Advertisement

20;

ஷிவேந்தர், ஷிவானியிடம் திலோ என் தங்கை போல ! அவள் கல்யாண பொறுப்பு என்னுடையது . ஆதிக்கு திலோவை கேட்காலாமா ? ரொம்ப நல்ல பெண் .ஆதியும் சந்தோஷமாக பார்த்துக் கொள்வான் .

ஷிவானி, திலோ செய்ததை எல்லாம் கூறியவுடன் “சாரி டா ! நான் உன்னிடமாவது சொல்லி  இருக்கணும் .. இப்ப போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டா . இன்னும் ட்ரிங்க்ஸ் மட்டும் தான் . அதுவும் குறைந்து இருக்கு . அதையும் என்னால் …..அவள் இங்க இருக்கும் நாளில் கண்டிப்பா சரி செய்திட முடியும் நம்பிக்கை இருக்கு டா ! ஒரு மருத்துவரா அவள் முன்பு இருந்த நிலைக்கு இது எல்லாம் ஒன்றும் இல்லை என்று தான் சொல்லுவேன் ..”

“ஆதிக்கும், திலோக்கும் ஒத்து வருமா என்று யோசித்தாலும் அப்போதைக்கு அவனிடம் முழுதா சரியான பிறகு ஆதியிடம் நானே பேசறேன்” என்று ஷிவானி வாக்கு கொடுத்தாள்.

மணிவாசகம் மேலும் ரெண்டு வாரத்துக்கு மருத்துவமனையில் இருக்கணும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். ஷிவேந்தர் அவன் நோயாளிகள் , மருத்துவமனையில் மணிவாசகத்திடம்  பாதி நாள் என்று அவனுக்கு  நேரம்  ரெக்கை கட்டி பறந்தது .

விசாலம் ஜாடை மாடையாக  எல்லாம் இவளால் தான் என்று ஷிவானியை குத்தி  காட்டி  பேச ஆரம்பித்து  இருந்தாள். “நல்லா இருந்த மனுஷன இப்படி  படுக்க  வெச்சுட்டா! மகன் வேலை செய்யும் இடத்தில் பிரச்சினை. இன்னும்  என்ன எல்லாம் நடக்க  போகுதோ” என்றவுடன்

வைதேகி பாட்டி, “என்ன விசாலம் ! அவ என்ன செய்வா? சின்ன பெண்ணை போய் பேசற” என்று கடிந்து கொண்டாள்..

“நான் ஆரம்பத்தில்  இருந்தே  வேண்டாம் சொன்னேன்  ..இவள் அப்பாவை எதிர்த்தால்  அந்த மனிதர் லாலிபாப் சாப்பிட்டு சும்மா போய்டுவாரா ? எங்க இருந்து என் பையன் தேடி  பிடித்தானோ … நல்ல ஏமாந்துட்டோம் .. அப்பவே இவரிடம் ரெண்டு பேருக்கும்  ஜாதக பொருத்தம்  பார்க்க சொன்னேன் … அது எல்லா வேண்டாம் சொல்லிடாரு ? என் பேச்சை கேட்டு இருந்தால் இப்படி நடந்து இருக்குமா?”

இதே விசாலம்  ஷிவானி  ராசியால் தான் பல வருடம் கழித்து மகள்   உண்டாகி இருக்கிறாள் என்று சந்தோசம் கொண்டதை மறந்து விட்டார் போல ! ஒரு வாரம் முன்பு கூட  நித்யா விஷயத்திலேயும் அதே தான நினைத்தாள்.. இது தான் குரங்கு மனம் என்பதோ !  வைதேகி அடக்கியும் விசாலம் புலம்புவது நிற்கவில்லை . 

விசாலம் குணம் அறிந்தாலும் அவள் குத்தல் பேச்சு ஷிவானியை பலமாக தாக்கியது .. அவர்கள் சொல்வதும் உண்மை தான ..

ஷிவானி கீழே  சமையல் அறையில் இருக்க  அவர்கள் அறையில் இருக்கும்  அவள் போன்  விடாமல் அலறியது . அதில் ஜீவா எண் இருக்க சிவா  கோபமானான் .எந்நேரமும் இவளுக்கு தான் வேலை இல்லை என்றால் இந்த ஜீவாவிற்குமா இல்லை ..

ஜீவா எண்ணில் இருந்து நான்கு தவறிய அழைப்பு இருக்க ஷிவானி அவனுக்கு அழைத்தாள் . “எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு  ஜீவா.. எங்க அப்பா பயங்கர கோபத்தில் இருக்கார் ..இந்த வரமா ? நோ வே ! ப்ளீஸ் ஜீவா, எனக்காக !  இருந்தால் பெரிய சர்பிரைஸ் கிடைக்கும் ..வேண்டாம் என்றால் கிளம்பு ..

எனக்காக ….ரெண்டு வாரம் என்று தான சொல்லறேன்!”  அந்த  பக்கம்  ஜீவா ஏதோ பேசுவதை கேட்டு “நான் பெரிய மனுஷி எல்லாம் இல்ல பா ! பாட்டி சொன்னதை சொன்னேன் ..”

இதை எல்லாம் கேட்ட  ஷிவேந்தர் கோபமாக டிவி சானலை மாற்றிக் கொண்டு இருந்தான் .. மனதில் இந்த ஜீவா இன்னும் கிளம்பாமல் என்ன செய்யறான் . இன்னும் இவனுக்கு இங்க  என்ன வேலை .. இந்த மேடம் வேற ஓவர் கெஞ்சல் . எப்படியோ போகட்டும் விட வேண்டியது தான .. ஷிவானி ,ஜீவாவுடன்  போன் பேசினாலே எரிச்சல் அடைந்தான். இந்த கோபம் எதனால் ? அவன் வனியை காதலித்தான் என்பதற்காகவா ?

அவன் கோபத்தை மறைத்து “அவனை எதுக்கு கெஞ்சிக் கொண்டு இருக்க வனி ! ஜீவா ,வேலையை பார்க்க போகட்டும்! ”

“நான் என்ன வேண்டாம் என்றா சொல்லறேன் .. இன்னும் ரெண்டு வாரம் தான சிவா !”

“ரெண்டு வாரத்தில் என்ன ஷிவானி !”

“அது சஸ்பென்ஸ் ..கண்டிப்பா உங்களுக்கு சொல்லாமல் இருப்பேனா ? கூடிய சீக்கிரம் சொல்லறேன்” அவள் உண்மையை சொல்லும் போது சிவா என்ன மனநிலையில் இருப்பானோ…

*****

ஷிவேந்தர் வீட்டில் இருக்க  நேரம் இல்லாமல், அவன் மருத்துவமனை பேஷன்ட் , அவன் அப்பாவை பார்த்துக்கொள்ள என்று ரக்கை கட்டி   பறந்து கொண்டு இருந்தான்.

விசாலம் கோப பேச்சு , மணிவாசகம் நிலையை எண்ணி ஷிவானி, கண்ணன் மீது கோபமாக நடமாடிக் கொண்டு இருந்தாள். அவள் அப்பா எட்டு அடி பாயிந்தால் அவருக்கு பிறந்த பெண் பதினாறு அடியாவது பாய வேண்டாம் .. விபத்தை பற்றி உண்மையை அறிய ஜீவா மூலம் detective agency ஏற்பாடு செய்தாள்.

சரண்யா சொல்லியும் ஏனோ இந்த விஷயத்தை சரண்யா அப்பாவிடம் எடுத்து செல்ல அவளுக்கு  பிரியம் இல்லை .. என்ன இருந்தாலும் சரண்யாவும் இந்த வீட்டு மருமகள் தானே ! ஒரு அரை சதவீதம் அவள் அப்பா கண்ணன் இதை செய்யாமல் இருந்தால் அவருக்கு  தேவை இல்லாத அசிங்கம் தானே ! முழுதா  உண்மை தெரிந்த  பிறகு  சரண்யா அப்பாவிடம் உதவி கேட்கலாம் முடிவு செய்தாள் ..

ஷிவானி எந்நேரமும் யோசைனையில் இருக்க ஷிவேந்தர், “வனி எப்படியும் போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறோம் .. அவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் டா” .. அவள் இதை விட போவது இல்லை, இதனால்  பெரிய பிரச்சினை வர போகுது   என்று அவன் உள்மனம் எச்சரித்துக் கொண்டு இருந்தது

“சரி சிவா”  என்று  அவள் வாய்  பொய் சொல்வதை அவன் அறிவான் .  அவனும் என்ன செய்வான் . இருக்கும் வேலை பளுவால் ஷிவானியிடம் ஒழுங்கா கூட பேசமுடியவில்லை .

மனநல  மருத்துவனான சிவா , ஒருவேளை ஷிவானி , அவள் அப்பா ,அம்மா ,அண்ணா, அண்ணி, பிறந்த வீட்டை    மிஸ் செய்வதனால் இப்படி செய்கிறாளோ ! அதை சொல்ல  தெரியாமல்   அவர்களையே நினைத்து தான் இந்த மன வேதனை, மனஉளைச்சல் , வேண்டாத கற்பனையோ ?

 ஒரு வகையான டிப்ரஷனில் இருக்காளோ ..அப்படி தான் என்று முடிவு செய்தான் . என்னிடம் சொல்ல இவளுக்கு என்ன தயக்கம் . ஆள் தான் வளர்ந்து இருக்கா .. இன்னும் குழந்தை தான் என்று கொஞ்சிக் கொண்டான்.

அவள் அப்பா ,அம்மாவை பார்த்தால் சரியா போய்விடும் என்று நம்பி சர்பிரைசாக  முதலில்  அவள் அன்னையை பார்க்க ஏற்பாடு செய்தான் .

உங்களுக்கு இன்னும் ஷிவானியை பற்றி சரியா தெரியல பாஸ்..

அவன் அம்மா நடத்தும் ஸ்பெஷல் பள்ளிக்கு அழைத்து சென்றான் . அங்கு போகும் முன்னே விஷயம் என்ன என்பதை யூகித்துவிட்டாள் . அன்று ஷிவானிக்கு வந்த கோபத்தை கண்டு அரண்டுவிட்டான் .

“எனக்கு நீங்க மட்டும் போதும். என் பிறந்த வீடும், புகுந்த வீடும் ஒன்று தான் எப்போதோ முடிவு செய்தாச்சு … இந்த மாதிரி செய்வதை விட்டு  உருப்படியான  வேலையை பாருங்க .. ஒட்டறேன், தைக்கறேன் வேலை எல்லாம் இங்கு வேண்டாம். என்னை வேண்டாம் என்று சொன்னவர்கள் எனக்கும் வேண்டாம்” என்று தெளிவாக கூறிவிட்டாள். அவன் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று..

ஷிவேந்தர் மனதில் என்ன யோசித்தாலும் , கண்ணன்     இப்படி செய்ய கூடியவரா ? சமுதாயத்தில்  பெரிய மனிதன்! நாலு பேர் போற்றும் மருத்துவன் . உயிர்களை காப்பவன் . எப்படி? ஷிவானி என்ன தான் அவள் அப்பாவை குறை கூறினாலும் ஷிவேந்தரால் கொஞ்சம் கூட அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை . அவரை  தப்பா நினைக்க முடியவில்லை.

ஷிவேந்தர் வளர்ந்த சூழ்நிலை ,விதம் வேறு .. அவன் குடும்பத்தில் ஒருத்தருக்கு எதாவது என்றால் அனைவரும் துடித்துப் போவார்கள் .. முக்கியமாக அவனுக்கு வழிகாட்டியான அவன்  அப்பாவை தெய்வமாக கருதுபவன் .. ஒழுக்கத்தில்  மணிவாசகத்தை  விட சிறந்த எடுத்துகாட்டா அவனால்  யாரையும்  சொல்ல கூட முடியாது  .

அவன் அம்மா மட்டும் கொஞ்சம் கோபத்தில் பேசுவார் . அப்படி  பட பட பேசினாலும் மனதில் ஒன்றும் வைத்துக் கொள்ளமாட்டார் . பழி, வஞ்சம் என்று எல்லாம் இதுவரை அவர்கள் குடும்பத்தில் ஒருத்தரும் நினைத்தது கூட  இல்லை .. அவர்களை பொறுத்த வரை நேர்மையாக இருந்து, உழைப்பால்  எது கிடைத்தாலும் வெற்றியே ! போதும் அளவு பணம் இருக்க வேற எதையும் அவர்கள் பெரிதாக  நினைத்ததே இல்லை .

ஆதி, கண்ணனை பற்றி  சொன்னது அவனுக்கு சுத்தமாக மறந்து போனது ..இல்லை என்றால் கொஞ்சமாவது யோசித்து இருப்பான் .

இதுவரை எல்லாரும் நல்லவர்கள் என்றே பார்த்து பழகியவனுக்கு, கண்ணனும் நல்லவராகவே தெரிந்தார் .. பலநாள் குழம்பி வனிக்கு தெரியாமல்  கண்ணனை நேரில்  தொடர்பு கொண்டான் . அவருக்கும் சிவாக்கும் எந்த பிரச்சினையும் இல்லையே! என்றாவது அவன் மூலம் காரியம் நிறைவேறும் என்று மருமகனை பலமா வரவேற்று  உபசரித்தார் . சிவா, இவர் நல்லவரா ? கெட்டவரா என்று குழம்பினான் .

அவர் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக அவர்  எதையும்  செய்யவில்லை என்றதை சிவாவும் நம்பினான் .. அன்பு , நேர்மை ,நீதி நியாயம் என்று வளர்ந்த அப்பாவியான ஷிவேந்தருக்கு   இந்த மாதிரி விஷயத்தில் எல்லாம் கண்ணன் Phd பட்டம் வாங்கி தேர்ச்சி பெற்று இருக்கார், அவருக்குள் பல குள்ளநரிகள் ஒளிந்து இருப்பது அவனுக்கு  தெரிய வாய்ப்பு இல்லை ..

டிடெக்டிவ் அஜென்சி விசாரித்ததில்  மணிவாசகத்துக்கு நடந்த விபத்து , திட்டமிட்ட சதி , accident போல ஜோடித்து இருக்கிறார்கள் என்றனர் ..

கோபமடைந்த ஷிவானி, இவர் மருமகன் வேண்டும் என்றால் இவரை  நல்லவர் , வல்லவர் சொல்லலாம் .. எனக்கு தான் இவரை பற்றி நன்கு தெரியுமே ! விஷயம் தெரிந்த பிறகு அவளால் அதை சும்மா விட முடியவில்லை .

மருத்துவர்  பிரேமாவிடம் நித்யா விஷயத்தில் ஆதாரத்துடன் போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பேன் என்று ஷிவானி மிரட்டியவுடன் கண்ணன் சொன்னதால் தான் செய்தேன் என்று ஒத்துக் கொண்டாள். எய்தவன் இருக்க அம்பை நோவானேன்.

வனி ,கோபத்தில் அவள் அப்பாக்கே அழைத்தாள்.

அவரும் எடுப்பதா இல்லை . இவர் என்று தான் எடுத்து  இருக்கிறார் இன்று எடுக்க   . தொடர்ந்து அவர்  எல்லா எண்ணுக்கும் அழைத்துக் கொண்டே இருந்தாள். அவர் எடுத்தவுடன் “என்னமா சண்டி ராணி ! வீட்டுக்கு வந்த போல ! என்னிடம் பணம் வாங்க  வந்தாயா? இதுக்காகவாது என் நியாபகம் வந்துதே !”

செய்யறதை எல்லாம் செய்திட்டு   திமிர் பேச்சுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்று மனதில் திட்டி “யாருக்கு வேண்டும் உங்க பணம் . உங்க பாவ மூட்டையை நீங்களே சேர்த்து வெச்சுக்கோங்க! எனக்கு செலவு செய்ய என் ஷிவேந்தர் இருக்கார் ! நான் உங்க வழிக்கு வரல.. நீங்களும் வராதீங்க  சொல்ல தான் போன் செய்தேன் .. என் வீட்டு ஆளுகளிடம் விளையாடுவதை நிறுத்திக்கோங்க ! ”

கண்ணன் பலமா    சிரித்து   “அட , கண்ணன் பெண்ணா கொக்கா ? என்னை போலவே என் பெண் விவரம் தான் . நான் தான் செய்தேன்  எப்படி  சரியா  கண்டுபிடுச்ச! இது  தான் ஆரம்பம் ஷிவானி   .. போக  போக  பாரு  !

என்னை  பகைத்துக் கொண்டால் என்ன விபரீதம் நடக்கும் என்று  உனக்கும் அந்த மணிவாசகத்துக்கும் தெரிய வேண்டாம் . என்ன எப்படி இருக்கான் .. மிரா பேசினான்! ஆள் பிழைத்துக் கொண்டதே பெரிய விஷயம் போல ! கை , கால் எல்லாம் ஒட்டு போட்டாச்சா ? அந்தோ பாவம் ” என்று பலமாக சிரிக்க  தொடங்கினார்.

“அந்த மணிவாசகம் குடும்பத்துக்காக  தான  என்னை பகைத்துக்  கொண்டு  போன! அனுபவி,  நல்ல அனுபவி  !” 

ஷிவானி, “ கொஞ்சம் கூட உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ? மிருகத்தை விட கேவலமா நடந்து கொள்கிறீர்கள் .. கண்ணன் மகள் என்பதை விட மிஸ்டர்   ஷிவேந்தர் மனைவி , மணிவாசகம் மருமகள் சொல்ல தான் எனக்கு பெருமையா இருக்கு… அந்த நேர்மையான மனிதன் கால் தூசிக்கு ஈடாக மாடீங்க.. உங்களை போல அவர் வாழ்க்கையில்  எத்தனை பேரை பார்த்து இருப்பார் . உங்களை அவர் சும்மா விடமாட்டார் ..ஒழுங்கா இருந்தால் பிழைத்துக் கொள்வீர்கள்,, இல்லை என்றால் ???”  மிரட்டினாள்.

கண்ணன் மனதில் என்ன திமிர் இருந்தா என்னிடமே  அந்த மணிவாசகம் மருமகள் சொல்லுவா? மிரட்ட  வேறு செய்யறா? அவள் துணிச்சலை கண்டு உடனே என் ரத்தம் ,என்னை போல என்று பெருமை பட்டுக் கொண்டார்.

“ அட , ரோஷத்தை பாரு டா! என் பெண் பேசுவதை கேட்க எத்தனை சந்தோஷமா இருக்கு .. இதோட நிறுத்த மாட்டேன் ஷிவானி ,என் கனவு கோட்டையை  தகர்த்து எறிந்த உன்னை சும்மா விட மாட்டேன் . நீயே என்னிடம் வருவ! உன்னை உங்க வீட்டில் இருந்து  துரத்தும் படி, இல்லை நீயே விலகும் படி செய்யறேன் ! என் பவர் என்ன என்று உனக்கு தெரிய வேண்டாம் .. இப்ப கூட ராஜ் மகன் தேவா  என்னை அழைத்து உன்னை  ஏற்க தயார் சொல்லறான் .. என் ஆள் பலம், பண பலம் பற்றி உனக்கு தெரியாது.. நீ இன்னும் இதில் எல்லாம்  முளைக்காத விதை .. நான் வளர்ந்து வேரூன்றி நிற்கும் ஆலமரம் தெரிஞ்சுக்கோ ! நான் இழந்ததை கண்டிப்பா திரும்ப பெறுவேன் . யாரிடமும்  இதுவரை  தோற்றதா சரித்திரமே இல்லை..” .

ஷிவானி பலமா சிரித்து “உங்களுக்கே நீங்க சொல்வது காமடியா இல்லை ! என் விஷயத்தில் நீங்க ஏற்கனவே தோற்று மண்ணை கவ்வியாச்சு  மிஸ்டர் கண்ணன் அவர்களே ..”

“நெவெர் வனி ! இன்னும் இந்த  ஆட்டம்  முடியவில்லை .  பரமபத விளையாட்டில் கொஞ்சம் சறுக்கி இருக்கு .அவ்வளவு தான் ..”

ஷிவானி சவாலாக “நான் ஜெயிக்கும் வரை உங்களை விட போவது இல்லை. எழுந்துக்கவே முடியாத பாம்பு வாயில்  மாட்டிகிட்டு தவிக்க தான் போறீங்க ! பாருங்க . என்ன கத்தினாலும் உங்களை காப்பாற்ற யாரும் வர போவது இல்லை ….” இவருடன் பேசினால் நானும் தரம் தாழ்ந்து போறேனே வருந்தி ,ஒரு கட்டத்தில் “உங்களுக்கு  என்ன தான் வேண்டும் . எங்களை நிம்மதியா இருக்க விடுங்க”

“அது எப்படி முடியும் .. எனக்கு நான் இழந்த  அந்த இடம்  வேண்டும் .. உன்னால்   கொடுக்க  முடியுமா  ?  என்னை பார்த்து  பயந்து ஊரை விட்டு ஓடி போன பையன், அந்த பரதேசி ஜீவா எல்லாம்   இன்று  எனக்கு எதிரா  ? எத்தனை திமிர் இருந்தால் என்னுடைய இடத்தையே வாங்கி இருப்பான்… அவனுக்கும்  இருக்கு! அவனையும் ஓட விரட்டிறேன் ! எனக்கு எத்தனையோ   வேலை   இருக்கு! உன்னுடன்  பேசி  என் நேரத்தை  வெட்டி  செய்ய விருப்பம்  இல்லை” என்று  போனை  பட்டென்று  அணைத்துவிட்டார்  .

இவர் என்ன செய்திடுவார் ? வெளியே தைரியமாக இருந்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் பயந்து தான் இருந்தாள்.. போனை வெறித்த வண்ணம் ,இவர் அப்பா  இல்லை ! சரியான   வில்லன்   … இவருக்கு எப்படி மணி கட்ட …

ஷிவானி பேசுவதை கேட்டபடி அறைக்குள் நுழைந்த ஷிவேந்தர்   அவர் செய்யவில்லை என்றாலும் இவளே எடுத்துக் கொடுப்பா போல ! சொன்னால் கேட்கமாடீங்கிறாலே ! இவள் பிடிவாதம்  எங்க போய் விடுமோ என்று அவனுக்கு பயம் எழ ஆரம்பித்தது.

அவளை அவன்  மடி மீது அமர வைத்துக் கொண்டு “வனி, உனக்கு ஏன் புரிய மாடீங்குது, கிளி பிள்ளைக்கு  சொல்வது போல சொல்லறேனே ! என் பேச்சை  கேட்க கூடாது என்று முடிவு செய்துட்டயா?”

“சிவா,  இது போல எதுவும் நடக்க கூடாது என்று எந்நேரமும்  பயத்தில் நான் இருப்பது உங்களுக்கு ஏன் புரிய மாடீங்குது .. எங்க அப்பா பேசினதை நீங்க கேட்கவில்லை . என்னால் தான் நீங்க எல்லாரும் …நேற்று சுரேன் அத்தான் construction  இடத்தில்  யூனியன் அது இது என்று பிரச்சினை கிளம்பி இருக்கு ! இத்தனை நாள் இல்லாமல் புதுசா…….”

ஏற்கனவே சோர்வாக  வீடு திரும்பிய ஷிவேந்தர் கோபத்தை அடக்கி கிளி பிள்ளை போல  அவளிடம் பொறுமையாக  பேசிக் கொண்டு இருந்தான். “வனி, உங்க அப்பாவை பற்றிய சிந்தனையிலே   உன் நேரம் அத்தனையும் செலவு  செய்யற . அவரை பற்றி அவரை விட நீ தான் சிந்தித்துக் கொண்டு இருக்க ? உனக்கு பிடித்தமானதில்  உன் கவனத்தை திருப்பு..  உன் கண் முன்னே நிற்கும் மனுஷன் சாப்பிட்டானா ? இல்லையா  கூட கண்டு கொள்வது இல்லை .. எந்நேரமும் அந்த ஜீவாவுடன்  போன்!”

“ உங்களிடம் பேசினால் தான் உங்க மாமனாருக்கு சபோர்ட் செய்கிறீர்களே ! என்னத்த செய்ய சொல்லறீங்க  ! என்னை கல்யாணம் செய்ததால் தான் இந்த பிரச்சினை எல்லாம்!” கண்ணில் நீருடன்  “என்னால் நிம்மதியாக இருந்த உங்க வாழ்க்கையும்….”

ஷிவேந்தர் கோபமாக    “ஸ்டாப் இட் ! முதலில் எப்ப பார்த்தாலும் என்னால் தான் என்று புலம்புவதை  நிறுத்து.. நான் தும்மினால் கூட உங் அப்பா தான் காரணம் சொல்லுவ ! அவருக்கு வேற வேலையே இல்லையா?  உனக்கு எதாவது அவரை சொல்லிக் கொண்டே இருக்கனும் .. அது தான !”

“எனக்கு வேற வேலையே இல்லை சொல்லறீங்களா?”

 குற்றம்  சாட்டும் பார்வையில் “ இல்லை சொல்ல போறீயா.. உருப்படியா என்ன செய்யற ? என்னுடன் சந்தோஷமா பேசி, சிரித்து எத்தனை நாள் ஆச்சு சொல்லு பார்க்கலாம் . எதுக்கு தேவை இல்லாததை எல்லாம் தலையில் தூக்கி சுமக்கிற ? முதலில் அந்த ஜீவாவுடன் பேசுவதை நிறுத்து ! அவன் தான் இது எல்லாத்துக்கும் காரணம் ..”

“முடியாது சிவா ! இதுவே நான் உங்க நண்பன் குணாவிடம் பேச  வேண்டாம் சொன்னால் நிறுத்துவீங்களா? முடியாது தான ! அது போல தான் இதுவும் ” .

என் தொழிலில்  எத்தனை பேருடன் பேசி எண்ணத்தை மாற்றி இருக்கிறேன் . இந்த படிப்பு படித்த எனக்கே சவாலா இருக்காளே !  நழுவும் மீனா இருக்காளே ! இவளுக்கு  ஏன் புரிய  மாடீங்குது  வருந்தி “ பேசறதில் ஒன்றும் குறைச்சல் இல்லை..  மனுஷன் களைத்து வரானே கொஞ்சமாவது கவனிக்கணும் தோன்றுதா ? எந்நேரமும்  உன் உலகத்திலே இருக்க .

 வெட்டியா  எதாவது யோசித்துக் கொண்டு இருந்தால் இப்படி தான், கண்டதையும் நினைக்க தோன்றும்  ! கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆனா ஜோடி போலவா இருக்கோம் ..சந்தோஷமா இருந்து எத்தனை நாள் ஆச்சு உனக்கு  நியாபகம் இருக்கா? நானும் சராசரி மனுஷன் தான . உனக்கு ஏன் புரிய மாட்டீங்குது! என்னை என் மனைவி கவனிக்கணும் என்ற எண்ணம்  தப்பா ” என்று முணுமுணுத்து  குளியல் அறைக்குள் புகுந்தான் ..

ஷிவானி மனதில் இவன் குடும்பத்துக்காக தான கவலை படறேன் ..என்னையே குற்றம்  சொன்னால்  எப்படி ? நான் உண்டு, கண்ணனிடம் சண்டை உண்டு என்று இருந்தேன் . எதுக்கு தான் இந்த  காதல் வந்ததோ ?அதனால் தான் பிரச்சினையே! சிவாவை நினைத்தாலும் அவளுக்கு பாவமாக தான் இருந்தது.

குளியல்   அறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவன் பின்னே குட்டி போட்ட பூனை போல சுத்திக் கொண்டு இருந்தாள். தேவையானதை எல்லாம் எல்லாம் எடுத்துக் கொடுத்தாள்..

“என்ன திடீர் அக்கறை .. நான் கோபமாக இருக்கேன் என்பதற்காகவா? உன் வேலையை போய் காண்டினு செய் ..யாருடன் சண்டை போடலாம் யோசி” ..

இடுப்பில் கை வைத்து முறைத்து “என்னை சண்டைக்கோழி சொல்லறீங்களா?”

“சொல்ல வேற வேண்டுமா” என்று சிரிப்பதை கண்டு உங்களை….. என்று அவன் மார்பில் குத்தினாள்.

“பார்த்து டி , நெஞ்சு வலித்தால்  ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்டான உங்க அப்பாவிடம் தான் போகணும்.  அதுக்கு வேற சண்டை போடுவ” என்று அடிக்கும் கைகளை சிறைபிடித்தான் . “நீ அடித்த அடியில் இப்பவே லேசா வலி …”

ஷிவானி ஆச்சரியமாக “அப்படியா ? எதுக்கு அவரிடம் போயிட்டு, எனக்கே வைத்தியம் பார்க்க தெரியுமே ! உங்க அளவு தெரியாமல் போனாலும்  ஒரு அளவிற்கு தெரியும் ”   என்று அவன் நெஞ்சில்  அழுந்த முத்தம் கொடுத்தாள்.

“ ஆஹா, சூப்பர். இன்னும் கொஞ்சம் வலி இருக்கு செல்லம்” என்றவுடன் மீண்டும் முத்தம் கொடுத்தாள். அவளிடம் கிசுகிசுப்பாக “ இந்த வைத்தியம் எனக்கு பிடித்து இருக்கே ! சூர் போதை ஏறுது ! கால் தரையில் பதியாமல் பறப்பது போல  இருக்கே ! மீண்டும் மீண்டும் வேண்டும் சொல்லுது ! உனக்கும் வலிக்குது தான” .அவள் புரியாத பார்வையை கண்டு  “எனக்கு வலித்தால் உனக்கு வலிக்கனுமே ..நானும் அதே வைத்தியம் செய்து பார்க்கிறேன்” என்றவுடன் தான்  அவன் குறும்பு தனம் புரிந்தது ..

“சரியான கள்ளன் . ஒழுங்கா பேசாம இருங்க” என்று ஆசையாக இறுக்கி  அணைத்து, சட்டை பட்டனை திருகி  மெதுவாக “சாரி சிவா ! சாப்பிடீங்களா? வெளியே போவோமா ? ஒரு ரைட் ..”

அவன் முகத்தில் சோர்வை கண்டு , “இருங்க ஒரு நிமிடம்” என்று பத்தாவது நிமிடத்தில்  சாப்பாடு தட்டுடன் அறைக்குள் நுழைந்தாள்..

இவளை கெஞ்சினா வேளைக்கு ஆகாது மிரட்டினால் தான் கேட்கிறா..

“ நீங்க என்னை ஏமாத்தறீங்க இந்தர். என்னை கண்டு கொள்வதே இல்லை” என்று சண்டை போட தொடங்கினாள்.. இவள் அப்படியே  பிளேட்  திருப்பி போடறாலே என்று அவள் வாதாடும் சாமர்த்தியத்தை கண்டு வியந்தான் .இவள் எல்லாம் வக்கீல் தொழிலுக்கு போய் இருக்கணும்  . எதிர்க்க ஒரு ஆள் நின்று பேச முடியாது ..

பேப்பரால் முதுகில் ஒன்றை கொடுத்து “ என்ன ட்ரீம்ஸ் ! எந்த லோகாஷன் ! கனவு வேண்டாம், லைவ் பார்க்கலாம் தான் சொல்லறேன் ..பதிலே காணோம்” ..

குஷியாக “நிஜமாகவா ?  மெயின் பிக்ச்சரா ? நான் ரெடி”

“இல்லை” . அவள் தலை ஆட்டி சிரித்த விதத்தில்  அவனை தொலைத்தான் ..

“படுத்தாத வனி செல்லம் . கொஞ்சம் புரியும் படியா பேசு “ !

“எனக்கு உங்க கூட தனியா டைம் ஸ்பென்ட் செய்யணும்” அவன் கண்களில் அதுக்கு என்ற கேள்வியை கண்டு  சத்தம் இல்லாமல் ஹனிமூன் போகலாமா என்று வாய் அசைத்தாள்..

உதட்டு அசைவை கண்டு கொண்டு “ செல்லத்துக்கு வெட்கமா?  நம்ம பெண்டாட்டி கூட வளர்ந்துட்டாலே !” என்று சந்தோஷத்தில் விசில் அடித்தான் .

அப்பவே அவளை கடத்திகிட்டு போய்டலாம் நினைத்தான் .. “இன்னும் கொஞ்ச நாள் டா ! அப்புறம் நீ சொன்னாலும் கேட்கமாட்டேன் ..இப்ப ஒரு சாம்பிள்” என்று அவளை கொஞ்சி சிவக்க வைத்து தான் விட்டான் ..

காலையில் அவன் வேலை , இரவு மணிவசகத்துக்கு துணையாக   அவனும் அவன் அண்ணனும் மருத்துவமனையில் என்று நாட்கள் ஓடியது ..

என்ன தான் அவர்கள் வாழ்க்கை இயல்பாக போவது போல தோன்றினாலும் ,கொஞ்ச நாளாகவே ஷிவானிக்கும் , ஷிவேந்தருக்கும் அவள் அப்பா விஷயமாக  அடிக்கடி சண்டை வர தொடங்கி இருந்தது . அவருக்காக பேசும் சிவா மீதும் கோபம் கொண்டு சண்டை போட்டாள்.

எப்படியாவது கண்ணன் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று ஷிவானிக்கு  வெறி ! இனி கண்ணன் அவள் குடும்ப விஷயத்தில் தலையிட கூடாது தான் இந்த போராட்டம் .

ஷிவேந்தர் அவர்கள் நடுவில் இருக்கும் விரிசலை சரி செய்ய போராடினான் . அவன்  அறியாமலே  அந்த விரிசல் பள்ளமாக மாறியது அவன் துரதிஷ்டம் தான் சொல்ல வேண்டும் .

********

வீட்டுக்கு திரும்பிய மணிவாசகத்தை , ஷிவானி அக்கறையாக பார்த்துக் கொண்டாள். அவருக்கு மருந்து கொடுப்பது ,கட்டை மாற்றுவது, நடக்க வைப்பது  என்று அணைத்து உதவியும் அவளே முன் வந்து செய்தாள். இதனால் சிவா பளு கொஞ்சம் குறைந்தது போல உணர்ந்தான் .

ஷிவானி, மணிவாசகத்திடம் “என்னால் தான் மாமா  உங்களுக்கு இந்த நிலை ..எங்க அப்பா செய்த  வேலை என்று எனக்கு நல்லாவே தெரியும் மாமா” என்று சொல்லும் போதே அவள் கண்ணில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

அவள் கையை ஆதரவா பற்றிக் கொண்டு “ நீ என்ன டா செய்த ? என் சர்வீஸில் இவனை போல பல பேரை பார்த்து இருக்கேன் ஷிவானி  ! உங்க அப்பா மனதில் இருக்கும் பகை மறையவே மறையாது ! பல காலமாகவே இது தொடருது .. உங்க அப்பா மட்டும் இல்லை ,தொழில் ரீதியா எனக்கு இது போல்  பல  விரோதிகள் இருக்காங்க டா ..எத்தனை சவால்களை எல்லாம் தாண்டி வந்து இருக்கேன் உனக்கு தெரியாது.

வாழ்க்கையே சவாலா தான் எதிர் கொண்டு இருக்கேன் . இன்னும் ஒரு மாதத்தில் குணமாகி பழைய படி நடக்க ஆரம்பித்திடுவேன்  எனக்கு நம்பிக்கை இருக்கு டா ..எப்போதும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கும் நான் அன்று கொஞ்சம் கவனம் சிதரிட்டேன்  ! நீ எங்க வீட்டு மஹாலக்ஷ்மி, கண் கலங்கலாமா ? அத்தை பேசுவதை கண்டுக்காத .. கல்யாண விஷயத்தில் அவள் பேச்சை கேட்கவில்லை கோபம் டா .. இதுவே உங்க அம்மா பேசினால் பேசாமல் தான இருப்ப . அப்படி  விட்டுக் கொடுத்திடு” .

ஷிவானி உடனே மறுப்பாக , “இல்லையே ! அது எப்படி ? முதல் வேலையா சண்டை போடுவேன். நானாவது விட்டுக் கொடுப்பதாவது ? என்னை பேசிட்டு நிர்மலா அப்படி போக முடியுமா ? எப்போதும் எங்களுக்குள் சண்டை தான் .  எங்க அம்மாக்கு நான் தான் மாமியார் என்று பல தடவை சொல்லி இருக்காங்க” ..

அவள் குறும்பாக பேசியதை கண்டு , “அப்ப இங்க இதுவரை சண்டை வராதது பெரிய விஷயம் போல” ..சவாலாக  , “பார்க்கலாம் எத்தனை நாளைக்கு தாக்கு பிடிப்ப என்று ?? கவுன்ட் டவுன் ஆரம்பித்திடலாமா?”

“அவசியமில்லாதது …. என் ஷிவாக்காக எத்தனை நாள் வேண்டும் என்றாலும் அமைதியா போய்டுவேன் மாமா”  என்று உறுதியாக கூறினாள். இந்த அன்பை கண்டு  தான இவங்க கல்யாணத்துக்கு  சரி சொன்னேன் என்று மணிவாசகம் மருமகளை எண்ணி பூரித்தார் .

அவள் யோசனையான முகத்தைக் கண்டு “எதையும் போட்டு குழப்பிக்காத ! நானே உங்க அப்பா மீது கேஸ் கொடுத்து இருக்கேன் .ஒரு இன்கம்  டக்ஸ் அதிகாரி மீது கை வைத்தால் சும்மா விடுவாங்களா?  ஒரு உயிர் கூட போய் இருக்கு? கலெக்டர் சம்மந்தியிடம் கூட சொல்லி இருக்கிறேன் ”

இப்போது எல்லாம் ஷிவானியும் ஷிவேந்தரும்  எந்நேரமும் சண்டை போட்டுக் கொள்வதால், பேசுவதையே தவிர்த்தனர் . எந்நேரம் யோசனையில் இருக்கும் ஷிவானியை எண்ணி வருந்தினான் .

ஊர் பிரச்சினை தலையில் போட்டுக் கொண்டு எதுக்கு கஷ்டபடனும் ..எல்லாரும் கல்யாணம் ஆனா புதிதில் எத்தனை சந்தோஷமா இருக்காங்க .ஏன் நாங்களே அப்படி தான இருந்தோம் .. இருந்தீங்க……….. கல்யாணம் ஆகி ஒரு வாரம் சண்டை போடாமல் இருந்தீங்களா ? அதுவே பெரிதோ என்று மனசாட்சி கிண்டல் செய்தது .

அப்போது தான் குணாவிடம் பேசினது  நியாபகம் வந்தது .கடன்காரன் எந்த  நேரத்தில் சண்டை வரும் சொன்னானோ !எல்லார் வாழ்க்கையிலும் இப்படி தானா ?

அப்ப  என் பெயரையும் என் மனைவி பெயரையும்   கார்பன் பேப்பரில் எழுதினால் கீழே அன்பு ,ஒற்றுமை ,பாசம் வரும் எத்தனை கர்வமா  சொன்னேன்   ..

இப்போது எழுதினால்……கோபம் ,சண்டை ,வாக்குவாதம்  தான் வரும் சிரித்துக் கொண்டான் .

சுரேன் கட்டுமான இடத்தில் பிரச்சினை , கோவில் சென்ற நரேன்  படி தவறி விழுந்து கால் முறிவு என்று தினமும் புது புது பிரச்சினை முளைத்தது .. ஷிவேந்தர் சொல்லியும் அவளால் அதை அப்படியே விட முடியவில்லை ..

ஷிவானி  கண்ணனுடன் சண்டை போட்டவுடன்  , நான் சொன்னா பசங்க சரியா செய்திடறாங்க ஷிவானி என்று அவள் பிரசரை எகிற செய்தார் . சிவாக்கு இவள் அமைதியா போனால் கூட அவர் ஒதுங்கிக் கொள்வார் என்ற எண்ணம் .

ஜீவாவுடன் கூட்டு சேர்ந்து மேலும் பிரச்சினைக்கு வழி வகுத்தாள் ..

ஜீவா மீது கோபமாக இருந்த கண்ணன் அவன் ஏமாந்த சமயம்   ஆள் வைத்து அடித்தார் . ஜீவா பயின்ற கராத்தே தான் அவனை காப்பற்றியது. அவன் நிலையை  பார்த்த ஷிவானி   “அன்று தான் அப்படி  செய்தார் என்றால் இன்று வளர்ந்த நிலையிலுமா இப்படி ?”  ஜீவாவை , கண்ணன் மீது கேஸ் கொடுக்கும் படி தூண்டினாள். இதை கேட்ட சிவா , இவள் பேசியே கண்ணன் கோபத்துக்கு தூபம் போடுகிறாள் என்று அவளை அடக்கினான் ..அடங்க கூடிய ஆளா நம்ம ஷிவானி …

தெனாலி ராமன் கதை போல… இருக்கும் கோடு பக்கத்தில் பெரிய கோடு போட்டால் அது சின்னதாகிவிடும் .. இருக்கும் பிரச்சினை விட பெரிய பிரச்சினையை உண்டு செய்தால் கண்ணன் அமைதியாக போய்விடுவார் எண்ணினாள்.

அன்று பேசும் போது என்ன சொன்னார் .. அதை மனதில் ஓட்டி பார்த்தாள் . ஆள் பலம் ! பண பலம் ….

ஆள் பலம் ..அது உண்மையா முடியாது ..இவரை போல ரவுடிகளிடம் எல்லாம் எனக்கு எங்கே சகவாசம் .. அடுத்து அவர் சொன்ன பண பலம் ..ஆஹா ..இத வைத்து  என்ன செய்ய முடியும் ? பணத்தால் எப்படி அடக்க ? பல்லை பிடுங்க..

கண்ணன்,  வக்கீல் மூலம் ஷிவானிக்கும், அவருக்கும் எந்த சம்மந்தம் இல்லை . எந்த  உரிமையும் கோர கூடாது .. ஒரே வாரிசு அவள் அண்ணன் கருண் மட்டும் தான், சொத்தில் பங்கு, உரிமை இல்லை  என்று வக்கீல் மூலம் கையெழுத்து  போடா சொல்லி தூது அனுப்பினார் ..

எப்போதோ அவள் பாட்டி சொன்னது அன்று, அந்த சமயத்தில் சரியா  நியாபகம் வந்தது. எலி தானா வந்து வலையில் மாட்டுதே ? இவரை அடக்க சந்தர்ப்பம் அமையும் போது விடுவேனா ? என்று குதுகளித்தாள்.

அவர் மீது , பாட்டன் பணத்தில் ஆரம்பித்த தொழில் பேத்திக்கும் பங்கு உண்டு .. வந்த வக்கீல் மூலமே சொத்தில் பங்கு கேட்டு கேஸ் போட்டாள். அவள் பங்கை முடக்க செய்தாள்…

அவள் நினைத்த  படியே அவர் கவனம் திரும்பியது . நீங்க மனநல மருத்துவர் மனைவி ப்ரூவ் செய்யறீங்க மேடம் என்று அவளே அவளை தட்டிக் கொண்டாள்..

ஷிவானி செய்த வேலையால் கோபமடைந்த ஷிவேந்தர் “ உனக்கு இங்க என்ன குறைச்சல் ..எதற்கு இப்படி செய்யற? உனக்கு என்ன வேண்டுமோ என்னிடம் கேட்க வேண்டியது தான ? அவர் பணம் எதுக்கு?”  என்று பெரிய சண்டை உருவானது ..இதை தடுக்க வழி தெரியாமல் ஷிவேந்தர் தடுமாறினான்.

அவன் தந்தை மணியிடம் இந்த பிரச்சினையை எடுத்து சென்ற போது “மகளுக்கும், அப்பாக்கும் நடுவில் நடக்கும் பிரச்சினையில் நான் தலையிடுவது சரி வராது ..அவ செய்தால் ஏதோ கரணம் இருக்கும்”  என்று அவர் பரிந்து பேசுவதை கண்டு “ நீங்க எல்லாம் இப்படி சபோர்ட் செய்வதால் தான் என் சொல் பேச்சு கேட்காமல்  அவ இஷ்டத்துக்கு ஆடறா” என்று கோபமானான்.

சிவா என்ன சொல்லியும் ஷிவானி கேட்பதாகவே  இல்லை . “நீ செய்யும்  வேலையால் உனக்கும் எனக்கும் நடுவில் தான் பிரச்சினை வருது . அது உனக்கு ஏன் புரியவில்லை. இதனால் நம்ம நிம்மதியே போகுது .”

“ நமக்கு நடுவில் அவரை கொண்டு வராதீங்க . பிரச்சினையே வராது. நான் அவரை பார்த்துக்கிறேன்” என்று ஷிவானி தெளிவாக கூறிவிட்டாள் .

சிவா தூண்டிவிட்டு தான் மகள் இப்படி செய்கிறாள் என்று கண்ணன் தப்பா நினைத்திடுவாரோ கவலை கொண்டான் . யாருக்கு வேண்டும் இவங்க பணம் .அப்போதைக்கு நிம்மதி போதும் எண்ணினான். கண்ணன் மட்டும் இல்லை இவள் செய்த வேலையை பார்த்தால் ஊரே என்னை தான் குற்றம் சொல்லும்  . அவனுக்கு இது எல்லாம் தேவையா என்று வருத்தம் அடைந்தான் .

இதுனால் வரையில் அவனை ஒருவரும் உன்னால் தான் இப்படி ஆச்சு என்று கை காட்டி பேசியது இல்லை . குற்றம் சாட்டியது இல்லை . அப்படி எதாவது நடந்திடுமோ என்று சாதாரண மனிதனா கவலை கொண்டான் ..

அவன் வளர்ந்த சூழ்நிலைக்கு அப்படி தான் யோசிக்க தோன்றும் ..

ஒரு பக்கம் ஷிவானி செய்வது நியாமமே என்றது அவன் மனசாட்சி ..

 ஷிவானிக்கு இவர் சொத்து கொடுக்க வேண்டாம் .  மகள் இல்லை எப்படி சொல்லலாம் ?  இவ கோபத்துக்கு காரணம் அதுவே போதுமே !  இதை விட எதாவது பெரிய பிரச்சினை வந்திடுமோ பயந்தான்.

கண்ணன் முதுகை சொரிந்து விட வேண்டாம் அமைதியா போ சொன்னால் ஷிவானி கோபத்தில் “அவர் செய்யற அநியாயத்துக்கு எல்லாம் என்னால் துணை போக முடியாது ..உங்க வீட்டு  மனிதர்களுக்கு தான பிரச்சினை கொடுக்கிறார் .. சிவில் கேஸ் எல்லாம் பத்தாது .. ஜீவா விஷயத்தில் , இவர் மீது கிரிமினல் கேஸ் கொடுக்க போறேன் ..”

“நான் சொல்வதற்கு என்ன மரியாதை ..கொஞ்ச நாளைக்கு..ப்ளீஸ் ..” விட்டு பிடித்தால் சரியா போய்டும் எண்ணம் அவனுக்கு..

ஷிவானி, சொல்லணும் என்று கண்டிப்பா  சொல்லவில்லை ..கோபத்தில்

“உங்க மாமனாருக்கு எதற்கு இத்தனை சபோர்ட் செய்யறீங்க ! அவர் எப்படி அவருக்கு  மகள் இல்லை, ஒரே வாரிசு சொல்லலாம் ..என் உரிமையை நான் எப்படி விட்டு கொடுக்க .. அவரால் என் உயிர் போன பின்பு உங்களுக்கு புரியும் . அவர் கெட்டவர்  என்று ஊருக்கே தெரியும் போது உங்களுக்கு தெரியவில்லையா ? இல்ல தெரியாதது போல நடிக்கிறீங்களா?

ஒரு வேலை அவர் சொத்தில் பங்கு கொடுப்பார் என்று பார்த்துக் கொண்டு இருக்கீங்களா ? என்ன தான் கேஸ் போட்டாலும் அவரிடம் இருந்து ஐந்து பைசா தேராது . அந்த பாவ மூட்டை உங்களுக்கு வேண்டாம் ..எதாவது டீல் பேசி இருக்கீங்களா என்ன ?

அவர் செய்ய கூடியவர் தான் ! பணம் தான் பெரிசு இருந்தா என்னை எதுக்கு கல்யாணம் செய்து கொண்டீர்கள் ..எனக்கு தான் அவரும் வேண்டாம் பணமும் வேண்டாம் வந்துவிட்டேனே ! ” தேவா  சொன்ன விஷயத்தை எண்ணி,  “என்னை விட்டுக்  கொடுத்தால் கூட பணம் சொல்லி இருப்பார் ! அந்த  மனிதருக்கு வக்காளத்து  வேற ! உங்களுக்கு அசிங்கமா இல்லை ” என்று கோப வெறியில் கத்தினாள்..

சிவா பொறுமை எல்லை கடந்தது . என்னிடம் இருந்து இவளை யாராவது பிரிக்க முடியுமா? இவ உயிர் போன பின்பு எனக்கு மட்டும் என்ன வேலை .

விதி பிரித்து காட்டுகிறேன்  என்று  இவனிடம் சவால் விட்டதோ!

Advertisement