Advertisement

ஆசை -6

நள்ளிரவு மணி பன்னிரெண்டை தாண்டி கடிகாரம் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தது… எவ்வளவு புரண்டு புரண்டு படுத்தாலும் நித்திரை வரவில்லை என்று கவலையோடு எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள் சந்தியா. ஓய்வு நன்றாக எடுக்க வேண்டும் என்ற நினைப்பில் வந்தவளுக்கு, உடம்பு உறக்கம் வேண்டும் என்று கேட்டாலும் ஆனால் மனதோ வேறு சிந்தனையுடன் அலைமோதிக் கொண்டிருந்தது. அதற்கு காரணம் தன் அம்மா சொல்லிவிட்டு சென்ற விஷயம் தான். அது அவள் மனதை நெருடிக் கொண்டே இருந்தது.

அவன் யாரென்று தெரியாது ????அவனை அவளுக்கு பிடிக்கவில்லை…. அவன் முதல் சந்திப்பிலேயே நடந்ததும் சரி இல்லை…. தனது சகோதரி குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை வந்தபோது கூட அவளது கணவனை சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுத்தவள். திருமண வாழ்க்கையில் மனம் பொருந்திப் போகவில்லை என்றால் அதை எத்தனை முறை ஒட்டினாலும் அது ஒட்டாது. கண்ணாடி பலகையில் கற்களை எறிந்து விட்டு அதை குறை சொல்ல முடியுமா??? வார்த்தைகளை வீசிய பின் மனதை சுக்குநூறாக உடைத்த பின் எவ்வளவு மருந்து போட்டாலும் அது சரி செய்வது கடினம்… குறைகள் நிறைகள் இரண்டும் இருக்கலாம் ஆனால் அதை பாசிட்டிவாக நினைத்து நாம் எடுத்து செல்லும் விதத்தில்தான் உள்ளது நமது திருமண வாழ்க்கை. புரிதல் என்ற வார்த்தை திருமண பந்தத்தில் இல்லை என்றால் அதில் எப்படி சந்தோசம் என்ற வார்த்தை புலப்படும்… அழகிய சிலை வெறும் கல்லால் மட்டும் வருவதல்ல அது சிற்பியின் உழியில் இருந்தும் வருகிறது…. இரண்டும் சேர்ந்து இருந்தால் தான் நமக்கு கண்களுக்கு அழகான வடிவம் கிடைக்கும்…. அது போல் அல்லவா???? புரிதலுக்கு முற்படாமலே கசப்பு மிகுந்த பாகற்காயை கடித்துவிட்டு கசக்குதே என்று சொல்லி என்ன பிரயோஜனம்?????இந்தக் காலத்தில் காதல் திருமணங்கள் கூட கோயில் வாசலில் அல்லது ஸ்டேஷன் வாசலில் தொடங்கி கோர்ட் வாசலில் இருந்த முடிவடைகிறது….

முன்பு பரிச்சயமில்லாத முகம், பழகியது கிடையாது…. பிடித்தது ,பிடிக்காதது என்று பரிமாறிக் கொள்வதும் கிடையாது …..அந்த நபரை நம்பி தான் அந்தப் பெண் தன் புகுந்த வீட்டுக்கு வருகிறாள். இத்தனை வருடங்கள் ஆசையாய் பார்த்து வளர்ந்த பெற்றோர்களை விட்டு அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையும், உன் பெற்றோர்கள் தனக்கு ஒரு நல்ல வழியை தான் ஏற்படுத்தித் தருவார்கள் என்ற மன உறுதியுடன் தான் வருகிறாள் .கணவனுக்கு இதை தெரிந்து கொண்டு தன் துணையுடன் வாழ்க்கையை தொடர்ந்தால் பல மனக் கசப்புகளை தவிர்க்கலாம்….

