Advertisement

காதல் துளிர் 19:

ஷிவானி காது அருகே செல் போன் பல தடவை ஒலித்து நின்றது .  ஷிவானிக்கு  எங்கே இருக்கோம் , என்ன என்று கூட புரிபடவில்லை ..கண்களை கஷ்டப்பட்டு திறந்து பார்த்தாள்.   சிவா அறையிலே அவன்  கட்டிலில் படுத்து இருந்தாள்.  அருகில் சிவாவை தேடிய போது தான் அத்தனையும் கனவு என்று புரிந்தது . சிவா வந்தது, பேசினது கனவா ..அப்ப அந்த புகைப்படம்..

கண்டிப்பா சிவா அப்படி இல்லை உறுதியா தெரியும் .. இந்த கனவு சொல்வது என்ன ?

 சிவாவிடம் இருந்து தொடர்ந்து  பல போன் அழைப்புகள் வந்து இருந்ததை கண்டாள். இப்ப அங்க இரவு .. வந்து பார்க்கலாம். வாழ்க்கையில் அடுத்த அடி வைக்க தயாராக கிளம்பினாள்.

அவள் நண்பன் ஹரிஷுக்கு அவளால் நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை.. .ஜெர்மனியில் படிக்க  ஸ்காலர்ஷிப்  கிடைத்தாலும்,  இங்கு ரெண்டு பரீட்சை எழுதி தேர்வாக வேண்டும் . பரீட்சை எழுத  அவன் தான் அவளுக்காக விண்ணப்பித்து  இருந்தான்.

“ வேண்டாம் ஹரி, எதுக்கு தேவை இல்லாத வேலை .  நான் இனி மேல் கொண்டு படிக்க போவது இல்லை ..அதுவும் இந்த துறை”   என்று சொன்னதை எல்லாம் காதில் வாங்காமல்  “பரவாயில்லை ..போட்டு வைக்கலாம் ..அதில் ஒன்றும் நட்டம் இல்லையே ! இந்த பரிட்சையில் நல்ல மதிப்பெண் எடுத்தால் மேல் படிப்புக்கு ஒரு பைசா  கூட நீ செலவு செய்ய தேவை இல்லை. உன் படிப்பு செலவை அவர்களே ஏற்றுக்  கொள்வார்கள் வனி.  நல்ல வாய்ப்பு”   என்று வற்புறுத்தி விண்ணப்பித்து  இருந்தான் .

படிக்காமல் சென்றாலும் தேர்வை  சூப்பராக எழுதி இருந்தாள். கணினியில் பரீட்சை எழுதியதால் உடனே ரிசல்ட் வந்தது .  நல்ல மதிப்பெண் எடுத்து இருந்தாள். கண்டிப்பா ஜெர்மனியில், நல்ல கல்லூரியிலே படிக்க சீட் கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்பினாள்.

பரீட்சை முடித்து மதியம்  வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஷிவானி செல் போன் அலறியாது . “ வனி எங்க போன ! நேற்றில்  இருந்து எத்தனை தடவை அழைக்க கண்ணம்மா ! பயந்துவிட்டேன் டா !”  அவன் கண்ணம்மாவில்  அவள் மனம் உருகியது . அத்தனை நேரம் இருந்த சலிப்பு அத்தனையும் பறந்து ஓடியது ..

அவள் கேவலை கண்டு,  “ ஹே குட்டிமா ! என்ன டா ! என்ன ஆச்சு !” ஒன்றும் சொல்லாமல் போனை அனைத்துவிட்டாள்.

ஷிவேந்தருக்கு  தான் கஷ்டமாக  இருந்தது . கிடைத்த பத்து நிமிடத்தில் பேசணும் நினைத்தால் இப்படி அழுகை .என்ன என்று நினைக்க !

நேற்று இரவில் இருந்து ஷிவானி பேசாததினால் அவளை காண அவன் உடலும் உள்ளமும் பரபரத்தது . அடுத்த நாள் தான் அவன் கிளம்புவதாக இருந்தது . அதுவரை பொறுக்க முடியாது என்று   அப்பவே கிளம்ப டிக்கெட் இருந்ததால் அவளிடம் சொல்லாமல் உடனே கிளம்பி இருந்தான்.

ஷிவானி அறைக்கு வந்து அவளை ஆசுவாசபடுத்தி குளிர்ந்த  நீரில் முகத்தை கழுவி அவனுக்கு அழைத்தாள்.  ஏர்போர்ட் செக்கிங் இருந்ததால் அவனால் எடுக்க முடியவில்லை. என்னுடன் பேச கூட இந்தருக்கு பிடிக்கவில்லையா என்று மறுபடியும் அழுகை .

இது என்ன குழந்தை தனமா இப்படி அழுகை என்று நிறுத்தினாள். யாரும் இல்லாமல் தனித்து நிற்பது போல அவளுக்கு  தோன்றியது.

