Advertisement

காதல் துளிர் 9:

ஒரு முறை  ஷிவானி கல்லூரி  முடிந்து வரும்  நேரத்தை கணக்கிட்டு ஷிவேந்தர் கல்லூரி வாசலில் அவளுக்காக காத்துக் கொண்டு இருந்தான் .ஷிவானியை கண்டவுடன் ஹெல்மெட் போட்டு எப்போதும் போல அவளிடம் வம்பு செய்ய சென்றான் .

ஷிவேந்தரை அறிந்து கொண்ட ஷிவானி சிரித்த படி  அவன் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு  “போகலாமா ?” கீழ்பாக்கத்தில் உள்ளே சிறந்த ஐஸ் கிரீம் பார்லர் பெயரை  சொல்லி அங்க போகலாம், என்று அவள்  பையால் முதுகில் அடித்தாள்.

அதிர்ச்சியில் ஷிவேந்தருக்கு பேச்சே எழவில்லை.

ஆஹா,  என்னை கண்டு கொண்டாளா ? எப்படி தெரிந்தது .. ஒரு நாளைக்கு  குறைந்தது பத்து முறையாவது பேசறோம். ஒரு தடவை கூட  கண்டு பிடித்ததா  சொன்னது இல்லையே.. இப்ப தான் தெரிந்து இருக்குமோ என்று ஷிவேந்தர் மண்டை பிய்த்துக் கொண்டான்.

ஷிவேந்தர் ஹெல்மெட் கண்ணாடியை தூக்கி அவளிடம் விளையாட்டாக “கீழ இறங்கு ! என் கேர்ள் ப்ரெண்ட் நம்மளை பார்த்தால் தப்பா நினைக்க போறா ! இப்ப தான் கொஞ்ச நாளா சண்டை போடாமல் ஒழுங்கா பேசறா !”

“போங்க சிவா, தாகமா இருக்கு, அப்புறம் உங்க விளையாட்டை தொடரலாம்” என்று அவன் மீது சாயிந்தவுடன் சிவா வேகமெடுத்து பறந்தான் .

வண்டியில் இருந்து இறங்கியவுடன்  அவள் கைகளை  பிடித்து  தடுத்து, வனி, நான் தான் சிவா எப்படி தெரிந்தது . என்னிடம் சொல்லவே இல்லை என்று அதிர்ச்சி குறையாமல் கேட்டவுடன் பெருமையாக “உங்களை தெரியாதா? நான் தான் என் பர்த்டே அன்றே  உங்களை கண்டு கொண்டேனே” .

அவள் வரைந்த ஓவியத்தை செல் போனில் பார்த்து அதிர்ச்சி அடைந்தான் .

“ஹே சொல்லவே இல்லை.. எப்படி பார்த்தவுடன் இப்படி வரைந்து இருக்க . பார்த்தாயா? என் கண்களில் ஏதோ சக்தி இருக்கு.”

அவள் வரைந்த படத்த பார்க்க அவனுக்கு ஆச்சரியம் . இவள் மனதில் இத்தனை ஆழமா பதிந்து இருக்கேனா ?

“ஷிவானி, நான் உன்னிடம் தெளிவா ஒன்றை சொல்ல ஆசை படறேன்”

“முதலில் ஐஸ்க்ரீம் அப்புறம்  தான் எல்லாம் .. …”

அவளுக்கு வேண்டிய நாலு ஐஸ்கிரீம் வாங்கி தந்து ஷிவேந்தர் நேரடியாக “வனி , நான் அன்று சொன்னது , உன்னிடம் கேட்டது உண்மை தான் .”

“எது இந்தர்….”

ஷிவேந்தர் சுவாரசியமாக “ என்ன சொன்ன ?”

“இந்தர் சொன்னேன். காது கேட்கவில்லையா ? இல்லை பெயர் பிடிக்கவில்லையா ?”

அவன் மகிழ்ச்சியாக “அப்படியே கூப்பிடு. நல்லா  இருக்கு ,ஸ்பெஷலாகவும் இருக்கு .”

ஷிவானி கைகளை பிடித்து, கண்களை பார்த்த படி “ஷிவானி, உனக்கு எப்படியோ? நான் சொல்வது அத்தனையும் உண்மை . நான் உன்னை லவ் செய்யறேன். என்றாவது  நேரில் சொல்லி தான ஆகணும். அது தான் இன்று  ஒரு முடிவில் உன்னை பார்க்க வந்தேன் . நீ என்ன என்றால் எனக்கு முன்பே அதிர்ச்சி வைத்தியம் தர !”

அவள் கண்களை பார்த்து , “ முதலிலே சொல்லிட்டேன். அப்போது உனக்கு நான் யார் என்று தெரியாது . இப்போது கேட்கிறேன் ..சம்மதமா?  உன்னை முதல் முதலா பார்த்த போதே என் மனதில் அழுந்த  பதிந்து விட்டாய் .இது சத்தியம். உன் பிறந்த நாள் அன்று  will u be my best???  partner, sweet heart  என்று   தான் கேட்க நினைத்தேன். உன் கோபத்தை கண்டு நண்பனா நினைத்துக்கொள் என்று விட்டேன் .ஆனா நான் உன்னை எப்போதும் காதலியா ,மனைவியா  தான் நினைக்கிறேன்.”

ஷிவானி நான் நினைத்ததையே சொல்லறான் ! எப்படி?

“ நான் உன்னை பார்த்த  நொடியில் இருந்து காதலிக்கிறேன் . சினிமா வசனம்  நினைக்காத ? என்  நெஞ்சில்  அழுந்த பதிந்தவள் நீ மட்டும்  தான் . நாம ரெண்டு பேரும் கல்யாணம் செய்து கொள்ளலாமா?  உன்னை கண் கலங்காம பார்த்துக் கொள்வேன் வனி . நீயும் என்னை கண்கலங்காம பார்த்துக் கொள்வாயா?”  என்று ஷிவேந்தர்  கேட்டவுடன் ஷிவானி சிரித்துவிட்டாள் .

இவன் சொன்னவுடனே திருப்பி சொல்லனுமா ?சரியான எமகாதகன் ..

அவள் பதில் சொல்லாததை கண்டு “நம்ம பெயர் பொருத்தமே எடுத்துக்கோ !”

அதை எண்ணி ஷிவானியும் பல முறை வியந்து இருக்கிறாள்.

அப்பவே  ஷிவானிக்கு  அவள் காதலை சொல்லணும் உள்ளம் பரபரத்தாலும்  ஏனோ  தயக்கம் .

ஷிவானி தயக்கமாக “சிவா, திடீர் என்று இப்படி கேட்டால்? எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை”.

“யோசித்து சொல்லு ! ஆனா எனக்கு எஸ் என்ற பதில் மட்டும் தான் வேண்டும் !”

அவனை முறைத்து  “சிவா, இப்ப  எப்படி இருக்கிறோமே அப்படியே நண்பர்களா இருப்போம் …”

“எனக்கு இந்த பதில் வேண்டாம் வனி. எனக்காக, ப்ளீஸ் சரி சொல்லு” என்று கெஞ்சினான் .

“என் ஐஸ் கிரீம் எல்லாம் உருகிவிட்டது . எனக்கு வேற ஐஸ் க்ரீம் வாங்கி கொடு”  என்ற போது ஷிவேந்தர் அவள் தலையில் வலிக்காமல் குட்டி, “எத்தனை சீரியசா பேசிக் கொண்டு இருக்கேன் ஐஸ்க்ரீமா வேண்டும் ..கஷ்டம் டா உன் நிலைமை” என்று புலம்பி அவளுக்கு வேண்டும் என்கிறதை வாங்கி கொடுத்தான் .

அவனிடம் தெளிவாக “சிவா, என்ன முடிவா இருந்தாலும் நானே சொல்லும் வரை பொறுமையா இருக்கணும்” .

“ஹே, நீ அதுக்கு என்று ரெண்டு வருஷம் எல்லாம் எடுத்துக் கொண்டால் தங்காது தாயே ! ப்ளீஸ் வனி.  இன்றைக்கு……”

அவள் முறைப்பதை பார்த்து “நாளைக்கு .. அதுவும் வேண்டாமா ? ஒரு ரெண்டு நாள். அதற்குள் சொல்லு …சின்ன பையனை ஏமாத்திடாத கண்ணம்மா!  சின்ன இதயம் தாங்காது .”

வனி சிரித்தபடி “உனக்கு லவ் இருந்தா வெயிட் செய் ! இல்லை என்றால் போ!” ஷிவானி காதலை சொல்லவில்லை தவிர அவள் மனம் முழுதும் ஷிவேந்தார் தான் நிறைந்து இருந்தான்.

ஷிவானி எதிர்பார்த்தது போல  அடுத்த  நாளும்   சிவா எதேர்ச்சியாக சந்திப்பது போல ஷிவானியை சந்தித்தான் . குஷி அடைந்த ஷிவானி “காபி சாப்பிடனும் நினைத்தேன் ! சரியா வந்தாச்சு.. எப்படி   இந்தர் ..சான்ஸ்  இல்லை ..”

ஷிவேந்தர் லவ் சொல்லுவா பார்த்தால் கூலா காபி குடிக்கணும் சொல்லற என்று முனங்கியதை கேட்டு  “எனக்கு  கூலா காபி பிடிக்காது  இந்தர் . சூடா  வேண்டும்” என்று மேலும் வெறுப்பேற்றினாள்

நேற்று  ஷிவானி சாப்பிட்ட ஐஸ்க்ரீம் கணக்கு வைத்து இன்னும் ஒரு  வாரத்துக்கு ஐஸ்க்ரீம்   சாப்பிட கூடாது கண்டிஷன் போட்டான் . அதனால் தான் வேண்டும் என்றே காபி கூறினாள்.

“பங்குனி மாத வெயில் பல்லை காட்டுது , இந்த வெயலில் காபியா ..அதுவும் சூடா ? காபி கிடையாது ஷிவானி. வேண்டும் என்றால் ஐஸ்க்ரீம் இல்லை ஜூஸ் குடிக்கலாம் ..”

ஷிவேந்தர்  மனதில், என் ப்ளான்  சொதப்ப கூடாது வேண்டி “நேற்று போன கடைக்கே போகலாமா ? அங்க ஜூஸ் இருக்கும்”

செல் போனில் கண்ணை பதித்த படியே ஷிவானி, “ம்ம்ம்ம்… அங்கேயே போகலாம்” குஷியானாள் .

கடையில், ஷிவானி கண்கள் ஐஸ்க்ரீம் பக்கம் சென்றதை பார்த்து , “கண்டிப்பா ஐஸ்க்ரீம் கிடையாது.  ஜூஸ் குடி” என்று மில்க்ஷேக் ஆர்டர் செய்தான் .

மில்க்ஷேக் குடித்துக் கொண்டு இருக்கும் போது எதிரே இருக்கும் கடையில் அவளுக்கு பிடித்த பஞ்சு மிட்டாய் வேண்டும் கேட்டு அடம் பிடித்தாள்.

“ரொம்ப குறும்பு செய்யற ஷிவானி குட்டி” என்று அவள் தலையை கலைத்து வெளியேறினான் . ஷிவேந்தர் வெளியே சென்ற  நேரத்தில் அவள்  ஏற்கனவே ஆர்டர் செய்த கேக் மற்றும் பொக்கே  அவளிடம்   கொடுத்துவிட்டு சென்றார்கள். அழகிய  டார்க் சாகலேட் கேக் மீது “ I LOVE YOU?  WILL U BE MY BETTER HALF?”  என்ற எழுத்துக்கள் எழுதி இருந்தது . கொஞ்சம் நேரம் ஆகியும் ஷிவேந்தரை காணவில்லை. ஒரு பஞ்சு மிட்டாய் வாங்க இத்தனை நேரமா ?

ஷிவேந்தர் அவளுக்கு அழைத்து, எதிரே இருக்கும் கடைக்கு வர சொன்னான் .

இதை எல்லாம் தூக்கிக் கொண்டு எப்படி  போக முழித்து “நீங்க வாங்க இந்தர்!”

“இல்லை, நீ வா” என்று வைத்து விட்டான் . எதிரே இருந்த பொம்மை  கடைக்குள் நுழைந்து  ஷிவேந்தரை தேடினாள். அவன் அழைத்து “மேலே வா ஷிவானி !ப்ளீஸ் எனக்காக !”

உன்னை என்ன செய்யறேன் பாரு டா எருமை திட்டி, கையில் தூக்க முடியாமல் கேக் டப்பா , பொக்கே   எல்லாத்தையும் தூக்கிக்   கொண்டு கோபமாக மாடி ஏறினாள். குளிரூட்டப்பட்ட அறை கதவை திறந்தவுடன் எதிரே ஒரு பெரிய சிகப்பு வண்ண சுவற்றில் ரோஜா குவியல் நடுவில் “will u marry me” என்று எழுதி இருந்தது .

அங்கே ஷிவேந்தர்  பெரிய கரடி பொம்மையுடன் முட்டி போட்டு

“I LOVE YOU SO MUCH  செல்லம் .WILL U MARRY ME”  என்று காதலுடன் கேட்டான் .

அவன் செயலை கண்டு ஷிவானி  அதிசயித்து, பேச்சற்று  நின்றுவிட்டாள்.

அவள் கோபம் அனைத்தும் காணாமல் போனது .

அவள் கையில் இருக்கும் ரோஸ், பொக்கே   நீட்டி அவனை போலவே

“Will u marry me ,  will u be mine forever” .. என்று காதலுடன் கேட்டவுடன்   அவளை தூக்கி சுற்றினான் .

“சிவா, தலை சுத்துது!” சந்தோஷத்தில்   அவளை இறுக்கி  அணைத்து , அழுந்த முத்தம் பதித்து தான் விடுவித்தான் .

கேக் பார்த்து, “கியுட்  செல்லம்”  கொஞ்சி, அவள் கன்னம் ,மூக்கு என்று பூசி  விட்டான். அவள் கையால் வரைந்த கார்டில் அவள் கேட்ட கேள்வியே இருந்தது .. “கேள்வியே வேண்டாம் ! இந்த ஷிவேந்தர் உனக்கே உனக்கு தான் செல்ல கட்டி….”

அப்போது தான் ஷிவேந்தர் சட்டையை பார்த்தாள்.  அதிலும் will u marry me  என்ற எழுத்துக்கள் .. பிளான் செய்து தான் வந்து இருக்கான் திருடன் கொஞ்சிக் கொண்டாள்.   ரெண்டு பேரும்  சர்ப்ரைஸ் கொடுக்கணும் ஒரே போல் எண்ணி இருக்கோமே என்று வியந்தாள்..

சிவா தோளில் உரிமையாக சாயிந்து கொண்டு , “இன்று  நான் வரவில்லை என்றால் உங்க ப்ளான் அத்தனையும் சொதப்பி இருக்குமே?  அப்ப  என்ன செய்து   இருப்பீங்க சார் ” .

“இந்த  இடம் என்  நண்பன் கடை தான் . நேற்றே  எல்லா ஏற்பாடும்   செய்தாச்சு . இன்றைக்கு  நீ  வரல சொல்லி இருந்தா உன்  கை, காலை கட்டியாவது  கடத்திக் கொண்டு  வந்து இருப்பேன்” .

“கடத்துவீங்க,  ஏன் கடத்தாமல்  போறீங்க?”

“அதுக்கு இடம் கொடுக்காமல் நான் கேட்காமலே மேடமே  ஐஸ்க்ரீம் சாப்பிடனும் அழைத்து வந்து விட்டீர்களே” என்று அவள்  கை விரல்களில் முத்தம் பதித்தான்.    

“ ரொமாண்டிகா  சொன்னால் ஒத்துக் கொள்வாயோ  என்று  எப்படி எல்லாம் மண்டை உடைத்துக் கொண்டு பிளான் போட்டேன் தெரியுமா?  இங்க பார்த்தால் என் செல்ல கட்டி எனக்கு மேல சர்ப்ரைஸ் கொடுத்துடீங்க ! தங்க யு சோ மச் வனி ! உனக்கு  என்னை பிடிக்கும் தெரியும் இருந்தாலும் மனதில் சின்ன பயம் இருந்து கொண்டே தான் இருந்தது .

பல நாள் தூக்கம் இல்லாமல் தவித்து இருக்கேன் தெரியுமா” என்று அவன் காதலை விளக்கும் போது அவன் அன்பில் கரைந்தாள். அவள் கைகளை அவன் கன்னத்தில் பதித்துக் கொண்டான். அவன் ஸ்பரிசம், கன்னத்தின் சொரசொரப்பு  அவளுக்கு குறுகுறுப்பை கொடுத்தது .

கைகளை     இழுத்துக்  கொண்டு “திருடா ,சும்மா இரு  டா”   என்று அவன் தலையை கலைத்து விளையாடினாள் .

ஷிவானிக்கு, ஷிவேந்தர் அவள் வாழ்வில் வந்ததில் இருந்து அவள் வாழ்வே  ஒளிமயமாக மாறியது போல இருந்தது .

Advertisement