இது போன்ற எண்ணங்களை அவள் தூக்கத்தை அறவே தடுத்தது … அவனைப் பற்றிய எண்ணங்கள் நினைக்கவே கூடாது என்று எண்ணிக் கொண்டவள், ஆனால் அவனுடைய நினைவு அவளை தோற்கடித்து கொண்டுதான் இருந்தது … இதை நினைக்கக்கூடாது என்று அறிவு எத்தனை முறை சொன்னாலும், மனது அந்த இடத்தில்தான் சுற்று சுற்றி வரும்…. அப்படி சுற்றிய படியே அன்று இரவு நட்சத்திரங்களும் நிலாவும் மறைய கதிரவன் தன் கதிர்களை ஏற்றுக்கொண்டு வானங்களுக்கு இடையே பட்டுப்போல் மேனியுடன் எட்டிப் பார்த்த நேரம் வந்தது…

அவளுடைய கண்கள் சிவப்பு கலர் வண்ணம் பூசிக் கொண்டது போல் மாறியது.. மெல்லிய இமைகளை ஒருவழியாக மூட செய்தது…அவளும் உறங்கலானாள்…

செல்போன் இடை விடாது ஒலித்துக் கொண்டு இருந்தது… ஏதோ சத்தம் கேட்கிறது…தனது காது அந்த சத்தத்தை கேட்டாலும், கண்கள் அதற்கு ஒத்துழைக்க மறுத்தது.. அவளால் கண்களை முழுவதுமாக திறக்க முடியவில்லை. இடது புறக்கண்ணால் லேசாகத் திறந்து கீழே கிடந்த செல்போனை தன் கைகளை வைத்து ஒரு வழியாக அதை கண்டுபிடித்து…. யார் ???? என்று செல்போனில் உள்ள ஸ்க்ரீனில் பார்த்தாள். அவளால் அதை நிதானமாகப் பார்க்க கூட முடியவில்லை , தலையை லேசாக அசைத்து தன் நிலைக்கு வந்த பின் அப்போது அவள் கண்களில் தெரித்தது நேரம் பதினொன்று முப்பதை நெருங்கிக் கொண்டிருந்தது….

கண்களை கசக்கிக் கொண்டு தனது கண்ணாடி கதவின் வெளியே பார்வையை செலுத்தியபோது சூரியன் பல்லைக்காட்டி சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். தலையில் கையை வைத்து நேரமாகி விட்டதே என்று சலித்து கொண்டாள்… இரவு முழுவதும் ரூமில் லைட் எரிந்ததால் அவளை யாரும் தொந்தரவு செய்யவில்லை… உடனே தனது செல்போனை ஆன் செய்து மிஸ்டுகாலில் இருந்த சிஃப் எண்ணுக்கு டயல் செய்தாள்.

சில விஷயங்களைப் பேசிவிட்டு, ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு அதற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்றார்… ஒரு வழியாக காலை வேலைகளை முடித்து கொண்டு கிளம்ப போகும் போது தன் அம்மா சொன்ன விஷயம் மறுபடியும் தன் மனதில் புகுந்தது, இருந்தும் தன் முடிவை அம்மாவிடம் சொன்ன பின்பும் அவளுடைய உள்ளுணர்வில் இந்த விஷயத்தில் தான் கையில் எதுவும் இருப்பதில்லை என்று சொல்லிக்கொண்டே இருப்பது போல் உணர்ந்தாள்…

தன் அம்மாவிடம் இதைப்பற்றி பேச விரும்பவில்லை என நினைத்து அவர் கூட பேசுவதை தவிர்க்க நினைத்தாள்.. அப்பா இதில் விலகி நிற்பது ஏன்??? என்று மனதில் தனக்குள்ளே ஸ்ரீராமஜெயம் போல் சொல்லிக்கொண்டே இருந்தாள்.. அவர் தானே தனக்கு பெரிய பலம் … அவர் ஒரு விஷயத்தில் கூட நின்றால் தனக்கு பல மடங்கு பலமாக அமையும் என்பது அவளது எண்ணம் … தனது அனைத்து பருவங்களிலும் எடுத்த எல்லா முடிவுகளிலும் கூட இருந்தது அவரின் நம்பிக்கையும் சப்போர்ட்டும் தான்.

