Advertisement

EPILOGUE
சில வருடங்களுக்கு பிறகு.
ஆனந்தவள்ளி தொழிற்சாலைகளின் மொத்தப் பொறுப்புகளையும் பேரன்களிடம் ஒப்படைத்து விட்டு கொள்ளுப்பேரன், பேத்திகளை கவனிக்கும் பொறுப்பை கையில் எடுத்திருந்தாள்.   
யாழினி யாதுநாத் மற்றும் சஞ்ஜீவோடு தொழிற்சாலைகளை கவனித்துக்கொள்ள, சரஸ்வதி கல்பனாவோடு வீட்டைக் கவனித்துக் கொண்டாள். 
அவள் வீட்டைக் கவனித்துக்கொள்வதில் சஞ்ஜீவுக்கு எந்த பிரச்சினையுமில்லை. தோட்டத்தையும் பராமரிப்பதுதான் பிரச்சினை.
அதை நடுகிறேன் இதை நடுகிறேன் என்று வெயிலில் காய்வது, மண்ணை அலைவது சஞ்ஜீவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
“கல்யாணத்துக்கு பாலர் போய் அலங்காரமெல்லாம் செஞ்சு எவ்வளவு அழகா மிளிர்ந்த? வெயில்ல காயாம அடிக்கடி பாலர் போய் ஸ்கின்னை அழகு படுத்திகிட்டா என்னவாம்? எப்போ பார்த்தாலும் வெயில்ல நின்னுகிட்டு. தோட்டக்காரனுக்கு காசு கொடுத்து வேலைக்கு வச்சா அவன் வேலைய நீ பாக்குற. வெட்டியா அவனுக்கு சம்பளம் கொடுத்துக்கிட்டு”
கல்யாணமன்று கம்பனியில் பர்ஸ்ட் ரேங்க் ஸ்டாப் இல் வேலை பார்க்கும் சில பெண்கள் சரஸ்வதியை பார்த்து “கிளாஸ் கிளாஸ் என்று இருந்தவரு என்னடி இது போயும் போயும் இப்படி ஒருத்திக்கிட்ட மாட்டிக்கிட்டாரு” என்று பேச
“காதல் வந்தா கரடியும் அழகாத்தான் தெரியும் போல” என்று சிரித்தாள் இன்னொருத்தி.
அது சஞ்ஜீவின் காதில் மாத்திரமல்ல சரஸ்வதியின் காதிலும் விழத்தான் செய்தது.  விழவேண்டியேதான் கூறியும் இருந்தனர்.
யாரென்றே தெரியாத இவர்கள் சொல்வதை கேட்க வேண்டுமா என்று சரஸ்வதி பொருட்படுத்தாதிருக்க, சஞ்ஜீவோ சரஸ்வதியை சென்னை பெண்ணாக மாற்ற முயன்றான்.
ஆனால் அவளோ எது கிடைத்தாலும், நடுவதிலும், பயிரிடுவதிலும் காலத்தைக் கடத்தி சஞ்ஜீவை கடுப்பேத்தி விடுவாள்.
என்னதான் முறைத்துக்கொண்டு திரிந்தாலும், இருவரின் புரிதலும், காதலும் குறையவில்லை. ஒரு வருடத்திலையே சஞ்ஜீவை போல் பெண்குழந்தையை சரஸ்வதி பெற்றெடுக்க, காஞ்சனா என்று பெயரிட்டிருந்தனர்.
காஞ்சனாவை சுமந்த நேரம் அதட்டி வீட்டில் அமர வைத்திருந்தான். அப்போழுது மேனி மிளிர்ந்து அழகாக இருந்தாள்.   
“பார் பாலும், பழமும் சாப்பிட்டு எவ்வளவு அழகா இருக்க, இப்படி இருக்க முடியாதா?”
“அதுக்கு நான் எல்லா மாசமும் கர்ப்பமாக இருக்கணும்” என்று பேசி அவன் முறைப்பை பெற்றுக் கொண்டாள்.
அவன் சொல்வதை கேட்பதில்லையென்று அவளை அவள் போக்கிளையே விட்டு விட்டவன் திட்டுவதையும் விடுவதில்லை.
