Advertisement

ஆசை -7

ராஜேஸ்வரி தன் வீட்டின் தோட்டத்தில் உட்கார்ந்துக் கொண்டு நியூஸ் பேப்பரில் உள்ள முக்கியமான செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தாள். அவள் எண்ணத்தில் அர்ஜுனின் திருமணம் இன்னும் சில தினங்களில் நிறைவேற்றவேண்டும் என்று ஒருபுறம் சிந்தனை அலை வீசிக் கொண்டிருந்தது அவள் கண்களில் மணப்பெண் தேவை என்ற விளம்பரத்தை கண்டபோது……

அப்போது வீட்டு வேலையாள் ஒருவன் வந்து அவரை காண ஒரு முதியவர் வந்திருக்கிறார் என்று சொன்னான். வரச் சொல்லட்டுமா ????? என்று கேட்டுவிட்டு ராஜேஸ்வரியின் பதிலையும் பெற்றுக்கொண்டு சென்றான்.

இடைப்பட்ட நேரத்தில் தனது செல்போனை எடுத்து அதில் ஜோதிடர் நம்பரை டயல் செய்து ஒரு நல்ல நாள் பார்க்க வேண்டும்…. இந்த மாதத்தில் அர்ஜுனின் நிச்சயதார்த்தம் நடைபெற வேண்டும் என்றாள்…. அவள் போனை வைக்கும் நேரம் , “வணக்கம் அம்மா” என்ற குரலுடன் ரத்தினத்தின் தலை தென்பட்டது…

அவரை உபசரித்து, நேரடியாக விஷயத்திற்கு வந்தாள். இருவரும் அர்ஜுன் திருமணத்தையும் சிவானந்ததின் பதிலையும் கேட்டறிந்தாள்… “என்ன ரத்தினம் அவர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்களா”???? என்று வினாவினாள்

“சந்தியாவின் அம்மாவிற்கு இதில் உடன்பாடு தான்…. ஆனால், சிவானந்ததிற்கு கொஞ்சம் தயக்கம் இருக்குமா…”என்றார்

“இதில் என்ன தயக்கம் இருக்க முடியும் ????வசதியான, கௌரவமான இடத்தில் தங்கள் பெண்ணை கட்டிக் கொடுக்க பெற்றோர்களுக்கு கசக்குமா??? என்று எண்ணிக்கொண்டாள்.

தங்கள் உழைப்பால் தான் இந்த சாம்ராஜியத்தை அமைத்து இருக்கிறோம்… ஏன் இவர்கள் இதில் தயங்க வேண்டும் ???என்று நினைத்தாள். சந்தியாவை தான் தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் அவளின் தைரியம்தான்…. இப்பேர்ப்பட்ட பெரிய நிர்வாகத்துடன் மோத நினைக்கும் எண்ணம் அவளுக்கு பிடித்தது… இந்த குடும்பத்திற்கு வரும் பெண் பணமோகத்தை விட வெளியுலகத்தில் அவள் கொண்டு இருக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் தான் முக்கியம் அதை அவளிடம் இருப்பதை இந்த சிமெண்ட் பேக்டரி கேஸ் மூலமாக அறிந்தாள் அவளை மருமகள் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

தன் கணவன் இறந்த பிறகு , வக்கிரபுத்தி கொண்ட ஒரு சில ஆண்வர்கத்தினிடம் இருந்து அவள் பட்ட கஷ்டம் அதிகம்தான். ஒரு பெண்ணாக இருபின்னும் அவள் அவளது துறையில் எளிதாக வெற்றி பெற முடியாது ,அவள் திறமையானவராக இருந்தாலும் கூட… பெண்ணென்றால் வீட்டில்தான் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று ஒரு கும்பல் குடைச்சல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கும்… அதிலும் கணவன்
இல்லையென்றால் அவளை வாழ்வின் வெற்றிப் படிக்கட்டில் ஏற வழி விடுமா என்ன??????

அந்த சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்ற ராஜேஸ்வரி பெரும்பாடுபட்டாள்…. தன் குடும்பப் பெருமையை அவள் மகள் அடக்கம் செய்தது… அவளுக்கு குடும்பத்திற்கு மட்டுமல்ல நிர்வாகத்திலும் பெரிய இழப்பை அடையச் செய்தது.. மறுபடியும் அப்படி நடக்காமல் இருக்க தனக்குப் பின் ஒரு நல்ல திறமைசாலியான மருமகளாக இருப்பவள் தான் வரவேண்டும் என்று யூகித்து சந்தியாவை தேர்வு செய்தாள் அதனால்தான் என்னவோ எப்பேர்பட்டாவது அவளை இந்த வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து ரத்தினத்தின் உதவியை நாடி, அவரை சம்மதம் பேச அனுப்பி வைத்தாள்….

ரத்தினம், “நீங்க கவலைப்படாதீங்க மா…. எல்லாம் நான் பார்த்துக்குறேன்… நீங்க எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சி இருக்கீங்க…. உங்களுக்காக நான் இதை செய்ய மாட்டேனா????? விரைவில் இதை முடித்துவிடுவேன்” என்று ஆறுதலாக பேசினார்.

நல்ல முடிவை எதிர் பார்க்கிறேன் என்றாள் பதிலுக்கு ……அவரும் தலையை அசைத்து விட்டு சென்றார்..

************
இயல்பை விட சற்றுச் சோர்வாக தான் காணப்பட்டாள் சந்தியா. முன்பு தனது வேலைகளை சற்றும் ஓய்வில்லாது முடிப்பவள் .. அதில் அவளுக்கு மனதளவில் உற்சாகத்தை கொடுத்தது. ஆனால் இப்போது அதை அனுபவிக்க முடியவில்லை …. வேறு வழி இல்லை … இதை கடந்து தான் தீர வேண்டும் என்று நினைத்தாலும் நாம் தொடங்கும் அல்லது செய்யும் விஷயத்தில் முழு ஈடுபாடு இல்லை என்றால் அதில் வெற்றிபெற முடியாது….. அந்த சரியான நோக்கை நம்மால் அடைய இயலாது …

அதுபோல தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை… முயன்றாலும் அதில் அவளு க்கு தோல்வியே கிடைத்தது. வீட்டில் இதை பற்றி சொன்னால் அவர்கள் மகள் கஷ்டத்தில் இருக்கிறாள், வேலைக்கு அனுப்பி வைக்க யோசிப்பார்கள்???? என்றும் எண்ணிக்கொண்டாள் அப்புறம் தன் கனவுக்கு ஒரேயடியாகத் தடை போட்டால் என்ன செய்வது??? என்ற பயமும் இருந்தது..

மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்தாள் சந்தியா. இப்படி கஷ்டப்பட்டு அவளால் ஒரு வாரம் மட்டுமே தள்ள முடிந்தது புதிய நிர்வாகத்துடன்…. அதில் அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அர்ஜுன் பெரும்பாலும் இந்த ஆபீஸுக்கு வருவதில்லை… தன் நண்பனின் மேற்பார்வையில் தான் இது இயங்கிக் கொண்டிருந்தது….. புதிய மாற்றத்திற்கு அனைவரும் சகஜமாக மாறிவிட்டாலும் தன்னால் மாற முடியாமல் தவித்துக் கொண்டுதான் இருந்தாள்.

அர்ஜுனையும் தன்னையும் இணைத்து பவி செய்யும் குறும்புக்கு எல்லாம் இவளுக்குக் கோபம் தலைக்கு ஏறியது …அவளும் சந்தியாவிடம் பலமுறை திட்டு வாங்கியும் விட்டபாடில்லை தனது வேலையை செய்து கொண்டு தான் இருந்தாள் அவள்.

அப்படி ஒருநாள் தன் நண்பியை கோபத்துடன் கத்திவிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தாள் தனக்கு வந்திருந்த ஈமெயில்களை எல்லாம் செக் செய்துக் கொண்டுஇருந்தாள் அப்போது அவளது செல்போன் அவளை அழைத்தது, அதை எடுத்து பேசத் தொடங்கியவள் எதிர்முனையில் தன் அம்மா மங்கலம் கரகர குரலில் பேசினாள்.

“என்னமா இந்த நேரத்திற்கு கூப்பிட இருக்கா??”

தன் அம்மாவின் திணறல் மட்டும் அழுகை குரல் சந்தியாவிற்கு படபடக்க வைத்தது. என்ன நடந்தது என்று புரியாமல் தவித்தாள்.

“அம்மா கொஞ்சம் அழாமல் பேசுமா…. ஏன் அழற??? அப்பா எங்க??? அப்பா கிட்ட போனை கூட அவருடன் நான் பேசுகிறேன்” என்றாள்

இன்னும் மிகுதியான அழுகை குரலில் மங்கலம் பேசினாள், “அப்பாவிற்கு ஆக்சிடென்ட் ஆச்சுமா ஹாஸ்பிடல இருக்காரு….. சீக்கிரம் வா” என்று முடித்தாள்.

அந்த ஒரு நிமிடம் அவளுக்கு தன்னை சுற்றி நடப்பதெல்லாம் பிரமை போல் தோன்ற, தான் தெளிவாகத்தான் இருக்கிறோமா??? இல்லை கனவில் இதை கேட்டோமா ??என்று புரியாமல் விழித்தாள்.

“என்னம்மா சொல்ற??? அப்பாவுக்கு என்ன ஆச்சு??? என்றாள் மறுபடியும், “உடனே வா எனக்கு பயமா இருக்கு” என்று போனை மங்கலம் துடித்தாலும் அந்த அதிர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை தனது பக்கை எடுத்துக் கொண்டு கண்களில் நீர் வழிய ,எதிரில் வந்து சிஃ ப் அவளிடம் ஏதோ சொல்ல அதைக் கவனிக்காமல் உடனே வெளியேறினாள்.நிதானமில்லாமல் எப்படியோ அவள் சமாளித்து விட்டு ஆஃபீஸின் வாசலுக்கு வந்து விட்டாள் இதற்கு மேல் அவளால் நிற்கக்கூட முடியவில்லை….

அவளது கால்கள் தரையில் பட மறுத்தது அவளது கண்கள் தெளிவாக பார்க்க முடியாதது போல் உணர்ந்தாள் அவள் தள்ளாடியபடி ஆஃபீஸில் வெளி வாசலுக்கு வந்தபோது அர்ஜுனின் கார் வந்து வேகமாக நிற்க அந்த வேகத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தாள்.

காரிலிருந்து இறங்கிய அர்ஜுன் அவளுக்கு என்னவாற்று என்று பார்க்க வெளியே வந்தான் ஏனென்றால் அப்போது காரை ஓட்டி கொண்டுவந்தது அவன் தான். இவள் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருப்பதைப் பார்த்து அவனுக்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் தனது வண்டியில் உள்ள வாட்டர் பாட்டிலை எடுத்து வந்து அவளை தன் கையில் ஏந்தி அதில் கொஞ்சம் நீரை எடுத்து தெளிக்க செய்தான்.

இவன் இறங்கியதும் அங்கே இருந்த சில பேர் அவனுக்கு உதவ முயன்றனர் அவர்களின் உதவியை தவிர்த்த அவன் அவளுக்கு நன்கு காற்று வர வேண்டும் யாரும் கூட்டம் போட வேண்டாம் என்று சொல்லி கலைத்தான். அவன் தெளித்த சில துளிகள் அவளது ஆணையாக நீர் பெருகிய கண்களில் விழுந்தது.

அதில் அவள் இமைகள் லேசாக அசைய தொடங்கியது …மங்கலாக தெரிய தொடங்கிய போது மறுபடியும் அவள் இமைகள் மெல்லமாக கண்மூடியது அப்போது “மிஸ் சந்தியா மிஸ் சந்தியா “என்ற ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருக்க அவளோ கண்களை முழுவதுமாக திறந்தாள்.

“அப்ப்பா ” என்று சொல்லிக்கொண்டு விருட்டென்று எழுந்தாள். சுயநினைவுக்கு வந்தவள் என் கண்களில் வெள்ளம் போல் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்தது.

“இவள் ஏன் இப்படி அழுகிறாள் ஏதேனும் பிரச்சினை இருக்குமோ “என்று மனம் யோசித்தது ஆனால் ஒரு புறம் அது அவளுடைய பர்சனல் மேட்டர் நமக்கு தேவை இல்லாத விஷயம் என்று ஒதுக்கினான்.

“தேங்க்ஸ்” என்று ஒரு வார்த்தையில் முடித்துக்கொண்டு எழுந்து நின்று நடக்கத் தொடங்கினாள் இவள் மனதும் உடலும் சரியில்லை என்று அவனுக்குத் தோன்றியது. “சந்தியா ஆர் யூ நாட் ஓகே ரைட்?? என்றான். அதுக்கு, அவள் , “பைன் ஆல் ரைட் தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு நகரத் தொடங்கினாள் ஒரு அடி கூட முழுவதாக எடுத்து வைக்க முடியவில்லை ஒருகால் முன்னேயும் பின்னேயும் என்று தடுமாறினாள்.

தன் தேகத்தில் சக்தி இல்லாதது போல் உணர்ந்த அவள் அப்பா எப்படி இருக்கிறாரோ?? என்ற பயமும் அவளை பயமுறுத்தியது அர்ஜுன் அவன் முன் வந்து அவள் வழியை மறைத்து

” இப்போது நீ தனியாக சொல்வது சரியாகாது என்னுடன் வா நான் ட்ராப் செய்து விடுகிறேன்” என்றான்
“இவனா இப்படி பேசுகிறான்???” என்று யோசித்து வேண்டாம் என்று மறுத்தாள்.

அவன் விட்டபாடில்லை, “நீ போய் எங்கேயாவது ஆக்சிடென்ட் செய்தால் கம்பெனி பேரும்தான் கெடும் அது கம்பெனிக்கு அவமானம்” என்றும் சொன்னான்.

“அதானே பார்த்தேன் இவனாச்சும் நல்லவிதமாக நடந்து கொள்வதா??? என்று எண்ணிக்கொண்டாள்.
அவன் இனிமேல் பேசிக் கொண்டிருக்க வேண்டாம் என்று நினைத்து, அவள் கையை பிடித்து இழுத்து வந்து காருக்குள் அவளைத் தள்ளினான். அவளால் மறுக்க முடியவில்லை அவள் இருந்த மன வேதனையோ வேறு தான் காரை வேகமாக செலுத்தினான்.

இடையில் எந்த இடத்திற்கு போக வேண்டும் என்று அவளிடம் விசாரித்து கொண்டவன் அவன் அவளது முகத்தை தன் முன் கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டு காரை ஓட்டினான். அவளது கண்களும் கன்னமும் சிவந்து, கண்களில் இடைவிடாது கண்ணீர் பெருகிக் கொண்டே இருந்தது. இன்னும் வேகமாகவே காரை செலுத்த செய்தான்.

பத்து நிமிடங்களில் ஹாஸ்பிடல் வந்தடைந்ததும் வேகமாக கதவை திறந்து கொண்டு ரிசப்ஷனை நோக்கி ஓடினாள் ரிசப்ஷனில் அப்பாவை பற்றி தெரிந்து கொண்ட ஆபரேஷன் தியேட்டர் செல்லும் வழி கேட்டு கொண்டு போனாள்

காரை எடுக்க தொடங்கியவன் அவன் மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு நெருடல் இருந்தது அதனால் மனம் இல்லாமல் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். தன் அம்மா ஆபரேஷன் தியேட்டர் வாசலில் நின்று அழுது கொண்டிருப்பதைப் பார்த்தாள் அவளது சித்தப்பா குடும்பத்தினர் உடன் இருந்தனர். தன் அம்மாவைக் கண்டதும் அவள் அருகில் சென்று , “அப்பாவுக்கு என்னாச்சும்மா ??எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு?? எப்படி இருக்கார்??” என்று வினாவினாள்.

கரகர குரலில் கூறினாள் அவள் ,”உங்க அப்பா மார்க்கெட்டுக்கு போறேன்னு சொல்லி விட்டு போனார் கொஞ்ச நேரத்தில் அவர் மொபைல்ல இருந்து போன் வந்துச்சு பாத்தா உங்க அப்பாவுக்கு ஆக்ஸிடன்ட் உடனே ஹாஸ்பிடலுக்கு வாங்க” என்று ஒரு நர்ஸ் சொன்னதாக சொன்னாள் மங்கலம்.

” நீ கவலைப்படாத!!! அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது” என்று சந்தியா அம்மாவிற்கு ஆறுதல் கூறினாலும் அவள் மனம் சஞ்சலம் அடைந்து கொண்டு தான் இருந்தது. இதையெல்லாம் ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் அவள் படும் வேதனையை ஒரு காலத்தில் அவனும் அல்லவா அனுபவித்தான். அவள் சித்தப்பா அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவளுக்கு ஏதோ நடந்து விடுமோ என்ற பயம் ஓடிக்கொண்டுதான் இருந்தது. யாருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதுதான் டெஸ்டினி என்பார்கள் அது கெட்டவர் நல்லவர் என்று பேதம் பார்ப்பதில்லை அது விளையாட்டில் நாம் யாவரும் பொம்மைகள் தானே என்று எண்ணினான் அர்ஜுன் சுவற்றில் சாய்ந்தபடி.

அங்கிருந்து போக மறுத்தாலும் இதில் நமக்கு என்ன சம்பந்தம்??? என்று கேள்வி கேட்டுக் கொண்டு நகர்ந்தான் அர்ஜுன்.

சிறு வயதில் நமக்கு முதல் அஸ்திவாரம் போட்டவர் அப்பா தானே அந்த சைக்கிள் பிடியைப் பிடித்து கொண்டு பேலன்ஸ் செய்து கொண்டு நம்மை தள்ளி சென்று போவார் அவர் இருக்கும் நம்பிக்கையில் தான் அந்த குழந்தை அதில் தைரியமாக காலை வைத்து எடுத்து வைத்து மிதிக்கும் அப்பா இருக்கிறார் கீழே விழ விட்டுவிட மாட்டார் அவர் நம்மை பாதுகாப்பார் என்று தானே நாம் நம்புகிறோம். அதே குழந்தை சற்று வளர்ந்த பின் இந்த உலகத்தில் தன் சொந்த கால்களை வைத்து யார் துணையும் இல்லாமல் தன் மரணத்திற்கு அப்பாலும் யாரையும் எதிர்ப்பாக்காமல் தன்னம்பிக்கையுடன் முன்னேறி செல்ல வேண்டும் என்று அந்த தகப்பன் பின்னாடி நின்று தன் குழந்தையும் முன்னேற்றி செல்வார் அதுவே ஒரு அப்பா தன் குழந்தைக்குப் போடும் முதல் நம்பிக்கை விதை. உன்னால் முடியும் என்று சொல்வதே அவரே தானே. அவள் அப்பாவை நினைத்து அழுகை பெருமளவில் வந்தாலும் தன் அம்மா முன்னாடி அதை காட்டினால் அவளும் உடைந்து விடுவாளே என்று எண்ணிக்கொண்டு அடக்கி வைத்துக் கொண்டாள் சந்தியா.

ஆபரேஷன் தியேட்டரில் ஒரு பல்பு எரிந்து கொண்டே இருக்கும் அது எப்போது ஆப் ஆகும் என்று எல்லோரும் காத்திருப்பார்கள். அது அணைந்தவுடன் டாக்டர் வந்து ஒரு நல்ல செய்தியைச் சொல்வாரா ??? என்று அனைவரது கண்களும் ஏங்கும் அதுபோலத்தான் சந்தியாவும் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆனால் விதி தான் வழியாச்சே!!! டாக்டர் ஒருவிதமான சோகம் முகத்துடன் காணப்பட்டார் அனைவருக்கும் சந்தேகம் எண்ணம் மேலோங்கி இருந்தது.

ஒரு மூலையில் சந்தியா நின்று அழுது கொண்டிருந்தவள் முன் வந்து நின்று கையை பிடித்து கேட்டாள் இல்லை கெஞ்சினாள் என்றே சொல்லலாம்.

” டாக்டர் என்னாச்சு??? அப்பா நல்லா இருக்காரா?? போய் பார்க்கலாமா ??ரொம்ப பிளட் லாஸா டாக்டர்?? என்று தனது கேள்விகளை அடுக்கிக் கொண்டும் , அழுது கொண்டும் கேட்டாள் அப்போது மாணிக்கம் வந்து அவளை சமாதானப்படுத்தி, “பதறாதே சந்தியா…. டாக்டரை கொஞ்சம் பேசவிடு” என்றான் அவன்.

டாக்டரும் தயங்கிய நிலையுடன் சொல்ல ஆரம்பித்தார், “சாரி சார் எவ்வளவோ ட்ரை பண்ணியும் காப்பாத்த முடியல கொஞ்சம் சீக்கிரம் கொண்டு வந்து இருந்தா காப்பாற்றியிருக்கலாம்” என்று பேரிடி அந்த குடும்பத்தின் தலையில் போட்டார் . பாடியை போர்மாலிட்டீஸ் முடிச்சு வாங்கிக்கொங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தவரை சந்தியா அவரது கையைப் பிடித்து,” ப்ளீஸ் டாக்டர் அவரைக் காப்பாத்துங்க உங்க கால்ல விழுகிறேன்” என்று ஆர்ப்பாட்டமாக கத்தினாள். மங்கலம் அதே இடத்தில் இதைக் கேட்டு கொண்டு பிணம் போல் அசைவின்றி உட்கார்ந்து இருந்தாள்.

கதையை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement