Advertisement

மின்னல் – 22

          மறுநாள் காலை வழக்கமான நேரத்திற்கே விழிப்பு தட்ட எழுந்து அமர்ந்தாள் ஜீவா.

முதல்நாள் இரவு சிறிது நேரம் பாலாவை பார்த்துக்கொண்டே நின்றிருந்தவள் தான். அவன் சிரிப்புடன் மீண்டும் அறைக்குள் நுழைந்துகொள்ள தானும் வந்து படுத்தவள் தான். நள்ளிரவில் தான் உறக்கம் என்பதே வந்தது.

காலையில் எழுந்துகொண்டவளுக்கு அருகே தென்றல் இன்னும் உறக்கத்தில் இருக்க அவளை பார்த்துவிட்டு எழுந்து சென்று குளித்து முடித்து வெளியே வர கிட்சனில் சப்தம் கேட்டது.

“குட்மார்னிங்…” என்ற குரலில் திரும்ப வாசலில் இருந்து பாலா உள்ளே வந்துகொண்டு இருந்தான்.

“குட்மார்னிங். எங்க காலையிலையே?…” என்றவளுக்கு பதில் கூறாது சிரித்தவன்,

“ஒருத்தரை பார்க்க வேண்டியதிருந்தது. அதான் எர்லி மார்னிங் கிளம்பிட்டேன். இப்போ தான் வரேன்…” என்றவன்,

“டூ மினிட்ஸ் ரிலாக்ஸ்…” என்று சோபாவில் சரிந்து அமர்ந்துவிட்டான்.

அவனை பார்த்துவிட்டு அடுக்களைக்கு செல்ல அங்கே வேலைக்கு வந்திருந்தார் அவர்.

ஜீவாவை பார்த்ததும் ஒரு புன்னகை. அவ்வளவே. அதன்பின் அவர் வேலையில் ஆழ்ந்துவிட என்ன செய்திருக்கிறார் என பார்த்தாள்.

அதற்குள் காலை, மதியம் என சமைத்து முடிந்து எல்லாம் எடுத்து தனியே வைத்திருந்தார்.

சமையல் செய்த பாத்திரங்களை எல்லாம் எடுத்து கழுவிக்கொண்டிருக்க ஜீவா வெளியே வந்தாள்.

“காபி ஏதாவது?…” பாலாவிடம் கேட்க,

“ம்ஹூம், டைம் ஆகும். இப்ப கொஞ்சம் ஹாட் வாட்டர் தான் எடுப்பேன்…” என்று சொல்ல ஜீவா அவனுக்கு எடுத்து வர திரும்பினாள்.

அதற்குள் அந்த பெண்மணி அவனுக்கு ஒரு கப்பில் கொண்டு வந்துவிட்டார் சுடுநீரை.

“அவங்களுக்கு பழக்கம், அதனால தானா எடுத்துட்டு வந்துட்டாங்க…” என சிரித்தான்.

“ஹ்ம்ம்…” என்று அவனுக்கெதிரே அமர்ந்தாள்.

“உனக்கு குடிக்க எடுத்துட்டு வா. பால் எல்லாம் காய்ச்சியே இருக்கும். டீயா? காபியா? சொன்னா போட்டுடுவாங்க…”

“இல்லை, தென்றல் வரட்டும். இப்ப வேண்டாம். நானே பார்த்துக்கறேன் தென்றல் வரவும்…”

“தென்றல் எழுந்தாச்சா?…” என்றான்.

“எழுப்பனும். இன்னைக்கு வழக்கத்தைவிட அரைமணி நேரம் கழிச்சு தான் கிளாஸ் ஆரம்பிக்கும். அதான் இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும்ன்னு எழுப்பலை….”

“ஓகே, எழுந்ததும் சொல்லு. லஞ்ச் செஞ்சிட்டாங்க அவங்க. பேக் பண்ணி அனுப்பிடு. வேற எதுவும் வேணும்னா லிஸ்ட் சொல்லு. தென்றலை ட்ராப் பண்ணிட்டு வரும் போதே நான் வாங்கிட்டு வரேன்…”

“என்ன லிஸ்ட்?…”

“வீட்டுக்கு வேற எதுவும் வேணும்னா சொல்லுன்னு சொன்னேன். உனக்கும் தென்றலுக்கும் சேர்த்து…”

“இல்லை இப்ப எதுவும் வேண்டாம். நீங்க எப்பவும் வாங்கறது மாதிரியே வாங்கிட்டு வாங்க…” என்றவளை முறைத்தவன்,

