Advertisement

“சாயங்காலம் தான் வரலாம்ன்னு நினைச்சேன். ஆனா வந்துட்டு வேலைக்கு கிளம்ப நேரமாகிட்டா? அதான் இந்நேரம் வந்தேன். நீ ப்ரீயா இருக்கும் போது  தென்றலோட வீட்டுக்கு வா ஜீவா…” என்றாள் அவள்.

“ஆமா, லீவுன்னா அந்த புள்ளைய கூட்டிட்டு வா. அம்மா வீடு இல்லைன்னு நினைச்சு மறுவாம சட்டுன்னு கெளம்பி வந்துட்டே இரு. நா பாத்துக்குவேன். என்ன விளங்குச்சா?…” என சோலையம்மாள் அதையும் அதட்டியே சொல்ல ஜீவாவின் விழிகள் கலங்கியது.

சோலையம்மாவை ஆறுதலாக கட்டிக்கொண்டு விசும்பியவளுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும் என தோன்றியது.

“அட இதுக்கு போயி கண்ண கசக்கிக்கிட்டு? அந்த தம்பி வந்தா என்ன நினைக்கும்?…” என்ற சோலையம்மாள்,

“சரி நாங்க கெளம்புதோம். அரைநாள் விடுப்புதான் கேட்டேன். நேத்தும் போகலையா. அதான்…” என சொல்லி எழுந்துகொண்டார்.

“இருங்க ஆன்ட்டி, எதுவுமே சாப்பிடாம போவீங்களா?…” என அவர்களுக்கு குடிக்க எடுத்து வந்து கொடுத்தவள் மேலும் பத்து நிமிடங்கள் இருந்து பேசிவிட்டு பாலாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள்.

முதலில் பாலா இல்லாது தனியாக தான் இருப்பாளோ என நினைத்து தான் கிளம்பி வந்தனர்.

இப்போது பாலாவும் வீட்டில் இருக்க எதற்கு இருவருக்கும் இடைஞ்சலாக என்று கிளம்பிவிட்டார்கள்.

“என்ன சென்டிமென்ட்டா? திரும்ப கண்ணு கலங்கி இருக்கு?…” என்றான் பாலா.

“ஹ்ம்ம், அம்மா மாதிரி பார்த்துப்பாங்கலாம். இதை சொல்லவும் மனசு வேணுமே? அதான் எமோஷனல் ஆகிட்டேன்…”

“வேற என்ன சொன்னாங்க?…”

“என்ன? வேற ஒன்னும் சொல்லலையே?…”

“ஈஸ் இட்?…” என்றவனின் புன்னகையில் பார்வையை திருப்பிக்கொண்டவள்,

“இது எல்லாம் தென்றலுக்கும், எனக்கும் வாங்கிட்டு வந்தாங்களாம்…” என காண்பித்து டீப்பாயில் இருந்த பூவை எடுத்து ப்ரிட்ஜில் வைக்க டப்பாவை தேடினாள்.

“என்ன தேடற? கேட்டா நானே எடுத்து தருவேன். இன்னும் நீ இங்க பழகலை இல்லையா?…” என்றவன் அவளின் பின்னால் வந்து மேலே இருந்த ஒரு டப்பர்வேர் பாக்சை எடுத்து நீட்டினான்.

“பூ வாங்கனும்ல. சொல்லிவிட்டா வேலைக்கு வரும் போது அந்த ஆன்ட்டி வாங்கிட்டு வருவாங்க…” என்று அவள் வைத்திருந்ததை ஆழ நுகர்ந்தான்.

“நான் வச்சிட்டு வரேன். நீங்க போங்க…” என்றவளின் வேகமான  பேச்சிற்கு மறு பேச்சின்றி உடனே அங்கிருந்து நகர்ந்தவன் அலுவலக அறைக்குள் நுழைந்துகொண்டான்.

