Advertisement

18.2

கண்ணனும், அவர் மகன் கருனும்,  ராஜ் பார்ட்னெர் ஷிப் கான்செல் செய்ததில் இருந்து அடிபட்ட வேங்கையா   சுற்றிக் கொண்டு இருந்தனர் .

“ டேய் கருண்! ஷிவானியால் heart of the சிடியில் எண்பது  கோடிக்கான இடம், கூடவே பார்ட்னெர் ஷிப், அத்தனையும் போச்சு ! எத்தனை பெரிய அடி.. கொஞ்சம் கூட சந்தேகம் வராத படி எத்தனை அழகா ப்ளான் போட்டு ஏமாத்தி இருக்காங்க. இடத்தை வைத்து  பணம் கட்டீடின்களா என்று  அந்த பாண்டு கேட்டவுடன்  எத்தனை அதிர்ச்சியா இருந்தது தெரியுமா ? எத்தனை கோடி நஷ்டம்… அவளுக்கு எப்படி வந்தது இந்த தைரியம் ..

tax பிரச்சினை வரும் என்று அவள் பேரில் இடம் வாங்கி போட்டது  தப்பா போச்சு ! அவசரத்தில்  அந்த பத்திரத்தையும் அவளிடமே கொடுத்து வைத்து இருந்தேனே ,என் முட்டாள் தனத்தை என்ன என்று சொல்ல! அந்த இடம் என் கனவு பூமி ! அதில் ஹை  கிளாஸ் மருத்துவமனை, கூடவே  லக்சரி  சூட்ஸ்  கட்ட எத்தனை ஆசையாக பிளான் போட்டு வைத்து இருந்தேன் .எல்லாம் போச்சு !” என்று கோபத்தில் பூ ஜாடியை தூக்கி போட்டு உடைத்தார் .

“ அப்பா, அவளை சும்மா விட கூடாது .நம்ம வருத்தம் என்ன என்று அவளுக்கும் தெரிய வேண்டாம்” .

கண்ணன் கோபமாக, “ ஒரு கூலிக்காரனை கல்யாணம் செய்து இருந்தால் கூட ஒத்துக் கொண்டு இருப்பேன் . எனக்கு விரோதியான மணிவாசகம் பையனையே கல்யாணம் செய்து கொண்டால்?  அதுவும் என் தலைமையில் ,நானே நடத்தி வைக்கும் படி ஆகிவிட்டது…

எல்லாத்துக்கும் காரணம் எங்க அம்மா , அண்ணன் , தம்பி தான் .அவங்களை கைக்குள் போட்டுக் கொண்டு என்னை எதிர்த்துக்கிட்டா .

அந்த இடத்தை, அந்த ஜீவா  பரதேசிக்கே வித்து இருக்கா . நான் அடித்து துரத்தின நாய் எப்படி டா திரும்ப வந்தான் . அவன் எங்கே என் பெண்ணை கல்யாணம் செய்துக் கொள்வான் தான் அடித்து விரட்டினேன் .. இன்று பதுங்கி நின்று என் மீதே பாய்ந்து விட்டான் . என்ன திமிரா என்னை பார்த்தான் தெரியுமா ?அவனையும் சும்மா விட கூடாது ! என்ன அனுபவம் இருந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் போச்சே!!!” புலம்பி தீர்த்தார்.

மகள் கொஞ்சமாவது வருந்துவாள், அவள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பாள் என்று  என்று எதிர்பார்த்தார் . ஷிவானி அப்படி செய்யாதது அவர் கோபத்தை பன்மடங்காக்கியது .

