Advertisement

“டமார்!!!” என்று ஒரு சத்தம் அதன்பின் அந்த இடமே அமைதியாக இருந்தது தனது கையை வைத்து மேஜையில் பலமாக அவன் ஏற்படுத்திய சத்தம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது

அவனது சிவந்திருந்த முகம் அனைவருக்கும் ஒரு திகைப்பை காட்டியது அவ்வளவு கோபத்தை சந்தியா கண்டதில்லை…… யாரிடமும் அலுவலகத்திலும் சரி ,வீட்டிலும் சரி ,இவ்வளவு கோபத்தை அவள் மீது யாரும் காட்டியதில்லை…….அவ்வாறு அவள் உணர்ந்த நேரம் ,யார் இவன்?????? என் மீது கோபம் கொள்ள……

நான் சொல்வதில் தவறு ஒன்றும் இல்லையே என்பதில் அவள் தெளிவாக இருந்தாள். தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களிடம் நேருக்கு நேராக சொல்லும் தைரியம் தன் தந்தையிடம் இருந்து வந்தது என்பது அவள் கொண்ட கர்வம்

அவனின் கோபம் இவளுக்கு எரிச்சலாக இருந்தது……. யாரையும் மதிக்காத குணம் நேர்மையற்ற செயல் எரிச்சலின் உச்சத்திற்கு கொண்டு சேர்த்து விட்டது போல் உணர்ந்தாள்.

அவனை ,”சார் ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர்செல்ப்” என்று இன்ஸ்பெக்டர் அவனிடம் கூற, அவன் அதை கேட்காதது போல்……..

” மைன்ட் யுவர் வேர்ட்ஸ் என் கம்பெனியை பற்றி என்ன தெரியும் ஆப்ட்ர் ஆல் ரிப்போர்ட்டர் சொல்லுறதை வச்சு எப்படி இன்ஸ்பெக்டர் எங்கள மாதிரி இருக்கிற கம்பெனி மேல இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டு இருக்கீங்க…….” என்றான் அர்ஜுன்

” சார் ப்ளீஸ்….. கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க!!!!!!! உங்கள காம்ப்ரமைஸ் பண்ணத்தான் கூப்பிட்டோம்”

” சார் நோ!!!!!!! காம்ப்ரமைஸ் எல்லாம் நான் வரல………… நீங்க என்ன பண்ணனும்மோ அதை செய்யுங்க இல்ல நான் கமிஷனர் ஆபீஸ் க்கு எப்படி போகணும் எனக்கு வழி தெரியும்…. நான் யாருக்கும் பயப்பட தேவையில்லை…… “என்றாள் சந்தியா.

” இன்ஸ்பெக்டருக்கு என்ன செய்வது?????? என்று தெரியவில்லை….. ஒருபுறம் கம்பனி சிஇஓ மேலிடத்தில் வந்திருந்த பிரஷர் மறுபுறம் ரிப்போட்டர் எதைப் பேசினாலும் தவறாக எண்ணி மீடியா நாளைக்கு தமிழகம் முழுவதும் போராட்டத்தை கிளம்பிவிடும்.

” என்ன பண்ணுவது????” என்று புரியாமல் முழி பிதுங்கிய நிலையில் இருந்தார்…..

“ஹலோ இன்ஸ்பெக்டர் இப்படி கூப்பிட்டு வச்சு என்ன அசிங்படுத்திறீங்களா !!!! இந்த மாதிரி ஆளுங்க கிட்ட என்னால சமமாக கூட பேச முடியல……. எப்படி பேசுறாங்க பாருங்க!!!!!!! இன்டீசென்ட் மக்கள் !!!!! என்று அர்ஜுன் ஒருபுறம் குதிக்க…. மறுபுறம் இந்த சந்தர்ப்பத்தை விடக்கூடாது என்று அவன் மாமா வம்பு இழுக்க ஆரம்பித்தார்.

“ஏய் பொண்ணு !!!!!! நாங்க யாருன்னு தெரியாம பேசுற ???? தெரிஞ்சா!!!! ஓடிப் போயிடுவ …….ஒழுங்கா நாங்க சொல்றத கேட்டுட்டு பண்ணு இல்ல என்று மிரட்டும் தொனியில் குமாரசாமி பேசினான்.

” இந்த மிரட்டல் எல்லாம் இங்கே வேண்டாம்….. நீங்க யாருன்னு ??? எனக்கு நல்லாவே தெரியும் நீங்க பண்ணின தப்பை மறைக்க போராடுறீங்கன்னு தெரியும் என்று பதிலுக்குசாட ,

இது என்ன வம்பாப் போச்சு என்று இன்ஸ்பெக்டர் மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தார் ….நாயகியும் நாயகனும் எதிரெதிராக நின்று பேசிக்கொண்டிருப்பதை பார்த்த பவிக்கு சிரிப்பும் ,அதைவிட அர்ஜுனை சைட்டடிக்க என்ற அவள் ஒரு புறம் நேரத்தை கழித்துக் கொண்டிருந்தாள்…. அவன் கோபப்படும் போது கூட அழகாக இருக்கிறான்… இவன் இத்தனை நாட்களில் என் கண்ணில் படவில்லையே!!!!! என்று அவள் மனதுக்குள் வேறு ஒரு எண்ணத்துடன் சிலையாக நின்று கொண்டிருந்தாள்…..

திடீரென்று ஒரு குரல் அவளை தடுக்க “வா போலாம் பவி இனிமே நாம பாத்துக்கலாம்.” என்று தோழியின் கையை வேகமாக இழுத்தாள் ….அவளும் வெளியே போக மனமின்றி வந்தாள்….

வேகமாக சென்ற சந்தியாவை ஒரு சைடு லுக் விட்டு எனது இதழ்களை தூக்கியவாறு கேலியாக சிரித்தான் அர்ஜுன்….. இவள் செய்ததற்கு கண்டிப்பாக இவளை மன்னிப்பு கேட்க வைக்கணும்…. அதை நான் செய்வேன் என்று அந்த சிரிப்பின் அர்த்தம் ஆக இருந்தது.

அதேநேரம் அர்ஜூனின் கைபேசி அழைக்க அதில் தனது நண்பன் சந்துருவின் பெயர் தெரிந்தது…..

********

வீட்டின் பால்கனியில் உட்கார்ந்துக் கொண்டு ஆழ்ந்த யோசனையில் இருந்தாள் சந்தியா. மனதில் ஸ்டேஷனில் நடந்த நினைவுகள் வந்து வந்து போனது.. இப்படிப்பட்ட மனிதர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்??? என்று நினைவில் தோன்ற

” என்னமா பலத்த சிந்தனையில் இருக்க போல” என்றது சிவானந்ததின் குரல்.

“ஆமப்பா….. ராஜேஸ்வரி சிமெண்ட் ஃபேக்டரி இன்சிடென்ட் பத்திதான் யோசிச்சுகிட்டு இருந்தேன்.” ஸ்டேஷனில் நடந்த விவரங்களை கேட்டறிந்தார் சிவானந்தம்…..

நல்ல கம்பெனி தா…மா அந்தஅம்மாவின் அப்பா ரொம்ப நல்ல மனுஷன்……. என்னால நம்பவே முடியல!!!! ராஜேஸ்வரி குடும்பமா இப்படி பண்ணுனது??????

” எல்லாம் வெளி வேஷம் தான்…. அந்த கம்பனி சிஇஓ பேச்சை நீங்க கேக்கணும் !!ரொம்ப திமிர் அகங்காரம் மொத்த உருவம் தான் அவன்… காசு இருந்தா என்னப்பா??? மனுசங்கள மதிக்கணும் இல்லனா அவன் என்ன பெரிய ஆளு????”

” சரிதான் சந்தியா…. இப்ப என்ன பண்ண போறீங்க???? ,அவன்கிட்ட நல்ல செல்வாக்கு இருக்கு அதனால அவங்க அதை யூஸ் பண்ணி எங்க வாயை அடக்க வைக்க பாக்குறாங்க”

“பட் எடிட்டர் சப்போர்ட் இருக்குப்பா …” பேசிக்கிட்டு இருந்த சமயம், காபி டம்ளருடன் வந்தாள் மங்கலம்.

” என்ன ???அப்பாவும் பொண்ணும் நான் வந்தவுடனே பேசுறத நிப்பாட்டிடீங்க!!!! இல்ல மங்கலம் சந்தியாவோட ஆபீஸ் விஷயத்தை பத்தி பேசிக்கிட்டு இருந்தோம் …”

“ஓ!!!!! அப்படியா???? ஆமா… சௌமியா எப்படி இருக்கா?? நல்லா இருக்காளா?? என் பேரன் சஞ்சய் எப்படி இருக்காங்க ரொம்ப கஷ்டப்படுறாளா ???? வேலை எப்படி போகுது??? என்ன பத்தி எப்பயாச்சும் கேட்டாளா???? என்கிட்ட சரியா பேசி ரொம்ப நாள் ஆகுது…. என் மேல உள்ள கோபம் இன்னும் போகலை போல இருக்கு…. என்னால தானே அவளுக்கு இவ்வளவு பிரச்சனை……என்று தன் மகளை பத்தி கேட்டறித்தாள்.

கவலைப்படாதே மங்கலம் !!! உனக்கு என்னமா தெரியும் ??அவன் கெட்டவன்னு…. சொந்தக்காரன் கூட்டிட்டு வந்த நம்பள நம்ப வைத்து கழுத்த அறுத்துத்திட்டான் ….எல்லாம் சரியாகிவிடும் என்று சிவானந்தம் மங்கலத்திற்கு ஆறுதல் கூறினார்…..

சந்தியா,” நல்லா இருக்காம்மா வேலையும் நல்லா போயிட்டு இருக்கு…. உதவிக்கு இரண்டு பேரை வைத்திருக்கிறாள்”

” மங்கலம் உங்க அக்காவை நெனச்சு ரொம்ப கவலைப் படுற உடம்பு முன்ன மாதிரி இல்ல ரொம்ப சோர்ந்து இருக்கா…….எல்லாம் ……பிள்ளைகளை பத்தின கவலை தான் அவளுக்கு……”

நான் நன்றாக இருக்கும் போதே இவளுக்கு என்று மங்கலம் தொடர…… கண்களை சிமிட்டியவாறு வேண்டாம் என்று தலையசைத்தார் சிவானந்தம்….. மங்கலமும் பெருமூச்சுவிட்டாள்….

நாம் மார்க்கெட் போனப்ப நம்ம ரத்னம் சாரைப் பார்த்தேன் ரொம்ப நாள் ஆச்சு வீட்டுக்கு வந்து பேசுறேன் என்று சொன்னார்…….

ரத்னம் அண்ணாவா???? ரொம்ப நாளாச்சு இல்ல…..சந்தியா சின்ன பிள்ளையா இருக்கும்போது அடிக்கடி வீட்டுக்கு வருவார்…. டிரான்ஸ்பர் ஆனதிலிருந்து அவரைப் பார்க்கவே முடியல …..

“எதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னாரு வீட்டுக்கு வந்து சொல்றேன்னு சொல்லிட்டாரு”

என்ன விஷயமாக இருக்கும் என்று எண்ணினாள் மங்கலம்.

வீட்டில் இருந்த அனைவருக்கும் காது கிழியும் அளவுக்கு கூச்சலை கொடுத்துக்கொண்டிருந்தார் மாணிக்கம் சிவனத்தந்தின் தம்பி……. அண்ணனுக்கு எதிர்மறை …பொறுப்பு இல்லாதவர்…சிலர் மோசமான சேர்க்கையால் தொழிலில் அதிக நஷ்டம் அடைந்தவர்…தண்ணி வண்டி வேற… ஆனால் அவனுக்கு அண்ணன் அண்ணி என்றால் தனி மரியாதை உண்டு. அம்மா இறந்த பின் தன்னை அவர்கள் பிள்ளையாக நினைத்து வளர்த்தவர்கள். அண்ணன் மற்றும் மங்கலம் சொல்லுக்கு மரியாதை இல்லாமல் போனது இந்த குடி விஷயத்தில் …அவனுக்கு அரவிந்த் ,அஞ்சலி ,அருண் என்ற பிள்ளைகள் உள்ளனர்… அஞ்சலி அவ்வ போது தன் தந்தைக்கு ஆறுதலாக இருப்பாள் ஆனால் அர்விந்ததோ தன் தந்தையை சற்றும் கண்டுகொள்வதில்லை.

“இன்னைக்கு குடிச்சிட்டு வந்துட்டீங்களா????? எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டேங்கறீங்க…. உங்களால என் மானமே போகுது…. உங்களால தான் நம்ம பையன் அரவிந்த் அவ்வளவு கஷ்டப்படுறான் கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா ???உங்களுக்கு…..”

“என்னடி பண்ண சொல்ற சாந்தி நான் விட்டாலும்…. அது என்ன விட மாட்டேங்குது!!!!! என்னால சரியா தூங்க கூட முடியல …..”இன்று தள்ளாடியவாறு பேசினான்.

சாந்திக்கு இந்த காரணங்கள் எல்லாம் சப்பைக்கட்டு களாகவே தெரிந்தது.தான் தொழிலில் சில பேருடன் சேர்ந்து இருந்த சேமிப்புக்களையும் சொத்துக்களையும் இழந்து இன்று கணவனின் அண்ணன் குடும்பத்தில் தஞ்சமடைந்தது அவளுக்கு நெருடலை கொடுத்துக் கொண்டிருந்தது. தன்னிடம் பணம் இல்லாததால் தான் இந்த வீட்டில் ஒரு அட்டை போல் ஒட்டிக் கொண்டு தன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கின்றோம்…இது சாந்தியின் நினைப்பு….

தன் வாழ்க்கை போனால் போகட்டும் தன் பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று நினைத்தாள்.பெரிய இடத்தில் தன் மகனும் மகளும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளாக இருந்தது.

ஒதுங்க கூட இடமில்லை என்ற நேரத்தில் சிவானந்தம் தன் வீட்டின் கதவை திறந்து ஆதரவு கொடுத்து, சில வருடங்கள் கழிந்தும் அவள் அவர்களை புரிந்து கொள்ளவில்லை என்றே சொல்லலாம். இந்த இடத்தை விட்டு எப்போது செல்லலாம் ??என்று தக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள் சாந்தி. எப்படி செல்வது ??எங்கே செல்வது ??இப்படி வசதியைப் பெருக்குவது என்ற கேள்விகளுக்கு அவளிடம் பதிலில்லை… அவளுக்கு உதித்த ஒரே எண்ணம் வசதியான வரன்கள் மட்டும் தான் அதனால் மட்டும் தான் தனது கனவை அடைய முடியும் என்று உறுதியாக இருந்தாள், இதற்கு அரவிந்தனும் கூட்டு.

அரவிந்தனுக்கு பெரிதாக வரவு இல்லை… சாதாரண மெக்கானிக் …பெரிதாகவும் படிக்கவில்லை படிக்கும் வயதில் தீய பழக்கங்களை வைத்துக் கொண்டு வாழ்க்கையை சீரழிவு பாதையில் செலுத்தியபோது அதிலிருந்து வருவதற்கு பெரிய உதவியாக இருந்தது சிவானந்தம் மற்றும் சந்தியாவும்…

இப்போது பார்க்கின்ற வேளை கூட சந்தியாவின் சிபாரிசு பண்ணி தான் கிடைத்தது. பொறாமையும் பேராசையும் அவர்களை ஆட்கொண்டு சந்தியாவிற்கு எதிராக திரும்பியது. அவளிடம் ஒரு வேஷமும் பின்புறத்தில் ஒரு வேஷம் போட்டுக் கொண்டு இருந்தனர் .. மாணிக்கம் தன் அண்ணன் பிள்ளைகள் மீது தனிப் பிரியம் தான் இருந்தும் அந்தப் பழக்கத்தை விட முடியாமல் அடிக்கடி சந்தியாவிடம் டோஸ் வாங்குவது அவருக்கு பழகிப்போன விஷயம்…

” சித்தப்பா!!! உங்க கிட்ட நிறைய வாட்டி சொல்லியாச்சு கொஞ்சமாவது மாறக் கூடாதா???? தம்பி, தங்கச்சிக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டிய நீங்களே!!!! இப்படி பண்ணினா??? அவர்களுடைய எதிர்காலத்தை நினைத்து பாருங்கள்…. என்ன ஆகும்னு??? அவுங்க என்ன நினைப்பாங்க ??? நல்லா இருக்க வேண்டாமா?? நீங்க இந்த பழக்கத்தை விட்டு ஆகணும்… திஸ் இஸ் மை லாஸ்ட் வார்னிங்… இல்ல உங்க கிட்ட பேசவே போறது இல்லை முடிவு பண்ணிட்டேன்”

“தியா கண்ணு!!! அப்படி எல்லாம் சொல்லாத… நீ பேசலனா…என்னால தாங்கவே முடியாது… என்று மாணிக்கம் சொல்ல…..

நல்ல தண்டனை அவனுக்கு என்று சொல்லிக் கொண்டே சிவானந்தம் வீட்டுக்கு வந்தார். இப்படி பண்ணா தான் இவனுக்கு புத்தி வரும் விடாத சந்தியா என்று மகளுக்கு சப்போர்ட்டாக பேசினார் மாணிக்கமும் இந்த பழக்கத்தில் இருந்து மீண்டு வருவதாக உறுதி கூறினார்.

********

ராஜேஸ்வரி பல புகைப்படங்களை பரப்பி மேஜை மீது வைத்துக்கொண்டு அதனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் மகனுக்கு எப்படியாவது திருமணம் செய்து அவன் தன் குடும்பத்துடன் வாழ வேண்டும் என்பது அனைத்து தாய்களின் அசைபோல் அவளுக்கும் இருந்தது.ஆனால் அர்ஜுன் இல்லற வாழ்க்கையில் பெரிய ஆர்வத்தை காட்டாதது அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்து கொண்டிருந்தது.

திருமணம் என்று பேசினாலே சில பல சாக்குகளை சொல்லி தட்டிக் கழித்து வருகிறான். மனதில் எவரேனும் நினைத்துக் கொண்டிருக்கிறானோ???? என்று கூட தோன்றும் அவளுக்கு. ஆனால் காதல் திருமணத்திற்கு அவள் ஒன்றும் எதிரி அல்லவே தானும் அப்படி ஒரு திருமணத்தை செய்தவர் தானே என்று யோசிப்பாள் …

குமாரசாமியும் வரும் வரன்களை எல்லாம் ஒருபுறம் அர்ஜுனுக்கு அது சரியில்லை இது சரியில்லை என்று கூறி திருமணத்தை தள்ளிப் போட்டான் அதற்குக் காரணம் தனது மகளுக்கு 18 வயது முடிய வேண்டுமே!!!!

ராஜேஸ்வரிக்கும் அனுவை தன் குழந்தை போலத்தான் வளர்த்தாள் அம்மா இல்லை என்ற குறை வந்து விடக்கூடாதே என்று…குமாரசாமி அனுவிற்கும் அர்ஜூனுக்கும் திருமணம் என்று பேசினாலே பிடி கொடுத்து பேச மாட்டாள்… அவளோ சின்ன பொண்ணு!!! இந்த பெரிய பொறுப்புகளையெல்லாம் தனக்கு அப்புறம் இந்த வீட்டு , தொழில் நிர்வாகம் அவள் தானே பார்த்துக் கொள்ளவேண்டும். பரம்பரையின் மூதாதைகளின் முடிவும் அதுவே….இந்த வீட்டின் பிறந்த பெண்களோ அல்லது புகுந்த பெண்களும் முழுஉரிமை கொடுக்கப்படும் அதற்குத் தெளிவான உறுதியான சிந்தனை படைத்தவள் தான் அர்ஜுனுக்கு மனைவியாக வரவேண்டும்… ஆனால் இதை எதிர்கொள்ள முடியுமா அனுவிற்கு குருவி தலையில் பனங்காயை வைத்தது போல ஆகிவிடுமோ???? என்ற குழப்பமும் பயமும் சேர்ந்து கொண்டது.

அர்ஜுனுக்கு பார்க்கும் பெண் வசதியை விட அவள் துணிச்சலும் மன உறுதியும் படைத்தவளாக இருக்க வேண்டும் என்பதே அவளது முதல் கண்டிஷன்.

” என்னம்மா ப்ரோக்கர் வந்தார் போல…. வழியில அவரை பார்த்தேன் என்ன சொன்னார்”
என்றான் குமாரசாமி.

“பொண்ணுங்களோட போட்டோ கொடுத்துவிட்டு போனார்…. ஆனால் இந்த வரன்கள் எல்லாம் சரியா வரும்னு எனக்கு தோணல” என்றாள்

மேல் உதட்டை லேசாக இழுத்து கொண்டு அலட்சிய புன்னகை செய்து கொண்டிருந்தான் அவளுக்கு தெரியாமலேயே……. அப்படிக் கொடுக்க சொன்னதே நான்தான்!!! அவ்வளவு ஈசியா இந்தக் கல்யாணத்தை பண்ண விட்டு விடுவேனா அப்புறம் நான் கண்ட கனவெல்லாம் என்ன ஆகிறது??? என்று மனதில் எண்ணி கொண்டு இருந்தான்.

“மாப்ள கல்யாணமே வேண்டாம்னு பிடிவாதமா இருக்கான் …. நீ என்னன்னா இப்படி வரன் பாக்குறியே அர்ஜுன் கிட்ட பேசிட்டியா????” என்றான்.

“அவன் கிட்ட பேசினா தட்டிக்கழிக்க தான் பார்ப்பான் …. நம்ம தான் அவனுக்கு புரிய வைக்கணும் அண்ணே!!! ஏன் வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்?? அதனால் நம்ம அனு இருக்காளே இப்பதான் அவ காலேஜ் சேர்ந்துடாலே அப்புறம் என்னம்மா???” என்று துடுப்பு போட்டான் குமாரசாமி.

“என்ன அண்ணே பேசுற அவ சின்ன பொண்ணு…. நல்லா படிக்கட்டும் இப்போ போய் கல்யாணம் பண்ணி வச்சா …அது சரிவராது….”
” இல்லம்மா….” என்று சொன்னவனை…இதைப்பற்றி பேச வேண்டாம் அண்ணே… கோச்சுக்காதே… நானே படிப்பு முடிஞ்சு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று வாயை அடைத்தாள்.

எப்படி வலை போட்டாலும் இந்த மீன் மாட்ட மாட்டேங்குதே என்று நினைத்துக்கொண்டான் குமாரசாமி ஆனால் தான் நினைத்ததை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று வெறி ஏறி கொண்டே இருந்தது.

“அம்மு மட்டும் இருந்தா அர்ஜுனன் மனச மாற்றி இருப்பாள் என்று குமாரசாமி சொல்ல…..”

சற்றென்று திடுக்கிட்ட ராஜேஸ்வரி, கடுமையான குரலில் “அண்ணே!!!!! அந்த ஓடுகாலி நாயே பத்தி பேசாத அவளாலதான் என் புருஷன் செத்து போனார் என்றாள் அவள் முகத்தில் பதற்றமும் வெறுப்பும் சூழ்ந்துகொண்டு முகம் முழுவதும் வேர்வை படர்ந்தது…. கைகள் நடுங்கியவாறு நாற்காலியின் கைகளை இறுக்கிப் பிடித்தவாறு மயக்க நிலைக்கு சென்றாள்…

யாரு அந்த அம்மு ??? பொறுத்து இருந்து பாப்போம்…

Advertisement