அங்கு சிவாக்கு நிலை கொள்ளவில்லை . நான்கு  நாளாக ஒழுங்கா தான பேசிக் கொண்டு இருந்தாள். நேற்று இரவில் இருந்து என்ன ஆச்சு .  இன்னும் என் மீது ஷிவானிக்கு கோபமா ?அதனால் தான் பேசவில்லையா ?  எத்தனை தடவை அழைக்க …அவளை எப்படி சமாதானம் செய்ய  என்று குழம்பினான் ..

நித்யாவை அழைத்த போது ஏதோ யோசனையிலே  இருக்கா என்று சொன்னாள்..

அவன்  வருத்தப்படுவது  பொறுக்காமல் நான் பேசி பார்க்கிறேன் சிவா ! அவளுமே ஷிவானியிடம் பேசணும் என்று இருந்தாள்.

நித்யா  “ என்ன வனி?  என்ன ?  என் கொழுந்தன் நாலு நாள் ஊருக்கு போனதுக்கே இப்படி சோர்ந்து போய்ட்ட” என்று கலகலாப்பக பேசி  அவளை  இயல்புக்கு கொண்டு வந்தாள். மதியம் அவளை கட்டாயபடுத்தி உணவை சாப்பிட சொன்னாள்.

“ஷிவானி,  உன்னிடம் ஒன்று கேட்கணும் தான் வந்தேன்” ..சொல்லுங்க அக்கா ..

“ எனக்கு நாள் தள்ளி போய் இருக்கு ! போன தடவையே ரொம்ப சந்தோஷப்பட்டேன் . சுரேன் சந்தோஷத்தில் வீட்டையே ரெண்டு ஆக்கிட்டார் . அம்மா, அப்பா உடனே துபாயில் இருந்து இறங்கிவிட்டார்கள் . அப்படி இல்லை தெரிந்தவுடன் எத்தனை கஷ்டமா இருந்தது தெரியுமா? இந்த தடவையும் அப்படியே ஆகிடுமோ பயம் .. ஒவ்வொரு முறையும் ஏமாந்து  தான் போறேன்” .

“அக்கா, எதா இருந்தாலும் சரி ! கல்யாணம் ஆகி இப்ப தான ரெண்டு வருடம் ஆகி இருக்கு… இதில் கவலை பட எல்லாம் ஒன்றும் இல்லை அக்கா  . எதற்கும்  நாம கிட் வைத்து செக் செய்திடலாம்  . இப்ப அதிலே தெரிந்துவிடும்” .

“ நான் பார்த்திட்டேன் வனி.  அதில் பாசிடிவ் என்று தான் வந்து இருக்கு.. இருந்தாலும் அதை நம்ப முடியவில்லை .. பல தடவை அதை நம்பி ஏமாந்து போயிட்டேன் .  அத்தையிடம் சொல்ல  பயம் . சரண்யா அக்கா வேற ஊருக்கு போய் இருக்காங்க” .

“அக்கா,  இருங்க !” என்று அவள் அறைக்கு போய் வேகமாக  stethoscope  எடுத்து ஓடி வந்தாள்.    நாடி ,steth  பரிசோதனை செய்து  பார்த்ததில் ஷிவானிக்கு சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை . வீட்டில் அடுத்த வாரிசு ..முதலில் ரஞ்சு அண்ணி ,இப்ப அக்கா என்று  அப்பவே  குஷியாக ஆடி  பட வேண்டும் ஆசை ..

நித்யா சொல்லும் அறிகுறி, டெஸ்ட்  செய்ததை  எல்லாம் வைத்து பார்த்தால் கண்டிப்பா ஒரு மருத்துவரா குழந்தை உறுதி என்று தான் சொல்ல முடியும் .இருந்தாலும் எதையும்  டெஸ்ட் எடுக்காமல் சொல்லி குழப்ப வேண்டாம் என்று

“ மாலை மருத்துவரிடம்  போகலாம் .   நீங்க கிளாஸ் போயிடு வாங்க , நல்லதையே நினைப்போம் ! உறுதியாக நல்லது தான் நடக்கும்” என்று நித்யாவை கட்டிக்கொண்டாள்.

“ வனி, நான் நித்யா ! உன் வீட்டுக்காரர் நாளைக்கு வந்திடுவான் . அவன் இருக்கும் போது  இப்படி செய்து பாரேன் . என்னை உண்டு இல்லை செய்திடுவான்” ..

“அவருக்கும் வேலை இல்லை உங்களுக்கும் இல்லை ..சொன்னது நியாபகம் இருக்கட்டும் ..சீக்கிரம் வாங்க ..ரெடியா இருக்கிறேன்  ..”

பாட்டியிடமும் விசாலத்திடமும் பேசி பொழுது நகர்ந்தது…

கிளாஸ் சீக்கிரமாக முடிந்ததால் நித்யாவே தனியாக மருத்துவமனைக்கு சென்றாள். அவள் எப்போதும் பார்க்கும் மருத்துவர் ஊருக்கு சென்றதால் பக்கத்தில் இருக்கும்  பிரபலமான மருத்துவமனைக்கு சென்றாள். ஷிவானியை அப்படியே வர சொல்லலாம் பார்த்தால் அவள் போனை எடுக்கவில்லை .

