Advertisement

ஆசை-2

அவள் நினைவில் இருந்தது அந்த சிமெண்ட் ஃபேக்டரி னால் நடந்த சம்பவம் தரக்குறைவான மெட்டீரியல்ஸ் பயன்படுத்தி கட்டிய அந்த கட்டடம் இடித்துவிழுத்த விபத்து நகரத்தையே உலுக்கியது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை உயிரிழக்கச்செய்தது .
அன்றாட சம்பளத்துக்கு வேலை பார்க்கும் தினசரி கூலியாள்கள் குடும்பத்துடன் கூட்டமாய் நின்று அழுத காட்சிகள் நிழலாடி சென்றன.

தங்களுக்காக யாரும் நீதி வாங்கி தரமாட்டார்களா என்று அதை கேட்கும் கண்களுக்கு சந்தியா குடுத்த அந்த ரிப்போர்ட் எவிடென்ஸ் ஆறுதல்களாக இருந்தது ..
.சிமெண்ட் ஃபேக்டரி தவறினால் தான் கட்டடம் இடிந்து விழுந்து, சிமெண்டின் மூலப்பொருள்களில் தரம் இல்லை என்று முக்கியமான ஆதாரங்களை சேமித்து
போலீஸ்’ கையில் கிடைத்ததுக்கு சந்தியா முக்கியமான காரணம்.அந்த ஏழை தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று நோக்கில் செய்தது அவளுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அப்போது அவளுக்கு தெரியவில்லை

இவை தனது நினைவில் வந்திட அதே நேரம் தனது சித்தியும் அண்ணனும் உள்ளே வந்தனர் .
பிறந்தநாள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டு தனது இரு சக்கரத்தில் பறந்தாள்.

சாந்தி, சிவானந்தத்தின் தம்பி மாணிக்கத்தின் மனைவி . சிவானந்தம்,அவரது பிள்ளைகளுக்கு கொடுக்கும் உரிமையை தனது பிள்ளைகளுக்கு கொடுப்பதில்லை என்ற எண்ணம் சாந்தியின் மனதில் உண்டு.
அதற்கு காரணம் தன் கணவன் ஒரு குடிகாரன் என்பதுதான்.திருமணமான நாளிலிருந்து தன் கணவன் தன்னை பெரிதாக கண்டுகொள்வதில்லை என்ற எண்ணம் ,தான் வந்த புகுந்தவீட்டுக்கு தான் மங்கலமும் வந்தாள் இருந்தாலும் அவள் பேச்சுக்கு தன் கணவன் மரியாதை குடுப்பது எரிச்சலை உண்டாக்கியது.
அரவிந்திற்கும் அதே எண்ணம் தான் அதனால் என்னோவோ பெரியப்பா வீட்டின் பிள்ளைகளுக்கு இருக்கும் மரியாதை சமுகத்தில் தனக்கு இல்லையே என்ற எண்ணம்
அதிகமாவே இருந்தது அவனுக்கு.அதன்பால் அவர்கள் மீது சற்று பொறாமை இருந்தது.
தனது தங்கை தம்பிகளையும் காக்கும் பொருட்டு அவன் தலையில் விழுது விட்டது என்ற ஆதங்கம் ஒரு பக்கம் இருக்க தனது வயதினர் செய்யும் பொழுதுபோக்குகளை தான் அனுபவிக்கவில்லையே என்றே தோண்றும் அவனுக்கு.

சென்னையின் முக்கியமான பிரச்சனை டிராபிக் அதை தாண்டி சந்தியா அலுவலகத்துக்கு வந்து சேர கொஞ்சம் நேரமாகிவிட்டது.தனது மோட்டார் சைக்கிளின் ஸ்டாண்ட் போட்டுவிட்டு நிமித்தவளுக்கு வாட்ச்மன் ” கூட் மார்னிங் ” என்று காலை வணக்கம் சொல்ல

“கூட் மார்னிங் அங்கிள் ”

உள்ளே சென்ற சந்தியாவை காண போலீஸ் ஆஃபீஸ் அலுவலக்கத்தின் வரவேற்பறையில் காத்திருந்தது சற்றும் எதிர்பார்க்காத ஓன்று.

“ஹலோ மிஸ் சந்தியா ஒரு சின்ன விசாரணை அதான் வந்தோம் ”

“சொல்லுங்க இன்ஸ்பெக்டர் ஹொவ் கேன் ஐ ஹெல்ப் யு?? ”

“நீங்க கொடுத்த ரிப்போர்ட் வச்சு தான் நாங்க போலீஸ் இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டு இருக்கோம் பட் அவங்க சைடு ஸ்ட்ரோங்க ஒரு எவிடென்ஸ் இருக்கு அதனால அவங்க உங்கமேல கம்பளைண்ட் கொடுத்து இருக்காங்க அதுக்காக தான் வந்தோம் ப்ளீஸ் கோ-அப்ரேட் மேடம் ”

” எஸ் இன்ஸ்பெக்டர் ”

” நீங்க குடுத்தா ரிப்போட்ஸ் எல்லாம் புனையப்பட்ட ரிப்போர்ட்னு தே ஹவ் எவிடென்ஸ் ”

” நோ சார் நானும் எங்க வெளிச்சம் சிஃஷிவ் ரிப்போட்டரும் சேர்ந்துதான் டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணுனோம் நீங்க சும்மா விடக்கூடாது ப்ளீஸ் டேக் நெஸ்ஸ்ஸரி அக்ஃஷன் சார் ”

“நாங்க விசாரிச்சுக்கிட்டு இருக்கோம் மேடம் நாளைக்கு ஸ்டேஷன்க்கு வாங்க பேசலாம் ”

“ஓகே சார் தங்கியூ ”

இருந்தாலும் அந்த அர்ஜுன் கம்பனிக்கு அதிகம் திமிருதான் என்று பவி சொல்ல நீ கவலைப்படாத சந்தியா அதான் நம்ப செந்தில் இருக்கான்ல பத்துக்குவான் என்று அருகில் இருந்து அமைதியாக வேலை பார்த்தவனை சாடினாள்
அவன் ,இது என்ன ஒரு வம்பா போச்சே நம்மள ஒரு வழி பண்ணாம விட மாட்டார் போல என்று வாய்விட்டே சொல்லிவிட்டான் செந்தில்

“போடா பயந்தாங்கோலி”

“பவி இருக்கா நீ தைரியமா இரு சந்தியா” என்று தன் தோழியை தைரியப் படுத்தினாள்

“தேங்க்ஸ் பவி பெரிய இடம் நா கொம்பா இருக்கு போய் ஒரு கை பார்த்திடலாம் நியாயம் நம்ம பக்கம் இருக்கு ஏழைத் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கணும்
அதுல நான் தெளிவா இருக்கேன்”

தம்ஸ் அப் காட்டினால் பவித்ரா .

அந்த ஏசி ரூமில் கூட அனைவருக்கும் வேர்வை வழிந்து கொண்டிருந்தது சிஃஷவ் எடிட்டர் மீட்டிங்கில்,அவர் இந்த மேட்டரில் என்ன முடிவு எடுக்கப் போறாரோ? என்று இருக்க ஆனால் பாசிட்டிவ் முடிவைத் தந்தது அனைவருக்கும் பெருமூச்சு… சந்தியாவுக்கு சற்று அதிகமாகவே இருந்தது
அவர் தடுத்து இருந்தால் அவளால் இந்த உண்மையை வெளியே கொண்டு வந்து இருக்க முடியாது

“கீப் ஆன் ஒர்கிங் காய்ஸ்!வீ வில் வின் அண்ட் ஹார்ட் ஒர்க் நெவெர் ஃயில்ஸ் ” அவர் நினைவுகூர்ந்த வார்த்தைகள் அவள் மனதில் நிலையாய் நின்றன

அதேசமயம் புகழ்பெற்ற பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் ,அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் அனைவரும் வசிக்கும் முக்கிய இடமான ஈசிஆர் ஏன்னும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள
அண்ணாநகர் கடைசி தெருவில் உள்ள வீடு அழகுக்கு அழகு சேர்ப்பது போல் இரண்டு அடுக்கு அரண்மனை எழும்பி இருந்தது.
அந்த கதிரவனின் கதிர்கள் வாங்கிக்கொண்டு அந்த அரண்மனை பிரகாசமாக நின்றுகொண்டிருந்தது அரண்மனையின் அந்த வாயிற்கதவுகள் சுமார் ஒரு
போர்புரியும் அரசின் படை சூழ்ந்து வந்தாலும் அந்த கதவுகளை தாண்டி வருவது கடினம் தான் .
பாகுபலியின் படத்தில் ராஜமாதா சிவகாமி போல் இந்த அரண்மனைக்கு ராஜமாதா கம்பீரமான ராஜராஜேஸ்வரி .

தனது தந்தையிடம் வேலை செய்த ஒரு சாதாரண வேலைக்காரனை திருமணம் செய்து கொண்டாள்
தந்தையின் முழு பொறுப்புக்கள் அவர் இறந்தபிறகு ராஜேஸ்வரிக்கு வந்தது அவளும் அவள் கணவனும் சேர்ந்து தனது சொத்து மதிப்புகளை பல மடங்காக உயர்த்தினர்
இருந்தும் அவளின் கணவனின் மரணம் ஒற்றைக் காலை இழந்தாள் போல் செய்தது அதற்கு தோள் கொடுக்கும் தோழன் போல் ராஜேஸ்வரியின்
ஒரே மகனான அர்ஜுன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டான். அர்ஜுன் வாட்ட சாட்டமான உடம்பு அவனுக்கு சற்று வெள்ளைத்தோல் முறுக்கு மீசையுடன் தாடியும் உண்டு
பெரிய வீட்டு பிள்ளைகளுக்கு ஏற்றார் போலவே அவனது தோற்றமும் இருக்கும் அனல் பறக்கும் அவன் கண்கள் பார்ப்போரை அவன் வசம் நம்மை இழுத்துக் கொள்ளும் கோபம் வெளிப்படும் நேரம் பச்சைக்கிளியின் மூக்கு போல் சிவந்து காணப்படும்
கண்களில் காந்தம் வைத்து இருப்பானோ என்றும் அவனை தாண்டி செல்லும் அனைத்து பெண்களின் கேள்வியாக இருக்கும்
உடற்கட்டை நேர்த்தியாக வைத்துக்கொள்ள அவன் தினமும் உடற்பயிற்சி யோகா செய்வது வழக்கம் அக்கேஷனல் ஸ்மோக்கர் அண்ட் ட்ரிங்கர்அதுவும்கூட ஸ்டைல் லாகத்தான் இருக்கும் பார்ப்பதற்கு
தீராத உழைப்பால் ராஜேஸ்வரி அமைத்திருந்த சாம்ராஜ்யம் அவள் சகோதரன் குமாரசாமி செய்கையால் அடிக்கடி ஆட்டம் பிடித்தது.
பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவன் திருந்துவது இல்லை ஆனால் ராஜேஸ்வரியின் முன்பு நல்லவன் போல் நடிப்பதும் குறைந்தது இல்லை ,
இருக்கின்ற ஒரு சொந்தமும் போய்விடுமோ என்ற ஐயத்தில் ராஜேஸ்வரி அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை, எச்சரிக்கையுடன் நிறுத்திக் கொள்வாள்.
குமாரசாமிக்கு தன் மகள் அணுவை அர்ஜூன்க்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசை ஆனால் கல்யாணம் என்று பேசினாலே நூறு அடி ஓடிவிடுவான்
இந்த அர்ஜுன் .அவனை வைத்து இந்த சொத்துக்களை தனது மகளின் பெயரில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது அந்த குமாரசாமியின் குறிக்கோள் என்றே சொல்லலாம். கூட இருந்து கொண்டே குழி பறிப்பது போல ராஜேஸ்வரியின் அருகில் இருந்து கொண்டு
அவளுக்கு தெரியாமலேயே குமாரசாமி குழி வெட்டிக் கொண்டிருந்தான். அம்மாவின் பேச்சுதான் அர்ஜுனுக்கு வேதவாக்கு தந்தையின் இறப்பிற்கு பின்பு தந்தைக்கு தந்தையாக தாய்க்கு தாயாக இருந்தவள் ராஜேஸ்வரி .ராஜேஸ்வரியின் ஒரே பலம் என்றால் அது அவன் மகன் தான்

நியூஸ் பேப்பரில் வந்த செய்தியைப் பார்த்து கடுப்பான அர்ஜுன் அதனை கிழித்து விட்டான்,” ஏன் மாப்பிள்ளை உனக்கு இவ்ளோ கோவம்
வருது ”
“நம்ம பக்கம் ஒரு தவறும் இல்லை நம்ப டீலர்ஸ் காண்ட்ராக்டர் மேலதான் தப்பு, இதெல்லாம் நான் பார்த்துகிறேன் நீ கவலைப்படாத மாப்பிள்ளை”
“இல்ல மாமா அப்பா போனதுக்கு அப்புறம் அம்மா என்னை நம்பி தான் இந்த பெரிய பொறுப்புகள் எல்லாம் கொடுத்திருக்காங்க முடிஞ்ச வரைக்கும்
நான் காப்பாத்தணும் நினைக்கிறேன்”

ஆமா உங்க அம்மாவும் நீயும் எனக்கு கிடைக்கவேண்டிய சொத்துக்களை வச்சுக்கிட்டு என்ன செல்லா காசா மாத்திட்டீங்களே, பிடிக்கிறேன்
எல்லாத்தையும் என் மகளை வைச்சு பிடிக்கிறேன் என்று தன் மனதுக்குள் ஒரு கணக்கு போட்டான் குமாரசாமி

“சொல்லுங்க மாமா நான் சொல்றது சரிதானே ஆமா மாப்பிள்ளை யூ டோன்ட் வரி அந்த ரிப்போர்ட் எல்லாம் செல்லாதுன்னு
நம்ம லாயர் கூட ஸ்ட்ரோங் இருக்காரு அவரும்,நானும் பார்த்துக்கிறோம்”

” ஓகே மாமா ப்ரெசிடெண்ட் எலெக்க்ஷன் வேற வருது வழக்கம்போல நம்ம அம்மா தான் ஜெயிக்கணும் அதற்கு இடையூறாக இது இருந்து விடக்கூடாது”

“அம்மா ப்ரெசிடெண்ட் ஆனா தான் நம்ம இந்த பிசினஸ்ல கிங் இருக்க முடியும் மாப்பிள”

“அதை நீ எனக்கு சொல்லனுமா என்ன நான் பார்த்துக்குறேன் என் வாழ்வில் எத்தனை பேரை பார்த்து இருக்க இது என்ன எனக்கு சின்ன பொடுசு மேட்டர் ”

“யாரு”மாமா இந்த ரிப்போட்டர் நமக்கு எதிரா கம்பளைண்ட் பண்ணியிருப்பது ?”

“ஏதோ வெளிச்சம் பத்திரிக்கை நிபுணர் மாப்பிள்ளை ”

“10-க்கு 10 அடி இருக்கும் அந்த ஆபீஸ் நாலு ரோலிங் சேர் போட்டு ரெண்டு கம்ப்யூட்டரை வைத்து தட்டுனா பெரிய பத்திரிக்கை என்ன நினைப்பு கொஞ்சம் என் பாணியில் பேசினா இடம் தெரியாம மூடிக்கிட்டு காலுல வந்து விழுவாங்க மாப்பிள அதை நான் பாத்துக்குறேன்”

” அம்மாக்கு தெரியுமா இந்த விஷயம் ….?????”

“தெரியும் மாப்பிள!!!!”

கம்பிரம் மிக்க பளிங்குத் தரையில் தன் முகம் பட்டவாறு தங்க சிலைக்கு பூசிய நிறத்தை போல் கலரில் புடவை அணிந்து பெரும் ஆண் சிங்கத்தின்
கூட்டத்தில் ஒரு பெண் சிங்கம் வலம் வருவது போல கர்வமாக ராஜேஸ்வரி மாடிப்படிக்கட்டில் இருந்து அர்ஜுனனை நோக்கி வந்தாள்.

இவள் எதிர்த்து நிற்க போகிறவன் தான் தன் வாழ்வை திருப்பிப் போட போகிறவன் என்று அந்த விதிக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
சந்தியா பழிவாங்குவாளா??? இல்லை பணிவாளா??

பொறுத்து இருந்து பார்ப்போம்…….

Advertisement