Advertisement

காதல் துளிர் 5:

வாசல் பக்கம் ரெண்டு மூன்று சுட்டி குழந்தைகள் குரல் ஒரே நேரத்தில் கேட்டது. பக்கத்தில் விளையாடிக் கொண்டு இருக்கும் சிறுவர்கள் பால் ஏதோ விழுந்திடுச்சா ? வாட்ச்மன் அங்கிள் விடலையா கேட் அருகே சென்றாள்.

காசுவலாக தூக்கி போடப்பட்ட கொண்டை, முகத்தில் அங்கங்கே விழுகும் முடி கற்றைகள்  ஒதுக்கி ,அழகான டி – ஷர்ட்,கப்ரி பண்ட்டுடன்  வெளியே வந்த ஷிவானியை கண்டு ஷிவேந்தர் இமைக்க மறந்தான்.

காரில் இருந்த படி  சுட்டீசிடம் கை காட்டி ‘பேசுங்க’ என்று ஊக்குவித்தான்.

“ஹாய் குட்டீஸ் ! உள்ளே வாங்க . என்ன வேண்டும்? பால் விழுந்திடுச்சா ?I am Shivaani”  என்று கை குலுக்கிக் கொண்டாள்.

வினீத் என்னும் வாண்டு தைரியமாக “நோ அக்கா !எங்களுக்கு சாவி வேண்டும் பைக் சாவி !எங்க பிரின்ட் பைக் சாவி !”

பெரிய மனிதன் போல பேசும் வினீதை அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது . “உங்க பிரின்ட் சாவியா ! அது இங்க எப்படி?” என்று யோசிக்கும் போது ஒ ஹோ, இது அவனுடைய வேலையா ?அவனுக்கு எப்படி என் வீடு அட்ரெஸ் கிடைத்தது. பாலோ செய்து வந்துட்டனா? அவன் ப்ரெண்ட் இல்லை பிராட்  என்று  சொல்ல வந்ததை விழுங்கி வெளியே யாரவது நிற்கிறாங்களா நோட்டம் விட்டாள் . மரத்தின் பின் நின்ற ஷிவேந்தர் காரை ஷிவானி பார்க்கவில்லை.

“உங்க ப்ரெண்ட் பேர் என்ன ? எங்க இருக்கீங்க? ப்ரெண்ட் என்ன செய்யறாரு ?” என்று பல கேள்விகளை அடுக்கினாள்.

ஒரு சுட்டியிடம் கூட விவரத்தை வாங்க முடியவில்லை .தொண்டை தண்ணீர் வற்ற கேள்வி கேட்டது தான் மிச்சம் .சென்ற சிறிது நேரத்திலே மிகவும் கிளோஸ் ஆகிவிட்டார்கள் .

“அக்கா, இன்னும் டென் மினிட்ஸ் தான். சீக்கிரம் ,நாங்க போகணும். டோரா புஜி டைம் ஆகிடுச்சு . . ப்ரெண்ட் கி கொடுங்க” என்று நவீன் கேட்கும் போது “என்னுடன் நீங்க விளையாட சம்மதிக்கணும் .நீங்க ஜெயித்தால் கி தரேன்” என்று சாவியை ஆட்டினாள்.

“இது சீட்டிங் ! நீங்க பிக் ,நாங்க ஸ்மால்! எங்களால எப்படி முடியும்” .

இவங்களை அனுப்பினவனை விட இதுக விவரமா தான் இருக்கு . “இப்ப தான் உங்களை சுட்டி குட்டீஸ் நினைத்தேன்” .

“நாங்க சுட்டி குட்டி தான்” என்று இருந்ததிலே சின்ன வாண்டு வினீத் சண்டைக்கு  வந்தது . “ஓகே ,ஓகே ! சாரி செல்லம் ..நீங்க ஸ்மார்ட் குட்டீஸ் தான். ஒத்துக்கிறேன்! அக்கா  சரண்டர்” என்று சொன்னவுடன் தான் அமைதியானான் .

“கேமில் அக்கா நான் மட்டும் ஒரு செட், நீங்க த்ரீ ஒரு செட் !அப்ப சரி தான ?”

உடனே மூவரும் சரி என்றனர் . முதலில் கிரிக்கெட், அப்புறம் கண்ணாமூச்சி என்று அவர்களுக்கு நேரம் போனதே தெரியாமல் விளையாடிக் கொண்டு இருந்தனர். ஷிவானியும் சந்தோஷமாக குழந்தைகளோடு குழந்தையாக மாறி விளையாட ஆரம்பித்தாள்.

அவர்கள் தெருவிலே ஒரு மணி நேரமாக நின்று கொண்டு இருந்த ஷிவேந்தர்  இதுக விவரம், எமகாத பசங்க  ,சீக்கிரமா பேசி  வாங்கி வந்திடுவாங்க  பார்த்தால் அவளுடன் அரட்டை அடிக்க ஆரம்பித்து விட்டார்களா ?

போறவன், வரவன் எல்லாம் ஒரு மாதிரியா பார்த்திட்டு போறாங்களே ! எவனாவது சந்தேக கேசில் கம்ப்ளைன்ட் கொடுத்திட போறான் என்று சுத்தி முற்றியும் பார்த்துக் கொண்டு இருந்தான் .

எப்படி குட்டீஸ் வெளியே அழைக்க? ஷிவேந்தர்  மண்டை பிய்த்துக் கொண்டான் .

எல்லாம் ஒன்றாவது, ரெண்டாவது தான் படித்து கொண்டு இருந்தது .

விளையாடி முடித்து ஓய்வாக ஊஞ்சலில் விளையாடியபடி

“ படித்து,ஹோம் வர்க் எல்லாம் முடிச்சுடீன்களா? உங்க வீடு எங்க ? அட்ரெஸ் சொல்லுங்க . நான் உங்க ப்ரெண்ட் தான ! எனக்கு நீங்க தான் பெஸ்ட் ப்ரெண்ட்” என்ற ஷிவானியிடம் வினீத் அவன்  பிஞ்சு கைகளை நீட்டி “ப்ராமிஸ் !”

“ப்ராமிஸா நீங்க தான் பெஸ்ட் ப்ரெண்ட்” என்று அவர்களை போல சொன்னவுடன்  குழந்தைகள் சந்தோஷமானது .

நவீன் ஷிவானியிடம் பாவமாக “அக்கா, நீங்களே எங்க கேள்விக்கு பதில் சொல்லுங்க ! ஒரு டீச்சரால் எல்லா சுப்ஜெக்ட்ஸ் சொல்லி தர முடியவில்லை என்றால் எங்களால் மட்டும் எப்படி  எல்லாத்தயும் படிக்க முடியும், சொல்லுங்க பார்க்கலாம்” .

நவீன் கேள்வியை கேட்டு ஷிவானியே ஒரு நிமிடம் அரண்டுவிட்டாள்.

அடேங்கப்பா, எத்தனை அறிவா யோசிக்குதுங்க ! விவரம் தான் . “கேட்பது சரியான கேள்வி தான் . எனக்கு இது தோணாமல் போச்சே செல்லம் . இதில் நானும் உன் பக்கம் தான். என்னையும் எங்க டீச்சர்  இப்படி தான் டார்ச்சர் செய்யறாங்க !”

நீங்க என்ன கிளாஸ் படிக்கிறீங்க! அவர்கள் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லியே சோர்ந்து போனாள். அடுத்த ஆட்டம் ..என் கேள்விக்கு பதில் சொல்லுங்க ..நான் தான்  முதல் என்று அனைவரும் சத்தம் செய்தனர்

ஷிவானி சின்ன பிள்ளை தனமா இங்கி, பிங்கி பான்கி, பாதர் ஹட் எ டாங்கி என்று  போட்டவுடன் அவளே முதல் என்று  வந்தது. நான் தான் முதல் என்று கேள்விகளை அடுக்கினாள்.

Which alphabet is a question?
Which alphabet is a fly?
which alphabet is a part of our face?
which alphabet is a tool?
Which alphabet is a drink?
which alphabet is in geometry box?
.which alphabet is a source of salt ?

பதில் கண்டுபிடித்துவிடீர்களா மக்களே! பதிலுக்கு கீழே பார்க்கவும்.


சுட்டீஸ் எல்லா கேள்விக்கும்  டக் டக் என்று பதில் கூறினார்கள். விவரமான  குழந்தைகள் தான். இன்னும் கஷ்டமான கேள்வியை  கேட்டு இருக்கணுமோ ? இத்தனை ஈஸியா சொல்லிடறாங்க என்று மெச்சிக் கொண்டாள்.