“ கொஞ்சமாவது நம்மளை விட்டு பிரியறோம் கவலை கொண்டாளா! இவளை எல்லாம் ….என்னிடம் மோதின அந்த மணிவாசகத்தையும் உண்டு இல்லை செய்யறேனா இல்லையா பாரு ! அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் இருக்கு…”

இனி என்ன எல்லா நடக்குமோ !கண்ணன் என்ன செய்வார் என்று பொறுத்து இருந்து தான் பார்க்கணும்…

சிவா கிளம்பியதில் இருந்து ஷிவானி நிலையில்லாமல் இருந்தாள் ..வீட்டை சுற்றியும் ஆட்கள் இருந்தும் ஏனோ யாரிடமும் அவளுக்கு பேச பிடிக்கவில்லை . அவள் நிலையை எண்ணி அவளே சிரித்துக் கொண்டாள் . முன்பு எல்லாம் பேச ஆள் கிடைக்க மாட்டாங்களா ஏங்கிக் கொண்டு இருந்தவ, இப்ப பேச ஆள் கிடைத்தும் தனிமையை நாடுவது ஏன் …

சிவா பிரான்ஸ் செல்லும் போது ஆதியும் அவனுடன் அமெரிக்கா பயணித்தான் . சிவா  துணை இருக்க, பாதி பயணம் அவனுக்கு  சந்தோஷமாக கழிந்தது .. ஆதிக்கு சந்தோஷமாக கழிய, சிவாக்கு ஏன் டா அவனுடன் பயணம் செய்தோம் என்று ஆனது ..

ஜீவா , நிகில் , ஆதி, ஷிவானி நட்பின் ஆழம், அவர்களிடம் அவள் கொண்ட உரிமை  ,ஜீவா ஷிவானியை காதலித்தது , அவள் அப்பா இவர்கள் மூவரையும் ஆள் வைத்து அடித்து துரத்தியது என்று ஒன்று விடாமல் சொல்லிவிட்டான் .

என்னது ஜீவா ஷிவானியை காதலித்தானா ? அவன் சொன்னதை கேட்ட சிவாக்கு அதிர்ச்சி ..

ஜீவா காதலித்தான் என்று சொன்னனே தவிர ஷிவானி காதலித்தாளா என்று ஆதி சொல்லவில்லை .. அதை எப்படி கேட்க என்று சிவாவும் தயங்கினான் .

“ அவள் தொடர்பு விட்டு ஐந்து வருடம் ஆச்சு சிவா ! ஒரு நாள் திடீர் என்று மேடம் கூப்பிட்டு ஒரே அழுகை” .

“ அழுகையா?”‘  சிவா பார்வையை கண்டு “ அது சந்தோசம், கோபத்தில்  வந்த அழுகை டா ”  .. ஜீவா அவளை காணவே  இருக்கும் வேலை எல்லாம்  விட்டு  சென்னை வந்ததாக தெரிவித்தான் . என்னிடம் கேட்டுவிட்டால் .. எப்படியாவது ஷிவானிக்கு உதவ வேண்டும் என்று ஜீவா நிம்மதியா தூங்க கூட இல்லை . சென்னை வந்து  அவளுக்கு  உதவி செய்த பிறகு தான் மூச்சுவிட்டான்  .

இவன் முழுதா எதையும் சொல்லாமல் இப்படி பாதி பாதி சொன்னால் என்ன என்று விளங்கும்  சிவா கோபம் கொண்டன் .

சிவா குழப்பமாக, ஷிவானிக்கு அப்படி என்ன உதவி தேவைப்பட்டது . நான் இங்கு தான இருக்கேன் .என்னிடம் கேட்டு இருக்கலாமே என்று அவனுக்கு பொறாமை  உணர்வு எட்டி பார்த்தது . கட்டிக்க போகும் கணவன் என்று உரிமையில்   கேட்டு இருக்கலாமே !எதற்கு என்னை தவிர்த்தாள் ..