இன்றும் அதே போல் திட்ட, “நான் என்ன பால் வண்ண வெள்ளை நிறமா? பாலர் போய் மின்ன? மஞ்சள் பொடியும், கடலை மாவும் போதாதா?” என்று அவன் வாயை அடைக்க முயல அவளை முறைத்தான் சஞ்ஜீவ். 
“மாமா’ என்றவாறு யாழினியின் மகள் யாக்வி அங்கே வர இருவரும் அமைதியாகினர்.
“என்ன நீங்க மட்டும் வந்திருக்கிறீங்க அம்மாவும் அப்பாவும் எங்க?”
நான்கே வயதான தேவதையின் கேள்விக்கு “கொஞ்சம் வேலை இருக்குனு அம்மாவிம் அப்பாவும் இருந்துட்டாங்க. நான் மட்டும் கிளம்பிட்டேன். சாக்லேட் வாங்கிட்டு வந்தேன். சமத்தா காஞ்சனாவோட போய் சாப்பிடுவீங்களாம்” என்று சொல்ல அவளை தேடி ஓடினாள் சின்னவள்.
“ஆமா  உண்மையிலயே ரெண்டு பேரும் எங்க? சினிமாவாச்சும் பார்க்க போய்ட்டாங்களோ?” சரஸ்வதி சந்தேகமாக கேட்க,
“உன்ன போல பிள்ளையை ஏமாத்த அறிவெல்லாம் யாழினிக்கு இல்ல” என்று சரஸ்வதியின் கையால் ஒரு அடியையும் வாங்கிக் கொண்டான்.
“அப்பாவை பார்க்க போய் இருக்காங்க” என்றதும்
“இத்தனை வருஷம் கழிச்சி ஏன்? எதுக்காக?” என்ற பார்வையை வீசினாள் சரஸ்வதி.
ஈஸ்வர் ஜெயிலுக்கு சென்ற பிறகு எக்காரணத்தைக் கொண்டும் யாரும் அவரை சந்திக்கக் கூடாதென்று ஆனந்தவள்ளி உத்தரவிட்டிருந்தாள். அதன்படி யாருமே அவரை சந்திக்க முயற்சி செய்யவுமில்லை. அவசியமும் ஏற்படவில்லை. அனால் இன்று அவரை சந்திக்க அவசியம் ஏற்பட்டிருந்தது.
சமீபகாலமாக அவர் அவராக இல்லையாம். ஒரு பெண்ணை போல் நடந்துகொள்கிறாராம். நீண்ட கூந்தல் இருப்பது போல் தலை வருகிறாராம். பெண்ணை போல் நடக்கிறாராம். பேசுகிறாராம். முகபாவனைகள் செய்கிறாராம்.
சில கைதிகள் ஈஸ்வருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று கூறியிருக்க, சில கைதியோ ஈஸ்வரை ஆவி பிடித்து ஆட்டுகிறது என்று கூறியிருந்தனர். அவரை பார்க்கத்தான் இருவரும் சென்றிருந்தனர்.  
ஈஸ்வரை தனியாக ஒரு செல்லில் அடைத்திருக்க, யதுநாத்தும் யாழினியும் கம்பிகளுக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
“பார்த்தியா உன் அப்பன. எங்கப்பாவை கொன்னு என்னையும் வீட்டை விட்டு தொரத்த பிளான் பண்ணானே அவன் கதிய பாத்தியா” அடிக்குரலில் யதுநாத் சீற 
“அவர எங்கப்பான்னு சொல்லாதீங்க. எங்கம்மாவை கொன்னு என்னையும் கொல்லப் பார்த்தவரு” 
“செத்து தொலைஞ்சிருக்கணும் டி நீ. அன்னைக்கு சாகாம இன்னைக்கு என் உசுர எடுத்துக்கிட்டு இருக்க,  உன் அப்பனுக்கு பைத்தியம் பிடிச்சா மாதிரி உனக்கும் ஒருநாள் பைத்தியம் பிடிக்கணும்” கம்பிகளை இறுக பற்றிக்கொள்ள ஈஸ்வர் இவர்களை வெறித்துப் பார்த்திருந்தார்.