கவி ,மை டர்ன் என்று கை தூக்கி “அக்கா, நீங்க இதுக்கு சரியா பதில் சொல்லுங்க பார்க்கலாம் ..

5 Frogs Are Sitting On a Log.
4 Decide To Jump Off.
How many Are Left?
?
?
?
?

ஒரு frog ..

கவி சிரித்து தப்பு தப்பு..


Still 5 left.

There is a Lot of Difference Between Deciding and Doing அக்கா என்று அவளுக்கு பாடம் நடத்தினார்கள்.

“நேரம் டா சாமி”

நவீன்,  அக்கா இப்ப என் டர்ன் ..

Who said English is easy???

Fill in the blanks with YES or NO.

1.______I don’t have Brain.…

2.______I don’t have Sense.…

3.______I am Stupid….

விவரமா கேள்வி கேட்கிறாங்களே ! எப்படி சொன்னாலும் சரி வரது, என்று ஷிவானிக்கு தெரிந்து இருந்தாலும் விடை சொல்லாமல் சிரித்து மழுப்பினாள்.  இன்னும் சிறிது நேரம் அவர்கள் இருந்தால் நல்லா இருக்கும் என்று எண்ணி   “உங்களுக்கு எல்லாம் அறிவு ஒத்துக்கிறேன் ! ஒத்துக்கிறேன், உங்க மிஸ் எல்லாம் பாவம் டா! எப்படி தான் சமாளிக்கிறாங்களோ”

அவர்களை நோக்கி லட்சு வருவதை பார்த்து   வாங்க பிரெண்ட்ஸ் , வாங்க ஸ்நாக் சாப்பிடலாம்.

வாசலில் பாமான ஹாரன் சவுண்ட் கேட்டவுடன் “ ஹே நம்ம ப்ரெண்ட் சிவா…….” என்று கவி  பெயரை சொல்வதற்குள் நவீன் ,கவி வாயை மூடினான் .

நல்ல வேலை சொல்லவில்லை என்று அந்த மூவருள் சின்ன வண்டான வினீத் பெருமூச்சுவிட்டான்.

அதைக் கண்ட  ஷிவானி சிரித்து  அப்ப, சரியான விடாகொண்டனுங்க! இதுக கிட்ட இருந்து உண்மையை வாங்குவதற்குள் அடுத்த  மகா மகமே வந்துவிடும் போல இருக்கே  . பைக் ஆசாமியிடமே   கேட்டுவிடலாம் ..சரியான ஆளுகளை தான் அனுப்பி இருக்கான் என்று ஷிவேந்தரை பாராட்டினாள்.   அவர்கள் கிளம்பும் போது  அவன் பைக் சாவி  கொடுத்து கூடவே ,கேக் ,சாக்லேட் ,பிஸ்கட் , ஜூஸ் என்று பல பைகளில் திணித்து அனுப்பினாள்.

முதலில் குட்டீஸ்  என்ன கேட்டாலும்  சாவியை கொடுக்க கூடாது,  அவனே வந்து வாங்கட்டும்  என்று தான் நினைத்தாள் . பின்னர் ,அவள் அவர்களுடன் செலவழித்த சந்தோஷ தருணத்துக்காகவே கொடுக்கலாம்  முடிவு செய்தாள் .

அவர்களை அனுப்ப மனசு இல்லாமல் ,யார் கூட போவீங்க ! உங்க ப்ரெண்ட் தான் எப்படி தெரியும் .அவர் இல்லை என்றால் நான் டிராப் செய்யட்டுமா ? நாளைக்கும் வருவீங்களா ? உங்க நம்பர் கொடுங்க …

பாய் dude  ! டோன்ட் வரி ! v will take care  என்று பெரிய மனிதர் போல சொல்லி வெளியேறினார்கள் .

ஷிவானிக்கு  பல நாள் கழித்து சந்தோஷமாக இருந்தது போல எண்ணம் . மனம் லேசாக இருந்தது .எப்படியாவது பைக் ஆசாமி யாரு கண்டு பிடிக்கணும் என்று முடிவு செய்தாள்.

Answers:
1:Y
2:B
3:I
4:X
5:T
6:D
7:C

Advertisement