Advertisement

காதல் துளிர் 10.1:

ஒரு   நாள்   ஐஸ் கிரீம் பார்லரில்  எப்போதும் போல நாலாவது ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி “சிவா, நாளைக்கு உனக்கு எதாவது வேலை இருக்கு ?”

“ஏன் செல்லம் நாளைக்கும் உனக்கு ஐஸ் கிரீம் வாங்கி தரணுமா ? இதுக்கு என்றே  நான் தனியா  சம்பாதிக்கணும் போல ”

அவளே ” கிண்டல் வேண்டாம் . வேலை இல்லை தான ” என்று முடித்தவுடன்  “என்ன வெட்டி பையன் நினைத்தீர்களா வனி குட்டி ! ஐயா செம பிசி .அதுவும் நாளைக்கு!”

அவனிடம்  பழிப்பு காட்டி “உங்க பிசி பற்றி தெரியாது, ஒன்னு சீமாவுடன் பேசுவ ,இல்லை கடையில் உட்கார்ந்து கடலை போடுவ” .

“அடிப்பாவி, என்னை பற்றி என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்க….. எனக்கு  என்று  தொழில் இருக்கு கண்ணம்மா. பர்னிச்சர் கடை தாத்தா ,சித்தப்பாவுடையது.  விசேஷ நாட்களில் அவர்களுக்கு போய் உதவி செய்வேன் . சின்ன வயதில் இருந்தே அப்படி செய்வது பழக்கம் . கூட்டம் அதிகம் போது வேலை செய்தால் ரெண்டு மடங்கு பாக்கெட் மணி கிடைக்கும் .வேலையை முடித்து உடனே சினிமா கிளம்பிடுவேன் .

இதே போல அண்ணா நரேன் ஆரம்பித்த தொழில் தான் ஹோட்டல் பிசினஸ் .அவனுக்கு எப்ப எல்லாம் உதவி தேவையோ அப்போது அங்கே செல்வேன் . சின்ன அண்ணா சுரேன் கட்டுமான தொழில் செய்யறாரு” .

ஷிவானி கை கட்டி, “எப்போது எல்லாம் அவருக்கு உதவி  வேண்டுமோ அப்போது எல்லாம் மேஸ்திரி ,சித்தாள் வேலை செய்வீங்க சரி தான” …

“ஹே, என்னை என்ன  சித்தாள்  ரேஞ்சுக்கு ஆக்கிட்ட.” தலையில் துண்டு, லுங்கி கட்டிக் கொண்டு சிமெண்ட் ,செங்கலுடன்  கற்பனை செய்து சிரித்துவிட்டான் ..

ஷிவானியும் அந்த காட்சியை எண்ணி சிரிக்க தொடங்கினாள்.

அவள் சிரிப்பதை ரசித்து “இருந்தாலும் ஓவர் லொள்ளு சொல்லிட்டேன். ஆனா வனி,  அப்போதும் என் அருகில் என்னை முறைத்துக் கொண்டு  சிமெண்ட் பாண்டு தட்டுடன்  நீ தான் நிற்கிற,  சூப்பரா  இருக்குல”  என்று கண்சிமிட்டினான்.

“ஆசை தான் …..  போடா !”

“என்னது டாவா.”

“அப்படி தான் டா , என்ன செய்வ டா……….” என்று ஒரு பத்து டா போட்டு தான் நிறுத்தினாள்.

டா போடும் வாயை  சிறை  செய்தால் தான் என்ன ? என்று அவன்  மனம் போகும் போக்கை அறிந்து  தலை  உலுக்கிக் கொண்டான் .

“எனக்கு என்று பிடித்த தொழில் இருக்கு வனி  குட்டி. அது என்ன தெரியுமா” என்று கண்களில் கனவோடு ஆர்வமாக கேட்டான் .

“சைட் அடிக்கும் தொழில் தானா .. அதை தான் சரியா செய்யறீங்களே  சிவா சார் .. என்னுடைய கல்டுரல்ஸ் ப்ரோக்ராம் வந்து ஆளை விழுங்குவது போல பார்த்துக் கொண்டு இருந்தீங்களே !”

“வனி, உனக்கு எப்படி …” என்று திக்கினான்.

