Advertisement

ரஞ்சனி, அமர்ந்த கணவனை பார்த்தாள்.. அவனின் மனம் இங்கில்லை என உணர்ந்தாள்.. அவளுள்ளும் ஒரு வெறுமை வந்தது சட்டென. அவனை நெருங்கி ஆறுதல் சொல்லவோ தேற்றவோ தோன்றவில்லை.. கலைந்து இருந்த வீடு கண்ணில் பட.. விரிந்து கிடந்த பாய்.. தண்ணீர் டம்பளர்கள் எல்லாவற்றையும் எடுத்து வைக்க தொடங்கினாள், பெண். கிட்சென் சென்றாள், அங்கே, உணவு வந்த பாத்திரம் தேய்த்து அப்படியே இருந்தது, அதையும் எடுத்து வைத்து சமையலறையை கொஞ்சம் ஒழுங்கு செய்ய தொடங்கினாள். 

பெண்ணுக்கு, கணவன் இன்னமும் பேசவில்லை.. அருகில் நெருங்கவில்லை.. எல்லாம் க்டமைக்கோ என சந்தோகம் வந்தது. எதை நோக்கி எங்களின் பயணம் என தோன்றியது.. கண்கள் கரிக்கும் போல இருந்தது ‘கல்யாண நாள் இன்று.. அழாதே..’ என தாக்கு தானே சொல்லிக் கொண்டாள், ரஞ்சனி.

நீலகண்டன் சற்று நேரம் அப்படியே இருந்தவன்.. இப்போதுதான் சுற்றுபுறம் உணர்ந்து பார்த்தான்.. எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளை பார்க்க.. மனது சுட்டது அவனுக்கு. கிட்சென் வந்து.. தானும் வாழை இலையை எடுத்து சுற்றி பாதுக்காப்பாக வைத்தான். குப்பை பாக் எடுத்து கட்டி ஓரமாக வைத்தான். 

மேடையை துடைத்துக் கொண்டிருந்தாள்.. ரஞ்சனி.  நீலகண்டன் அவளுக்கு எதிர்புறம் நின்று கைகட்டிக் கொண்டு அடுத்து என்ன செய்வது என பார்க்க தொடங்கினான். சற்று நேரத்தில் அவனின் பார்வை.. ரஞ்சனியிடமே நிலைத்தது.. அவளை பார்க்க பார்க்க.. அவனுடைய இந்த சந்தோஷமில்லா மனநிலை என்னமோ செய்தது அவனை. ‘நானும் கஷ்ட்டப்பட்டு, அவளையும் கஷ்ட்டப்படுத்துகிறேனா..’ என தோன்றியது.

அந்தி சூரியனின் பொன்மஞ்சள் நிறம் அவள்.. இன்றைய கல்யாண பூரிப்பில் சிவந்து தெரிந்தாள்.. கல்யாண புடவை பட்ரோஸ் நிறத்தில் இருக்க.. புடவை முழுவதும் ஜரிகைகள் ஓட.. மின்விளக்கின் ஒளியில்.. அவளோடு சேர்ந்து மின்னியது புடவை. நீண்ட பின்னல்.. முடிவில் குஞ்சம்.. தலையில் மல்லிகை.. கை நிறைய கண்ணாடி வளையல்கள்.. அவளின் ஒவ்வொரு அசைவிற்கும் இசையை எழுப்ப.. அந்த இடம் அவளின் கட்டுபாட்டில் இருந்தது.. அவனையும் சேர்த்துதான்.

நீலகண்டன் “ரஞ்சனி..” என்றான் சின்ன குரலில்.

ரஞ்சனி “ம்..” என்றவள் வளையல்கள் அசைய திரும்பி நின்றாள்.

நீலகண்டனுக்கு என்ன கேட்பது எப்படி பேசுவது என தெரியவில்லை.. ‘இப்போது போய் இந்த திருமணம் ஓகேவா’ என கேட்டால் எப்படி இருக்கும்.. ஆனாலும், அதை தவிர அவனுக்கு என்ன கேட்பது என தெரியவில்லை. நீலகண்டன் “உ..உனக்கு நா..ன்.. இந்த கல்யாணம்.. ஓகேவா..” என்றான், தயங்கியவனாக.

