Advertisement

அத்தியாயம் 9
நிலாவுக்கு தூக்கம் ஒரு சொட்டும் கண்ணை அடையவில்லை. நித்திரா தேவி அவளை விட்டு விட்டு தூர ஓடியிருந்தாள். அழுது ஓய்ந்தவள் தனக்கு ஏன் இந்த நிலைமை என்ற சுய ஆராய்ச்சியில் இறங்கி இருந்தாள் மாது. 
வாணன் நினைத்ததை செய்ய அவனுக்கு அதிக நாட்கள் தேவைப்படவில்லை. நிலாவின் கற்பனை கதைகளின் மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அவனுக்கு அவள் மனதை திறக்கும் திறவுகோலாளாக அமைந்து விட்டிருந்தத்து நிலாவுக்கு தெள்ளத்தெளிவாக புரிந்து விட்டது.
“கற்பனைக்கும் நிஜத்துக்கு நிறைய வித்தியாசம் இருக்கும் என்று புரிந்துகொள்ளாமல் இருந்துட்டியே! நிலா” தலையில் அடித்துக் கொண்டாள் நிலா.
தனது பெரிய குறையே! அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று தானே! யோசிப்பது. அப்படித்தானே! வாணன் திருமணத்துக்கு சம்மதம் கேட்ட போது அவனிடம் வாயை திறந்து கேட்காது, தனது சொத்து பறி போய் விடக் கூடாதென்று தான் அவன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக தானாக ஒரு காரணத்தை கண்டு பிடித்து, தானாக முடிவு செய்து கொண்டேன். கேட்டிருந்தால் ஒருவேளை அவன் திணறி இருப்பான். அது எனக்கு சந்தேகத்தை தோற்று வித்திருக்கும். எனது இந்த குணமும் அவனுக்கு சாதகமாக அமைந்து விட்டது.
“அம்மாவும் அப்பாவும் எவ்வளவு சொல்லி இருப்பார்கள். நிலாம்மா… அவசரப்பட்டு நீயா யோசிச்சு முடிவெடுக்காத, அடுத்தவங்க பேசுறத கூர்ந்து கவனி. இந்த சமூகத்துல குள்ளநரிங்கதான் அதிகம். பேசியே! கவுத்துடுவாங்க. நாமதான் கவனமாக இருக்கணும். அடுத்தவங்களை கேள்வி கேட்டு திணற செய். அதுல அவங்க நோக்கம் புரியும். எவ்வளவு புத்திமதிகள் சொல்லி கொடுத்து இருப்பார்கள். என் குணமறிந்துதான் இவ்வளவும் சொல்லி இருப்பார்கள். தருணத்தில் அனைத்தையும் மறந்து விட்டேனே!” வாய் விட்டே கதறினாள் நிலா.
பெண்ணுக்கே! உரிய எச்சிரிக்கை மனம் அவளை எச்சரித்தாலும் வாணனின் மீது காதல் கொண்ட மனம் சப்பைக் காரணங்களை கூறி அவளை சிந்திக்க விடாதபடி மூளையை மழுங்க செய்து விட்டிருந்தது.
“காதலுக்கு கண்கள்தான் இல்லையென்று சொல்வார்கள். மூளையும் கூட இல்லை போலும். இருந்திருந்தால் ஒருவன் திருமணம் செய்ய கேட்ட உடனே! சரியென்று கூறி இருக்கவும் மாட்டேன் அவன் மீது காதல் கொண்டிருக்கவும் மாட்டேன்” விரக்தியாக சிரித்தாள் நிலா.
பெண்களுக்கு என்றுமே! துணிமணி நகைநட்டின் மீது ஆசை அதிகம். நிறைய துணிமணிகளையும், நகைநட்டையும் வாங்கிக் கொடுத்து. ஒன்றுமே இல்லாதவளின் ஆசையை தூண்டி விட்டு ஷாப்பிங் என்ற பெயரில் வாங்கிக் குவிப்பாள் என்று டெபிட் கார் வேறு கொடுத்து அவளை மேலும் கடனாளியாகி அவனோடு இறுக்கி {இருக்க} வைக்கத்தான் திட்டமிட்டிருக்கின்றான் இந்த வாணன். அதனால்தான் நிலா கல்யாணப் புடவையை குறைந்த விலையில் வாங்கியதும் வாணனுக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது என்று புரிந்து போனது பேதை பெண்ணுக்கு.
“ஆனால் வாணன் உங்க கணக்கு இதில் மட்டும் தவறி விட்டது. நான் என்றுமே! எதற்கும் அதிக ஆசைபட்டது கிடையாது. என்று எங்க சொத்தெல்லாம் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விட்டேனோ! அன்றே கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து விரலுக்கேத்த வீக்கமாய்த்தான் வாழப்பழகிக் கொண்டேன். கோடி கோடியாய் பணம் கிடைத்தாலும் எளிமையாக வாழ்ந்ததை மறக்கவும் மாட்டேன். எளிமையாக வாழ்வதை விடவும் மாட்டேன்” தூங்கும் அவனை வெறித்து நோக்கினாள் நிலா. 
நிலாவை வாணன் சரியாக புரிந்து வைத்திருந்தான் எப்படியெல்லாம் பேசினால் அவள் எப்படி மனம் இறங்குவாள் என்று தெரிந்தே பேசி இருக்கின்றான்.
இதில் காதல் மொழி பேசுவது போல் “நான் பார்க்கத்தானே! நீ அணிய வேண்டும்” என்று சினிமாத்தனமான டயலொக் வேறு. சரியான சைக்கோ வில்லன்.
என்னதான் நிலா வாணனை விரும்பி திருமணம் செய்திருந்தாலும் அவனை விட்டு ஒருநாள் பிரிந்து சென்றுதானே! ஆக வேண்டும். இந்த திருமணம் நிலையானதல்ல என்று உணர்ந்திருந்தாள். ஆனால் இந்த திருமணமே! அவளை வீழ்த்த அவளை பழிவாங்கவென்று அவள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
தந்தையையும் இழந்து அன்னை படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் இருக்கும் ஒருத்தி மிஞ்சி மிஞ்சி போனால் கணவனிடம் என்ன எதிர் பார்ப்பாள்? அன்பும் அக்கறையும்தான். அன்னையாகி அவளுக்கு ஊட்டி விட்டு, தந்தையாகி தோள் கொடுத்து,  தோழனாகி “உனக்கு எல்லாமாக நான் இருக்கின்றேன்” என்று நம்பிக்கையை விதைத்து அவள் கற்பை சூறையாடி ஒரு பெண் கேட்கக் கூடாத பேரையும் சூடி அதால பாதாளத்துக்கு தள்ளியும் விட்டான்.
ஏழைக்கு எதற்கு மாட மாளிகை. கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்று அதிகம் ஆசைப்படக் கூடாதென்றுதான் பெரியவர்களும்  அனுபவப்பட்டவர்களும் கூறிச் சென்றார்களோ! என்னவோ! வீட்டு வேலைக்கு சென்று பணக்காரர்களின் வீட்டில் சிறை பட விரும்பாத நான் இன்று திருமணம் என்ற பெயரில் சிறைப்பட்டு விட்டேன். இதற்கெல்லாம் காரணம் கற்பனை கதைகளில் வருவது போல் என் நாயகனும் என்னை தேடி வந்து விட்டான் என்று நம்பிய என் மடமையன்றி வேறில்லை.
சுய ஆராய்ச்சியில் இறங்கியவள் தானே தனக்கு வைத்துக்கொண்ட சூனியத்தை எவ்வாறு எடுப்பதென்று யோசிடிக்கலானாள்.  
தூங்கும் வாணனை பார்த்தவளுக்கு ஆயாசமாக இருந்தது. தான் வெறுக்கும் ஒருத்தியிடம் நடிக்க வேணும் அன்பு காட்டத்தான் முடியுமா? இவனிடம் பேசி பிரயோஜனமில்லை. இங்கிருந்து எப்படியாவது தப்பிச்செல்ல வேண்டும். அதுதான் எப்படி?  என்று தெரியவில்லை.  விடிய விடிய யோசித்தவாறு இருந்தவள் எப்பொழுது தூங்கினாள் என்று அவளுக்கே! தெரியவில்லை. நிலா கண்விழிக்கையில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள்.
முதலில் தான் எங்கே! இருக்கின்றோம் என்று திகைத்தவளுக்கு நடந்த சம்பவங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக கதை புத்தகத்தின் தாள்கள் காற்றில் புரள்வது போல் நியாபகத்தில் வந்திருந்தது.
தான் எப்பொழுது தூங்கினோம்? எவ்வாறு? கட்டிலுக்கு வந்தோம் என்று புரியாமல் குழம்பியவள் அருகில் வாணன் இருக்கின்றானா? என்று பார்க்க அவன் அந்த அறையில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
அடித்துப் பிடித்து எழுந்தவள் கதவை நோக்கி ஓடி அதை திறக்க முயற்சி செய்ய அது திறப்பேனா? என்று அடம்பிடித்தது. சோர்ந்து போனவள் கதவுக்கு அடியில் அமர்ந்து கொண்டு கைப்பிடியில் தொங்கிக்கொண்டு கத்த ஆரம்பித்தாள்.
அவள் எவ்வளவுதான் கத்தினாலும் அந்த அறையை விட்டு எந்த சத்தமும் வெளியே கேட்காதவாறு அந்த அறை அமைக்கப்பட்டிருந்தது. அது போக அங்கு யாரும் வரவும் மாட்டார்கள்.
சத்தத்தை ரொம்பவும் குறைத்து வைத்திருந்தான் போலும் தொலைபேசி அடிக்கும் சத்தம் கேட்கவே! சுயநினைவுக்கு வந்தவள் போல் சுற்றிலும் தேட கட்டிலுக்கு அருகில்தான் சத்தம் வந்தது. ஓடிச் சென்று அதை எடுக்க மறுமுனையில் வாணன் பேசினான்.
“என்ன நிலா பேபி எந்திரிச்சிட்டீங்க போல. நல்ல தூங்கினீங்களா? பிரெஷ்ஷா பீல் பண்ணுறீங்களா? நைட்டும் சாப்பிடல ரொம்ப பசியா இருக்குமே!” தேன் ஒழுகும் குரலில் பேச
பல்லைக் கடித்த நிலா “டேய்.. எங்க டா.. இருக்க? வந்து கதவ திறந்து விடு டா..” என்று கத்த
காதை குடைந்தவன் “மெதுவா பேசு டி.. எதுக்கு கத்தித் தொலைக்கிற? நீ எவ்வளவு கத்தினாலும், யாருக்கும் கேக்க போறதுமில்லை, யாரும் வரப்போறதுமில்லை” அடிக்குரலில் சீரியவன் மறுநொடியே குரலில் தேன் தடவி “நா இப்போ எதுக்கு போன் பண்ணேன்னா… பிரேக் பாஸ்ட்  வச்சிருக்கேன். லன்ச் ஹாட் பேக்ல இருக்கு. நல்லா சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு அப்பொறம் குளிச்சி ரெடியாகு மாமா நைட்டுக்கு வரேன். பா…ய்”
அலைபேசி துண்டிக்கப்படவும் வாணனை திட்டித் தீர்த்தவள் அதான் அலைபேசி இருக்கே! யாருக்காவது அழைக்கலாம் என்று பார்த்தால் அந்த அலைபேசியில் எண்களே! இல்லை. வெறுத்துப்போய் அமர்ந்தவள்.
“நான் எந்திரிச்சிட்டேன்னு அவனுக்கு எப்படி தெரியும்? இந்த அறையிலையும் கேமரா வைச்சிருக்கானா?. முதல்ல அத எடுத்து உடைக்கணும்” என்றெண்ணியவள் அது எங்கு இருக்கும் என்று தேட அவளால் ஊகிக்க முடியவில்லை. 
தனது அறையில் காபி சாப்பிட்டவாறு பைலை புரட்டிக்கொண்டிருந்தான் வாணன். கதவை தட்டிக்கொண்டு வந்த ஜெகன் ஆபீஸ் விஷயங்களை பேசி சில கையெழுத்தும் வாங்கியவன் போகும் பொழுது
“மேடம் எப்படி இருக்காங்க சார்” என்று கேக்க
காபியை ஒரு மீடர் அருந்தியவன் “யாரு?” என்று புருவம் உயர்த்த
சந்தேகமாக ஜெகன் “உங்க வைப் நிலா மேடம்” என்று தெளிவாக கேக்க
“ஓஹ்.. நிலாவா கொஞ்சம் அப்சட்டா தான் இருக்கா.. கொஞ்சம் நாள்ல சரியாகிடுவா” என்று விட்டு தன் வேலையை தொடர ஜெகனும் வெளியேறி இருந்தான்.
அருந்திக்கொண்டிருந்த காபி கப்பை மேசையின் மீது வைத்தவன் அலைபேசியை எடுத்து தான் பொருத்தியிருந்த கேமரா வழியாக நிலா என்ன செய்கிறாள் என்று பார்க்க அவள் அறையை ஆராய்ச்சி செய்வது தெரிந்தது.
“சில்லி கேர்ள். என் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கணும்னு இன்னுமும் யோசிக்கிற, அவளுக்காகவே! டிசைன் பண்ண ரூம் அது. அவளுக்குத்தான் தெரியல” சத்தமாக சிரித்தவன் “சாரி உன் அம்மா இறக்கும் போது உன் கூட இருக்க முடியல. தெரிஞ்சிருந்தாலும் என்னால உன் கூட இருந்திருக்கவும் முடியாது” பெருமூச்சு விட்டுக்கொண்டவன் அன்று நடந்ததை நினைத்துப் பார்கலானான்.
அன்று குடிலை விட்டு அன்னையை பார்க்க செல்லும் பொழுதுதான் அன்று வாணனின் பெற்றோரின் கல்யாண நாளென்றே வாணனுக்கு நியாபகத்தில் வந்தது.
தந்தையின் பிறந்த நாளையோ! தாயின் பிறந்த நாளையோ! அவர்கள் கொண்டாட மாட்டார்கள். கல்யாண நாளைத்தான் சந்தோசமாக கொண்டாடுவார்கள். பண்டிகைகளோடு அடுத்து அவர்கள் கொண்டாடுவது வாணனின் பிறந்த நாளை மட்டும்தான்.
கல்யாணமன்று காலையிலையிலையே கோவிலுக்கு சென்று வேண்டிக்கொள்பவர்கள் வீட்டுக்கு வந்து சுசிலா சமைத்து வைத்து சென்றிருந்த உணவை உண்டு விட்டு விரோசனனின் வண்டியில் சினிமாவுக்கு போவார்கள். சினிமா பார்த்து விட்டு ஹோட்டலுக்கு சென்று நன்றாக சாப்பிட்டு விட்டு பூங்காவுக்கு செல்வார்கள்.
வாணன் விளையாடும்வரை சுசீலாவும் விரோசனனும் அங்கிருக்கும் கல்பெஞ்சில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருப்பார்கள். அநேகமாக அவர்களின் பேச்சு வாணனை பற்றி மட்டுமே! இருக்கும்.
வாணன் விளையாடும் அழகை பார்த்து ரசிப்பவர்கள் அவனுக்கு இருக்கும் திறமைக்கு அவன் வளர்ந்தால் அவன் ஒரு மருத்துவனாவான் என்றுதான் எண்ணி இருந்தார்கள்.
தனது கனவு பாடசாலைக்குள் உள்ளே நுழையும் பொழுது தனக்கிருந்த மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை எல்லாம் நிலாவை சந்தித்த பின் டிஸ்மிஸ் ஆனதில் பணம் சம்பாதிப்பதே ஒரே குறிக்கோளாகிப் போனது.
இந்தியாவில் கேம் எப்களை தயாரிக்கும் கம்பனிகளோடு ஒப்பிடுகையில் வாணனி கம்பனி மிகச்சிறிய கம்பனி. ஆனால் ஆரம்பித்து ஒரு வருடம் செல்லும் முன் இந்தியா முழுவதும் பெற்றோர்களாளேயே! குழந்தைகளுக்கு விளையாடும்படி கூறும் விதமாக அமைந்திருந்த அவனுடைய மொபைல் கேம்ஸ்.
கொஞ்சம் நேரம் மொபைல் கிடைத்தாலும் போதும் குழந்தைகள் கேம் விளையாட்டுத்தான் முனைவார்கள். பெற்றோர்கள் மறுத்தாலும், உணவூட்ட வேண்டி கொடுப்பார்கள் அல்லது “ஹோம் ஒர்க் செய்” தரேன் என்பார்கள்.
தனது ஆராய்ச்சியில் இதை சரியாக கண்டு பிடித்து இதற்கான தீர்வாக, குழந்தைகளுக்கு பிடித்தமான எல்லா காட்டூன்களையும் வரிசை படுத்தி ஒரே கேமில் கொண்டு வந்தது மட்டுமல்லாது வகுப்பு ரீதியாக அவர்களின் பாடங்களையும் உட் புகுத்தி ஒவ்வொரு கேமுக்கு ஒவ்வொரு பெயரிட்டு, கேள்விகளையும் கேட்டு அதற்கு பதிலளித்தால்தான் அடுத்த லெவலுக்கே! போக முடியும் என்று அமைத்திருக்க, கேமை விளையாடுவதற்கென்றே பிள்ளைகள் படிக்கவும் ஆரம்பித்திருந்தனர்.
அட்வான்சேர், ரேஸிங், பைட்டிங், சேசிங், மைண்ட், பஸுல் என்று எல்லாவகையான கண்டைண்டும் அடங்கி இருப்பதால் மாணவர்களும் ஆர்வமாக விளையாட பெற்றோர்களும் மறுப்பு தெரிவிக்கவில்லை. வாணனும் குழந்தைகளை வென்று விட்டான்.
இன்றய சிறுவர்கள்தான் நாளைய முதியவர்கள் சோ அவர்களுக்கு என்ன மாதிரியான கேம் தயாரிக்க வேண்டும் என்ற யோசனையில் இருப்பதோடு, இன்றைய இளைஞ்சர்களை வித விதமான கேம்ஸ் மூலம் அடைந்துகொண்டுதான் இருக்கின்றான்.
அவன் எதிர்பார்த்தது போல் பண மழை கொட்டிக்கொண்டிருக்க, நிலாவை பழிவாங்க வேண்டும், அன்னையை பார்த்துக்கொள்ள வேண்டும் இது ரெண்டும் மட்டும் தான் அவன் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
நிலா காதலால் கசிந்துருகி அவன் வலையில் வசமாக சிக்கிவிட்டாள் “உண்மை தெரியும் பொழுது அவளுக்கு இருக்கு” கருவியவாறே மனநல மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தவன் அன்றைய நாள் முழுவதும் அன்னையோடு இருக்க எண்ணி அலைபேசியை அனைத்து விட்டான்.
நிலா அவ்வளவு அழைத்தும் அலைபேசி எடுக்கப்படாததற்கும் இதுதான் காரணம். ஜெகனுக்கும் வாணன் எங்கு சென்றிருக்கின்றான் என்று தெரியவில்லை.
வெளியே அழைத்து செல்ல முடியா விட்டாலும் அறையிலிருந்த சுசீலாவுக்கு பழைய புகைப்படங்களை திரையில் போட்டுக்காட்டி ஏதாவது நியாபகம் வருகிறதா என்று பார்க்க, வாணனின் சிறு வயது போட்டோவை பார்த்து அழுதவள், விரோசனனின் போட்டோவை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.
எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும் பொழுது ஒரு போட்டோவை பார்த்து கத்திக் கூப்பாடு போடலானாள் சுசிலா. வாணனுக்கு ஒன்றும் புரியவுமில்லை. சுசீலாவை கட்டுப்படுத்தும் வழியும் தெரியவில்லை. வாணனின் கண்முன்னாடியே இலக்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டதும் அதிர்ந்தவன் அங்கேயே கதறி அழ அவனை சமாதானப் படுத்துவது பெரும் பாடானது.
சுயநினைவற்று அசந்து தூங்கும் சுசீலாவிடம் அமர்ந்து அரற்றியவன் மனம் தாங்காமல் பாருக்கு சென்று குடிக்க ஆரம்பித்தான். நிலாவின் மேல் கொலைவெறியே வந்தது. பழிவெறியில் அவளை தேடி வீடு வந்தவன் அவளை ஆட்கொண்டால்தான் அந்த வெறி அடங்கும் என்றிருக்க போதையில் தான் என்ன செய்கின்றோம் நிலா என்ன நிலைமையில் இருக்கின்றாள் என்று கூட அறியாது மிருகமாய் நடந்துகொண்டான்.
வாணன் கண்விழிக்கையில் காலை எட்டையும் தாண்டி இருக்க தூங்கும் நிலாவை பார்த்தவனுக்கு இரவு நடந்தவைகள் நியாபகத்துக்கு வரவில்லை. அவன் சிந்தனையில் அன்னையை பார்க்க வேண்டும் என்பது மட்டுமிருக்க, ஜெகனை அழைத்து தான் இன்று ஆபீஸ் வர மாட்டேன் என்று விட்டு அலைபேசியை துண்டித்திருக்க, நிலாவின் அன்னை இறந்த செய்தி வாணனுக்கு தெரியாமலையே! போய் விட்டது.
அன்றைய நாள் முழுவதும் அன்னையோடு இருந்து விட்டு வந்தவனிடம்தான் நிலா கோபத்தில் பேச வாணனும் உண்மையை கூறி இருந்தான். அதனால் நிலா வாணனிடம் சிறைப்பட்டு விட்டாள்.
நிலாவுக்கு வெறுப்பாக இருந்தது. காலையும் சாப்பிடவில்லை. மதியமும் சாப்பிடவில்லை. பசியாக இருந்தாலும் சாப்பிட தோன்றவில்லை. இரவு அறைக்கு வாணன் வருவான். கதவு திறக்கும் பொழுது ஏதாவது ஒன்றால் அவன் தலையில் அடித்து அவன் மயங்கும் வேளை இங்கிருந்த தப்பித்து விடலாம் என்று எண்ணி இருக்க, கட்டையோ! கம்போ எதுவும் அங்கு இல்லை. துணியை கொண்டு அவனை முகத்தை மூடி அவன் தடுமாறும் பொழுது தப்பிக்கலாம் என்று ஆயத்தமானாள். கதவுக்கு அடியிலிருந்து சிறு கதவு போல் திறக்கப்பட்டு அவளுக்கான உணவு வந்தது. வாணன் வரவில்லை.
அதிர்ந்தவள் அலைபேசி அடிக்கவும் எடுத்து காதில் வைக்க வாணன் “உன் முடிவு என்ன நிலா” நேரடியாக விசயத்துக்கு வந்திருக்க
தன் திட்டம் நிறைவேறாத கோபத்தில் “செத்துத் தொலை” என்று நிலா கத்த
“எனக்கெல்லாம் சாவு வராது டி. நான் செத்தா உன்ன யாரு இங்க இருந்து காப்பாத்துவாங்க?” என்று சிரித்தவன் அலைபேசியை துண்டிருக்க
நிலா “ஹலோ… ஹலோ..” என்று கத்திக் கத்தியே! சோர்ந்து போனாள்.
நிலா இரவு உணவை திரும்பியும் பார்க்கவேயில்லை. காலையும், மதியும் சாப்பிடவில்லை. இரவு உணவையும் தவிர்த்தால், பசி மயக்கத்தில் மயங்கி விழுந்தால் இவன் என்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்வான். அங்கிருந்து தப்பித்து செல்ல வேண்டும் என்ற பிடிவாதத்தால் சாப்பிடாமல் இருந்தாள்.
இரண்டு நாட்களாகியும் மயக்கம் வரவில்லை ரொம்பவே! சோர்ந்து போனாள். அவள் தூங்கி எந்திரித்தால். வாணன் கொடுத்த சாப்பாட்டு தட்டுகள் காணாமல் போய் இருந்தன.
அவள் சாப்பிடாதது கூட அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதை நினைக்கையில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அவள் உண்ண மறுத்த பொழுதெல்லாம் வலுக்கட்டாயமாக உணவூட்டியவனா இவன் என்று எண்ணுகையில் இளவரசனாக தோன்றியவன் ஒரே நொடியில் ராட்சசனாக மாறி இருந்தான்.
கதைகளில் வருவது போல் இரவரசனின் வேடமிட்ட ராட்சசன் இவன். சாப்பிடாமல்கொள்ளாமல் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த நிலா தன் காரியத்தில் வெற்றியும் கொண்டாள்.
மயங்கி விழுந்தவள் கண்விழித்தது சேலைன் பாட்டிலில் தான். தான் வெற்றிகொண்டு விட்டதாக சிறு முறுவல் உதட்டோரம் வந்து போனது நிலாவுக்கு அத்தோடு கண்கள் சொருகவே! கண்களை மூடிக்கொண்டாள்.
“என்ன நிலா இப்படி சாப்பிடாம கொள்ளாம உடம்ப கெடுத்துக்கலாமா?” வாணனின் குரல் அக்கறையாக ஒலிக்க
“டாக்டர் பக்கத்துல இருக்குறதால நடிக்க ஆரம்பிச்சுட்டானா? இரு டா உனக்கு வைக்கிறேன் ஆப்பு” என்று கருவிக்கொண்டவள் கண்களை திறவாமலையே! “டாக்டர் இவன் என்ன கடத்திக் கொண்டு போய் அடச்சீ வச்சிருக்கான் என்ன காப்பாத்துங்க, போலீசுக்கு சொல்லுங்க” என்று கத்த
சத்தமாக சிரித்த வாணன் “இதுதான் உன் பிளானா? சரி சரி ரெஸ்ட் எடு” என்றவன் அங்கேயே ஒரு கதிரையை இழுத்துப்போட்டு அமர்ந்து போட்டு புத்தகம் படிக்கலானான்.
சிரமப்பட்டு கண்ணை திறந்த நிலா அறையை பார்க்க அதிர்ந்தாள் அது மருத்துவமனையே! இல்லை. அவள் எங்கு அடைபட்டு கிடந்தாளோ! அதே! அறை. வாணன் அவளை எங்கும் கொண்டு செல்ல வில்லை. அவள் உடம்புக்கு தேவயானை உட் செலுத்திக் கொண்டிருந்தான்.
“இவனிடமிருந்து தப்பிக்க வழியே இல்லையா?” அயர்வாக உறங்கிப் போனாள் நிலா.
“இனிமேல் ஒழுங்கா சாப்பிடுவல்ல நிலா. இந்த மாதிரி முட்டாள் தனமான வேலையெல்லாம் பண்ண மாட்டியே! உறங்கும் அவளை பார்த்திருந்தான் துகிலவாணன் மௌரி.

Advertisement