ஷிவானியை விட்டுக் கொடுக்க முடியாமல் அவன் மனசாட்சி, ஷிவானி அப்படி இல்லை . உன்னால் முடியும் என்று நினைத்து இருந்தால் கண்டிப்பா உன் ஷிவானி  உன்னை தான் கேட்டு இருப்பாள்  என்றது  …

“எத்தனை காலம் ஆனாலும் எங்கள் நட்பு அழியாது சிவா. வனியை  நினைத்தால் பெருமையாக இருக்கு . உன்னை நினைத்தால் பொறாமையாக இருக்கு !  இப்படி   பட்ட காதலி கிடைக்க நீ கொடுத்து வைத்து இருக்க வேண்டும் . உனக்காக அவ அப்பாவையே மண்ணை  கவ்வ  வெச்சுட்டா .. அந்த ஆளுக்கு இது எல்லாம் பத்தாது .. இப்ப  இந்த தடவை எனக்கு நேரம் இல்லை .கிளம்ப வேண்டியதா போச்சு  .. இல்லை என்றால் இன்னும் வேற எதாவது செய்து இருப்பேன். அங்க போய் ரூம் போட்டு  யோசித்து, டிக்கெட் செலவு ஆனாலும் பரவாயில்லை வந்து அடிக்கிறேன் ..”

சிவா விளையாட்டாக , “எங்க மாமனார் மீது உங்களுக்கு இத்தனை கோபம் ஆகாது ஆதி ! செலவு ஆனாலும் பரவாயில்லை அவரை உண்டு இல்லை என்று செய்ய காத்துக்  கொண்டு இருக்கீங்க  போல !”

“நான் மட்டுமா ? ஜீவா, நிகில், ஏன்   உங்க  பெண்டாட்டியும்  தான்   .. அவர் செய்த வேளைக்கு இது எல்லாம் ஒன்றும் இல்லை சிவா ! எங்களை எப்படி எல்லாம் மிரட்டினார் தெரியுமா ? கை உடைந்து நாலு மாதம் நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும் .. எனக்கு கை,   ஜீவாக்கு கால் …  நிகில் பயத்தில்  ஜுரத்தில் படுத்தவன் தான் . நாலு மாதம் எழுந்து கொள்ளவில்லை..

எப்படியோ எங்க வனி  ஆசைப்பட்ட படி அவளை உன்னிடம் சேர்த்தாச்சு ..அதுவே போதும் . அவ உனக்காக, உன்னை கை பிடிக்கவே அவ அப்பாவை எதிர்த்துகிட்டா ? செம துணிச்சலான  பெண் . ஜான்சி ராணி தான்  . எதோ எங்களால் அவளுக்கு உதவ முடிஞ்சதே சந்தோசம் தான்  !”

உதவி சொல்லறானே ? என்ன சொல்லி தொலைய வேண்டியது தான ! சிவா குழம்பிய முகத்தைக் கண்டு  ,  “சாரி  சிவா !  உனக்கு என்ன நடந்தது  தெரியுமா? தெரிந்தாலும் எந்த அளவிற்கு என்று தெரியவில்லை  …

வனி   காதலனான உன்னை தான் கல்யாணம் செய்யணும்  அவளுக்கு   எண்ணம். அவ அப்பா வேற தேவாவை மாப்பிளையாக முடிவு செய்துவிட்டார் . அவள் தான் எப்போதும் அவள் அப்பாக்கு எதிராக போர்க்கொடி தூக்கிறவள் ஆச்சே ! இந்த  விஷயம்  கேள்வி  பட்டதில்  இருந்து  மேலும்  கோபம்  அடைந்தாள்” .

சிவா மனதில் , அது தெரியுமே..

“ அவ வீட்டிற்கு  உங்க அப்பா ரைட் போய் இருக்கார்.   உங்க வீட்டுக்கு வந்த போது புகைப்படத்தில் அவரை பார்த்து  மேடம் அதிர்ச்சி ஆகிட்டாங்க . அவரின் நேர்மை , அவ அப்பா பிடிவாதம் , உங்க குடும்ப சூழ்நிலையை கண்டு எங்கே உன்னை கல்யாணம் செய்ய முடியாதோ பயந்து இருக்கா ?”

