்திருக்கக் மாட்டீங்க.” என்றாள்.

Advertisement