Advertisement

பாவம், குகனுக்கு தெரியாதே, தன் அண்ணனின் நிலை.. எனவே ‘அண்ணன் எப்படியும் சம்மதம் சொல்லுவான் அவனுக்கு பெரிதாக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை.. பெண் பற்றியோ.. திருமணம் பற்றியோ.. எந்த கற்பனையும் இல்லை.. என திண்ணம் தம்பிக்கு. எனவே, அர்ச்சாவின் சொந்தமாக இருந்தால்.. புதிதாக ஒரு குடும்பம் அமைதிடுமே.. என தம்பியும், அவன் மனையாளுக்கு என எல்லோருக்கும் இது ஆனந்தமாகவே இருந்தது. 

அர்ச்சனாவின் குடும்பத்திற்கும் அப்படியே.. நல்ல பையன் அமைதியாக பொறுப்பாக இருக்கிறான்.. சொந்த தொழில் செய்கிறான்.. சொந்த இடம் இருக்கிறது.. எனவே, நீலகண்டனும் தன் வீட்டு மாப்பிளையாக வந்துவிட்டால் பெண் நல்ல இடத்தில் இருக்கிறாள் என நிம்மதியாக இருக்கலாம் என, அர்ச்சனாவின் பெரிப்பாவிற்கு ஒரு எண்ணம். அதனால், அண்ணன் தம்பி இருவரும் கலந்து பேசி.. குகனிடமும் பேசி.. இப்போது நீலகண்டனிடமும் பேசினர்.

எல்லோரும் அவன் முகத்தையே பார்த்தனர். நீலகண்டன் பிடிக்குது எனவும் முகபாவம் இல்லை, பிடிக்கவில்லை எனவும் முகபாவமில்லை.. அப்படியே அமர்ந்திருந்தான், பேசவும் இல்லை. நொடிகள் நீண்டது.

குகன் “அண்ணா, என்னாச்சு” என்றான்.

நீலகண்டன் ஏதும் பேசவில்லை.

பெரியப்பா “அவருக்கு, அதிர்ச்சியாக இருக்குமில்ல.. நீங்க பேசிட்டு சொல்லுங்க மாப்பிள்ளை” என பொதுவாக சொல்லி.. எழுந்துக் கொண்டார். அர்ச்சனாவின் தந்தையும் அப்படியே சொல்லி எழுந்துக் கொண்டார் தன் மாப்பிள்ளையை பார்த்துவிட்டு.

குகனும் கண்ணால்.. ‘நான் பேசுகிறேன்’ என சைகை செய்தான். எல்லோரும் அந்த பக்கம் செல்லுவும்.. நீலகண்டன் எழுந்து தான் குளித்து கிளம்பிய அறைக்கு சென்றான். பின்னாலேயே குகனும் சென்றான்.

அண்ணன் அங்கிருந்த சேரில் அமர்ந்துக் கொண்டான். குகன் “என்ன அண்ணா, ஏன் எதுவும் பேசலை நீ.. என்ன கல்யாணமே வேண்டாம்ன்னு அப்படியே எத்தனை நாள் இருப்பாய்” என்றான்.. கோவமாக. பாவம் அண்ணின் நிலை தெரியாமல்.

நீலகண்டன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு “சேர் எடுத்துட்டு வா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

நீலகண்டனுக்கு உண்மையாகவே கோவம்.. கோவமானாலும்  அமைதியாக இருந்துதானே பழக்கம் அவனுக்கு. 

இப்போதும் அமைதியே ‘நான் இவனிடம் பேச வந்தது என்ன.. இங்கே நடப்பது என்ன..’ என எண்ணினான். ‘இப்படி என்னிடம் என்னை நேரே கேட்க்கும் அளவிற்கு விட்டான் தம்பி.. அவனே கேட்டிருந்தால்.. விஷயம் இப்படி எல்லோரும், என் முகம் பார்க்கும் அளவிற்கு வந்திருக்காதே.. கொஞ்சம் சுமூகமாக முடித்திருக்கலாமே..’ என எண்ணம். ‘இப்போது தேவையில்லாமல் என் திருமண செய்தி எல்லோரிடமும் பரப்பப்படும்..’ என யோசனையோடு அமர்ந்திருந்தான்.

குகன் வந்ததும்.

நீலகண்டன் பொறுமையாக ஆரம்பித்தான் “உனக்கு ஒரு விஷயம் சொல்லனும்” என்றான்.

