Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 14

                             ஏலகிரியின் இதமான வானிலைக்கு ஏற்ப, முழுவதும் தேக்கு மரத்தினால் இழைக்கப்பட்டு இருந்தது அந்த பண்ணைவீடு. மூன்று அடுக்குகளை கொண்ட அந்த வீடு, கேரள பாணியில் கட்டப்பட்டிருந்தது. மூன்றாவது அடுக்கில் மட்டும் மொத்தமுமே ஒரே அறையாக வடிவமைக்கப்பட்டு இருக்க, அதன் மேற்கூரையாக சீமை ஓடுகள்.

                             கூரை வீட்டின் அமைப்பில் சுவர் ஓரங்களில் ஒரு முழுதாக நிற்கக்கூட முடியாத அளவுக்கு குறுகி இருந்த கூரை, அறையின் மத்தியை அடையும் பொழுது உயர்ந்து இருந்தது. சூரிய ஒளி உள்ளே நுழையும் அளவுக்கு கண்ணாடியினால் சட்டம் அமைக்கப்பட்டு இருந்தது அந்த கூரையில்.

                           அத்தனைப் பெரிய அறையின் நடுவில் தரையோடு விரிக்கப்பட்டிருந்த நுரை மெத்தையில் ஸ்ரீகா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவளுக்கு சற்று தள்ளி அங்கிருந்த திவானில் அமர்ந்து கொண்டு அவளை அளவெடுத்துக் கொண்டிருந்தான் ஜெயராம் கிருஷ்ணா.

                            வெள்ளைநிற டிஷர்ட், கருப்பு நிற ட்ராக் அணிந்து கொண்டு அவன் அமர்ந்திருந்த விதம் அவனின் கட்டுக்கோப்பான உடலை காட்சிப் படுத்துவது போல் இருக்க, அவனின் கூர்மையான விழிகளில் அப்போதும் ஒரு நிதானமும், தீட்சண்யமும் வெளிப்பட்டது. அவன் முகம் வெளித்தோற்றத்திற்கு சாந்தமாக இருந்தாலும், புயலுக்கு முந்தைய அமைதியோ என்று நிச்சயம் யோசிக்க வைக்கும்.

                          அவன் எழுந்து அரைமணி நேரம் முடிந்திருக்க, கண்களை திறந்த கணம் முதலாகவே அவளை மொத்தமாக தன்னுள் நிரப்பிக் கொள்பவன் போல் தான் அமர்ந்திருந்தான். வெகுநாட்களுக்கு பிறகு கிடைத்த அவளின் அருகாமையை தன்னுள் நிறைத்து கொண்டவன் நேரம் பார்க்க, கடிகாரம் ஆறு மணியைக் காட்டவும் எழுந்து கொண்டான்.

                          உறங்கி கொண்டிருந்தவள் அருகில் வந்து அவளின் முன் நெற்றி முடியை ஒதுக்கி அவன் முத்தமிட, லேசாக கண்களை சுருக்கி விரித்தவள் மீண்டும் உறக்கத்தை தொடர, “டோஸ் அதிகமாகிடுச்சோ…” என்று தனக்குள் கேள்வியெழுப்பியவனாக அந்த அறையில் இருந்து வெளியே வந்தான் அவன்.

                      வெளியே மொட்டைமாடி நீண்டு விரிந்திருக்க, அதன் ஒருபுறம் இருந்த தன் உடற்பயிற்சி கூடத்தை அடைந்தவன் தன் டி ஷர்டை கழற்றி எறிந்துவிட்டு, தனது நாளை தொடங்கி இருந்தான். அவன் உடற்பயிற்சி தொடங்கிய அடுத்த முக்கால் மணி நேரம் கடந்ததே தெரியாத அளவுக்கு வேகமாக கடந்து இருக்க, அவன் அறையில் இருந்து கேட்ட சத்தத்தில் தான் நின்றான் அவன்.

                           டப்பென்ற சத்தமும் அதை தொடர்ந்து நொறுங்கும் ஓசையும் கேட்க, சிறு சிரிப்புடன் தனது துண்டை எடுத்து உடலை துடைத்துக் கொண்டு, அதையே லேசாக போர்த்திக் கொண்டு அறைக்குள் நுழைந்தான் ஜெயராம் கிருஷ்ணா.

                           அந்த அறையை அலங்கரித்துக் கொண்டிருந்த நிலைக்கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கி இருக்க, அதன் அருகில் பித்தளை பூஜாடி “நாந்தான் உடைத்தேன்..” என்பது போல் உருண்டு கொண்டிருந்தது. அதை கண்ட பிறகும் அத்தனை நிதானமாக அவன் உள்ளே நுழைய, அவனைவிட அலட்சியமாக அமர்ந்திருந்தாள் ஸ்ரீகா.

                                 இவன் உள்ளே நுழைந்த நிமிடம், அவனை ஏறிட்டு பார்த்தவள் அவனின் அரைகுறை உடையில் முகத்தை திருப்பிக் கொண்டாள். ஜெய்ராம் அழகான புன்னகையுடன் நிற்க, அதில் கடுப்பானவள்

                          “இளைஞர் மற்றும் பெண்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…. ஜெய்ராம் கிருஷ்ணா… தொழிலை மாத்திட்டாரோ… கிட்னாப்பிங் மட்டும்தானா.. இல்ல கொலை, கொள்ளை அதுவும் இருக்கா…” என்று நக்கலாக கேட்டவள் தன் கைகளை பின்னால் ஊன்றி சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

                        அவளின் இலகு உடையில் அவள் அமர்ந்திருந்த இலகுவான தோற்றம் அவன் கண்களுக்கு ரம்மியமாக இருக்க, புன்னகை மன்னன் அவதாரம் தான் இப்போதும். ஸ்ரீகா அவன் சிரிப்பில் எரிச்சலுற்றவள் “எதுக்காக இப்படி சிரிச்சுட்டு இருக்கீங்க… சிரிக்கிற அளவுக்கு என்ன நடந்துச்சு..” என்று கேட்க, அதற்கும் சிரிப்பே பதில்.

                         “என்னை எதுக்குப்பா தூக்கிட்டு வந்திருக்க..” என்று அலுப்புடன் அவள் கேட்க

                         “கொலை, கொள்ளை எல்லாம் சொன்ன.. ரேப்பை விட்டுட்டியே.. அதையும் ட்ரை பண்ணலாம் ன்னு தான்..” என்று இலகுவாக அவன் சொல்ல

                          “அந்த அளவுக்கெல்லாம் ஒர்த் இல்ல நீங்க…” என்று பட்டென அவன் மண்டையில் தட்டினாள் ஸ்ரீகா.

                             அவள் பேச்சில் சிரித்தவன் அவளை நோக்கி முன்னேற, அப்போதும் அசராமல் அமர்ந்து கொண்டிருந்தது பெண். அவளுக்கு ஒரு அடி முன்பாக நின்றவன் நின்ற இடத்தில அவள் முன் மண்டியிட, கேள்வியாக அவனைப் பார்த்தாள் இப்போது.

                       தன் சுட்டுவிரலை அவளுக்கு முன்பாக நீட்டியவன் அவளை தொட்டு விடுபவன் போல் முன்னேற, பின்னால் சாய்ந்தபடி அமர்ந்து இருந்தவள் இப்போது நேராக அமர்ந்தாள். நீட்டிக் கொண்டிருந்த அவன் விரலை தன் கையால் தட்டிவிட, இப்போது சற்றே விரிந்த சிரிப்பு அவன் இதழ்களில்.

                      அவள் முன் நெற்றியில் விழுந்திருந்த முடிகளை சிரிப்போடு ஒதுக்கி விட்டவன் அதே கையால் அவள் கன்னம் பற்றி, மறுகன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான். அவன் முத்தமிட்டதில் அதிர்ச்சியானவள் “ஹேய் என்ன பண்றிங்க..” என்று அவனை பின்னால் தள்ளிவிட

                         அவளைப்போலவே இலகுவாக அமர்ந்து கொண்டான் ஜெய்ராம். சின்ன சிரிப்போடு அவளை ஏறிட, “என்ன அம்மாஞ்சி.. தைரியம் அதிகமாகிடுச்சு போல…கொன்னுடுவேன்..” என்று விரல் நீட்டி மிரட்ட வேறு செய்தாள் அவனை.

                            ஜெய் புன்னகை மாறாமல் அவளைப் பார்க்க, “சிரிச்சே கவுக்கிறானே..” என்று மனதில் புலம்பினாலும், “என்னை எதுக்கு தூக்கிட்டு வந்திங்க.” என்று மீண்டும் கேட்க

                             “குடும்பம் நடத்தத்தான்.” என்று இலகுவாக பதில் கொடுத்தான் அவன்.

                             “பேசவே மாட்டான் பேசினா, விவகாரம் தான்..” என்று உள்ளுக்குள் புலம்பியவள், “குடும்பம் நடத்த என் அனுமதி வேண்டாமா…. நீங்களா தூக்கிட்டு வந்தா ஆச்சா..” என்று கடிந்து கொள்ள

                         “இன்னும் கொடுக்கலையா நீ..” என்று அவன் பார்வை கேள்வி கேட்க

                         “அதுசரி..” என்று மனதிற்குள் அவனுக்கு கவுண்டர் கொடுத்தவள் “உங்க அம்மாகிட்ட கேட்டாச்சா…” என்று நக்கலாக கேட்க

                           “சொல்லியாச்சு…” என்றான் நிதானமாக

                            “என்ன சொன்னிங்க..” என்று புருவம் உயர்த்தி அவள் வினவ, அவளின் அந்த கண்களில் விழுந்தவன் “எனக்கு நாட்டியக்காரி தான் வேணும். அவ இல்லாம வாழ்க்கை இல்ல ன்னு சொல்லிட்டேன்.” என்று புன்னகையோடு கூற

                              “ஹப்பா.. என்ன திடீர் ன்னு நாட்டியக்காரி மேல இப்படி ஒரு காவியக்காதல். அதுவும் தி கிரேட் ஜெய்ராம் கிருஷ்ணா அவங்க அம்மாவை எதிர்த்து பேசற அளவுக்கு..” என்று ஏளனம் செய்தாள் அவள்.

                           ஜெயராம் லேசாக முகம் வாட, அதைக்கூட தாங்க முடியாத தன் மனதை மண்டையில் தட்டி அதட்டி வைத்தவள் “நான் வீட்டுக்கு போகணும்.” என்றாள் முடிவாக

                            “இதுவும் உன்வீடு தான்.” என்று அழுத்தமாக ஜெய்ராம் கூற

                            “சென்ட்ரல் மினிஸ்டரோட வீடு…” என்றாள் அவள்.

                              “நீயே சென்ட்ரல் மினிஸ்டரோட ப்ராப்பர்டி தான். சோ இங்கே இருக்கலாம்..” என்று சிரித்துக் கொண்டே அவன் கூற

                               “நான் வீட்டுக்கு போகணும் ராம். விளையாடாதீங்க. அம்மா தாங்கமாட்டாங்க…. முதல்ல என்னை இங்கே கூட்டிட்டு வந்து எவ்ளோ நேரம் ஆச்சு. என்னை காணாம தவிச்சு போயிருப்பாங்க ராம்.” என்று உணர்ச்சிவசப்பட்டவளாக அவள் கூற

                                 “நான் தவிக்கல… தாங்கி கொள்ளல.. ஒரு ஒன் வீக் என்னோட இரு.. நாலு வருஷத்தை காம்பென்செட் பண்ணிட்டு அனுப்பி வைக்கிறேன்..” என்றான் கிருஷ்ணனாக.

                                 “ராம் வாய்ப்பே இல்ல. ஒழுங்கா என்னை கூட்டிட்டு போய் வீட்ல விடுங்க. எதுவா இருந்தாலும், அப்புறம் பேசுவோம்.” என்று கண்டிப்புடன் அவள் கூற, மீண்டும் அமைதியாகி விட்டவன் புன்னகையை பதிலாக கொடுக்க

                                  “இப்படி சிரிச்சு தொலைக்காதிங்க நீங்க.. பதறுது..” என்று வெளிப்படையாகவே பதறினாள் அவள்… அதில் இன்னும் சத்தமாக சிரித்தவன் “நீ நினைக்கிறது தான் அர்த்தம். இன்னும் ஒன் வீக் இங்கேதான் இருக்க போற. வாதம் பண்ணாத..” என்றான் அவள் கன்னம் பிடித்து.

                                 அவன் உறுதியில் கண்கள் கலங்கிவிட, “அம்மா பாவம் ஜெய்.. இப்படி பண்ணாதீங்க…” என்று கலங்கிய குரலுடன் ஸ்ரீகா அவனைப் பார்க்க, அவள் கண்களை அவன் ஆழ்ந்து பார்த்ததில் கண்ணீரை மெல்ல உள்ளிழுத்துக் கொண்டாள் ஸ்ரீகா.

                               “தட்ஸ் மை கேர்ள்..” என்று சிரிப்புடன் அவள் கன்னம் தட்டியவன் “எல்லாம் நான் பார்த்துக்கறேன். எல்லாமே..” என்று அழுத்திக் கூற,

                              “மினிஸ்டர் வேலையை விட்டு தூக்கிட்டாங்களா..” என்றாள் கடுப்புடன்.

                              அவன் பதில் சொல்லாமல் முறைத்து வைக்க, “உங்களை தேட மாட்டாங்களா… ஒரு வாரம் இங்கே எப்படி இருப்பிங்க.” என்று அவள் கேட்க

                               “மினிஸ்டர் ஜெயராம் கிருஷ்ணா அவரோட துறைரீதியான சில நிகழ்ச்சிகள்ல கலந்து கொள்ள, தமிழ்நாட்டுக்கு வந்து இருக்காரு. ” என்றான் விளக்கமாக

                         “எது துறைரீதியான நிகழ்ச்சி.. கடத்தலும், கற்பழிப்புமா..” என்று அவள் முகம் சுருக்க

                         “மினிஸ்டர் போஸ்டிங்க்கு ஜஸ்டிஸ் பண்ற அதே நேரத்துல, என்னோட பெயருக்கு ஏத்த மாதிரியும்  ஏதாவது செய்யணும் இல்ல…” என்று அவன் சிரிக்க

                          “செய்விங்க செய்வீங்க..” என்று அவள் சிலிர்க்க

                          “நிச்சயமா செய்வேன்.. என்னை எவன் கேட்பான்..” என்று இல்லாத காலரை உயர்த்திக் காட்டினான் அவன். அவன் செயலில் சிரிப்பு வந்தாலும், “எதுக்கு இப்படிலாம் பன்னிட்டு இருக்கீங்க..” என்று அப்போதும் சஞ்சலமாக அவள் கேட்க

                          “ஒருமுறை சொன்னா புரிஞ்சிக்கணும் ஸ்ரீகா…” என்று உணர்வு துடைத்த முகத்துடன் அவன் கூற, அவன் கோபமாகிவிட்டான் என்று புரிந்தவள் அமைதியாகி விட்டாள்.

                             அவள் அமைதியில் அவன் சிரிக்க “அநியாயம் பண்றிங்க..” என்று சிணுங்கினாள் அவள்.

                              “பண்ணலாம் தப்பில்ல..”  என்று அவன் சிரிக்க,

                              “இனி உங்ககிட்ட பேசினா, என்ன ன்னு கேளுங்க..” என்றவள் மீண்டும் படுத்துகொண்டு போர்வையை தலைவரை இழுத்து மூடிக் கொள்ள,

                               “நேரமாச்சு எழுந்துக்கோ…” என்று அவள் போர்வையை பிடித்து இழுத்தவன் அவள் எழுந்து அமரவும் “குளிச்சுட்டு கீழே வா.. சாப்பிடலாம். ” என்றதோடு எழுந்து கொண்டான்.

                               அவள் இன்னமும் அமர்ந்தே இருக்க, கதவு அருகில் சட்டென நின்றவன் “என்ன குளிக்கவும் ஹெல்ப் பண்ணனுமா..” என்று கிண்டலாக கேட்க, தலையணை பறந்து வந்தது அடுத்த நிமிடம்.

Advertisement