“சிவா , நான் முதல் முதலில் உங்க கண்ணை எப்போது வரைந்தேன் தெரியுமா ? கல்டுரல்சில் அந்த பாட்டு  பாடும் போது என் கண்ணுக்குள்  உங்க கண்  மட்டும் தான் தோன்றியது . இது உண்மை சிவா .. அன்று என்னை இம்சை செய்த கண்களை உடனே வரைந்தேன். அதை பார்க்கும் போது எல்லாம்  எனக்குள்  பரவசம் தோன்றுவதை தடுக்க  முடியவில்லை”

“ஆஹா, மேடம் மனதில் அப்பவே புகுந்து விட்டேனா ? சரி, நான் வந்தது எப்படி தெரியும் . நீ என்னை பார்த்தாயா?”

அப்பவே என்னை கண்டு கொண்டாளா ?……அவள் செல் போனில் ஒரு படத்தை காட்டினாள்.

“என் தோழி அவள் தோழிகளுடன் எடுத்த செல்பியில் உங்க முகம்  தெளிவா பதிவாகி இருக்கு. எதேர்ச்சியாக, அதை இன்று பார்த்தேன்.  என்ன பார்வை, பெரிய காதல் மன்னன் நினைப்பு” என்று அவனை அசடு வழிய வைத்தாள்.

“ இருக்கும் வேலை எல்லாம் விட்டு, உன்னை பார்க்கவே வந்தேன்” என்றவுடன் சந்தோஷ வானில் பறந்தாள்.

 “சிவா, எல்லாருக்கும் உதவுவது போல எனக்கும் உதவி செய்யணும் ப்ளீஸ் சிவா !”

“ஏற்கனவே உன் புண்ணியத்தால் ரெண்டு ஐஸ் . இதில் நீ வேற ஐஸ் வைத்தால்?”

“அம்மா ஊரில் இல்லை . சுவாதி ,இல்லை தனிஷா வீட்டிற்கு  போகலாம் பார்த்தால் ரொம்ப தூரம். போய்ட்டு  வரவே நேரம் ஆகிவிடும். அண்ணா அவன் பெண்டாட்டி கூட வெளியே போறானாம் . அதனால புருஷா..”

சொன்ன பிறகு நாக்கை கடித்துக் கொண்டாள். அவள் குறும்பை  ரசித்து, “ஆஹா ஜில்லு, என்ன சொன்னீங்க புருஷா….. அசத்தற டீ செல்ல குட்டி” அவளை மார்கமாக பார்த்து விஷமமாக சிரித்து , “பெண்டாட்டி கேட்டு புருஷன் முடியாது சொல்ல முடியுமா ?”

“கிண்டல் வேண்டாம் டா ! ப்ளீஸ் ப்ளீஸ் டா…..”

‘டா’ என்னும் போது முறைத்த சிவாவை மிரட்டி

“ப்ளீஸ், சரி சொல்லு சிவா?  இல்லை என் நண்பன் இன்பாவை வர சொல்லறேன் ?”

“ஹரியை  வர சொல்லறேன் சொன்னால் கூட தேவல? அந்த இன்பாவை  எதுக்கு டீ வர சொல்லற ? உன்னை பார்த்தே கரைத்திடுவான்.  வழிசல் மன்னன் . அவனிடம் கொஞ்சம் விலகி நில்லு சொன்னா அவனையே அழைக்கிறேன் சொல்லற ?உன்னை” என்று காதை பிடித்து திருகினான் .

“வலிக்குது சிவா ! ப்ளீஸ் ! நான் என்ன செய்ய? அம்மா ஊரில் இல்லை . எங்க அப்பாவிடம் இந்த மாதிரி எல்லாம் போய்  கேட்கவே முடியாது” என்று கண்ணில் கண்ணீரோடு பேசுவதை கண்டு அவன் உள்ளம் அவளுக்காக உருகியது .

யாரும்  இல்லாமல் தனித்து நிற்கும் குழந்தை போல தோன்றினாள். உனக்கு எப்போதும் நான் இருக்கேன் செல்லம் என்று மனதில் கொஞ்சி  “செல்லம், இதுக்கு எதுக்கு அழுகை. வா டா என்றால் வந்திட்டு போறேன்” என்று சமாதன கொடி பறக்கவிட்டான்  .

“சரி ,நாளைக்கு எங்க போறீங்க ! உங்களுக்கு எந்த ஏரியாவிற்கு  டிரைவர் வேலை பார்க்கணும்.  நான் வரணும்  என்றால்  நான் கேட்பதை கொடுக்கணும்  .உன்னால் முடியும் என்றால் சொல்லு  .இல்லை , என் வேலையை பார்த்துக் கொண்டு போறேன்” .        ..

இவன்  எதோ  வில்லங்கமா  கேட்பானோ ! என்னத்த   கேட்க போறான் பார்த்துக்கலாம் சரி என்றாள்.

“வாக்கு மாற கூடாது  பெண்டாட்டி” ஷிவானி தலையை எல்லா பக்கமும் உருட்டினாள் .

“நாளைக்கு எங்க கல்லூரியில் எனக்கு சின்ன விருது கொடுக்கறாங்க  . டிஸ்டிங்கஷன் மாணவர்களுக்கு  சிறப்பு பரிசு தராங்க” ..

“ சீ ! சீ! அதுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம் பெண்டாட்டி. . அறிவாளிகளுக்கு தான கொடுக்க போறாங்க .. சீர் லீடர் போல  கை தட்ட அழைத்தார்களா ? இருக்கும் இருக்கும் …அப்படி தானா ..”

சிவா பெண்டாட்டி என்று உரிமையா கூப்பிடுவது  அவளுக்கு பிடித்து  இருந்தது.

கண்களை சுருக்கி “உன்னிடம் சொல்ல வந்தேன் பாரு என்னை சொல்லணும் ..நல்லா கேட்டுக்கோ..”  பெருமையாக “இந்த ஐந்து வருடத்தில் தொடர்ந்து  டிஸ்டிங்ஷன்  வாங்கும் ஒரே ஆள் நான் மட்டும் தான் .. உனக்கு எங்க தெரிய  போகுது . அது மருத்துவம் படிப்பவர்களுக்கு தான் தெரியும்” .

ஷிவேந்தர்   கிண்டலாக   “ பேரை மாற்றி சொல்லி இருக்க போறாங்க ..எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கே வனி ! நீ சரியா தான் கேட்டாயா கண்ணம்மா .. உன் பெயரில் வேறயாராவது  இருக்காங்களா? ”

“போடா , உன்னிடம் சொல்ல  வந்தேன்  பாரு என்னை சொல்லணும்”  என்று  குழந்தை போல முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தாள்..

அவளையே இமைக்காமல் பார்க்கும் சிவாவிடம் “அப்படி பார்க்காத திருடா” என்று வெட்கப்பட்டு  அவன் தோளில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

அவன் சட்டை பட்டனை திருகி “சிவா, சிவா , எனக்கு  சாரி  கட்டிகிட்டு தனியா போக கம்போர்டபில் இருக்காது. அது தான்” .

“ நீ செல்லும் வழி எல்லாம் புதையல் எடுக்க போறேன் சொல்லு . பார்த்து டீ பல்லு எல்லாம் பேந்துக்க போகுது . அப்புறம் நான் தான் கஷ்டபடனும்! உனக்கு புடவை கட்ட தெரியுமா செல்லம் …”

“இல்லை, பார்லர் போகணும் ..அங்கேயும் நீ தான் கூட்டிகிட்டு போகணும் .ப்ளீஸ் சிவா !”

“வனி ஒன்று சொல்றேன். எங்க வீட்டில் ரெண்டு அன்னிஸ் இருக்காங்க . அவங்களையே உனக்கு புடவை கட்டி விட சொல்லறேன். நீ எங்க வீட்டுக்கு வந்து விடு . அன்னிஸ் பார்த்துப்பாங்க …. என்ன ஓகே வா?”

“உங்க வீட்டுக்கா?” அதிர்ந்தாள்..

“ஏன் மா நாங்க காட்டில் வசிப்பது போல் எபக்ட் கொடுக்கிற ? எங்க அம்மா ,பாட்டி , அன்னிஸ்  இருப்பாங்க.  நான் உன்னை விட்டு ஒரு மணி நேரம் என் வேலையை முடித்து வந்து கல்லூரிக்கு கூட்டிக்கிட்டு போறேன்” .

அவன் வீட்டில் எல்லாரும் எப்படி இருப்பாங்களோ, பழகுவாங்களோ என்ற தயக்கத்திலே  எங்க போற  என்று கேட்காமல் விட்டாள். அப்படி கேட்டு இருந்தால் அவளுக்கும் அவனை பற்றி முழுதாக தெரிந்து இருக்கும் .

“உங்க வீட்டில் யார் எல்லாம் இருக்காங்க?”

“என் வீட்டில் எங்க தாத்தா, அன்பான  பாட்டி வைதேகி. அவங்க பேச்சாலே அனைவரையும் கட்டி போட்டிடுவாங்க .பெரிய அண்ணா அவனுக்கு பிடித்த   ஹோட்டல்  மானேஜ்மென்ட்  படித்து சிடியில் போர் ஸ்டார் ஹோட்டலை தொடங்கி உள்ளான் . இப்போது நன்றாக போய்க் கொண்டு இருக்கிறது . உனக்கு தான் அந்த ஹோட்டலை பற்றி தெரியுமே ! இந்தமுறை வளரும் இளம்  தொழில் அதிபர் விருதை அவன் தான் பெற்றான் .மேலும் ஒரு கிளை தொடங்க உள்ளான்” .

ஷிவானி ஆச்சிரியமாக “உங்க அப்பா உங்க அண்ணாவை ஒன்றும் சொன்னதில்லையா?”

இல்லையே ஏன் !

“எங்க அப்பாக்கு மருத்துவ தொழில் மட்டும் தான் தொழில் நினைப்பு .எங்க அண்ணனும் அப்படி தான். இவர்களுடன் சேர்த்து என்னையும் கட்டாயபடுத்தி படிக்க வைத்தார் . ஏன் ,எதுக்கு கேட்காத ?அப்புறமா பொறுமையா சொல்லறேன் . அவராலே எனக்கு இந்த தொழில் மேல் வெறுப்பு , பிடிக்காமல்  போனது.

அப்பா போல அண்ணனும். அவனுக்கு மனைவி டாக்டர் வரணும் என்று நகரில் சிறந்த பல் மருத்துவரான விமல்ராஜ் பெண் தாராவை   திருமணம் செய்து கொண்டான். அப்பா நினைத்ததே முடிக்கணும். இப்ப , அதே போல  எனக்கும்  டாக்டர் மாப்பிள்ளை பார்த்து இருக்கிறார்” .

சிவா, மாப்பிளையா அதிர்ந்தாலும், அப்படி இருக்காது. ராட்ஷசி பொய் பேசறா என்று அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் தீவிரமா பேசுவதை பார்த்து

“என்ன டீ சொல்லற ?”

“ஆமாம்  ஷிவ்! அப்பா நண்பன் மகன் தேவா  ஒரு குரங்கு! அவனும் மருத்துவன் தான். ஆனா நான் உறுதியா இருக்கேன். நான் கண்டிப்பா மருத்துவரை கல்யாணம் செய்து கொள்ளவே மாட்டேன். அதுவும் எங்க அப்பா பார்க்கும் மாப்பிளையை” என்றவுடன் தான் மூச்சு விட்டான் ..

இவ அப்பா பார்க்கும்  மாப்பிளை    வேண்டாம்   ஓகே! ஆனா மருத்துவன். ஷிவேந்தருக்கு அட கஷ்ட காலமே என்று இருந்தது . அதை எண்ணி அவனுக்கு  கலக்கம் பிறந்தது.  இப்படி ஒரு வெறுப்பா ? நான் நினைத்தது போல என் கல்யாணம் அத்தனை எளிதாக முடியாது நினைக்கிறேன் . நல்ல வேலை நான் யார் என்று உளறி வைக்கவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் .

அப்போது பார்த்து அங்கு வந்த ஹரி , “என்ன வனி உன் முகம் இத்தனை சந்தோஷமாக இருக்கு! நம்ம மேடி  சாரிடம்  எல்லா உண்மையும் சொல்லியாச்சா …”

 “போடா நான் பார்த்துக்கிறேன், எல்லாம் சொல்லியாச்சு”  என்று அழகாக வெட்கப்பட்டாள்  .

“ஆஹா, இது தான் வெட்கமா வனி மேடம் .அழகா இருக்க டீ.” 

ஷிவேந்தர் அவள் வெட்கப்படும் அழகை ரசித்தபடி  அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்

ஹரி ,குரியர்  மூலம் சிவா தான் ஷிவானிக்கு பரிசுகளை அனுப்பி இருக்கான் கண்டு பிடித்து அவனை பற்றி மேலும் அறிந்து கொண்டான் . நேரிலே போய் பலமுறை பார்த்து பேசிவிட்டு வந்தான். ஷிவானி போல அன்பிற்கு ஏங்கும்  பெண்ணிற்கு சிவா நல்ல துணையா இருப்பான் சந்தோசம் கொண்டான் .

“ ஹரி நீ போ !  நான் சிவாவுடன் வீட்டுக்கு போய்க் கொள்கிறேன்” என்று அவனை அந்த இடத்தில் இருந்து துரத்திவிட்டவுடன் தான் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

“ஏன் டீ ராட்ஷசி, அவனை எதுக்கு இப்படி துரத்தினா ..பாவம் நல்ல பையன்” ..

“அது எனக்கும் தெரியும் ..என்ன சொன்னீங்க?  ராட்ஷசியா ? இந்த ராட்ஷசியை  கட்டிக் கொண்டு இந்த  ராட்ஷசன் என்ன பாடு பட போறான் பார்க்க தான போறேன்..  எதுக்கு டா இவளை லவ் செய்தோம் என்று புலம்ப வைக்கிறேனா இல்லையா பாருங்க !

இந்தர் , எப்ப கல்யாணம் செய்து கொள்ளலாம் .. சீக்கிரம் செய்து கொள்ளலாமா? எனக்கு இப்பவே என்றாலும் சரி தான் ..சீக்கிரம் சொல்லு .. எப்பவும் உன்னுடனே இருக்கணும் போல இருக்கு. உன்னுடன் இருந்தால் பாதுகாப்பா உணருகிறேன்” .

அவள் என்ன சொல்லரா என்று  புரியவே ஷிவேந்தருக்கு சில நொடி ஆனது ..

“ஹே வனி,   நிஜமாவா ?” அவளை அணைத்த படி “தங்க  யு சோ மச்  செல்லம் . இப்பவே நான் ரெடி. கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடி போலாமா ?இல்லை ஓடி போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா ?”

“சும்மா இரு சிவா .எல்லாரும் பார்க்கிறாங்க” என்று வெட்காத்தால் சிவந்தாள்

அவனிடம் “எனக்கு குறைந்தது ஐந்து குழந்தைகளாவது  வேண்டும் .. உனக்கு வேண்டும் என்றால் கூட்டிக்கோ ! வீடு  முழுதும் அதுக  ஓடி ஆடி  உன்னை படுத்தனும் ….என்ன சரியா ?”

“ஐந்தா ?தாங்காது தாயே ! உன்னை  சமாளிப்பதே கஷ்டமாச்சே !” அவள் காதில் “எதுக்கும் நம்ம  முதல் இரவு அப்புறம் சொல்லறேன் !உன்னை சமாளிக்க முடிந்தால் யோசிக்கலாம் ..”

போடா ! என்று கன்னம் சிவந்தாள்

“அடிக்கடி இப்படி வெட்கபட்டால் என் அருகில் இருப்பது நீ தான சந்தேகமா இருக்கே ! கல்யாணம் கட்டிக்கலாம் சொல்லிட்ட ..எங்க ட்ரீட் தர போற  வனி செல்லம்” .

“ முதலில் நீங்க  எங்க கொடுத்தீங்க?  நீங்க கொடுத்திட்டு அப்புறம் கேளுங்க” ..

அவள் பேசிக்கிட்டு இருக்கும் போது அவள் பட்டு  கன்னத்தில் நச் என்று அழுந்த முத்தம் பதித்தான் .

“ஹே என்ன செய்யற ?”

“பொது இடமா போச்சு . இல்லை ட்ரீட் வேற இடத்தில் கொடுத்து இருப்பேன் .நான் கொடுத்தாச்சு .நீங்க ட்ரீட் கொடுங்க மேடம் ! சீக்கிரம்..”

“ஹா …இது சீடிங் .. இது எல்லாம் ட்ரீட்டா..”

“இல்லை சொல்லறியா? அப்ப திருப்பி கொடுத்திடு .. நீயே எப்படி கொடுக்கணும் சொல்லு ஷிவானி..”

“இப்படியே  பேசிக்கிட்டு இருங்க நான் போறேன் ..” ஷிவானி கன்னத்தில் குறுகுறுப்பு இருந்து கொண்டே இருந்தது. அவள் நிலையை  எண்ணி ஷிவேந்தர் ஐந்து நிமிடம் வெளியே சென்று  வந்தான் . திருடன் சரியா கணித்து வைத்து இருக்கான் என்று கொஞ்சிக் கொண்டாள்.

சிவாவை பற்றி மேலும் அறியும் ஆவலில் ஆசையாக “அப்புறம் உங்க வீட்டில் உள்ளவர்களை பற்றி சொல்லு இந்தர்.”

ஷிவ், ஷிவா, இந்தர் என் குட்டி எத்தனை விதமா கூப்பிடறா என்று ரசித்து “வேற யார் எங்க அக்கா ரஞ்சனி . கல்யாணம் ஆகி  மாமா கார்த்திக்குடன் கிராமத்தில் வசிக்கிறாள் . இருவரும் அப்படி லவ் செய்தார்கள் . அவங்க தொல்லை, தாங்காமல் அப்பா உடனே  கல்யாணத்தை முடித்தார் . இவர்களை போலவே என் சின்ன அண்ணா காதல் செய்து கல்யாணம் கட்டிக் கொண்டான்.”

“உங்க வீட்டில் காதல் கல்யாணத்துக்கு எல்லாம் சரி சொல்லுவாங்களா இந்தர். எங்க அப்பாக்கு காதல் என்றாலே பிடிக்காது .அப்புறம் தான காதல் கல்யாணம் . ஆனா நான் காதலித்து தான் கல்யாணம் செய்ய போறேன். அதுவும் எனக்கு பிடித்தவரை” என்று அவன் கைகளை அவள் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.

“அப்படியா !!! நான் எல்லாம் எனக்கு பிடிக்கதவங்களை தான் லவ் செய்வேன் ,கல்யாணம் செய்வேன் ..”

அவன் சொன்னது புரிந்த போது , “ஏதோ தெரியாம சொல்லிட்டேன் .வாழ்க்கை ஒரு தடவை தான் .அதை முழுமையா வாழ்ந்து பார்த்திடனும்.”

‘நான் ரெடி தான்’ கண்ணடித்தான் .

‘சும்மா இருடா திருடா’ என்று கில்லி வைத்தாள்

அங்கே இன்னும்  கொஞ்ச நேரம்  இருந்தால் சரி வராது. அவன் மருத்துவன் என்று ஏதாவது உளறி கொட்டிடுவானோ  பயந்து “சரி டா கிளம்பனும் . முக்கியமான பேஷன்ட்” என்று சொல்ல  வந்ததை விழுங்கி “கிளைன்ட் பார்க்க  போகணும்” .

“நீ என்ன செய்யற ? உங்க அப்பா, அண்ணனுக்கு உதவி செய்யறையா” என்று அவளே பதில் சொன்னவுடன் தலையை எல்லா பக்கமும் ஆட்டி வேகமாக நழுவினான் .

அவன் வண்டியில் மருத்துவன் ஸ்டிக்கர் பார்த்து “இந்தர், அந்த ஸ்டிக்கர்  . இது எப்படி உன் காரில்..”

“அது அது ,,,,  என் நண்பன் கார். எனக்கு பிடித்த மாடல் என்பதால் அவனிடம் இருந்து  வாங்கிவிட்டேன். இது இருந்தால் கொஞ்சம் மதிப்பா  இருக்கு என்று அப்படியே விட்டுவிட்டேன் .எப்படியும் என் பெண்டாட்டி ஓட்டும் போது  தேவையா இருக்குமே !”

என்ன சொல்ல வரான் . அவன் சொன்னதை எண்ணி  அவள் முகம் குங்குமமா சிவந்தது.  அதை பார்த்து ஷிவேந்தர் விசில் அடித்தான் .

இந்த    நிலையில் இவனுடன் வண்டியில் சென்றால் என்னை ஒட்டியே தள்ளிடுவான் .

“நீ வரையா , டிராப் செய்யட்டுமா ? ப்ளீஸ் வாயேன்” என்று அவன்  கண்கள் கெஞ்சியது..

“இல்லை ,இல்லை  ! ஹரி இங்க தான் பக்கத்தில் இருப்பான் ,நான் அவனுடன் போய் கொள்கிறேன்  ! நீங்க கிளம்புங்க …”

ஷிவேந்தர் ,வண்டி ஓட்டிய படி வனிக்கு மருத்துவன் என்றால் இத்தனை வெறுப்பா ?அவள் வெறுப்பு விருப்பா மாறுமா ?

Advertisement