ரஞ்சனி, வாயே திறக்கவில்லை.. பால் பொங்கி வர, அதை எடுத்து இரண்டு கிளாஸ்சில் ஊற்றினாள்.. சர்க்கரையை தேடினால்.. நீலகண்டன் அவள் அதைதான் தேடுகிறாள் என எடுத்து அவளின் முன் வைத்தான்.. ஒன்றும் சொல்லாமல் இரண்டு ஸ்பூன் போட்டு கலக்கி அவனிடம் ஒன்றை கொடுத்தாள்.. தான் ஒன்று எடுத்துக் கொண்டாள்.

ரஞ்சனி “நான் ட்ரெஸ் சேஞ்ஜ் செய்ய போறேன்” என்றவள், அங்கிருந்த அறையில் நுழைந்துக் கொண்டாள்.

நீலகண்டன் ஓய்ந்து போனான் , அவளின் பதில்லா போக்கில். ஏதேனும் செய்வதற்கு வேலை இருக்கா என பார்த்தான். ஒன்றும் இல்லை.. அமைதியாக பால் எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தான்.

போனில் அர்ச்சனாவிற்கு அழைத்தான் “வந்து சேர்ந்துட்டீங்களா” என்றான்.

அர்ச்சனாவும் “என்ன அண்ணா, இந்த நேரத்தில்.. கூப்பிடுறீங்க. நாங்க இப்போதுதான் ரீச் ஆக போறோம், இன்னிக்கு உங்களுக்கு ஃப்ஸ்ட் நைட், எதையும் நினைக்காமல் என்ஜாய் பண்ணுங்க” என சிரித்துக் கொண்டே பேசி வைத்தாள் போனை.

நீலகண்டன் ‘ம்.. அது ஒண்ணுதான் குறைச்சல் என எண்ணிக் கொண்டே’ அமர்ந்திருந்தான். மனது சமன்பட மறுக்கிறது. எங்கையோ அவசரப்பட்ட்டுவிட்டேன் என்றே எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

ரஞ்சனி வந்தாள்.. தன் அலங்காரம் கலைந்து.. ஒரு சுடி அணிந்துக் கொண்டு வந்தாள். முகம் கழுவி சின்ன கடலைபருப்பு சைசில் ஒரு சிவப்பு பொட்டு.. ஈரமான சின்ன சின்ன முடிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு.. முகம் ஜொலித்தது. 

நீலகண்டன் அனிச்சையாய் தன்னவளை பார்த்தான்.. அவளை எப்படி பேச வைப்பது தெரியவில்லை.. தனக்கு தன் கஷ்ட்டம் பெரிதுதான், ஆனால், அவளை திருமணம் செய்துக் கொண்டேனே.. அவளை காயப்படுத்த கூடாது என தோன்றியது. ஆனால் தொடங்குவது எப்படி என தெரியவில்லை.. ரஞ்சனி அமைதியாக பால் அருந்திய கப் எடுத்து கொண்டுபோய் கிட்செனில் வைத்துவிட்டு.. அந்த அறைக்கே சென்றுவிட்டாள் உறங்குவதற்கு.

நீலகண்டன் ஏதும் பேச முடியாமல் அமைதியானான்.. என்ன நடக்கிறது என தெரியவில்லை.. அவசரப்பட்டுவிட்டேன் என மட்டும் அவனின் மூளையில் ஓடிக் கொண்டே இருந்தது.. எப்போதும் போல லேப்டாப் எடுத்து அமர்ந்துக் கொண்டான், உறக்கம் வரவில்லை நீண்ட நேரம்.

நடு இரவில் கண்கள் எரிய தொடங்கவும்.. உறங்க முடிவு செய்தான். அறைக்கு சென்று.. தனக்கு இலகு உடையை எடுத்து வந்தான்.. ஹாலிலேயே மாற்றிக் கொண்டு.. ரஞ்சனியை சென்று பார்த்தான் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். நின்று பார்த்தான் அவளை.. தனியே விடவோ, தான் தனியே உறங்கவோ மனதில்லை. 

