Advertisement

ஆசை -8

சில தினங்கள் கழிந்து

சந்தியா அவள் ரூமுக்குள் சென்றவள் பெரும்பாலும் வெளியே வருவதே இல்லை. உணவு கூட அவள் அக்கா சௌமியா தான் எடுத்து செல்வாள்.காலங்கள் கடந்து ஓடினாலும் வாழ்வில் நெருக்கமான உறவு நம்மை விட்டுப் போனால் அந்த இழப்பை அவ்வளவு எளிதில் நம் மனதை விட்டு போகாது தான்…… அப்பா மட்டுமல்ல நல்ல பிரிண்ட்,அட்வைசர்,வெல் விஷர், மோட்டிவேஷனல் பெர்சன் என்று பல முகத்தின் ஒற்றை நபர். நம் மனதில் குழப்பம் வரும் போதெல்லாம் அவர் கூட உட்கார்ந்து,நம் மனதில் உள்ளதை சொன்னால் போதும் அவர் பேசும் ஆறுதல் வார்த்தைகளே அந்த குழப்பத்திற்கு மருந்தாக அமையும்.அப்படிப்பட்ட ஆலமரமாக தன் குடும்பத்திற்கு உழைத்து நிழல் கொடுத்தது இப்போது அந்த மரம் வாடி வதங்கி போகிற நிலை வந்து பார்க்கும்போது அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மை கசக்கும் அதை ஏற்கத் தான் வேணும் இதுவும் கடந்து போகும் என்ற வாக்கியமும் உண்மைதான் அப்படித்தான் சந்தியாவும் அவள் குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டனர்

மற்ற உறவுகள் ஆறுதல் வார்த்தைகளை கொடுத்தாலும் மனது அதனை எளிதில் ஏற்று விடாது. மனதை ஈஸியாக உடைத்து விடலாம் ஆனால் அதனை சரி செய்வது கடினம் தானே அப்படிப்பட்ட நிலையில்தான் இருந்தாள் சந்தியா. பிடிப்பு அற்றவள் போல் வீட்டிற்கு வருவதும் அலுவலகத்திற்கு போவதுமாக இருந்தாள் அவள் மனது மாற்றத்திற்காக ஆபீஸ் போனாலும் முன்பு போல் அவளால் பணியில் முழு கவனத்தை செலுத்த முடியவில்லை…. தனது வாழ்வு அரைகுறை ஆகி விட்டது போல் உணர்ந்தாள்.

அப்பா சிரித்துக் கொண்டு சுவரில் தொங்கிக் கொண்டு இருந்தாலும், அதை பார்த்து நமது கண்கள் அல்லவா கண்ணீர் சிந்துகிறது!!!!!!!! அலுவலகத்தில் அவளுக்கு பணிச்சுமை பெரிதாக இல்லை அதற்கு காரணம் அர்ஜுனன் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்பது அவனது கட்டளை. அழகு கொஞ்சும் மங்கலத்தின் முகத்தை பார்த்து செல்பவள் இன்று அது பொலிவிழந்து காணப்படும் போது வேதனை மிகுதியானது.

தன் அம்மாவிடம் அதை காட்டிக் கொள்ளவில்லை. அதை கண்டு இன்னும் நொறுங்கி விடுவார் என்ற பயமும் இருந்தது சந்தியாவிற்கு முயன்ற அளவு இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொள்வாள்.அன்று அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வந்துவிட்டாள் ஓய்வுக்காக தன் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நேரம் தன் வாசல் காலிங் பெல் அடிப்பது அவள் காதுக்கு எட்டியது…. அறையின் கதவை திறந்து கீழே வந்தாள் . ரத்தினம் தன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவரிடம் சிறிது நேரம் பேசி விட்டு தன் அறைக்கு செல்ல மாடிப்படிக்கு தன் கால்களை செலுத்தியபோது, அப்போது அவள் காதுகளில் விழுந்த வார்த்தைகள் அவளுக்கு அதிர்ச்சியை தந்தது.

