Advertisement

15.2

அடுத்த நாள் விடியற் காலை ஊரே கூடி வாழ்த்த,  எந்த ஆடம்பரமும் இல்லாமல் திருவாளர் ஷிவேந்தர், திருநிறைச்செல்வி ஷிவானி  சங்கு கழுத்தில் பொன் மஞ்சள்  தாலி கட்டி, அவளை தன்னுடையவள் ஆக்கிக் கொண்டான் .

ஆரஞ்ச், பிங்க் நிறப் பட்டு புடவையில் மணக்கோலத்தில் , மணமகளுக்கே உரித்தான நாணத்தில் ஷிவானி பேரழகியாக ஜொலித்தாள். அவர்கள் இருவரின் ஜோடி பொருத்தத்தை  பார்த்து புகழாதவர்களே கிடையாது . ஏற்கனவே சிவந்து நிற்கும் ஷிவானியை சின்ன சின்ன சீண்டல்களால் ஷிவேந்தர்  மேலும் சிவக்க வைத்தான் .

ஷிவானி மிகவும் சந்தோஷமாக இருந்தாள். நடக்கவே நடக்காது என்று நினைத்த ஒன்று நடந்துவிட்டால்? அவள் கண்ணில் ஆனந்த கண்ணீரை கண்டு செல்லமாக மிரட்டி துடைத்து விட்டான் .

இள வயதினருக்கு ஏற்ப அனைவரும் கேலி, கிண்டலில் ஈடுபட்டானர் .

இதுவரை வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஜெயித்த கண்ணனுக்கு ஏனோ தோற்ற உணர்வு தலை தூக்கியது . அதற்கு காரணம் இன்று காலை அவன் நண்பனும் சிறந்த தொழில் அதிபருமான ராஜ், ஷிவானியை அவன் மகனுக்கு மணமுடிக்கவில்லை என்று   பார்ட்னெர் ஷிப் கான்செல் செய்து இருந்தான். பல காலமாக அவர் கட்டிய கனவு  கோட்டை இடிந்து விழுந்தது.  இதை அவரால் கொஞ்சம் கூட தாங்கிக்  கொள்ள முடியவில்லை .

இதற்கு எல்லாம் காரணமான அவர் மகள் ஷிவானி அவருக்கு எதிராளியாகவே தெரிந்தாள். கோபத்தை  காட்டும் நேரம் அது  இல்லை என்று அமைதியாக இருந்தார் .

திருமணத்திற்கு வந்து இருந்த ஜீவாவை கண்டு, சிவா அவன் மனையாளை அனைத்த படி என் மனைவி என்று சந்தோஷமாக பெருமையாக கூறியதை கேட்டு ஜீவாவிற்கு ஒரு ஓரத்தில் வலி .

அதை மறைத்து “என்றும் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவள்” என்று அவனை ஆரத் தழுவிக் கொண்டான் .

ஏனோ அந்த தழுவல்  இருவருக்கும்  மனதிற்கு இதத்தை கொடுத்தது..

ஷிவானி சந்தோஷமாக சிவா தோளில் சாயிந்து கொண்டு, ஜீவாவிடம் “உன்னால் தான் என் சிவாவை கை பிடிக்க முடிந்தது! உனக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை” என்று சொல்லியதை கேட்ட சிவா, இவன் அப்படி  என்ன செய்தான்?

 அவனுக்கு  ஷிவானியிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறையா இருந்தது ..

ஜீவா மூளை சொல்வதை மனம் கேட்க மறுத்தது ! எத்தனை தடவை  அவனுக்குள் சொல்லிக் கொண்டாலும் அவர்கள் ஜோடி பொருத்தத்தை பார்த்து அவன்  மனதில் , நான் அன்று அவ அப்பா மிரட்டினார்  என்று  விலகாமல்  இருந்தால் இந்நேரம் …

இல்லை, எப்படி இருந்தாலும் ஷிவானிக்கு தான் அந்த எண்ணம் இல்லையே !எத்தனை காலம் என்றாலும் தோழியா தான் பழகி இருப்பாள் என்று அவன் மனம் மீண்டும் மீண்டும் அதையே சொல்லியது .

ஜீவா முகத்தை கண்ட ஷிவானி கண்ணசைவில் என்ன என்று வினவியவுடன் ஒன்றும் இல்லை என்று சிரித்து தலை ஆட்டினான் .திருமணத்திற்கு, ஆதி நிகில் கூட வந்து இருந்தார்கள். அனைவரையும் ஒன்றா  காண அவளுக்கு மிகுந்த  சந்தோசம் .

***************

வீட்டுக்கு வந்ததில் இருந்து ஷிவானி அவன் கண்ணிலே படவில்லை. கிராமம் என்பதால் சொந்த பந்தங்கள் அனைவரும் வந்து போக இருந்தனர் . கொஞ்ச நேரம் தனியா விடறாங்களா அலுத்துக் கொண்டான் .

அண்ணி சரண்யாவிடம் எப்படியாவது அவளிடம் பேசணும் என்று கெஞ்சிக் கொண்டு இருந்த போது நித்யா அவசரமாக “ அவ மாடியில்  தனியா தான் இருக்கா ? நீ போ ! நான் பார்த்துக்கிறேன்” என்றவுடன் சோ ச்வீட் நிது ! தேங்க்ஸ் என்று சந்தோஷமாக மேலே சென்றான் .

அண்ணி என்று கொஞ்சமாவது மரியாதை இருக்கா என்று சரண்யாவிடம் குறை பட்டுக் கொண்டாள்.

அவள் அறையில் எட்டி பார்த்த போது , குளியல் அறையில் சத்தம் கேட்கவே ஓசை இல்லாமல் அவள் அறைக்குள் சென்று கதவை சாற்றிக் கொண்டான் .

வெளியே வந்த ஷிவானி ஸ்க்ரீன் துணி பின்னால் இருக்கும் ஷிவேந்தரை பார்க்கவில்லை .

ஷிவானி செல்லை கையில் எடுத்து சத்தமாக, காலையில் தாலி கட்டினால் கடமை முடிந்தது நினைத்துக் கொண்டான் போல ! கொஞ்சமாவது பீலிங்க்ஸ் இருக்கா? பெரிசுகளோடு, அதுவும் பல் போன பொக்கை வாய்  பெரிசுகளோடு அரட்டை ! இங்க ஒருத்தி காத்துக் கொண்டு இருக்கா தோணுதா? மக்கு ,லூசு  ? சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றாலும் ஏற்படுத்திக்க வேண்டாம்……

நேற்று என்னமா உருகினான்!

காலையிலே தாலி கட்டிட்டான் . அதற்கு பிறகு ஒரு ஹக், ஒரு கிஸ் ! ஒன்றும் கிடையாது ! டைலாக் மட்டும் பலமா பேச சொல்லு !அவனை என்ன செய்யறேன் பாரு ! கதற கதற …

ச ச கதற, கதற ரேப் தான் செய்வாங்க ! திமிர திமிர கிஸ் கொடுத்திட வேண்டியது தான் . மூன்று மணி நேரமா  பார்க்கவில்லை ஏக்கம் இருக்குதா ?

நித்யா அண்ணியிடம், அங்கு அவனுடன்  யார் இருக்கா பார்த்து சொல்ல சொன்னேனே? அவன் வர மாட்டான் ! நானே அவன் அறைக்குள் செவுரு ஏறி குதித்திட வேண்டியது தான் என்று பால்கனி பக்கம் திரும்பி, புடவையை தூக்கி இழுத்து சொருகின போது ஷிவேந்தர் சிரித்த படி அவ அருகில் முன்னேறிக் கொண்டு இருந்தான் .

“ஹா …..நீங்க எப்படி? எப்போ சிவா” என்று பேச்சு கூட ஒழுங்கா வரவில்லை .

ரெண்டே எட்டில் அவளை நெருங்கி  இருந்தான் . கழுத்தில் அவன் கட்டின பொன் மஞ்சள் கயிர் தாலி மின்னியது ! எனக்கே எனக்கானவள் என்ற உரிமை பேய் ஆட்டம் போட்டது.

தூக்கி சொருகின புடவை மத்தியில் தெரியும் அவள் வெளிர் இடுப்பை பிடித்துக் கொண்டான் . நாணத்தால் கடிபடும் உதடுகளை ரசித்து , காலையில் போட்ட மேக் அப் கொஞ்சம் கலைந்தும் கலையாமல், எதிரே நின்ற அவளை  பார்க்க போதை ஏறியது .