கால் மணி நேரம் ஆகியும் அவன் தன்னை அழைக்காமல் இருக்க வானதி வாங்கி வந்ததை எல்லாம் ப்ளேட்டில் அவனுக்கு எடுத்து வைத்து சென்றாள். அறையில் அவனை காணாது,

“பாலா…” என்றழைக்க புத்தக அலமாரியின் பின்னால் இருந்து எட்டி பார்த்தவன்,

“உள்ள வா, ஏன் ரூம் வாசல்லையே நின்னுட்டு கூப்பிட்டுட்டு இருக்க?…” என்று சொல்லி கையில் இருந்த புத்தகத்தை அங்கேயே வைத்துவிட்டு வந்து அமர்ந்தான்.

“ஸ்வீட்ஸ்…” என நீட்டவும் எடுத்துக்கொண்டவன்,

“நீ சாப்பிடலை?…” என கேட்டு அவள் தர வாங்கியவன் ஒன்றும் பேசாமல் இருப்பதில் சங்கடப்பட்டு தானே ஆரம்பித்தாள்.

“வீக்கென்ட் ஆனா அங்க வான்னு சொல்லியிருக்காங்க…”

“ஓஹ், போய்ட்டு வாங்களேன். நானே கூட்டிட்டு போய் விடறேன். நாளைக்கு போகனுமா?…” என சாதாரணமாக கேட்க,

“என்னாச்சு? கோவமா இருக்கீங்களா?…” என்றாள்.

“ம்ஹூம், இல்லை. உனக்கு ஏன் அப்படி தோணுது?…”

“இல்லை சரியா பேசாம கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்றது மாதிரி இருந்துச்சு…”

“சரியான்னா? புரியலையே?…” வேண்டுமென்றே இப்போதும் சாதாரணமாக பேச,

“இல்லை உங்களுக்கு தெரியுது நான் என்ன சொல்றேன்னு. நீங்க வான்ட்டடா பன்றீங்க…” என்றாள் அழுத்தமாக.

“ஓஹ், சரி அதனால என்ன?…”

“பாலா…”

“உனக்கு நான் அப்படி பேசினா அன்ஈஸியா இருக்கு. பக்கத்தில வந்தாலும் அப்படித்தான். அதான் இப்படி பேசறேன். இதுவும் கூடாதுன்னா எப்படி? நீயே சொல்லு?…” எனவும் திகைத்து பார்த்தாள்.

“தென்றல்…” என இழுக்க,

“இப்போ இங்க தென்றல் இல்லையே? அவளை வச்சுட்டு நான் உன்கிட்ட இப்படி நடந்தா நீ அன்ஈஸியா பீல் பண்ணலாம். இப்போ தான் இல்லையே?…”

“இதெல்லாம் ஹ்யூமன் நேச்சர் ஜீவா. ஏன் சங்கடமா பீல் ஆகற நீ?…” என அவளின் கையை பிடித்தவன்,

“புகைஞ்சிட்டே இருக்கறதுக்கு இந்த தவிப்பை எரிச்சிடறது மேல் ஜீவா. ஆனா உன்னோட விருப்பம் இல்லாம நோ வே. அதனால இப்ப நீ ப்ரீயா இரு…” என அவள் அமர்ந்திருந்த விதத்தை கண்டு சொல்ல,

“சரி நீ போய் ரெஸ்ட் எடு. இல்லையா புக் படி. நானும் வேலையை பார்க்கறேன்…” என்று பாலா சொல்ல அப்போதும் இடத்தை விட்டு அசைந்தாள் இல்லை.

“ஜீவா ரூம்க்கு போ. இல்லன்னா நான் கிளம்பி வெளில போய்ட்டு வரேன். இதுக்கு மேல இருந்தா கண்டிப்பா உன்னை கஷ்டப்படுத்திருவேன்…” என்றவனின் வார்த்தைகளில் அடக்கப்பட்ட தவிப்பு அடங்காமல் திமிறியது.

“கஷ்டம்ன்னு யார் சொன்னா? சும்மா சும்மா நீங்களா பேச கூடாது. நான் சொன்னேனா?…” என்று அவனிடம் அவள் பட்டென்று பேச,

“கஷ்டமில்லையா அப்போ?…” என்றவனின் இதழ்கள் சிரிப்பில் துடித்தது.

“நான் எதுவும் சொல்லலையே? எனக்கு திடீர்ன்னு எல்லாம். எல்லாமே வேக வேகமா நடந்திருச்சு. என்ன செய்ய நான்? அதான் ஒருமாதிரி இருந்தேன். மத்தபடி ஓகே தான்…” என்று கடைசி வார்த்தையை சத்தத்தை விழுங்கிக்கொண்டே சொல்ல இன்னும் வெடித்து சிரித்தான் பாலா.

“இப்பவும் தெளிவா சொல்லலையே நீ?…” என வம்பிழுக்க,

“என்ன தெளிவா சொல்லனும்?…”

“நான் லாயர்ம்மா. எனக்கு சாட்சிகளும் சரி, ஒப்புதல் வாக்குமூலமும் சரி தெளிவா இருக்கனும். இல்லைன்னா ராங் ஜட்ஜ்மென்ட்டா போயிரும்…”

பாலா கிண்டலாய் சொல்லவும் ஜீவாவிற்கு கோபமே வந்துவிட்டது. ‘இத்தனை சொல்லியும் இவன் வேண்டுமென்று பேசுகிறானே என?’

“இதுக்கு மேல ஒன்னும் சொல்ல முடியாது? கிளம்பி போகனும்னா போய்க்கோங்க…” என்று எழுந்து சென்றவளை மறித்து நின்றவன்,

“இது தப்பிச்சி போகற மாதிரி இருக்கே. சொல்றதை நேரடியா சொல்லேன்…” என சீண்ட, அவனின் மார்பில் கை வைத்து தள்ளினாள்.

“ஆமா தப்பிச்சிக்கறேன்…” என அவனை தாண்ட முற்பட, அவளை இழுத்து அணைத்தவன் அவளோடு சரிந்தான் கட்டிலில்.

“விடுங்க, நான் தான் ஒப்புதல் தரலையே? அப்பறம் எதுக்கு?…” என அவனின் முதுகில் அத்தனை அடி வைக்க,

“சரியான பாக்ஸிங் கேர்ள் நீ. என்ன அடி?…”  என்று சிரித்தவன் விரல்கள் அவளுள் அநியாயத்திற்கு அத்துமீறி விளையாட ஜீவாவின் உணர்வுகள் கரைபுரண்டது.

“வெளிச்சமா இருக்கு பாலா…” மெல்லிய குரலில் திணறினாள்.

“கண்ணை மூடிக்கோ ஜீவா. இவ்வளவு ஸ்ட்ராங் ஸ்டேட்மென்ட்க்கு அப்பறமும் தீர்ப்பை எழுதலைன்னா சாமிக்குத்தம் ஆகிரும்…” என்றவனின் பேச்சுக்களை எல்லாம் சிதறாமல் உள்வாங்கினாள்.

அவனின் காதோரம் மொழிந்த அவளின் நாணம் பூசிய வரிகள் எல்லாம் கானல்வரிகளாய் அவனுள் கலந்து விட்டது கரைந்தது.

உடலுக்குள் மல்லிகை தூறல்

என் உயிருக்குள் மெல்லிய கீறல்

சுகமாய் சுகமாய் கொள்ளையிடு

என் உயிரை மட்டும் விட்டுவிடு

சட்டென நனைந்தது நெஞ்சம் சர்க்கரையானது கண்ணீர்

இன்பம் இன்பம் ஒரு துன்பம் துன்பம் எத்தனை பேரின்பம்

Advertisement