Advertisement

“வாம்மா ராஜி அந்த கட்டிடம் இடிந்து விழுந்த விஷயத்தைப் பத்திதான் நானும் மாப்பிள்ளையும் பேசிக்கிட்டு இருந்தோம் நீயே வந்துட்ட”என்றான் குமாரசாமி.

“அர்ஜுன் பிசினஸ் போர்டு மீட்டிங் இருக்குன்னு சொன்னேன் இல்ல அது எப்படி போகுது ?????இந்த கேஸால எனி இஸ்யூஸ்?????

“இல்லம்மா அத நான் பாத்துக்குறேன்”

“அண்ணே இந்த விஷயத்தை சீக்கிரம் முடிங்க அவரோட பெயரில ஆரம்பிச்ச ஃபேக்டரி அதுல போய் இப்படி நடந்திருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு எக்காரணம் கொண்டும் அவர் பேரோட மதிப்பு குறையற மாறி நடக்கவே கூடாது …..எனக்கும் என் மகனுக்கும் சரி அது பெரிய அவமானம் ”

“அப்பா விட்டுட்டு போன சொத்துக்களை வைத்து இன்றைக்கு இவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் உருவாக்கி இருக்குதுன்னா ஒரே நைட்ல கிடைத்த வெற்றி இல்லை அது”.

“நானும் அவரும் படாத கஷ்டம் இல்லை இந்த லட்சியத்தை அடைய அதை காப்பாற்றுகிற பொறுப்பை
இப்போ அர்ஜுனுக்கு கொடுத்திருக்கிறேன் நீங்க அவன சரியா வழிநடத்தும்”

“நான் பொறுப்பு ராஜி நான் தூக்கி வளர்த்த பிள்ளை அல்லவா விட்டு விடுவேனா உன் கணவருக்கு தான் என்னை பிடிக்காது அப்பாவும் என் மேல நம்பிக்கை வைக்காமல் பொறுப்புகளை உன்னிடம் கொடுத்துவிட்டார் அவர் எப்பவுமே என்னை தூரமா தான் வைத்து பார்ப்பார் ”

“அவர் உயிரோடு இருக்கும் காலத்தில் இறந்தபின் பாவம் தங்கை தனியாக கஷ்டப்படுகிற என்று நான் உங்களுக்கு உறுதுணையாக இருந்து என் வாழ்க்கையை ஓட்டிட்டு இ ருகிறேன்”

தன் தங்கைக்கு அப்பாவிற்கும் தெரியாமல் பல மோசடிகளை கண்டுபிடித்தவர் அர்ஜுனின் தந்தை. அவர் இறந்த பிறகு குமாரசாமிக்கு நல்ல வசதியாக போய் விட்டது ,இங்கே பசை போல் நன்றாக ஒட்டிக் கொண்டான். கணக்கு வழக்குகளில் அடிக்கடி கை வைக்கும் பழக்கம் இருந்துகொண்டுதான் இருந்தது. தனக்கு விசுவாசமான சில வேலையாட்களை அலுவலகத்தில் வைத்துக் கொண்டு தனக்கு தேவைப்படும் பணத்தை கறந்துக்கொண்டு தான் இருந்தான்.

எக்காரணம் கொண்டும் இந்த மோசடிகளை அர்ஜுன் காதுகளுக்கு எட்டாதவாறு பார்த்துக் கொள்பவன் இல்லையென்றால் வீதிக்கு வந்து விடுமே அவன் வாழ்க்கை.

“நாளைக்கு ஸ்டேஷன்ல வந்து பேசிக்கலாம் இன்ஸ்பெக்டர் சொன்னாரு ராஜிமா நானும் மாப்பிள்ளையும் போய் பேசிட்டு வறோம் ஜஸ்ட் இன்வெஸ்டிகேஷன் தான்”

“அந்தக் கட்டடத்தால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு கம்பெனி டிரஸ்ட் இருந்து ஊக்கத் தொகையை கொடுக்க சொல்லி இருக்கேன் மேனேஜர் கிட்ட அத பாத்துக்கோங்க அண்ணே ”

“எனக்கு பிரசிடெண்ட் எலக்சன் விஷயமாக சில பேரை மீட் பண்ணணும்னா போயிட்டு வந்து விடுகிறேன் ”

அர்ஜுன் நீ சாப்பிட்டியா ??? ரொம்ப நேரம் பசி தாங்க மாட்டியே
” வா சாப்பிடலாம் நானே பரிமாறு கிரேன்”
இருவரும் காலை உணவை முடித்து விட்டு அலுவலகம் புறப்பட்டனர்.

நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் ஒரு மரத்தினடியில் ஒற்றையாய் ஒரு கருப்பு கலர் கார் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது.அதில் குமாரசாமி தனது கான்ட்ராக்டர் இடம் கடுமையாக பேசிக்கொண்டிருந்தான்.

“டேய் என்னையா பண்ணி வச்சிருக்க யோவ் என்ன நல்ல ஏமாத்த பாத்திருக்கியா உன்னை ஒரு நல்ல காண்ட்ராக்டர் என்று நினைத்து எங்க கம்பெனியில சப்ளை பண்ண வைக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன் தெரியுமா????”

“நல்ல கமிஷன் குடுக்கிறேன்னு சொன்ன இப்ப நீ பண்ணி இருக்கிற வேலையை பார்த்த நான் உள்ளே போயிடுவேன் போல இருக்கே”

” நம்ம லாயர் என் ஆளு தான் அவரைப் போய் பாரு அவர் சொல்றத அப்படியே கேளு…. புரியுதா???”

” உன்னோட சரக்குகளை கம்பெனிக்கு கொண்டுவர நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் இந்த விஷயம் என் தங்கைக்கும் அர்ஜுனுக்கு தெரியவே கூடாது.”

“நாளைக்கு ஸ்டேஷன்ல வச்சு அந்த நிபுணர் ஒரு விரட்டு விரட்டுனா அவ ஓடி விடுவாள்…. நான் பாத்துக்குறேன்… நீ எங்கேயாவது இப்போதைக்கு போயிடு நிலைமை சரியானதும் அப்புறம் சொல்லி அனுப்புறேன் அப்போ வா இப்ப இடத்தை காலி பண்ணு”

“ஓகே பாஸ்……நீங்க சொன்ன படியே செய்கிறேன்” என்றான் அந்த நபர்

மணி ஏழை கடந்து கடிகாரம் வேகமாக சுற்றிக் கொண்டிருந்தது அலுவலகத்தில் அனைவரும் பணிகளையும் முடித்துவிட்டு கிளம்பிக் கொண்டிருந்த சமயம் செந்தில்,பவி வந்து நின்று சந்தியாவிடம் பேசிக் கொண்டிருந்தன.

“எத்தன வாட்டி உன்கிட்ட சொல்றது எனக்கு ஒரு போட்டோ எடுத்துக் கொடு ப்ளீஸ்….. அதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு அம்மா வேற கல்யாணத்துக்கு போட்டோ வேணும் கேட்டுகிட்டே இருக்காங்க”

” உன்ன போட்டோ சூட் பண்ணனும்னா அந்த வைல்ட்லைஃப் போட்டோகிராஃபரால தான் முடியும் நம்மளால ஒன்னும் செய்ய முடியாது……. எனக்கு அப்படி யாரையும் தெரியாதே !!!!!”

“ஏய் என்ன ரொம்ப பேசுற…. என்ன கிண்டல் பண்றியா???”

” சே..சே .. இல்ல உன் போட்டோவை பார்த்தா இந்த மாப்பிள்ளையும் பயந்து ஓடி விடுவான்” என்று சொல்லி செந்தில் சிரிக்க

” இங்க பாரு சந்தியா இந்த செந்தில் என்னை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கான் ”

“செந்தில் டோன்ட் டீஸ் புது பொண்ணு சீக்கிரத்தில்…..”

“உனக்கு இருக்கு!!!!! தகுந்த நேரம் பார்த்து எடிட்டர் கிட்ட போட்டு கொடுத்துடுவேன்”

” ஐயோ சாமி அதெல்லாம் பண்ணிடாத அவரு நீயும் சந்தியாவும் எது சொன்னாலும் நம்பிடுவாரு அப்படிப்பட்ட மனுஷன் அவர்”

“அப்படி வா வழிக்கு…… அப்ப நான் சொன்னதை செய்யணும் ஓகேவா போட்டோகிராஃபர்”

” ஓகே மேடம்”

” சந்தியா உனக்கு எப்ப கல்யாணம் பண்ணிக்க போற ஆண்டி கூட இத நினைத்து ரொம்ப கவலைப்படுறாங்க நான் வீட்டுக்கு வந்திருந்தபோது ”

“ஆரம்பிச்சுட்டியா !!!!!!”

“வீட்ல அம்மா என்றால் ஆபீஸில் நீயா????? ஆளை விடு எனக்கு நிறைய வேலை இருக்கு”

” சரி சரி ஓடாத கல்யாண இப்போ வேண்டாம்னு ஓகே ……பட் மாப்ள இப்படித்தான் இருக்கணும் என்று ஒரு எண்ணம் இருக்கும்ல அத சொல்லு நான் கேட்கிறேன்”

” ப்ளீஸ் பவி இம்பார்டன்ட் வொர்க் இருக்கு”

“ஹேய் ப்ளீஸ் சந்தியா சொல்லு” என்று தோழியை கேட்க

“ஏன் நீ போய் மாப்பிள பாக்க போறியா….. சைடுல மேரேஜ் புரோக்கர் ஆயிட்டியா !!!!!

நல்லவேளை நம்ப ஆபீஸ் தப்பித்தது சந்தியா என்று செந்தில் சொல்லி அவளை வார அவனை முறைத்தாள் பவி.

“ப்ளீஸ் சந்தியா உன் பிரண்டு தானே நான் என்கிட்ட சொல்ல என்ன வெட்கம்”

இவ விடமாட்டாள் போல என்று எண்ணி ” ஓகே …..போய் எங்க அம்மா கிட்ட உளறி வைக்க கூடாது…. டீல்???

” ஓகே ஓகே… டீல்…!!! ஆண்டி கிட்ட சொல்ல மாட்டேன்”

” உனக்கெல்லாம் மூன்று வேளை நன்றாக சமைத்து சோறு போடணும் அது தானே உன்னோட மாப்பிள்ளை குவாலிஃபிகேஷன் என்று பதில் சொல்லி பவியை வெறுப்பேத்த அவளுக்கு எரிச்சல் எரிச்சலாக இருந்தது.

“போடா பயந்தாங்கோலி போலீஸ் வந்ததும் ஆளே காணோம் நீ பேசுவியா வாய மூடு இல்ல”என்று மிரட்ட செந்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

“சொல்லு சந்தியா என்ன குவாலிபிகேஷன் வேணும் உன் கணவனுக்கு” என்று அவள் கேட்க தன் மனதில் இருந்ததை வெளிப்படுத்தினாள்

” என்னை புரிந்து கொண்டு என் மீது நம்பிக்கை வைத்து, நான் எடுக்கும் முடிவுகளுக்கு துணையோடு நின்றாலே போதும் ….பெண்களுக்கு நல்ல மரியாதை கொடுத்து சம அளவு உரிமை கொடுத்து பழகணும் அது போதும்”

“சூப்பர் சந்தியா …அப்படிப்பட்டவன் எங்கே இருக்கான்”என்று எண்ணினாள் பவி

தனது மணிக்கட்டில் இருந்த கடிகாரத்தை பார்த்தாள் மணி எட்டை தாண்டி பெரிய முள் சின்ன முள்ளை துரத்திக் கொண்டிருந்தது…. வீட்டிற்கு நேரமாகிவிட்டது அம்மா சாப்பிடாமல் காத்துக்கொண்டு இருப்பாள் என்று நினைத்துக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள் சந்தியா.

“இரவு உணவை முடித்து விட்டு தன் படுக்கையில் அமர்ந்துகொண்டு தன் அக்கா சௌமியாவிடம் கைப்பேசியில் உரையாடு கொண்டிருக்க அன்று இரவு அப்படியே கழிந்தது….

போலீஸ் ஸ்டேஷனில் அனைவரும் தனது பணிகளை பரபரப்பாக பார்த்துக்கொண்டிருந்தனர்…. வெளியில் பிளாக் கலர் பென்ஸ் கார் வந்து நின்றது, அனைவரின் கண்களும் அதன் மீது படர்ந்தது… அதனுள் இருந்து கம்பீரமாக அர்ஜுன் தனக்கு உரிய ஸ்டைலில் வெளியே வந்தான் வெயில் தாக்கம் அதிகமாக இருக்க அவனது சன்கிளாசஸ் எடுத்துப் போட்டுக் கொண்டான். அது அவனது ஸ்டைல் மற்றும் அழகை இருமடங்காக கூட்டியது .பவி இதனை அஜித் …விஜய்… படத்தின் இன்ட்ரோ சீனு போல பார்த்துக் கொண்டிருந்தாள்

தன்னை மறந்து சைட் அடித்துக்கொண்டு இருந்தவளை ஒரு கிள்ளு கிள்ளினாள் சந்தியா…

“ஏண்டி இங்கே பாரு ஒரு ஹீரோ போல இருக்கான் இவன் தான் அர்ஜுனா அந்த ராஜேஸ்வரி குரூப் சிஇஓ போல….” அசடு வழிந்த பவியை பார்த்து ஒரு முறை முறைத்தாள்…

செய்கிறது தப்பு… நியாயம் இல்லாத கம்பெனிக்கு முதலாளி…. ஏழை உயிர்களை துச்சமாக எண்ணிய எண்ணம்… தன்னை சட்டம் ஒன்னும் பண்ண முடியாது என்கிற திமிர்… பணம் இருந்தால் தன்னால் எல்லாம் செய்து விட முடியும் என்கிற பணக்கார புத்தி …என்றோ அர்ஜுனை பார்த்த நிமிடம் சந்தியாவின் நினைவில் இது அல்லவா ஓடிக்கொண்டிருந்தது.

அர்ஜுன் இவளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை …அடுத்தவர்களை கொஞ்சம் மதிக்கும் தன்மை கூட இல்லை என்று எண்ணிக் கொண்டிருந்தாள் அர்ஜுன் பற்றிய தவறான எண்ணங்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டே இருக்க மறுபுறம் அவன் ஒரு ஹீரோ போல் தான் இருக்கான் இருந்தும் தன்னை சிறிதும் கண்டுகொள்ளவில்லை என்று எரிச்சலும் இருந்தது.

“வாங்க மேடம் சிஇஒ வந்துட்டாரு உள்ளே வாங்க” என்று கான்ஸ்டபிள் அழைக்க உள்ளே சென்றனர் பவியும் சந்தியாவும்.

சற்றும் கண்டுகொள்ளாத பாணியில் அர்ஜுன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்… அவனது மாமா பக்கத்தில் நின்று கொண்டு இவர்களை ஏளனமாக பார்த்தான்.

சிறிதும் தயக்கமின்றி சந்தியா “நானே பர்சனலா அந்த காண்ட்ராக்டர் செகிரேட்டரி ஓட பேசி இருக்கேன் சார் அந்த அம்மாதான் கான்ட்ராக்டர் பத்தி ஒரு டாகுமெண்ட் கொடுத்தாங்க அந்த ஒரிஜினல் காப்பி கூட சமிட் பண்ணியாச்சு இன்னும் என்ன டிலே பண்ணி இருக்கீங்க… இமெடியட் அக்ஃஷன் எடுத்து இந்த சம்பவத்துக்கு யார் காரணமோ அவங்களை அரஸ்ட் பண்ணுங்க……”

இப்படி இரக்கமே இல்லாத முதலாளிகள் இருக்கவே கூடாது அடுத்தவங்க உயிர்களைப் பறித்துக் கொண்ட பணம் சம்பாதிக்கும் மனிதர்களுக்கு இது பாடமாக இருக்கும் என்று தனது வாதத்தை முன்னிறுத்தினாள் சந்தியா

அர்ஜுன் ….. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தான் அமர்ந்து இருந்த நாற்காலியை வேகமாக தள்ளி அதனில் இருந்து எழுந்தான்.அனைவரும் திகைத்து அவனையே பார்த்தனர்……. அவன் கண்கள் கோபத்தில் கோவப்பழம் சிவந்து இருந்தன…..

Advertisement