“எங்க டா போன ! என் மீது உனக்கு அக்கறையே இல்லை” என்று அதிகாரமா ஆரம்பித்து அவன் பார்வையை கண்டு கிசுகிசுப்பாக முடித்தாள்.

“சிவா, யாராவது வந்திட போறாங்க !”

“ நான் என் பெண்டாட்டியுடன் தான இருக்கேன் . சட்டப்படி எனக்கு உரிமை உண்டு” என்று அவள் தாலியை காட்டி உடல் நொறுங்கி விழும் அளவு, காற்று கூட புகாத படி அனைத்துக் கொண்டான். ஷிவானி, ‘இவன் உரிமை இல்லாமலே படுத்துவான். இனி சொல்லவா வேண்டும்’ என்று போலியாக புலம்பினாள் .

அவன் சிரித்து, “கண்ணம்மா வைடிங் டா ! சீக்கிரம் … நானே ஆரம்பிக்கட்டா !”

அவன் கால் மீது நின்று கொண்டு “என்னது சிவா” என்று மேலும் ஒன்றினாள். “உன்னை கதற கதற …”

“ஹா ….என்னது?” என்று அதிர்ச்சியா  விலகும் போது , “இப்படியே இரு டீ! நகராத ! திமிர திமிர கிஸ் கொடுக்கிறேன் சொன்னியே !”

“நான் எப்ப ?” அவன் விளையாட்டை ரசித்து “நீங்களே எப்படி சொல்லுங்க” என்பதற்குள் அவள் சிவந்த அதரங்களை சிறை பிடித்து இருந்தான் ..

இருவரும் மகுடிக்கு கட்டுண்ட பாம்பை போல  கட்டுண்டு கிடந்தனர் ..

செல் பேசி அலறுவதை கண்டு “சிவா ,போன்!”

அவள் அருகில் கள்ளுண்ட நரி போல மயங்கிக் கிடந்த சிவா “ பெண்டாட்டி டிஸ்டர்ப் செய்யாத?”

மறுபடியும் அலறவே, “ கொஞ்ச நேரம்  சும்மா இரு திருடா !” நித்யா தான் அழைத்து இருந்தாள். சிவாவை காணோம் என்ற அனைவரும் தேடுவதாக ?அவளும் அவன் பண்ணைக்கு  சென்று இருக்கிறான் என்று சமாளித்து பார்த்தாள். அங்கு இல்லை என்று மறுபடியும் கேட்கவே சிவாக்கு அழைத்து இருந்தாள்.

ஷிவானி இடையோடு நெருக்கி அனைத்து பிடித்து “உங்களுக்கே நியாயமா அண்ணி” என்றான் காட்டமாக!

“சிவா என்னதிது! அக்கா, அவர்  இப்ப வருவார்” என்று வைத்தாள் .

அவன் அமர்ந்து அவளை மடி மீது அமர்த்தி “என் செல்லம் எத்தனை அழகா இருக்கீங்க தெரியுமா” என்று கிறங்கினான் . அவள் மேனியில் இருந்து வரும் இதமான நறுமணத்தை முகர்ந்து, அதில்  மயங்கி பின்னங் கழுத்தில் குறுகுறுப்பு மூட்டினான்.

“என் இந்தர் தான் அழகு” என்று அவனை கட்டிக் கொண்டாள்.மறுபடியும் போன் அலறவே சிவா பாவமாக பார்த்தான்.

“நிம்மதியாகவே இருக்க விடமாட்டாங்களா டீ!”

ஷிவானி ஹஸ்கி வாய்சில் “ சிவா, ட்ரைலர் சூப்பர் ! மெயின் பிச்சர் எப்படி தெரிய ஆசையா வைடிங். இப்ப சமத்தா போங்க !நைட்….” என்று வெட்கப்பட்டு அவன் மார்பில் முகத்தை மூடிக் கொண்டாள்.

“என் செல்லம் இப்படி வெட்கப்படும் போது இப்பவே மெயின் பிச்சர் பார்க்கலாம் தோணுதே ! நீ என்ன சொல்லற?” என்று வம்பிற்கு இழுத்தவுடன் அவன் மடியில் இருந்த ஷிவானி துள்ளி எழுந்து “ அச்சோ சாமி ! தெரியாம சொல்லிட்டேன் ! ஒழுங்கா கிளம்புங்க சிவா” என்று மிரட்டி வெளியே தள்ளினாள்.

இரவு உணவு வேலை போது எதிரே அமர்ந்து இருக்கும்  ஷிவானியை பார்வையாலே விழுங்கிக்  கொண்டு இருந்தான். செல் போனில் இன்னும் கொஞ்ச நேரத்தில் என்று சிரிக்கும் ஸ்மைலி அனுப்பினான் .ஷிவானி முகம் அந்தி வானம் போல அழகா சிவந்தது .அதை ரசித்துக் கொண்டான் .

இரவு ஒன்பது மணி அளவில் எல்லாரும் பேசிக் கொண்டே இருப்பதை பார்த்து இவனுங்களுக்கு எல்லாம் வேலையே இல்லையா என்று அவன் பாட்டி காதை கடித்தான் . “உனக்கு தூக்கம் வந்தால் நீ போய் தூங்கு கண்ணா?”

“ நிஜமாகவா? போகட்டா ? தாப்பா தெரியாது தான?”

“இதில் என்ன இருக்கு பேராண்டி ! உன் வண்டியை எடுத்திட்டு போ ! துணைக்கு குணாவை அழைத்துக் கொண்டு போ ! இல்ல  ரஞ்சனி மாப்பிளையை அழைத்துக் கொண்டு போ !”

“ என்ன பாட்டி எதுக்கு வண்டி ! அதுவும் துணைக்கு குணா, மாமாவா”  என்று அலற,

“நம்ம பண்ணை வீட்டுக்கு தான் போக சொல்லறேன்! அதுக்கு ஏன் டா அலற”. சினிமா பார்க்கவா போறேன் ,என் முதல் இரவுக்கு போறேன் என்பது கூட இந்த  கிழவிக்கு மறந்துவிட்டதா ? என்று கடுப்பானான்  .

ஒரு வேலை…… பண்ணை  வீட்டில் தானா ? அது தான் இங்க இருந்து யாரும் நகரவில்லையா? என்று குஷியானான் . ஷிவானியை அழைத்துக் கொண்டு போவதா இல்லை அவளே வந்திடுவாளா ? அதை பாட்டியிடம் கேட்ட போது “அவ எதுக்கு டா ! குணா இருக்கான் ல ! போதும் கிளம்பு !”

“என்னது குணாவா? ச்சே ச்சே! வுவ ! நான் அந்த மாதிரி எல்லாம் கிடையாது .நல்லவன் தெரிஞ்சுக்கோ ! நீ என் வனியை கூப்பிடு நான் கிளம்பறேன் மணி ஆச்சு !”

“ இன்று  ஏற்பாடு எதுவும் செய்யவில்லை கண்ணா! “ .

ஷிவேந்தர் ஒரு வேலை படத்தில் வருவது போல , பூ அலங்காரம் ,ச்வீட் ஊதுபத்தி எல்லாம் வைத்து ஏற்பாடு செய்கிறார்களோ ! அதை எல்லாம் வாங்க கடைக்கு போய் இருக்காங்களா ? இவனுங்க கிராமத்தான் சரியா தான் இருக்கு..

அப்பவே அவன் மீது எறும்பு ஊர்வதை  போல நெளிந்தான் .

அவன் நண்பன் முதல் இரவு அறையில் பூ ,பழம் ச்வீட் இதை எல்லாம் வைத்து இருக்கிறார்கள் போல! இனிப்பு பலகாரத்துக்கு அத்தனை எறும்பு வந்துவிட்டதாம். அது போக பூவில் இருந்த பூச்சி நன்றாக கடித்து விட்டதாம் .விடிய விடிய அரிப்பு எடுத்து அடுத்த நாள் முகம் வீங்க வெளியே வந்து இருக்கான்.

என்ன மாப்பிளை பெண் கடித்து விட்டாளா என்றும் , இருந்தாலும் இப்படியா என்று   அனைவரும் கிண்டல் செய்வதை பார்த்து  கொலைவெறி கொண்டு கத்திவிட்டனாம் . இன்றும் அவனை பார்த்தாலும் கிண்டல் தான்  ..அந்த நிலைமை யாருக்கு வேண்டும் .

“எந்த ஏற்பாடும் வேண்டாம் பாட்டி  .அது எல்லாம் உங்க காலம் பாட்டி”. உல்லாசமாக “ இப்ப என் வனியை மட்டும் அழைத்துக் கொண்டு போறேன் ! அவ ரெடியா? “

பாட்டி சுற்றிலும்   பார்த்தபடி “டேய் சத்தம் போடாத ! மானத்த வாங்காத டா !”

“என்ன பாட்டி சொல்லற?”

“அவ இப்ப வரமாட்டா ! நாளைக்கு தான் எல்லாம். அவங்க தாத்தா சொல்லிட்டாங்க” என்று இடியை இறக்கினாள்.

ஷிவேந்தருக்கு அதிர்ச்சி ! “என்ன சொன்ன ,மறுபடியும் சொல்லு !”

பாட்டி கோபமாக “ சுரைக்காய்க்கு உப்பு இல்லை சொன்னேன் !”

“என்னால  ஒத்துக்க முடியாது” என்று குரல் உயர்த்தினான். அங்கு வந்த ஷிவானி தாத்தா, “என்ன தம்பி என்ன ஆச்சு !”

இந்த ஆளுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? கேட்கிறான் பாரு கேள்வி , என்ன ஆச்சு என்று?  உள்ளுக்குள்  எரிமலை எப்ப வெடிக்குமோ   என்று   குமுறிக் கொண்டு இருந்தது .

பாட்டி அவன் கையை பிடித்து, “ அது ஒன்னும் இல்லை அண்ணே ! சாப்பிடும் போது ஷிவானியிடம் பர்ஸ், செல் போனும் கொடுத்தானாம் . அதை வாங்கிட்டு வா சொன்னான் . நான் கால் வலி சொன்னவுடன் ஒரு இடத்தில் அமைதியா இருப்பதில்லை ! சின்ன  பெண் நினைப்பா சண்டை . நீயே போய் வாங்கிட்டு கிளம்பு சொல்லிக்கிட்டு இருந்தேன் .குணாவும் பக்கத்தில்  போய் இருக்கான் பத்து நிமிடத்தில் கிளம்பிடலாம் சொன்னேன்” என்று பேரனுக்காக பத்து நிமிடம் என்று ஜாடையாக சொன்னாள்.

ரத்தினம், அவர் வாழ்க்கையில் இது போல எத்தனை பேரை பார்த்து இருப்பார் .

 “ போங்க  தம்பி ,ரொம்ப சோர்வா தெரியறீங்க ! விரசா கிளம்பினா தான் நேரமே தூங்கி  எழுந்து கோவிலுக்கு போயிட்டு, பிளைட் பிடிக்க முடியும்”  என்று அவரும் மறைமுகமா சிரித்து பேசினார். எமகாத கிழம் திட்டி  சிட்டாக பறந்தான்.

அறையில்  ஷிவானி தலை அலங்காரத்தைக் கலைக்க உதவி செய்து கொண்டு இருந்த சரண்யா ஷிவேந்தரை கண்டு ஏதோ பேச வந்தவளை  வேண்டாம் என்று  செய்கையால் தடுத்தான். “வனி, இதோ வந்திடறேன் . நரேன் அழைத்தது போல இருக்கு” என்று சிரித்து  நழுவினாள்.

முதுகு காட்டி அமர்ந்து இருந்த ஷிவானியை ஆசையாக இறுக கட்டி பிடித்தவுடன் அலற போனவளை “ ஹே ! நான் தான் . கத்தி ஊரை கூட்டாத !ஏற்கனவே உங்க தாத்தா மிரட்டி தான் அனுப்பி  இருக்கார்” .

அவன் சொன்னதைக் கேட்டு சிரித்த ஷிவானியை கண்டு “ லட்டு! கிறங்கடிக்கிற !அப்படியே சாப்பிடனும் போல இருக்கு, என்னுடனே வந்துவிடு ! ப்ளீஸ், மதியம் என்ன சொன்ன ! ஆசை காட்டி மோசம் செய்யலாமா” என்று கெஞ்சினான்

“அது எப்படி ! எங்க தாத்தாவிடம் பர்மிஷன் கேட்டு வாங்க” என்று முறைத்தாள்.

“அது எல்லாம் முடியாது நான்  இங்கயே தங்கிக்கிறேன் ! இங்க தான் தங்குவேன்…..”அவளுக்கும் அவனை பார்க்க பாவமா தான் இருந்தது .

“நான் உனக்கு உதவி செய்யட்டா !”

“என்ன உதவி  சார்” என்று கிண்டலாக கேட்டவுடன்

“புடவை கட்ட மட்டும் இல்லை, எப்படி கழட்ட என்று கூட சொல்லி கொடுப்பேன்”

“அசடு வழியுது  திருட்டு ராஸ்கல்” என்று கன்னத்தில் பட்டென்று கொடுத்தாள். “என்னையே அடிக்கிறியா ? பாட்டி, தாத்தா” என்று ஊரை கூட்டினான் .

ஏசி  ஓடியதால் சத்தம் கேட்காது என்ற தைரியத்தில் கத்தினான் . “சிவா ப்ளீஸ்! ஊரை கூட்டாதீங்க ! ப்ளீஸ் ! ப்ளீஸ்”  என்று அவன் உதட்டை சிறை செய்தாள்.

அவளுடன் மேலும் இழைந்து “இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன் கண்ணம்மா” .

“சுத்த மோசம் சிவா !இப்படியா அலம்பல் செய்வது !”

“யாரு டீ அலம்பல் செய்வது !  கல்யாணம் ஆனா புது ஜோடியை பிரிப்பது யாரு, நீயே சொல்லு !” அவனை கொஞ்ச நேரம் கொஞ்சி சமாதானம் செய்து பத்து  நிமிடம் என்பது ஒரு மேலும் ஒரு  மணி நேரம் நீண்டது  . “என் பாவம் எல்லாம் உங்க தாதாவை சும்மா விடாது டி” .

“பாவம் டா ! தாத்தா தாதா ஆகிட்டாரா ….”

“நாளைக்கு என்னிடம் இருந்து  தப்பிக்கவே முடியாது  செல்லமா” என்று சிரித்து,  அவளை சிவக்க வைத்து மனமே இல்லாமல் கிளம்பினான் .

“போன் செய்யறேன் குட்டிமா  !” என்றதுக்கு “தூக்கம் வருது சிவா !

அவள் தலை அலங்காரத்தை கலைக்க உதவி செய்தபடி “ சரியான கல்நெஞ்சக்காரி டி ! புருஷன் ஆசையா பேசலாம்  சொல்லறேன், இவளுக்கு தூக்கம் வருதாம் .உன்னை …இது எல்லாம் முதல் இரவா செல்லம் .வெளியே சொன்னால் சிரிப்பாங்க ..”

ஷிவானி வெட்கத்துடன்  “இதை எல்லாம்  போய்  சொல்லுவாங்களா ? ..”

“உனக்கு தெரியாது கண்ணம்மா ! என் நண்பர்களுக்கு தெரிந்தால் என்னை ஓட்டியே கொன்னுடுவாங்க .. அவங்களுக்கு இதே தான் வேலை”. அவள் சோர்ந்த  முகத்தை கண்டு “ இன்றைக்கு ஒரு நாள் மட்டும் . அப்புறம் நீ தூக்கத்தை மறந்திட வேண்டியது தான்” என்று சில்மிஷம் செய்து  சென்றான்.

சென்னை, ஷிவேந்தர் வீட்டிற்கு  மதியம் தான் வந்தார்கள் . வந்தவுடன் சிறிது நேரம் ஒய்வு எடுத்து ஷிவானி பார்லர் கிளம்பிவிட்டாள் .ச, கொஞ்ச நேரம் தனியா விடறாங்களா என்று குணா ,கார்த்திக்கிடம் புலம்பித் தள்ளினான் .

“விடு மாப்பிளை! ரிசெப்ஷன் முடிந்தால் ப்ரீ தான !  இருந்தாலும் ரொம்ப அலையற டா” என்று வாரினார்கள். “என் கவலை எனக்கு ! உங்களுக்கு இப்படி நடந்தால் தெரியும்” என்று மூக்கை உறிஞ்சினான்.

Advertisement