Advertisement

காதல் துளிர் 13:

இப்ப கூட சிவாவிடம் சொன்னால் யாரையும் பார்க்காமல் உடனே அவன் மனைவி ஆக்கிக் கொள்வான் .

அவளுக்கு அது சரி , ஆனால் அவனுக்கு???

வாழ்க்கையில் அவளுக்கு அமையாத ஒன்று அவனுக்கு அமைந்து இருக்கு . அழகான  குடும்பம். ஏனோ அந்த பாச கூட்டில் இருந்து அவனை பிரிக்க அவளுக்கு மனசு இல்லை . காதலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று அவனை விட்டு  இருக்க முடியுமா? எதற்காக இந்த காதல் வந்தது என்று புலம்பிக்  கொண்டு இருந்தாள்.

என் மனம் வாடினால் கொஞ்ச கூட பொறுத்துக் கொள்ள மாட்டானே! எத்தனை  நேரம் ஆனாலும் நான் இயல்பான பின் தான்  வேற வேலையே பார்ப்பான். இப்போது முளைத்து இருக்கும் பிரச்சினைக்கு  தீர்வு ? அவனிடம் என்ன என்று பேச ?

ஏனோ அவள் அப்பாவிடம் சென்று, எல்லாம் அவரால் தான்  என்று சண்டை போடணும் கோபம் ,வெறி எழுந்தது.  அழுகையை அடக்க  முடியாமல்  அவள் கை  தானாக அவள் பாட்டிக்கு அழைத்து இருந்தது. அவள் பாட்டி கோமதியிடம் அத்தனையும் சொல்லி அழுதாள். மகன் பிடிவாதம் தெரிந்தும் என்ன சொல்லி தேற்ற என்று புரியாமல் குழம்பினாள்.

எதற்கும் கவலை படாத! நான் இருக்கேன் தங்கம் . கிளம்பி வரேன் .எதா  இருந்தாலும் யோசித்தால் வழி கிடைக்கும், தெளிவு பிறக்கும். உனக்கு எதாவது ஒன்று என்றால் உன் பெரிப்பன், சித்தப்பன், உங்க தாத்தா சும்மா விடுவாங்களா?  என்று ஆதரவாக பேசி வைத்தாள்.

ஷிவேந்தர் வீட்டில் சாப்பிடும் போது  நித்யா ,சரண்யா அவன் பாட்டி அனைவரும் ஷிவானி பற்றியே பேசிக் கொண்டு இருந்தார்கள் .

யாரை பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று மணிவாசகத்திற்கு    ஒன்றும் புரியவில்லை . “யாரு டா! உன் நண்பன் யாராவது வந்து இருந்தார்களா ?”

“அப்பா, இன்று ஷிவானி வந்து இருந்தா. உங்களை பார்க்கணும் ரொம்ப ஆர்வமாக இருந்தா? சரியா கிளம்பிட்டீங்க!”

மணிவாசகம் குழப்பமாக “அவ எதுக்கு ஆர்வமா இருந்தா சிவா ?”

எப்போதும் அவர்கள் வீட்டில் சுரேன், நரேன், சிவா நண்பர்கள் யாராவது வந்து கொண்டே தான்  இருப்பார்கள். பசங்க அந்த வயதுக்கு ஏற்ப  சிரித்து பேசி, கலாட்டா செய்து, ஒருவருக்கு ஒருவர் வாரிக் கொண்டு இருக்கும் போது அவர்கள் சுதந்திரத்தில் தலையிடாமல், கண்டுகொள்ளாமல் மணிவாசகம்  நகர்ந்து விடுவார் .

ஷிவேந்தர் இத்தனை ஆர்வமா பேசினவுடன் மணிவாசகத்திற்கும் அந்த ஆர்வம் தொற்றிக் கொண்டது .

அவன் பாட்டி வைதேகி, “அந்த பெண் ஷிவானி ரொம்ப  நல்ல பெண்ணா இருக்கா மணி . நம்ம வீட்டுக்கு  பொருத்தமான மருமகள், நம்ம சிவாக்கு ஏற்ற ஜோடி! நாமளா தேடினாலும் சிவாக்கு  இப்படி பட்ட பெண் அமையாது . உடனே சட்டு புட்டுன்னு பேசும் வழியை பார்க்கலாம் ..

அவளும்  டாக்டர். அவங்க குடும்பத்தில் அவள் அப்பா, அம்மா, அண்ணா,  அண்ணி அனைவரும் டாக்டர் படிச்சவங்க. நல்ல குடும்பமா தான் தெரியுது . பணம் இருந்தாலும் திமிர் தனம் கொஞ்சம் கூட இல்லை! அன்பா பழகறா ?பாசத்துக்காக ஏங்கி நிற்கும்  பெண் டா…”

டாக்டர்  குடும்பம் என்றவுடன்  திமிராக பேசிய கண்ணன் தான் அவர் மனக்கண்ணில் தோன்றினார். கண்ணனை நினைக்க அவருக்கு  கடுங்கோபம் .   “அப்படி எல்லாம் இல்லை அம்மா! இப்படி  பட்ட ஆளுங்க தான் நாட்டை ஏமாற்றிக்  கொண்டு திரியறாங்க ! முதலில்  கம்பி என்ன வைக்கணும். படித்த படிப்பை வைத்து சேவை செய்யணும் இல்லாமல் எப்படி நாட்டை ஏமாத்தணும் யோசித்துக் கொண்டு இருக்காங்க”

எப்போதும் யாரை பற்றியும் பேசாதவன் இப்படி பேச வைதேகி “ என்ன மணி,  எதுக்கு கோபம் ? என்ன ஆச்சு ? வேளையில் எதாவது டென்ஷனா?”

அவர் சலித்த படி “அது எல்லாம் ஒன்றும் இல்லை அம்மா  … ”

சிவாவும் அவன் அப்பா முக மாறுதலை கவனித்துக் கொண்டு தான் இருந்தான் . அவர் வருமான வரி அதிகாரியாக இருப்பதால் வேளையில்  பல இடத்தில் இருந்து நெருக்கடி, சோதனை தொடர்ந்து   வந்து கொண்டே தான் இருக்கும். எதற்கும் அசராமல் அவர் பிடியிலே நின்று கொண்டு சாதிப்பார் .

யாரோ அளவிற்கு மீறி வம்பு செய்கிறார்களோ என்ற எண்ணம் அவனுக்கு .

“என்ன அப்பா ? யாராவது டார்ச்சர் கொடுக்கறாங்களா?”  என்று அக்கறையாக கேட்டபோது   அங்கே  வந்த தீபன் “உங்க அப்பா டார்ச்சர் கொடுக்காமல் இருந்தால் தேவல!”

தீபன், மணிவாசகம் முறைப்பை கண்டு “ ஆபிசில் தான் உங்கள் அச்சிச்டன்ட். இப்ப நான் உங்க வீட்டு பிள்ளை ..சும்மா முறைக்காதீங்க பெரிப்பா!” என்றவுடன்

“டேய் அரட்டை, ஒழுங்கா சாப்பிடு” ஒன்றும் சொல்லாத’ என்று  கண் ஜாடையா பேசி  மிரட்டினார் .

தீபன் வைதேகி தங்கை பேரன். மூன்று வருடமாக மணிவாசகத்திடம்  வேளை செய்கிறான் .

வீட்டில் அவர்  வேலை விஷயம் பற்றி பேசவோ, விவாதம் செய்யவோ ஒரு போதும்  அனுமதிக்கவே மாட்டார் .அவர் வேலை அப்படி! எந்நேரமும் அவருக்கு மிரட்டல் வந்து கொண்டே தான் இருக்கும் . அதை எல்லாம் துளி கூட சட்டை செய்ய மாட்டார். அலுவலகத்தில் நடப்பது  எல்லாம் வீட்டில் சொல்லி அவர்கள் நிம்மதியை குலைக்க ஒருபோதும்  விரும்பமாட்டார்..

 தீபன், “என்ன அண்ணா? யாருக்கு பெண்! அடுத்த அண்ணி வர போறாங்களா ?சூப்பர்! சீக்கிரம் கல்யாண சாப்பாடு உண்டு சொல்லுங்க ?”

ஷிவேந்தர் சிரித்த படி ,”நான் கல்யாணம் செய்து கொள்வது உனக்கு சந்தோஷமோ இல்லையோ, அடுத்து உனக்கு ஆகும் என்று தான சந்தோசம்” ..

“ச, சபையில் உண்மையை  இப்படி எல்லாம் போட்டு  உடைக்க கூடாது !தப்பு ! சின்ன பையனை பற்றி என்ன நினைப்பாங்க சொல்லுங்க” எல்லாரையும் வாரிக் கொண்டு இருந்தான்.

வைதேகி, “ உங்க அம்மாவிடம் சொல்லி முதலில் கால் கட்டு போட சொல்லறேன் பேராண்டி! கொஞ்சம் பேச்சு அதிகம் தான் . வரவ கொஞ்சமே கொஞ்சம் துடுக்காக  பேசும் வாயை  தைத்தால் சரியா போய்டும், என்ன சிவா நான் சொல்வது சரி தான?”  என்றவுடன் தீபன்  வாயை அழுந்த மூடிக் கொண்டான் .அவன் செயலை கண்டு சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டனர் .

மணிவாசகம் தயங்கிய படி “அம்மா ,விசாலம் என்ன சொல்லுவாளோ ?” என்று அவர் இழுத்தவுடன் “நான் பேசிக்கிறேன் மணி! அவள் வந்தவுடன் நல்ல முடிவை எடுக்கலாம் .”

ஷிவானி குடும்பம் பற்றி  அறியும் ஆவலில் மணிவாசகம் “சிவா, பெண் யாரு ?அவங்க அப்பா என்ன செய்யறாங்க! டாக்டர் சொன்ன? என்ன டாக்டர் ” என்று கேட்கும் போது அவருக்கு போன் அழைப்பு வந்ததை தொடர்ந்து ‘அப்புறமா பேசலாம் சிவா’  என்று நகர்ந்து சென்றார் .

அடுத்து அப்பாவிடம் பேசுவதற்குள் என் இனியவளின்  கோபத்தை சரி செய்யணும் என்று முடிவு செய்து கொண்டான் .