“அப்போ எதுக்கு என்ன கல்யாணம் பண்ணீங்க? எதுக்கு என்ன தினம் தினம் டச்சர் பண்ணுறீங்க?’ கண்களில் நீரை நிறைத்து யாழினி கேட்க” ஈஸ்வரின் கண்களில் மின்னல் எட்டிப் பார்த்திருக்க மெதுவாக இவர்களை நோக்கி நடக்கலானார்.
“உன்ன கல்யாணம் பண்ணி கூடவே வச்சுக்கிட்டா தாண்டி பழி வாங்க முடியும், உன் அப்பன பழி வாங்க முடியல. அவன் பெத்த உன்ன பழி வாங்குறேன்” ஈஸ்வரை கூர்மையாக பார்த்தவாறு கூற,
யதுநாத்தின் அருகில் வந்த ஈஸ்வர் “எனக்கு இது போதும் ரேணு. என் நிம்மதி போச்சே. வாழ்க போச்சே” பைத்தியம் போல் கையையும் தலையையும் ஆட்டுவித்தார்.
அவரின் கண்களை நேருக்கு நேராக சந்தித்த யதுநாத் யாழினியின் தோளின் மீது கை போட்டு “இப்படியெல்லாம் நடக்கணும் என்றுதானே நீ ஆசைப்பட்ட?” என்று சத்தமாக சிரித்தான்.
“உங்க மக நான் உங்க நடிப்புல பாதியாவது எனக்குள்ள இருக்காதா?” யாழினியும் சிரித்தாள்.  
யாழினியின் தலையை அவன் புறம் திருப்பி அவள் இதழில் மெதுவாக முத்தமிட்டு இருவரையும் அதிர செய்தவன் “நீ செஞ்ச குற்றங்களுக்கு கோட் ஆயுள் தண்டனை கொடுத்திருக்கு. இத்தனை வருஷங்கள் ஜெயில்ல இருந்த உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு, பேய் பிடிச்சு ஆட்டுதுனு சொன்னாங்க. நீ தான் உலகமாகா நடிகனாச்சே. போலீஸ் கிட்ட நடிச்சாலும், கைதீங்க கிட்ட நடிச்சாலும் எங்களை பார்த்ததும் உன் இரத்தம் சூடாக்கி உன் உண்மையான முகம் கொஞ்சமே கொஞ்சம் வெளிய வரும் என்று எதிர்பார்த்தேன். வந்திருச்சு” உதடு வளைத்து சிரிக்க முகம் மாறினார் ஈஸ்வர்.
“பைத்தியம் போல நடிச்சு மனநல மருத்துவமனைக்கு போய், அங்க இருந்து தப்பிச்சு போகத்தானே பாக்குற? நீ ஜெயில்ல இருந்தாலும் உன்ன கண்காணிச்சு கிட்டுதான் இருக்கேன். மறந்தும் அந்தத் தவற செஞ்சிடாத. அங்க போனா உனக்கு நரகத்தை காட்ட தயார் செஞ்சி வச்சிருக்கேன்” என்று மீண்டும் சிரிக்க, யாழினி அவன் கையை இறுக பற்றிக் கொண்டாள்.
தன் குட்டுஉடைந்தும் ஈஸ்வர் “உன்னை சும்மா விட மாட்டேன்” என்று கத்த காதை குடைந்த யதுநாத் “அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தா பொறந்து வா’ என்று விட்டு யாழினியின் இடுப்பில் கைபோட்டு நடந்தான்.  
அவர்களுக்காக வெளியே காத்திருந்த வெற்றிமாறன் “என்ன யதுநாத் ஆள தூக்கி மனநல மருத்துவமனையில போட்டு நம்ம ட்ரீட்மென்ட்டை கொடுக்கலாமா?” என்று கேட்க,
“வேணாம் மணிமாறன் சார். {வெற்றி தான் உலகத்துக்கு மணிமாறன் ஆச்சே. டோன்ட் பேனிக்} ஜெயில்ல தினம் தினம் அந்தாளுக்கு டாச்சர் கொடுக்க ஏற்பாடு செஞ்சிதான் இருக்கேன். மெண்டல் ஹாஸ்பிடல் ட்ரீட்மெண்ட்டுல முழுசா பைத்தியம் ஆனா அவர் செஞ்ச குற்றங்களை மறந்துடுவாரு. அவர் மறக்கக் கூடாது”
ஆவேசமானவனின் தோளில் தட்டிக் கொடுத்த வெற்றி “இந்த மாதிரி ஆளுங்க உசுரோடவே இருக்கக் கூடாது என்று எண்ணுபவன் நான். உன் விருப்பப்படியே நடக்கட்டும்” அதற்க்கு மேல் பேசாமல் அவர்களை வழியனுப்பி வைத்தான்.   
வீட்டுக்கு வரும் வழியெல்லாம் யாழினி யதுநாத்தோடு சண்டை பிடித்தவாறுதான் வந்தாள்.  “அதெப்பெடி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம அவர் முன்னாடி முத்தமிடலாம். அதுவும் சுத்தி நாலு பக்கமும் கேமரா வச்சிருக்கும் போது?”
“விடுடி விடுடி என் பொண்டாட்டிய தானே கிஸ் பண்ணேன். இதெல்லாம் ஒரு பிரச்சினையா?” வண்டியோட்டியவாறே அவள் இடுப்பில் கைபோட்டு அவன் புறம் இழுத்து மீண்டும் முத்தமிட அவனை அடிக்கவே ஆரம்பித்தாள் யாழினி.
ஈஸ்வரிடம் கூறியது போல் இருவருக்கிடையும் பெரிதாக எந்த சண்டையும் வருவதில்லை. ரோஜாவிலிருக்கும் முள்ளை நீக்குகிறேன் என்று யாழினியின் மூக்குக்கண்ணாடிக்கு பதிலாக லென்ஸை மாட்டிவிட்டிருக்க, ரொமான்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் யார் இருக்கிறார்கள் என்றும் பாராமல் அவளை முத்தமிட்டு மற்றவர்களை கண்ணை மூட வைப்பதுமில்லாமல் யாழினியிடமிருந்து அடியையும் பெற்றுக்கொள்வான்.
யாக்வி பிறந்த பின்னும் யதுநாத்தின் சேட்டை குறையவில்லை. குழந்தையை முத்தமிடும் பொழுதெல்லாம் யாழினியை முத்தமிட்டு கடுப்பேற்றுவான்.
யாக்வியும் “நானும் நானும்” என்று யாழினியின் உதட்டிலையே முத்தமிட யதுநாத்தைத்தான் முறைப்பாள் யாழினி.
“பேபி நீ அம்மா கன்னத்துல கிஸ் பண்ணு, லிப்ஸ்ல நான் மட்டும்தான் கிஸ் பண்ணனும்” என்று குழந்தையைக்கு கூற யாக்வியோ அதை காலை உணவின் போது அத்தனை பேரின் முன்னிலையிலும் கூறி விட்டாள்.
பெரியவர்கள் குழந்தை கூறியது காதில் விழவே இல்லை என்பது போல் காலை உணவை உட்கொள்ள, யாழினி யதுநாத்தை முயன்ற மட்டும் முறைக்கலானாள். அவனோ “என்ன பேபி. இட்லிக்கு அம்மா வச்ச சட்னி காரமா இருக்கா? ஒரு முத்தம் கொடுத்தா எல்லாம் சரியாக போய்டும்” என்று அவள் புறம் சாய்ந்து முத்தமிடுவது போல் உதடு குவித்து சீண்ட,
சஞ்ஜீவோ சரஸ்வதியை பார்த்து “இங்க இருந்து ஏதாச்சும் கொஞ்சம் கத்துக்கடி” என்று யாழினையும் யதுநாத்தையும் காட்டினான்.
“முத்தம் தானே வேணும், உள்ள வாங்க. இப்போ அமைதியா சாப்பிடுங்க. காஞ்சனாவை சமாளிக்கலாம் உங்கள சமாளிக்கிறதுதான் பெரும் பாடா இருக்கு” அலுத்துக்கொள்வது போல் உதட்டை சுளித்தாள்.
காலை காட்ச்சி இவ்வாறே தினமும் இவ்வீட்டில் கண்டு மகிழலாம். அவர்களை தொந்தரவு செய்யாமல் நாமும் விடைபெறுவோமாக. நன்றி  

Advertisement