Advertisement

காதல் துளிர் 6:

6:                  

சுட்டி குட்டீஸ், வண்டியில் வாய் ஓயாமல் ஷிவானியை புகழ்ந்த படி வந்ததை பார்த்து  அவளை பற்றி மேலும்  தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஷிவேந்தர்  ஆர்வமானான். எங்கே தொடங்க என்று தான் அவனுக்கு  குழப்பமாக  இருந்தது .

ஷிவேந்தர்  அவன் வீட்டிற்குள்   நுழையும் போது அவன் சித்தப்பா மகன்  சச்சின்  அங்கு தான் இருந்தான். ஷிவானி  படிக்கும் அதே மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறான். அவனை பார்த்து ஆஹா, கையில் வெண்ணையை  வைத்து கொண்டு நெய்க்கு அலைவானேன் என்று குஷியாகி  “டேய், என்ன இந்த நேரத்தில்? உங்க கல்லூரியில் ஏதோ விழா சொன்னாயே?” என்று தெரியாதது போல போட்டு வாங்கினான் .

சச்சின் ஹீரோவாக நினைக்கும் அவன் ஷிவேந்தர்  அண்ணா கேள்வி கேட்டவுடன் மகிழ்ச்சி அடைந்து  ” இப்ப ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் எல்லாம் நடக்குது அண்ணா .நேற்று தான் பாஸ்கட் பால் மேட்ச் முடிந்தது . வழக்கம் போல நாங்க  தான் முதல். இன்று டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் அதனால் போகவில்லை” .

ஸ்போர்ட்ஸ் ஆ ஆ …..ஷிவானியை மனதில் கொண்டு வந்து சீ ,சீ  அந்த பஜாரியாவது ஸ்போர்ட்ஸ் விளையாடுவதாவது ! அவளுக்கும்  அதுக்கும் சம்பந்தமே இருக்காது …. வேண்டும் என்றால்  ‘இறுதி சுற்று’ ரித்திகா மாதிரி மீன்காரியா இருக்கலாம். ராங்கி ரங்கம்மா  .

ஷிவானி நேஷனல் அளவு டென்னிஸ் பிளேயர் என்று  உனக்கு தெரியாது   போல……  மீன்காரி என்று நீ நினைத்தது  அவளுக்கு தெரிந்தால் உன்னை பந்தாடாமல் விட மாட்டா …

ஷிவேந்தர் “கல்டுரல்ஸ்  எப்ப சொன்ன ?”

“அண்ணா, அது அடுத்த வாரம்! வரீங்களா? உங்களுக்கு ஏது டைம்” .

ஆஹா நம்மளையே நக்கல் செய்யறானே ? பல்லை கடித்து சச்சின் மண்டையை நல்லா உருட்டி  “தம்பி பையா, டைம் இல்லை, இருந்தாலும் வரலாம்   பார்க்கிறேன் ” 

சச்சின் குதித்து  சந்தோஷமாக ” நிஜமாவா அண்ணா! நான் ஆடும் போது வா” என்ன பாட்டுக்கு ஆட போகிறான்  என்று விளக்கினான் .

“எப்போதும் எங்களுக்கு போட்டியாக இருக்கும் அந்த எக்ஸ் எசஸ் மருத்துவ   கல்லூரி  செமிஸ் அவுட் ஆகணும்  தீவிர ப்ராக்டிஸ் போயிட்டு  இருக்கு”

நீ ஆடுவது நாட்டுக்கு ரொம்ப முக்கியம், அந்த கொடுமையை  நான் வந்து வேற பார்க்கனுமா  என்று மனதில் அர்ச்சனை செய்து சிவாக்கு வேண்டிய விஷயத்தை கறந்து கொண்டான் .

“எங்க  கல்லூரி  டான்சிங்  பிரின்சஸ் என்று அழைக்கப்படும் ஷிவானி கண்ணன் இந்த  முறை ஆடவில்லை. இல்லை என்றால் வெற்றியை  பற்றி எங்களுக்கு துளி கூட சந்தேகம் இல்லை.”

ஷிவானி கண்ணனா ? அவளா இருக்குமோ?

