Advertisement

அத்தியாயம் 24

உயிரே உயிரே உடம்பில் சிறந்தது

எதுவென்று தவித்திருந்தேன்

அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்

கண்ணே உன்னை காட்டியதால்

என் கண்ணே சிறந்ததடி

உன் கண்களைக் கண்டதும்

இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி

காதல் என்ற ஒற்றை நூல்தான்

கனவுகள் கொடுக்கின்றது.. ஆ..

காதல் என்ற ஒற்றை நூல்தான்

கனவுகள் கொடுக்கின்றது

அது காலத்தை கட்டுகின்றது

என் மனம் என்னும்

கோப்பையில் இன்று

உன் உயிர் நிறைகின்றது

என் மனம் என்னும்

கோப்பையில் இன்று

உன் உயிர் நிறைகின்றது

எனக்கென ஏற்கனவே

பிறந்தவள் இவளோ

இதயத்தை கயிறு கட்டி

இழுத்தவள் இவளோ

ஒளி சிந்தும் இரு கண்கள்

உயிர் வாங்கும் சிறு இதழ்கள்

என்னுள்ளே என்னுள்ளே

ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…

“ஏன் சார் ஊருக்கு போய் ஒரு வாரம் இருக்குமா? இங்க வேலையெல்லாம் போட்டது போட்டபடி இருக்கு. நீங்க ஊருக்கு போனது போதாதென்று மேடத்த வேற கூட்டிட்டு போய்ட்டீங்க. அவங்க இருந்தாலாவது வேலை எல்லாம் நடந்திருக்கும்” அலைபேசியில் சோக கீதம் வாசிக்கலானான் திரு.  

“டேய் அவ என் பொண்டாட்டி டா. அவ இல்லாம நான் ஊருக்கு போனா என் அம்மா என்னை வீட்லயே சேர்க்க மாட்டாங்க டா. அது மட்டுமா எனக்கு கல்யாணமாகி எத்தன நாள்? ஹனிமூன் போக வேணா? அம்மா வேற குலதெய்வத்துக்கு பூஜை செய்யணும் வா வா என்று கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க. அதுக்கு தான் போனேன். என்ன கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுடா. லோ பார்ம் ஆரம்பிச்சு எத்தனை வருஷம் ஆச்சு? ஒரு நாளாவது நான் லீவ் எடுத்து இருக்கேனா? ஒரு வாரம் லீவு எடுத்தத பெருசா பேசுற. உன்னால தனியா சமாளிக்க முடியாதா? அதான் விக்னேஷ் இருக்கானே” திருவுக்கு மேல் எகிறிய கார்த்திகேயன் “நீ எல்லாம் வேஸ்ட்டா. நான் இல்லன்னா வேல பார்க்க என் பிரண்ட வர சொல்லி இருக்கேன் அவ வந்து பார்த்துப்பா” குரலில் ஆனந்தத்தை கூட்டியே கூறினான்.

“எவ அவ?” திரு குரலில் நக்கலை கூட்டினான். 

இந்த நக்கல், நையாண்டி, குத்தல், குசும்பு எல்லாம் அவகிட்ட வச்சுக்காத. உன் மூஞ்சியிலேயே குத்துவா. அவளால குத்த முடியலனா அவ புருஷன் கிட்ட சொல்லி குத்துவா. அவன் கன்னு வேற வச்சிருக்கான். அவ சொன்னா யோசிக்காம சுட்டுடுவான்” திருவின் இதயத்துடிப்பை எகிற வைத்தான் கார்த்திகேயன்.

“அவ வக்கீலா? கேங்ஸ்டரா? கேங்ஸ்டர் பொண்டாட்டியா? அவளெல்லாம் வக்கீலாகல என்று யார் அழுதா” கோபம் அனல் தெறிக்க கேட்டான் திரு.

அச்சத்தால் தான் திரு அவ்வாறு பேசுகிறான் என்று புரிந்து கொண்ட கார்த்திகேயனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“அவ வரட்டும் இருடா சொல்லுறேன். நீ சொன்னதெல்லாம் அவ புருஷனுக்கு வேற போன் ரெக்கார்ட் அனுப்பி வைக்கிறேன்” கார்த்திகேயனுக்கு வரும் அலைபேசி அழைப்புகள் அனைத்தையும் ரெக்கார்ட் செய்வது வழக்கம் என்பதால் அவன் சாதாரணமாக கூறி இருக்க, திருவுக்கு அச்சத்தால் காய்ச்சல் வந்து விடும் போலிருந்தது.

“யோவ் இதுக்கு நீ என்ன உன் கையாலே கொன்னுடு. கொன்னுட்டு உன் கையாலே சமாதியும் கட்டிடு” என்றான்.

அச்சத்தின் உச்சத்தில் இருந்த திரு கார்த்திகேயனை அவன் இவன் என்று பேசிக் கொண்டிருக்க, கார்த்திகேயன் சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தான்.

“ஏண்டா அவர்கிட்ட போய் விளையாடுற? அவர நிம்மதியா வேலை தான் பார்க்க விடேன்” என்று அலைபேசியை பறித்த கயல்விழி “திரு சார். வக்கீல் அக்ஷரா ஆத்மநாதன் வருவாங்க. அவளை பார்த்து பயப்படாதீங்க” என்றாள்.

“அக்ஷரா ஆத்மநாதன்” என்ற திரு கயல்விழியிடம் அக்ஷராவை பற்றி புகழ்ந்து தள்ளலானான்.

“தெரியும் திரு சார்” என்று கயல்விழி எவ்வளவு கூறியும் அவன் நிறுத்துவதாக இல்லை.

கயல்விழியிடமிருந்து அலைபேசியை வாங்கிய கார்த்திகேயன் “டேய் வக்கீல் வண்டு முருகா… போதும்டா. அருவ தாங்கலடா.  அக்ஷராவை பார்த்து நீ சிரிச்சிடாத. அவ புருஷன் ஸ்டீவ் உன்ன சுட்டுடுவான்” என்று அலைபேசியை துண்டித்து விட்டான்.  

“திருவ வம்பு இழுக்கறதே உனக்கு வேலையா போச்சு. கிளம்பு கிளம்பு குழந்தைகளை கூட்டிட்டு வர போக வேணா? இன்னைக்கு எவ்வளவு வேலை இருக்கு” கார்த்திகேயன் தோளில் தட்டியவாறு கயல்விழி பேசிக் கொண்டிருக்க, அவள் இடையோடு தன் இரு கைகளையும் கோர்த்தவன் அவளின் தலைக்கு பின்னால் தினகரனின் முகம் தென்படவே மெதுவாக கைகளை விலக்கினான்.

ஆச்சரியமாக புருவங்களை உயர்த்தினாலும் கார்த்திகேயன் அண்ணனிடம் என்னவென்று கேட்கவில்லை. மாடி வரை வந்தது அவனோடு பேச வென்று அவனுக்கு புரியாமல் இல்லை. வந்தவன் பேசட்டும் என்று தான் தினகரனை பார்த்தான்.

கணவனின் பார்வை தன்னை தாண்டி செல்வதை பார்த்து, திரும்பிப் பார்த்த கயல்விழி அங்கே தினகரன் நிற்பதை பார்த்து “வாங்க மாமா” என்றவள் அறைக்குள் செல்ல முயன்றாள்.

“இருமா” என்ற தினகரனோ தம்பியை பார்த்து “பார்த்தியோட குழந்தைகளை தத்தெடுக்க போறப்போ நானும் வரேன்” என்றான்.

“மதி அக்காவும் வராங்களா?” என்று கயல்விழி கேட்க,

“இல்ல அவ வரல அவ குழந்தைகளை பார்த்துகட்டும். நான் மட்டும் வரேன்” என்றான்.

“இவர் எதற்காக வருகிறார்? ஏதாவது பிரச்சினை செய்யப் போகிறாரோ என்ற சந்தேகம் கயல்விழிக்குள் எழுவே கணவனின் முகம் பார்த்தாள்.

“பார்த்தியின் குழந்தைகள்” என்று தினகரன் கூறியதிலேயே அவன் எண்ணத்தை புரிந்து கொண்ட கார்த்திகேயன் புன்னகைத்தான். கணவன் புன்னகைப்பதை பார்த்த கயல்விழிக்கு பிரச்சினை ஏதுமில்லை என்று புரிய நிம்மதி அடைந்தாள்.

பார்த்திக்கு ஒன்றென்றதும் இதோ கார்த்திகேயன் சென்னையிலிருந்து வந்து விட்டான். தனக்கு ஒன்றென்றால் அவன் வரமாட்டானா? ஏன் ஒரே வீட்டில் இருக்கும் பார்த்தி பார்க்க மாட்டானா? நிச்சயமாக வருவார்கள் அப்படி என்றால் தானும் அவர்கள் விஷயத்தில் கலந்துகொள்ள வேண்டும் அதுதான் சரி. அதுதான் முறை. அதுதான் நடக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த தினகரன் இத்தனை வருடங்கள் இருந்த இடைவெளியை விட்டு தம்பியிடம் வந்து பேசி இருந்தான்.

தான் வருகிறேன் என்று கூறிவிட்டான் ஆனால் பார்த்தி தத்தெடுக்க போகும் குழந்தைகளை பற்றிய விவரங்களை கேட்டு அறிய தயக்கமாக இருந்தது. எப்படி ஆரம்பிப்பது என்றும் தினகரனுக்கு புரியவில்லை. கேட்டால் கார்த்திகேயன் சொல்லாமல் இருக்க போவதுமில்லை.

அடுத்து என்ன பேசுவது என்று அவன் திணறிக் கொண்டிருக்க, தான் இருப்பதால்தான் திணறுகிறானோ என்று “என்னங்க நின்னுக்கிட்டே பேசிகிட்டு இருக்கீங்க உட்காருங்க. மாமா நீங்களும் உட்காருங்க. நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்று கயல்விழி கீழே சென்றாள்.

கயல்விழி ஏன் கீழே சென்றாள் என்று அண்ணன் தம்பி இருவருக்கும் புரியாமல் இல்லை. அவர்கள் அமர்ந்து பேசும் அளவிற்கு இப்பொழுது நேரம் இல்லை. எல்லோரும் கிளம்பி குழந்தைகளை தத்தெடுக்க ஆசிரமம் செல்ல வேண்டும். மனைவியை நினைத்து புன்னகைத்த கார்த்திகேயன் அண்ணனை பார்த்து “இப்ப உனக்கு குடிக்க ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டான்.

“இடம், பொருள், ஏவல் அறிந்து நடத்துகிற மனைவி அமைவதும் வரம் தான். உனக்கு ஒன்னென்னதும் அம்மா ரொம்பவே பயந்துட்டாங்க. அப்பாக்கு பாசம் இருந்தாலும் பிடிவாதம் பிடிப்பாரு. எப்படியோ நீ நினைச்சத நடத்திக்கிட்ட. சந்தோசமா இரு. வா கீழ போகலாம் பார்த்தி பார்த்துகிட்டு இருப்பான்” என்றான் தினகரன்

“ஏன் அண்ணி உன்ன புரிஞ்சுக்காம நடந்துக்குறாங்களா? நீ அண்ணிய பிடிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட” கையை கட்டிக் கொண்டு அண்ணனையே பார்த்திருந்தான் கார்த்திகேயன்.

“நாங்க மூணு பேருமே மூணு விதம் கார்த்தி. நான் அப்பா அம்மாவ விட்டுக் கொடுக்க மாட்டேன். ஆனா பொண்டாட்டிய விட்டுடுவேன். பார்த்தி அப்பா அம்மாவையும் விடமாட்டான் பொண்டாட்டியையும் விடமாட்டான் ஆனால் நீ பொண்டாட்டிக்காக அப்பா அம்மாவையே விட்டுடுவ. உன் பொண்டாட்டி ரொம்ப நல்லவ. அதனால நம்ம குடும்பம் இன்னைக்கு பிரியாம இருக்குது”  நான் உனக்கு அண்ணன்டா நடக்கும் எல்லாவற்றையும் நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொன்னவன், என் தவறை நான் உணர்ந்து விட்டேன். என் குடும்ப விஷயத்தை இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான்.

தன் வாழ்வில் இருக்கும் பிரச்சனைகளை எண்ணி “தலை வலியும் பல்லு வலியும் அவனவனுக்கு வந்தா தான் புரியும்”  முணுமுணுத்த கார்த்திகேயன் “பார்த்தி பார்த்துக் கொண்டிருப்பான். வா வா போலாம்” என்றான்.

கயல்விழியின் மன இறுக்கத்தை தளர்த்தி அவளை தன் பக்கம் சாய்த்துக்கொள்ள என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த கார்த்திகேயனுக்கு ஊருக்கு வந்த கயல்விழியின் மனமாற்றம் அவனுக்கு சாதகமாகி போனதில் அவளோடு நெருங்கி கொஞ்சிக் குலாவளானான். அது கயல்விழியின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ தினகரனின் பார்வையில் பட்டு அவன் மன மாற்றத்திற்கு ஏதுவாக இருந்தது என்பதை கார்த்திகேயன் அறியவில்லை.

கயல்விழி மட்டும் கீழே வரவும் கார்த்திகேயன் எங்கே என்று கேட்டான் பார்த்திபன். உங்க அண்ணனும் வராராம் என்றாள் அவள்.

“என்ன” என்று ஆச்சரியமாக வாய்விட்டு கேட்ட மதியழகி “என்ன பிரச்சனை பண்ணப் போறாரோ” என்று கையைப் பிசையலானாள்.

“உங்க புருஷனைப் பத்தி ரொம்ப உயர்வா நினைக்கிறீங்க அக்கா” என்று சிரித்தாள் கயல்விழி.

கார்த்திகேயனோடு கீழே இறங்கி வந்த தினகரன் பார்த்திபனை பார்த்து “கிளம்பலாமா?” என்று கேட்டான்.

“எல்லாரும் ஒண்ணா எங்க கிளம்பிட்டீங்க?” என்றவாறு வந்தாள் வள்ளி.

“ஏம்மா இன்னைக்குத்தான் பார்த்தி குழந்தைகளை தத்தெடுக்க போறேன்னு சொல்லி இருந்தானே மறந்துட்டியா?” என்று கேட்டது தினகரன் தான்.

“ஏன்டா நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று இவனுங்க தான் இருப்பாங்க. இவனுங்க கூட நீயும் சேர்ந்துட்டியா?”

“சரிமா அப்போ ஒன்னும் பண்ணலம். பார்த்திக்கும் கண்மணிக்கும் விவாகரத்து பண்ணி, கண்மணிக்கு நாமளா ஒரு நல்ல பையன பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாமா? என்று தினகரன் கேட்க,

“என்னடா பேசுற?” கோபப்பட்டாள் வள்ளி.

“குழந்தை இல்ல. குழந்தை இல்லன்னு எல்லாரும் கேக்க போறாங்க. பார்த்திக்கு தான் பிரச்சனை என்று ஊர் பூரா தம்பட்டம் அடிச்சு சொல்லிடலாமா”

தன் கணவன் தானா இவ்வாறெல்லாம் பேசுகிறான் என்று வாய் பிளந்து மதியழகி பார்த்துக் கொண்டிருந்தாள்.

குழந்தைகளை தத்தெடுத்தா பிரச்சினை தீர்ந்து விடும் என்று எண்ணினால் குழந்தைகளை தத்தெடுப்பதிலும் எவ்வளவு பிரச்சினை என்று கண்மணிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. தன்னைப் பற்றின உண்மைகள் தெரிந்து விடுமோ என்று அவளுக்கு உள்ளுக்குள் நடுக்கம் வேறு வரவே கைகள் குளிர்ந்து ஜுரம் வருவது போல் இருக்க மெதுவாக கணவனின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

மனைவியின் நிலை அறிந்து பார்த்திபன் அவளின் கைகளைப் பற்றி தோளோடு சாய்த்துக் கொண்டு புன்னகைத்தவாறு “எங்க அண்ணன பாரு நமக்காக பேசிக் பேசிக் கொண்டிருக்கான்” என்றான்.

“எல்லாருமா முடிவு பண்ணிட்டீங்களா? போங்க போங்க எதையோ பண்ணிக்கோங்க” கோபமாக கூறியவாறு தங்களுடைய அறைக்குள் சென்றாள் வள்ளி. அவளை பொருட்படுத்தாது இவர்கள் கிளம்பி வெளியே சென்றார்கள்.

வெளியே வந்து பார்த்திபன் மேற்கேயும் கிழக்கேயும் மாறி மாறி பார்க்க அவன் தோளிலடித்த கார்த்திகேயன் என்னவென்று கேட்க “இல்ல இன்னைக்கு சூரியன் மேற்கிலிருந்து உதிச்சதா இல்ல கிழக்கு இருந்து உதிச்சதா என்று பார்க்கிறேன்” என்றவாறு தினகரனை பார்த்தான்.

கார்த்திகேயன் சத்தமாகவே சிரித்து விட்டான். தினகரனின் முகம் புன்னகை பூசி கொண்டாலும் அவன் எதுவும் பேசவில்லை.

வண்டியில் ஏறியதிலிருந்து கார்த்திகேயனும், பார்த்திபனும் தங்களுடைய சிறு வயதில் நடந்தவற்றை பகிர்ந்துகொள்ள, கண்மணியும் இடையிடையே எடுத்துக் கொடுத்தாள். தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாதது போல் அமர்ந்திருந்தான் தினகரன். அவனையும் வம்புக்கு இழுத்து கார்த்திகேயனும் பார்த்திபனும் பேசத் தூண்ட சில தகவல்களை மட்டும் அவன் கூறி இருந்தான். அவர்கள் பேசுவதை புன்னகைத்தவாறே கேட்டுக் கொண்டு வந்தாள் கயல்விழி.

ஆசிரமத்துக்கு சென்றவர்கள் நேராக சென்றது முதல்வரின் அறைக்கு. பார்த்திபனையும் கண்மணியையும் பார்த்தவுடன் எழுந்து நின்று வணக்கம் வைத்து அனைவரையும் வரவேற்றார்.

“குழந்தைகளை நாம இன்னைக்கு கூட்டிட்டு போகலாம் இல்ல சார்” மனமகிழ்வோடு கேட்டாள் கண்மணி.

“தாராளமா…” புன்னகைத்தவாறே “போமாளிடிஸ் எல்லாத்தையும் முடிச்சிடலாம்” என்றார்.

“நாம வரும்போது ஒரு குழந்தையாவது வெளியே இருக்கல்ல. குழந்தைகள் எல்லாம் எங்க?” என்று கேட்டாள் கயல்விழி.

“பாடம் நடக்கிற நேரமில்லையா மேடம். அதனால் இப்போ உள்ள இருப்பாங்க. மத்த நேரத்துல வெளியே தான் இருப்பாங்க”

“அப்போ இப்ப குழந்தைகளை பார்க்க முடியாதா?” என்று கயல்விழி கேட்க,

கை கடிகாரத்தை பார்த்துவிட்டு “இன்னும் பதினைந்து நிமிடங்களில் வெளியே வந்து விடுவாங்க.  அப்போ பார்க்கலாம். அதுக்குள்ள நாம போமாளிடிஸ் முடிச்சுக்கலாம்” என்று புன்னகைத்தார்.

குழந்தைகளை தத்தெடுப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்லவே. ஆணொன்று, பெண்ணொன்று என்று இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்த பின் பார்த்திபனும் கண்மணியும் ஒவ்வொரு ஆசிரமங்களுக்கும் சென்று குழந்தைகளை பார்வையிட்டு அவர்களுக்கு பிடித்த குழந்தைகளை தேர்வு செய்யலாயினர்.

பார்க்கும் எல்லா குழந்தைகளும் கண்மணிக்கு பிடித்திருந்தது. அதற்காக எல்லா குழந்தைகளையும் வீட்டுக்கழைத்து செல்ல முடியுமா என்று பார்த்திபன் கேலி செய்யலானான்.

கண்மணி செய்யும் அலும்புகளை கூறி கார்த்திகேயனிடம் முறையிட்டான் பார்த்திபன்.

எந்த வயதில் குழந்தைகளை தத்தெடுக்க போறீங்க என்று கேட்டிருந்தான் அவன்.

அதன்பின் யோசித்த கண்மணி மூன்று வயதிலும் ஐந்து வயதிலும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று பார்த்திபனிடம் கூறியிருந்தாள்.

வயது ரீதியாக பார்த்ததில் ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தையையும் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையையும் தேர்வு செய்திருந்தாள் கண்மணி. ,

இவர்கள் குழந்தைகளை தேர்வு செய்த உடனே குழந்தைகளை தத்து கொடுத்து விட மாட்டார்களே. குழந்தையை தத்து கொடுக்கலாமா என்று ஆஸ்ரமத்திலும் இவர்களைப் பற்றி விசாரித்து தேடிப் பார்த்து முடிவு செய்த பின்பு தான் இவர்களை வரச் சொல்லுவார்கள். அப்படித்தான் பார்த்திபனையும் கண்மணியையும் அழைத்திருந்தனர்.

முன்கூட்டியே கார்த்திகேயன் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தமையால் பார்த்திபனுக்கும் கண்மணிக்கும் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. எல்லா ஆவணங்களையும் சரிபார்த்து கையொப்பமிட்டு ஒப்படைத்து விட்டு குழந்தைகள் வரவை எதிர்பார்த்து காத்திருக்கலாயினர்.

கண்மணியின் இதயம் பந்தய குதிரையின் வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது. குழந்தைகள் வந்து தங்களோடு வர முடியாது என்று கூறி விடுவார்களோ என்று அச்சம் வேறு அவளை பாடாய்படுத்தியது.

பால்குடி மறவாத குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்றுதான் அவள் எண்ணினாள். வளரும் போது அந்தக் குழந்தைகள் தங்களை அடையாளம் கண்டு அப்பா அம்மா என்று அழைப்பார்கள் என்று அவள் பார்த்திபனிடம் கூற, கைக்குழந்தையே பார்த்துக் கொள்வது அவ்வளவு இலகுவான காரியம் இல்லை கொஞ்சம் வளர்ந்த குழந்தையாய், பேசும் குழந்தையாய் தத்தெடுத்தால் அவள் சொல்வதை புரிந்து கொள்வார்கள் என்று அவன் கூற தலையசைந்திருந்தாள்.

வீட்டிலிருந்து வரும் பொழுது நடந்து சம்பவத்தால் அவளுக்குள் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி அச்சம் மட்டுமே எஞ்சி இருந்தது. அருகில் அமர்ந்திருந்த கயல்விழியோ அவள் கையை தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தலானாள்.

சிரித்து பேசியவாறு வந்த குழந்தைகள் கண்மணியையும், பார்த்திபனையும் பார்த்தவுடன் “அம்மா, அப்பா” என்று கத்தியவாரு ஓடி வந்து கட்டிக் கொண்டனர். அதை எதிர்பார்க்காத பார்த்திபனும் கண்மணியும் அவர்களை தூக்கி கொஞ்சலாயினர்.

அன்று வந்து பார்த்துவிட்டு சென்ற பிறகு குழந்தைகளை இன்று தான் பார்க்கிறார்கள். இவர்கள் குழந்தைகளுக்காக ஏங்கியது போல், அவர்களும் பெற்றோர்களுக்காக ஏங்கிக் கொண்டிருந்தார்கள் என்பது அவர்களின் பேச்சிலேயே புரிந்தது.

பெரியப்பா, சித்தப்பா, சித்தி என்று தினகரன், கார்த்திகேயன், கயல்விழி மூவரையும் அறிமுகப்படுத்தியதோடு அவர்களுக்கு வாங்கி வந்த பொருட்களையும் கொடுத்து, வீட்டுக்குச் செல்லமுன் மற்ற குழந்தைகளை சந்தித்து விடை பெற்று வரலாம் என்று கிளம்பினர்.

“கார்த்தி நாமளும் குழந்தைகளை தத்தெடுப்போமா?” அவனை பாராமல் அங்கே ஓடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை பார்த்தவாறு கேட்டாள் கயல்விழி.

ஊருக்கு வந்ததிலிருந்து கயல்விழி அவனோடு இணக்கமாகத்தான் இருக்கிறாள். தயக்கம் இன்றி சிரித்து பேசுகிறாள். இரவில் தூங்கும் பொழுது கூட அன்று நடந்தவைகளை அவனோடு பகிர்ந்து கொள்வதோடு, காதலிக்கும் காலத்தில் அவர்களுக்குள் நடந்தவற்றையும் பகிர்ந்து கொள்வாள். தயக்கமின்றி அவனை கட்டி அணைத்து முத்தமிடுவாள். 

அவள் கன்னத்தில் இதழ் பதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவன் இதயமோ அவள் இதழ்களுக்கும் தனது இதழ்களுக்கும் இருக்கும் இடைவெளி இன்னும் சிறிது தூரம் தான் என்று கூறிக் கொள்ளும். தங்களுக்குள் இருக்கும் இடைவெளியை அவள் இன்று உடைத்து விடுவாள். இதோ இப்பொழுது உடைத்து விடுவாள் என்று அவன் மனம் ஏங்கும். அவன் காத்திருப்பை பொய்யாக்குவது போல் அவள் கேட்ட கேள்வி அவனை யோசிக்க வைத்தது.

பார்த்திபனும் கண்மணியும் குழந்தைகளை தத்தெடுத்ததால் ஒன்றும் அவள் குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என்று கேட்க வாய்ப்பில்லை. இங்கிருக்கும் குழந்தைகளைப் பார்த்து ஆசைப்பட்டு கேட்டாளா? அல்லது அவளது மனதில் இருக்கும் அச்சத்தால் கேட்டாளா? என்பதுதான் அவனுக்குத் தெரிய வேண்டி இருந்தது.

“சென்னையில் நூறு குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வச்சிக்கிட்டு இருக்கேன் கயல். வாராவாரம் போய் அவங்கள பாத்துட்டு தான் வரேன். அவங்க எல்லாரும் என்ன கார்டியனா பார்ப்பாங்க. காடா கூட பாப்பாங்க. சார்ன்னு கூப்பிடுவாங்க. ஆனா எனக்கு அப்பான்னு கூப்பிடறதுக்கு ஒரு பையனும், பொண்ணும் வேணும்” என்றவன் அவள் முகம் பார்த்து நின்றான்.

கலவரமாக அவனை பார்த்தவளுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. தன்னால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது. அதற்கு தான் தயாராக இல்லை. மனதளவில் தன்னால் தயாராகவும் முடியாது. என்பதைத்தான் சூசகமாக கூற முயன்றாள். இதற்குத்தானே அவள் அச்சப்பட்டாள். இதோ அவன் வாய்விட்டே கேட்டு விட்டான். இனி என்னதான் செய்வாள்?

அவனை கஷ்டப்படுத்தக் கூடாது. அவனை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று தானே அவனுக்கு எந்த உண்மையையும் தெரியக்கூடாது என்று எண்ணினாள். அந்த உண்மையை அறிந்து கொண்டது மட்டுமல்லாமல், அவளை திருமணம் செய்து கொண்டு, அவனையும் வருத்திக் கொண்டு, தன்னையும் இம்சை செய்கிறானே என்று அவனை பார்க்கையில் கயல்விழிக்கு கோபம் கோபமாக வந்தது.

“இதுக்குத்தான் நான் கல்யாணமே வேணாம்னு சொன்னேன் கார்த்தி. ஏன் என்ன புரிஞ்சிக்காம நீ இம்ச பண்ணுற? இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. நீ உங்க அப்பா பார்க்கிற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ. அவரும் ரொம்ப சந்தோஷப்படுவாரு” வீட்டில் நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருப்பவள் தானே அதை வைத்தே கூறினாள்.

“அறைஞ்சேனா பல்லு மொத்தமும் பேந்துடும்” என்றுதான் அவன் ஆரம்பித்திருக்க வேண்டும் அவள் இருக்கும் மனநிலையில் அவனால் அவள் மீது கோபப்பட கூட முடியவில்லை. கோபத்தை உள்ளுக்குள்ளே அடக்கியவாறு புன்னகைத்தவன்  “இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு நீ இவ்வளவு ரியாக்ட் பண்ணுற? ஏன் குழந்தை பெத்துக்க வேற வழியே இல்லையா? என் விரல் கூட படாம குழந்தை பெத்துக்க முடியாதா? சயின்ஸ் தான் ரொம்ப வளர்ந்துடுச்சே” என்றன்.

அவள் எதை சொன்னாலும் அவனிடம் பதில் உண்டு. அது அவன் தன் மீது வைத்திருக்கும் காதலால் என்று கயல்விழிக்கு நன்றாகவே தெரியும். அவளால் அவனை முறைக்கு மட்டுமே முடிந்தது. அவனை ஏகத்துக்கும் முறைதவளோ “ஒரு பையன் ஒரு பொண்ணு போதுமா?” என்று கேட்டாள்.

அவளுக்கு உடல் ரீதியாக எந்த பிரச்சினையுமில்லை. அச்சம் என்ற கூட்டை விட்டு அவள் தான் வெளியே வர வேண்டும். அதுவரையில் இவ்வாறுதான் பேசிக் கொண்டிருப்பாள். அவள் கோபமாக இருக்கிறாள் என்று புரிந்து கொண்டவன் போதும் என்பது போல் தலையசைத்து புன்னகைத்தான்.

பூ என்ன சொல்லுமென்று காற்றறியும்…

காற்றென்ன சொல்லுமென்று பூவரியும்…

நான் என்ன சொல்ல வந்தேன்…

நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன்…

ஒரு நெஞ்சம் தான் அறியும்…

வானவில் என்ன சொல்ல வந்ததென்று

மேகமே உனக்கென்ன தெரியாதா…

அல்லி பூ மலர்ந்தது…

ஏனென்று வெண்ணிலவே…

உனக்கென்ன தெரியாத…

ஓ..ஹோ வலியா சுகமா தெரியவில்லை…

சிறகா சிறையா புரியவில்லை…

அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்…

நான் சொல்லாமல் தவிக்கின்றேன்…

செம்பருத்தி பூவே…

செம்பருத்தி பூவே…

உள்ளம் அள்ளி போனாய்…

நினைவில்லையா…

கண்கள் அறியாமல்…

கனவுக்குள் வந்தாய்…

மனசுக்குள் நுழைந்தாய்…

நினைவில்லையா…

உன்னை சுற்றி சுற்றி வந்தேன்…

நினைவில்லையா…

என்னை சுத்தமாக மறந்தேன்…

நினைவில்லையா…

அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்…

நான் சொல்லாமல் தவிக்கின்றேன்…

Advertisement