நித்யா சென்றது ஷிவானி அப்பா கண்ணன்xxx மருத்துவமனை .கிளாஸ் போகும் போதே டெஸ்ட்  கொடுத்து இருந்தாள் .  வரும் போது ரிப்போர்ட் வாங்கி     பல தெய்வங்களை வேண்டிக் கொண்டு மருத்துவரை சந்திக்க  காத்துக் கொண்டு  இருந்தாள்.

அங்கு ரௌண்ட்ஸ் வந்த கண்ணன், நித்யாவை பார்த்துவிட்டார் . இவள் எங்கே இங்க !  அப்பவே எதோ செய்யணும் எண்ணம் அவருக்கு ..பொறுமை முக்கியம் என்று  அந்த  அறையில் இருக்கும்  பிரேமா டாக்டரை  தொடர்பு கொண்டு பேசினார் ..அந்த பெண்மணியும் கண்டிப்பா சார் உங்களுக்கு உடனே தெரிவிக்கிறேன் ..பேசுவது நிர்வாக இயக்குனர் ஆச்சே !

டாக்டர், ரிப்போர்ட் வைத்து,  ஸ்கேன் மூலம்  பரிசோதனை செய்து  பார்த்தால்  ரெண்டு மாத  கரு வளர்ந்து வருவது தெரிந்தது. அவள் எதிரே இருக்கும் நித்யாவிடம் எதையும் சொல்லாமல்  “ ஒரு நிமிஷம் எங்க சீனியர்  டாக்டரிடம் கலந்தாலோசித்து  வருகிறேன்” என்று வெளியேறினார்.

ரிசல்ட் பாசிடிவ் என்று வந்ததில் இருந்தே நித்யாக்கு சந்தோசம் தாங்கவில்லை.   இருக்கு என்றால் இருக்கு சொல்லிட வேண்டியது தான ?  இதில் அவங்களை கேட்க என்ன இருக்கு குழம்பினாள். வேறே ஏதாவது?  என்று பயம் கொண்டாள்..

சிறிது நேரம் கழித்து  வந்த மருத்துவர் “ சாரி மா ,  அது குழந்தை இல்லை  , வளர்ந்து வரும் சின்ன கட்டி. மருந்தாலே கரைச்சிடலாம்”  என்றவுடன் நித்யாக்கு  கண்ணில் கண்ணீர் .

“ இல்லை ! என் குழந்தை! டாக்டர், நல்லா பாருங்க ..எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு ! அப்ப  ரிசல்ட்..”

“ கட்டி இருந்தால் கூட அப்படி தான் .. நான் டாக்டர் …எனக்கு தெரியாதாமா .”.டாக்டருக்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது .  இருந்தாலும் அவளுக்கு சம்பளம் கொடுக்கும்  கண்ணன் சொல்லை  மீறி என்ன செய்ய முடியும் ..

“ இதை சாப்பிடுங்க ..ப்ளீடிங்  இருக்கும் .அதிகமா இருந்தால் வாங்க … நாளைக்கு பார்த்து, வேண்டும் என்றால் D &C  செய்திடலாம்” ..

அது எதற்கு டாக்டர்  என்ற நித்யாவிடம்  அதன் மூலம் கட்டியை முழுதா அகற்றிடலாம். கிளீன்  செய்திடலாம்.

ஒரு உயிர் கொலை அல்லவா இது ! மனசாட்சிக்கு துரோகம் செய்யறோமே என்று அந்த டாக்டருக்கு உறுத்த தான் செய்தது. அவளும் கண்ணனிடம் இந்த விஷயம் அவங்களுக்கு தெரிந்தால் பின்னால் பிரச்சினை  ஆக  வாய்ப்பு இருக்கு, வேண்டாம் என்று  மறுத்து பார்த்தாள்.கண்ணன் பிடிவாதமாக சொன்னதை மட்டும் செய்தால் போதும் கோபத்தை காட்டி இருக்கிறார் .

எதா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என்ற போது டாக்டரால் மறுக்க முடியவில்லை.

இப்போது எல்லாம்   குழந்தை என்பது வரம் என்று இவர்கள் நினைப்பது இல்லை ..அந்த காலத்தில்  சுலமபா பத்து ,  பதினைந்து குழந்தைகள் பெற்றுக் கொண்டார்கள் . அத்தனையும் ஆரோக்கியமா இருந்தது . ஆனால்   இப்போது ஒரு குழந்தை பிறக்கவே பல வருடம் தவம் இருக்கணும்.  அப்படி தாய்மை அடைந்தாலும் பல டெஸ்ட் , ஸ்கேன் எடுக்க வேண்டியதா இருக்கு . அப்படி பிறந்தாலும் எந்த குறையும் இல்லாமல் பிறப்பதே பெரிய விஷயமா இருக்கு ..இவர்களை போன்ற மருத்துவர்களை என்ன என்று சொல்ல ? மனசாட்சி இல்லாத மிருகங்களாக ஏன் மாறி வருகிறார்கள்.. மிருகங்களுக்கு கூட பாசம் இருக்கே !  அது இனத்தையே அழிக்காதே!

வீட்டுக்கு தாமதமாக வந்த நித்யாவிடம் “என்ன அக்கா, கிளம்பலாமா ? எத்தனை நேரமா காத்துக் கொண்டு நிற்க” ..உங்களுக்கு இன்ப அதிர்ச்சி கிடைக்க போகுது என்று மனதில் சொல்லி, “ போன் எங்க ? உங்களை எத்தனை தடவை அழைக்க ? அக்கா !என்ன ஆச்சு …”

ரொம்ப நேரம் கேட்டு பதில் இல்லாமல் போகவே அவளுக்கு ஜூஸ் கலக்கி கொண்டு வந்து கொடுத்தாள். அதை அப்படியே  வைத்து இருப்பதை பார்த்து வற்புறுத்தி குடிக்க வைத்தாள்..  “பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம் அக்கா ?”

அழுத படி  “ நான் நினைத்த மாதிரி இல்லை  வனி ! எதோ சின்ன கட்டி வளர்ந்து இருக்கு போல ! அதனால் தான் ..நான் கூட மூன்று மாதம் ஆச்சு என்று எத்தனை சந்தோஷமா இருந்தேன் . சுரேனுக்கு குழந்தை என்றால் எத்தனை ஆசை தெரியுமா ?என்னால் அவர் குழந்தையை சுமக்க முடியுமா? பயமா இருக்கு !”

ஷிவானிக்கு தெரிந்த வரை அது கர்ப்பம் தான் .. அப்பவே உறுதியா சொல்லி  இருப்பாள் ..இருந்தாலும் gynecologist  உறுதி செய்யட்டும் என்று தானே பேசாமல்  இருந்தாள்.    Specialist   படிப்பு இல்லை என்றாலும் ஒரு அளவிற்கு என்ன என்று கூடவா என்னால் கண்டுபிடிக்க முடியாது ..நாடி சொல்லுச்சே !

“அக்கா கட்டி  என்று எப்படி சொல்லறீங்க!” அவள் கொடுத்த பைலை பார்த்து குழம்பினாள். “இந்த ஹாச்பிட்டலா போனீங்க …”

ஏன் வனி ! 

“இது எங்க அப்பா ஹாஸ்பிடல் ..”

“தெரிந்து இருந்தால் மாமாவை பார்த்து வந்து இருப்பேனே!”

“மண்ணாங்கட்டி!”

ரிப்போர்ட் படித்து ,  அவர்கள் கொடுத்த  கரு கலைப்பு மாத்திரை பார்த்து  அதிர்ந்தாள். “ D&C எதுக்கு? அது தான் பாசிடிவ் இருக்கே ! இதை படிக்கவில்லையா அக்கா !”

“கட்டி இருந்தாலும் அப்படி தான் இருக்குமாம் …”

அது எப்படி ? என்று  கோபமாக  கேட்க எண்ணினாள் . நித்யா  நிலைமையை உணர்ந்து  ஒன்றும் பேசாமல் இப்படியும் இருப்பார்களா ? படித்தவர்கள் தானே ! மருந்து கடையிலாவது  என்ன?  எதுக்கு என்று கேட்டு இருக்கலாமே என்று தலையில் அடித்துக் கொண்டாள்…

பதட்டமாக  “ அக்கா ,  இந்த மாத்திரையை சாப்பிடவில்லை தான? ” இல்லை ,பதிலை அறிந்தவுடன் தான் நிம்மதியாக உணர்ந்தாள் . டாக்டர் என்ன சொன்னாங்க என்று முழுதும் அறிந்து ‘இப்ப எதையும் சாப்பிடாதீங்க…எனக்காக நாளை காலை வரை பொறுத்துக்கோங்க ‘ .

“அதற்குள் என்ன மற்றம் வந்திட போகுது ஷிவானி !”

அக்கா ப்ளீஸ் !எனக்காக …

ஷிவானி அவள் அறையில் அடிபட்ட வேங்கையா நடமாடிக் கொண்டு இருந்தாள். படித்த மருத்துவர்கள் எப்படி இதை செய்ய துணிகிறார்கள்..

நம்பிக்கை பெயரில் தான இவர்களிடம் செல்வதே ! அவ அப்பா எப்படி வேண்டும் என்றாலும் இருக்கட்டும் ..அந்த பிரேமா டாக்டர்   மனசாட்சிக்கு கட்டுப்பட வேண்டாம்..  பெரிய மருத்துவமனை என்று மக்கள் போய் விழுவதால்  இவர்கள் செய்வதை  எல்லாம் பொறுத்துக்க முடியுமா ?  ..

கருவிற்கும், கட்டிக்கும் வித்தியாசம் கூட தெரியாத முட்டாளா அந்த டாக்டர்..

******

சென்னை வந்தடைந்த  சிவா , வனிக்கு பல முறை அழைத்தும் எடுக்கவில்லை … இவளுக்கு என்ன ஆச்சு!

ஷிவானி மனதில்  , கண்டிப்பா இது தெரியாமல் நடந்த தவறா இருக்க முடியாது !டாக்டர் பிரேமா பற்றி நன்கு அறிந்தவள் . அவள் அப்பா சொல்லவே கேட்டு இருக்காளே! அவ அப்பா மீது தான் இருநூறு சதவீதம் சந்தேகம்..

என் மீது கோபம் இருந்தால் என்னிடம் காட்ட  வேண்டியது தான ? கோழை..ஒரு உயிரை அழிக்க இவங்களுக்கு எல்லாம் எப்படி மனது வந்தது…அது இவர்களை என்ன செய்தது …

மணி பத்து என்றதை கூட யோசிக்காமல் டாக்டர் பிரேமாவை அழைத்தாள். முதலில் எடுத்தவுடன் கண்ணன் மகள் ஷிவானி என்று பிரியமாக பேசினாள்  .நித்யா விஷயம் கேட்டவுடன்  அந்த டாக்டர்  திமிராக, “நான் செய்யாததுக்கு எப்படி பொறுப்பேற்க முடியும்  . கட்டியை எப்படி கரு சொல்லற  ? இந்த துறையில் நீ கத்து குட்டி , நான் specialist . எத்தனை வருட அனுபவம் . எனக்கு  வேலை இருக்கு !”

“இப்ப எந்த குழந்தையை கொல்ல  போறீங்க டாக்டர்!”

“Mind ur words  ஷிவானி ! அந்த பெண்ணிடம்  நான் சொன்னதை செய்ய சொல்லு .. நாளைக்கு D&C வர சொல்லு!”

மனதில் , கொலை செய்ய போறீங்க என்று தெரிந்தும் உங்களிடம் வர நாங்க என்ன முட்டாளா ? நாளைக்கு காலையில் ஆதரத்தோட இவங்க முகத்திரையை கிழிக்கிறேன்..  அப்ப நான் யார் என்று காட்டறேன்…

சிவா  எண்ணில்   இருந்து  மிச்சேது  கால்  பார்த்தாள் … இருந்த கோபத்தில் அவன் சென்னை எண்  என்று கூட கவனிக்கவில்லை.

அவள்  அழைத்த   போது  அவன்  எடுக்கவில்லை  , இவள்  அழைக்கும்  போது   அவன்  immigration  இருந்ததால் எடுக்கவில்லை.

உடனே ஜீவாவை அழைத்து ஆலோசனை கேட்டாள்… வக்கீல் எண்ணை வாங்கினாள்.. சிவாவுடன் பேசணும் போல் இருந்தது . நாளை மதியத்திற்குள் வந்திடுவார் … அதற்குள் அங்கு இருக்கும்  அவனிடம்  எதையும் சொல்லி டென்ஷன் செய்ய வேண்டாம் பேசாமல் கண் மூடினாள்.

வாசலில்  அழைப்பு மணி அழுத்தியவுடன், கதவை திறந்த   விசாலம் ஷிவேந்தரை  கண்டு ஆச்சரியமாக , “என்ன டா நாளைக்கு தான் வருவதா இருந்தது . அதற்குள் இன்றே வந்தாச்சு போல !”

“ வேலை முடிந்தது , உடனே டிக்கெட் கிடைத்தது  அம்மா , ஓடி வந்தாச்சு”.

அடுத்து அவன் அன்னை  கிண்டலாக “ஓடியா வந்த” என்று கேட்பதற்குள் “பிளைட்டில் வந்தாச்சு” என்று வேகமாக முடித்தான் . அவன் அன்னை சிரித்து குறும்பாக “இத்தனை வருடத்தில்  கொஞ்சம் மூளை வளர்ந்து இருக்கு டா ! சபாஷ் மகனே ” .

“இரவு ஒரு மணிக்கு இப்படியா ரம்பம் போடணும் . ப்ளீஸ் மம்மி , என்னை விட்டிடுங்க ! எங்கே மணி . மணி !  மிஸ்டர் மணி, உங்க பெண்டாட்டிய கூப்பிடுங்க”  என்று சத்தம் போட்டான் . அவன் பின்னால் நின்று இருக்கும் திலோவை அப்போது தான் பார்த்தார் .  நண்பன் கபில் தங்கை என்று அறிமுக படுத்தினான் .கொஞ்ச நாள்  தங்கி ,சுத்தி பார்த்து போகலாம் கிளம்பி வந்து இருக்கா …

வேலையாள் கனகாவை  அழைத்து விருந்தினர் அறையை ஒதுக்க சொன்னாள் . “வனியை  கூபிடட்டா” என்றதுக்கு “வேண்டாம் அம்மா, நானே பார்த்துக்கிறேன் ..திலோ, நான் சொன்னது எல்லாம் நியாபகம் வெச்சுக்கோ , இது உன் வீடு..”

“உனக்கு  எப்படி வசதியோ அப்படி இரு” என்று விசாலமும் கூறினாள்.

சிவா , பூனை பாதம்  வைத்து அவன் அறைக்கு சென்றான் .

ஷிவானி நல்ல தூக்கத்தில் இருந்தாள்.  போன் பேசாமல் மண்டை காயவிட்டு இங்க நிம்மதியா தூங்குவதை பாரு ! அவளை கொஞ்சிக் கொண்டு சத்தம் இல்லாமல் குளித்து அவள் அருகில் படுத்துக் கொண்டான் ..

 டெட்டி பியர் கட்டி பிடித்து தூங்கும் மனையாளை கொஞ்சி, நான் வந்தாச்சு, இது  எதுக்கு என்று பொறாமையில்  தூர வீசினான் . அவளை கட்டிக் கொண்டு தூக்கத்தை தொடர்ந்தான்.

காலையில்  கண் விழித்த ஷிவானி அருகில் ஷிவேந்தரை  கண்டு கனவு என்றே நினைத்தாள் . கனவு களைய கூடாது வேண்டி “என்னை விட்டு எங்கேயும் போகாத  இந்தர். I love you sooooo much .. I  miss u sooooooooo much” அவனை ஆசையாக கட்டிக் கொண்டாள் .

“கண்டிப்பா போக மாட்டேன் டா” என்று அழுந்த முத்தம் பதித்தவுடன்  அவன் மீசை குத்தியது .

கண்களை வேகமாக திறந்த போது சிரிக்கும் மாய கண்ணனாக காட்சி அளித்தான் . “ஹே ! நிஜமா ! எப்ப வந்தீங்க !”

“ நான் நேற்றே வந்தாச்சு ! நீ தான் கும்பகர்னி எள்ளு  பேத்தி போல தூங்கிட்டு இருந்த” என்று அவள் கழுத்து வளைவில் குறுகுறுப்பு மூட்டி, கைகள் சுதந்திரமாக விளையாடியது .

கூச்சத்தில் அவனை தள்ளி  நிறுத்தி,  அவன் கைகளுக்கு  தடா  போட்டு  “ரொம்ப விவரமா அறிவாளியா  பேசுவதா நினைப்பா என் புருஷா? நைட் நேரத்தில் தூங்காமல் பஜனையா செய்வாங்க”.

“இன்று விடிய விடிய பஜனை செய்யலாம் இருக்கேன் ? உனக்கு எப்படி வசதி” என்று அவளை இறுக்கி அணைத்து உதடுகளை சிறை செய்தான் …..

உங்களை…..

அவன் குறும்பாக “நைட் வேண்டாம் டா மடையா? இப்பவே என்கிறாயா ?எனக்கு டபிள் ஓகே ..”

“டர்ட்டி ராஸ்கல் !” தலையணை வைத்து மொத்தி , “சிவா உங்களிடம் நிறையா பேசணும் .. “

“இது பேசும் நேரமா தங்கம் ..?”

“ நான் இப்ப முக்கியமான வேலை விஷயமா வெளியே கிளம்பனும்.  நீங்க தூங்கி ரெஸ்ட் எடுங்க” என்று கிளம்புவதை கண்டு

 “எங்க டா இத்தனை அவசரம் ..”

“ gynecologist பத்மா ஷங்கரிடம் appointment  வாங்கி இருக்கேன். காலை எட்டு மணிக்கே வர சொன்னங்க …pregnancy    கன்பார்ம்  செய்யணும் ..”

சிவா அதிர்ந்த படி “என்னது ???? கல்யாணம் ஆனா ரெண்டு வாரத்தில் கன்பார்மா ?அதுவும் ….”

அவன் என்ன சொல்ல வரான் தெரிந்து அவன் வாயை மூடி, “மூச்சு ! அதுக்கு எல்லாம் இன்னும் நாள் இருக்கு ! நான் நித்யா அக்காவுடன் கிளம்பறேன்!   பெரிய கதை சிவா ! வந்து சொல்லறேன்” ..

“ ஒ அண்ணியா  ? சூப்பர் !  ஆனா குட்டிமா ,   உனக்கே  நீ செய்வது நியாயமா சொல்லு  ?  உன்னை காண ஆசையா ஓடி வந்தால்…….. நீ என்ன சொன்ன ? நான் கேட்டதை எல்லாம் ….. ஒரு டரைலர். நீ சுத்த மோசம் .”

அவனிடம் இருந்து விலகி  “எல்லாம் உண்டு ..ஆனா இப்ப இல்லை …”

***********

சிடியில் மிக பிரபலமான கைராசி டாக்டர் பத்மா ஷங்கர் அவள் கல்லூரியில் வகுப்பு  எடுக்கிறாள் . அவருக்கு சுட்டி அறிவாளியான  ஷிவானியை மிகவும்  பிடிக்கும் .. அதனால் உடனே அவரை சந்திக்க எளிதாக   appointment  கிடைத்தது .  இல்லை  என்றால் அவரை பார்க்கவே ஒரு மாதம் ஆகும் ..

அவர் நித்யாவை பரிசோதித்து கர்ப்பம் என்றதை உறுதி செய்தார் . குழந்தை நல்ல ஆராக்கியமா இருக்கு. ஸ்கேன், எல்லா டெஸ்ட் எடுத்து, அறுபது நாள் ஆச்சு என்ற செய்தியை சொன்னவுடன் நித்யாக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை . கண்ணில் கண்ணீர்…

டாக்டர் பிரேமா கொடுத்த மாத்திரையை காட்டியவுடன் என்ன நினைத்து இதை கொடுத்தார்கள் தெரியவில்லை. அந்த ரிப்போர்ட் பார்த்து மேலும் பல பரிசோதனைகளை செய்தார் ..எதுவும் இல்லையே ! அப்புறம் எதுக்கு என்று தான் குழப்பம்.  நல்ல வேலை இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளவில்லை … நமக்கு எப்போதும்  கொஞ்சம் சந்தேகம்  இருந்தால் வேற மருத்துவ ஆலோசனையை கேட்பது தவறு  இல்லை . ஓரிரு நாளில் ஒன்றும் ஆக போவது  இல்லை. நானே என் பேஷன்ட் அந்த அட்வைஸ் வழங்குவேன் .நம்ம கண்ணில் படாதது மற்ற மருத்துவர் கண்ணில் படலாம் அல்லவா .

நீங்களும் எடுத்தவுடன் எதையும் செய்யாமல் ஒரு  முறைக்கு ரெண்டு தடவை உறுதி செய்வது தப்பு இல்லை .second opinion கேட்பது தவறே இல்லை! அவங்க சொன்னாங்க என்று சாப்பிட்டு  இருந்தால் உங்களுக்கு தான நஷ்டம் ..நாம் உடுத்தும் துனியா ! போனால் போகுது வேறு  வாங்கிக் கொள்ளலாம் என்பதற்கு ! ரெண்டு மாதம் என்றாலும் அதுவும்  ஒரு உயிர் தானே ! போனால் அந்த உயிர் கிடைக்குமா ?எல்லாம் நல்லதுக்கே!   சந்தோஷ செய்தியை பற்றி பேசுவோமே!

என்ன வனி !  என்ன மேல் படிப்பு எடுப்பதா இருக்க … ஷிவானி மீது உள்ள அக்கறையில் நான் சொன்னதை யோசித்தாயா ? இப்பவாது தெளிவடைந்தாயா ? இல்லை இன்னும் அதே பழைய பல்லவி தானா…

டாக்டர் ஷிவேந்தர்  அப்படி விடமாட்டானே ! நம்ம வழியில் போற  மாதிரி போய்  அவன் வழிக்கு மாற்றிடுவான் ..எப்படி என்று தான் தெரியாது ..கிளவர் ராஸ்கல்  . சரியான துறையை தான்  தேர்ந்து எடுத்து இருக்கான் .   கொஞ்ச நாளா என் கண்ணிலே படவில்லை .ஊரில் இருக்கானா ?

சிவாவை நினைக்க ஷிவானிக்கும் பெருமையே !

டாக்டர் பத்மா கணவர் ரவி ஸ்டுடென்ட் தான் ஷிவேந்தர் ..அதனால் சிவாவை பற்றி இவர்களுக்கு நன்றாகவே தெரியும் ..

மகிழ்ச்சியில் இருந்த ஷிவானி “ இந்த சந்தோஷ விஷயத்தை சொன்னீங்க என்பதற்காக முதலில் உங்களிடம் தான் இதை  சொல்லறேன் டாக்டர்  .. நான்  MD gynaecologist   மேற்படிப்பு எடுத்து படிக்க போறேன்.  ஜெர்மனி சென்று படிக்க    மெரிட்டில் சீட் கிடைத்து இருக்கு ! எந்த கல்லூரி  மற்றும் யோசிக்க  வேண்டும்” என்றவுடன் அந்த மருத்துவருக்கு அத்தனை சந்தோசம் . ஷிவானி போன்ற திறமையான  பெண்கள் படித்த படிப்பை வீண் செய்ய கூடாது அவருக்கு  எண்ணம் …

நித்யாவை வீட்டில் இறக்கி விட்டு . அப்படியே  கிளம்பினாள். அவள் கோபத்தைக் கண்டு நித்யா ,  “ஷிவானி! கொஞ்சம் பொறுமையா என்ன என்று யோசிக்கலாம் ..கண்ணன் மாமா தவறு எங்கேயும் இருக்காது .. சண்டை வேண்டாம் .இப்ப தான் ஒன்றும் ஆகவில்லையே  ! ஏதோ மாற்றி கூறி இருக்கிறார்கள் .ரிப்போர்ட் கூட மாறி இருக்கலாம் …”

யார் என்ன  சொன்னாலும் ஷிவானிக்கு அவள் அப்பா கண்ணனை பற்றி நன்கு தெரியுமே?

“ இப்ப  எதுவும் ஆகவில்லை ..  அப்படி ஆகி இருந்தால் …என்னால் தான என்று என் குற்ற உணர்ச்சியே என்னை கொன்று இருக்கும் அக்கா …நீங்க உள்ளே போங்க.  நான் வந்திடறேன்”  . என்ன சொல்லி தடுத்தும்  பிடிவாதமாக கிளம்பினாள்.

வாக்கிங் போயிட்டு திரும்பி வந்த ஷிவேந்தர், ஷிவானி காரை நிறுத்தி  காரில் ஏறிக் கொண்டான் . “எங்க போறீங்க மேடம் .. உனக்காக சாப்பிடாமல் வைடிங்..எதாவது ஹோட்டல் போகலாமா ?”

வண்டியின் வேகத்தை கூட்டி “ இப்ப ,மாமியார் வீட்டுக்கு தான விருந்துக்கு போறோம் .வகையா சாப்பிடலாம். கொஞ்சம் பொருங்க இந்தர்.  பெரிய ட்ரீட் உண்டு”   என்று பல்லை  கடித்தாள்.. வனி  விளையாடுகிறாள் என்று நினைத்த ஷிவேந்தர் அவள் அப்பா வீடு வாசலில் விடாமல் ஹார்ன் அடித்தவுடன் வாட்ச்மன் கேட் திறந்தான் ..

“வனி,  நிஜமா விருந்துக்கு …”  மேலே பேச முடியாமல் திணறினான்.. என்ன நடக்குது ..நாலு நாளில் ஷிவானியும் ,கண்ணனும் சேர்ந்துவிட்டார்களா?

காலையில் டாக்டர் கொடுத்த ரிப்போர்ட் ,நேற்று அவர் மருத்துவமனையில் கொடுத்த ரிப்போர்ட் எல்லாத்தையும் எடுத்து வேகமாக உள்ளே சென்றாள்.  ஷிவேந்தர் அவளை அத்தனை கோபமாக பார்த்ததே இல்லை ..

“வனி, கண்ணம்மா ……..”

வாசலில் வனியையும்,  சிவாவையும் கண்ட நிர்மலா சந்தோஷமாக “ வனி ! வாடா ..மாப்பிள்ளை வாங்க ..கௌரி ஜூஸ் கொண்டு வா …..இல்லை டிபனே சாப்பிடலாமா?”

ஷிவானி வீட்டுக்கு ஏற்கனவே  சிவா வந்து இருந்தாலும் அப்போது தான் சுற்றி பார்த்தான். எங்கும் செல்வ செழிப்பை கண்டு பிரமித்தான் ..

நிர்மலாவிடம் கண்ணன் செய்தது அத்தனையும் கூறிக்கொண்டு இருந்தாள்.. அவர்கள் பேசும்  போது நித்யா, சிவாவை அழைத்து எல்லாததையும் கூறினாள்..

சிவா, கிடைத்த சந்தர்பத்தில் “ வனி,  நீ நினைப்பது போல எல்லாம் ஒன்றும் இருக்காது ! அந்த டாக்டர் மாற்றி கொடுத்ததுக்கு உங்க அப்பா  எப்படி பொறுப்பு ஆக முடியும் .. நான் சொல்லறேன் ! கிளம்பலாம் ! நிதானமாக பேசிக் கொள்ளலாம்”.

பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அவன் மாமனார் கண்டிப்பா அப்படி செய்து இருக்க மாட்டார் என்று ஷிவேந்தர் நம்பினான் .

பிடிவாதமான வனியை கண்டு “ ஒரு தடவை, ஒரு விஷயத்தில் தப்பு  செய்தார் என்பதற்காக எல்லா விஷயத்திலேயும் அவரை சொல்வது நியாயமா ? வனி , நீ  இதுக்கு ஓவரா ரியாக்ட்  செய்யறையோ தோணுது !”

அவள் கோபத்தை கண்டு வாயை மூடிக் கொண்டான் ..

நிர்மலாவிடம் , “ உன் கணவரை ஒழுங்கா இருக்க சொல்லு ..நான் தான் எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கி போயிட்டேனே ! அப்புறம் எதுக்கு எங்க விஷயத்தில் தலையிடனும் .. அவரால் என் இந்தர் வீட்டில் உள்ளவர்களுக்கு  எதாவது நடந்தது அப்புறம் நடப்பதிற்கு  நான் பொறுப்பு ஆக முடியாது ..எங்கே மிஸ்டர் கண்ணன்” .

நிர்மலா “அவர் உங்க அப்பா வனி!”

“நான் மிஸ்டர் ஷிவேந்தர் பெண்டாட்டி மட்டும் தான் … இந்த நேரத்தில் நான் இங்கே வந்தது தப்பு ! என்றைக்கு குடும்பம், வீடு என்று இருந்து இருக்கிறார் ..”

மகள் பெரிய மனுஷி  தனமா பேசுவதை கேட்டு நிர்மலாக்கு சந்தோசம்..

மகள் கோபத்தை ரசித்து, “ கோபம் இருந்தா அப்புறம் பார்க்கலாம் ..முதல் முதலா ரெண்டு பேரும் வந்து இருக்கீங்க ! என்ன சாப்பிடறீங்க ! சாப்பிட்டு தான் போகணும்!”

“ கொஞ்சம் விஷம்  இருந்தா கொடு ! சாப்பிட்டு ஒரேடியா போய்டறேன்”  என்று ஷிவேந்தரை எதிர் பார்க்காமல் காருக்கு திரும்பினாள்.

“ சாரி அத்தை ,கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டா ! நான் வரேன்” என்று கிளம்பினான் . இவ என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்கா ? தேவை இல்லாத கற்பனை செய்து எல்லாத்தையும் இம்சை செய்கிறாள்..

ஒன்று அப்படி  இருக்கா ?  இல்லை இப்படி?

**********************

Advertisement