Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

18

நீலகண்டன், கடை தன் வேலை என கொஞ்சம் தினப்படி வேலைகளுக்கு இப்போதுதான் பழகியிருந்தான். மனதில் ரஞ்சனியின் நினைவு இருந்துக் கொண்டே இருந்தது. ஆனால், தம்பியின் வெறுப்பான பேச்சில் அவளிடம் ஏதும் சொல்ல முடியாமல் ஒரு குற்றவுணர்ச்சியில் இருந்தான்.

இரவில்.. லேப்டாப் எடுத்து வைத்தால்.. அவள் அன்று வந்து சென்றது படமாக முதலில் ஓடும் அவனுள்.. அதனை வேண்டாம் என்று அவன் எண்ணுவதே இல்லை.. கண்களை மூடிக் கொள்வான்.. எதோ வரம் வாங்குபவன் போல. ‘எப்படி! என்னை நம்பி வந்தவளுக்கு.. பதில் சொல்லாமல் இருக்க முடிந்தது என்னால்’ என அவன் மீதே அவனுக்கு. நான் என்ன செய்தேன்.. அவளின் தந்தையும்.. என்னை நம்பி பெண்ணை கொடுத்தார்.. அவளும் அப்படியே என்னை நம்புகிறாள்.. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என கோவமாக வருகிறது.. என்ன செய்வது.. தன்மீதே வரும் கோவத்தை எப்படி வெளிப்படுத்த முடியும்.. தனக்கு தானே.. எனவே கண் திறந்து வேலைகளை கவனிப்பான். என்ன செய்தாலும் அவளின் நினைவுகளை விடுவதில்லை நீலகண்டனை. 

ரஞ்சனிக்கு அதற்குமேல்.. ‘தேவை இல்லாமல்.. அவனை ஏன், என் வாழ்க்கைக்குள் கொண்டு வந்துவிட்டார் அப்பா.. அவர் சொல்லிவிட்டு போய்ட்டார்.. நானாவது கொஞ்சம் யோசித்திருக்கலாம். அப்பாவின் மேல் தப்பு இல்லை.. எல்லாம் என்மேல்தான், அவருக்கு தங்கை பையன்னு நம்பிக்கை.. உனக்கு எப்படி வந்தது.. நீ ஏமாந்துட்ட.. கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கார்.. அன்னிக்கு’ என அழுகைதான் நினைத்த் நேரமெல்லாம். இப்போது எக்ஸாம் முடிந்து விட்டதால்.. நீலகண்டன் நினைப்புதான் எப்போதும். அதில் தந்தை தன்னை தனியாக விட்டு சென்றுவிட்டார் எனவும் கோவம் வர, அதற்கும் அழுகைதான் அவள்.

இதில் அன்று நீலகண்டன் அழைக்கவும்.. அழுகை எல்லாம் கோவமாக மாறியது.. ‘நான் அப்படி நினைக்கலைன்னு ஏதாவது சொல்லுவார்.. எதுக்கு எடுக்கனும்.. வேண்டாம்.. இனி என் வாழ்வில் அவர் இல்லை’ என எண்ணிக் கொண்டாள் முடிவாக..’ ஆனால், அதெல்லாம் அவளால் முடியவில்லை.

ரஞ்சனி, தன்னை கொஞ்சம் மாற்றிக் கொள்ள.. புதிய வகுப்பில் சேர்ந்தாள். அதில் கொஞ்சம் மனது சென்றது.. தன் அறைக்கு இரவு படுப்பதற்கு மட்டும் என நேரம் ஒதுக்கிக் கொண்டாள். தோழிகளோடு பழகினாள். ஒருத்திக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருக்க.. அவளோடு ஷாப்பிங்.. பேச்சு என தன்னை கொஞ்சம் மாற்றிக் கொண்டாள்.

ஆனாலும், எங்கேனும் வெளியே சென்றாலும்.. சராசரிக்கும் அதிகமான..  உயரமான நபர்களை பார்த்தால்.. கண்டிப்பாக அவனின் ஞாபகம் வந்தே தீருகிறது அவளுக்கு. அதிலும் கோபம்தான் அவளுக்கு ‘எனக்கு நினைவுகள் எனகூட ஒன்றுமில்லை.. அவனை பற்றி நினைப்பதற்கு..’ என கோவமாக வரும். தனக்கு தானே சமாதானாம் சொல்லிக் கொள்வாள்.. ‘இது லவ்வே இல்லை.. சும்மா.. ஒரு க்ரஷ் மாதிரி.. உயரமா இருக்கான்.. அமைதியா இருக்கான், அத்தோட அப்பாவும் சொல்லிட்டார்.. வீட்டிலும் பிரச்சனை.. அதனால் ஒரு ஈர்ப்பு.. அவன்மேல்’ என தனக்கு தானே சொல்லிக் கொள்வாள்.

எது எந்த வார்த்தைகளில் சொன்னாலும்.. இதெல்லாம் புரிந்தாலும்.. தோற்றபின் ஆயிரம் சமாதானம் சொன்னாலும். திட்டினாலும்.. அந்த ஈர்ப்பு கூட எல்லோர் மீதும் வரவதில்லையே.. அவன் ஒருவன் மீதுதானே வந்திருக்கிறது இத்தனை வருடங்களில்.. என அவளின் ஆழ்மனம் கொப்பளிக்கும்.. மூழ்கிய காதலின் உயிர் போகும் நிலையாய்.. உயிர் காற்றுக்கு ஏங்கும்.. அவனின் நினைவுகள்.. மூச்சு முட்டிய.. குமிழியாய்..  அவனின் நினைவு குமிழி.. வந்து கொண்டே இருக்கிறது அவளுள்.

“யாரடா… யாரடா..

நீ என்னுள் யாரடா..

பேரலை போல நீ 

பாய்கிறாய் பாரடா..”

 

அன்று.. ரகு, நீலகண்டனை அழைத்தான் போனில் “என்ன நீலா எப்படி இருக்க..” என சகஜமாக பேசினான். நீலகண்டனும்ம் பேசினான். சற்று நேரத்தில் ரகு “அந்த இடத்தை கிரையம் செய்திடலாமா.. மாதவன் இப்போது ஊரில் அவ்வளவாக இருப்பதில்லை.. இன்னும் எத்தனை நாட்கள் கடத்துவது.. ஒரு வேலையை முடித்திட்லாமே.. தம்பி எப்போது வருவான்னு கேட்டு சொல்லேன்..” என்றார் நயமான குரலில்.

ரகுவிற்கு, பிரசாந்தின் ஆர்டர்.. இப்படியாகத்தான் இருந்தது.. ‘உடனே, அவனின் கணக்கை முடி’ என்பதாக இருந்தது. எனவே, பொறுமையாக பேசினான் ரகு.

ஆனால், நீலகண்டனுக்கு அதை எப்போதும் விட்டுவிடும் எண்ணம் இல்லையே.. ஆனால், தம்பி எனக்கு வேண்டவே வேண்டாம் என்கிறானே என யோசனை.. ‘என்ன சொல்லுவது இவரிடம் ‘ என எண்ணிக் கொண்டே இருந்தான்.

நீலகண்டன் “முதலில் எனக்கு தாய் பத்திரம்.. அந்த உயில், இதோடு செராக்ஸ் அனுப்புங்க.. என்ன இருக்குன்னு பார்க்கணுமே நான்.. தம்பிகிட்ட பேசிட்டு எப்போது வரோம்ன்னு பதில் சொல்றேன்” என்றான் நல்ல விதமாக பேசி வைத்து விட்டான்.

ரகுவும் ஒரு செராக்ஸ் எடுத்து.. நீலகண்டனின் அட்ரெஸ்க்கு ஒரு கோப்பி அனுப்பி வைத்தான்.

இதனிடையே, குகனும், புதுவீடு பால்காய்ச்ச அண்ணனை அழைத்தான். நீலகண்டன் எப்படியும் தம்பியிடம் இப்போது சொல்லிவிட வேண்டும் என எண்ணி சென்றான்.

குகனும், தன் அண்ணனை ஆவலுடன் எதிர்பார்த்தான்.

நீலகண்டன் சென்னை சென்றான் ட்ரைன்னில். ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடந்தது பால்காய்ச்சும் விழா. அர்ச்சனாவின் பெற்றோர் அவரின் பெரியப்பா குடும்பம் என அவ்வளவுதான் ஆட்கள். எளிமையாக இனிமையாக நடந்தது விழா.

வீடு இரண்டு தளமாக நன்றாக இருந்தது.. கீழே வாடகைக்கு விடுவதாக இருக்கின்றனர்.. மேலே குகன் குடியேறினான். அர்ச்சனாவின் முகத்தில்.. கல்யாண அலைச்சல் தீர்ந்து, அம்மாவீட்டில் உறவாடி வந்ததில் கொஞ்சம் தெளிந்து இருந்தாள். ஆனாலும், மசக்கை அவளை படுத்தியது. எந்த வேலையை செய்ய விடவில்லை குகன். அன்பாக பார்த்துக் கொண்டான்.

அவளுக்கு பால் வாசனை ஆகாது என.. தானே எல்லோருக்கும் பால் எடுத்து வந்து, கொடுத்தான். அவளை குனிய வைக்க வேண்டாம் என.. தான் பரிமாறினான். இப்படி நிறைய. இன்னும் பொருட்கள் ஏதும் வாங்கவில்லை.. எல்லோரும் கீழேதான் அமர்ந்து உண்டனர். அர்ச்சனாவின் வீட்டில் சீர் வாங்கி தருவதால்.. அர்ச்சனாவே எல்லாவற்றையும் பார்த்து வாங்க வேண்டும் என்பதால்.. இன்னும் இரண்டு நாட்கள் பெற்றோர் தங்கி எல்லாம் வாங்கிக் கொடுத்து செல்லுவார்கள். அதனால், அளவான பொருட்கள் மட்டும்தான் இருந்தது, இப்போது.

ஆனால், குகன் கவனிப்பில்.. அர்ச்சனா வீட்டு மனிதர்களுக்கு ஆனந்தம், இப்படி மாப்பிள்ளை பார்த்து பார்த்து கவனிப்பதில். பெரியவர்கள் எல்லாம் அமைதியாக, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நீலகண்டன் இதையெல்லாம் அர்ச்சனாவின் பெரியப்பாவிடம் அமர்ந்து பேசிக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான். தம்பி எப்போதும் இப்படிதான், சட்டென தான் இருக்கும் இடத்தை தனக்கானதாக செய்துக் கொள்வான்.. எனக்குதான் வராது போல..’ என அவனுள் ஓட.. ரஞ்சனி வந்தால்.. அவன் அழைக்காமலேயே.. அவனின் மனதில்.

நீலகண்டன் அதன்பின் குகனின் சேஷ்ட்டைகளை பார்க்கவில்லை.. அமைதியாக பெரியப்பாவின் முகம் பார்த்து, அவர் சொல்லுவதை கவனமாக கேட்க்க தொடங்கினான்.

அப்போது, அர்ச்சனாவின் பெரியம்மாவும் வந்தார் அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த இடத்தருகில். கண்ணால் தன் கணவரிடம் எதோ சைகை செய்தார். நீலகண்டன் பார்க்காதது போல.. போனை எடுத்துக் கொண்டு எழுந்தான்.

பெரியப்பா “இருங்க தம்பி..” என்றார், எழுந்தவனை அமர வைக்கும் விதமாக வேண்டுதலான குரலில் சொன்னார்.

பெரியம்மா ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று.. கொழுந்தனாரை அழைத்து வந்தார். அர்ச்சனாவின் தந்தையும் வர.. அவரும் “அண்ணா, பேசிடு” என சொல்லி தன் மனையாள் கொண்டு வந்த சேரில் அமர்ந்தார்.

அர்ச்சனாவின் தந்தை “மாப்பிள்ளை” என தன் மாப்பிள்ளை குகனை அழைத்தார்.

நீலகண்டனுக்கு, ‘என்ன’ என புரியவேயில்லை.. ஒரு ஊகம் கூட இல்லை.. என்ன ஆகிற்று.. என்ன நடக்கிறது.. என ஒரு புரியாத மனநிலையில் இருந்தான். ஆனாலும், முகத்தில் ஏதும் காட்டிக் கொள்ளவில்லை.

குகன் “மாமா, பேசிடுங்க மாமா, நீங்க சொல்றதுதான் சரியா இருக்கும்” என்றான் சிரித்த முகமாக.

பெரியப்பா “அதுங்க தம்பி.. உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. குறை சொல்ல ஏதும் இல்ல.. உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு தெரியும், அதான்.. என் பெண்ணையே உங்களுக்கு பேசலாம்ன்னு. நம்ம மாப்பிளைகிட்ட பேசினேன்.. அவருக்கு ரொம்ப சந்தோஷம்.. உங்ககிட்ட என்னையே பேச சொன்னார்.” என நீலகண்டனின் முகத்தை எல்லோரும் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்க.. சொல்லி முடித்தார் பெரியப்பா.

குகனுக்கு, அப்படி ஒரு சந்தோஷம் இந்த செய்தியில்.. அவனுக்கு அண்ணனுக்கு  திருமணம் ஆகவில்லையே என கவலை.. அத்தோடு, தன்னுடைய நிகழ்வும், அவனின் திருமணத்திற்கு தடையாய் இருக்குமோ என எண்ணம்.. மேலும் அண்ணன் தான் சொன்னால் கேட்பான்.. எனவே, இப்படி அர்ச்சனா வீட்டார் கேட்கவும், தன் குற்றவுணர்ச்சி எல்லாம் நீங்க.. மலர்ந்த முகமாக அண்ணனுக்கு இந்த சம்பந்தத்தை முடிக்க எண்ணினான் தம்பி. 

Advertisement