ஹாலில் பாய் விரித்து.. அவளை அழைக்க சென்றான்.. அவளின் முகம் பார்க்கவில்லை.. கண்கள் மூடியிருந்தது.. அமைதியாக அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.. ரஞ்சனி அவன் தூக்கும் போதே விழித்துவிட்டாள்.. “எ..என்ன செய்யறீங்க” என்றாள்.

நீலகண்டன் பேசாமல். அமைதியாக அவளை ஹாலுக்கு தூக்கி வந்தவன் கீழே விட்டான்.. “வா, என்கூட தூங்கு” என்றான்.. கீழே அமர்ந்துக் கொண்டு.

ரஞ்சனி “முடியாது போங்க.. நான் உங்க கூட தூங்க மாட்டேன்” என்றாள் கோவமாக. அவளுக்கு முழுவதும் யோசனை.. உறங்க மனது எண்ணினாலும், மூளை ஓயாமல் கணவனையே வட்டமிட்டது. ஏன் என்னை திரும்பி கூட பார்க்கவில்லை இவர்.. ஏன் என்னிடம் பேசவில்லை.. கடமைக்கு திருமணமா என உள்ளே ஓடிக் கொண்டே இருக்க.. உறக்கம் வரவில்லை. கணவன் வந்து பார்ப்பான் என நினைவேயில்லாமல் புரண்டு புரண்டு படுத்திருந்தவள்.. அவன் தன்னை கைகளில் ஏந்தவும் திடுக்கிட்டு விழித்தாள்.

இத்தனை நேரம் கண்டுக் கொள்ளாமல் இருந்தவன், அழுத்தமாக இருந்துவிட்டு, இப்போது கணவனாக தன்னை நாடுகிறான் என தோன்ற இதுவும் கட்மையாகிவிடுமோ என தோன்ற.. ‘முடியாது, உங்கள் அருகில் வரமாட்டேன்’ என்றாள்.

நீலகண்டனுக்கு எல்லோரும் முக்கியம்.. தம்பியை போலவே.. தான் மணந்து வந்தவளும் முக்கியம். இவள் இப்படி சொல்லவும்.. ஓய்ந்து போனது மனது.. அடுத்த ஏதேனும் பேச வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை அவனுக்கு, கண்ணெடுக்காமல் அவளையே பார்த்திருந்தான்.

ரஞ்சனி காலையிலிருந்து அவன் அருகில்தான் இருந்தாள்.. ஆனால், கணவன்.. தன்னவன்.. என தோன்றவில்லை.. இயந்திர கதியில் எல்லாம் நடந்தது.. இப்போது அருகில் இடம் காட்டவும் அமர முடியவில்லை அவளால். எல்லாம் கடமையாகி விடுமோ என பயம் அவளுக்கு. கணவனுக்கு அவளின் மனதை அறிய, அவளை நெருங்கும் வழி தெரியவில்லை. இருவரும் ஒரே நிலையில்தான் எதிரெதிரே நிற்கின்றனர்.

ரஞ்சனி உள்ளே சென்றாள் உறங்குவதற்கு.

நீலகண்டனும் தடுக்கவில்லை.. அமைதியாக கண்மூடிக் கொண்டான்.

காலையில் நீலகண்டன் முன்பே எழுந்துக் கொண்டான். பால் வாங்கி வந்தான். காபி கலந்து குடித்தான். குளிப்பதற்கு சென்றான். ரஞ்சனி அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நின்று அவளை ரசிக்க தோன்றியது.. கணவன் மனது, ஆனால், அதற்கு அந்த மனமே இடம் தரவில்லை.. எதோ பெரிய தவறு.. பெண் உறங்கும் போது பார்க்க கூடாது என சொல்லியது. அவசரமாக குளிக்க சென்றான், கணவன்.