இதுவும் தெரியுமே!

“உன்னை தவிர்க்கவும் முடியாமல் ,உன்னுடன் பழகவும் முடியாமல் மிகவும்  கஷ்டபட்டாள்.  உங்க அப்பாவிடம் பேசி இருக்கிறாள் ” .

“என்னிடம் பேசாமல் எங்க அப்பாவிடம் பேசி இருக்கிறாள் …இவளை ? என்ன கொடுமை ஆதி!”

 உங்க அப்பா அவளிடம் , நான்  எப்படி  ஒத்துக்க  முடியும்  .என்  மகனுக்காக  சரி  சொன்னாலும்   நாளை நான் பணம் வாங்கி  கொண்டு இந்த கேசை  அப்படியே   மூடி  மறைத்துவிட்டேன் பேசுவாங்க ஷிவானி ! அப்போது நான் என் முகத்தை எங்கு கொண்டு போய் வைத்துக் கொள்ள ! என்னால் என் தொழிலுக்கு  துரோகம் செய்ய முடியாது ..

அப்ப உங்க மகனுக்கு??  என்று எதிர் வாதம் செய்து இருக்கிறாள் ..உங்க அப்பா பணம் கட்டினால் நீ என் வீட்டு மருமக ஆகலாம் என்று சொன்னத அடுத்து  

ஷிவானி அவரிடம் ,  “ஒரு கோடியா? ரெண்டு கோடியா ?  மொத்தம் அறுவது, எழுவது கோடி! எங்க அப்பா  கண்டிப்பா  கட்ட போவது இல்லை  உங்களுக்கு நல்லாவே தெரியும் !  இவ  என்ன  செய்வா   … எப்படியும்  முடியாது  . நடக்காத ஒன்றுக்கு ,  வாய்ப்பே  இல்லாத ஒன்றுக்கு வாய்  வார்த்தைக்காகவாது  சரி  சொல்லி  வைப்போம்  சொல்லறீங்களா  அங்கிள்”  என்று அவரை மடக்கி கேள்வி கேட்டு இருக்கிறாள்..

சிவா மனதில் என் செல்லம் துணிச்சல் காரி தான்  என்று பாராட்டிக் கொண்டான் …

உங்க அப்பாவினால் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியவில்லை .. அப்பவே உனக்கு பெண் அமைந்தால் அது ஷிவானி தான் என்று முடிவு  செய்துவிட்டார் போல ! என் பக்கம் எதுவும் வழி இருப்பதா தெரியவில்லை  … எதாவது யோசித்தால், செய்ய முடிந்தால்  சொல்லு !கண்டிப்பா  முயற்சி  செய்யலாம்   சொல்லி இருக்கிறார்.

இதுவும் தெரியுமே !

 அப்புறம் எப்படி அவர் ஒத்துக் கொண்டார் .  ஷிவானி என்ன செய்தாள்?   என்ன வழி கிடைத்தது ,ஜீவா ,ஆதி நிகில் எப்படி உதவினார்கள் என்று அவனுக்கு ஆர்வமானது…

சிவா ஆர்வத்தை கண்ட ஆதி,   “எனக்கு தூக்கம் வருது ..கொஞ்சம் நேரம் தூங்கறேன்!  dont disturb …”

“ டேய், இப்ப என்ன நடந்தது  சொல்லவில்லை, இங்க கொலையே விழும் …அவளிடம் கேட்டாலும் பதில் இல்லை ..எங்க அப்பாவிடம் கேட்டாலும் பதில் இல்லை .ஒழுங்கா சொல்லிடு” என்று மிரட்டியவுடன் “ ஆத்தி ! என்னையே இப்படி மிரட்டுற ..பாவம் ஷிவானி !”

