Advertisement

அத்தியாயம் 15

முக்கிய செய்திகள் சென்னையில் புகழ் பெற்ற வக்கீலான கார்த்திகேயன் குற்றவாளிகளை சிறையில் அடைக்க, டி.எஸ்.பி வெற்றிமாறனோடு பயணம் செய்த பொழுது தாக்கப்பட்டார்.

குற்றவாளிகளை காப்பாற்ற வந்தவர்கள் என்று எண்ணி போலீஸ் அவர்களை தாக்க, அவர்களோ குற்றவாளிகளை கொலை செய்ய வந்தவர்கள் போலும், அவர்களிடமிருந்து குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் டி.எஸ்.பியிற்கு உதவிய வக்கீல் கார்த்திகேயன் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொலைக்காட்ச்சியில் பிரதான செய்தியாக கார்த்திகேயன் தாக்கப்பட்ட செய்தி வளம் வந்துகொண்டிருக்க, அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்து விட்டாள் கயல்விழி.

“கார்த்தி கார்த்தி நன் உடனே கார்த்தியை பார்க்க போகணும்” புலம்பியவள் பதட்டத்தில் என்ன செய்வது என்று புரியாமல் அங்கும், இங்கும் நடக்கலானாள். அவள் சரியான மனநிலையில் இருந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தானாக முடிவெடுத்திருப்பாளோ? ஏற்கனவே குழம்பிய மனநிலையில் இருப்பவள் கார்த்திகேயனுக்கு ஒன்றென்றதும் முற்றாக குழம்பிப் போக செய்வதறியாது தடுமாறலானாள்.

அவளை அமைதிப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றதே விக்னேஷ் தான்.

இவர்கள் மருத்துவமனைக்கு சென்ற பொழுது கார்த்திகேயன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான். வெளியே வெற்றிமாறன் நின்றிருந்தான்.

இவர்களை பார்த்ததும் “ஆபரேஷன் நடந்து கிட்டு இருக்கு” என்றான்.

“கார்த்திக்கு என்னாச்சு?” கயல்விழி பதட்டமாக கேட்க

“வந்தவனுங்க அடிச்சதுல, கார்திகேயனோட தலைல பலமா அடிபட்டிருச்சு. என்ன? ஏது? என்று டாக்டர்  தான் சொல்லணும் என்றவன் கைக்கடிகாரத்தை பார்த்து “ஓகே நீங்க அவர பாத்துக்கோங்க” தான் அழைத்து சென்றதால் தானே அவனுக்கு இந்த நிலைமை என்று யாராவது வரும் வரையில் இவ்வளவு நேரமும் கூட இருந்தானோ, கயல்விழி வந்த உடன் கடமை அழைக்கவே கிளம்பிவிட்டான்.

கயல்விழிக்கு வெற்றிமாறன் என்ன கூறினான் என்பது கூட காதில் விழவில்லை. அவனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்றுதான் மனதால் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாள்.

நேரம் சென்று கொண்டிருந்ததே ஒழிய தீவிர சிகிச்சை பிரிவின் கதவு திறக்கப்படவே இல்லை. புலம்பாவிட்டாலும் கண்களில் நீரோடு தவம் கிடந்தாள் கயல்விழி.

கார்த்திகேயனுக்கு அடிபட்டதை தொலைக்காட்ச்சியில்  பார்த்து விட்டு அவன் வீட்டிலிருந்து சிவபாலனும், வள்ளியும், பார்த்திபனும் கிளம்பி வந்திருந்தனர். பத்து மணித்தியாலயம் அவர்கள் பயணித்துவரும் பொழுது இருட்டாகியிருந்தது.

விமானத்திலேயே வந்திருக்க வேண்டும். விசாரித்தால் பயணிகள் நிரம்பி வழிய, அடுத்த விமானத்தை பிடிக்குமாறு கூறியிருந்தனர். அடுத்த விமானத்திற்கு இரண்டு மணி இருக்க வள்ளிக்கு பொறுமை இல்லை.

பார்த்திபன் எவ்வளவோ கூறிப் பார்த்தான். “அந்த விமானத்திலையும் இடமில்லை என்றால்? இன்னமும் காத்துக்கொண்டு இருக்க முடியுமா? எனக்கு என் பையன பாக்கணும்” என்று பிடிவாதமாக கிளம்பி வந்து விட்டாள்.

வரும் வழியெல்லாம் புலம்பல் தான். பார்த்திபன் ஒன்றுமே பேசவில்லை.

அறுவை சிகிச்சை முடிந்து கார்த்திகேயன் அறைக்கு மாற்றப்பட்டிருக்க, அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.

கார்த்திகேயன் கண்விழிக்கும் வரையில் மருத்துவமனையை விட்டு நகராமல் அமர்ந்திருந்தாள் கயல்விழி. அவளுக்கு துணையாக விக்னேஷ் எங்கும் செல்லாம் அங்கேயே இருந்தான்.

மருத்துவமனையில் கயல்விழியை பார்த்ததும் காட்டு கத்து கத்த ஆரம்பித்தாள் வள்ளி.

“ஏன்டி உனக்கு வீட்டுல வேல எதுவும் இல்லையா? உன் புருஷன் உன்ன எந்தக் கேள்வியும் கேட்க மாட்டானா? இவன் கூட ஊரு சுத்துறது பத்தாது என்று என் பையன வேற வளைச்சி போட பாக்குறியா?”

“இது ஹாஸ்பிடல் வார்த்தையை கொஞ்சம் அளந்து பேசுங்க” கயல்விழி பல்லை கடித்தவாறு பொறுமையாக நின்றிருக்க, விக்னேஷ் தான் கார்திகேயனுக்காக பொறுமையாக பேசினான்.

“அம்மா நீ வந்தது உன் புள்ளைய பார்க்கத்தானே, எதுக்கு வீணான பேச்செல்லாம் பேசுற? முதல்ல போய் உன் புள்ளைய பாரு” பார்த்தீபன் வள்ளியை அதட்டியாவரு அங்கிருந்து அழைத்து சென்றான்.

“ஐயோ என் புள்ள அடிபட்டருக்கு என்று சொன்னாங்க இவ்வளவு பெரிய கட்டு போட்டிருக்காங்களே” கார்த்திகேயனின் தலையில் இருக்கும் கட்டை பார்த்து வள்ளி அழுது கரையலானாள்.

“நீங்கதான் பெர்சன்ட்டோட ரிலேட்டிவ்வா? உங்கள நியூரோ டாக்டர் பூபதி பாண்டியன் வரச் சொன்னாரு” என்றார் ஒரு தாதி.

“ஐயோ என் புள்ளைக்கு என்ன ஆச்சு என்று தெரியலையே” புலம்பியவாறு வள்ளி வர “அமைதியா வா வள்ளி. டாக்டர் என்ன சொல்லுறாரு என்று பார்க்கலாம்” என்றான் சிவபாலன்”

அனைவருமே மருத்துவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று அவரை காண சென்றிருக்க, அவர்கள் வெளியேறும் வரை காத்திருந்த கயல்விழி கார்த்திகேயனை காண உள்ளே வந்தாள். விக்னேஷ் அவர்களுக்கு தனிமையை கொடுத்து உள்ளே செல்லாது வெளியே நின்று கொண்டான்.

தலையில் பெரிய கட்டோடு படுத்திருந்தவனை பார்த்து கண்களில் கண்ணீரோடு அவன் கைகளை பிடித்துக் கொண்டவள் மெளனமாக கண்ணீர் வடிக்கலானாள்.

ஏங்கி ஏங்கி நான் கேட்பது

உன்னைதானடா

தூங்கி போனதாய் நடிப்பது

இன்னும் ஏனடா

வாங்கி போன என் இதயத்தின்

நிலைமை என்னடா

தேங்கி போன ஒரு நதீயென

இன்று நானடா ..

தாங்கி பிடிக்க

உன் தோள்கள் இல்லையே

தன்னந்தனி காட்டில்

எந்தன் காதல் வாட….

சேர்ந்து போன நம் சாலைகள்

மீண்டும் தோன்றுமா

சோர்ந்து போன என் கண்களின்

சோகம் மாறுமா

ஓய்ந்து போன நம் வார்த்தைகள்

மேலும் தொடருமா

காய்ந்து போன என் கன்னத்தில்

வண்ணம் மலருமா

தேய்ந்த வெண்ணிலா

திரும்ப வளருமா

தொட்டு தொட்டு பேசும்

உந்தன் கைகள் எங்கே..

சற்று முன்பு பார்த்த

மேகம் மாறி போக

காலம் இன்று காதல்

நெஞ்சை கீறி போக

சற்று முன்பு பார்த்த

மேகம் மாறி போக

காலம் இன்று காதல்

நெஞ்சை கீறி போக

நரம்பியல் மருத்துவர் பூபதி பாண்டியன் அனைவரையும் அமரும்படி கூறினார்.

{காதலா? சாபமா? Epilogue ல பூபதி பாண்டியன் அமேரிக்கா போய்ட்டதாகவும், போனவர் காணாமல் போய்ட்டதாகவும், வெற்றிமாறன் தேடும் முயற்சியில் இருக்குறதாகவும் எழுதியிருக்கேன். Epilogue  என்றாவே சில வருடங்கள் கழித்து என்று தான் வரும் so கார்த்திகேயன் story காதலா? சாபமா? final  and  Epilogue க்கு இடைப்பட்ட காலத்துல நடந்தது ok }

அமைதியாக அனைவருடைய முகத்தையும் ஒரு நொடி பார்த்தவர் மூளை சம்பந்தமாக எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர் அங்கே தொங்கவிடப்பட்டிருப்பதை காட்டி “இதோ இந்த இடத்துல உங்க பையனுக்கு மூளைல ஒரு கட்டி இருந்திருக்கு. அது அலாரம் வைக்காத டைம் பாம் போல அமைதியா தூக்கிகிட்டு தான் இருந்திருக்கு. உங்க பையனோட தலைல பட்ட அடியால அது இப்போ டிக், டிக் என்று வேல செய்ய ஆரம்பிச்சிருச்சு. எந்த நேரத்துல வேணா வெடிக்கலாம்” என்றார்.

“என்ன இவர் தீவிரவாதி மாதிரி பேசிகிட்டு இருக்காரு?” வள்ளி வாய் விட்டே கேட்டிருக்க,

“அம்மா டாக்டர் கார்த்தி செத்துடுவான்னு சொல்லிக்கிட்டு இருக்காரு” பார்த்திபன் பதட்டத்தோடு சொல்ல,

“ஐயோ என் புள்ள செத்துடுவானா?” வள்ளி கத்தி ஆர்ப்பாட்டம் செய்தவாறே கார்த்திகேயனை காண ஓட முயன்றாள். 

பூபதி பாண்டியன் பதட்டத்துக்குள்ளாக, பார்த்தீபன் “கொஞ்ச நேரம் அமைதியா டாக்டர் என்ன சொல்லுறாருன்னு கேப்போம்”

ஒருவாறு வள்ளியை சிவபாலனும், பார்த்தீபனும் அமைதிப்படுத்திய பின் பூபதி பாண்டியன் பேச ஆரம்பித்தார்.

“நான் டைம் பாம்னு உதாரணம் சொன்னது உங்களுக்கு புரியனும்  என்று தான். இந்த தமிழ் படங்கள்ல பார்த்திருப்பீங்களே  டைம் பாம்ல கலர் கலரா மூணு வயர் இருக்கும் அதை சரியா கட் பண்ணா  பாம் ஆப் ஆகிடும். தவறாக கட் பண்ணா பாம் வெடிச்சிடும். மாத்தி கட் பண்ணா டைம் வேகமா போகும்.

அது மாதிரி தான் மனித மூளைல இருக்குற கட்டியும் எமோஷனால கட்டுப்படுத்தலாம். உங்க பையன சந்தோசமா இருந்தா அது வளராம கன்றோல்ல இருக்கும். கோபப்பட்டா வெடிக்கக் கூட வாய்ப்பிருக்கு, சோகமா இருந்தா டைம் பாம்ல டைம் வேகமா போறது போல கட்டி வேகமா வளரலாம்”

“என்ன டாக்டர் பயமுறுத்துறீங்க” அழுது கரைந்தாள் வள்ளி.

“என்ன நடக்கும் என்று உங்களுக்கு புரியும்படி சொல்லிக்கிட்டு இருக்கேன் அம்மா. உங்க பையன சந்தோஷமா பாத்துக்கோங்க. ஆ…  இன்னொன்னு. அந்த கட்டியால உங்க பையனுக்கு சில சமயம் பழசு மறந்து போகும், இல்ல இப்போ நடந்தது கூட மறந்து போகும். அவர் என்ன பேசுறாரோ அதுக்கேத்தது போல நீங்க பேசி அவர அனுசரச்சி போங்க. இல்ல அவர் கைவிட வேண்டியதுதான்” என்று விட்டார்.

“ஐயோ என் பையனுக்கு இப்படியாகிருச்சே” வள்ளி புலம்பியவாறு கார்த்திகேயன் அனுமதிக்கப்பட்ட அறைக்கு நடந்தாள்.

“அம்மா கயல்விழிக்கு விவாகரத்து ஆகிருச்சாம் அவள பார்த்து நீ கத்தாத, தம்பி கோபப்படுவான்” என்றான் பார்த்தீபன்.

“என்னடா சொல்லுற?” இது வேறயா? இவகிட்ட இருந்து என் பையன காப்பாத்த முடியாது போல இருக்கே  என்று அதற்கும் புலம்பினாள் வள்ளி.

அவர்கள் அறையை விட்டு வெளியேறிய நொடி கதவை சாத்திய பூபதி பாண்டியன் மகனை அழைத்திருந்தார்.

“டேய் நல்லவனே, என் வாழ்க்கைல ஒரு டாக்டரா நான் பொய் சொன்னதே இல்லடா, என்னையே செத்துடுவான், மூளைல கட்டி என்று பொய் சொல்ல வச்சதுமில்லாம காமடி டாக்டர் போல டைம் பாம் கத வேற சொல்ல வச்சிட்டல்ல, உண்மை தெரிஞ்சா தேடி வந்து உதைக்க போறாங்க” மகன் மீது கோபம் இருந்தாலும் அவன் கேட்டதால் மறுக்க முடியாமல் ஒத்துக்க கொண்டிருந்தார்.

“உனக்கு பொய் சொல்லுறது என்ன புதுசா டாடி? இத்தனை வருஷமா அம்மா கிட்ட பொய் சொல்லிக்கிட்டு தானே இருக்க. இதுக்கு போய் பீல் பண்ணிக்கிட்டு” தந்தை செய்த காரியத்தை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாயாமல் அவ்வப்போது இவ்வாறுதான் வார்த்தைகளை குத்தீட்டியாக்கி தன் மனதின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவான் வெற்றிமாறன்.

பெருமூச்சு விட்ட பூபதி பாண்டியனோ “நான் தான் அமேரிக்கா போறேனே. இவங்க தேடி வந்தாலும் நான் இங்க இல்லையே” உன்னாலையும் என்ன நினைத்த நேரத்தில் பார்க்க முடியாது என்று சொல்லாமல் சொல்லி விட்டு அலைபேசியை அனைத்து விட்டார்.   

கார்த்திகேயனுக்கு என்னதான் காமினியை வன்கொடுமை புரிந்தோரை கொல்லும் கோபம் இருந்தாலும், சட்டத்தை கையில் எடுக்கும் எண்ணம் இல்லை. நீதிமன்றத்தில் அவர்களை நிறுத்தியேயாக வேண்டும். இவர்களுக்கு நீதிமன்றம் கொடுக்கும் தண்டனையை பார்த்து இது போன்ற குற்றங்களை இனிமேல் யாருமே செய்யக் கூடாது. செய்ய நினைக்கவும் கூடாது என்றான். 

“பாலியல் பலாத்காரத்துக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை கொடுக்குமா? அல்லது ஆயுள் தண்டனை கொடுக்குமா? சில வருடங்கள் ஜெயில் போடுவார்கள். இவர்கள் ஜெயிலில் சொகுசாக இருந்துவிட்டு வெளியே வருவார்கள். மக்களும் இவர்களை மறந்து விடுவார்கள். பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பங்களும் மட்டும்தான் நடந்ததை எண்ணி வருந்துவார்கள். இத்தனை வருடங்களாகியும் கயல்விழி நடந்ததை எண்ணி அதிலிருந்து மீள முடியாமல் துவண்டு கொண்டு தானே இருக்கின்றாள். அவளை இந்த நிலைக்கு ஆளாக்கிய இருவரும் ஜெயில் சொகுசாக வாழ்ந்து கொண்டு தானே இருக்கின்றார்கள்” என்றான் வெற்றிமாறன். 

“உண்மை தானே. இவன் சொல்வது உண்மை தானே. இந்த திருந்தாத ஜென்மங்களுக்கு தண்டனை தான் என்ன?” வெற்றிமாறனையே கேட்ட கார்த்திகேயன் “கயலை பத்தி எப்படி உங்களுக்கு”

“நீங்க இந்த கேச கையில எடுத்த உடனே நான் உங்கள பத்தி விசாரிச்சேன். அப்போதான் கயல்விழியை பத்தியும் தெரிஞ்சிகிட்டேன். உங்க ரெண்டு பேருக்கு இடையில இருக்கிற உறவை பத்தியும், லவ்வ பத்தியும்” என்று சிரித்தான் வெற்றிமாறன்.

“நாம இவன பத்தி விசாரிச்சா, இவன் நம்மள பத்தி என்னென்னவெல்லாம் விசாரிச்சிருக்கான்” என்று வெற்றிமாறனை ஆச்சரியமாக பார்த்தான் கார்த்திகேயன்.

“ஒரே கல்லுல மூணு மங்கா அடிக்கலாமா? கார்த்திகேயன்” என்று வெற்றிமாறன் நாடியை தடவ, அவன் சொல்வதை கூர்ந்து கவனித்தான் கார்த்திகேயன்.

இதுவரையில் வெற்றிமாறனும் பல குற்றவாளிகளை தன்னுடைய பாணியில் தன்னடனை கொடுத்திருக்கின்றன. ஆனால் குற்றங்கள் தான் குறைவதில்லை. காரணம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது வெளியுலகத்துக்கு தெரியாமல் போவதால் குற்றம் புரிவோருக்கு அச்சம் வருவதில்லை. மனதில் அச்சம் வந்தால் தானே அவர்கள் குற்றம் செய்வதை நிறுத்துவார்கள்.

“காமினியின் வழக்கின் குற்றவாளிகளில் ஒருவன் ஒரு தொழிலதிபர் கண்டிப்பாக அவனை அவன் வக்கீல் மீட்க, பல வழிகளில் முயற்சி செய்வார். அவன் மட்டும் தப்பித்தால் இவன் போன்ற பணமுதலைகளுக்கு பயம் என்பது வரவே வராது. பணத்தை வைத்தே எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற இறுமாப்புதான் வரும். இவர்களுக்கு மக்கள் மத்தியில் மரண தண்டனையை நிறைவேற்றினால் இவர்களை போன்றவர்கள் அஞ்சி நடுங்குவார்கள் என்ற வெற்றிமாறன் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வரை கடுமையான சட்டம் வேண்டும் இல்லையேல் மக்கள் சட்டத்தை கையில் எடுத்து விடுவார்கள் என்று மக்கள் போராட்டம் செய்தால் சட்டம் திருத்தியமைக்கப்படும்” என்றான்.

“இரண்டு மங்கா தானே, மூணாவது மங்கா என்ன?” யோசனையாக வெற்றிமாறனை கார்த்திகேயன் ஏறிட,

“நடந்த கலவரத்துல உங்களுக்கு அடிபட்டா கயல்விழி உங்கள கல்யாணம் பண்ணிக்குவாங்களா?” என்று கேட்டு நாடியை தடவினான்.

“தெய்வமே….” என்று கார்த்திகேயன் வெற்றிமாறனை கட்டிக்கொண்டான்.

திட்டத்தை பற்றி யாரிடமும் மூச்சு விடாத கார்த்திகேயன் பார்த்திபனை அழைத்து கயல்விழிக்கு விவாகரத்தாகி விட்டதாகவும், அதை அவள் தன்னிடமிருந்து மறைத்து விட்டாள் என்று புலம்பித் தள்ளினான். 

கயல்விழிக்கு விவாகரத்தானது தெரிந்தால் தானே இவன் திருமணத்தை பற்றி பேசும் பொழுது அவர்கள் மறுக்க மாட்டார்கள்.

வெற்றிமாறனின் திட்டப்படி காமினியை பலாத்காரம் செய்த தொழிலதிபரை ஆட்களை ஏற்பாடு செய்து மக்கள் மத்தியில் வைத்து கொன்று விட்டான். நடந்த கலவரத்தில் கார்த்திகேயனுக்கு அடிபட்டதாக மருத்துவமனையிலும் அனுமதித்திருந்தான்.

கண்விழித்த கார்திகேயனோ கயல்விழியை பார்த்து சினேகமாக புன்னகைத்தான்.

கார்த்திகேயன் எழுந்து அமர முயற்சி செய்ய, அவனை அமர வைத்தவாறே “தல வலிக்குதா கார்த்தி” என்று பதறினாள் கயல்விழி.

“எனக்கு ஒண்ணுமே இல்ல நான் நல்லா இருக்கேன். உன் அப்பா எப்படி இருக்காரு? அவரை ஹாஸ்பிடல்ல பார்த்துட்டு நம்ம கல்யாணத்த பத்தி பேச வீட்டுக்கு போகும் போது எக்சிடண்ட் ஆச்சு” என்றான்.

என்ன சொல்கிறான் இவன்? என்று புரியாமல் குழம்பினாள்.

கார்த்திகேயனின் வீட்டார் வருவதை பார்த்த விக்னேஷ் உள்ளே வந்து கயல்விழியிடம் வள்ளி வருவதை கூறினான்.

“நீ கயலோட ஃப்ரெண்ட் விக்னேஷ் தானே” என்று கார்த்திகேயன் நெற்றியை தடவ, கயல்விழியும் விக்னேஷும் கார்த்திகேயனுக்கு என்ன ஆச்சு என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள, “நீ நம்ம ஆபீஸ்ல தானே வேல பாக்குற? இல்ல கயல்” என்று கார்த்திகேயன் கேட்க, என்ன இவன் பழசெல்லாம் மறந்து போனது போல் பேசினான் இப்பொழுது என்னை இப்படி பேசுகிறான் என்று அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

கார்த்திகேயனின் நிலைமையை மருத்துவரிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். தான் இருந்தால் வள்ளி கத்துவாளே என்று “நீ ரெஸ்ட் எடு கார்த்தி நான் உன்ன அப்பொறமா வந்து பாக்குறேன்” என்று இவள் நகரப்போக, விடுவானா கார்த்திகேயன் அவள் கையை இறுகப்பற்றி அவன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவளை நகர விடாது ஏதேதோ பேசலானான்.

சிவபாலனும் வள்ளியை கண்களால் எச்சரித்தவறே வர, உள்ளே வந்த வள்ளிக்கு நெஞ்சம் எரிந்தாலும் மகனின் நிலையறிந்து எதுவும் பேச முடியவில்லை.

“அம்மா நான் கயலை பத்தி சொன்னேனே. இது தான் கயல்விழி. உன் மருமக” என்றான்.

கயல்விழிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. மெதுவாக அவனிடமிருந்து கையை உருவ முயன்றாள்.

“அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க அம்மாக்கு நான்னா ரொம்ப இஷ்டம். இல்லையா…ம்மா?” என்று வள்ளியை கேட்டவன் “இங்க வாம்மா” என்று வள்ளியை அருகில் அழைத்தான்.

“கார்த்தி நீ ரெஸ்ட் எடுக்கணும். அதான் உங்கம்மா வந்துட்டாங்கல்ல. நான் கிளம்புறேன்” கயல்விழிக்கு அங்கே இருக்க அசௌகரியமாக இருந்தது.

“அம்மா நீ கயலை ஏதாவது சொன்னியா? அப்பா நீங்க சொன்னீங்களா?” கொஞ்சம் குரலை கடுமையாக்கி கேட்டதும் தான் தாமதம்.

“ஐயோ இல்லப்பா… நாங்க என்ன சொல்லப் போறோம்? அவ இங்கயே இருக்கட்டும்” மகனின் உயிர் என்றதும் சிவபாலனும், வள்ளியும் பதட்டமாக கூறி முடிக்க, புரியாமல் முழித்தாள் கயல்விழி.

சிவபாலன் கார்த்திகேயன் முன்னால் கயல்விழியை எதுவும் பேசாவிட்டாலும் பொறுத்துப் போக மாட்டான். ஆனால், வள்ளி கார்த்திகேயன் முன்னாலும் பேசுவாள். அப்படிப்பட்டவர்கள் அடங்கிப் போகிறார்கள் என்றால் கார்த்திகேயனுக்கு பெரிதாக ஏதோ ஆகிவிட்டது என்று உணர்ந்து கொண்டாள் கயல்விழி.

கட்டுப்படுத்த முடியாமல் கயல்விழியின் கண்களில் இருந்து கரகரவென கண்ணீர் வழிந்தோட, “எதுக்கு கயல் இப்ப அழுகுற அதான் நம்ம கல்யாணத்துக்கு அப்பாவும், அம்மாவும் சம்மதம் சொல்லிட்டாங்களே” என்றான் கார்த்திகேயன்.

“இது எப்ப?” வாய்விட்டே கேட்டுவிட்டான் பார்த்திபன்.

“ஆமா எப்போ சம்மதம் சொன்னாங்க? நான் தான் வீட்ல வந்து இன்னும் பேசவே இல்லையே. நான் இப்ப கேட்கிறேன். அம்மா அப்பா இதுதான் கயல்விழி நான் காதலிக்கிற பொண்ணு. நான் கயல் கல்யாணம் பண்ணிக்கணும். வேணான்னு சொல்லுவீங்களா?” கொஞ்சம் அதட்டலாகவே கேட்டான்.

“கார்த்தி என்ன பேசுகிற நீ? ஹாஸ்பிடல்ல பேசற விஷயமா இது? நாம இத பத்தி அப்புறமா பேசலாம்” அவன் பெற்றோர்தான் ஒரு காலமும் சம்மதிக்க மாட்டார்களே அவன் இருக்கும் நிலையில் இந்தப் பேச்சு இப்போது தேவைதானா? என்று கயல்விழி பேச்சை திசை திருப்ப முயன்றாள்.

பிள்ளை பாசத்துக்கு முன்னால் ஜாதி, மதம் எல்லாம் ஒரு பொருட்டா “நீ உன் இஷ்டப்படியே யாரவேணாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருப்பா” என்றாள் வள்ளி.

“ஹேய் கயல் அப்பா அம்மா சம்மதம் சொன்னா தான் என்  நீ கல்யாணம் பண்ணிக்கிறதா சொன்னியே, சொல்லிட்டாங்க. வா இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம்” சந்தோஷத்தில் குதித்தான் கார்த்திகேயன்.

அவனுக்கு இருந்த சந்தோஷம் கயல்விழிக்கு இல்லை. கார்த்திகேயனுக்கு ஏதோ ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது. அதனால் தான் அவனது பெற்றோர்கள் உடனே திருமணத்துக்கு சம்மதம் கூறினார்கள். அவளுக்கு விவாகரத்தாகி விட்டது என்று அறிந்த பின்னரும் சம்மதம் கூறி இருக்கிறார்கள். ஆனாலும் அவளுக்கு நடந்த கொடூரத்தை அறிந்து கொண்ட பின்னர் சம்மதம் கூறுவார்களா? அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் அவர்களுக்கு இல்லை. நடந்த கொடூரத்தை தன்னாலேயே மறக்க முடியவில்லை. தான் இருக்கும் மனநிலையில் இப்பொழுது திருமணம் செய்து கொள்ள முடியாது. எப்படி மறுப்பது என்று தான் யோசித்தாள்.

அவளது முகபாவனையை கார்த்திகேயனுக்கு படிக்க தெரியாதா? அவளுக்காக வேண்டிதான் அவனது பெற்றோரின் சம்மதத்தை இவ்வாறு பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கினான். அவளது சம்மதத்தை அவன் பெற்றுக் கொள்ள மாட்டானா?

“எனக்கு என்னமோ நான் சீக்கிரம் செத்துடுவேன்னு தோணுது கயல். நான் சாகும்போது நீ என் மனைவியா, என் பக்கத்துல என் கூடவே இருக்கிறிய?” என்று கேட்டான்.

வள்ளி விசும்பவே ஆரம்பித்தாள்.

தான் எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்து விட்டது. வள்ளியின் விசும்பலே அதற்கு சாட்சி. என்று உணர்ந்து கொண்ட நொடி கயல்விழியின் இதயமே நின்று விட்டது போல் உணர்ந்தாள். அவளுக்கே ஆறுதல் தேவைப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் அவளது உதடுகள் அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளை  கூறலானது.

“என்ன பேசுற? உனக்கு ஒன்னும் ஆகாது. இப்படி எல்லாம் பேசாதே” அவனை அதட்டினாள் கயல்விழி.

“நான் சாகப் போறதால தான் என்ன கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லுறியா?”

“இப்படியெல்லாம் பேசாதே கார்த்தி” கயல்விழியால் அழுகையை அடக்கவே முடியவில்லை.

“ஹேய் என் பெட்டி எங்க?” சுற்றி முற்றி பார்த்தவன் மேசையின் மீதிருந்த பெட்டியை எடுத்துத் தருமாறு பார்த்திபனிடம் கூற அவனும் எடுத்துக் கொடுத்தான். அதை திறந்தவன் “இது நான் உனக்கு எடுத்த கல்யாண புடவை” என்று அவள் கையில் கொடுத்தவன் அவள் அதை பார்த்திருக்கும் போதே, பெட்டியில் இருந்த தாலியை எடுத்து அவள் கழுத்தில் அணிவித்திருந்தான்.

அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. பெற்றோரின் சம்மதம் வேண்டும் என்றாள், கிடைத்து விட்டது. அவள் நிலையை கூற முடியாமல் மறுக்கிறாள். அவளை மேலும் தனியாக விட முடியாது. அவளிடம் தொடர்ந்து பொய் சொல்லவும் முடியாது. அவனால் தொடர்ந்து நடிக்கவும் முடியாது. அவளே தன்னோடு இருத்திக்கொள்ள இருக்கும் ஒரே வழி திருமணம் தான். அவளை யோசிக்க விடாமல் அடுத்தடுத்து செய்ய வேண்டியதை செய்யலானான் கார்த்திகேயன்.

நீ நடக்கும் பொழுது

நிழல் தரையில் படாது

உன் நிழலை எனது உடல்

நழுவ விடாது

பேரழகின் மேலே ஒரு

துரும்பும் தொடாது

பிஞ்சு முகம் ஒரு நொடியும்

வாடக்கூடாது

உன்னை பார்த்திருப்பேன்

விழிகள் மூடாது

உன்னை தாண்டி

எதுவும் தெரியகூடாது ஹோ ஓ ஓ

தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே

நீ தானே

தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே

நீ உயிரே வா….ஆஅ….

வேறதுவும் தேவை இல்லை

நீ மட்டும் போதும்

கண்ணில் வைத்து காத்திருப்பேன்

என்னவானாலும்

உன் எதிரில் நான் இருக்கும்

ஒவ்வொரு நாளும்

உச்சி முதல் பாதம் வரை

வீசுது வாசம்

தினமும் ஆயிரம் முறை

பார்த்து முடித்தாலும்

இன்னும் பார்த்திட சொல்லி

பாழும் மனம் ஏங்கும்

Advertisement