இவள் அவருக்கு டேட் லிட்டில் பிரின்சஸ் அல்லவா???? இவையெல்லாம் தன் தலையில் சுற்றிக்கொண்டு இருக்க வீட்டுக்குள் வந்து அவள் முன் நின்று ஒரு சொடக்குப் போட்டு நிலைக்கு வர செய்தாள் பவி.

“நீ எப்போ வந்த ???” என்று வினவினாள் சந்தியா

” சரியா போச்சு நான் வந்தது கூட தெரியாமல் யோசிச்சுட்டு இருக்க …. உனக்கு கால் பண்ணுனேன் …. நீ எடுக்கல… அதான் வந்துட்டேன்.. சரி நான் இப்பதான் ஆபீஸ் கிளம்பறேன் வா போகலாம்” என்றாள்

“ஏன் உன் பேஸ் ரொம்ப டல்லா இருக்க …கண்களும் கூட சிவந்துருக்கு…. வாட் ஹேப்பன் டியர்???

“ஒன்னும் இல்லப்பா…. சோர்வாக இருக்கேன் அதான் ….இம்பார்ட்டண்ட் மீட்டிங் இருக்குன்னு சொன்னார் வா போகலாம் இப்பவே லேட் ஆச்சு …”என்று சொன்னாள்

ஆஃபீஸ்க்கு வரும் வழியில் சந்தியாவிற்கு போதும்டா சாமி அவகிட்ட சொன்னா ஆபீஸ் புல்லா கூட சொல்லி விடுவாள் என்று என்னும் வகையில் அந்த அளவுக்கு தொல்லைச் செய்து கொண்டு வந்தாள் பவி . இவள்ளோ ஆபீஸ் வந்து சேர்ந்தா போதும் என்று போலிருந்தது.

உள்ளே நுழைந்தவளே அவசரமாக சிஃப் ரூமுக்கு அழைத்து சென்றாள் பவி . ஏன் திடீரென்று இந்த ரூமுக்குள் அழைத்து செல்கிறாள் ??? என்று தெரியாமல் விழித்தாள். ரூமுக்குள் சிஃப் சோகமாக முகத்துடன் இருந்தது அவளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தீவிர யோசனையில் இருந்த சிஃப், இந்த விஷயத்தை எப்படி சொல்வது???? என்று யோசித்து, சொல்லித்தான் ஆக வேண்டும் வேறு வழி இல்லை என்று நினைத்தார்.

” என்ன சார் எனி ப்ராப்ளம்????” என்று தொடங்கினாள் சந்தியா

“பெரிய ப்ராப்ளம் தான்… அது உனக்கு ரொம்ப ஷாக்கா தான் இருக்கும்” என்று புதிர் போட்டுப் பேசினார்…

என்ன நடக்கப் போகுது??? என்று யூகிக்க முடியாமல் அமைதியாக இருந்தாள் … அப்போது மேனேஜிங் டைரக்டரின் உதவியாளர் வந்து அறிவிப்பை குடுத்தார் “இந்த ஆபீஸ் ராஜேஸ்வரி குரூப் கீழே இனிமேல் செயல்படப் போகிறது” என்று .

ஆச்சரியத்துடன் பார்த்த சந்தியா இது எப்படி சாத்தியம் ???ஒரே இரவில் எப்படி அலுவலகத்தின் நிர்வாகம் மாறும்?? இது என்ன மேஜிக்கா ?? இல்லை நான் தான் இன்னும் தூக்கத்தில் இருந்து விழிக்க வில்லையா ???? என்று கேள்விகள் சிறிய பறவை சிறகடித்துப் பறந்து கொண்டிருப்பது போல் தன் தலையை சுற்றி சுற்றி வருவது போல் உணர்ந்தாள் .. சுய நிலைக்கு வந்தபின் சிஃப் யிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள்.

ஏன்?? என்ன ஆயிற்று பழைய நிர்வாகத்துக்கு?? ஏன் இந்த திடீர் மாற்றம்??? இது போன்ற கேள்விகளுக்கு அ பதில் அவளுக்கு கிடைக்கவில்லை யாரிடத்திலும்.அலுவலகத்தில் முதல் மற்றும் முக்கியமான மீட்டிங் இருக்கு கண்டிப்பா எல்லாரும் அட்டென்ட் பண்ணு என்று சொல்லி விட்டு சென்றார் அந்த நபர்.

இது அந்த திமிர் பிடிச்சவனுடைய வேலையாகத்தான் இருக்கவேண்டும். அவன் தான் ஏதாவது பண்ணி இந்த கம்பெனியை வாங்கி இருப்பான் இவனுக்கு போய் என்னை பெண் கேட்கிறார்களா ???அதற்கு இந்த மாடியிலிருந்து தற்கொலை செய்து கொள்வதே மேல் என்று நினைத்து கடும் எரிச்சல் கொண்டாள்.

அனைவரும் மீட்டிங் ரூமில் உட்கார்ந்து கொண்டு என்ன அறிவிப்பாக இருக்கும்??? நிர்வாகம் யாரை புதிதாக நியமிக்கப் போகிறார்கள்???? யாரை வேலையிலிருந்து தூக்கப் போகிறார்கள்???? என்று எல்லோரும் கூடி கூடி பேசித் தொடங்கினர்.ஆனால் சந்தியாவிற்குகோ நெருப்பின் மேல் உட்கார்ந்து இருப்பது போல் தோன்றியது. எது நடந்தாலும் பரவாயில்லை இவன் கம்பெனியில் வேலை பார்ப்பதை விட வேறு என்ன அவமானம் தனக்கு இருக்க முடியும் என்று எண்ணிக்கொண்டு இருக்கையில் அனைவரும் புது எம்.டிகாக காத்திருந்த நேரம், அர்ஜுன் அவன் நண்பன் சந்துருவும் உள்ளே வந்து நாற்காலியில் உட்கார்ந்தனர்.அதே சமயம் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர் ஆனால் சந்தியாவிற்கோ எழுந்து போய் விடலாம் போலிருந்தது .அவள் கரத்தை பிடித்து அவளை ஏழ முயற்சி செய்தாள் பவி.

முகத்தில் கடுகு வெடித்தார் போல் இருந்தது அவளுக்கு அவனை ஏறெடுத்து கூட பார்க்கவில்லை பார்க்க விரும்பவில்லை.. கையிலிருந்த பேனாவை அருகிலுள்ள நோட்பேடில் கிறுக்கிக்கொண்டிருந்தாள். இதில் எதுவும் தனக்கு சம்பந்தம் இல்லாதது போல் இருந்தாள்.அவன் தன்னுடைய பிசினெஸ் மற்ற கம்பெனியில் அடைந்த வெற்றி என்று அவனது பெருமைகளை பிரசண்டேஷன் மூலம் விளக்கிக் கொண்டிருந்தான். இதில் எதுவும் சந்தியாவின் காதுகளில் துளி கூட எட்டவில்லை. ஒரு காதில் வாங்கி கொண்டு மறு காதில் விடுவது போல் உக்காந்திருந்தாள். முக்கியமான மீட்டிங் என்றால் அதில் சந்தியா ஆர்வமாக இருந்து கவனிப்பவள் இன்று வித்தியாசமாக பிகேவ் பண்றா ??? என்று சந்தேகமே வந்துவிட்டது பவிக்கு. ஒருவேளை அர்ஜுன் தான் இதற்கு காரணம் என்று சொல்லிக் கொண்டாள் தனக்குள்.

மீட்டிங்கு முடிந்த பின் “ஆல் தி பெஸ்ட்…டூ யுவர் பெஸ்ட் கைய்ஸ் ” என்று முடித்தான். அனைவரும் அந்த ஹாலை விட்டு கிளம்பி முயன்றபோது, அர்ஜுனின் காதில் சந்துரு ஏதேதோ கிசுகிசுத்த பின்,
“எக்ஸ்க்யூஸ் மீ… ஒரு சின்ன அனௌன்ஸ்மென்ட் சிஃப் எடிட்டர் மற்றும் மிஸ் சந்தியா இருங்க …. கொஞ்சம் பேசணும்” என்று சொல்லி விட்டு அந்த ரூமை விட்டு வேகமாக நகர்ந்தான்.

அவன் காக்க சொல்லிவிட்டு சென்று ஒரு மணி நேரம் ஆகிவிட்டது… இவன் வேண்டுமென்றே காக்க செய்வது போல் தோன்றியது அவளுக்கு.. என்னதான் நடந்தாலும் பரவாயில்லை இனிமேல் பொறுமையாக காத்திருக்க முடியாது என்று நினைத்து, எழுந்து நின்று வெளியே செல்ல முயன்ற அந்த சமயம் அர்ஜுன் வர கதவை ஒருபுறம் சந்தியா இழுக்க மறுபுறம் கதவை திறக்க அர்ஜுன் ஒரு பலம் கூடுதலாக கொடுத்து திறக்க அவள் கையிலிருந்து பிடி நழுவிச் சென்று திறந்த வேகத்தில் அவள் பேலன்ஸ் மிஸ் பண்ணி கீழே சரித்தவளை திடீரென்று அர்ஜுன் கரம் அவளை கைபற்றி தாங்கிப் பிடித்தது .

” கண்ணும் கண்ணும் நோக்கியா” என்ற பாடல் போல் தான் இடத்தை மறந்து அர்ஜுன் கண்களை உற்று நோக்க செய்தாள். அவன் கண்களைப் பார்க்கும் போது இனம் புரியாத உணர்வு என்று சொல்லி கேட்டதுண்டு ஆனால் இப்போதுதான் அதை உணர்ந்த செய்கிறாள்.. அந்த உணர்வு அவளை ரசிக்க செய்தது, என்னதான் அவன் பிடிக்காதவன் என்றாலும் அந்த ஒரு நிமிடம் தன்னை மறந்து அவன் கண்களில் உள்ள அழகை ரசிக்கத்தான் செய்தாள்… ஆனால் நம்ம ஹீரோவுக்கு தோன்றியதோ வேற.. என்ன இவ்வளவு வெயிட்டா இருக்குறா??? கை வலிக்குது என்று எண்ணி தான் தாங்கி பிடித்த கையை வெடுக்கென்று எடுத்தான் சற்றும் எதிர்பாராத சந்தியா தவறிக் கீழே விழுந்தாள்.

இப்படி கீழே தள்ளிவிட்டானே??? நமக்குத்தான் அறிவு இல்ல… நம்ம தான் ஏதோ அவ மேல போய் விழ ஆசைப்படுகிறோம் என்று நினைத்துவிட்டானோ ??? கொஞ்சம் மூளை இருக்கா உனக்கு??? என்ன ஆச்சு சந்தியா ?? என்று தன் மனசாட்சியிடம் கேட்டுக் கொண்டாள் .தன் கால் கைகளை உதறிக் கொண்டு எழுந்தாள் ரசிக்க தூண்டிய அந்த மனதை ஒரு திட்டு திட்டி விட்டு எழுந்தாள் விறுவிறு என்று தனக்குரிய சேரில் அமர்ந்து கொண்டு அவளை சொடுக்கு போட்டு வர சொன்னான்.

அப்படி அவன் கூப்பிட்ட முறை அவளுக்கு பிடிக்கவில்லை, இருந்தும் நகராமல் நின்றாள்.

” ஹலோ மிஸ் சந்தியா உன்னை இங்க வரச் சொன்னேன்” என்றான் சமயத்தில் செய்வதறியாத அவளும் கடுமையான முகத்துடன் அவனை நோக்கி நடந்து சென்று அருகில் நின்றாள்.

“என்ன நாராயணன் சார் உங்க ஸ்டாப்க்கு எம்.டி சொன்னதைக் கேட்டு நடக்கணும்னு பழக்கமெல்லாம் இல்லை போல…. இதெல்லாம் நீங்க சொல்லித்தரவில்லையா??? என்று வினவினான்.

அதற்கு அவர் பதில் கூறுவதற்கு முன் முந்திக் கொண்டாள் சந்தியா…”ஒர்க்கர்ஸ்க்கும் கொஞ்சம் மரியாதை கொடுக்க தெரியனும்… அவங்களுக்கும் மனுஷங்கதானே!!!” என்றாள்

பதிலுக்கு ,”மிஸ்டர் நாராயணன் தனக்கு அதிகமா திமிரா பேசுறவங்களை பிடிக்கவே பிடிக்காது… எனக்கு ஒர்க் தான் முக்கியம் இங்கே பாஸ் சொன்னா கீழே உள்ளவங்க கேட்டுத்தான் ஆகவேண்டும்”.

அவன் மீது ஆத்திரமாக வந்தது அதை கேட்டவுடன்.. நேற்று வரை இந்த அலுவலகத்தில் அனைவரும் சமமாக தானே நடத்தினர் அப்படி தானே இருக்க வேண்டும் என்பது கூட அனைவரது பிரியமாக இருந்தது. இன்று புதிய நிர்வாகம் என்றால் அவர்கள் ஆட்டி வைக்கும் பொம்மைகளாக மாற வேண்டுமா??? என்று தனக்குத்தானே எண்ணிக்கொண்டாள்.

“சாரி சார் ” இனிமேல் இப்படி நடக்காது என்று கூறி முடிக்க, அதனை முடிக்க விடாமல் சந்தியா தொடர்ந்தார். “எதுக்கு சார் சாரி??? வெயிட் பண்ணுனது நம்ம சாரி அவர் தான் கேட்கணும்” என்றாள்.

அர்ஜுன் தாடையைத் தடவிக் கொண்டு சிரிப்புடன் “சபாஷ்… எப்படி???? கம்பெனி முதலாளி ஒரு சாதாரண வேலை செய்றவங்ககிட்ட சாரி கேக்கணுமா ??? … மிஸ் சந்தியா முன்னாடி இங்க எப்படிவேண்டுமானாலும் இருந்து இருக்கலாம் பட் இப்போ நான் வச்சதுதான் சட்டம் அதுதான் எல்லோரும் ஃபோலோ பண்ணனும்…”

“அண்டர்ஸ்டாண்ட்!!!!!” என்று ரூம் அதிரும் அளவுக்கு கத்தினான்.

இவனின் திமிருக்கு யார் வேண்டுமானாலும் பயப்பிடலாம் நாம் ஏன் அடங்கிப் போக வேண்டும்??? மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும். அடிமை போல் வேலை செய்ய தனக்கு மனசாட்சி எப்போதும் சம்மதிக்காது, தன்னை இழிவு படுத்தும் இடத்தில் தனக்கு என்ன வேலை??? என்று எண்ணினாள்.

“ஓகே மிஸ்டர் அர்ஜுன்… நீங்க சொன்னதுக்கு …இல்ல சாரி … அடிமையாக இருக்க வேற ஆளை பாருங்க நான் வேலையை ரிசைன் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள்.கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது சிஃப்க்கு.

ஆனால் அர்ஜுன் நினைத்தது வேறு இவளை இவ்வளவு சுலபமாக விடக்கூடாதே அவள் செய்த தப்புக்கு தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அதனாலதான் தனக்கு கீழே வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினான்.

“உங்க ரிசைன்நேஷனை அக்செப்ட் பண்ண போறது…. இல்ல இங்க ராஜேஸ்வரி கம்பெனி பற்றி இந்த பத்திரிக்கையில் ஒரு வார்த்தை கூட தப்பா மாற்றி வரக்கூடாது… எழுதவும் கூடாது இதற்கு முழு பொறுப்பு நீங்க ரெண்டு பேரும் தான்” என்று முடித்தான்

எரிச்சலின் உச்சத்தில் இருந்த சந்தியா,” தனக்கு வேலை செய்யப் பிடிக்கவில்லை …. எனக்கு சேர வேண்டிய செட்டில்மெண்ட் செட்டில் பண்ணுங்க”

” ஹலோ சந்தியா உங்களுக்கு காது கேட்காதா?? சொல்றதை.. செய்ங்க” என்றான் அதட்டலாக

“சிஃப் சார் என்னோட ஹைர் ஆஃபீஸ்ர் நீங்க தான் உங்ககிட்ட தான் நான் சொல்லிட்டிருக்கேன்” என்றாள்

அவரோ அவனிடம் எது சொன்னாலும் அது நடக்கவே நடக்காது இந்தப் பெண் ஏன் இவனிடம் மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கா ??? அவன் சொன்ன மாதிரிதான் செய்ய வேண்டியத்தானே ???… ஏன் இந்த பிடிவாதம் ????என்று முணுமுணுத்தார் .

கேலிச் சிரிப்புடன் பேச தொடங்கியவன் ” இப்போ உங்க கேபினுக்கு போலனா?? மிஸ் சந்தியா சிவானந்தரின் ப்ரோபைல் பிளாக் லிஸ்ட்ல போட்டு உங்க கரீர்க்கு என்னால் செக் வைக்க முடியும் என்றான்”

அதிர்ந்து போனாள் அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்த மிரட்டலை. ஆசைப்பட்டு ,விருப்பப்பட்டு ஜௌர்னலிசம் படித்து வேளையில் சேர்வது அவளது கனவு… அதனை இவன் ஓரே நொடியில் உடைத்துவிடுவான் என்ற பயம் அவளைத் திக்குமுக்காடச் செய்தது.. தன் கனவு நொறுக்கி போகுவதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்த வேலையில் அவன் கொண்ட பிரியம் அது மாதிரி.. சின்ன வயசிலேயே விதைத்த விதை அல்லவா ????
அதனை ஒருவன் வேரோடு அழிக்க முயல்கிறான் என்றால் அதைத் தாங்கிக் கொள்ள முடியுமா என்ன ???. அவள் கண்ணங்களில் வெள்ளம் போல் வந்த அந்தக் கண்ணீர்தான் அதற்கு சாட்சி.

அமைதியாகி விட்டாள் சந்தியா… வேறு எதுவும் யோசிக்க முடியவில்லை .அவன் அப்படி செய்தால் இனிமேல் எங்கும் இந்த வேலையிலிருந்து தொடர வாய்ப்பில்லை என்பது அவளுக்கு நன்றாக தெரிந்தது

கண்ணீர்யுடன் நின்ற சந்தியாவை நெருக்கிய அர்ஜுன் அவளிடம் ,” தன்னை அசிங்கப்படுத்த நினைத்தாலோ அல்லது அவதூறாக பேசினாலோ இப்படித்தான் நடக்கும்…. இந்த கம்பெனி மட்டுமல்ல உன்னை கூட என்னால் வாங்க முடியும்” என்றான் இறுதியில்

சிவத்த கண்களுடன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அவள், அங்கிருந்து அவன் செல்வதை வெறித்துப் பார்த்துக்கொண்டு செய்வதறியாது நின்று கொண்டிருந்தாள் சந்தியா…..

இந்த மோதல் எப்படி காதலின் முடியும்????

பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement