Advertisement

19.2

வண்டிக்கு சென்ற போது ஷிவானி குலுங்கி அழுது கொண்டு இருந்தாள். ‘வனி’ என்றதும் வண்டியை ஸ்டார்ட் கூட செய்ய முடியாமல் அவள் கைகள் நடுங்கியது . ஷிவேந்தருக்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது ..

“வனி,  இந்த பக்கம் வா ! நான் ஓட்டறேன்” .. அங்கு இருந்து கிளப்பி  கடற்கரை ஓரம் வண்டியை நிறுத்தியவுடன் அவன் தோளில் சாயிந்து  கட்டிக் கொண்டாள். ஒன்றுமே பேசாமல் அழும் அவளின் தலையை ஆதரவாக வருடி, “ இப்படி அழுதால் என்ன என்று நினைக்க செல்லம் ..  என்ன சொன்னால் தான புரியும் கண்ணம்மா.. அழுகாத டா” என்ற போது  அவன் தொண்டையும் கமறியது .

அழுகை அதிகமாகவே “இப்ப நிறுத்த போறீயா இல்லையா” என்று மிரட்டினவுடன், “ என்னால் முடியல சிவா ..எங்க அப்பா கோபத்தை நான்  நன்கு அறிவேன். அவரால் யாருக்காவது  எதாவது என்றால் என்னால் தாங்க முடியாது  ! எனக்கு ரொம்ப  பயமா இருக்கு சிவா  .. ஒரு உயிர் சிவா ! அதை அழிக்க எப்படி மனம் வந்தது” என்று நேற்றில் இருந்து  அவள் சுமந்த  மன பாரத்தை எல்லாம் கொட்டி தீர்த்தாள் . 

கண்ணனிடம் அவனுக்கு  பழக்கம் இல்லாததால்  இப்படி எல்லாம் செய்ய கூடியவரா  என்று அவனுள் கேள்வி எழும்பியது . அவ அப்பாவை பற்றியே இப்படி பேசறாளே என்று அவனுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது ..

கண்ணன்  சமுதாயத்தில் பெரிய மனிதன் , அதுவும் உயிரை காக்கும் மருத்துவ துறையில் இருப்பவர் எப்படி ? வனி தான் குழம்பிக் கொண்டு பேசுகிறாள்  என்று நம்பினான் . ஷிவேந்தருக்கு,  கண்ணன் குள்ளநரி என்று தெரியாதே !   

அப்போது தேம்பி அழும் அவன் மனையாள்   வளர்ந்த குமரியாக இல்லாமல் அவன் கண்ணுக்கு  குழந்தையாக தான் தோன்றினாள்.

அவளை   சமாதானம்  செய்யும்  விதமாக   “அப்படி எல்லாம் இருக்காது டா  . அது தான் ஒன்றும் ஆகவில்லையே ! தேவை இல்லாமல் குழம்பாத பேபி ” என்று இறுக அனைத்துக் கொண்டான்  …

நீ அழுதால் ..

அவன் மேலே பேசாமல்  நிறுத்தியவுடன் அவனுக்கு கஷ்டமா இருக்கு சொல்லுவான்  எதிர்பார்க்க , அவனோ  

அவன் முகத்தை அஷ்டகோனலாக்கி “ஏற்கனவே  உன் முகத்தை பார்க்க சகிக்காது ..  பார்க்க கொடூரமா இருக்கும் …இதில் அழ வேற செய்தால் ? எனக்கு பயமா  இருக்காது .. பயத்தால் மனதில் சஷ்டி கவசம் சொல்லிக் கொண்டு இருப்பது உனக்கு எங்கே தெரிய போகுது !”  என்று கிண்டல் செய்தவுடன் அவனை முறைத்து  “ காதலிக்கும் போது இந்த முகத்தை பார்த்து தான சொக்கி போனீங்க .. அப்ப  தெரியலையாக்கும்” என்று அவனை அடிக்க தொடங்கினாள் ..

“ஆஅ  ..வலிக்குது குட்டி பிசாசு ,ராட்ஷசி ..உண்மையை தான் சொல்லறேன் ..”

அவள் சந்தேகமாக “என்ன உண்மை ..”

“கடிவாளம் போட்ட குதிரை போல  காதல் திரை கண்ணை  மறைத்துவிட்டது .. அப்ப  பேரழகியா தெரிந்த நீ, இப்ப திரை விலகின பிறகு தான உண்மை புரியுது. இனி எதையும் மாற்ற முடியாதே ! இப்ப வருந்தி என்ன செய்ய சொல்லு  ” என்று சோகமாக பேசி அவள் கைகளை பற்றி முத்தம் வைத்தான் .

வனி பேரழகி தான் .. அவள்  எப்போதுமே அவளை  அழகி என்று எல்லாம் எண்ணியதே கிடையாது ..நண்பர்கள், சுற்றி இருப்பவர்கள்  சொன்னால் கூட  எல்லாரும்  அழகு தான் , நாம பார்க்கும் பார்வையில் தான் இருக்கு  என்று மேலே பேச விடாமல்  அந்த பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவாள்.

ஏன் ,ஷிவானி குறும்புத்தனம், அழகு தான முதலில் ஷிவேந்தரை கவர்ந்தது ……

ஷிவானி அவனை முறைத்த படி  “உங்களுக்கு இந்த முகமே அதிகம்  .. இது கூட கிடைக்காமல் தான காய்ந்து கிடந்தீங்க ..அப்புறம் என்ன பேச்சு” அப்போதும் சந்தேகமாக கண்ணாடியில் பார்த்து  முதல் முறையா “நான் அழகா தானே இருக்கேன் இந்தர் ”  என்று பேசுவதை கண்டு  

“நீ அழகி… அப்படியா?” என்று கேள்வியாக கேட்டு  “இரு”

அவள் முகத்தை முகத்தை கைகளில் தாங்கி அப்படியும் இப்படியும் திருப்பி  , உத்து பார்த்து, “பொய் சொல்லாத ஷவானி ! சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாம் ..”

மனதில், நீ அழகி இல்லை, பேரழகி கண்ணம்மா கொஞ்சி, வெளியே கடுபேற்றினான்.

சண்டை கோழியை சிலிர்த்து “என்ன பொய் சொன்னேன் !”

“நீ அழகி  சொன்னதை  சொல்லறேன் …”

“ நான் வெளியே  போய்ட்டு   ரெண்டு மணி நேரத்தில் வந்திடறேன் ..பத்தாயிரம் ரூபாய் இருந்தால் கொடுங்க ..”

“திடீர் எதுக்கு   பத்தாயிரம் .. என்ன செலவு” என்று யோசனையாக கேட்டவுடன்  பல்லைக் கடித்த படி “நான்  பியுட்டி பார்லர் போகணும் ..போய் கொஞ்சம் சகிக்கும் படியா என் முகத்தை மாற்றிக் கொண்டு வரதுக்கு தான் ”  ..

மனதில் ஆஹா, உனக்கு வேண்டும் ராசா ! சும்மா இருந்தவளை உசுப்பி விட்டு ,தேவையா ? இவள் ஏற்கனவே அழகி தான் . அங்க போனா  பெரிசா என்னத்த செய்ய போறாங்க . அதுக்கு பத்தாயிரம் வேற ? என் காசுக்கு வேட்டு  வைப்பதில் இவளுக்கு தான் எத்தனை குஷி . அப்படி எல்லாம் ஒருவரை  மாற்றிட முடியுமா ? இது கூட தெரியாமல் இருக்காளே!  

“அது எல்லாம் வேண்டாம் . அங்க எல்லாம் போக வேண்டாம் .. வேற வழி  இல்லை ஆனதுக்கு அப்புறம் என்ன செய்ய ? அட்ஜஸ்ட் செய்துக்கிறேன் ..” என்று பெருந்தமையா பேசினதை கேட்டு  இவன் கொழுப்பு மட்டும் அடங்கவே அடங்காது திட்டி “உங்களை எல்லாம் …….. அப்படி ஒன்றும் அட்ஜஸ்ட் செய்யணும் அவசியம் இல்லை”  என்று கோபத்தில் ஒரு வழி செய்து தான் விட்டாள்..

“அப்ப , என்னமா கோபம் வருது என் செல்லத்துக்கு !”

“என்னை விடு டா ! அழகா  இருப்பவர்களிடமே போ ..” என்று திமிரும் அவளை  கை வளைவில் கொண்டு வந்து இறுக்கி “ கொஞ்சம் பேசாமல் அமைதியா இரு டி செல்லம்” காதில் கிறக்கமாக “நான் எதுக்கு போகணும் .. இந்த உலகிலே என் செல்லம் தான் எனக்கு பேரழகி ” என்று முத்த ஊர்வலத்தை தொடர்ந்தான்..

சிவா வீட்டில் இருந்து போன் கால் வந்தது .

நிம்மதியா இருக்க விட மாட்டாங்களே சலித்து,  அதை எடுத்தவுடன் “ எங்க ? என்ன ஆச்சு ? அப்படியா, வரேன்”  என்று வண்டி சீறி பாயிந்தது.. வீட்டுக்கு செல்வதற்குள்  பல போன் கால்கள் வந்த வண்ணம் இருந்தது.

ஷிவானி என்ன ஆச்சு கேட்டும் ஒன்றும் இல்லை ! பேசாமல் வா ..

வீட்டில் நரேன் ,சுரேன் ,அவர்கள் தாத்தா, சரண்யா ,நித்யா அனைவரும் அங்கு கூடி இருந்தனர் . பாட்டி வைதேகி மயக்கமாகிய  மருமகள் விசாலம் அருகில் அமர்ந்து கொண்டு இருந்தாள் .

*****

சிவா, விசாலத்தை பரிசோதித்து , அதிர்ச்சியால் வந்த மயக்கம் தான் ..பிரசர் வேற அதிகமா இருக்கு என்று ஊசி போட்டான் . ஷிவேந்தர் கண்களாலே வனியிடம் அன்னையை கவனிக்குமாறு சொல்லிவிட்டு அவன் அண்ணனிடம் சென்றான் .. “என்ன ஆச்சு அண்ணா ! எப்படி ? யாரு சொன்னது ? நாம இப்பவே தூத்துக்குடி கிளம்பலாம் ..”

“இப்ப தான் தீபன் போன் செய்தான் சிவா  . அப்பாவும் அவர் நண்பன் தினகரும் தூத்துக்குடியில் வேலை முடித்து கிளம்பி இருக்கிறார்கள்.. தீபன் அவன் வண்டியில் இவர்கள் கார் பின்னாலே கிளம்பி இருக்கிறான் . எதிரே  வந்த  லாரி கட்டுப்பாடு இழந்து அப்பா  வண்டி மீதி மோதி விட்டது.. அப்பா நண்பர் தினகர்  அங்கேயே இறந்துவிட்டார் . எனக்கு பயமா இருக்கு என்று தீபன் போன் செய்து இருந்தான் . நீ ஊரில் இருந்து திரும்பியது  அவனுக்கு தெரியாது….” .

ஷிவானி அதிர்ச்சியில் ,என்னது .. தினகர் அங்கிள் இறந்துவிட்டாரா ? இருக்காது..  தினகர் ஊருக்கு  கிளம்பும் போது அவளிடம் சிரித்து  பேசி , ஆசிர்வதித்து கிளம்பியது இன்னும் அவள் கண் முன்னே நிற்கிறதே ! எத்தனை அன்பாக பேசினார் …அவளால் இன்னமும் அவள் கேட்டதை நம்ப முடியவில்லை ..  அவளுக்கு எதாவது ஆகிவிடுமோ பயந்து கட்டிலை படித்துக் கொண்டாள்.

ஷிவானி  முகத்தைக் கண்ட நித்யா  , “என்ன ஆச்சு வனி, மாமாக்கு  ஒன்றும் ஆகாது ”

ஷிவேந்தர், எங்கே ஷிவானியும் மயக்கம் போட்டுவிடுவாளோ   பயந்து வனி இந்த தண்ணீர் குடி, ஒன்றும் இல்லை… ரிலாக்ஸ் டா .. என்று தண்ணீர் குடிக்க வைத்தான் .

 “மயக்க நிலையில் இருந்த அப்பாவை அருகில் இருக்கும்  மருத்துவமனைக்கு அழைத்து சென்று ICU  சேர்த்து இருக்கிறார்கள். சிவா ! ஏனோ எனக்கு ரொம்ப பயமா இருக்கு டா”  என்ற சுரேனிடம் “தைரியமா இரு! ஒன்றும் இருக்காது  அண்ணா ! உடனே கிளம்பலாம்…”

விஷயத்தை கேள்வி பட்ட  மணிவாசகம் தம்பி,  அவர் மகன் சச்சின் அங்கு விரைந்து வந்தனர் ..

“நான் இன்னும் இப்படி இருக்க என் மகனை பரிச்சிடாத முருகா” என்று தாத்தா ஸ்ரீனிவாசன் புலம்பினதை கேட்டு,  “ தாத்தா ப்ளீஸ் ! ஒன்றும் ஆகாது”   என்று ஷிவேந்தர் அடக்கினான் ..

அங்கு நிலையை அறிய  தூத்துக்குடியில் அவன் நண்பன் யாரு இருக்கா என்று சிவா யோசித்தவுடன் கோபி நியாபகம் வந்தது .

உடனே  அவன் மருத்துவ நண்பன் கோபியை அழைத்து விஷயத்தை பகிர்ந்து கொண்டான் . அவன்,  நான் உடனே கிளம்பறேன் , பக்கத்தில் தான் இருக்கேன் ! இங்க இருந்து பத்து நிமிடம் தான்  ,  கவலை படாத .. அப்பாவை பார்த்தவுடன்  கால் செய்யறேன்  என்று தைரியமளித்தான் …

ஷிவேந்தர்,  “அண்ணா,  நாம  மூன்று  பேரும் இப்ப  உடனே  கிளம்பலாம்” .அவன் தாத்தா நானும் என்றவுடன் “வேண்டாம் ! அத்தனை தூரம் பயணம் செய்ய உங்க ஹெல்த் கண்டிஷன் ஒத்துக் கொள்ளாது…. நீங்களும்  சித்தப்பாவும்  இங்க  இருந்து  கவனிச்சுக்கோங்க..”

நீங்க கவலை படாமல் கிளம்புங்க சிவா ! நான் பார்த்துக்கிறேன் என்று அவன் சித்தப்பா  தைரியம் அளித்தார்.

ஷிவானி  பயந்த வெளிறிய முகத்தைக் கண்டு  “வனி, ஒரு நிமிடம் ரூமுக்கு வா” என்று அழைத்தவுடன்   , பயத்தில் அவனை காற்று கூட புகாமல் அனைத்துக் கொண்டு  “ சிவா , நான் சொன்னது போல எங்க அப்பா .. நீங்க தான் கேட்க மாடீங்கிறீங்க ….” எண்ணியதை சொல்லமுடியாமல் வார்த்தைகள்  தந்தி அடித்தது.. .பயத்தால் அவள் தளிர் உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது .

 “ நானும் மாமாவை பார்க்க வருகிறேன்.. என்னால் தான் அவருக்கு இத்தனை கஷ்டம்!” கண்ணில் நீர் வழிய “அவருக்கு ஒன்றும் ஆகாது தானே !” சிறு குழந்தையா தேம்பி அழும் ஷிவானியை  அணைத்து “கொஞ்சம் பேசாமல் சும்மா இரு வனி ! நீ என்ன செய்த .. நான் சொல்வதை கேளு டா ! அப்பாக்கு ஒன்றும் ஆகாது ”

மறுபடியும் அப்படியே பேசவே , டென்ஷனான  சிவா  கோபத்தில்  , “ கொஞ்சம் உன் உளறலை நிறுத்த போறியா இல்லையா ? என்ன தான் நினைத்துக்கொண்டு இருக்க … எவனோ குடித்து வந்து லாரியை மோதி இருக்கான்  … நிலைமையை கொஞ்சமாவது அனுசரித்து நடந்து கொள்கிறாயா ?  பேசுனதையே பேசினால் என்ன அர்த்தம் ..நீயும் டாக்டர் தான ? ” அவள் அதிர்ந்த முகத்தை கண்டு “கொஞ்சம்  புரிஞ்சுக்கோ டா” என்று  கெஞ்சலாக முடித்தான் ..

“எனக்கு  இப்ப பேச நேரம் இல்லை ..ஒன்று மட்டும் சொல்லிக்கிறேன் ..எங்க அம்மாவிடம் தயவு  செய்து எதையாவது உளறிடாத .. உன் கற்பனையை மூட்டை கட்டி வைத்து அவர்களை பார்த்துக்கோ ! நீ கொஞ்சம் தைரியமா இரு ..”

இவள் எதோ பேச போய், அவன் அம்மா எல்லாம் ஷிவானியால் தான் என்று அவளை   வெறுத்திடுவாங்களோ ? ஏற்கனவே பயந்து இருக்கும் ஷிவானியிடம், அவன் இல்லாத நேரத்தில் ராசி அது , இது என்று ஏதோ பேசி காயப்படுதிடுவாங்களோ என்று பயந்தான் . அவன் அப்பாக்கு வேற என்ன ஆச்சோ என்ற கவலை ..

அவன் மிரட்டினவுடன் பயத்தால் நடுங்கும் உதட்டை பற்களால் அழுத்தினாள். அவள் வெளிறிய  முகத்தை பார்க்கவே சிவாக்கு பாவமாக இருந்தது . உதட்டில் ரத்தம்  கசிவதை  கண்டு அதை விடுவித்து “வனி , நான் சொன்னதை நியாபகம் வெச்சுக்கோ ! எனக்காக ப்ளீஸ் !  அம்மாக்கு ஏற்கனவே பிரசர் இருக்கு ..  ஒரு மருத்துவரா அவருக்கு செய்ய வேண்டியதை செய் ..  பார்த்துக் கொள்வாயா கண்ணம்மா ?  இல்லை  என்றால் கல்யானை வர சொல்லட்டுமா?”

அவன் நிலையை எண்ணி “ நான் பார்த்துக்கிறேன் இந்தர் . அத்தையை நினைத்து கவலை  படாதீங்க . நீங்க மாமா உடல்நிலையை பற்றி உடனே தெரிவிக்கவும், ஒன்றும் ஆகாது”  என்று கைகளை அழுத்தி தைரியம் கொடுத்தாள். அதுவே அவனுக்கு யானை பலம் வந்தது போல இருந்தது . அவளை அணைத்து கிளம்பறேன் டா … இவளை நம்புவதற்கு இல்லை என்று சரண்யாவிடம் பார்த்துக்க சொல்லி  கிளம்பினான் ..

மயக்கம் தெளிந்த விசாலம்,  கணவரை பற்றி  புலம்பியவுடன் ஷிவானி குற்ற உணர்ச்சியால் தவித்தாள்..  மணிவாசகம் நேர்மை, நியாயம் , அவள்  வீட்டுக்கு ரைட் சென்றதால்  கண்ணனுக்கு  கோபம் என்றதை மறந்து அவளால் தான் ,அவள் சிவாவை  கல்யாணம் செய்து கொண்டதால்  தான் , இடத்தை விற்று பணத்தை கட்டியதால் தான் இப்படி  நடந்து இருக்கு  என்று எண்ணி வருத்தம் அடைந்தாள் .

“அத்தை, மாமா நல்ல மனசுக்கே ஒன்றும் ஆகாது ! உங்க மூன்று மகன்கள் இருக்க எதுக்கு கவலை படறீங்க !” என்று தைரியம் கொடுத்தாள்.

ஷிவானி பயந்து இருப்பதை கண்டு சரண்யா அவளிடம் , எப்படி உங்க அப்பா தான் செய்தார் அத்தனை உறுதியா சொல்லற ? விபத்தா கூட இருக்கலாம் . கோபம் இருந்தால் இப்படி செய்யணும் அவசியம் இல்லையே ! எதையும் போட்டு குழப்பாதே  ! போலிஸ் எதுக்கு இருக்காங்க ! எங்க அப்பாவிடம் சொல்லி பர்சனலா டீல் செய்ய சொல்றேன் போதுமா ? நீயும் பேசு ..

சிவா கிளம்பியவுடன் வீட்டில் திலோவை கண்டு துணுக்குற்றாள். இவ இங்க எப்படி? இவளை அழைத்து வரேன் சிவா  சொல்லவே இல்லையே ? திலோவை பார்த்தவுடன் , அவள் கனவு நியாபகம் வந்து இம்சை செய்தது  .. திலோ பிரியமாக  தான் பழகினாள்.. ஏனோ ஷிவானியால் இயல்பாக பழக முடியவில்லை..  திலோ வேற எப்ப பார்த்தாலும்  சிவா எப்ப வருவார் ! அவரை நம்பி தான வந்து இருக்கேன் பேசுவதை கேட்டு,  நான் எவரை நம்பி வந்து இருக்கேன் என்ற கேள்வி ஷிவானியை குடைந்தது.

இப்படி விட்டு போனால் என்ன அர்த்தம் திலோ  புலம்பினது மேலும் அவள் எரிச்சலை கிளப்பியது . ஏற்கனவே  அவ அப்பா செய்த வேலையால் கோபமாக இருந்த ஷிவானி திலோ பேசுவதை கேட்டு  மேலும் கோபம் அடைந்தாள். இப்போது இருக்கும் நிலைமையில் தேவை இல்லாத சண்டை வேண்டாம் என்று அமைதி காத்தாள்.

ஷிவேந்தர் அங்கு சென்றவுடன் பலமான அடி , ஆனால் மணிவாசகம்  உயிருக்கு எந்த ஆபத்தும்  இல்லை என்று அழைத்து தெரிவித்து இருந்தான் ..

வீட்டில் பொழுது போகாமல் சுத்திக் கொண்டு இருந்த திலோ ,சமையல் அறையில் வேலை செய்து கொண்டு இருந்த சரண்யா , நித்யா , ஷிவானியிடம் “எப்படி, இப்படி எந்நேரமும்  வீட்டிலே  அடைந்து இருக்கீங்க ! எனக்கு மூச்சு முட்டுது .  வீட்டிலே இருக்க என்னமோ  போல இருக்கு.. இங்கு எந்த ஹோட்டலில் பார் இருக்கு . இல்லை கிளப் . அங்கு போய்ட்டு  வரலாமா?” என்றவுடன் பார் ,கிளப்பா ..  ஷிவானி மட்டும் இல்லை, திலோ பேசுவதை கேட்ட  சரண்யாவும் , நித்யாவும் அதிர்ந்தனர் ..

அவர்கள் அதிர்ந்த முகத்தைக் கண்டு ‘நீங்க கவலை படாதீங்க ! நான் உங்களுக்கு ட்ரீட் கொடுக்கிறேன் ! போகலாமா ? இங்க நைட் லைப் எப்படி இருக்கு பார்க்கணும் . எங்க ஊர் பாரிஸ்  ‘நைட் லைப்’  பேர் போனது .. கிளப் ,பார் , நைட் லைப் சொர்க்கமா இருக்கும்” ..

அப்போதும் அவர்கள்  பேசாததைக் கண்டு   “அங்கிள் உடம்புக்கு  தான் ஒன்றும் இல்லையே ! அப்புறம் என்ன ? என்னமோ எளியன் பார்ப்பதை போல் பார்க்கறீங்க . நீங்களும் வரீங்களா ? ஹில்டன் போகலாமா ? இல்லை வேற எதோ ! உங்களுக்கு தான தெரியும் இங்க எது பேமஸ் என்று ?”

ஆண்கள் குடிப்பதையே குற்றமாக கருதும் அந்த வீட்டில்  திலோ பேச்சை கேட்டு அவளும் , அவள் வளர்ந்த விதமும் எடுத்து சொல்லியது .

“ ப்ளீஸ் சொல்லுங்க ..எனக்கு கை நடுங்குது .. ரெண்டு நாளா எனக்கு தூக்கம் கூட வரல .  .ஒரு சிப் குடித்தால் கூட போதும்” என்று அவள்  நிலையை சொல்லி கெஞ்சிக் கொண்டு இருந்த திலோவை பார்க்க அவர்களுக்கு  பாவாக இருந்தது .

“நான் வாங்கிட்டு போகலாம் சொன்னதை சிவா கேட்டால் தானே ! அங்கேயும் கிடைக்கும்  கூட்டிகிட்டு வந்தான்” … சரண்யாவிடம் “சிஸ்டர்  ப்ளீஸ், ஹெல்ப் மீ .. “ முகம் வியர்த்து, கை , கால் நடுங்குவதை எல்லாம் பார்த்து  டிரக் அடிக்ட் ஆகா இருந்திருப்பாளோ என்று அவள் நிலையை ஷிவானி துல்லியமாக கண்டுபிடித்தாள்..

சிவாவை நம்பி வந்த பெண்ணை தனியா அனுப்பவும் அவர்களுக்கு மனது இல்லை . என்ன செய்ய என்று கேட்காலாம் எண்ணி  சிவாக்கு அழைத்தாலும் எடுக்கவில்லை ..நேரம் ஆகா திலோ கோபம் அதிகம் ஆகியது ..

நித்யா  தீவிரமாக செல் போனில் தொலாவிய படி, “காய் , பழம் போல , நமக்கு வேண்டும் என்கிற ட்ரிங்க்ஸ் எல்லாம் ஹோம் டெலிவரி  செய்வாங்களா ? எதாவது app இருக்குதா ? இருந்தால் சொல்லுங்க ..அதிலே ஆர்டர் செய்திடலாம் …”

வனியும் ,சரண்யாவும் எங்களை கேளு ,நாங்க தான் தினமும் குடிக்கிறோம் என்று கண்ணில் கொலைவெறியுடன் முறைத்தார்கள் ..

ஷிவானி மனதில் கோபமாக , வீட்டுக்கு அழைத்து வந்த நபரை பற்றி இந்த சிவா  யாரிடமாவது சொல்லி இருக்க வேண்டாம் .. எதாவது என்றால்? அவன் நண்பன் கல்யானை அழைக்கலாமா ? உடனே, வேண்டாம் ..திலோ கல்யாணம் ஆகாத பெண் .தேவை இல்லாமல் அவளை  பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் ,சிவாவே பார்த்துக் கொள்ளட்டும் என்று அந்த முடிவை  கைவிட்டாள்.

திலோ பைலில் இருந்த ரிப்போர்ட் மூலம் சிவா கவுன்செலிங் கொடுத்து இருக்கான் கண்டுகொண்டாள் . சிவாவை தொடர்பு கொள்ள முடியாததால் என்ன செய்ய என்று குழம்பி  திலோவிடம் பேச்சு கொடுத்தபடியே எதாவது மாத்திரை எடுத்துக் கொள்கிறாயா ? என்ன மாத்திரை ,எப்ப எடுத்துக் கொள்வாய் , அதை சாப்பிட்டு ட்ரிங்க்ஸ்   சாப்பிடலாமா கேட்டு அறிந்து கொண்டாள்.  அவள் கவனத்தை திசை திருப்ப பல மணி நேரம் போராடினாள். ஒன்றும் வேலை ஆகவில்லை .

சரண்யா வனியிடம்  “ நீ வேண்டும் என்றால் அவள் கூட போய்ட்டு ஒரு மணி நேரத்தில்  வந்துவிடு ” ..

சிவாவை  எண்ணி வனிக்கு கொலைவெறியே வந்தது . பேய்க்கு வாக்கப்பட்டா தொங்கி தான ஆகணும் …ஒன்றும் செய்ய முடியாமல் திலோவுடன் கிளம்பினாள்.

பாரில் , ஷிவானியை வேற எல்லாரும் ஆட அழைத்துக் கொண்டு இருந்தனர் . இதுக்கு தான் டிஸ்கோ கிளப் வேண்டாம் ! ரெச்டாரண்டுடன் இருக்கும் பார் ஹோட்டலை சொன்னேன் .கேட்டாளா ? கடன்காரி  ! என்னை கொல்லவே பாரிஸ் இருந்து வந்து இறங்கி இருக்கா ? குடித்தே சொத்தை அழிச்சிடுவா போல !அந்த இடம், சத்தம் அவளுக்கு தலை வலியை உண்டு செய்தது .

கல்யாணமான  பத்து நாளில் பாரில் .. இங்கு என்னை  யாராவது தெரிந்தவர்கள் பார்த்தால் ..அதுவும் மாமனார் மருத்துவமனையில்  இருக்க .. ஐயோ கடவுளே ..

“என்ன ஷிவானி இப்படி ரெஸ்ட்லெஸ் இருக்கீங்க ..சம்பெயின் வேண்டும் என்றால் சொல்லட்டுமா?”

அப்போது இருக்கும் நிலைமைக்கு ஷிவானி எடுத்துக் கொண்டாலும் ஆச்சிரிய படுவதற்கு  இல்லை .. சரக்கு அடித்து கொண்டு இருந்த திலோ திடீர் என்று  ஆட சென்றதை பார்த்து , ஷிவானி , தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.

திடீர் என்று “என்ன அதிசயம் . அசத்தும் பேரழகி . என்னுடன் வெளியே வா என்றாலே முடியாது சொன்னவள் இப்ப பாரில் ..நல்ல முன்னேற்றம் தான்” என்ற நக்கல் குரலில் பேசிய தேவாவை பார்த்து அதிர்ந்தாள்..

இவன் எங்க இங்க ?

முன்பை விட இன்னும் மெருகேறி  அழகா இருக்கும் ஷிவானி மீது இருந்து அவன் கண்களை பிரித்து எடுக்க முடியவில்லை ..

திலோ வேற ஆடிக் கொண்டு இருந்தாள்..

“எங்க உன் புருஷன் . அவனை விட நான் எந்த விதத்தில் குறைந்தேன் ! எதற்காக என்னை வேண்டாம் என்றாய் ! நீ என்னை ஏமாற்றிவிட்டாய் ஷிவானி” ..

எங்க அப்பா தேவை இல்லாமல் இவன் மனதிலும் ஆசையை வளர்த்து .. இந்த நிலைக்கு அவளை தள்ளிய கண்ணனை திட்டிக் கொண்டு இருந்தாள்.     

“நான் யாரையும் ஏமாற்றவில்லை . நான் உன்னை காதல் செய்வதா ஒரு போதும் சொன்னது  போல நியாபகம் இல்லையே !  I love  இந்தர்… ! அவர் தான் என் வாழ்க்கை துணையா வரணும்  நான் தான் தேர்ந்து எடுத்தேன் ” என்று கர்வமாக கூறியதை பார்த்து  இவளுடைய திமிருக்கே இவளுக்கு தக்க அடி கொடுக்கணும் எண்ணிக் கொண்டான் ..

மணியை திருப்பி  பார்த்து ,இந்த திலோ வேறு என்னை படுதறாலே ! இவனும் நகர மாடீன்கிறான் .அவளும் வருவது போல இல்லை..

அவள் கண்கள் திலோ பக்கம்  சென்றதை கண்ட தேவா “ஆஹா, பாரிஸ் பைங்கிளி, இங்க என்ன வேலை ! உன் புருஷனுக்கு  அவளை விட்டு இருக்க முடியலை போல ! இருக்கும் , இப்படி கும்முன்னு  அசத்தினால் …. பாவம் ,என்ன செய்வான்.. அவன் வேண்டாம் வனி , உனக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை ..என்னுடன் வந்துவிடு ! நீ மட்டும் போதும் வனி ! உனக்காக என் கெட்ட பழக்கம் எல்லாம் விட்டுவிடுகிறேன் ! ப்ராமிஸ் ..”

இது தான் கலி காலம் போல ! சாத்தான் வேதம் ஓதுது என்று மனதில் திட்டி தீர்த்தாள்.

“ என்னை நம்பு ! காதல் எப்போது வேண்டும் என்றாலும் யார் மீது வேண்டும் என்றாலும் வரலாம் .. அவனை விட எனக்கு எல்லாத்திலேயும் அனுபவம்  அதிகம் .… கல்யாணம் செய்தும் காதல் செய்யலாம் நான் ப்ரூவ் செய்து காட்டறேன் . உனக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்ய காத்துக் கொண்டு இருக்கிறேன் ..”

காதலுக்கு ,  உடல் இச்சைக்கும் வித்தியாசம் தெரியாமால் பிதற்றும் அவனை துவைத்து எடுத்தால் என்ன என்ற கோபம் எரிமலையா  பொங்கி  எழுந்தது . அதை அடக்கி  “அளவா பேசு தேவா, இல்லை மரியாதை கெட்டிடும்”  என்று ஷிவானி  வார்த்தைகளை கடித்து துப்பினாள்.

“ உன்னை விட மாட்டேன் வனி ! இத்தனை நாளா எனக்கு நீ என்று சொல்லிவிட்டு இப்ப உன்னை விடமுடியுமா பேபி ! எந்த பெண்ணை தொட்டாலும் அவர்களில் உன்னை தான் காண்கிறேன்” என்றவுடன் கையை ஒங்கி  இருந்தாள்.  அவள் கைகளை முறுக்கி “என்னை அணைக்க மட்டும் தான் உன் கைகள் எழும்பணும் ..சீக்கிரம் அப்படியே நடக்கும் செல்லம் ..”

வலியால் கண்கள் கலங்கியது . “சி ,கையை விடு டா ! உன்னை அறைந்து என் கையை அழுக்காக்கி கொள்ள வேண்டாம் பார்க்கிறேன்” என்று அவன் கையை பலமா  உதறி தள்ளினாள்.

அவர்கள் வாக்குவாதத்தை  கேட்டு அருகில் வந்த வைடர் எதாவது பிரச்சினையா மேடம் ,  இல்லை தெரிந்தவர் தான் அனுப்பினாள் .. “உங்க அம்மாக்காக உன்னை சும்மா விடறேன் தேவா ..இல்லை என்றால் நடப்பதே வேறு ..ஜாக்கிரதை ..”

“போடி , என்னை ஏமாற்றின உங்களை என்ன செய்யறேன் பாரு ! நீ எனக்கு இல்லை என்றால் அந்த சிவாக்கும் இல்லை ” , என்று அவன் குரல் அவளை துரத்தியது. திலோவை திரும்ப வீட்டுக்கு அழைத்து வர படாத பாடு பட்டாள். இது எல்லாம் எனக்கு தேவையா ? இந்த சிவா வரட்டும் அவனை உண்டு இல்லை செய்திடறேன் . எல்லாம் அவனால் தான் ….

வீட்டில் ,ஷிவானி மூலம்   திலோ ஆடினதை கேட்டு சரண்யாவும் ,நித்யாவும் சிரிக்க தொடங்கினர் .. எனக்கு  இது எல்லாம் தேவை தான் . அக்கா, அவ குடிக்கும் சரக்கு ரொம்ப காஸ்ட்லி ஆனது ..இருந்தாலும் நாளைக்கு  பாருக்கு எல்லாம் என்னால் போக முடியாது  என்று அவளுக்கு  தெரியாமல் ஒரு பாட்டில் வாங்கி வந்துவிட்டேன் என்று பாவமாக முடித்தாள்..

என்ன தான் வெளியே இயல்பாக காட்டிக் கொண்டாலும் உள்ளே தேவா பேசிய பேச்சை எண்ணி கனன்று கொண்டு இருந்தாள்.

மூன்று நாளில் ,சிவா ,சுரேன் ,நரேன் மணிவாசகத்தை  சென்னைக்கே அழைத்து  வந்துவிட்டார்கள் . மருத்துவர்கள் ,உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும்  multiple fractures      எழுந்து நடக்கவே ஆறு மாத காலம் ஆகும் என்றனர் .

சிவா வந்ததும் , திலோ  ஓடி சென்று அவனை  கட்டிக் கொண்டு முத்தம் வைத்தாள் . “HOW IS UNCLE ? ஒன்றும் ஆபத்து  இல்லையே ! I miss u so much சிவா ?” அவர்கள்  ஊர் பழக்கம்  போல திலோ மிகவும் இயல்பாக தான் செய்தாள்.  

அதை கண்ட ஷிவானிக்கு தான் பேரதிர்ச்சி …

சிவா அவளை விலக்கினது , இங்க ஊரில் இப்படி எல்லாம் செய் மாட்டாங்க திலோ ! தந்தை ,கூட பிறந்தவர்கள் ஆனாலும் ,பெண்கள் ஆண்களை தொட்டு கூட பேச மாட்டாங்க !  என்றது எல்லாம் ஷிவானிக்கு கேட்கவே இல்லை . அவள் கண்ட காட்சியிலே உறைந்து நின்றாள்.

“I don’t understand சிவா ! just a hug … “

“இங்க நம்ம ஊர் கல்ச்சர் அப்படி தான்” என்று அழுத்தமாக கூறினான் . அந்த அழுத்தமே அவளை கொஞ்சம் விளக்கி  நிறுத்தியது.

இதில் என்ன இருக்கு குழம்பினாலும் , “எனக்கு அங்கே வளர்ந்ததினால் இது எல்லாம் தெரியவில்லை ..சாரி சிவா” என்று உடனே  மன்னிப்பு வேண்டினாள்.

திலோ வளர்ந்த விதம் அப்படி … இவளை சொல்லியும் குற்றம் இல்லை . எதையும் உடனே மாற்ற முடியாது நன்கு அறிவான் . முதல் இருந்தே இவளை அண்ணா என்று  கூப்பிட சொல்லி பழக்கி இருக்கணும்.. அவள் தலையில் ஆதரவா கை வைத்து , “உனக்கே கொஞ்ச நாள் போனா புரியும் டா ! இன்னும் தெரிந்து கொள்ள நிறையா இருக்கு திலோ …”

ஒ  மேன் ..இன்னுமா என்று அதிர்ந்தாள்… அவள் செய்த விதத்தை பார்த்து உடனே சிரித்து  விட்டான்..

‘வனி’ என்ற போது அவளை காணவில்லை …

திலோ செய்த வேலையால் உன் பெண்டாட்டி கொலை வெறியில் இருக்காங்க பாஸ்  . போங்க, நல்லா வாங்கி கட்டிகோங்க . அறையில் அவளை காணவில்லை. .குளித்து முடித்து ஷிவானியை காண விரைந்தான்..

அவள் சமையல் அறையில் இருப்பதை அறிந்து  அங்கு  சென்றான்.

அவள் ஜூஸ் போடுவதில் மும்மரமாக இருந்தாள் . வந்து எத்தனை நேரம் ஆச்சு ..கண்டுகொண்டாளா … வந்தவுடன் எதுக்கு அந்த முறைப்பு  ! திலோ மாதிரி ஓடி வந்து கட்டி பிடித்து முத்தம் வைத்து இருக்கலாமே .. மனுஷனை மூன்று நாளா ,பார்க்கவில்லை என்று கொஞ்சமாவது பீலிங் இருக்கா !  அங்க இருந்து ஒழுங்கா பேச கூட முடியவில்லை .. வந்தவுடனே ஆசையா ஒரு பார்வை . கிடைத்த நேரத்தில் சின்ன ரோமன்ஸ் . ஒன்றும் கிடையாது  தத்தி பெண்டாட்டி  திட்டிக் கொண்டான்..

ஷிவேந்தர் இருப்பதை அறியாமல் ஷிவானி ,மிக்ஸியில் ஜூஸ் போட்ட படி அதன்  சத்தத்தில் அவனை தாளித்து கொண்டு இருந்தாள். என்ன தான் நினைத்துக்கொண்டு இருக்கான் .இங்க ஒரு மனுஷி இவனுக்காக தான காத்துக்கொண்டு இருக்கேன் ! ஒரு வார்த்தை என்ன என்று சொல்லணும் கூட தோணாதா ? மூன்று நாளா கூப்பிட்டாலும்   பிசி டா அப்புறம் அழைக்கிறேன் என்றதோடு சரி ! ஒரு முறை கூட திருப்பி அழைக்கவில்லை ..மாமா உடல் நிலையை கண்டு பேசாமல் இருக்க வேண்டியதா இருக்கு !

யாரா இருந்தாலும் வீட்டில் திடீர் என்று ஒரு பெண்ணை பார்த்தால் அதிர்ச்சி ஆகாதா ? அதுவும் அவள் செய்த வேலை ? அவளை பற்றி எதாவது விவரம் சொல்லி இருந்தால் தான என்ன என்று புரியும்  ! எதாவது என்றால்? யார் பதில் சொல்ல ? இவன் எல்லாம் என்ன மனநல மருத்துவர் . இவனுக்கு முதலில் வைத்தியம் பார்க்கணும் . லூசு. கேட்க ஆள் இல்லை என்றால் என்ன வேண்டும் என்றாலும் செய்வானா ? அவன் இவன் என்று ஏகமாக திட்டி கத்திக் கொண்டு இருந்தாள்.

அவள் அப்பாவை பற்றி கூட மறந்துவிட்டாள்  .. திலோ பற்றி  சிவா சொல்லவில்லை என்று தான் இப்போதைக்கு கோபம் .

ஷிவேந்தர் கிட்சென் கதவருகில் சாயிந்து கொண்டு  ஷிவானி கத்துவதை  எல்லாம் ரசித்துக் கொண்டு இருந்தான் .அவன் அப்பாக்கு multiple fracture   தவிர ஒன்றும் பெரிய பிரச்சினை, உயிருக்கு ஆபத்து இல்லை என்பதே அவனுக்கு பெரியா ஆறுதலாக இருந்தது .. மூன்று நாளாக எல்லா டெஸ்ட் எடுத்து அவரை சென்னை அழைத்து வருவதற்குள் மூன்று மகன்களும் திண்டாடி போனார்கள் .இப்ப கூட அவரை மருத்துவமனையில்  சேர்த்துவிட்டு தான் வீட்டுக்கு வந்து இருக்கிறான்.

திடீர் கரன்ட் போனதால்  மிக்சி ஓடாமல்  ஷிவானி குரல் மட்டும் ஒலித்துக் கொண்டு இருந்தது ..அவள் கோபத்தை ரசித்து அவள் அருகே முன்னேறி “ அவன், இவன் எல்லாம் ஏக வசனம் அதிகம் அம்மணி ! நீ இருக்க , என்னை கேட்க வேற  ஆள் வேறு வேண்டுமா ? உனக்கே ஓவரா இல்லை ! உனக்கு மனசாட்சி என்பதே கிடையாதா ? இப்படி கஞ்ச தேவியா இருக்க ? இப்படி  லுக் விட்டா பயந்திடுவேனா? என்ன நினைத்துக் கொண்டு இருக்க ? ”

ஷிவானி குழப்பமாக, நான் தான இவன் மீது கோபமா இருக்கணும் ,இவன் எதுக்கு கோபமா இருக்கான் .. அவள் பேச்சற்ற நிலையை ரசித்து , அவள் உதட்டை மென்மையாக வருடி “வாய் இருக்கு என்ன வேண்டும் பேசலாமா ? ”

அவள் என்ன என்று உணரும் முன்  அவள் சிவந்த அதரங்களை சிறை பிடித்து அவளை ஆப் செய்தான் ..

அவன் அருகாமையில்  சொக்கித்தான்  போனாள். அவள் கோபம் இருந்த இடம் தெரியாமல்  காணாமல் போனது .ஷிவானி ஹா என்று முழித்துக் கொண்டு நின்றதை கண்டு  ‘ சோ ச்வீட் கண்ணம்மா’ .. என்று தலையில்  முட்டினான் .

“எதுக்கு வனி அந்த சத்தம்” என்று உள்ளே நுழைந்த சரண்யா அவர்கள்  நிலையை கண்டு சிரித்து   நகர்ந்தாள். மேடையில் ஏறி அமர்ந்து கொண்டு அவளை காலால் வளைத்து  சிறைபிடித்தான் . மிக்சியில் இருக்கும் ஜூசை பார்த்து  “எனக்கா பேபி ? மாமனை கவனித்து அப்புறம் கூட வந்து கலக்கி இருக்கலாம் . மெயின் பிக்சர் வேண்டாம், ஒரு டிரைலர் . அவனவன் எத்தனை சந்தோஷமா இருக்கான் . நீ கொடுத்து வெச்சது அவ்வளவு தான் சிவா” சத்தமாக பேசி அவள் கழுத்து வளைவில் குறுகுறுபூட்டி, “ செல்ல குட்டிக்கு ஓவர் டைம் எடுத்து சொல்லிக் கொடுக்கணும் போல ..மக்கு பெண்டாட்டி”  .

அவள் கண்ணில் நானா மக்கு என்ற செய்தியை கண்டு கொள்ளாமல்  “பரவாயில்லை விடு . நான் பொறுமையா சொல்லி தரேன்” . ஒரு எல்லைக்கு வெளியே அவளை நகரவிடாமல் பிடித்துக் கொண்டு இருந்தான். அவள் நேர்த்தியாக ஜூஸ் கலக்குவதை கண்டு , “என் செல்லத்துக்கு என் மேல் எம்புட்டு காதல் , ஐ லவ் யு செல்லம்” என்பதற்குள் ஷிவானி போட்ட ஜூஸ் அத்தனையும்  அவன் தலையிலே கவிழ்த்தாள். இதை எதிர்பார்க்காத சிவா கொஞ்சம் திணறித்தான் போனான் .. “குட்டி பிசாசு, ராட்ஷசி என்ன செய்யற ?”

முகத்தில் வழியும் ஜூசை ருசித்து, “ கொஞ்சம் சக்கர கம்மி டா, ஐஸ் போட்டியா ? வெரி குட் .. உடம்பு சூடு ஏறி இருக்கு ! இப்ப தான் ஜில்லுனு இருக்கு”  என்று சொல்லி மேலும் அவள் கோபத்துக்கு தூபம் போட்டான் . ‘உங்களை’ என்று  முட்டை அடிக்க துரத்தும் போது கீழே சிந்தி இருந்த ஜுசால்  அவன் வழுக்கி விழ, பாலன்ஸ் தவறி அவளும் அவன் மீது விழுந்தாள்.

அவன் மீது விழுந்த அவளை இறுக அணைத்து “என் பட்டு குட்டிக்கு என்ன கோபம். கோபத்திலேயும்  என் செல்லம் அழகு தான்” என்று அவள் சிவந்த அதரங்களை  சிறை பிடித்தான் ..பலநாள் கழித்து கிடைத்த இதழ் ஒற்றலில் அவர்களை  தொலைத்தனர் . அவள் இதழின் சுவையா இல்லை அவன் மீது கொட்டிய ஜூஸ் சுவையா என்று மேலும் சுவைத்து சோதித்துக் கொண்டு இருந்தான் ..

“எங்க சரண்யா , சிவா வந்தாச்சா?” என்று சமையல் அறை வாசலில் விசாலம் குரல் கேட்டவுடன் “இப்ப தான் அத்தை வந்தான் .உங்களை தேடி  தான வந்தான்”  என்று மாமியாரை திசை திருப்பினாள்.

அவர்கள் குரலில் நினைவுலகத்திற்கு வந்த ஷிவானி அவள்  நிலையை எண்ணி அச்சோ ! அத்தை சிவா என்று அவனிடம் இருந்து போராடி விடுபட்டாள். 

ஷிவேந்தர் உற்சாகமாக ‘கண்டுபிடிச்சுட்டேன்! கண்டுபிடிச்சுட்டேன்’ என்று கூவினவுடன் ஷிவானி, “ எதுக்கு இப்படி கத்தி  மானத்த வாங்கறீங்க .. என்னத்த கண்டு பிடித்து தொலைத்தீர்கள் ..எதாவது எடா கூடமா  சொன்ன……..” என்று கண்களை உருட்டினவுடன்

அவள் மாதுளை இதழ்களை வருடி ,  “அதுவா செல்லம், உன் இதழ் சுவையா ,இல்லை நீ கலக்கின ஜூஸ் சுவையா” என்று கண்டு பிடிச்சுட்டேன் ..அவள் இதழ்  தான் சுவை சொல்லுவான்  எதிர் பார்க்க ஜூஸ் தான் சொன்னவுடன் உங்களை .. கையில் இருக்கும் முட்டையை அவன் நெற்றியில் அடித்து  உடைத்து ,”வாங்க பேசிக்கிறேன்” என்று வேகமாக அங்கிருந்து நழுவினாள்.

வெளியே அவன் நிலையை கண்ட  சரண்யா , “அடபாவமே , எல்லாரும் வாய்க்குள் தான் ஜூஸ் ஊற்றி  குடிப்பாங்க , நீ உடம்புக்கு ஊத்தி மசாஜ் செய்து கொண்டாயா? நெற்றியில் ஆம்லெட் போட்டாலா உன் பெண்டாட்டி ! அவளிடம் பல சரக்கு இருக்கு சிவா . கத்துக்கணும்” ,  என்று அண்ணி கிண்டலில்  சிவந்த முகத்தை மறைத்து “சும்மா இருங்க அண்ணி ! அந்த ராட்ஷசி தான் படுத்தறா என்றால் நீங்களுமா ? உங்களை வந்து கவனிக்கிறேன்” என்று ஓடியே விட்டான் .

Advertisement