Advertisement

ஆசை -5

வேகமாக ஒரு கார் ராஜேஸ்வரியின் வீட்டு வாசலில் வந்து நின்றது… அதிலிருந்து அர்ஜுன் வெளியே வந்தான், மாடியில் உள்ள ரூமில் தனது அம்மாவை பார்க்க அவசர அவசரமாக சென்றான். அவன் முகத்தில் பதற்றமும் தவிப்பும் அதிகமாக இருந்தது.

டாக்டரின் பரிந்துரையின் படி ராஜேஸ்வரி தனது ரூமில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள். மனதில் சிறிய குழப்பத்துடன் விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தன் மகனின் கல்யாணத்தை தள்ளிப் போடக்கூடாது விரைவில் அவன் திருமணத்தை நடத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருக்கையில் அர்ஜுன் ரூமுக்குள்ளே நுழைந்தான்,அருகில் மாமா குமாரசாமியும் இருந்தான்.

” அம்மா!!!!!… என்ன என்னாச்சு???… இப்போ எப்படி இருக்கு மா??? நான் பயந்தே போயிட்டேன்” என்றான்

“ஒண்ணுமில்ல அர்ஜுன்….. சாதாரண டென்ஷன் மயக்கம் தான் டாக்டர் ஏதாவது பெருசா சொல்லியிருப்பார் ”

“மாமா அம்மாவுக்கு டென்ஷன் வர மாதிரி, என்ன ஆச்சு ????…அவங்களுக்குத்தான் ஹை bp இருக்குல நீங்க பார்க்க கூடாதா??? என்று குமாரசாமியை கேட்டான்.

அவன் ராஜேஸ்வரி பார்த்து என்ன நான் சொல்வது ????என்பது போல் இருந்தது அவன் பார்வை……

“எல்லாம் உன் கல்யாணத்தை நினைத்து வந்த டென்ஷன்தான்…”
” ஆமா!!!!! மாப்ள உன் கல்யாணத்துக்கு நினைச்சுதான் ராஜி ரொம்ப கவலைப் படுற…. உடம்பும், மனசும் அவளுக்கு சரில ”

” என்னம்மா….. இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்????? பிறகு பார்த்துக்கலாம் இப்போ உங்க உடம்பு தான் முக்கியம் நல்லா ரெஸ்ட் எடுங்க….”

“அவசரமில்லை அர்ஜுன் …….அவசியம் …. நான் நல்லா இருக்கும் போதே உன் கல்யாணத்தை முடிச்சு உன் மனைவி கிட்ட இந்த பொறுப்புக்களை ஒப்படைக்கணும் அதுவரைக்கும் எனக்கு ஓய்வு, மாத்திரை .மருந்து எதுவும் வேண்டாம்…… நீ கல்யாணத்துக்கு சரி சொல்லு அது போதும் என்று தன் மகனை மடக்க நினைத்தாள்

“அம்மா.. உங்க உடம்பு சரி ஆகட்டும்.. அதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்” என்றான் பதிலுக்கு

தனது மாமாவிடம் மருந்து சீட்டைக் கொடுத்து மருந்துகள் எல்லாம் வாங்கி வரச் சொன்னான். அவன் அதை வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் இருந்தும் இவர்கள் தன்னைவிட்டு என்ன பேசப் போகிறார்கள் என்ற ஆர்வம் இருந்தது அவனுக்கு அதனால் கதவில் தனது காதை வைத்து கதவோடு கதவாக ஒட்டிக்கொண்டு உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தான் இருந்தும் அவனுக்கு ஒன்றும் கேட்கவில்லை வெளி ஆட்களின் நடமாட்டம் இருந்ததால் அவன் நிஜமாகவே அங்கிருந்து நகர்ந்தான்.

மனதுக்குள்,” என்னடா!!!!! என்ன விட்டுட்டு என்ன ப்ளான் போட போடுறீங்கன்னு பாக்குறேன்???? சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்…. “என்று முணுமுணுத்தபடியே சென்றான்.

“அவளை மாதிரி என்னை நீ ஏமாற்றிவிடாதே!!!அர்ஜுன் …அவள் தான் நம்ம குடும்பத்துக்கு துரோகம் பண்ணி விட்டு அவள் வாழ்க்கைதான் முக்கியம் என்று போயிட்டா அதனால தான் உன் கல்யாணத்தை நல்லபடியாக நடத்தி முடிக்கும் என்று ஆசைப்படுகிறேன்…” என்றார் கண்ணீர் மல்க.

தன் ஆசை அம்மாவின் கண்ணீரை பார்த்த அவனுக்கு டாக்டர் சொன்னது ஞாபகம் வந்தது எப்படி டென்ஷன் அதிகமானால் உயிருக்கு ஆபத்து வரலாம் அதை நினைத்த அந்த ஒரு நிமிடம் நிலைகுலைந்து போனான். தனக்கு நெருக்கடி கொடுத்தாலும் அம்மாவின், ஆசையும் கனவும் நிறைவேற்ற வேண்டிய கடமை தனக்கு உள்ளது என்று நினைத்துக்கொண்டு,

” சரி…… எனக்கு சம்மதம் ….என்றான் அழுத்தமாக .

முதலில் அவளால் நம்ப முடியவில்லை பிறகு அவனிடம் உறுதிசெய்துகொண்டாள் .ராஜேஸ்வரி முகம் பிரகாசமாக மின்னியது. தன் மகனின் திருமணத்தை பார்க்க போகிறோம் என்பதே அவளுக்கு ஒரு புது தெம்பைக் கொடுத்தது. அடுத்த நொடி யோசிக்காமல் தனது கைபேசியை எடுத்து அதில் “r”என்று டைப் செய்தாள் ரத்தினம் என்ற பெயர் திரையில் தோன்றியது அந்த எண்ணுக்கு வேகமாக டயல் செய்தாள்.

” ஹலோ!!!!! நான் தான் பேசுறேன்…. அர்ஜுன் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டான்…. என்றாள் உற்சாகமாக ……

********
அந்த மாலை நேரத்தில் விருந்தாளிகள், முக்கியமான நபர்கள் வெளிநாட்டு பிஸினஸ்மேன்கள். வந்தால் தங்குவதற்காக அந்த கெஸ்ட்ஹவுஸ் செயல்பட்டுக் கொண்டிருந்தது . அர்ஜுனனுக்கு ஏதேனும் பிரச்சினை தொழில் ரீதியாகவோ இல்லை குடும்பத்தில் வந்தாலோ தேடும் ஒரு நிம்மதியான இடம் அதுவாகத்தான் இருக்கும்.

தன் நண்பனுக்கு போன் செய்து அவனை இங்கே வரச் சொன்னால் அதற்குக் காரணம் அர்ஜுன் குழப்பத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். தன் அம்மாவிடம் சொல்ல முடியாததை தன் தோழனிடம் பகிர்ந்து கொள்வான் தோள் கொடுப்பான் தோழன் போல் கஷ்டமான நேரங்களில் அவனுக்கு ஆறுதலாக இருந்தது அவன் நண்பனின் தோழமை .அதனாலதான் பிசினஸில் பார்ட்னர் ஆகிவிட்டது

அவனுக்கும் பெரிதாக சொந்தங்கள் இல்லை என்றதால் அர்ஜுன் தன் சொந்தம் என்று அவன் மீது அன்பை வைத்திருந்தான் அர்ஜுன் எந்த முடிவு எடுத்தாலும் அதை நண்பனுடன் கலந்து கொண்டு தான் எடுப்பான்.

சந்துருவுக்கு அர்ஜுன் திடீரென்று வர சொல்லி இருக்கிறான் என்றால் ஏதாவது முக்கியமான விஷயமாக தான் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு உள்ளே நுழைத்தவனுக்கு அதிர்ச்சி அங்கே தனியாக உட்கார்ந்து கொண்டு பலமாக யோசித்துக் கொண்டிருந்தான். கீழே நிறைய சிகரெட் துண்டுகள் சிதறி இருந்தது.. பாட்டில் காலியாக இருந்தது ….அதை பார்த்த சந்துருக்கு என்னதான் குழப்பம் இருந்தாலும் அந்த அளவு மது சாப்பிட மாட்டான் அல்லவா??? என்ன ஆயிற்று??? என்று எண்ணினான்.

அவன் அடுத்த சிகரெட்டை எடுக்க முயற்சித்த அர்ஜுனனின் கைகளை கைப்பற்றியது அவனது நண்பனின் கரம்.

” என்னாச்சுடா ????எப்படி ஸ்மோக் பண்ற?? எனி ப்ராப்ளம் மச்சி ??”என்றான்

“ஆபீஸ் மேட்டர்னா எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும் அப்போ இது வேற விஷயம் தானே…. என்கிட்ட சொல்லு மச்சி….”

” இப்ப லைஃப் ப்ராப்ளம் அதான் குடிக்கிறேன்”என்றான் வெறுப்பாக …..

“லைஃப் ப்ராப்ளமா புரியலடா?? கொஞ்சம் விளக்கமாக சொல்லு….”

“அம்மாக்கு உடம்பு சரியில்லை மயக்கி விழுதுட்டாங்க ஓவர் டென்ஷன் தான் காரணம் ”

” ஓ மை காட்!!!!! அம்மாவுக்கு இப்ப எப்படி இருக்க???? நல்லா இருக்காங்களா??? சொல்லி இருந்த அம்மாவ பாத்துட்டு வந்து இருப்பேன்ல” என்றான் சந்துரு

“இப்ப பரவால்ல நல்லாத்தான் இருக்காங்க… ஆனா, இப்போ நான் தான் நல்லா இல்லை என்று அலுப்பாக…..”

” என்னடா சொல்ற அம்மா தான் நல்லா இருக்காங்களா… அப்புறம் என்ன???”

” அம்மா என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப் படுத்துறாங்க மச்சி….. என்னால தடுக்க முடியல அவங்க கண்ணீர் விட்டு அழுததை பார்க்கும்போது நான் சரின்னு சொல்லிட்டேன்…..” என்றான் கரகர குரலில்

“அம்மா சொல்றது சரிதானே…. எத்தனை நாளைக்கு கல்யாணத்தை தள்ளிப் போடுவது மேரேஜ் பண்ணிக்க மச்சி…”

“என்னடா பேசுற நீ ????உனக்கு தெரியாதா??? பெண்களால் என் வாழ்க்கையிலே எவ்ளோ கஷ்டத்தையும் , துரோகத்தையும் அனுபவிச்சிருக்கேன்.பொண்ணுங்கனாலே வெறுப்பு தான் வருது மனைவி என்ற பேர்ல இன்னொரு கஷ்டத்தை ஏற்க சொல்றியா?????”

‘ஆமாம்….. நீ சொல்றதை பார்த்தா இன்னும் பூஜாவை மறக்கல போல!!!!!!” என்றான்.

சற்று தன் நிலைக்கு வந்து, மறக்கக் கூடியதா செய்தாள் ??? அவளும் சரி, அனுவும் சரி செய்த துரோகத்தை என்னால் மறக்கவும் முடியாது… மன்னிக்கவும் முடியாது…. அவர்கள் ஏற்படுத்திய வடுக்கள் என் மனதில் இன்னும் இருந்துகொண்டு என்னை வாட்டுது என்றான்

“அம்மா கிட்ட நான் போய் பேசவா???”

“இல்ல வேண்டாம்…. அவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க போகட்டும் எவ்வளவு தூரம் போகும்” என்று பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்

**********

“உள்ளே வரலாமா???” என்று குரல் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த சாந்தி மற்றும் மங்கலம் காதில் விழுந்தது. சாந்தியை சமையலை பார்க்க சொல்லி விட்டு வெளியே வந்த மங்கலம் யாரது என்று சொல்லிக்கொண்டு வாசலுக்குள் செல்ல அங்கே உயரமான 60 க்கும் மேற்பட்ட வயதான ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்த அவரை பார்த்த மங்களத்திற்கு ஒரே ஆனந்தம் உடன்பிறவாத அண்ணன் போல் பழகியவர்கள் ஆச்சே!!!! “அட ரத்தினம் அண்ணா!!!!! “என்று பெரும் புன்னகையுடன் வந்து ரத்தினத்தை அழைத்தாள். அவரும் மகிழ்ச்சியுடன் வீட்டில் உள்ளவர்களின் நலத்தை விசாரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் அப்போது சிவானந்தம் மாடிப்படிக்கட்டில் இருந்து வந்து கொண்டிருந்தார்.

” வாங்க ரத்தினம் சார் எப்படி இருக்கீங்க???? சாருக்கு குடிக்க ஏதாவது கொண்டுவா” என்கிறார்

மங்கலமும் சமையல் அறையில் சென்று மோர் மற்றும் சில தின்பண்டங்களை அடுக்கி வைத்துக்கொண்டு எடுத்து வந்தாள் அதைப் பார்த்த சாந்தி ரத்தினத்தை பற்றி விசாரித்தாள் .விளக்கத்தை சொல்லிவிட்டு வெளிப்பட்டாள் மங்கலம்.

“சொல்லுங்க அண்ணே !!!!! வீட்டில் சௌக்கியமா ??? ரொம்ப நாளா ஆச்சு உங்களை பார்த்து, சென்னைக்கு வந்தா வீட்டுக்கு அடிக்கடி வாங்க” என்றாள் ஆசையாக.

” நல்லா இருக்காங்க …. சொந்த ஊருக்கு போனதும் அங்கேயே செட்டில் ஆகியாச்சு ஏதாவது வேலைனா மட்டும்தான் நான் சென்னைக்கு வருவேன் வேலை முடிஞ்சதும் உடனே கிளம்பி விடுவேன் அதான் வர முடியவில்லை எதர்ச்சியாக சிவானந்தத்தை மார்க்கெட்டில் பார்த்தேன் அவர் தான் வீட்டு விலாசம் கொடுத்தார்.

“சரி ….ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும் என்று சொன்னீர்களே என்னது?????”என்றார்.

” சொல்றேன்…. சொல்றேன்…. அ தற்காகத்தானே வீட்டுக்கு வந்து இருக்கேன்… எங்க கடைக்குட்டி சந்தியா ஆளையே காணோம்???? சின்ன வயசுல பார்த்தது என்றார்.

“அவ ஆபீஸ் விஷயமா வெளியில போயிருக்கா போன் பண்ணி வரச் சொல்லட்டுமா???? என்றாள் மங்கலம்.

பதிலுக்கு,” இல்ல… இல்ல… வேண்டாம் அவளை தொந்தரவு பண்ண வேண்டாம் இன்னும் ஒரு வாரம் சென்னையில் தான் இருப்பேன். பிறகு வந்து பார்க்கிறேன்.

யோசித்துவிட்டு தொடர்ந்தார் ரத்தனம் ,”ஏதேனும் விசேஷம் உண்டா ??? சந்தியாவுக்கு எப்ப கல்யாணம்??? ஏதேனும் வரன்கள் வருகிறதா ??”

மங்கலம் சற்று வருத்தமாக “அவ கல்யாணத்துக்கு ஓத்துக்கிட்டாதானே !!! இப்ப கல்யாணம் வேண்டாம் சொல்றா… நமக்குத்தானே தெரியும் அதோட அவசியத்தைப் பற்றி”

“நீ சும்மா இரு….அவளை இந்த விஷயத்தில் குறை சொல்லனா உனக்கு தூக்கமே வராது… அவளுக்கு எப்ப விருப்பமோ அப்போ அது செஞ்சுக்கிட்டுமே “என்று தன் மகளுக்கு ஆதரவாக பேசினார்.

“அது சரிதான் சிவானந்தம்… ஆனால் காலமும் நேரமும் நமக்காக சும்மா நிற்காதே நாமும் அதோடு சேர்ந்து தான ஆக வேண்டும் . நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன் எங்ககிட்ட ஒரு நல்ல வரன் வந்து இருக்கு எனது சொந்த காரன் தான்…. நல்ல வசதியான இடம்… நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க முடிச்சிடலாம் ன்னு சொன்னாங்க எனக்கு சந்தியா நினைப்பு தான் வந்தது ..”

இருவரும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டனர் அவளுக்கு தெரிந்தா தாம்தூம் குதிப்பாள் என்ற பயமும் ஒரு பக்கம் நல்ல வரன் சொல்கிறாரே என்று மறுபுறம் தனது மனது தாவிக் கொண்டிருந்தது மங்களத்திற்கு.

சிவானந்தத்துக்கு என்ன சொல்வது?? என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தார்.

” பயமும்,பதற்றமும் வேண்டாம் …..நல்லா படிச்சு சொந்த கம்பெனி வைத்துள்ளனர்… யாருன்னு சொன்னா நீங்களே கண்டுபிடித்து விடுவீர்கள் “என்று புதிர் போட்டு பேசினார்.

மங்களமும் சிவானந்தம் ஆர்வமாக யாராக இருக்கும் என்று ,ரத்தினத்தின் பதிலை எதிர்பார்த்து…

“நம்ப ராஜேஸ்வரி குரூப் முதலாளின் மகன் அர்ஜுன் தான்” என்றார்.

சிவானத்திற்கும் மங்கலத்திற்க்கும் ஒரு பேரதிரிச்சியாக மட்டுமில்லை அந்த சுவற்றில் பல்லி போல ஒட்டி கொண்டு ஒட்டு கேட்டுக்கொண்டு இருந்த சாந்திக்கு பேர் இடியாக இறங்கியது.

சிறிது நேரம் மௌனம் காத்து , “இது நமக்கு சரியா வராது போல…” என்றார் சிவானந்தம்.
அவர் நினைவில் அவள் அன்று கூறியது நினைவுக்கு வந்தது அவர்கள் மீது சரியான அபிப்பிராயம் இல்லாதபோது எப்படி இந்த திருமணம் நடைபெறும் என்று நினைத்துக்கொண்டார்.

அவங்களை பற்றி சொல்லத் தேவையில்லை… உங்களுக்கு நன்றாக தெரியும் அவர்கள் எதிர்பார்ப்பு நல்ல குடும்பமும் பொண்ணும் தான் உனக்கு சந்தியா இதற்குப் பொருத்தமாக இருப்பார் தோன்றுகிறது என்றார்.

சாந்தியாவை கேக்காம முடிவு எடுக்க முடியாது அல்லவா என்றார்

இல்லை பொறுமையாக சொல்லுங்க….. நான் வெயிட் பண்றேன்… நல்ல முடிவா சொல்லுங்கள் என்றார்.

“அதான் ரத்தினம் அண்ணே இவ்வளவு சொல்றாரே அப்புறம் என்ன யோசிக்க அவரே தான் நமக்கு நல்லா தெரியுமே …. எனக்கு என்னவோ இதை பார்க்கலாம் என்று தோன்றுகிறது என்றாள் மங்கலம்.

“புரியாம பேசாத….. சந்தியாவை கலந்து பேசாமல் எப்படி நம்ம சரினு சொல்றது….??? அவ சின்ன பொண்ணுங்க…. என்ன தெரியும் அவளுக்கு ரொம்ப விட்டுக்கொடுத்து போய்யாச்சு …. நம்ம தான் சரியான முடிவு எடுக்கணும் என்றாள்

மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருந்த சாந்திக்கு ஒரு யோசனை தோன்றியது, ஆழ்ந்த யோசனையில் இருந்தாள் . அவள் கணக்கு போட்டாலும் கடவுள் போடும் கணக்கு படி தான் நடக்கும்.

ரத்தினம் விடைபெற்றுக் கொண்டு போனாலும் அவர் சொன்ன விஷயம் சிவானந்தத்தை மனதை நெருடிக் கொண்டே இருந்தது இத்தனை நாட்களில் அவர் ஒருத்தருக்கு சிபாரிசு வாங்கியதில்லை அவரே முன்வந்து இந்த இடத்தை சந்தியாவிற்கு அவர் பேசுகிறார் என்று யோசிக்க வேண்டியதாக உள்ளது என்று சிவானந்தம் நினைவில் ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் மங்கலம் புலம்பிக் கொண்டிருந்தாள்

சந்தியாவை எப்படி சம்மதம் சொல்ல வைப்பது என்று அதற்கு திட்டம் போட்டுக்கொண்டே இருந்தார் மங்கலம் .

அப்போது சந்தியாவின் இருசக்கர வாகனம் வரும் சத்தம் கேட்டது அலுவலகத்து வேலை முடித்து விட்டு சோர்வாக காணப் பட்டாள் சந்தியா .நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டுக்குள் நுழைந்தாள்.

வீடு முழுக்க அமைதி…. அப்படி ஒரு அமைதி அவள் இதுவரை பார்த்ததில்லை … எப்போதும் சத்தமும் கூச்சலும் இருந்து கொண்டே இருக்கும்.

” என்ன ரொம்ப சைலண்ட்டா இருக்குது வீடு ???ஆச்சரியமா இருக்கே!!!! என்று வீட்டு உள்ளே வரும்போது கேட்டுக் கொண்டு வந்தாள் சந்தியா

வேலையை முடித்து விட்டு வெளியே வந்தாள் சந்தியாவின் அம்மா தன் அம்மாவிடம் எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு, ஒரு காபி கொண்டு வா என்று சொல்லிவிட்டு மாடிப்படியில் ஏறி சென்றாள்

அங்கே தனக்குரிய நாற்காலியில் படுத்திருந்த சிவானந்தத்தை நோக்கினாள் மங்கலம்…. நீயே போய் நடந்ததை பேசு என்று தன் கண்ணால் ஜாடை பேசினார் .. மேலே ஏறி மங்கலம் அவளிடம் இதை பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று எண்ணத்துடன் போனாள்.

கண்ணாடி முன் நின்று ரெப்பிரேஷ் செய்து கொண்டிருந்த சந்தியாவிடம் மங்கலம் ரத்னம் வந்தாரு வீட்டுக்கு…. நீ இல்லாத போ என்று தொடங்கினாள் .

அங்கிள் வந்தாரா ?? சொல்லியிருந்தா நான் வந்து பார்ப்பேன் அல்லவா???

” அவரு உனக்கு ஒரு வரம் பார்த்திருக்கார் எங்களுக்கு சரின்னு தோணுது என்று முடித்தாள்…”

“நீ சும்மாவே இருக்க மாட்டியா???? நீ போய் அவரை தொல்லை பண்ணி இருப்ப அதான் அவரும் ஆரம்பிச்சுட்டாரு….”

” இல்ல சந்தியா.. அவர்தான் முன்வந்து சொன்னாரு …”

“உனக்கு ஒரு நூறு வாட்டியாச்சும் சொல்லியிருப்பேன் …..நல்லா கேட்டுக்கோ எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்” என்று எரிச்சலாக…

“இந்த வாட்டி நீ சொல்றது…. நடக்காது… சந்தியா அப்பா சப்போர்ட்டையும் எதிர்பார்க்காத …” என்றாள் கொஞ்சம் கடுமையாக….

“ராஜேஸ்வரி குரூப் ஓட முதலாளி அர்ஜுன் தான் மாப்பிள்ளை …” எதிர்பாராத பதிலை மங்கலம் கொடுத்ததால் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு சிலை போல் அசராமல் நின்றாள் சந்தியா

திருமணம் நடக்குமா??? எலியும் பூனையும் சேருமா ?????

பொறுத்து இருந்து பார்ப்போம்…

Advertisement