“ அவளா பாவம் ! கொஞ்சம் நம்பும் படியா எதாவது சொல்லு  டா ! கோபம் வந்தால் என்னை தான்  உண்டு இல்லை சோழி போல உருட்டி விளையாடிடறாலே ! செல்ல ராட்ஷசி ! நீ மேலே சொல்லு …”

அப்போது தான் ஷிவானி அப்பா அவ பெயரில் வாங்கி போட்ட இட பத்திரம் கண்ணில் பட்டது.  அதை வைத்து எதாவது செய்ய முடியுமா   அவ தாத்தா குடும்பம் ,  உங்க அப்பாவிடமும்  கேட்டு இருக்கிறாள். 

அப்போதைக்கு இந்த விஷயம் கண்ணன் சாருக்கு தெரிய கூடாது என்ற பயம் வேற ? சின்ன   அமௌண்ட்  என்றால்   சரி  .. இத்தனை  பெரிய  தொகை,  இடம் மாறும் போது  எப்படி அவருக்கு தெரியாமல்  செய்து முடிக்க ? அந்த சமயத்தில் தான் பேஸ்புக் மூலம் எங்களை கண்டுபிடித்தாள்.

அவள்  எங்களிடம் எதாவது முடியுமா ? யாராவது தெரியுமா  கேட்ட சமயம் ,சரியாக நாங்களும்  எங்க  அமெரிக்கா  கம்பனிக்கு சிட்டி நடுவில் இடத்தை தேடிக்கிட்டு  இருந்தோம்.   ஜீவா எப்படியும் இடத்துக்கு  அலைந்து திரிந்து இருக்க வேண்டும் .  பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்தது  போல எந்த கஷ்டம் இல்லாமல் அந்த இடம் எங்க கம்பனிக்கு கிடைத்து இருக்கு .

சிவாக்கு ஆதி சொல்வதை கேட்க சந்தோசம்,  துக்கம் ,  அழுகை போன்ற எல்லா கலவை உணர்ச்சிகளும் பேரலையாக போட்டி போட்டு  தாக்கியது  . மூச்சு முட்டி போனான் .எனக்காக அவ அப்பாவை எதிர்த்துக் கொண்டாளா ? இத்தனை வேலை செய்து இருக்காளா?   அப்பா கூட மூச்சு விடவில்லை..

“கண்ணனுக்கு அவர் சொல்லும் மாப்பிளையை ஷிவானி கல்யாணம் செய்யாததால் கோபம்  நினைத்தேனே ஆதி ! ஷிவானி செய்த வேலையால் என்று இப்ப தான தெரியுது ..என் செல்ல குட்டிக்கு எத்தனை தைரியம் .என்னிடம் இதனை பற்றி ஒரு வார்த்தை பேசி இருப்பாளா ? சண்டை மட்டும் முதல் ஆளா போடா சொல்லு இவளை…” என்று

 பல்லை கடித்ததை எண்ணி ஆதி , “  போதும் பாஸ்.  ஷிவானி பாவம் .. ஒரு கட்டத்தில்  வாழ்க்கையில் எங்கே   உன்னை  இழந்திடுவாளோ  ,  நீ கிடைக்க மாட்டையோ   அத்தனை பயம் .. அவ சொன்னா  , நீ உடனே அவளுக்கு  தாலி கட்டிடுவ தெரியும். இருந்தாலும் உன்னை உன் கூட்டில் இருந்து பிரிக்க கூடாது , அவளும்  உங்க கூட்டில் ஒருத்தி  ஆகணும்   தான் இந்த போராட்டம் . 

அவ பெயரில் இடம் இருந்ததால் நல்லதா போச்சு சிவா . நாங்க  என்றதால் இன்னமும் வசதியா போச்சு ..இல்லை என்றால் எப்படியும் அவ அப்பா காதுக்கு இந்த விஷயம்   எட்டி இருக்கும் .