ஷிவேந்தர், ஷிவானியை தொடர்பு கொள்ளாமல் அவள் வீட்டில் வேலை  செய்யும் லட்சமி அம்மாளை தொடர்பு கொண்டு ஷிவானியை பற்றி அறிந்து கொண்டான் . அவரிடம், ஒழுங்கா நேரத்துக்கு பார்த்துக் கொடுக்கணும் ..சத்துள்ளதா கொடுங்க …வேண்டாம் என்றால் விடாதீங்க.. நல்ல வேலை இவங்க நம்பரை வாங்கி வைத்தேன். இல்லை என்றால் கஷ்டம் தான். அவர் மூலமாக ஷிவானி பாட்டி எண்ணை வாங்கிக் கொண்டான் .

ஷிவானி  கோபத்திற்கு காரணம் புரியாமல்  வீட்டில் அவன் அண்ணியிடம் ,பாட்டியிடம்  நேரா கேட்காமல் அன்று என்ன நடந்தது, நான் டாக்டர் சொன்னீங்களா? கிண்டலா எதாவது ? சரண்யா பார்வையை கண்டு

“அண்ணி ப்ளீஸ் தப்ப நினைக்காதீங்க?”

அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று ஒரே போல கூறினார்கள் .

“உன் மீது வனிக்கு எதாவது கோபமா ? உங்களுக்குள் சண்டையா?” என்றதுக்கு ஒன்றும் இல்லை! சும்மா கேட்டேன் என்று மழுப்பினான் .

ஷிவேந்தர் கோபமாக , ரெண்டு நாளா  ஒரு மெசேஜ் காணோம்! எப்படி தான்  இப்படி கல் நெஞ்சக்காரியா அழுத்தாமா இருக்காளோ! ராட்ஷசி! போன் செய்ய வேண்டாம் ! மெசேஜ் அனுப்புவதற்கு என்ன? திட்டியாவது அனுப்பலாமே? இவளை எல்லாம் கட்டி வைத்து உதைக்கணும்.

அழைத்துக் கேட்கலாமா என்று கூட எண்ணினான். அவளா அழைக்கட்டும் .இல்லை! அவள் பிரச்சினை என்ன என்று கண்டு பிடித்து  தான் அழைப்பேன். அப்ப  தான் அவளும் யோசிப்பா என்று முடிவாக இருந்தான் .

அடுத்த வந்த நாட்களில் கூட  ஷிவானி கோபம் குறைந்தது போலவே இல்லை . சிவாக்கு தான் என்னமோ போல இருந்தது .அவளை மிகவும் மிஸ் செய்தான் . அவள் நண்பன் ஹரியிடம் அவளை பற்றி விசாரித்துக் கொண்டான் .

கோபத்தை விட்டு அழைத்தாலும் சுவிட்ச் ஆப் என்றே வந்தது .

நான்கு நாள்  பொறுத்த சிவா ஐந்தாம் நாள், எப்படியும் ஷிவானி   அவள்  பாட்டியிடம் அனைத்தையும்   சொல்லி இருப்பாள் என்று உடனே அவள் பாட்டிக்கு அழைத்தான்.

ஷிவேந்தர்,  ஷிவானி பாட்டியை அழைத்தவுடன் அவருக்கு மிகுந்த சந்தோசம் .பேத்தியை  எண்ணி கவலை கொண்டு இருந்தவருக்கு அவன் போன் செய்தவுடன் மிகவும் ஆறுதலாக இருந்தது. அவன் தவிப்பாக, அக்கறையாக  பேசுவதை வைத்தே பேத்தி ஷிவானி  மீது எத்தனை பிரியமாக இருக்கான் என்று உணர்ந்தார் .

இதுனால் வரை,  ஒரு நாள் கூட மகன், மருமகள் அவளுக்காக அக்கறை கொண்டு பேசியது  போல இல்லையே! இப்ப கூட  மகன், மருமகள் அங்கே  இருந்தும் , அழும்  பேத்தியை தேற்றுவார் யாரும் இல்லையே என்று தான   வருத்தப்பட்டுக் கொண்டு  இருக்கிறாள் .

பேத்தி ஷிவானி  அழுததில்  இருந்து பாட்டிக்கு  வருத்தம் தான். ஊரில்  அறுவடை காலம்  என்பதால்   அவளால்  உடனே  கிளம்ப முடியவில்லை. ஒரு நாளைக்கு குறைந்தது பத்து பதினைந்து முறையாவது அழைத்து, பேத்தி நலனை விசாரித்துக் கொண்டு இருக்கிறார் .

ஷிவேந்தர் அன்பை எண்ணி உள்ளம் குளிர்ந்தது. ஏற்கனவே முடிவு செய்தது போல எந்த பிரச்சினை வந்தாலும் சமாளித்து, ஷிவேந்தருக்கே  பேத்தியை மணமுடித்து வைக்க வேண்டும் என்று உறுதி கொண்டு  ஷிவேந்தரிடம் கூடிய சீக்கிரம் சென்னை வரேன்! அப்ப கண்டிப்பா பேசலாம் என்று வைத்தார் .

ஷிவானி   பாட்டி கோமதி,  அவள்  கணவர்  ரத்தினம், பெரிய மகன் செல்வம் , இளைய மகள் கதிர்   மூலம் கண்ணன், பிரச்சினையை கேட்டு அறிந்து கொண்டார் .

“மகன், மகளுக்காக தான  இத்தனை  சம்பாதிக்கிறான். அவர்கள் நலமா வாழ  பேசாமல் அவர்கள்   சொல்லும் பணத்தை கண்ணன் கட்டிக் கொண்டு போகலாம், யாரோ பணம் நமக்கு எதுக்கு”  என்று வருத்தப்பட்டார் .

ரத்தினம் , “கண்ணனை  இன்று,  நேற்றா பார்க்கிற கோமதி! இவன் எல்லாம் பட்டா தான் திருந்துவான் …”

 செல்வம் , கதிருக்கு  அவர்கள் செல்ல பெண் ஷிவானியை எண்ணி தான்  கவலை. எப்போதும் எந்த விஷயம்  என்றாலும்  அவள் அப்பா, அம்மா  முன்பு அவள் பாட்டி வீட்டில் இருப்பவர்களுக்கு  தான் அன்பாக  தெரிவிப்பாள். காதல் விஷயத்தை கூட இவர்களுக்கு தான்  தெரிவித்து இருந்தாள்.

கண்ணனை பற்றி தெரிந்தும், அனைவரும் மகளிடம் கண்டிப்பா அவளுக்கு தான் சபோர்ட் செய்வதாக உறுதி அளித்து இருந்தார்கள் . இப்போது இப்படி  ஒரு பிரச்சினையை யாரும் எதிர் பார்க்கவில்லை ..மணிவாசகம் ஒரு விதத்தில் இவர்களுக்கு தூரத்து சொந்தம் தான். அவரை பற்றி இவர்களும் கேள்வி பட்டு இருக்கிறார்கள் .

“பேத்தி தேவை இல்லாம வருத்தப்படறாலோ?” என்றதுக்கு கதிர், “ ஷிவானி சொல்வது பொய் இல்லை அம்மா!  அண்ணன் பேசின போது அந்த மணிவாசகம் மீது அத்தனை கோபமா தான் இருந்தார் . மணிவாசகம் ரொம்ப நேர்மையானவர் .. எதற்காகவும் அவர் கொள்கையில் இருந்து மாறமாட்டார்.. அப்படி இருக்க இப்போதைக்கு கண்டிப்பா ஷிவானி கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ள மாட்டார். நாம வேற எதாவது வழியில் தான் யோசிக்கணும்”.

செல்வம் “ கண்ணனிடம் பேசினால் வேளைக்கு ஆகாது, அவன் பணத்தை கட்டுவது போல இல்லை .. ஒருவேளை கட்டினால்  அந்த மணிவாசகம் சம்மதம் சொல்லுவார் எதிர்பார்க்கலாம், இப்ப வேற என்ன செய்ய முடியும் ….. கொஞ்ச நஞ்ச பணம் என்றால் சரி ! பல கோடி என்றவுடன் எப்படி சரி செய்ய ?” யோசிக்க முடியாமல் அனைவரும்  திணறினர் .

கோமதி பாட்டி , “ இந்த நிலைமையில் முதலில் அந்த சிவா  பையனுக்கு பேசவே உன் தம்பி கண்ணன்  ஒத்துக்க மாட்டானே செல்வம் . கண்ணன் மட்டும் தான் முரண்டு பிடிப்பான்,  எப்படியோ அவனை  மிரட்டி  வனி  கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கலாம் நினைத்தால் இப்போது மணிவாசகம் வீட்டில் இருந்தும் பிரச்சினை  கிளம்பும் போல !

ஏற்கனவே பேத்திக்கும் மகனுக்கும்  ஏழாம் பொருத்தம் . இவளை கேட்காமல் அவன் நண்பன் மகனை முடிவு செய்தால் ? இப்ப பேத்தி காதல் விஷயம் கேள்விபட்டால் என்ன செய்வானோ ? எங்க இருந்து தொடங்க? முதலிலே எப்படி பேச என்று யோசித்துக் கொண்டு இருந்தோம் ? இப்ப சுத்தம்!”

“எதையும் பேசி பார்க்காமல் ஒரு முடிவு எடுக்க முடியாது ! அந்த சிவா பையன் தங்கமான பையனா தான் தெரியறான் . விசாரித்த வரையில் குடும்பம் நல்ல குடும்பம். பேத்தி  சொல்வதை வைத்து நாம பேசாம அப்படியே விடவும் முடியாது  . இந்த விஷயத்தில் கண்ணன் எதிர்த்தாலும் ஷிவானி   வாழ்க்கை தான் முக்கியம் . இப்படி செய்தால் என்ன? கண்ணனிடம் பேசுவதை விட  மணிவாசகத்திடம் பேசி பார்க்கலாமே ?” என்ற ஷிவானி தாத்தா  பேச்சிற்கு மகன்களும் ஆமோதித்தனர் .

இது தான் ஆண்டவன் ஒரு கதவை மூடினால் அடுத்ததை திறப்பான் என்பது! ஷிவானிக்கு ,அப்பா ,அம்மா மூலம் கிடைக்காத அன்பு, அவள் பாட்டி வீட்டில் இருப்பவர்கள் மூலம் தெவிட்டாமல் கிடைத்தது  .

தீபனை EA மாலில் பார்த்த சிவா “ அலுவலகத்தில் எதாவது பிரச்சினையா தீபன் . அப்பா ஏன் என்னமோ போல இருக்கிறார் ! யாராவது எதாவது சொன்னாங்களா ?மிரட்டி….” என்று நிறுத்தும் போது

“அப்படி எல்லாம் இல்லை சிவா. எப்போதும் போல தான் ! கொஞ்ச அப்பா டென்ஷன் ஆகிட்டார்.. நாங்க எல்லாம் இருக்க அவரை விட்டிடுவோமா? எதுக்கு கவலை” என்று இயல்பாக்கினான்.

ஜூஸ் குடித்த  படி “ என்ன சிவா அண்ணா, உனக்கும் அந்த இருதய நிபுணர் டாக்டர் கண்ணன்  மகள் ஷிவானிக்கும் என்ன சம்மந்தம்??”

சிவா மனதில் குழப்பமாக ,இவனுக்கு எப்படி! அன்று பேசிய போது ஷிவானி பெயரையோ கண்ணன் பெயரையோ சொல்லவில்லையே!

ஷிவானி போனில், ஷிவேந்தர்  புகைப்படத்தை பார்த்ததில் இருந்து இவனை பற்றியும், ஷிவானி பற்றியும் தான் அவர்கள் அலுவலகத்தில் கிசு கிசு ஓடிக் கொண்டு இருக்கிறதே ! இது இன்னும் மணிவாசகம் காதுக்கு எட்டவில்லை . அதற்குள் கேட்டுவிடலாம் என்று தான் தீபன் கேட்டான் .

ஷிவேந்தர் முதலில் அவர்கள் சண்டை  சரியாகாமல் யாருக்கும் எதையும் சொல்ல கூடாது என்று சிரித்து மழுப்பினான். பேச்சை மாற்றியவுடன் தீபனும் அதை கண்டு கொள்ளவில்லை.

ஒரு வாரம்  ஷிவானியை பார்க்காமல் இருந்த சிவா அன்று அவள் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று  கல்லூரிக்கே சென்று விட்டான் .

ஷிவானி, அவளுக்கு கொடுத்த வேலையை முடித்து வர தாமதமானதால் சிவா அவள்  நண்பர்களுடன் காண்டீனில் அரட்டை  அடிக்க தொடங்கி இருந்தான் . தூரத்திலே ஷிவேந்தரை  கண்ட ஷிவானி உள்ளம் துள்ளினாலும் மனதை கல்லாக்கி அவனை பார்க்காமல் திரும்பி விட்டாள். தலைவலியால் வீட்டிற்கு கிளம்பிவிட்டதாக அவள் நண்பன் ஹரியை அழைத்துக் கூறினாள்.

என்னை தவிர்க்க தான் இந்த திடீர்  தலை வலி என்று ஷிவேந்தர்  சிரித்துக் கொண்டான் .

ரெண்டு வாரமாக  சிவாவுடன் பேசாமல் ஷிவானிக்கு மண்டையே வெடித்து விடும் போல இருந்தது . எதிலும் விருப்பம் இல்லாமல் இருந்தாள். தங்கம் விலை போல ஷிவானி  மனபாரம் கூடிக் கொண்டே சென்றது .. அவள் அப்படி இருந்தும் அவள் அன்னையோ , அப்பவோ  என்ன என்று கேட்கவில்லை ..கேட்கவில்லை என்பதை விட அவளை பார்க்கவில்லை .. கண்டுகொள்ளவில்லை என்று தான் சொல்லணும்  . அவள் நிலையைக் கண்டு வேலையாள் லச்சு தான் கோமதியிடம்  புலம்பினாள் ..

எப்படி பிரச்சினையை  தீர்க்க என்று குழம்பிய ஷிவானிக்கு, அவள் கப்போர்டை குடைந்த  போது  ஐடியா கிடைத்தது . துள்ளி  குதிக்காத  குறையாக சந்தோஷப்பட்டாள். அவள்  நினைத்ததை முடிப்பது என்பது  அத்தனை எளிதான காரியம் அல்ல…

இன்னும் பல மலைகள்   தாண்ட வேண்டும். இருந்தாலும் பல நாளாக  குகையில் மாட்டி வழி தெரியாமல் சிக்கி தவித்தவளுக்கு சின்ன வெளிச்சம் கிடைத்தால் ?

அந்த நூலை பிடித்தே சென்று ஷிவேந்தரை  அடைந்து  விடலாம் உறுதியாக நம்பினாள்.

ஊரில், மகள்   ரஞ்சனியை பார்த்து  திரும்பிய விசாலம், மருமகள் நித்யா, சரண்யா மூலம் ஷிவானியை பற்றி அறிந்து கொண்டார். மாமியாரும் அதே போல திருப்தியா சொல்லவே மகனிடம் “எப்ப ஷிவானியை அழைத்து வர போற ! நான் பார்க்கணும் . அக்கா  டெலிவரிக்குள் உன் கல்யாணத்தை முடித்திடலாம் பார்த்தேன் . உங்க அப்பாவும் அதே தான் சொன்னார் . நீ என்ன சொல்லற? என்ன சிவா? நான் சரி சொல்லியும் சந்தோசம் இல்லாமல் இருக்க ?”

சரண்யா, “இப்ப எல்லாம் முன்பு போல கலகலப்பாக பேசுவதே இல்லை , ஒழுங்கா சாப்பிடுவது  இல்லை அத்தை.. என்ன பிரச்சினை என்றாலும் பதில் இல்லை .”

“கிளினிக் வந்த கேஸ் பற்றி தான் யோசனை ! எப்படி சரி செய்ய ! என் வாழ்க்கையே இந்த கேசில்  தான் அடங்கி இருக்கு .. அது தான் அம்மா” என்று பாதி உண்மையும் பொய்யுமாக சொல்லி முடித்தான் 

இப்ப இருக்கும் நிலைமைக்கு ஷிவேந்தர் என்ன என்று சொல்லுவான் . அவனுக்கும், வனிக்கும் சண்டை  சொன்னால் என்ன, எது என்று விசாரிக்காமலே எல்லாத்துக்கும் முற்றுபுள்ளி வைக்கப்படும். இப்போதைக்கு தேவை இல்லாததை எதையும் சொல்லி இவர்களை  குழப்ப  வேண்டாம்,  இன்னும் ஒரு வாரத்தில் அழைத்து வருவதாக தெரிவித்தான் .

பிரச்சினை என்ன என்றே தெரியாமல் இன்னும் எத்தனை நாளைக்கு தான் குழம்ப ! ஷிவானியை நேற்று கல்லூரி வாசலில் பார்த்த போது மெலிந்து இருந்தாலே ! அவளும் ஒன்றும் சந்தோஷமாக இல்லையே ! எதையும் தெளிவா சொல்லாமல் இப்படி மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டால் ?

ஷிவானி போட்டு இருக்கும் திட்டம் நிறைவேறுமா? நிறைவேறாதா ? அவள் பெரிப்பா, சித்தப்பாவுடன் பேசி முடிவு செய்து அவள்  பாட்டி, தாத்தாவுடன் சென்னை திரும்பினாள் .

அவள் தாத்தா ரத்தினம் சொல்லும் ஆலோசனையை கண்ணன் துளி கூட காது கொடுத்து கேட்கவில்லை . நீயே இந்த ஆட்டம் போட்டால் நான் உங்க அப்பன் டா. என் ஆட்டத்தை கொஞ்சம் பொறுத்து இருந்து பாரு மகனே  என்று மனதில் சவால் விட்டார் .

கண்ணனுக்கு தெரியாமல் காயை நகர்த்தணும் . எனக்கு தெரிந்த ஆள் மூலம் காதும் காதுமாக முடிக்க பார்க்கலாம் என்று அவள் தாத்தா  அந்த வேளையில் முழு மூச்சாக இறங்கினார்.

ஷிவானியும் ஷிவேந்தரை ரொம்ப மிஸ் செய்தாள். சிவா என்ன செய்யறான்  என்று அழைக்க நினைத்தாலும் பேசாமல் அமைதியாக இருந்திடுவாள் . அவளுக்கு தெரியும். சிவா அவளை தினமும் பார்க்க வருகிறான் என்று  . இவளும் அது  தெரியாதது போல நடித்து  அவனுக்கு தரிசனம் கொடுத்து பார்த்துவிடுவாள் .

கண் முன்னே இருந்து பார்க்க முடியாமல் ,பேச முடியாமல் ? எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம் என்று அவள் மனம்   சலிப்பு தட்டியது  .

***********

பல நாள் கழித்து, ஷிவானி  பேஸ்புக் மூலம்  நிகில் , ஜீவா ,ஆதி பற்றி அறிந்து கொண்டாள். அந்த நேரத்தில்  இவர்களை கண்டு பிடித்த விஷயம் அவளுக்கு ஆறுதலாகவே  இருந்தது. அனைவரும் வெளிநாட்டில் நல்ல நிலைமையில்  இருப்பதாக  தெரிந்தது .

எப்படியோ பல நண்பர்களை தொடர்பு கொண்டு ஆதி எண்ணை கண்டு பிடித்தாள். உடனே அழைக்கவும் செய்தாள்.

ஆதி தான் போனை எடுத்தான் . எடுத்தவுடன் ஷிவானி படபட என்று பொரிய தொடங்கினாள். அவர்களுக்கு அவள் குரலைக்  கேட்டு ஆச்சரியம் , சந்தோசம் .பல நாள் கழித்து ஸ்பீக்கர் வழியாக  வனி குரலை  கேட்ட   ஜீவா கண்கள்  கலங்கி விட்டது .  ஜீவா சிரித்துக் கொண்டு அவள் கோபத்தை ரசித்தான் . அவனை தேடி அவளே வந்துவிட்டால் என்று சந்தோசம் கொண்டான். 

“ஷிவானி, நீ இன்னும் மாறவே இல்லை” என்று கலங்கிய  ஜீவா குரலை கேட்டு “ ஜீவா ! நீயா ? நீயும் பேசாத !என்னை எல்லாம் மறந்துட்டீங்க தான ?”

உன்னை மறக்க முடியுமா என்று ஜீவா உடனே சொல்லிவிட்டான் .

“அவள் எப்போதும் இப்படி தான் டா” என்று கிண்டல் செய்யும் நிகில் குரலை கேட்டவுடன் “அடே துரோகிகள் டா ! எல்லாரும் ஒன்றாக தான் இருக்கீங்களா ? எப்படி இப்படி சொல்லாமல் போனீங்க, நான் வேண்டாம் என்று தான??”  என்று  கோபத்தில் அழுகையை அடக்க முடியாமல் போனை வைத்துவிட்டாள்.

உடனே செல்  பேசி அலறியது .

எடுக்காமலே  அது அந்த ஜீவா, ஆதி ,நிகில் என்று தான் தெரியும் . விடாமல் அலறியதால் கோபமாக எடுத்து “ எதுக்கு  இப்போது அழைத்தாய்! மறுபடியும்  காதல் அது எது என்று பிதற்றி சொல்லாமல் கொள்ளாமல்  விட்டு போகவா ? இப்படி போவது தான் நட்பா ?

யாருக்குமே என்னை பிடிக்கவில்லை ! என் சிவாக்கு கூட நான் வேண்டாம்” என்று  கண்ணில் கண்ணீர் . “அவன் கூட எனக்கு அழைக்கவே இல்லை .. தினமும் தள்ளி நின்று பார்த்தால் போதுமா? நான் உரிமையாக  தோள் சாய என் இந்தர் தோள்கள் வேண்டும் ! என் கவலையை கேட்க  அவன் செவிகள் வேண்டும் !  எனக்கு ஆறுதல் சொல்ல அவன் வாய் வேண்டும், நான் சோர்ந்த வேளையில் என்னை தேற்ற அவனின்  அணைப்பு வேண்டும்” என்று எதிரில் இருப்பவனுக்கு வாய்ப்பு கொடுக்காமல் மன பாரத்தை கொட்டினாள் .

“எனக்கே எனக்கான அவன் குறும்பு புன்னகை வேண்டும். அவன் இல்லாமல் நான் இல்லை . அதற்கு நீங்க தான்…” என்று முடிக்க முடியாமல் மேலும் அழுதாள். கவலையை இறக்கி வைக்க நண்பர்கள் தோள் கிடைத்த ஆனந்தத்தில்   பல நாள் அவள் மனதில் அழுத்தி இருந்த பாரம் கண்ணீரால்  விலகியது .

சிவாக்கு, அழுகையில் ஷிவானி  முதலில் பொரிந்தது எதுவும் விளங்கவில்லை . அவன் இணை அவன் தோள் சாய  துடிக்குதே , மனதில் உள்ளதை சொல்லி அழ தேடுகிறதே, அவளுக்கே உரிமையானவன் என்று சண்டை போடுதே என்ற  சந்தோசம் ! அந்த பக்கம் ஷிவானி அழு குரலை கேட்ட சிவா கண்கள் கலங்கியது .

இருந்தாலும் அவனை சமாளித்து, “ ஹே போண்டா டி! என்ன வசனம் எல்லாம் பலமா  இருக்கு ! மூன்று நாள்  பார்க்கவில்லை  என்றால் இப்படியா? “

“சிவா……. “ என்று காத்து தான் வந்தது !

“என்ன சத்தத்தையே காணோம் மேடம்!”

“ மூன்று நாளா ? இன்றோடு மூன்று வாரம, உனக்கு எல்லாம் எவன் கணக்கு சொல்லி தந்தது” என்று  மூக்கை உறிஞ்சினாள்.

“எனக்கு  இந்த அழுமூஞ்சி  வேண்டாம் .நான் பேச மாட்டேன் !”

“நான் ஒன்றும் அழுமூஞ்சி இல்லை” என்று சண்டைக்கு சென்றாள்.  “ நீ என்னை பிரியாமா பார்த்துக் கொண்டால் நான் ஏன் அழ  போறேன் ! எல்லாம் உன்னால் தான்” என்று மீண்டும் கண்ணீர் . “உனக்கு தான் உன் மிது இருக்காளே ! அவளுடன்  வீடியோ சாட் செய்ய தான் உனக்கு நேரம் இருக்கும் ..என்னுடன் எல்லாம் எதுக்கு பேச போற” என்று நின்ற அழுகை தொடங்கியது.

“ உண்மை எது, விளையாட்டு எது என்று கூடவா என் செல்லத்துக்கு தெரியாது” . சிவா மிரட்டினவுடன் தான் அமைதியானாள். பல நாள் கழித்து சிவா குரலை கேட்ட சந்தோஷத்தில்  உற்சாகமாக “ போனை எடுத்தவுடன் என்ன சொன்னீங்க?”

“என்ன சொன்னேன் !”

அவள் கேட்ட தொனியை வைத்து சிரித்து “அதுவா …… போண்டாவும், டீயும் சாப்பிட்டேன்! இன்னமும் கொஞ்சம் போண்டா டி சாப்பிடு தேகி சண்டை” என்று மேலும் சீண்டினான் .

“ பொய் சொல்லாத டா !  நம்பிட்டேன் ! நான் எப்போதும் உங்கள் தோழி தான்” . தோழி என்னும் போது  அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை .

இது தான் சாக்கு என்று சிவாவும் சீண்டி விளையாடினான் .

“ என்னது, நீ எப்போதும் என் பெண்டாட்டியா? நான் போண்டா டி என்று தானே சொன்னேன் ! உனக்கு ஆசை இருந்தால்  நீ பெண்டாட்டியாகவே இருந்துக்கோ ! நாம கட்டிக்கலாமா ? இல்லை வேண்டாம்,  ஓடி போய்டலாம் சொல்லறியா ?அதுவும் சரி தான்” என்று கடுபேற்றினான்.

இருக்கும் நிலைமையில் ஓடி போய்டலாமா கேட்டால் உடனே சரி என்றிடுவாள் .

“சிவா, ஏன் என்னை அழைக்கவில்லை” என்று ஷிவானி சண்டை போட்டவுடன் ஷிவேந்தர், “அதையே நீ செய்து இருக்கலாம் தான! நீ சொல்வது போல நண்பனாக  பேசி இருக்கலாமே ” என்று மடக்கினவுடன் வாயை அழுந்த மூடிக் கொண்டாள்.

“சிவா நான் உங்களை பார்க்கணும் .பேசணும்” .

“ நான் முக்கியமான விஷயமா பிரான்ஸ்  செல்கிறேன் . வர ஒரு வாரம் ஆகும் . அதை சொல்ல தான் அழைத்தேன் . நீ தேட மாட்ட ! இருந்தாலும் போண்டா டீக்கு சொல்வது  என் கடமை ஆச்சே !”

“அளவா போண்டா டி சாப்பிடுங்க ! அரை மணி நேரமா சாப்பிடக் கொண்டே இருக்கிறீர்கள் போல!  நாளைக்கு பிளைட்டில் போகணுமே ! ஒத்துக்காமல்  போக போகுது” என்றவுடன் சிவா , “புருஷன் மீது ரொம்ப தான் அக்கறை” என்று முனங்கியது தெளிவா கேட்டாலும்

“சீக்கிரம் வாங்க..” என்று கொஞ்ச நேரம் பேசி மனமே இல்லாமல் வைத்தாள்.

பல நாள் கழித்து அவள் பிரச்சினை அத்தனையும் தீர்ந்து இயல்பா மூச்சு விடுவது போல எண்ணம் .

வைத்தவுடன் ஜீவா எண்ணைக் கண்டு “ நான் உங்களோட எல்லாம் பேச போறது இல்லை!  நானா தான் உங்களை கண்டு பிடித்தேன். நீங்க எல்லாம் எங்க இருக்கீங்க என்று தெரியாமல்  எத்தனை கஷ்ட பட்டேன் தெரியுமா ? நான் இங்கயே தான இருக்கேன் !”

ஷிவானி கொஞ்சம் மூச்சு விடும் நேரத்தில் மூவரும்  சமாதானமாக வெள்ளை கொடியை பறக்க விட்டனர் . அதற்கு  பிறகு ஆதி ,நிகில் ,ஜீவா  யாரவது ஒருத்தர் மாறி மாறி பேசிக் கொண்டே இருந்தனர் .

தொலைந்த ஷிவானி உற்சாகம் மீண்டும் திரும்பியது .

ஜீவாவை எந்நேரமும் ஷிவானியுடன்  பேச சொன்னாலும், சலிக்காமல்   பேசிக் கொண்டே இருப்பான் என்று ஆதி ,நிகில் கிண்டலை கண்டு கொள்ளாமல்  வனியிடம் பேசினான் .

அவர்கள் நிலைமையை வைத்து அவர்களிடமே உதவி கேட்கலாம் முடிவு செய்தாள்.

ஷிவானியிடம்  பேசியதில் இருந்து அவளை காண ஜீவா உடலும் உள்ளமும் பரபரத்தது.  உடனடியாக அவளை பார்க்க  சென்னை கிளம்பினான். இப்போது அவன் அமெரிக்காவில் இருக்கும் பெரிய கார் கம்பனியில் மிக உயர் பதவியில் இருக்கிறான். இள வயதிலே இந்த பதவி என்பது பெரிய விஷயம் … எப்படியும் ஜீவா  அந்த வாரத்தில் வேலை விஷயமாக  சென்னை கிளம்புவதாக இருந்தது.

இதற்கு நடுவிலே அவள் பாட்டி , தாத்தா  உதவியுடன் பல வேலைகளை செய்தாள். இத்தனை ரிஸ்க் தேவையா என்ற பாட்டியிடம் “என் சிவாவை  கல்யாணம் செய்ய என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்” என்று பெருமையாக பேசினாள்.

இதையே  இன்னும் கொஞ்ச நாள் கழித்து சொல்லுவியா என்று பார்க்கலாம் .

Advertisement