தன் இயல்பான வேலைகளை கவனிக்க தொடங்கினான்.. அவள் எழுந்ததும் காபி அருந்தலாம் என காத்திருந்தான். சமையலை கவனித்தான்.. மாவு இல்லை.. பூரிக்கு மாவு தயார் செய்தான்.. கிழங்கு வேக வைத்தான். அவள் எழுவதாக இல்லை.

மனது அவளிடமே சுற்றியது.. புது அவஸ்த்தையாக இருந்தது கணவனுக்கு.. இங்கேதானே இருக்கிறாள் என தெரிந்தாலும் நொடிக்கொரு தரம் அவளை எட்டி பார்த்தான் எழுந்துவிட்டாளா என.

பார்த்து பார்த்து எல்லாம் செய்தான், அவள் எழுவதாக காணோம் எனவும் கடைக்கு கிளம்ப எத்தனித்தான்.. உடை மற்ற அறைக்கு செல்ல ரஞ்சனி அங்கில்லை.. நீலகண்டனுக்கு ‘அப்பா டா எழுந்துட்டா’ என தோன்றியது. உடை மாற்றிக் கொண்டு இவன் வர.. அவளும் முகம் கழுவி வந்தாள்.

நீலகண்டன் “காபி கொடுக்கவா.. இல்ல, சாப்பிடுறியா” என்றான், சின்ன குரலில். நேற்றைய நிலையை கொண்டு வர கூடாது என எண்ணிக் கொண்டான் நீலகண்டன்.

ரஞ்சனி இமைக்காமல் அவனையே பார்த்தாள்.. இரவு தான் நடந்துக் கொண்டது அவளை என்னமோ செய்ய.. தானே கிட்சென் சென்றாள்.. என்ன செய்துருக்கிறான் என பார்த்தாள்.. எல்லாம் தயாராக இருந்தது.. ஆச்சர்யமாக கணவனை திரும்பி பார்த்தாள்.. அவன் ஹாலில் இருந்த சின்ன பூஜை அறையில் எதோ செய்துக் கொண்டிருந்தான்.

ரஞ்சனிக்கு தயக்கமாக இருந்தது பேசவே.. அடுப்பை பற்ற வைத்து எண்ணையை வைத்தாள்.. பூரி செய்யும் இயந்திரம் இருக்க.. அதில் மாவு உருண்டைகளை வைத்து அழுத்தி ஒவ்வொன்றாக.. எண்ணையில் போட்டாள். அதுவரையும் கணவன் வரவில்லை, ஏதும் பேசவில்லை.

ரஞ்சனி மனது கேளாமல்.. “நீலகண்டன்” என்றாள் அழைப்பானக் குரலில்.

நீலகண்டன் கையில் எதையோ எடுத்துக் கொண்டு “ம்.. என்ன..” என்றான் சிரித்த முகமாக.. அவளை நோக்கி வந்துக் கொண்டே.

ரஞ்சனி, திரும்பி நின்றுக் கொண்டாள்.. அடுப்பை பார்த்தபடி.. கணவன், அவளை நெருங்கி, அவளின் தோள் தொட்டு தன்பக்கம் திருப்பி.. குங்குமம் வைத்தான். ‘உன்னை வேண்டி விரும்பிதான் திருமணம் செய்துக் கொண்டேன்’ என கண்கள் சொல்லுகிறது.. அதை தன் உதடுகளால் சொல்ல தயக்கம் அவனுக்கு. நெற்றியில் வைத்த குங்குமத்தில் ஒரு முத்தம் பதிக்கவும் ஆசைதான்.. ஆனால், இயல்பான அவனின் கூச்சம் அவனின் உரிமையை தடை செய்கிறது. அஹ.. இயல்பாய் திருமணம் வேண்டுமானால் நடக்கலாம்.. காதல் அனைத்துவிதமான மெனக்கெடல்களுக்கும் உண்டானதுதானே.. இன்னும் அவனிடம் மெனக்கெடல்கள் வரவில்லையே. சட்டென பெண் திரும்பிக் கொள்ளவும், நீலகண்டனும் நகர்ந்தான்.

“பட்ட தீட்ட தீட்டதான்

தங்கே..

உன்ன பார்க்க பார்க்கத்தான் 

இன்பமே..”

 

Advertisement