அவ அப்பாவை பகைத்துக் கொண்டாலும்  ,  உங்க அப்பா பெயருக்கு  ஒரு  கலகம்  வர கூடாது  , ஒருவரும் அவரை ஒரு சொல் சொல்ல கூடாது உறுதியா இருந்தா .. அதுனாலயே உங்க அப்பாவின்  செல்ல மருமகள் …”

“ஒ  இது தான் விஷயமா ? எனக்காக,   என் குடும்பத்துக்காக  எத்தனை பார்த்து இருக்கிறாள்  ஆதி!  ..”

“அவள் அப்பா கண்ணனுக்கு தெரியாமல் இடத்தை  வித்து , அவ அப்பா கட்ட வேண்டிய  வரி எல்லாம் கட்டி …  பாவம் எத்தனை கஷ்டபட்டா தெரியுமா சிவா ! உங்க அப்பா கூட முதலில் இது எல்லாம்  சரி வருமா கேட்டு இருக்காங்க ..என் இந்தருக்காக எல்லாம் சரி வரும்,  வரணும்  அத்தனை உறுதியா சொல்லி இருக்கா! ..”

ஆதி சொல்ல சொல்ல சிவாக்கு , ஷிவானியை அப்பவே காண வேண்டும் என்று உள்ளம் பரபரத்தது ..ஆதியை கட்டி தழுவி “ உங்களுக்கு எல்லாம் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியல . உங்களால் தான் என் கண்ணம்மா எனக்கு கிடைத்து இருக்கிறாள் .ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லை குட்டி பிசாசு!  அவ ஒருத்தியே எத்தனை  கஷ்டப்பட்டு இருக்கா ..”

இனி எதா இருந்தாலும் என்னிடம் சொல்ல சொல்லணும் மனதில்  குறித்துக் கொண்டான் …

“ நன்றி சொல்ல , நானே வழியை சொல்லி இருக்கேன் ! எனக்கு ஒரு பெண்ணை பார்க்க  சொல்லி இருக்கேன் சிவா! நல்ல பெண்ணா கண்ணில் காட்டி நன்றியை சொல்லிடுங்க.. அதுவும் சீக்கிரம்..”

“எனக்கு ஒரு தங்கை இல்லை . இருந்தால் உனக்கே கட்டி கொடுத்து இருப்பேன் ஆதி ” என்று  சிவா  மனமார கூறினான் .

“  இப்ப கூட வனி  ஜீவாவிடம் ஒரே நச்சு !  இனி  அவனே நினைத்தாலும் அவனால் ஷிவானி பேச்சை தட்ட முடியாது ..நல்ல வேலை நான் மாட்டவில்லை” என்ற ஆதியிடம்

“என்ன ஆச்சு ! எதுக்கு ஜீவாவை நச்சனும் ..”

கடைசியில் ஒரு பஞ்ச் வைத்தால் என்ன என்று ஆதிக்கு தோன்றியது ..

“அதுவா…… உன்னிடம் சொல்ல கூடாது சொல்லி இருக்கா … இருந்தாலும் இப்ப நீ என் பெஸ்ட் ப்ரெண்ட் என்பதால் சொல்லறேன் ..  அவளிடம் எதையும் கேட்காத ? ஷிவானி , ஜீவாவிடம்  உதவி கேட்டு இருக்கிறாள்   சொன்னேன்ல .. உதவி இல்லை ஆர்டர் கூட சொல்லலாம் .. ஜீவாக்கும் அவள் சொல்வதில் விருப்பம் இருப்பது போல் தான் இருக்கு.”

நந்தினி -ஜீவா கல்யாண விஷயத்தை பற்றி தான் சொல்கிறான் ..சிவாக்கு தான் இது  தெரியாதே….

“ எதுக்கு ஆதி .. என்ன உதவி ? என்ன விருப்பம் ? என்ன ஆர்டர் .. முழுதாகவே சொல்லமாட்டியா?  அப்போது சரி , இப்ப நான் இருக்க  என்னிடமே …. நானே சந்தோஷமா செய்து இருப்பேனே !”

ஆதி  மனதில் , அடப்பாவி .  இவனுக்கு ஆசையை தான் பாரேன்  !  ஏற்கனவே எங்க ஷிவானியை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் கொத்திக்கிட்டு போயாச்சு .. இதில் மச்சினிச்சியும் இலவச இணைப்பா வேண்டுமா ? சந்தோஷமா செய்வ ! ஏன்  செய்யாமல் போற  !  இதை வனி கேட்கணும் நீ தொலைந்தாய் மகனே … இவன் ஜீவா விஷயத்தில் ரொம்ப கிராஸ் செய்யறானோ !

இதுக்கே கொஞ்சம் மண்டை காய் சிவா என்று ஆதி  மனதில் சிரித்து , “ ஷிவானி உன்னை  விட்டு மேல் படிப்பு  படிக்க ஜெர்மனி  போறாளாம் .. உனக்கு  சொல்ல கூடாதாம் … ஜெர்மனியில் உங்க கிளை இருக்கா?   நீங்க எல்லாரும் வந்திடுங்க,   ஜாலியா இருக்கலாம்  என்று  எங்கள் மூவரிடமும்   நச்சு… கிளை எல்லாம் இருக்கு …போயிட்டு சொல்லறோம் சொல்லி இருக்கோம் ..”

சிவா சிரித்து,   “ இதுவரை நீ என்ன சொல்லி இருந்தாலும் சரி ஆதி ! இந்த விஷயத்தில் என் செல்லம் கண்டிப்பா அப்படி  சொல்லி இருக்க மாட்டா ! என்னால் உறுதியா சொல்ல முடியும்” என்று ஷிவேந்தர் சொன்னவுடன் ஆதி வாயை பிளந்தான் .. எப்படி சிவா !

என் வனியை பற்றி என்னை தவிர யாரும், ஏன் அவளுக்கே  தெரிந்து  இருக்காது .

கடைசியில் ,ஆதி சொன்னது தான் நடக்க போகுது என்று ஷிவேந்தருக்கு தெரியாது போல?

பிரான்ஸ் போய்  சேர்ந்தவுடன் ஷிவானிக்கு அழைத்தான். அவனுக்காகவே காத்துக் கொண்டு இருந்த வனி அவன் குரலைக் கேட்டு ஒன்றும்  பேசவில்லை . “வனி ,என்ன ஆச்சு !சத்தமே காணோம் !”

அவன் குரலை கேட்டு ரொம்ப நாள் ஆனது போல இருந்தது. குரலில் அத்தனை காதலை  தேக்கி  “சிவா .. இந்தர்…”

அவள் குரல் அவன் உள்ளம் வரை தீண்டி  சிலிர்க்க வைத்தது ..

என்ன ஆச்சு !  நம்ம பெண்டாட்டி நம்மளை ரொம்ப மிஸ் செய்யறாலோ என்று நினைக்க குஷியானான்…  அவளிடம் , “என் செல்லத்துக்கு தான் என் மீது இம்புட்டு காதல் பாரேன் ! என் பேருக்கு கூட வலிக்குமோ கூப்பிடறாங்க ..

என்ன சாப்பிட்டீங்க வனி ! உங்களை  கேட்க ஆள் இல்லாததால் ஜாலியா  இருக்கீங்க போல ! ஒழுங்கா சாப்பிடு …மாலை என்ன செய்தீங்க !”

“பக்கத்து வீட்டு குட்டீஸ் கூட கிரிக்கெட் விளையாடினேன்”  என்று குரல் உள்ளே போனது !

அப்புறம் சொல்லுங்க …

நான் சிக்ஸ் அடித்து  …

அடித்து…

கண்ணாடியை உடைத்துவிட்டேன் ……

“ இதுக்கு தான் பீலிங்க்ஸா .. நான் கூட ,  ஐயா  உன் அருகில்  இல்லாததால் வந்த ஏக்கம்  எண்ணி  சந்தோசம் கொண்டேனே !   என் கண்ணம்மா என்னை மிஸ் செய்தாங்க என்று நினைத்து வானத்தில்  மிதந்தேனே ? என்னை கொஞ்சம் கூட  மிஸ் செய்யவில்லையா மேடம் ! எனக்கு உன் நியாபகமாகவே இருக்கு டா ! கிளம்பும் போது அப்படி அழுதால் கஷ்டமா இருக்காதா  குட்டிமா ? என் செல்லம் நினைப்பாகவே இருப்பதினால் இன்னும் சட்டையை கூட கழட்டவில்லை .I MISS U SO MUCH”  என்று அழுந்த முத்தம் கொடுத்தான்  ..

இதை கேட்கவே ஷிவானிக்கு சந்தோஷமாக இருந்தது.. அவள் பிறந்த  வீட்டில் இருக்காளா ? இல்லையா என்று கண்டுகொள்ள கூட ஆள் இருக்காது ..ஆனா இப்ப பல ஆயிரம் மைல் கடந்து  இருந்தும் அவளுக்காக உருகும் ஷிவேந்தரை எண்ணி சந்தோசம் கொண்டாள் .

“ அப்படியே மிதந்து கொண்டே இருங்க …உங்க வனியும் உங்களை தான் நினைத்துக் கொண்டு  இருந்தேன்..  நீ இல்லாமல் போர் அடிக்குது சிவா …சீக்கிரம் வா …”

“வந்தா என்ன தருவீங்க மேடம்.  ரெண்டு நாள் ஆச்சு” என்று ஏக்கமாக சொன்னதை கேட்டு  “உங்களுக்கே ஓவரா இல்லை . காலையில் தான கிளம்புனீங்க !”

காலையில் கிளம்பினேன் ஆனா என்று இழுத்தவுடன் …. “போதும் சிவா!  சீக்கிரம் வாங்க! ரெண்டு உதை கொடுக்கறேன் …”

பிளைட்டில்  ஆதி  என்னுடன் தான் வந்தான் …

“ஓட்டை வாய் எல்லாத்தையும் சொல்லிட்டானா ?”

“அவன் எதையும் சொல்லவில்லை” என்றவுடன் “ நீங்க வாங்க ! உங்களுக்கு எல்லாம் சொல்லறேன்.  சிவா,  வீட்டில் போர் அடிக்குது ..நாளைக்கு நம்ம ஹாஸ்பிடல் போகட்டா ..”

நம்ம ஹாஸ்பிடல் போகவா என்றதை கேட்டு சிவா சந்தோசம் அடைந்தான் . இருந்தாலும் , மருத்துவ தொழிலே வேண்டாம் இருக்கிறாள் . அங்கு இருக்கும்   அரை குறை  பேஷன்ட் எல்லாம்  பார்த்து எங்கே அவனையும்  வேளைக்கு போக வேண்டாம் சொல்லிடுவா பயந்து,  “ வேண்டாம் டா ..நான் என் assistant  பார்த்துக்க  சொல்லி  இருக்கேன்  .நானே  உன்னை  வந்தவுடன்  அழைத்து போறேனே” என்று சிவா படபடப்பாக முடித்தான்.

“ஹே கூல் ! வேண்டாம் என்றால் சரி சொல்ல போறேன் ! எதுக்கு இத்தனை பதட்டம், உங்க சொத்தை நான் போய் கொள்ளை அடிச்சிட மாட்டேன்” என்று கிண்டல் செய்தவுடன்

“என் சொத்தே நீங்க தான மேடம் ..உங்களை தான்  என்  இதயத்தில் பத்திரமா பூட்டி  வைத்து  இருக்கேனே…”

Advertisement