குகன் கோவமாக “என்ன.. இப்போ.. கடன் இருக்கு.. எனக்கு வீடு வாங்க எல்லாவாற்றையும் கொடுத்திருப்ப, அதானே.. இவங்களுக்கு அதெல்லாம் தெரியும், பெரியாப்பா கொஞ்சம் பெரிய இடம்தான்.. நீ அதையெல்லாம் மைன் பண்ணாத.. பெண்ணு நல்லா இருக்காங்க, அமைதியான பெண்ணாம்.. நீ ‘ம்..’ மட்டும் சொல்லு” என்றான் கோவமாக ஆரம்பித்து.. நல்லவிதமாக சொன்னான் தம்பி.

நீலகண்டன் “என்னடா, என் கல்யாணத்தில் கூட என்னை முடிவெடுக்க விடமாட்டியா” என்றான் அமைதியாக, அடக்கப்பட்ட கோவம் அந்த குரலில் தெரிந்தது.

குகன், அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.. ‘என்னை ‘டா’ போட்டு அழைக்கிறானா, அண்ணன்’  எனத்தான் முதலில் பார்த்தான் தம்பி. அண்ணனின் கோவம் புரியவில்லை அவனுக்கு.

நீலகண்டன், தம்பியையே பார்த்துக் கொண்டிருந்தான். 

குகன், எதோ கேள்வி கேட்க்கும் எண்ணத்தோடு “உன்னை கல்யாணம்தானே செய்துக்க சொல்றேன்..” என்றான் வேகமாக.

நீலகண்டன் “அதில்லை.. முதலில் நான் சொல்லுவதை கேள்” என ஆரம்பித்தான்.

மருத்துவமனையில் நடந்தது.. தொடங்கி, சொல்ல தொடங்கவுமே குகன் “என்ன சொல்ற நீ… இதுக்கு நீ எப்படி பொறுப்பு.. சொத்தையும் இத்தனைநாள் அனுபவிச்சாங்க.. இப்பவும் பெண்ணை உன் தலையில் கட்டிட்டாரா.. ஊமையா, குருடா அவள்.. உன்னை பார்த்தாலே இளிச்சவாயன்னு தெரியுது, எல்லோருக்கும். அதான்.. இப்படி நம்மை செய்துட்டார் போல.. உன் மாமா” என ஆவேசமாக ஏற்ற இறக்கமான குரலில் கத்தினான் தம்பி.

நீலகண்டனுக்கு கோவம்.. தலைக்கேறியது.

மீண்டும் குகனே “இதை கல்யாணம்னு வேற சொல்றீயா நீ.. இப்படி நடந்ததை ஏன் என்கிட்டே இத்தனைநாள் சொல்ல.. அவன் அண்ணன்தான் இருக்கான்னில்ல.. நான் பேசறேன், இது கல்யாணமே இல்ல.. சும்மா நீ உன் இரக்க குணத்தால் எல்லாவற்றையும் நம்பாத..” என கத்தியவன் குரல்.. அண்ணனை தேற்றுவதில் முடிந்தது.

நீலகண்டன், கை கட்டி நிமிர்ந்து அமர்ந்துக் கொண்டு தம்பியின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்தான், இழுத்து பிடித்த பொறுமையோடு. முகமே சாந்தமாக இருந்தது.. தம்பியின் கோவமான பேச்செல்லாம் அண்ணனுக்கு புரிகிறது.. ஆனாலும், ரஞ்சனியை பற்றி பேசியது கொஞ்சம் அதிகம் எனவும் தெரிய.. நீலகனை மீறி சில வார்த்தைகள் வந்துவிட்டது, இப்போது தம்பி பேசி முடித்ததும் “உன்கிட்ட நான் சொல்லனும்ன்னு சொல்றேன்.. சொத்து விஷயத்தில் நீ என்ன சொல்றீயோ கலந்து பேசி முடிவெடுக்கலாம்.. கல்யாணம் என்னோட விஷயம். நான் பெண் கேட்க போகணும், அப்போ சொல்றேன்.. வந்து சேர் குடும்பமாக. மத்தபடி, இந்த பெண் பார்க்கறது.. பேசி முடிகிறதை என் விஷயத்தில் விட்டுடு.. புரியுதா.” என்றான் தன் தம்பியை பார்த்து.

தம்பி ஆவேசமாக அமர்ந்திருந்தான்.

நீலகண்டன் “அப்புறம் இன்னொன்னு, சொத்து அம்மாவோடது. கண்டிப்பா எனக்கு விடும் எண்ணம் இல்லை. ரஞ்சனியை அவர்கள் நடுவில் வைத்து ஏதேனும் பேசினால்.. சொத்தையும் விடுவேன். ரஞ்சனியை விடமாட்டேன். அதனால், சொத்து வரும் பணம் வரும்ன்னு நீ ஏதும் கணக்கு போட கூடாதுன்னு சொல்றேன்” என்றான் தெளிவாக.

சொல்லியவன் தம்பியை திரும்பியும் பார்க்கவில்லை.. தன் பழைய உடைகளை அங்கேயே விட்டுவிட்டு.. லேப்டாப், போன் என எடுத்துக் கொண்டு “நான் கிளம்பறேன்.. பஸ்ஸில் போய்க்கிறேன்.. அர்ச்சனாவை பார்த்துக்கோ” என முடிக்கவில்லை.

குகன் “இது சரியில்ல அண்ணா, அந்த மனுஷன் சொன்னதை வேதவாக்கா எடுத்திருக்க.. தம்பி சொல்றதை கேட்க்காமல். அப்படி என்ன செய்தார் நமக்கு.. நீ தப்பு பண்ற நீலா. இல்லை, புதுசா ஒருத்தவர்களை பார்க்கவும்.. நம்ம சொந்தம் மறந்திடுச்சா.. அவ்வளோ முக்கியமானவங்களா போயிட்டாங்களா உனக்கு..” என்றான், அண்ணனை தாக்க வேண்டும் என பேசினான்.

நீலகண்டன் அசரவேயில்லை, இதற்கு பிறகு தம்பியிடம் என்ன பேசுவது என தெரியவில்லை அண்ணனுக்கு. பேசினால், வார்த்தைகள் தடிக்கும்.. இப்போதே முட்டிக் கொள்ளும் நிலை.. இதென்ன விட்டு போகிற உறவா.. எனவே அமைதியாக இருந்தான் அண்ணன்.

குகனுக்கு, கோவம் அண்ணின் அமைதியில், ‘இவ்வளவு பேசுகிறேன் இப்படி இருக்கிறான்’ என “நான் வரமாட்டேன் பார்த்துக்க எதுக்கும், எனக்கு பிடிக்கலை.. பிடிக்கலை.. அவ்வளவுதான் சொல்லிட்டேன்” என்றவன் வெளியே சென்றான்.

குகன், இதை ஒரு அவமானமாக உணர்ந்தான். அர்ச்சனாவின் வீட்டில், என் வீட்டில் தான்தான் எல்லாம்.. என ஒரு மாயயை உருவாக்கி விட்டிருந்தான். ம்.. தன் அண்ணன் தான் சொன்னால் கேட்ப்பான் என எண்ணி இருந்தான் இத்தனைநாள், அதனால் நம்பிக்கையாய் சொன்னான்… பெண் விஷயத்தில். ஆனால், அண்ணனின் இந்த பேச்சும் செயலும் புதிதாக இருக்க.. தம்பி இதை எதிர்பார்க்கவில்லை.. அதனால் வந்த அதிர்ச்சி, ஏற்கனவே இருந்த விட்டு தொட்ட கோவம்.. எல்லாம் ஒரு சேர.. அப்படி பேச வைத்து தம்பியை.

“அவரவர் வாழ்க்கையில்..

ஆயிரம் ஆயிரம் மாற்றாங்கள்..”

 

அடுத்த இரண்டு நிமிடத்தில் நீலகண்டன் வெளியே வந்தான்.. எல்லோரும் குகன் வெளியே சென்றதை பார்த்து என்னமோ எதோ என நிற்க.. நீலகண்டன் அமைதியான முகத்தோடு வெளியே வருவதை பார்த்து இன்னமும் பதறினார்.

நீலகண்டன் பொதுவாக எல்லோரையும் பார்த்து “எல்லோருக்கும் ஒரு விஷயம்ங்க.. எனக்கு என் மாமா பெண்கூட பேசி முடிச்சிருக்கு, அது ஒரு இக்கட்டில் நடந்துடுச்சி.. எப்படி நடந்தாலும் மாற்ற முடியாதே. அதனால், இந்த சம்பந்தம் ஒத்து வராதுங்க.. தம்பிக்கு அதில் கோவம்.. அதை நான் பார்த்துக்கிறேன். உங்க மசனை கஷ்ட்டப்படுத்தியிருந்தால் மன்னிச்சிடுங்க..” என்றான், தன் நெஞ்சில் கை வைத்து ஆத்மார்த்தமாக சொன்னான்.

திரும்பி அர்ச்சனாவை பார்த்து “இதையெல்லாம் மனசில் எட்டுத்துக்காதம்மா.. நீ நல்லா இரு.. அவனையும் பார்த்துக்கோ, இப்போது நான் கிளம்பறேன்.. போனில் மிச்சம் பேசலாம்.. உடம்பை பார்த்துக்கோ” என தன்மையாக சொல்லி, எல்லோரிடமும் தலையசைத்து விடைபெற்றான் நீலகண்டன்.

காலை பதினோரு மணிக்கே கிளம்பி இரவு பதினோரு மணிக்கு வீடு வந்து சேர்ந்துவிட்டான் நீலகண்டன். 

 

Advertisement