எஸ்!!!!!!!! அது சந்தியாவின் திருமணத்தை பற்றி தான்…. அப்பா இறந்து கொஞ்ச நாள் கூட ஆகல அதுக்குள்ள தன் திருமணத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன???? என்று இவர்கள் இப்படி நடந்து கொள்வது அவளுக்கு அளவில்லா கோபத்தை தூண்டியது.
ஆனால் மங்கலமும் அதைப்பொருட்படுத்தக்கொள்ளவில்லை. எப்படியாவது திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக இருந்தாள் .அதனால் தான் ரத்தினத்தை வீட்டுக்கு வர சொல்லி இருந்தாள். தன் மகளுக்கு இது பிடிக்காது என்றாலும், தனக்குரிய கடமைகளை முடித்தாக வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது…..

“அண்ணன்…. சீக்கிரத்தில் இந்த திருமணத்தை முடிக்க வேண்டும் .எனக்கு வேற வழி இல்லை” என்றாள் மங்கலம். அதற்கு ரத்தினமும் சரி என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அவர் முன் தன் கோபத்தைக் காட்டக் கூடாது என்று நினைத்து அமைதி காத்தாள். அவர் சென்றதும் அடக்கி வைத்திருந்த கோபத்தை கொட்டித் தீர்த்தால் சந்தியா.

“அம்மா உனக்கு நான் சொல்றது புரியுதா??? எனக்கு கல்யாணமே வேண்டாம் !!!!!!என்னை விட்டு விடு” என்றாள் கோவத்துடன்

“போதும் சந்தியா நீ சொல்றதெல்லாம் கேட்பதற்கு எனக்கு சத்து இல்ல என்கிட்ட…. உன்கிட்ட மல்லுக்கட்டிக் கொண்டு இருக்க ……நான் உன் நல்லதுக்கு தான் செய்கிறேன்…. நம்பி இதற்கு ஒத்துக்கோ!!!!!!! “என்றாள் பதிலுக்கு

தன் அக்காவும் மங்கலத்தின் முடிவிற்கு சப்போர்ட்டாக இருந்தது சந்தியாவிற்கு வருத்தம்தான் இதில். ஒருவேளை இவர்களுக்கு நான் இப்போது பாரமாக இருக்கேனோ ???? என்ற எண்ணம் கூட தோன்றியது அவளுக்கு.

அந்த நேரத்தில் சந்தியாவின் மனமும் கண்களும் தேடியது அவளின் அப்பாவின் குரல்… அப்பா இருந்தால் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்துக் கொண்டு பேசுவார் தன்னை கட்டாயப்படுத்தி ஒரு செயலை செய்ய வைப்பதில் அவருக்கு ஒருபோதும் உடன்பாடில்லை.அப்பா இருந்து இருந்தால் தனக்கு ஒரு பலமாக இருப்பார் என்று எண்ணி கண்களில் நீர் சொட்டியது அவளுக்கு.

“ப்ளீஸ்மா எனக்கு பிடிக்கலைனா…. லீவு இட் … திரும்பத் திரும்ப அதை பத்தி பேசி காயப்படுத்தாதே…” என்றாள் சந்தியா.

சமாதான வார்த்தைகளை அள்ளி போட்டு அவளை சம்மதிக்க வைத்துவிடலாம் என்று எண்ணிய மங்களத்திற்கு அது எதுவும் பெரிதும் கை கொடுக்கவில்லை. வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றுக்கு ஒன்றாக பேசிக்கொண்டு இருந்தனர் .ஆனால் மங்கலம் இதில் தெளிவாகத்தான் இருந்தாள் . இனிமேல் யாரையும் நம்ப போவதில்லை, யாரையும் கெஞ்சுபோவதில்லை தன்னுடைய முடிவு தான் இங்கு நிறைவேற வேண்டும் என்று நினைத்தாள்.

சிவானந்தத்தின் ஆசையும் அதுவே…..தன் மகளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நடத்தி விட வேண்டுமென்று நினைத்தார். அவர் ஆசையை நிறைவேற்றிய நிலையில் பொறுப்பில் மங்கலம் உள்ளதைப் புரிந்து கொண்டாள் அதற்கான பிடிவாதம் தான் இது. ஒருவன் கையில் ஒப்படைத்து விட்டால் தனக்கு இருந்த பெரும் கவலை நீங்கி விடும் என்று நினைத்தவள். கட்டாயப்படுத்தி திருமணம் செய்து விடாலும் ஆனால் அதற்கு அப்பால் ஒரு வாழ்க்கை வாழப் போவது தான் தானே அதில் விருப்பம் இல்லை என்றால் எப்படி அது ஒரு நல்ல வாழ்க்கையை விதைக்க முடியும். இது ஏன் புரியவில்லை என்று ஒரு புறம் சித்தித்துக்கொண்டாள் சந்தியா.

“கடைசியா கேக்குறேன்!!!!!! இதற்கு சம்மதம் சொல்லு பிறகு நான் பார்த்துக்குறேன்….” என்று திட்டவட்டமாக பேசினாள் மங்கலம். அதற்கும் தளராமல் மறுப்பை தெரிவித்துக்கொண்டிருந்தாள் சந்தியா. இதற்குமேல் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என்று முடிவெடுத்த மங்கலம், “நீ என்ன சொன்னாலும் பரவால்ல நான் இந்த திருமணத்தை எடுத்து நடத்தத் தான் போகிறேன்….. உன் அம்மாவை இழந்துவிடக் கூடாது என்று நினைத்தால் பொறுமையாக இரு” என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் மங்கலம்.

தன் அம்மா சொன்ன வார்த்தைகள் அவன் மனதைக் கிழித்து எடுத்தார் போல் இருந்தது. அம்மா சொல்வதில் ஈடுபாடு இல்லை என்றாலும், அம்மாவின் இந்த பிடிவாதத்தை தன்னால் கடக்க முடியாது என்று நினைத்தாள். முட்டிக் கொண்டு வந்த அழுகையை விழுங்கிக் கொண்டு தனது அறைக்கு சென்றாள் சந்தியா..


“இந்த ரத்தினம் பைய அடிக்கடி வந்து இவளை பார்க்கிறானே ஏன்??? என்ன விஷயமாக இருக்கும்??? என்று தன் தலையை வெட்டிக் கொள்ளும் அளவுக்கு இருந்தது குமாரசாமிக்கு.”
தனக்குத் தெரியாமல் ராஜேஸ்வரி ஏதேனும் செய்து கொண்டிருக்கிறாளோ??? என்று சந்தேகம் வெகுநாட்களாக அவனுக்கு இருந்துகொண்டுதான் இருந்தது. தன்னை மீறி அவள் எப்போதும் எதையும் செய்வதில்லை என்ற எண்ணம் மேலோங்கி இருந்தாலும் தன் மகன் விஷயத்தில் தன்னை வெளியில் வைத்துப் பார்ப்பது ஏன் ?? என்ற கேள்வியோடு தான் இருந்தான் குமாரசாமி .

அர்ஜுன் திருமண விஷயத்தில் தான் சற்றும் ஏமாந்துவிடக்கூடாது அவர்களை இன்னும் சற்றுக் கூர்மையாக கண்காணிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு முடியில்லாத வழுக்கை தலையில் கையை வைத்து தடவி கொண்டே யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனின் ஒரே மகள் அனு வர…. சிந்தனையின் விளிம்பில் இருந்த அவனை தன் பக்கம் திருப்பினாள்.

“யோசிச்சுக்கிட்டே இருங்க… ஆனா ஒன்னும் செய்யல… ஒன்னும் சொல்லாதீங்க” என்று கடித்தாள்.

தன் மகள் தன்னிடம் கோபமாக இருப்பதை உணர்ந்த அவன் என்ன விஷயம் என்று தெரிந்தும் தெரியாதது போல் கேட்டான் அவளிடம்.

அதற்கு அவள்,” ஒன்னும் தெரியாத மாதிரி கேக்கறீங்க…. நீங்க யோசிச்சு திட்டம் போடுறதுக்குள்ள அர்ஜுனுக்கு திருமணமாகி குழந்தைக்கு பெயர் வைக்கிற ஃபங்ஷன் வந்துரும் போல இருக்கு….” என்றாள் எரிச்சலுடன்.

“நீங்க ரிலாக்ஸா இங்கே உட்கார்ந்து இருக்கீங்க… அங்க அத்தை ..இல்ல.. இல்ல.. அந்த கிழவி அர்ஜுனுக்கு வேற பொண்ணு பாத்துட்டு இருக்காள். அத்தையாம் அத்தை…பொல்லாத அத்தை என்று ஒருபுறம் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள்.

“அதப்பத்திதாம்மா யோசிச்சுகிட்டு இருக்கேன்… அப்பா கிட்ட விடு நான் பாக்குறேன்” என்றான் ஆறுதலாக.

“சும்மா இருந்தவளை இவன் தான் உன்னை கட்டிக்க போறவன்னு…. சின்ன வயசுல இருந்தே சொல்லி சொல்லி உசுப்பேத்தி விட்டுட்டீங்க… இப்ப மட்டும் அர்ஜுன் வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிகிட்டான் அப்புறம் நான் சும்மாவே இருக்க மாட்டேன்… “என்றாள்

“இல்ல ஸ்விடி…என் டென்ஷன் ஆகுற??? நீ தான் அர்ஜுன் கிட்ட நல்ல விதமாக பேசி அவன் மனசுல இடம் பிடிக்கணும் அதை விட்டுட்டு இப்படி வந்து கோவப்படுற???”

“அவன் பக்கத்துல போய் பேசினாலே… எரிஞ்சு எரிஞ்சு விழறான் …. எப்படிப்பா அவன்கிட்ட போய் பேசுறது என்றாள் முகத்தை பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.

எப்படியாவது அவன் மனதைக் கலைத்து ராஜேஸ்வரி திட்டமிடும் திருமணத்தை நடத்த விடாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் குமாரசாமியின் மனதை ஆட்கொண்டது. அர்ஜுன் பழைய காதலியை துரத்தி விட்டது போல் இதை நாம் சந்தித்து தான் ஆக வேண்டும் போல. முடிச்சுக்களை அவிழ்ப்பதற்கு தான் கடினம் போடுவது சுலபம் .அதிலும் இந்த கிரிமினல் குமாரசாமிக்கு சொல்லவா வேணும்?? எதற்கும் இந்த ரத்தினம் பயலே நம்ம வேவு பார்ப்பது அவசியம் இவனை வைத்து தான் ராஜேஸ்வரி என்ன பிளான் போடறா?? என்பது நமக்குத் தெரியும் ரொம்ப நாள் கண்ட கனவு அவ்வளவு சுலபமாக யாராச்சும் வந்து இந்த சொத்துக்களை உரிமை கொண்டாட விட்டுவிடுவேனா??? இந்த குமாரசாமியை பற்றி இங்கே இருக்கிற உங்களுக்கு தெரியாது. என்னோட உண்மையான முகத்தை பார்த்தால் அம்மாவும் பிள்ளையும் தாங்க மாட்டார்கள் நினைத்ததை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமே அவன் மனதை சுற்றி இருந்தது.


ரத்தினத்தின் பதில் ராஜேஸ்வரிக்கு ஒரு பெரும் நிம்மதியை கொடுத்தது. அவளுக்கு ஒரு தெம்பாக அமைந்தது அவர் சொன்ன விஷயம். வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறி விடக்கூடாதே !!!!! அர்ஜுன் மறுபடியும் முதலில் இருந்து விளையாட்டை ஆரம்பித்து விட்டால்??? தான் கஷ்டப்பட்டது எல்லாம் போய்விடும் என்று நினைத்தாள் அவன் மனம் மாறுவதற்கு முன் நான் இதை செய்து முடிக்க வேண்டும் என்று மனதில் கணக்குப் போட்டுக் கொண்டாள்.

தன் அண்ணனையும் வரவழைத்து கலந்து பேசி முடிவு செய்யலாம் என்று ராஜேஸ்வரி நினைத்து வைத்திருந்தாள். குமாரசாமி முக்கியமான விஷயம் என்றதுடன் சுதாரித்துக்கொண்டு அவன் உடனே வந்து விட்டான். ஆர்வமாக, ராஜேஸ்வரி அவனிடம் விஷயத்தை சொல்ல ஆரம்பித்தாள். ஆனால் குமாரசாமிக்கு அவள் சொன்ன விஷயம் கேட்டு தலை சுற்றுவது போல் இருந்தது. அவனுடைய கிரிமினல் மின்ட் அதற்கான பிளான் போட்டு கொண்டிருந்தது.

குமாரசாமி ,”சரி… கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான் சொல்ற …யார் அந்த அதிர்ஷ்டசாலி பெண்??” என்று கேட்டான்.

அதற்கு ராஜேஸ்வரி,” கொஞ்சம் பொறுங்க… அர்ஜுனும் வர சொல்லி இருக்கேன்.. அவனும் வந்ததுக்கு அப்புறம் எல்லாத்தையும் சொல்றேன்” என்றாள் மங்களம்

பல்லைக் கடித்துக் கொண்டு காத்துக்கொண்டிருந்தான் குமாரசாமி. அப்போது அர்ஜுனன் அங்கு வர “குட்மார்னிங் மா… என்று அவன் ஆரம்பித்தான்.. என்னம்மா காலையிலே பாக்கணும்ன்னு சொன்னிங்க ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல உங்க முகத்த பார்த்தா தெரியுது மா ” என்றான் அர்ஜுன்

“ஆமா அர்ஜுன் …காலையில உன்னை பிடிச்சா தான்… இல்லன்னா வேலை வேலைன்னு சுத்திகிட்டே இருப்ப…முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசணும்” என்றாள் பதிலுக்கு.

“முக்கியமான விஷயமா என்னமா அது ???”என்றான் ஆர்வமாக.

“நானும் இங்கே தான் இருக்கேன்” என்று அவர்களுக்கு நினைவூட்டும் வகையில் குமாரசாமி பேச தொடங்கினான்,” முக்கியமான மேட்டர் மட்டும் இல்ல மாப்ள… ஒரு சந்தோஷமான விஷயம் கூட” என்று மனதுக்குள் பொங்கிக்கொண்டு ஆனால் வெளியில் சிரித்து கொண்டு சொன்னாள்.

“புதிர் போட்டது போதும் மாமா… நீங்களாச்சு சொல்லுங்களேன் “என்று தன் மாமாவை பார்த்து கேட்டான்.

“நானும் அதுக்கு தாண்டா,… காத்து கொண்டு இருக்கேன் இவ தான் வாயை திறந்து சொல்ல மாட்டேங்குற” என்று மைண்ட் வாய்ஸ் குரல் கேட்டது அவனுக்குள்.

“பொறு அர்ஜுன்… உன் வருங்கால மனைவியை பற்றி தெரிஞ்சுக்க இவ்வளவு ஆசையா இருக்கியா????”என்றது ராஜேஸ்வரியின் குரல்.

முன்னிருந்த ஆர்வம் சற்று குறைந்து… ஜொலித்த பல்பு பியூஸ் ஆனது போல்.. அவன் முகம் சுருங்கிவிட்டது. அதை அவன் எதிர்பார்க்கவில்லை, ஆர்வமுமில்லை. ஆனால் யார் ???என்று தெரிந்துகொள்ள நினைத்தான்.

” இத நீங்க போனிலேயே சொல்லி இருக்கலாமே …மா.. எனக்கு மீட்டிங் இருக்கு அப்போ லேட்டா போக முடியாது.. அப்புறம் உங்க கிட்ட பேசறேன் என்றான்.

ஆனால் ராஜேஸ்வரி அவனை விடவில்லை… இழுத்து பிடித்து உட்கார வைத்தாள். அவனும் வேறு வழியில்லாமல், மனமும் இல்லாமல் உட்கார்ந்து இருந்தான். ராஜேஸ்வரி தான் பார்த்திருக்கும் பெண்ணை பற்றி சொல்லிக்கொண்டே போனால் ஆனால் அர்ஜூனுக்கு பெரிதாக உடன்பாடு இல்லை.. அதுதான் திருமணத்தில் ஓகே சொல்லி ஆயிற்று.. இனிமேல் அம்மா யாரை காட்டினாலும் அவள் கழுத்தில் தாலி கட்ட வேண்டியதுதான் இனிமேல் நம்ம கைல ஒண்ணுமில்லை என்று நினைத்தான்.

“நான் முடிவு பண்ணுனா அதை யோசிக்காம செய்யமாட்டேன் இங்கேயும் உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும்.நான் பார்த்திருக்கும் பெண் நம்ம கம்பெனியில் வேலை செய்யும் ரிப்போர்ட்டர் சந்தியா தான்” என்றாள்.

அர்ஜுன் கண்கள் ஆச்சர்யத்தில் மூழ்கி இருந்தது எப்படி நடக்க முடியும் என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டான். குமாரசாமிக்கு, இவளுக்கு மூளை மழுங்கி விட்டதா??? என்ற சந்தேகம் வரத் தொடங்கியது.

“என்னம்மா இப்படி சொல்ற?? கம்பெனில வேலை பார்க்கிற ஒரு சாதாரண பெண்ணை நம்ம அர்ஜூனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறியா?? இது எப்படி சரியா வரும்னு சொல்ற?” என்றான் குமாரசாமி.

“இல்ல.. சாதாரண பெண்ணு சொல்லதிங்கண்ணா… அர்ஜுன் அப்பா கூட தான் இங்க வேலை செஞ்சுகிட்டு இருந்தவர் தான்…என்னை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இந்த குடும்பத்தையும் ஆஃபீஸ்யும் நல்லபடியா பார்த்துக்கிட்டாரே”

“ஆமா அந்த பைய பஞ்சப் பாட்டு பாடிக் கொண்டிருந்தான்… திடீர்னு முதலாளி ஆகிட்டான்… எனக்கு சலாம் வச்சவன்கிட்ட நான் கைகட்டி வேலை பார்க்கிற அளவுக்கு கொண்டு வந்து விட்டுட நீ…. அதனை மறக்க முடியுமா???” என்று தனது பழைய நினைவுகளை யோசித்துக்கொண்டிருந்த குமாரசாமியை நான் சொல்றது சரிதானே அண்ணே என்று கேட்டாள்.

“அது நம்ம காலத்துல இப்போ இருகுற ஜன்ரேஷன் இதை விரும்ப மாட்டாங்க!!!! அதனால சொன்னேன்.. இருந்தாலும் அர்ஜுனுக்கு எவ்வளவு வசதியான வீட்டில் இருந்த கூட சம்பந்தம் வந்துச்சு அத விட்டுட்டு இப்படி பண்றது கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு” என்றான் அப்பாவி போல்.

நான் எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும் கண்டிப்பாக இந்த முடிவை அர்ஜுனுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன் என்று சொல்லி அர்ஜுன் பக்கம் அவள் பார்வையைச் செலுத்தினாள்.

“அர்ஜுன், என்ன சொல்ற?? உனக்கு இதில் சம்மதமா” என்று கேட்டாள் ராஜேஸ்வரி.

அம்மா சொல்வது கூட காதில் விழாமல் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தான் அர்ஜுன்.

கதையை பொறுத்து இருந்து பார்ப்போம் …..

Advertisement