“நான் இதுவரைக்கும் கிட்சன் ஐட்டம்ஸ் எல்லாம் வாங்கினதில்லை. எனக்கு தெரியாது. எல்லாம் காலி ஆக ஆக அவங்க தான் வாங்கிட்டு வருவாங்க. பணம் மட்டும் குடுத்து விட்டுடுவேன்…”

“ஓஹ்…”

“என்ன ஓஹ்? இப்ப சொல்லு, நான் கேட்கிறது இந்த மத்த திங்க்ஸ் பத்தி இல்லை. உங்க ரெண்டுபேருக்கும் என்ன வேணும்? இங்க யூஸ் பண்ணறதுக்கு. பிடிச்சது, அத்தியாவசியமானது இப்படி…” அவன் கேட்க கேட்க ஜீவா என்ன என யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

“சரியா போச்சு…” எனும்பொழுதே போன் வர எழுந்துகொண்டவன்,

“யோசிச்சு சொல்லு. பேசிட்டு வரேன்…” என வெளியே வாசலுக்கு செல்ல சிறிது நேரத்தில் தென்றல் வந்துவிட்டாள்.

“குட்மார்னிங் க்கா…” என்று பள்ளி சீருடை அணிந்தே வந்திருக்க,

“எழுந்தாச்சா தென்றல்? நானே எழுப்பலாம்ன்னு இருந்தேன்…”

“நீ டோர் ஓபன் பண்ணும் போதே முழிச்சுட்டேன். அதான் குளிச்சு கிளம்பியே வந்துட்டேன். எங்க வக்கீலை காணும்?… என்றாள் புத்தகத்தையும் பையையும் எடுத்துவைத்து.

“போன் வந்தது பேசிட்டு இருக்காங்க…” என சொல்லி,

“சாப்பிடுறியா? டீ தரவா?…”

“இல்லை நேரமாகிடும். நானே எழுந்தது லேட்டோன்னு இருக்கேன். இங்க இருந்து போக ட்ராபிக் ஆகிடுமோன்னு. டீ வேண்டாம். சாப்பிட்டுட்டு கிளம்பறேன் க்கா. நீ குடிச்சிட்டியா?…”

“ம்ஹூம் இல்லையே. உன்னையும் எழுப்பிட்டு போடலாம்ன்னு இருந்தேன். பாலாவும் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க…”

“ஓகே, அப்போ டிபன் முடிச்சிடலாம்…”

“எல்லாம் அந்தம்மாவே செஞ்சிட்டாங்க. எடுத்து வைக்கறேன்…” என ஜீவா எழுந்துகொண்டாள்.

“ஜீவாக்கா, நீ எப்போ ஹாஸ்பிட்டல் போக போற?…” தென்றல் கேட்க,

“தெரியலை. யோசிச்சிட்டே இருக்கேன்…” என்றாள் சரோஜாவை மனதில் வைத்து.

“உனக்கு போரடிக்குமே? மாமாவும் கோர்ட்டுக்கு போய்ட்டா தனியா இருப்ப…” என அவளின் பின்னோடே வந்தாள்.

“எங்க அந்த ஆன்ட்டியை காணும்?…” தென்றல் அடுக்களையில் யாருமில்லாததை பார்த்து கேட்க,

“மாடிக்கு கிளீன் பண்ண போயிருக்காங்க…”

“ஹ்ம்ம், ஓகே…” என்று தட்டில் தனக்கு தேவையானதை வைத்துக்கொண்டு வந்து சோபாவில் அமர்ந்துவிட்டாள்.

ஜீவாவிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டும் முடித்திருக்க போன் பேசிவிட்டு பாலா வந்துவிட்டான்.

“கிளம்பிட்டியா? டைம் ஆச்சோ?…” என அவளை பார்த்து கேட்டுக்கொண்டே கடிகாரத்தை பார்த்தவன்,

“பைவ் மினிட்ஸ், வந்திடறேன்…” என்று அறைக்குள் சென்றுவிட்டான்.

“இங்க இருந்து டெய்லி மாமாவையே எதிர்பார்த்துட்டு இருக்க முடியாதே க்கா? ஸ்கூல்ல கேட்கனும் இங்க பஸ் எதுவும் வருமான்னு….”

“ஹ்ம்ம், மாமாட்ட கேட்போம். இந்த சைட் பஸ் வந்தா அதுக்கு தனியா ட்ரஸ்ட்ல எழுதி குடுக்கனும்…” ஜீவா பேசிக்கொண்டிருக்க பாலா உடை மாற்றி வந்துவிட்டான்.

“ஜீவா நீ சாப்பிட்டாச்சா?…” என்றான்.

“இன்னும் இல்லை…” என்று அவனை பார்க்க,

“வா சேர்ந்தே சாப்பிட்டுடலாம்….” அவளை அழைத்துக்கொண்டு கிட்சன் சென்றவன் இருவருக்கும் உணவை எடுத்துகொண்டு தென்றலுடன் வந்து அமர்ந்துகொண்டான்.

அவளிடம் எத்தனை மணிக்கு வகுப்பு முடியும் என கேட்டு அவளை அங்கேயே இருக்க சொல்லி தானே அழைக்க வருவதாக சொல்ல, தென்றல் பஸ்ஸில் வந்து போவதை பற்றி கேட்டாள்.

“இன்னும் ஒரு மாசம் தான் ஸ்கூல். அடுத்து பப்ளிக் எக்ஸாம் இருக்கும். அதனால பஸ் அவசியமில்லை. நான் மேனேஜ் பண்ணிப்பேன்…” என்றவன்,

“அதோட இந்த கேஸ் முடிஞ்சு ஜட்ஜ்மென்ட் வந்தாலும் நாம கொஞ்ச நாள் சேஃபா தான் இருக்கனும்…”

“ஹ்ம்ம்…” என்றனர் இருவரும்.

சாப்பிட்டு முடிக்கவும் பாலா தென்றலுடன் கிளம்பிவிட்டான் ஜீவாவிடம் சொல்லிக்கொண்டு.

“பத்ரியை பார்த்துட்டு தான் வருவேன். நீ அவங்க வேலையை முடிச்சுட்டு கிளம்பவும் டோர் லாக் பண்ணிக்கோ. திறக்கறதுக்கு முன்னாடி பார்த்திட்டு திறக்கனும்…” என சொல்லி கிளம்பி இருந்தான்.

மீண்டும் பாலா வரும் பொழுது பத்தரை மணி ஆகியிருந்தது. பெல் அடிக்க அவன் சொல்லியதை போலவே வந்து எட்டி பார்த்துவிட்டே ஜீவா கதவை திறந்தாள்.

“என்ன பண்ணிட்டிருந்த ஜீவா?…” என்று தன் கையில் இருந்த பைகளை கொண்டுவந்து கிட்சனில் வைத்தான்.

“சும்மா தான் புக்ஸ் படிச்சிட்டு இருந்தேன்…” அவனின் பின்னால் வந்தவள் அந்த பைகளை பார்க்க,

“உன்கிட்ட கேட்டா எதுவும் சொல்லமாட்ட. அதான் நானே கொஞ்சம் ப்ரூட்ஸ், ஸ்நாக்ஸ்ன்னு வாங்கிட்டு வந்துட்டேன். நாளைக்கு சண்டே தானே. சேர்ந்தே போய் வாங்கிப்போம்…” என எடுத்து தனியே பிரிக்க அதனை கழுவி எடுத்து வைத்தாள்.

“எங்க ஆன்ட்டியை காணும்? கிளம்பிட்டாங்களா?…” என வெளியே எட்டி பார்த்துவிட்டு கேட்டான்.

“அவங்க போய் அரைமணி நேரமாச்சு…” என்றவளை கை பிடித்து தன் பக்கம் திருப்பினான்.

“ஹ்ம்ம், அப்பறம் ஏன் இவ்வளோ டிஸ்டன்ஸ் ஜீவா மேடம்?…” என சிரித்தவனின் புன்னகை அந்த தனிமையை அப்போது தான் அவளுக்கு உணர்த்தியது.

“என்ன? ஷாக் ஆகிட்ட?…” என கேட்டுக்கொண்டே கன்னத்தை லேசாய் தட்ட,

“ஹ்ம்ம், இல்ல, சும்மா…” என பிரித்து பிரித்து பேசியவள் அவனிடமிருந்து விலகி பழங்களை எடுத்து ப்ரிட்ஜில் அடுக்க ஆரம்பித்தாள்.

“இப்ப எதுக்கு உடனே இந்த வேலை? இருக்கட்டும். நேரமாகட்டும்…” மீண்டுமாய் தன் முகம் பார்த்து திருப்பினான்.

“இல்லை எடுத்து வச்சுட்டா வேலை முடியும். தென்றல் வந்திருவா இல்லையா?…”

“இப்போவா?…” என்று லேசாய் சிரித்தவன்,

“தென்றல் வர ஈவ்னிங் ஆகிடும். அதனால அவசரமில்லை…” இடையோடு கை கோர்த்து அவன் இழுத்து அணைத்து பிடிக்க,

“பாலா ப்ளீஸ்…”

“உன் ப்ளீஸ்க்கு நானும் ப்ளீஸ்…” என அவள் முகத்தை நெருங்க,

Advertisement