Advertisement

அத்தியாயம் 23

“சித்தப்பா தத்தெடுக்கிறதுனா என்ன சித்தப்பா?” கார்த்திகேயனும் பார்த்திபனும் பேசிக்கொண்டிருக்கையில் தினகரனின் மூத்தவன் எட்டு வயதான வைபவ் கேட்டான்.

“எனக்கு தெரியும். எனக்கு தெரியும் சித்தப்பாவும் சித்தியும் நம்ம கூட விளையாட தங்கச்சி பாப்பாவும் தம்பி பாப்பாவும் கூட்டி வராங்கன்னு சொல்லி சித்தி சொன்னாங்க அது தானே சித்தப்பா” பொம்மையோடு விளையாடு கொண்டிருந்த தினகரனின் ஆறே வயதான இரண்டாவது மகள் வைஷ்ணவி கூறினாள்.

குழந்தைகளை தத்தெடுக்கும் விஷயத்தில் இன்னும் பெற்றோர்களையே சமாதானம் செய்ய முடியவில்லை. இதில் குழந்தைகளை மறந்து விட்டோமே என்று கார்த்திகேயனும் பார்த்திபனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஆமா… ஆமா உங்க ரெண்டு பேரையும் வாங்கிட்டு வந்தது போல வாங்கிட்டு வரணும்” என்றவாறே வந்தமர்ந்தாள் கயல்விழி.

கயல்விழியும் கார்த்திகேயனும் வீட்டுக்கு வரும் பொழுது குழந்தைகள் மதியழகியின் தாய்வீடு சென்றவர்கள் வீட்டுக்கு வந்திருக்க, கயல்விழியை பார்த்து யார் என்று கேட்டிருந்தனர்.

கார்த்திகேயன் தான் வீட்டுக்கே வருவதில்லை. அவனை தொலைக்காட்சியில் பார்க்கும் போது வள்ளி புலம்புவதை வைத்து அவன் தங்களுடைய சித்தப்பா என்று அறிந்திருந்தமையால் அவனைப் பார்த்து குழந்தைகளுக்கு எந்த குழப்பமும் இல்லை. “சித்தப்பா” என்று ஓடி வந்து கட்டிக் கொண்டிருந்தனர்.

“புது சித்திடா” என்று கார்த்திகேயன் அறிமுகப்படுத்தி வைக்க, குழந்தைகளும் அவளோடு சட்டென்று ஒட்டிக்கொண்டு இருந்தனர்.

திடீரென்று பார்த்திபன் இரண்டு குழந்தைகளை அழைத்து வந்து இது தன்னுடைய குழந்தைகள் என்று கூறினால். இவர்கள் அதை ஒத்துக் கொண்டு, ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா. அதற்காக வேண்டி கயல்விழி அவ்வாறு கூறினாள். ஆனால் குழந்தைகளோ…

“அம்மா எங்க ரெண்டு பேரையும் எங்க இருந்து வாங்கிட்டு வந்தீங்க?” அங்கே வந்த மதியழகியிடம் கேட்டான் வைபவ். 

கயல்விழி கூறிய பதில் மதியழகியின் காதில் விழுந்திருந்ததால் “உன்னையா?” யோசனை செய்வது போல் முகத்தை வைத்துக் கொண்டு “சாக்கடைல இருந்தா? குப்பைத்தொட்டில இருந்தா?” கார்திகேயனிடமும், பார்த்திபனிடமும் சந்தேகமாக கேட்பது போல் கிண்டல் செய்தாள்.

அந்த பதிலை எதிர்பார்க்காத வைபவ்வின் முகம் சுருங்க “அப்போ நான்?” அதிர்ச்சியும், குழப்பமும் கலந்த முகபாவனையோடு அவளிடம் வந்து கேட்டாள் வைஷ்ணவி.

அவளுடைய கேள்வியில் அங்கிருந்து அனைவரும் சிரிக்க, பெரியவர்கள் கிண்டல் செய்வது புரியாமல் குழந்தைகள் இருவரினதும் முகங்களும் அழும் நிலைக்கு சென்றிருந்தன.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு மதியழகி தன்னுடைய மாமன் மகன்களோடு சேர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறாள். அதில் அவள் தன்னுடைய குழந்தைகளை கிண்டல் செய்ய ஆரம்பித்தாள் என்பதையே மறந்திருந்தாள். அது குழந்தைகளுடைய மனதை எவ்வளவு பாதிக்கும் என்பதை அக்கணம் யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை.

குழந்தைகளை கேலி செய்து விளையாடும் எண்ணம் அவர்களுக்கில்லை. அவர்களை அழ வைக்கும் எண்ணமும் அவர்களுக்கில்லை. அழுதுவிட்டால் சமாதானம் செய்து விடுவார்கள். அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலும் கிடைத்திருக்கும். ஆனால் யாரும் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது.

மதியழகி வைபவை கிண்டல் செய்ய ஆரம்பிக்கும் பொழுதே தினகரன் வீட்டுக்குள் நுழைந்திருந்தான். அதை யாரும் கவனிக்கவில்லை.  மதியழகியின் பதிலை கேட்டு அவன் மனைவியை முறைத்துக் கொண்டு இருக்க, வைஷ்ணவி கேட்ட கேள்விக்கு அவள் பதில் சொல்லும் முன் “வைஷு” என்று தினகரன் மகளை அழைத்தான்.

“ஐ…. அப்பா” தந்தையை கண்டதும் அன்னை சொன்னதை மறந்து துள்ளிக் குதித்தவாறு ஓடி இருந்தாள் வைஷ்ணவி.

தான் சொன்னதை கணவன் கேட்டுவிட்டானோ கேட்டிருந்தால் இன்று ஒரு கச்சேரி இருக்கிறது என்று உள்ளுக்குள் நடுங்கிய மதியழகி மெதுவாக கணவன் முகம் பார்த்தாள்.

“அப்பா என்ன சாக்கடைல இருந்தா… எடுத்தீங்க?” விம்மியவாறு தினகரனின் முன்னால் வந்து நின்றான் வைபவ்.

“ஐயோ இவன் வேற” என்றெண்ணியவாறே மதியழகி கணவனை பார்க்க, தினகரனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

வைபவ் கேட்டதற்கு தினகரன் மதியழகியை முறைப்பதை பார்த்த கயல்விழிக்கு தான் பேசியதால் தான் மதியழகி இவ்வாறு குழந்தைகளிடம் பேசினாள். அதனால் இப்பொழுது தினகரன் அவளை திட்டப் போகிறான். தான் இந்த குடும்பத்தில் ஒன்றாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் குழந்தைகளுக்குப் புரிய வைக்க ஏதோ பேசப்போய் அது இவ்வாறு உருமாறி பிரச்சனை ஆகிவிட்டதே என்று எண்ணுகையில் கயல்விழிக்கு “ஐயோ” என்று இருந்தது. 

“சாக்கடைல இல்ல குப்பை தொட்டில” கைகொட்டி சிரித்தாள் வைஷ்ணவி.

“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது” என்றவாறே வைஷ்ணவியின் தலையை தடவிய தினகரன் அவன் கொண்டு வந்திருந்த மிட்டாய்யை அவள் கையில் கொடுத்தான். 

“உங்க ரெண்டு பேரையும் ஹாஸ்பிடல் இருந்து தான் கூட்டிகிட்டு வந்தோம். டாக்டர் ஆண்ட்டி சொல்லி தான் கூட்டிட்டு வந்தோம். நீ குட்டி பாப்பாவா இருக்கிற போட்டோஸ் எல்லாம் இருக்கு நீ பார்த்து இருக்கியே” வைபவ் கிடைத்த பொழுது தினகரன் குழந்தையை தூக்கிக் கொண்டிருக்கும் ஒரு போட்டோ இருப்பதை வைபவ் பார்த்திருக்கிறான் அதை ஞாபகப்படுத்தி வைபவை சமாதானப்படுத்தியவன் “சித்தி பசங்களையும் அங்கிருந்து தான் கூட்டிக்கிட்டு வர போறோம். என்ன சித்தியால அவங்கள பார்த்துக்க முடியாதுன்னு இப்போ அவங்கள சித்தி வீட்ல விட்டிருக்கோம். இப்ப கொஞ்சம் வளர்ந்து இருப்பாங்க. இப்போ கூட்டிட்டு வந்தா உங்க கூட விளையாடுவாங்க” என்றான்.

அப்படி ஒரு பதிலை தினகரனிடமிருந்து யாருமே எதிர்பார்க்கவில்லை. கார்த்திகேயன் ஆச்சரியத்தை முகத்தில் அப்பட்டமாகவே காட்டினான். சிறு வயதில் இருந்தே பார்த்திபனும் கார்த்திகேயனும் கேலி கிண்டல்கள் செய்வதோடு, கட்டிப்பிடித்து உருண்டு சண்டையும் போட்டுக் கொள்வார்கள். ஆனால் தினகரன் இவர்களோடு ஒட்ட மாட்டான்.

பார்த்திபருக்கும் கார்த்திகேயனுக்கும் மூன்று வருடங்கள் வித்தியாசம். பார்த்திபனுக்கும் தினகரனுக்கும் ஐந்து வருடங்கள் வித்தியாசம். அதனால் கூட இருக்கலாம் என்று பார்த்திபனும் கார்த்திகேயனும் நினைத்தார்கள்.

அதற்காக அண்ணா என்று மரியாதை கொடுத்து இவர்கள் ஒதுங்கி இருக்கவில்லை. அப்பாவின் “தலையாட்டி பொம்மை” என்று தான் கேலி பேசுவார்கள். அது தினகரனுக்கும் நன்றாகவே தெரியும். அதனாலேயே இவர்களோடு ஒட்டாமல் இருந்தான். இவர்கள் என்ன பேசினாலும் பதில் பேச மாட்டான். இவர்கள் விஷயத்தில் அவன் எந்த காரணத்திற்கும் தலையிட மாட்டான். ஆலோசனை கூட கூற மாட்டான். அப்படிப்பட்டவன் இன்று பதில் பேசினான் என்றால் அது அவன் பிள்ளைக்காக மட்டுமல்ல பார்த்திபனின் பிள்ளைக்காகவும் தான் என்றது தான் ஆச்சரியத்திற்கான காரணம்.

தத்தெடுப்பது என்னவென்று குழந்தைகள் வளர்ந்தபின் புரிந்து கொள்வார்கள். குழந்தை பருவத்தில் அறியாமல் பேசிவிட்டால், அவர்களுக்கு இடையே மட்டுமல்லாது உறவுகளுக்கு இடையிலும் மஸ்தாபம் ஏற்பட்டுவிடும். அதை அழகாக புரிய வைத்து விட்டான் தினகரன். அவனை நன்றியோடு பார்த்தாள் கண்மணி.

கண்மணி அவனுக்கும் மாமன் மகள் தானே ஆனால் அவளோடு சிரித்துப் பேசியது தான் இல்லை. கண்களால் ஆறுதல் சொன்னவன் மனைவியை பார்த்தவாறு உள்ளே சென்றான்.

மதியழகி கையை பிசைந்தவாறு கணவனின் பின்னால் செல்ல குழந்தைகள் அங்கேயே விளையாட ஆரம்பித்தனர்.

“டேய் கார்த்தி கிரகணம் ஏதாவது மாறிடுச்சோ தினகரன்” என்று பார்த்திபன் ஏதோ சொல்ல வர கண்மணி அவனை முறைத்தாள்.

“உங்க அண்ணன டெரர் பீஸ் என்று சொன்னீங்க. ஆனா அவர் உங்களை விட ரொம்ப நல்லவரா இருக்காரு. அவரு சொன்னதும் குழந்தைக்கு அப்படியே கேட்டுகிட்டாங்க” கயல்விழி வேறு கார்த்திகேயனை முறைகளானாள்.

“என்னடா அவன்! நம்மள டம்மி பீசாக்கிட்டு. ஒரே பால்ல சிக்சர் அடிச்சிட்டு போறன். நீ வேற பார்த்துக்கிட்டு நிக்கிற?” பார்த்திபன் வேறு கார்த்திகேயனை முறைத்தான்.

“இப்போ எதுக்கு ஆளாளுக்கு முறைச்சிகிட்டு திரியுறீங்க? அவன் இப்படி எல்லாம் பேசுவான் என்று எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கு. நல்ல மாற்றம் தான்” என்றான் கார்த்திகேயன்.

“ஆமா… உங்க அண்ணனுக்கும் அண்ணிக்கும் என்ன பிரச்சனை? அவர பார்த்ததும் இப்படி பயந்துகிட்டு அவர் பின்னாடி போறாங்க” இந்த மூன்று, நான்கு நாட்களாக வீட்டில் நடப்பவை எல்லாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றாள். மதியழகி என்னதான் சிரித்து பேசினாலும் தினகரனை கண்டால் பம்புகிறாள். தினகரனோ கயல்விழி புன்னகைத்தால் கூட புன்னகைக்க மாட்டான். கார்த்திகேயனிடம் விசாரித்தால் அது தான் அவன் குணம் என்கின்றான்.

மனைவி குழந்தைகளிடம் கூட இவ்வாறு தான் நடந்து கொள்கிறானா? இப்படி இருந்தால் எப்படி குடும்பம் நடத்துவான்? ஒருவேளை மதியழகியை விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டு இருப்பானோ? விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து, விருப்பம் இல்லாமல் குழந்தைகளை பெற்றதால் இவ்வாறு இருக்கின்றானோ என்று கார்த்திகேயனை குடைந்து எடுக்கலானாள் கயல்விழி.

கயல்விழி கேட்ட கேள்விகளை வைத்தும், எழுப்பிய சந்தேகங்களை வைத்தும் “ஒருவேளை அப்படியும் இருக்குமோ?” என்று கார்த்திகேயனுக்கே சந்தேகம் வந்துவிட்டது.

“பேத்த லாயர் நீ. ஊருல இருக்குற குடும்பப் பிரச்சினை எல்லாம் தீர்த்து வைக்கிற. சொந்த குடும்ப பிரச்சினை தீர்த்து வைக்க மாட்டியா? கொஞ்சம் கோபமாகவும், கேலியாகவும் பேசி கணவனை வம்பிழுத்தாள் கயல்விழி.

கொஞ்சம் நேரம் யோசித்தவன் சத்தமாக சிரித்து விட்டு “அடியேய் வக்கீலம்மா எனக்கு எதிரா வாதம் செய்யிறதுலையே குறியா இருக்க. நீ பேசுனதுல நானே சந்தேகப்பட்டுட்டேன் டி. அவன் பொறந்ததுல இருந்தே அப்படிதாண்டி. அவங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்ல” என்றான் கார்த்திகேயன்.

“அப்போ என்ன தான் பிரச்சினை?” என்று கயல்விழி கேட்க, “தெரியல” என்று ஒத்தை வார்த்தையில் பதில் சொன்ன கார்த்திகேயனை ஏகத்துக்கும் முறைத்தாள் கயல்விழி.

“புரிதல். புரிதல் இல்லை” என்றான் அவன்.

“பேசி புரிஞ்சுக்கோங்க” என்று உபதேசமா செய்யவா முடியும்? அதனால் பார்த்திபனும் கண்மணியும் இருக்கும் பொழுது மீண்டும் மதியழகி மற்றும் தினகரனுக்குள் என்ன பிரச்சினை என்று கயல்விழி கேட்டிருந்தாள்.

தினகரன் மதியழகி பிரச்சினையை தீர்த்து வைக்காமல் இவள் ஓய மாட்டாள் என்று மனைவியை காதலாக பார்த்து வைத்தான் கார்த்திகேயன்.

உன்னைப் பார்த்த கண்கள்

இன்னும் மூடவில்லை

போதும் போதும் என்றேன்

நெஞ்சம் கேட்கவில்லை

ஒரு தென்றல் போல வந்து

அன்பே என்னை வேர்க்க வைத்தாய்

வள்ளல் போல வாழ்ந்தேன்

உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய்

உன் பேரை நான் சொல்லி

என்னை அழைப்பேன்

உன்னை இன்று நான் தேடி

என்னைத் தொலைத்தேன்

உன்னைப் பார்த்த கண்கள்

இன்னும் மூடவில்லை

போதும் போதும் என்றேன்

நெஞ்சம் கேட்கவில்லை

அன்பே உன் கூந்தலில்

நான் கலைந்தேன்

நீ வைத்த பூக்களில்

நான் உதிர்ந்தேன்

குழி விழும் கண்ணத்துக்குள்

நான் விழுந்தேன்

சிரு நெற்றி வேர்வையில்

நான் கரைந்தேனே

நேற்று வரை நேற்று வரை

வாழ்வில் ருசி இல்லை

மலரே உந்தன் மடியில் வாழ்ந்தால்

மரணம் இல்லை

அறைக்கு வந்த மதியழகியோ தினகரன் என்ன சொல்வானோ என்று அவன் பின்னால் அலைய, “குடிக்க தண்ணி எடுத்துட்டு வா மதி” என்றான்.

அவன் வீட்டுக்கு வந்த உடன் தண்ணீர் கேட்பதால் வரும் முன் அறையில் தண்ணீர் கொண்டு வந்து வைத்து விடுவாள் மதியழகி. அவன் கேட்ட உடன் அவசரமாக அதை எடுத்து அவன் கையில் கொடுத்தவள் அவன் அருந்தி முடிக்கும் வரையில் அங்கேயே நின்றாள்.

“என்ன?” என்று மனைவியை பார்த்தவாறு கிளாஸை அவள் கையில் கொடுத்தவன் துணி மாற்றலானான்.

அவன் இன்னும் ஏன் திட்டவில்லை என்ற யோசனையிலையே அவனுக்கு துண்டை எடுத்துக் கொடுத்தவள் கணவனின் முகம் பார்த்து நின்றாள்.

துண்டை எடுத்துக் கொண்டு தினகரன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

“என்னாச்சு இவருக்கு? ஏன் நம்மள திட்டல?” புரியாமல் குழம்பி நின்றாள் மதியழகி.

குளியலறைக்குள் நுழைந்த தினகரனின் கண்களுக்குள் மனைவியின் குழம்பிய முகம் வந்து நிற்க புன்னகைத்தான்.

மதியழகியை அவன் விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டான். என்ன…. அவன் அவளை விரும்புகிறான் என்று இதுவரை அவளிடம் கூறியது இல்லை. அவள் சொந்த அத்தை மகளாக இருந்தாலும், பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்த பெண். அவளால் குடும்பத்தில் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்று தான் அவளை அதட்டிக் கொண்டிருந்தான்.

பார்த்திபன், கார்த்திகேயனைப் போல் தினகரன் சிரித்து பேசுவதில்லை. அவன் இப்படி என்று மற்றவர்கள் கூறியதை கேட்டு தான் மதியழகி வளர்ந்தாள். அவனை திருமணம் செய்ய பெற்றவர்கள் அவளிடம் சம்மதம் கூட கேளாமல் தான் திருமணம் செய்து வைத்திருந்தனர். அவனை பார்த்தாலே மதியழகிக்கு ஒருவித அச்சம். உள்ளுக்குள் நடுங்கி நிற்பாள்.

தினகரனும் அதிகம் பேசாதவன். மனைவியிடமாவது மனம் விட்டு பேசி இருந்தால், அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி நீங்கி இருக்கும். அவனுக்கு அவளை எவ்வளவு பிடித்திருக்கும் என்றாவது கூறி இருக்கலாம். அதையும் இதுவரை அவன் கூறியது இல்லை.

பார்த்திபனாலும் கார்த்திகேயனாலும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டிருப்பதால் அவன் அச்சமெல்லாம் மதியழகியால் குடும்பத்தில் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதுதான். பொதுவாகவே பெற்றவர்கள் எது பேசினாலும் அவன் திருப்பி பேச மாட்டான். மதியழகியும் பேசி விடக்கூடாது என்று தான் ஆரம்பத்திலேயே அதட்டலானன். ஏற்கனவே மதியழகிக்கு தினகரன் மேல் பயம் இதில் அவன் அதட்டினால் இவள் வாய் திறந்து அவனிடம் ஏதாவது பேசுவாளா என்ன?

சிவபாலனின் மூத்ததங்கை ஓடிப்போனதும் மதியழகியின் அன்னையிடமும் யாரையாவது காதலிக்கிறாயா என்று கேட்டு வீட்டார் குடைந்து எடுக்கலாயினர். அப்படி எதுவும் இல்லை என்று அவள் கூறியும் திருமணமாகும் வரை வீட்டுக் காவலில் இருந்தாள்.

சொந்தத்தில் தான் மாப்பிள்ளை பார்த்து திருமணம் பேசியிருந்தனர். கணவனானவனை முழுவதுமாக நம்பியிருக்க, அவனோ சந்தேக வட்டத்துக்குள் வைத்து இவளை கண்காணிக்கலானான். அவளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் நிம்மதி கிட்டுமா என்ன? மதியழகிக்கும் அவளுடன் பிறந்தவர்களுக்கும் அறிவுரைகளும், புத்திமதிகளும் தாராளமாகவே கிடைத்தன.

இன்று வரை சிவபாலன் தங்கையையும், தங்கையுடைய குடும்பத்தாரையும் தன் கட்டுக்குள் தான் வைத்திருக்கிறான். எதையாவது செய்து குடும்ப மானத்தை வாங்கி விட வேண்டாம் என்று மதியழகி குடும்பத்தில் நடக்கும் நிகழ்வில் எல்லாம் சிவபாலன் தலையிடுகிறான். வள்ளி ஆலோசனை கூறுகிறாள்.

கொழந்தனார்களைப் போல் தினகரன் தலையிட்டு பெற்றோரை அடக்கினாலே போதும் மாமனாரும் மாமியாரும் அமைதியாகி விடுவார்கள். கணவன் கண்டு கொள்ளாமல் இருப்பதால் கோபத்தை யாரிடமும் காட்ட முடியாமல் மதியழகியால் முணுமுழுத்துக் கொண்டுதான் இருக்க முடிகிறது.

ஆனால் தினகரனோ சொந்த தம்பிகளின் விஷயத்திலே தலையிட மாட்டான். இதில் அவன் மதியழகியின் குடும்ப விஷயங்களில் தலையிடுவானா? அது மதியழகிக்கு புரியவில்லை.

இன்று வீட்டில் நடந்த சம்பவத்தை பார்த்து மனைவியை முறைத்தவன் யாரிடமும் எதுவும் பேசாது அறைக்கு வந்து மனைவியை அதட்டியிருப்பான். அதைத்தான் அவன் வளமையாக செய்வது. அதை செய்யவில்லை என்று தானே மதியழகி குழம்பி நிற்கின்றாள்.

இந்த மூன்று, நான்கு நாட்களாக வீட்டில் ஏற்பாட்டிற்கும் மாற்றங்களை தினகரனும் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றான்.

முதல் முதலாக கயல்விழி வீட்டுக்கு வந்த பொழுது நடந்த சம்பவத்தை நினைத்து பார்த்தவன் அன்று அவளை கொஞ்சம் கூட பொறுமை இல்லாத திமிர் பிடித்த பெண் என்று தான் நினைத்தான். விவாகரத்தான அவளை இன்னுமே மறக்காமல் அவளை கார்த்திகேயன் திருமணம் செய்து கொண்டு வந்தது தினகரனுக்கு பெருத்த ஆச்சரியத்தை கொடுத்தது. அந்தப் பெண் மேல் தம்பிக்கு இத்தனை காதலா? பெற்றோரை எதிர்த்து தான் நினைப்பதை சாதித்துக் கொள்ளும் கார்த்திகேயனை நினைக்கையில் அவனுக்கு கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது.

மதியழகி தான் நேசிக்கும் பெண் என்பதனால் தான் அவளோடு வாழவில்லை. அவள் தன்னுடைய பெற்றோர்கள் பார்த்த பெண் என்பதினால் தான் அவளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று உண்மை சுட்டதில் மனம் வெம்பினான் தினகரன். பெற்றவர்கள் வேறொரு பெண்ணை பார்த்து இருந்தால் தான் மறுக்காமல் அந்த பெண்ணையே திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கக் கூடும் என்ற உண்மையையும் அவனுக்கு நன்றாகவே புரிந்தது. ஏதோ அவன் செய்த புண்ணியம் அவன் விரும்பிய பெண்ணே அவனுக்கு மனைவியாக அமைந்து விட்டாள்.

இந்த மூன்று நாட்களாக பார்த்திபனும் கார்த்திகேயனும் அடிக்கும் லூட்டிகளும், கயல்விழியோடு கார்த்திகேயனின் கொஞ்சல்களும் தினகரனின் கண்களில் படாமல் இல்லை. கயல்விழியின் வரவால் கண்மணியின் குரல்  மட்டுமல்லாது தன்னுடைய மனைவியின் குரலும் இந்த வீட்டில் கேட்கிறது. மதி இப்படிக் கூட பேசுவாளா? என்று மனைவி பேசுவதை யாரும் அறியாமல் ரசித்தவனுக்கு எதையெல்லாம் இழந்து விட்டோம் என்பது மெதுவாக புரிய ஆரம்பித்தது.

தான் ஏன் அவர்களைப் போல் இல்லை. தன்னால் ஏன் அவர்களோடு ஒன்ற முடியவில்லை என்ற கேள்வி தினகரனுக்குள் எழுந்தது. தான் என்ன தவறிழைத்தோம் என்று அவனுக்கு புரியவில்லை. சிந்தித்தவனுக்கு கிடைத்த ஒரே பதில் மதியழகி.

அவளுக்கு தன்னை பிடிக்குமா என்று கூட தெரியவில்லை. பிடித்து தான் குடும்பம் நடத்துகிறாளா என்று கூட தெரியவில்லை. பிடிக்கவில்லை என்றால் விவாகரத்துக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடப் போகிறாயா என்று கேட்டது அவன் மனம். “மாட்டேன்” என்று உடனே பதில் வந்தது அவனிடமிருந்து.

அவளுக்கு தன்னைப் பிடிக்க வேண்டும். பிடிக்க வைக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசனையாகத்தான் இருந்தான்.

இன்று அவள் பேசியதை கேட்டு கோபம் வந்து முறைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் அவளை திட்ட மனம் வரவில்லை. மனைவியின் குழம்பிய முகத்தை ரசிக்கத்தான் தோன்றியது.

“அண்ணனுக்கு அண்ணிக்கும் இடையில எந்த பிரச்சினையும் இல்லையே. அவங்க சண்டை போட்டு நான் பார்த்ததே இல்லை. பிரச்சனையே எங்கள பெத்தவங்க தான்” என்றான் பார்த்திபன்.

“என்னங்க உங்க அண்ணன் உங்கள போல வெளியில இருந்து கத்த மாட்டாரு. ரூமுக்குள்ள தான் அண்ணி கிட்ட கத்துவாரு” குரலை தாழ்த்தி கூறினாள் கண்மணி.

கயல்விழி கார்த்திகேயனை ஏறிட, “நான் சொல்லல… புரிதல்… புரிதல்” என்று மனைவியை பார்த்து புன்னகைத்தான் கார்த்திகேயன்.

விழிகளில் ஒரு வானவில்

இமைகளை தொட்டு பேசுதே

இது என்ன புது வானிலை

மழை வெயில் தரும்

உன்னிடம் பார்க்கிறேன்

நான் பார்க்கிறேன் என் தாய்முகம்

அன்பே உன்னிடம் தோற்கிறேன்

நான் தோற்கிறேன் என்னாகுமோ இங்கே

முதன் முதலாய் மயங்குகிறேன்

கண்ணாடி போல தோன்றினாய்

என் முன்பு என்னை காட்டினாய்

கனா எங்கும் வினா

விழிகளில் ஒரு வானவில்

இமைகளை தொட்டு பேசுதே

இது என்ன புது வானிலை

மழை வெயில் தரும்

நீ வந்தாய் என் வாழ்விலே

பூ பூத்தாய் என் வோரிலே

நாளையே நீ போகலாம்

என் ஞாபகம் நீ ஆகலாம்

தேர் சென்ற பின்னாலே

வீதி என்னாகுமோ யார் இவன்

யார் இவன் ஓா் மாயவன்

மெய்யானவன் அன்பில்

யார் இவன் யார்

இவன் நான் நேசிக்கும்

கண்ணீா் இவன் நெஞ்சில்

இனம் புாரியா உறவிதுவோ

என் தீவில் பூத்த பூவிது

என் நெஞ்சில் வாசம் தூவுது

மனம் எங்கும் மனம்

Advertisement