****

ஷிவேந்தர்  வீட்டில்  இரவு உணவு எல்லாரும் கண்டிப்பாக ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று எழுதபடாத சட்டம் .

அவன் அண்ணன்கள் சுரேன் , நரேன் தீவிரமா அவர்கள் தொழிலை பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள் .

சரண்யா யோசனையாக இருக்கும் ஷிவேந்தரிடம் “என்ன பிரச்சினை. எந்த கப்பலை கவிழ்க்க திட்டம் போடறீங்க !”

“இன்றைக்கு வந்த ஒரு கேஸ் பற்றி தான் அண்ணி யோசனை   … இதுவரை பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த பெண், பத்தாவதில் மாநிலத்தின் முதல் மாணவி , இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சை நெருங்கும் சமயத்தில்  பரிட்சைக்கு போக மாட்டேன் அடம் பிடிக்கறா ? மனரீதியா ரொம்ப பாதிக்கபட்டு இருக்க அண்ணி !

அவள் பெற்றோர்கள் இதுவரை வாங்கினது பெரிது இல்லை, இனி வாங்கவில்லை என்றால் மானம் போய்டும், எந்த கல்லூரியிலும்  சீட் கிடைக்காது, ஆர்ட்ஸ் க்ரூப் கூட கிடைக்காது   சொல்லிக் கொண்டே இருப்பாங்க போல !

அந்த  பெண்ணோட சித்தப்பாவும் நீ தான் ஸ்டேட்  பர்ஸ்ட் வருவ. கண்டிப்பா  AIMS  தான் படிக்க போற , நாங்க படிக்காதது நீ படிக்க போற என்று அவ பெயர் பின்னால் இப்போதே டாக்டர் பதித்த கோல்ட் பெண் வாங்கி கொடுத்து இருக்கார் போல! இப்படி சொல்லியே  உசுபேத்தி  அவர்களுக்கு  தெரியாமலே அவளை அபாய கட்டத்துக்கு தள்ளி இருக்காங்க.

இவர்களாலே, அந்த பெண் எங்க அவ பரிட்சையில் சிறந்த  மதிப்பெண்  வாங்கமட்டாலோ , அதனால் எல்லாருக்கும்  தலைகுனிவு  வருமோ பயந்துவிட்டாள் . கொஞ்ச நாளா மன அழுத்தத்தால் வீட்டில் யாரிடமும் பேசுவது இல்லை போல . நான் பல முறை கேட்ட பிறகு அதுவும் ரெண்டு செஷன் பிறகு தான் வாயை திறந்தாள். படித்த அனைத்தும் மறந்துவிட்டது , இனி என்ன செய்ய , பயமா இருக்கு, பையிலாகிடுவேன் அழுகை. பெற்றோர்கள் கொடுக்கும்  பிரசர்  தாங்காமல் இப்போது ரொம்பவும் டிப்ரச்  ஆகி இருக்கிறாள். அவங்க அப்பா, அம்மாக்கு தான் முதல் கவுன்செல்லிங் கொடுத்து இருக்கேன்.

நல்ல மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் உங்க பெண் இல்லை என்றாகிவிடுமா ? உங்க மகளை இயல்பா இருக்க விடுங்க . அவங்க விருப்பப்பட்ட  பாடத்தில்  சேர்த்து  விடுங்க .. எந்த துறையா  இருந்தாலும்  இன்று  திறமை  இருந்தால்  முன்னேறலாம்.

ஏற்கனவே உங்க பெண், புக் முழுதும் பத்து தடவை  கரைத்து குடித்து இருப்பா . இனி படிக்க ஒன்றும் இருக்காது, படித்தது  போதும். அவள் மனதுக்கு பிடித்த நல்ல  இசையை கேட்க சொல்லுங்க, அவளை ரிலாக்ஸ்  இருக்க சொல்லுங்க அட்வைஸ் கொடுத்து  அனுப்பினேன்.”

இதை கேட்ட சரண்யாவும் , விசாலமும்  பாவம் டா ! பெத்தவங்களுக்கு எத்தனை கஷ்டமா இருக்கும் . நல்லா படிக்கும் பெண் திடீர் என்று பரீட்சை சமயத்தில் இப்படி செய்தால் ?

“அவங்க அப்பா, அம்மா  செய்தது  தான் தப்பு ! அந்த பெண் மீது இவங்க  நம்பிக்கை வைப்பது தப்பு இல்லை , வாங்கியே  ஆகணும் வெறி  இருக்க   கூடாது தான் சொல்ல வரேன். எதற்கும் லிமிட் இருக்கு . உன்னால் முடியும் தட்டிக் கொடுக்காமல்  நீ செய்தே ஆகணும் கண்டிஷன் போட்டால் ? அந்த பெண்ணே  நினைத்து  செயல்பட்டால் தான்  வெற்றி  கிட்டும். வெளியே இருந்து பிரசர் கொடுத்தால்  இப்படி தான் நடக்கும்.

அவள் பாரத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் , ஒழுங்கான தூக்கம் இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி  இருக்கிறாள். இதே தொடர்ந்தா   கண்டிப்பா  மெண்டல் ஆக  கூட சான்ஸ் இருக்கு . சொல்ல போனா அதற்கு முந்தின ஸ்டேஜ் தான் இருக்கா.”

நிஜமாவா சிவா என்ற சரண்யாவிடம் “ஆமாம் அண்ணி . இதை சொல்லி நான் அவர்களை பயப்படுத்த விரும்பவில்லை . இப்ப கூட அவளை சுற்றி இருப்பவர்கள்  முழுதா கோஆபரேட்  செய்தால் தான் அவளால் ஒழுங்கா பரீட்சை எழுத முடியும் .”

அவன் அண்ணி சரண்யா, யாரை சொல்லியும் குற்றம் இல்லை  .நம்ம ஊர் பரீட்சை சிஸ்டம் அப்படி இருக்கு .

பரீட்சை எழுதும் அந்த பெண்ணை   மீறியும்  பல சக்திகள் இருக்கு ஒவ்வொரு பெற்றோர்களும் உணரனும்  என்று மனநல  மருத்துவனான ஷிவேந்தர்  அவனுக்கு வந்த கேஸ் பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தான்

இப்ப தெரிந்துவிட்டதா நம்ம ஷிவேந்தர் என்ன தொழில்  செய்யறான் என்று…..

இது எப்போதும் அவர்கள் வீட்டில் நடக்கும் ஒன்று  தான். அவன் அட்டெண்ட் செய்யும் கேஸ்  பற்றி  அடிக்கடி விவாதம் நடக்கும். தன்னை சுற்றி உள்ளவர்களின் அபிப்ராயத்தை கேட்டுக் கொள்வான் .

சாப்பிடும் போது அவன் பாட்டி வைதேகி, ஷிவேந்தர் அப்பாவிடம் ஏன் மணி , நம்ம சிவாக்கு ரஞ்சி வீட்டில் கேட்டு விட்டு இருந்தாங்க! பதில் சொல்லாமல்  எத்தனை நாள் இழுத்து அடிக்க . நேரம் காலம் கூடி  வரும் போது செய்திட வேண்டியது தான … விசாலம் நீயாவது  என்ன ? ஏது என்று கேட்ககூடாது .

தோசையை சட்னியில்  தேய்த்த படி “ பாட்டி,  எனக்கு  தான் அந்த பெண்ணை கட்டிக்க  இஷ்டம் இல்லை சொல்லிட்டேனே ! கொஞ்ச நாள் பொருங்க பாட்டி !”

அவன் தந்தை மணிவாசகம்  “உனக்கு  அந்த பெண்ணை  பிடிக்கவில்லை  என்றால்  விட்டிடு. என்னுடைய நண்பன் குமார்  தெரியும்ல. அவன் பெண்  சந்தியா, இந்தியா அளவில் நான்காவது இடத்தில செலக்ட் ஆகி  என்னுடைய அலுவலக  துறையிலே சீனியர் போஸ்டில் நேரடியாக தேர்வாகி இருக்கிறாள் . இந்த வயதில் இந்த போஸ்ட் என்பது பெருமையான விஷயம் தான். நல்ல திறமையான பெண். உனக்கு பொருத்தமானவளா இருப்பா . பேசி முடித்திடலாமா…… குமாரும் கேட்டுக் கொண்டே தான் இருக்கான். அவங்க குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம்  . அவன் மகன் ஜெய்  மிலிடிரியில் இருக்கானாம்” .

இந்த அப்பா வேற சந்தியா, இந்தியா கடுப்பேத்தறாரே!  “இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அப்பா “

“இன்னும் சின்ன பையன் நினைப்பா  சிவா …நீ நினைத்த படி ஹாஸ்பிடல் கட்டியாச்சு ! செட்டில் ஆகியாச்சு. அப்புறம் என்ன?”   

எப்போதும்  தான் உண்டு, தன் வேலை உண்டு இருக்கும் மணிவாசகம் , மகன் கல்யாண விஷயத்தில் இத்தனை ஆர்வம் காட்டினவுடன் அவன் அன்னை விசாலம் “ஏன் டா கண்ணா, அப்பா இத்தனை  தடவை சொல்வதற்காகவது யோசித்து சொல்லேன்!”

ஆஹா இன்னைக்கு ஒரு முடிவோட தான் இருக்காங்க போல ! எல்லாரும் இப்படி ரவுண்டு கட்டி அடிக்கிறாங்களே….எல்லாரும் அவன் பதிலுக்காகவே ஆர்வமாக காத்துக் கொண்டு இருப்பது தெரிந்து இருந்தாலும் “யோசித்து சொல்லறேன்” என்று நழுவினான்.

விசாலம்  கணவனிடம், உங்க மகன் கழுவற மீனில் நழுவற மீனா இருக்கான் . அதிரடியா பெண் பார்க்க போகலாம் சொல்வதை விட்டு இப்படி அறிமுக படலம் செய்து கொண்டு இருக்கீங்க . பெண் பார்க்கும் பொறுப்பை எங்களிடம் தான் ஒப்படைத்து இருக்கான் சொல்லி  இருக்கேனே. நாங்க பார்க்கும் எந்த பெண்ணா இருந்தாலும் சரி சொல்வதா சொல்லி இருக்கான் . நல்ல  இடமா இருந்தால் உடனே பேசி முடிக்கலாம்  என்று நச்சிய மனைவியிடம்

“நம்ம மகனா இருந்தாலும் அவனுக்கும் மனது  இருக்கு விசாலம் . நம்ம சுரேன் எடுத்துக்கோ ! நித்யாவை கல்யாணம் செய்யணும் சொன்னான். பெண் நல்ல பெண் தெரிந்தவுடன்  குடும்பத்தை பற்றி விசாரித்து உடனே திருமணத்தை முடித்து வைத்தோமா இல்லையா? “

விசாலம்   முகத்தை கண்டு  “இவனும் அவனை போல காதலிப்பான் சொல்ல வரல ..சிவாக்கும்  சுரேன் போலவே சுதந்திரம் உண்டு தான்  சொல்ல  வரேன்” .

“சுரேன் போல இவன்  காதல் எல்லாம் செய்ய மாட்டான் . நீங்க எப்படி  அப்படி  சொல்லலாம்” என்று கோபம் கொண்டு  “சிவா தான் எங்களிடம் எல்லாம் உங்க பொறுப்பு சொல்லிட்டானே, அப்புறம் என்ன ” என்று விசாலம் குழந்தை போல மறுபடி  கூறுவதை மறுத்து ” நம்ம விருப்பத்தை அவன் மீது திணிக்க முயற்சி செய்ய கூடாது . நொடிக்கு ஒரு தரம் மனித மனம் மாறும் விசாலம் . நீ சொல்வது போல இருந்தால் கேட்டவுடனே சரி சொல்லி இருப்பானே !

உன்  சின்ன  மகன்  என்ன நினைக்கிறான் தெரிந்து தான் மேற்கொண்டு பேச முடியும். அவனே யோசித்து சொல்லட்டும் ..கொஞ்சம் அவன் கேட்ட  கால அவகாசம் கொடுக்கலாமே”  என்று முடித்துக்கொண்டார் .

விசாலம் அவள் மாமியாரிடம், “ என்ன அத்தை உங்க மகன் இப்படி சொல்லிட்டு  போறாரு .. இவர் சொல்வது போலவே உங்க பேரன்” என்று முடிக்கும் முன் வைதேகி பாட்டி, “அப்படி காதல் செய்தாலும் தப்பு இல்லை விசாலம் . அவன் என்ன சின்ன பையனா?  பெரிய மருத்துவன் . அதிலும் மனநல மருத்துவன். சமுதாயத்தில்  நாலு    பேர் மெச்சும் படி  அவன் காலிலே  உயர்ந்து நிற்பவன், அவன் appointment  கிடைக்கவே  பல நாள்  காத்துக் கொண்டு இருக்கிறவங்க   ஏராளாம்.  அவனுக்கு தெரியாததா?   எதுவும்  உறுதியா தெரியாம சும்மா  குழப்பிகிட்டு இருக்காத ..”

என்ன தான் வைதேகி  சமாதானம்  சொன்னாலும்   விசாலம்  உள்ளம் அதை ஏற்க மறுத்தது .

ஏற்கனவே சுரேன் செய்த வேலையால் கோபமாக இருந்த விசாலம் இப்ப தான் கொஞ்ச காலமாக இயல்பாக  இருக்கிறாள் . அதற்கு காரணம்  நித்யாவுடைய பொறுமையான குணமாக கூட இருக்கலாம் .

சுரேனுக்கே அவள் ஒன்று விட்ட அண்ணன் பெண் வனிதாவை திருமணம் செய்து வைக்கலாம் கனவு கண்டாள். அது தான் நடக்காமல் போனது .இப்ப இவனும் எதாவது எக்கு தப்ப தப்பா செய்யட்டும் ,அப்புறம் அவனுக்கு இருக்கு …

தோட்டத்தில்  சிறிது நேரம் உலா சென்ற ஷிவேந்தரை  சரண்யாவும், நித்யாவும் பிடித்துக் கொண்டார்கள் .

“என்ன அன்னிஸ்!  என்ன விஷயம் ? ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து வந்து இருக்கீங்க..”

“இல்லை …கொஞ்ச நாளா ஏதோ மந்திரித்து விட்ட கோழி போல இருக்கியே ! என்ன விஷயம் . மாமா சொன்ன பெண்ணை நானும் பார்த்து இருக்கேன் .ரொம்ப அழகா இருப்பா சிவா . நீ சொல்லும் கண்டிஷன் எல்லாம் ஒத்துப் போகுது. பெண் படித்து இருக்கா? அழகா இருக்கா ? வேலைக்கு போறா! நல்ல குடும்பம்” என்ற சரண்யாவிடம் “அண்ணி, எல்லாம் சரி, என் மனதுக்கு பிடிக்கணும். அது தான் முதல் கண்டிஷன் . மறந்துடீங்களா?”

“அது எப்படி மறப்பேன் ! நீ தான் இன்னும் அவளை  பார்க்கவே இல்லையே !அப்புறம் என்ன ?” என்று சரண்யா எதிர் கேள்வி கேட்டவுடன் இவங்க  நம்மளை  இதில் சிக்க வைக்காமல் விட மாட்டங்க போல !உஷார் சிவா !உஷார் ..

“என்ன விஷயம் எதாவது லவ் மேட்டர். வந்த பெண்களை எல்லாம் வேண்டாம் சொல்லற?  எல்லா பெண்ணிலும் அவள் உருவத்தை காண முயல்கிறாயா ?”  என்று  நித்யா  வாரினவுடன் “ரொம்ப அறிவா பேசினதா நினைப்பா நிது அண்ணி .”

அவன் மழுப்புவது அறிந்து ,எங்களிடமேவா….

சரண்யாவும், நித்யாவும் இரு பக்கமும் காதை பிடித்துக் கொண்டனர் .“என்ன சார்! எங்களை கலாய்ச்சிட்டதா நினைப்பா?” என்று நித்யா திருகினவுடன் ,அன்னிஸ், வலிக்குது ! ப்ளீஸ் விடுங்க , விடுங்க  என்று கத்தினான்.

நித்யா , “அக்கா, ஏற்கனவே நான் சொன்னது  போல இவனுக்கு ராங்கி ரங்கம்மா தான் பெண்டாட்டியா வர போறா! என்னுடைய ரூபி காசு மாலை செட்  பெட் . நீங்க என்ன சொல்லறீங்க ”

“போ நிது , இவனுக்கு சாதுவா எல்லாம் வர மாட்டா ! நீ சொல்வதை  நான் மறுக்க போவது இல்லை . அதனால் நீயே உன் ரூபி செட் வெச்சுக்கோ ” என்று  பெருந்தன்மையா விட்டுக் கொடுப்பது போல பேசினவுடன் “ஹை, அப்ப என் காசு மாலை எனக்கு தானா ? என்ன அக்கா இப்படி பொசுக்குனு போச்சு ! கொஞ்சமாவது நம்ம கொழுந்தனுக்கு சபோர்ட் செய்து இருக்கலாமே ! சுவாரசியமே இல்லை” என்று நித்யா ஏமாற்றமாக பேசினாள் .

“தெரிந்த விஷயத்திற்கு எதுக்கு பெட் நிது ..ராங்கி ரங்கம்மா தான் வர போறா உறுதி? வேண்டும் என்றால் இன்னொரு பெட் வைத்துக் கொள்ளலாமா ? கல்யாணம் அன்றே நம்ம கொழுந்தனை  அவளிடம் அடி வாங்க வைத்திடலாமா?”

 நித்யா ஆர்வமா “அன்றேவா ?நடக்குமா அக்கா?”

“நடக்க வெச்சிடலாம் ..அடி வாங்குவான் சொல்லறேன் .என் வைர நெக்லஸ் பெட் ..”

ஷிவேந்தர் உள்ளுக்குள் ,ஆஹா … இவங்க பேசும் பேச்சை பார்த்தால் நான் அடிவாங்குவது உறுதி போல ..

“அன்னிஸ் ஸ்டாப், ஸ்டாப் …எனக்கு வர போற செல்ல குட்டியை வைத்து   ரூபி செட், வைர நெக்லஸ் பந்தயமா ? இது எல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லை” .

நித்யாவை பார்த்து , “இவங்க பெட் சொன்னால், எப்படியும் அப்படி தான் இருப்பா .. உனக்கு தான் அந்த செட்  பெருந்தன்மை பேச்சு வேற. இது எல்லாம் சரி இல்லை சொல்லிட்டேன்” சரண்யாவை முறைத்தான் .

சரண்யா , “நிது ,நம்மளிடம் தான் இப்படி லொள்ளு செய்யறான். இவன் பருப்பு எல்லாம் அங்க வேகாது. அவன் மனைவியிடம் பெட்டி பாம்பா அடங்கி இருக்க போறான் பார்த்துக் கொண்டே இரு ! அவ லெப்ட் ஒன்று  கொடுத்தால், ரைட்   ஒன்னு  கொடு  செல்லம் சொல்லுவான்   ..”

நித்யா கண்ணில் சிரிப்புடன் அக்கா, அதை பார்க்க ஆசையா வைடிங்……

திடீர் என்று சிவா “போங்க அண்ணி  வெட்கமா இருக்கு ..”

இவன் எதுக்கு இப்படி  வெட்கப்படறான்  என்று  நித்யாவும் சரண்யாவும் குழம்பினார்கள் .

“என் செல்லம் முத்தம்  கொடுத்தால் லெப்ட் என்ன? ரைட் என்ன ? ஒன்றோட நிறுத்த முடியுமா ?  நான் அத்தனை  நல்லவன் கிடையாது .. லட்டு சாப்பிட கசக்குமா அன்னிஸ் ..” என்று அழகா வெட்கப்பட்டான் .

“ ஆசை யாரை விட்டது. நாங்க சொன்னதை மாற்றி புரிந்து கொண்டீர்கள்  கொழுந்தனாரே  ! கையால் நாலு அடி  சொன்னோம். இன்னும் கொஞ்ச நாள் பொரு நிது .. அண்ணி காப்பாத்துங்க ஓடி வருவான் அப்ப பார்த்துக்கலாம்”  .

“அண்ணி ! நீங்க சொல்லும் படி எல்லாம் ஒரு போதும் நடக்காது . அவ எதை கொடுத்தாலும் ரூமுள்ளே கொடு செல்லம், காலில் விழுந்திடுவேனாக்கும்..”

“இது   திருந்தாத  கேஸ் ! என்ன தான் கீழே விழுந்தாலும் மீசையில் மண்

இல்லை சொல்லும் ரகம்.  நாம   வேற   பெட்   யோசிக்கலாம் நிது!  வேண்டும் என்றால் முதல்  இரவு  போது அவளை    நம்மளுடன்  படுக்க வைத்துக்   கொள்ளலாமா? நீ என்ன சொல்லற?”

அட பாவமே ! சிவா, உனக்கு எதிரி வெளியே இல்லை, வீட்டில் ரெண்டு அண்ணி ரூபத்தில் தான் இருக்காங்க …

“இப்பவே சொல்லிக்கிறேன் அன்னிஸ் .. எங்க அண்ணன் மாதிரி எல்லாம் நான் இருக்க மாட்டேன் .நான் எள் என்றால் அவ எண்ணையா நிற்க போறா ! பார்த்துக் கொண்டே இருங்க” ..

சரண்யா, “ஏன் டா அப்படி ! நீ சொல்வதை வைத்தே  தெரியவில்லையா? அவ  ஏட்டிக்கு போட்டியா தான் செய்வா என்று. அதே நாங்க சொன்னால் ஒத்துக் கொள்ள மாடீன்கிற ! சரி, அப்ப நாம இன்னொரு  பெட் வைத்துக் கொள்ளலாமா ?”

“ஆளை விடுங்க அன்னிஸ் .. அதோ பாருங்க ! நரேன் உங்களை காணோம் தேடறேன் ! நீங்களும் போங்க நித்யா அண்ணி ! சுரேன் அண்ணா  பாட்டு பாட கூப்பிடறான் பாருங்க!” என்று எதிரே வந்த அண்ணாக்களை காட்டி

 “ஆளு கிடைக்கக் கூடாதே, மாட்டினான் என்று  கும்மி அடிக்க வேண்டியது தான் ..போங்க போங்க”..

அண்ணனிடம், “என்ஜாய்” என்று வேகமாக  நழுவினான் .

சரண்யா நரேனிடம் கோபமாக “ஏங்க, நான் தான் வரேன் சொல்லிட்டு  தான வந்தேன் . அதற்குள் என்ன அவசரம் .உங்களை கண்டவுடன் ஆள் எஸ்கேப்” .

“விடு சரண் .கையில் சிக்காமலா போவான் .அப்ப பார்த்துக்கலாம் “.

அங்கு வந்த சுரேன் “ஹே  நித்து பெண்டாட்டி ! ஒரு போன்  பேசி முடித்து வருவதற்குள் எஸ்கேப் !என்ன சொல்லறான் என் தம்பி ! பையன் எங்கோ மாட்டிகிட்டு முழிக்கிறான் தெரியுது” .

நித்யா உடனே, “அனுபவம் பேசுதோ !”

சுரேன் தலையை எல்லா பக்கமும் உருட்டி “ஆமாம் செல்லம் .நான் படும் அவஸ்தை எனக்கு தான தெரியும் ..”

என்னது ,,,

அச்சோ உளறிட்டேனா?  என்று மனதில் குட்டி  , “இல்லை நான் பட்ட அவஸ்தை” என்று மாற்றி “அவனா வரட்டும்..கண்டிப்பா உதவி  செய்யலாம்” .

நித்யாவை கிண்டல் செய்யும் பொருட்டு “காதலர்கள் எல்லாம் சேர்த்து வைக்க எதோ ராகம் இருக்கா செல்லம்மா?  நீ தான் சங்கீதத்தை கரைத்து குடித்து இருக்கையே! உனக்கு தெரியாது..”

“என்னையா கிண்டல் செய்யறீங்க! உங்களை… முதலில் உங்க மூளை வளர எதோ ராகம் இருக்கா கண்டு பிடிக்கிறேன்” என்று நித்யா பல்லைக் கடித்ததை கண்டுக்காமல் நல்ல எண்ணத்தில் தான் கேட்டேன் செல்லம் . உடனே கோவமா என்று  சுரேன் நித்யாவை  கொஞ்சி  மழுப்பினான் .

விசாலம் தான் ஷிவேந்தர் கல்யாணம் சீக்கிரம் நடக்கணும் அவசரபடுத்தினாள்.

Advertisement